• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 7. Tharkalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 7.

மறு நாள் காலையில் எழுந்தும் கூட இதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். குறைபாடுகளே இல்லாத இளைய சமுதாயம் என்பதே அவரது கற்பனையாக இருந்தது. காலையில் மணி எட்டு இருக்கும் போது பேராசிரியர் ராமநாதனுடன் பணி புரிந்த தமிழ்த்துறை பேராசிரியர் நாராயணன் ஏதோ ஒரு கல்யாணத்துக்காக தெங்காசி வந்திருப்பதாகவும் பத்து மணியளவில் அவரை வந்து பார்ப்பதாகவும் ஃபோனில் தெரிவித்தார். சற்றே உற்சாகமானார் ராமநாதன். காரணம் தமிழ்த்துறையில்பணி புரிந்தாலும் கூட அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் நாராயணன். அவரிடம் இது பற்றி விரிவாகப் பேச வேண்டும் என முடிவு செய்து கொண்டார். அன்றைய மதிய உணவைத் தன்னுடன் அருந்து மாறு சொன்னார் ராமநாதன். உடன் வேறு ஒரு பேராசிரியரை அழைத்து வருவதாகவும் இருவருமே அங்கு உணவருந்துவதாகவும் சொல்லி விட்டார் நாராயணன். எப்போதடா மணி பத்தாகும் என்று காத்திருந்தார் பேராசியர்.

பத்தரை மணியளவில் ஆட்டோவில் நாராயணனும் மற்றொரு நபரும் வந்து இறங்கினார்கள்.

"பி ஆர்! இவர் தான் டாக்டர் பூபாலன். வரலாற்றுத்துறை பேராசியர். டெல்லி யூனிவர்சிட்டியில இருக்காரு இப்ப செபாட்டிக்கல்ல சென்னை வந்திருக்காரு. எனக்கு தூரத்து சொந்தம்." என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

"எங்கே உன் ஆராய்ச்சி மாணவி வர்ஷினியைக் காணோம்? நவீனையும் காணல்லியே?" என்றார் நாராயணன்.

வர்ஷினியும் நவீனும் பேராசியர் ராமநாதனின் கீழ ஆராய்ச்சி செய்பவர்கள். இருவரும் அறிவில் ஒருவருக்கொருவர் இளைத்தவர்கள் அல்ல! எப்போதும் பேராசிரியரின் வீட்டிலேயே தான் இருப்பார்கள். அதைத்தான் கேட்டார் நாராயணன்.

"ஊருக்குப் போயிருக்காங்க! நாளைக்கு வந்திருவாங்க" என்று சொல்லி விட்டு வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிந்தது. ராமநாதன் நண்பர் சுப்புவைப் பற்றியும் அவரது பேரனின் குறைப்பாடு பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார்.

"என்ன செஞ்சா இந்தக் குறைப்படுகளை நீக்க முடியும்னு தெரியல்ல நாராயணன். கருத்தரிக்கும் போதே இந்த ஜீன்கள் இப்படித்தான்னு முடிவாயிடுது! அதனால தான் நம்மால எதுவும் செய்ய முடியல்ல" என்றார் வெறுப்பாக.

"இதுக்கு என்ன செய்யலாம்னு நீங்க நினைக்கறீங்க புரஃபசர்?" என்றார் பூபாலன்.

"இன்றைய நவீன அறிவியலும் தொழில் நுட்பங்களும் என்ன சொல்லுதுன்னா இயற்கையால ஏற்படுற எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்தப் பூமியில எங்கியோ இருக்கணும். தீர்வு இல்லாத பிரச்சனைகளே இந்த உலகத்துல கிடையாதுன்னு சொல்லுது! அதை வெச்சுப் பார்க்கும் போது இந்த ஜீன் குறைபாடுகளுக்கும் ஏதாவது தீர்வு இருக்கத்தானே வேணும்? அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்" என்றார் அழுத்தமாக.

"நீங்க சொல்றதை நான் அப்படியே ஒப்புக்கறேன் புரஃபசர்! இதை உங்க நவீன தொழில் நுட்பம் சொல்லல! மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால வாழ்ந்த எத்தனையோ முனிவர்களும் அறிஞர்களும் சொல்லிட்டாங்க" என்றார் வரலாற்றுப் பேராசிரியர் பூபாலன். அவரை நம்ப முடியாமல் பார்த்தார் ராமநாதன்.

