• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 3: Agathiyar kalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அகத்தியர் ஆதவனிடமும் பொன்மகளிடமும் சற்றே விலகியே நடந்து கொண்டார். கல்வி போதிப்பதில் எந்த வேறுபாடும் காட்டவில்லை எனினும் அவர்களை முழுமையாக நம்பவில்லை என்பது அவரது பேச்சில் புரிந்தது. அன்றைய பாடம் மிக முக்கியமானது என ஆசான் சொல்லியிருந்ததால் தொல்காப்பியனும், நச்செள்ளையும் கூட அறிவியல் பாடத்துக்கு வந்திருந்தனர். எளிமையான அந்த அரச மரத்தடியில் பாடத்தைத் துவங்கினார் அகத்தியர். எப்போதும் ஒரு கேள்வியுடனே வகுப்புகளைத் தொடங்கும் அவர் இப்போது ஒரு கேள்வியுடனே தொடங்கினார்.

"மக்களுக்கு மிகவும் கவலையும் வருத்தமும் அளிக்கக் கூடியது எது?"

மிகவும் இரக்க சிந்தனையுள்ள நச்சள்ளை பேசினாள்.

"பசிப்பிணி தான் மிகவும் கொடியது ஆசானே"

"உண்மை மகளே! ஆனால் அதை விட வருத்தப்பட வைக்கக்கூடியது ஒன்று உண்டு!"

அறுவரும் மௌனம் காத்தனர். அகத்தியரே தொடர்ந்தார்.

"மனிதர்களுக்கு அவர்களது வம்சம் வளரவும், வாழ்க்கையை வளமையாக்கவும் வாரிசுகள் தேவை அல்லவா? ஆனால் அதே வாரிசுகள் குறைகளோடு பிறந்தால் அந்த பெற்றோர் எத்தனை மனம் வருந்துவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?"

செங்குன்றனின் மனம் அவனது சிறிய தந்தையிடம் சென்று நின்றது. திருமணமாகி சிற்றன்னை மகப்பேறு வாய்க்கப்பெற்ற போது அந்தக் குடும்பமே குதூகலத்தில் மிதந்தது, ஆனால் ஒரு ஆண்டு சென்ற பின்னர் குழந்தையின் மூளை வளர்ச்சியும் மற்ற பாகங்களின் வளர்ச்சியும் சீராக இல்லை அவன் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தை என்ற உண்மை தெரிந்த போது சிறிய தந்தையும் சிற்றன்னையும் எப்படி அழுதார்கள்? எத்தனை கண்ணீர்? ஏதோ முற்பிறப்பின் தீவினை இப்போது பற்றியிருக்கிறது என ஆறுதல் கூறினாலும் அவர்களால் அந்த சோகத்திலிருந்து மீள முடியவில்லையே? அந்தக் குழந்தையும் மூன்றாண்டுகள் நிறையும் முன்னே கை கால் வலிப்பு வந்து இறந்தும் போய் விட்டதே! அதன் பிறகு குழந்தையே வேண்டாம் என முடிவு செய்து விட்டனரே அவர்கள். இந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால் உற்று கவனித்தான் செங்குன்றன்.

"ஆம் மாணவர்களே! பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒன்று போலப் பிறப்பதில்லை! அவர்களது புத்திசாலித்தனத்தையோ, குணங்களையோ பற்றி நான் குறிப்பிடவில்லை. ஆனால் பொதுவான வளர்ச்சியும் இல்லாமல் மூளை செயப்பாடுகள் குன்றி ஊமையாக, காது கேளாமல் நடக்க முடியாமல் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன அல்லவா? இதன் காரணம் என்ன?"

ஆதவன் எழுந்தான்.

"இது குறித்து முன்பே ஒரு முறை நீங்கள் சொல்லியிருக்கிறீகள் ஆசானே! நமது உடலில் இருக்கும் அடிப்படை மரபணுக்கள் தான் காரணம்"

"ஆம்! உண்மை! ஆனால் வெறுமே மரபணுக்களால் இவை உண்டாவதில்லை. மரபணுப் புணர்ச்சிப்பிழை என்ற ஒன்று நிகழும் போது தான் இத்தகைய மாறுபாடுகள் தோன்றுகின்றன."

