• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அன்று காலை மிக அழகாக விடிந்தது யாழினிக்கு.அன்று தான் அவள் முதல் நாள் கல்லூரிக்குச் செல்கிறாள்.அழகான பேபி பிங்க் சுடிதார் உடுத்தி காதில் ஒற்கைக் கல் வைரத்தோடு,கழுத்தில் மெல்லிய ப்ளாடினம் செயின்,கையில் டைடன் வாட்ச்,நெற்றியில் சிறிய பொட்டு வைத்து தேவதை போல் காட்சி அளித்தாள்.

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவள் சாமி அறைக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினாள்.

அனைவரும் சாப்பிட அமர யாழினி அவள் தந்தையிடம்" அப்பா நான் கண்டிப்பா பஸ்ல தான் காலேஜ்க்கு போகனுமா?" என்று தயங்கியபடியே கேட்க அவர் " ஆமா யாழி!நீ எல்ல சூழ்நிலைலயும் வாழ பழகிக்கனு....எப்பவும் கார்ல தான போற..கொஞ்ச நாள் பஸ்ல போ.உனக்கும் நிறைய அனுபவம் கிடைக்கும்"என்றார்.

யாழினிக்கு பஸ்ஸில் செல்வது மிகக் கடினமாக இருந்தது.பிறந்தது முதல் காரிலேயே சென்று வளர்ந்தவள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துப் போனாள்.கல்லூரி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கியவள் தன்னை இரண்டு கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே கல்லூரியை நோக்கி நடந்தாள்.

கல்லூரியின் உள்ளே மிக சந்தோஷ நுழைந்தவளை "ஏய் பிங்க் சுடிதார்!" என்ற விநாயக்கின் குரல் தடுத்தது.திரும்பி விநாயக்கைப் பார்த்தவள் "என்ன இவன் லூசு மாறி பேர் சொல்லி கூப்பிடாம இப்டி கூப்பட்றா" என்று நினைத்துக்கொண்டே அவனருகில் சென்றாள்.

ஹரீஷ் விநாயக்கிடம்" டேய் மச்சா! நீ என்ன லூசா டா?உன் அத்தை பொண்ண ஏன் டா கூப்பட்ற?" என்க விநாயக்கோ" வாய மூடிடா லூசு.அவ வீட்டில என்ன படுத்துறதுக்கு இப்ப அனுபவிக்கட்டும்" என்று அவனை அமைதிப்படுத்தினான்.

யாழினி அருகில் வந்தவுடன் " ப்ர்ஸ்ட் இயரா?" என்று கேட்க அவனை முறைத்தாள்."சினியர் கேட்டா உடனே சொல்லனும்.இப்டி பே பேனு நிக்க கூடாது" என்று அவன் ஏளனமாக சிரித்துக்கொண்டே கூற கடுப்பானவள் பல்லைக் கடித்துக்கொண்டே "ப்ர்ஸ்ட் இயர் சி.எஸ்" என்றாள்.
"பேர் என்ன?" என்று கேட்க "யாழினி " என்று முறைத்துக்கொண்டே கூற"சினியர பாத்தா விஷ் பண்ணணும்னு உனக்கு யாரும் சொல்லித் தரலையா?" என்று அவன் புருவத்தை உயர்த்திக் கேட்க "குட் மார்னிங்" என்றாள்.

"ஹாய் காய்ஸ் ! என்ன ரேகிங்கா?" என்று கேட்டுக்கொண்டே விநாயக்கின் அருகே வந்தமர்ந்தாள் ப்ரியா."ஆமா " என்று கூறிக் கொண்டே எழுந்தவன் யாழினியை வகுப்பிற்குச் செல்லச் சொன்னான்.

"விநாயக் நீ ரேகிங்ளா பண்ணுவியா?" என்று ஆச்சர்யமாகக் கேட்க "இல்ல சும்மா ஜஸ்ட் பார் பன்" என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விநாயக் பெண்களிடம் எப்பொழுதும் தானாகச் சென்று பேச மாட்டான் என்பதைத் தெரிந்த ப்ரியா இன்று ஜீனியர் பொண்ணை அவனே கூப்பிட்டு ரேகிங் செய்ததால் கடுப்பானாள்.அந்த ஜீனியர் பெண் வேறு பார்ப்பதற்கு மிக அழகாக மொலு மொலு என்றிருப்பதால் இன்னும் எரிச்சல் அதிகமானது அவளுக்கு.