"ஓ! நீங்க அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவரா? நேத்து ஒரு கட்டுரை படிச்சேன்! அதுல அகத்தியர் பேட்டரியைக் கண்டு பிடிச்சாருன்னு எழுதியிருந்தாரு ஒருத்தரு. நாம என்ன மூவாயிரம் வருஷம் பின்னால போயிப் பார்க்கவா முடியும்? இதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டா அது இல்லைன்னு நீ ஆதாரம் கொண்டு வர முடியுமான்னு நம்மையே கேப்பாங்க! இது எல்லாமே ஒரு சுவாரசியமா படிக்கவும் நாம உயர்ந்தவர்கள்னு நம்மை நாமே தேத்திக்கவும் தான் உதவும்" என்றார்.

சங்கடமாக நெளிந்தார் நாராயணன். ஆனால் அதனைப் பொருட்படுத்தவில்லை பூபாலன்.

"புரஃபசர்! நீங்க சொன்ன கட்டுரையை எழுதியதே நான் தான். நான் சும்மா ஏதோ எழுதலை. ஆதாரங்கள் நிரூபணங்கள் இருக்கவே அவற்றை வெச்சு தான் எழுதினேன்" என்றான் அவர்.

"மூவாயிரம் ஆண்டுக்கு முன்ன இருந்த ஒருத்தரோட கண்டுபிடிப்புக்களுக்கு என்ன ஆதாரம் இருக்க முடியும்?"

"நீங்க நம்ம தமிழ்ச் சமுதாயத்தைப் பத்தி சரியாப் புரிஞ்சுக்கல்ல படிக்கல்லன்னு நினைக்கறேன்! எத்தனையோ கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஓலைச் சுவடிகள் இருக்கு. அதுல அன்றைய சித்தர்கள்னு சொல்லப்படுற மருத்துவர்களும், முனிவர்கள்னு சொல்லப்படுற அறிஞர்களும் கண்டுபிடித்த எத்தனையோ கருவிகளைப் பத்தி சொல்லப்பட்டிருக்கு."

"ஓ! நோ! அந்தக்காலத்து முனிவர்கள் வானத்துல பறந்தாங்க! இரும்பைத் தங்கமாக்கினாங்க! மாய வித்தையால மக்களுக்கு நல்லது செய்தாங்கன்னு சொல்லப்பொறீங்களா? இதை நான் நம்பத்தயாரா இல்ல" என்றார்.

வரலாற்றுப் பேராசிரியரான பூபாலனுக்கு சற்றே கோபம் வந்தது.

"புரஃபசர்! நீங்க எதையும் ஆழ்ந்து புரிஞ்சிக்கல்லன்னு நான் நினைக்கறேன். சினிமாக்கள்லயும் சில கதைகள்லயும் நீங்க சொல்றபடி காட்டுறாங்க தான். நான் அதை மறுக்கல்ல! ஆனா உண்மை அது இல்ல! அன்றைக்கு வாழ்ந்த பல அறிவியல் அறிஞர்களைத்தான் நாம இன்னைக்கு ரிஷிகள்னும் முனிவர்கள்னும் சொல்லி வணங்கிக்கிட்டு இருக்கோம். தலை சிறந்த மருத்துவர்களைத்தான் சித்தர்கள்னு சொல்லி ஒதுக்கி வெச்சுட்டோம். இவங்க எல்லாருமே மனிதர்கள் தான். ஆனா நம்மை விட இயற்கையை புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிகமாப் பெற்றவங்க!"

"அப்ப! அவங்க எதையுமே சாதிக்கலை இல்லியா? எல்லாமே கட்டுக்கதை தானே?"

"இல்ல! நீங்க ஆழ்ந்து பாருங்கன்னு அதுக்குத்தான் சொன்னேன். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால அகத்தியர் ஓப்பன் ஸ்கல் சர்ஜரி செஞ்சிருக்காரு, அதே மாதிரி சுஸ்ருதர் அப்படீங்குற மருத்துவர் வெட்டுப்பட்ட பாகங்களை ஒட்டி அப்பவே பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிருக்காரு. இன்னைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி புத்தகங்கள்ல சுஸ்ருதருக்கு நன்றி அப்படீன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க! "

"நீங்க சொல்றது உண்மைன்னே வெச்சுப்போம். ஒரு மனிதன் உயிரோட இருக்குற வரையில இன்னி வரைக்கும் ஓப்பன் ஸ்கல் சர்ஜரி சாத்தியமில்லேன்னு நம்ம அறிவியல் சொல்லுதே! அதை எப்படி அகத்தியர் செய்திருக்க முடியும்? அதுவும் நவீன உபகரணங்கள் எதுவும் இல்லாம?"என்றார் பேராசிரியர் ராமநாதன் விடாமல்.