"இது வரை மரபணு புணர்ச்சிப்பிழை என்ற இந்த வார்த்தையை நீங்கள் உபயோகப்படுத்தியதே இல்லையே ஆசானே! இதன் பொருள் என்ன?"

"குழந்தை உருவாகும் போது மரபணுக்களும் புணர்கின்றன இல்லையா? அப்படி நடக்கும் போது ஒரே விதமான இரு மரபணுக்கள் புணர நேர்ந்தாலும் சரி இல்லை வித்தியாசமான சூழலில் சுரப்பிகளின் மாறுபாட்டாலும் சரி அவை புணரும் போது சில புழற்சிகள் நேர்ந்து விடுகின்றன். பலன் குழந்தை குறையோடு பிறக்கிறது. இதற்குத்தான் மரபணு புணர்ச்சிப்பிழை என்று பெயரிட்டிருக்கிறேன்."

"இது அரிய கண்டுபிடிப்பாயிற்றே ஆசானே!"

"ஆம்! இந்த புணர்ச்சிப்பிழைகளைத் தடுப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தான் நாம் அடுத்து இறங்க வேண்டும். இவற்றை நாம் சரி செய்து விட்டால் வருங்கால உலகமே மிகவும் பலன் பெறும். ஆனால் இந்த ஆராய்ச்சிக்குத் தேவை மிகுந்த பொறுமை மட்டுமல்ல மரபணுக்களைப் பற்றியும் அவைகளின் செய்லபாடுகளைப் பற்றியும் நுட்பமாக அறிந்து கொள்ளும் ஆற்றலும் தேவை. நான் ஏற்கனவே சில முடிவுகளைக் கண்டறிந்திருக்கிறேன். நீங்களும் உங்கள் பங்குக்கு முயற்சிகள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதற்கென ஒரு சோதனைக் கூடத்தையே ஒதுக்கி விட்டேன். நீங்களும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்." என்றார்.

செங்குன்றனுக்குமிகுந்த உற்சாகமாக இருந்தது. மானிடத்துக்கு மிகுந்த சேவை செய்ய இது சிறந்த வாய்ப்பாக அவன் கருதினான்,. ஆனால் ஆதவனது மன நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. அன்றைய இரவு மின் விளக்கின் ஒளியில் அமர்ந்து மாணவர்கள் விவாதிக்கும் போது ஆதவனது கருத்து தெரிந்து போனது.

"செங்குன்றா! ஆசான் கண்டுபிடித்துள்ள முடிவுகள் என்னவாக இருக்கும்?"

"நமக்கு எப்படித் தெரியும்? நாமும் நமது பங்குக்கு கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டாமா?" என்றாள் வண்டார்குழலி.

"குழலி! நீயும் என்னைப் போல ஒரு பெண்! இப்படி அடர்ந்த காட்டில் வெண்மையான பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து காய் கனிகளை உண்டு வாழும் வாழ்க்கை உனக்குப் பிடித்திருக்கிறதா? காதுகளில் ஏதோ மலர்களை அணிந்திருக்கிறாய், கைகளில் அதுவும் இல்லை. கழுத்தில் கருகமணிகள். இவைதானா உன் அறிவு உனக்குக் கொடுத்தது?" என்றாள் பொன்மகள்.

"இப்போது எதற்கு இவற்றைப் பற்றி நீ பேசுகிறாய் பொன்மகளே?"

"செங்குன்றா உன்னையும் தான் கேட்கிறேன். விறகு பொறுக்கி, கிழங்குகளை அவித்து ஆசானின் துணிகளைத் துவைத்து என உனது பணிகள் நீள்கிறது. இந்த வாழ்க்கையில் என்ன வசதி இருக்கிறது? அதோடு அட்டையும், பாம்பும் நிறைந்த இந்தக் காட்டில் நமது அறிவை போற்றுவாரும் இல்லை. "

"என்ன சொல்ல வருகிறாய் நீ ஆதவா?"

"நாம் ஆசானிடம் மாணவர்களாகச் சேர்ந்து ஆண்டுகள் 15 ஆகிவிட்டன. நமது படிப்பு நிறைவுறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை! ஆசானோ அரிய கண்டுபிடிப்புகளை காலம் வரும் என வீணாக்குகிறார். அதனை நாம் நம் நன்மைக்குப் பயன்படுத்திக்கொண்டால் என்ன?"