வகுப்பிற்குச் சென்ற யாழினிக்கு கவிதா என்ற பெண் அறிமுகமானால்.மிகவும் வெளிப்படையாகப் பேசிய கவிதாவை மிகவும் பிடித்தது யாழினிக்கு.

இன்ட்ரவலில் வெளியே வந்த யாழினியும் கவிதாவும் ரேஸ்ட் ரூம் செல்வதற்காக சீனியர் கிளாஸ் ரூமைக் கடந்து செல்ல கிளாஸ் ரூமிற்குள் இருந்த சேகர் " டேய் மச்சா! அந்தப் பொண்ண பாருடா செம சூப்பரா இருக்கா...." என்று கூற வெளியே பார்த்த விநாயக் காண்டாகி அவனை முறைக்க ஹரீஷ் சேகரிடம் " மச்சா அவ அவனோட அத்தை பொண்ணு டா" என்றான்.

"மச்சா நீ எந்த பொண்ணையும் திரும்பி பாக்காதப்பவே நினைச்ச டா...கலக்கு கலக்கு" என்று ஓட்ட அவன் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு வெளியே யாழினியைத் தேடிச் சென்றான்.யாழினியிடம் சென்ற விநாயக் " இனிமேல் எங்க கிளாஸ் பக்கம் வராதே...இன்னொரு வழில போ" என்றான்.

காலையில் ரேகிங் செய்ததால் அவன் மேல் கோபத்தில் இருந்தவள் "முடியாது நான் உன் கிளாஸ் வழியா தான் போவ" என்று கூறும்பொழுது வந்த ஹரீஷ் கவிதாவைப் பார்த்து "யேய் வாண்டு" என்று தலையில் தட்டி அவளைத் தன் தங்கையென்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

மதியம் இடைவேளியின் பொழுது ப்ரின்சுபல் விநாயக்கை அழைக்க அவர் அறைக்குச் சென்றான்.ஹரீஷ் காரிடாரில் நின்று போன் பேசிக் கொண்டிருந்பொழுது "ப்ளிஸ் கா! "என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.அங்கே ப்ரியாவும் அவளுடைய தோழிகளும் யாழினியை ரேகிங் செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகில் சென்றவன் "ப்ரியா அவள ஏன் ரேகிங் பண்ற?" என்று கேட்க அவள் "நீ மட்டும் தான் ரேகிங் பண்ணணும்னு எதாச்சு ரூல்ஸ் இருக்கா? " என்று கேட்க அவன் "என் தங்கச்சிய ரேக் பண்ணா நான் கேக்க தான் செய்வ " என்று முறைக்க ப்ரியா " உன் தங்கச்சினு தெரியாது ஸாரி " என்று கூறி நகர்ந்தாள்.

யாழினி " தேங்க்ஸ் அண்ணா...அவங்ககிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு அண்ட் என்ன தங்கச்சினு சொன்னதுக்கு " என்று கூற "எனக்கு நீ வேற கவிதா வேற இல்லமா.இரண்டு பேரும் ஒன்னு தான்" என்றான்.

அப்பொழுது வந்த விநாயக் இவர்களிருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து " என்னடா ரெண்டு பேரும் பாசமலர் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறீங்க?" என்று ஆச்சர்யப்பட " பாசமலர் ரேஞ்ச் இல்லடா பாச மலரே தான்" என்றான் ஹரீஷ்.

ஹரீஷ் நடந்ததை விநாயக்கிடம் சொல்ல அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கே வந்த யாழினியை முறைத்தான்.ஹரீஷ் விநாயக்கிடம் " டேய் என் தங்கச்சிய ஏன்டா முறைக்கிற?அவ இனிமேல் நம்ம க்ளாஸ் பக்கம் வர மாட்டா...இல்ல மா?" என்று கேட்க " அவனுக்காக இல்ல ....நீங்க சொல்றதுக்காக இனிமேல் வரல" என்றாள்.