"சார் ஒரு விஷயத்தை மறுத்துப் பேசியே ஆகணும்னு ஆர்கியூ பண்றீங்க! நானும் விடப் போறது இல்ல! அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. அதை அப்புறம் சொல்றேன். நான் சொல்ல வந்தது என்னன்னா நீங்க செய்யற ஆராய்ச்சியை அகத்தியர் அன்னைக்கே செஞ்சிட்டாரு. அதுக்கு மருந்தும் ஒரு வேளை கண்டு பிடிச்சிருக்கலாம்"

"என்ன என்ன? ஜீன் ஆராய்ச்சியை அகத்தியர் செஞ்சாரா? இதை விட பொய்யான தகவல் எதுவும் இருக்க முடியாது?"

"நான் விளக்கம் கொடுக்கறதுக்கு நீங்க எனக்கு அவகாசம் கொடுக்கணும். அப்புறமா இது பொய்யான தகவலா இல்லை உண்மையான செய்தியான்னு நாம பேசலாம்" என்றார் பூபாலன்.

"சரி சொல்லுங்க"

"நமது முன்னோர்கள் வெறும் வாழ்க்கையின் வறட்டுத்தத்துவங்களை மட்டுமே சொன்னவங்க கிடையாது. வானியல் அறிவு, மருத்துவ அறிவு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புன்னு எல்லாத்துக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க! பூமியில வாழும் எல்லா ஜீவன்களுக்கும் இந்த உலகத்துல அழியாம வாழும் உரிமை உண்டுனு அவங்க நெனச்சதால தான் ஒவ்வொரு விலங்கையும் ஒவ்வொரு கடவுளோட சம்பந்தப்படுத்தினாங்க! அவங்களுக்கு கோள்களின் நிலை, சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம்னு எல்லாமே தெரியும்"

"அப்ப அந்த அறிவு இப்ப எங்கே போச்சு? இங்கிலீஷ்காரன் வந்தப்ப நாம பஞ்சப்பரதேசிகளா மாடர்ன் வசதி எதுவும் இல்லாம தானே இருந்தோம். ரயில் தெரியாது, பஸ் தெரியாது, தபால் வசதி கிடையாது. ஆதி மனிதர்களை மாதிரி தானே நாம வாழ்ந்திருந்தோம்? நீங்க சொல்றபடி நாம முன்னேறிய சமுதாயமா இருந்திருந்தா நாம தானே உலகத்துல நம்பர் 1ஆக இருந்திருக்கணும்?"

"நீங்க கேட்டது சரியான கேள்வி! இதுக்கும் பதில் எங்கிட்ட இருக்கு! நாம ஒரு காலத்துல சிறந்த சமுதாயமா நாகரீகத்துல சிறந்தவங்களா நம்பர் 1ஆக வாழ்ந்தவங்க தான். ஆனா எல்லாரும் அப்படி இருந்தாங்கன்னு சொல்ல முடியாது. மூட நம்பிக்கைகளும் தேவையற்ற பயங்களும் இப்பவே நிறைய இருக்கும் போது அந்தக்கால கட்டத்துல இன்னும் அதிகமா இருந்திருக்கலாம். அதனால பல அரிய கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் புரியாமலே கூட போயிருக்கலாம் இல்லியா?"

"நீங்க என்ன தான் சொல்ல வரீங்க புரஃபசர் பூபாலன்"

"எதையுமே ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்துல பார்க்காதீங்க! இன்னும் மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்த பூமியில மனித இனம் இருக்குமான்னே தெரியல்ல! ஆனா அப்படி இருந்தா நாம இத்தனை முன்னேறியவங்களா இருந்தோம்னு அவங்களால நம்ப முடியுமா? நம்மையும் அவங்க நாகரீகத்துலயும் படிப்புலயும் குறைஞ்சவங்கன்னு எடை போடத்தான் செய்வாங்க! காலங்கள் மாறும் போது பருவ நிலைகள் மாறும் போது வானியல் ரீதியா சில மாற்றங்கள் தோன்றும் போது சமூகங்களும் மாறுகின்றன. நாகரீகத்தின் உச்சியில் இருந்த அதே சமுதயம் மூட நம்பிக்கைகள்ல மூழ்க்கிக்கிடக்கும் ஒண்ணா மாறுது. இப்ப அந்த சமுதாயம் இருக்கும் நிலையை வெச்சு அந்த சமுதாயத்துல அறிஞர்களே இல்லைன்னு முடிவு செய்யுறது சரியான முடிவா இருக்குமா?" என்றார் பூபாலன்.