"புரியவில்லை"

"மின் சக்தி என்பதே மிகபெரிய கண்டுபிடிப்பு. அதிலும் ஆசான் இப்போது ஈடுபட்டிருக்கும் மரபணு ஆராய்ச்சி மிக மிக அரிதானது முக்கியமானது. நாம் இதில் பங்கு கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் ஆசான் மரபணு புணர்ச்சிப்பிழைக்கு மருந்து கண்டு பிடித்து விடுவார். அதையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம் வரவில்லை என்று பூட்டி வைப்பார்,"

"அதனால்?"

"நாம் அவற்றை எடுத்துச் சென்று நாம் மன்னர்களிடம் அளித்தால் பெரும் பொருள் கிட்டும். அதோடு நமது ஆசானின் பெருமை உலகமெங்கும் பரவும் அல்லவா?" என்றான்.

சற்றே யோசித்தான் செங்குன்றன். ஆனால் வண்டார் குழலி முந்திக்கொண்டாள்.

"ஆதவா! உனது எண்ணங்களில் நேர்மை இல்லை. நீ சொல்வது போலச் செய்தால் அதற்குப்பெயர் களவாடுதல்! ஆசானின் ஆராய்சிகளையும் அவற்றின் முடிவுகளையும் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை ஆசானுக்கு மட்டுமே உண்டு. உன் மனதில் பேராசை புகுந்து உன்னைப் பேச வைக்கிறது. செங்குன்றனையும் உன்னோடு சேர்த்துக்கொள்ள ஆசானின் பெயர் பரவும் என்ற வார்த்தைகளால் கொக்கி போடுகிறாய். அதில் நீ சிக்காதே செங்குன்றா" என்றாள். அவள் கண்கள் கோபத்தைக் கக்கின.

"நீ ஏன் செங்குன்றனை எங்களுடன் சேர விடாமல் தடுக்கப்பார்க்கிறாய்? நீ அவனை காதலிப்பதாக அல்லவா நாங்கள் நினைத்தோம்? ஆனால் அவனது நல்வாழ்க்கை மீது உனக்கு அக்கறை இல்லையே?" என்றாள் பொன்மகள்.

"ஆம்! நான் அவரைக் காதலிப்பது உண்மை தான். அதனால் தான் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். உங்களுடன் சேர்ந்து அவருக்கும் துரோகி என்ற அவப்பெயர் வேண்டாம். நீங்கள் செய்வது மிகவும் தவறு"

"இதில் என்ன தவறைக் கண்டாய் நீ? ஆசானின் கண்டுபிடிப்புக்களை நாடறியச் செய்து மக்களுக்கு நன்மை செய்வது தவறா?"

"அதில் தான் சிக்கல் இருக்கிறது என ஆசான் கூறினாரே? இதே ஆற்றலை! இதே மருந்தை தவறாகப் பயன்படுத்தினால் மனித இனமே பூண்டற்றுப் போகும் என ஆசான் நினைக்கிறாரே! அந்த படுபாதகச் செயலை நீ செய்யப்போகிறாயா? அதற்கு உடந்தையாக செங்குன்றனையும் அழைக்கிறாயா?"என்றாள்.

அதோடு அந்த விவாதம் முற்றுப்பெற்றது என்றாலும் மெல்லிய புகை போல ஆசை என்னும் தீ பரவலாயிற்று. அது ஆதவனையும், பொன்மகளையும் நன்றாகவே பற்றிக்கொண்டது. தொல்காப்பியனோ, நச்செள்ளையோ இந்த விவாதத்தைக் குறித்து ஆசானிடம் எதுவும் சொலவில்லை என்றாலும் ஆதவனிடமும், பொன் மகளிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். செங்குன்றன் தான் ஆதவனின் மனதை மாற்ற முயற்சி செய்தபடி இருந்தான். ஆனால் ஆதவன் இவன் மனதை மாற்றி விடுவானோ எனப் பயந்தாள் வண்டார்குழலி. அதற்குள் தான் அந்தப்பெரிய நிகழ்ச்சி நடந்து விட்டது.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
good flow of story sis(y)(y)manithanin aasai ver(ROOTs) athigam aaki vittal avanthan suyathai ilanthu vittuvan so nice sis.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top