அன்று இரவு ரகுராம் " காலேஜ்லா பிடிச்சிருக்கா யாழி?யாராச்சு ரேகிங் பண்ணாங்கலா?" என்று கேட்க விநாயக்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே " காலேஜ் பிடிச்சிருக்கு பா...ரேகிங்லா யாரும் பண்ணல...." என்றாள்.
அன்றிரவு படுத்த யாழினி அன்றைய நாளின் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.தீடீரென்று தன் அறைக் கதவு தட்டப்பட போய்த் திறந்தாள்.விநாயக் தான் நின்று கொண்டிருந்தான்.காலேஜில் அவன் ஓட்டியதால் கடுப்பாக இருந்த யாழினி ஒன்றும் பேசாமல் கதவில் சாயந்து நிற்க அவள் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி அவளுக்குப் பிடித்த கேலக்ஸி சாக்லேட்டை நீட்ட அவனை முறைத்தாள்.

"சரி வேண்டானா போ. நானே சாப்டுக்குற " என்று சாக்லேட்டை அவன் வாயின் அருகில் கொண்டு செல்ல அதைப் பிடிங்கியவள் சாப்பிட ஆரம்பித்தாள்.அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தவன் சாப்பிட்டு முடித்த பின் "சின்ன பாப்பா மாறி இன்னு வாய் மேலல பரவவிட்டு சாப்புட வேண்டியது" என்று செல்லாமாக கடிந்து கொண்டே டிஜ்யூவை எடுத்து நீட்டினான்.

"நான் ஒன்னு சின்ன புள்ள மாறி சாப்பிடல.சாக்லேட் கொல கொலனு இருந்ததுச்சு....அதனால வாய் புல்லா ஆயிருச்சு " என்று உதட்டைச் சுளித்தாள்.

"ப்ரியா இன்னைக்கு உன்கிட்ட என்ன கேட்டா?" என்று கேட்க அவள் " சும்மா விளையாட்டிக்கு தான் ரேகிங் பண்ணிட்டி இருந்தாங்க" என்று கூற அவன் "மழுப்பாத.....உண்மைய சொல்லு" என்று கேட்க அவள் தயங்கிக் கொண்டே " நான் சொல்லுவ ஆனா நீ அவங்ககிட்ட சண்டை போட கூடாது" என்று கூற அவன் முறைத்துக்கொண்டே " சொல்லு.அத அப்புறம் பாக்கலாம்."

"இல்ல நீ பர்ஸ்ட் ப்ராமிஸ் பண்ணு...அப்ப தான் சொல்லுவ" என்று கை நீட்ட அவன் அவள் தலையில் குட்டி " லூசு ப்ராமிஸ் டி" என்றான்.அவள் "அவங்க என்கிட்ட நீ கமிடட்டானு கேட்டாங்க நான் இல்லனு சொன்ன....அவங்க உடனே உங்க க்ளாஸ்ல ஒருத்தங்கள காமிச்சு ப்ரபோஸ் பண்ண சொன்னாங்க....ப்ளிஸ் வேண்டா அக்கானு நான் சொல்றப்ப தான் ஹரீஷ் அண்ணா வந்தாங்க" என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு கோபம் அடைந்த விநாயக் " இனி நான் பாத்துக்குற....இனிமேல் என் க்ளாஸ் பக்கம் வராத" என்றான்." சரி இப்ப தூங்கி" என்று கூறித் தன் அறைக்குச் சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை விநாயக் காலேஜிக்குள் நுழையும் பொழுது ப்ரியா அவனைப் பார்த்து "ஹாய் விநா" என்று கூற ஏற்கனவே யாழினியின் விசயத்தில் மிகக் கோபமாக இருந்தவன் மேலும் கோபமடைந்து " டோன்ட் கால்மீ விநா...கால்மீ விநாயக் " என்று முகத்தில் அடித்தாற் போல் கூற அவளுக்கு அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது.

தீடீரென்று கைபேசி அடிக்க தன் நினைவுகளிலிருந்து மீண்டான்......
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
யாழினி அப்பாவின் பஸ் பற்றிய அட்வைஸ் அருமை சூப்பர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top