மெல்லிய மாற்றம் வந்தது பேராசிரியரின் மனதுக்குள். ஆனால் அதனை அவர் வெளிக்காட்டவில்லை.

"சரி புரஃபசர் பூபாலன்! நீங்க சொன்னது போல இது சாத்தியம்னே வெச்சுக்குவோம். இதனால நமக்கு என்ன பலன்? வேணும்னா நாங்களும் பெரிய ஆளுங்களா இருந்தோம்னு பழம்பெருமைப் பேசலாம் அவ்வளவு தானே?"

அதுவரையில் பேசாமல் அமர்ந்திருந்த தமிழ்ப்பேராசிரியர் நாராயணன் வாய் திறந்தார்.

"பி ஆர்! நீங்க முனைவர் பட்டம் பெற்றவர்! அதுக்காக நீங்க ஆராய்ச்சியியல் ஈடுபட்டிருந்த போது வேற சிலர் உங்களுக்கு முன்பாகவே இதே ஆராய்ச்சியைமேற்கொண்டவங்க எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்து அவற்றின் கருத்தைப் பயன் படுத்தியிருக்கீங்க இல்லியா? உங்களுக்கு வழிகாட்டியாவும், முன்னோடியாகவும் அவங்களை நீங்க கருதுனீங்க அப்படித்தானே?"

"ஆமா! அது ரிசர்ச்சுல அனுமதிக்கப்பட்டது தானே!"

"அதே மாதிரி உங்களுக்கு முன்னால இதே ஆராய்ச்சியில ஈடுபாட்டிருந்த அகத்தியர் போன்ற முனிர்களோட ஓலைச் சுவடிகளையும் நீங்க படிச்சு அதையும் உங்களுக்கு உபயோகமா பயன் படுத்திக்கலாமே?"

அசந்தே போனார் ராமநாதன். இப்படி ஒரு கோணம் இருக்கும் என்பதை அவர் இது வரையிலும் யோசித்தது கூட இல்லை.

"என்ன சார் நீங்க சொல்றது? நாம ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைய வழிகாட்டியா அதாவது கைடன்சா எடுத்தோம்னா அதுல அவங்க அந்த முடிவுக்கு ஏன் வந்தாங்கன்னு விரிவா விளக்கமா நிரூபணத்தோடு எழுதியிருப்பாங்க! அப்பத்தான் நாமும் அந்த முடிவை ஏத்துக்கிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம். ஆனா ஓலைச் சுவடிகள்ல என்ன இருக்கும்? இந்த ஆராய்ச்சியை செஞ்சாங்க! அதோட பலனா இந்த அரசன் குணமானான்னு இருக்கும். அதைப் போய் எப்படி வழிகாட்டியா எடுத்துக்க முடியும்?"

மீண்டும் பூபாலன் பேசினார்.

"இது வரைக்கும் எத்தனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுக்களையும் நீங்க பார்த்து அதோட அர்த்தத்தைப் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க?"

எதுவும் பேசாமல் மௌனமானார் ராமநாதன். காரணம் அவர் இது வரையில் எதையுமே பார்த்ததில்லை என்பது தான் உண்மை.

"எதையுமே பார்த்திருக்க மாட்டீங்க! மேலோட்டமான ஓலைச் சுவடிகளும் கல்வெட்டுக்களும் நீங்க சொன்னதைத்தான் சொல்லும். ஆனா வெளி உலகத்துக்கு வராத பல காலமாக மறைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளும் கல்வெட்டுக்களும் இன்னமும் நிறைய இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?"

மறுபடியும் அசந்து போனார் பேராசிரியர் ராமநாதன்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
romba arumaiyana ud sis.View attachment 227
இது வரைக்கும் எத்தனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுக்களையும் நீங்க பார்த்து அதோட அர்த்தத்தைப் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க?"
well said sis. (y)(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top