• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 8 and 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala sundar

நாட்டாமை
Joined
Feb 12, 2019
Messages
26
Reaction score
73
Location
Sivakasi
பவித்ரா

பவித்ராவின் உடல் சடலமாக இருக்க தனுவும் மோகனாவும் பித்து பிடித்ததுபோல் சுவரில் முட்டி முட்டி அழுதனர். ஸ்ரீ பவித்ராவின் உடலை ஐஸ் பெட்டியில் வைக்கப்போனபோது கத்தி ஆர்பாட்டம் செய்து அதிலே வைக்கவிடாமல் போட்ட கூச்சல்தான் அவளிடம் இருந்து வந்த கடைசி சப்தம். அதன்பிறகு பவித்ராவின் மாரோடு கட்டிக்கொண்வள் அசைவின்றிக் கிடந்தாள்.

வலி உடலில் எங்குமே இல்லை. கைகளில் கால்களில் எங்குமே வலி இல்லை. ஆனால் நெஞ்சைத்தான் யாரோ அழுத்தி மிதிப்பதுபோல் இருந்தது ஸ்ரீக்கு. வலி என்றால் இது வலி அல்ல!

இது வேறு ஏதோ ஒன்று! வலி என்பது வெறும் இரண்டு எழுத்துக்களின் கூட்டு. இது அதனிலும் பெரியது. உண்மை அப்படியிருக்க வலி என்று இரண்டு எழுத்தில் இது எப்படி அடங்கிட முடியும்? அத்துணை தமிழ் எழுத்துக்களையும் சேர்த்து ஒரு சொல் வடிவமைத்திருக்க வேண்டுமா? ஆம்! ஆனால் ஏனோ அதனைச் செய்யவில்லை நம் பாட்டனும் பூட்டனும். அவர்கள் இந்த வலியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அல்பாயிசில் போகும் கொடுமைகளை அவர்கள் அனுபவித்திருக்கமாட்டார்கள். நூறு ஆண்டுகள் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு வாழ்ந்தவர்கள் எதற்காக இந்த வலியைப் பற்றி நினைக்க வேண்டும்?

பவித்ராவின் தோள் மீது கண்ணம் வைத்து விசும்பியவளின் அருகே துளசியின் வாசம் காற்றிலே கலந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தபோது பவித்ராவின் கழுத்தில் யாரோ துளசி மாலை போட்டிருந்தார்கள். அவள் காதினில் முன்பு தோழிகள் இருவரும் பேசியவை மனதை வலிக்கச் செய்து வலிக்கச் செய்து ஞாபகத்தில் வந்தது.

எனக்கும் துளசி வாசனை ரொம்ப பிடிக்கும். செப்டம்பர் மழையில் எப்படி தளிர்க்குதுன்னு பார். புதர் போல தளிர்க்கப் போகுது. நம்மால் அதை பறித்து பூமாலை கட்டி மீள முடியாது. நீ தான் அந்த மாலையைக் கட்டப்போற பார் ஸ்ரீ. உன் கட்டுதான் நெருக்கமாக இருக்கும். உன்னை சரம் சரமாக கட்ட வைத்து நான் படுத்துக்கிட்டே வேடிக்கை பார்ப்பேனே!

ஓ! கட்டிடலாம் பவி. பூமாலை கட்டத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குமே.. நீ படுத்துக்கிட்டே வேடிக்கை பாரு.

என்ன நினைத்தாளோ எங்கிருந்துதான் அவளுக்கு சக்தி வந்ததோ என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு வேகமாக பின்புறம் சென்றவள் ஒரு வாலி நிறைய துளசி செடிகளைப் பறித்து வந்திருந்தாள். வேகமாக நூல் கண்டை எடுத்தவள் துளசி மாலை கட்ட ஆரம்பித்தாள். அணிவித்தால் பவித்ராவின் தோளில் இருந்து வயிறு வரை உயரம் இருக்கும் என்று சொல்லக்கூடிய மாலையை ஆவேசமாக கட்டி முடித்து அவளுக்குச் சூட்டிய பிறகே அமைதியானாள். அடுத்த நொடியில் பவித்ராவின் தலைக்குப் பக்கத்திலே தன் தலையையும் வைத்து படுத்துக்கொண்டே அவள் விட்டத்தை வெறித்தாள்.

கத்திக் கத்திக் கதறியதால் மூச்சே நிற்கும் அளவிற்கு அழுததால் சடங்குகள் அனைத்தும் முடிந்து பிவத்ரா அஸ்தியானபோது ஸ்ரீக்கு கடும் காய்ச்சல் வந்தவிட்டது.

அவளின் காய்ச்சலைக் கண்டதும் “ஸ்ரீம்மா அம்மா ஒரு கால்பால் மாத்திரை வாங்கிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றார் அவளது தாயார்.

ஆனால் போனவர் வரவேயில்லை. போதையேறிப்போன ஒரு கார்காரன் அவரை ஒரு போஸ்ட் கம்பத்தில் தூக்கியெறிந்துவிட்டு அருகில் இருந்த ஆட்டோவில் வண்டியை மோதியபிறகுதான் அவனது வண்டியை நிறுத்தினான். ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி ஆட்டோக்காரனும் உயிர் விட்டான்.
ஒரே நாளில் இரு உறவுகளை இழந்த ஸ்ரீ நடைபிணம் ஆனாள்.
உண்ணவும் இல்லை உறங்கவும் இல்லை. இரண்டே நாளில் அவள் தெருவில் கௌன்சிலர் ஓட்டு கேட்டு வந்தபோது அவர் மீது கல்லை விட்டெறிந்தாள்.


அவளை அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு வருவதற்குள் தனுவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. கௌன்சிலர் ஆளுங்களிடம் அவள் கெஞ்சிக் கூத்தாடி ஸ்ரீயை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஸ்ரீயின் முகத்தை கௌன்சிலர் பார்க்கவில்லை. ஆனால் தனுவை அவரது ஆட்கள் அடையாளம் வைத்துக்கொண்டார்கள். எலெக்ஷன் நேரம் என்பதால் ஸ்ரீயை ஒன்றும் செய்ய திட்டம்போடவில்லை கௌன்சிலர். பவித்ராவின் விஷயத்தில் ஏற்கனவே சொதப்பியதால் அமைதியாக இருந்துவிட்டார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு கௌன்சிலர் ஆட்களின் தொல்லை அதிகமானது. தனுவிடம் தினம் வந்து வம்பிழுத்தனர். அதனால் ஸ்ரீ அக்கம் பக்கத்தில் சொன்னவர்கள் அறிவுரைப்படி யாரும் அறியாத இடத்திற்கு செல்ல முடிவெடுத்தாள். ஹேம்நாத் ஊரைவிட்டே ஓடிவிட்டான். ஸ்ரீயும் தனு மோகனாவை அழைத்துக்கொண்டு மசூத்திடம்கூடச் சொல்லாமல் திருச்சி சென்றுவிட திட்டம்போட்டாள்.

திட்டத்தின் முதல் கட்டமாக தனுவையும் மோகனாவையும் அவளது பையனையும் திருச்சிக்கு அனுப்பினாள். மறுநாள் அவளும் கிளம்ப ஆயத்தமானாள். பவித்ராவின் பணத்தைக் கொண்டு பவித்ராவும் ஸ்ரீயும் என்ன செய்ய நினைத்தார்களோ அதனை பிசகில்லாமல் செய்ய முடிவு செய்தாள்.

ராஜனும் கோபியும்

ராஜனும் கோபியும் பைக்கில் மதுரையின் விளக்குத் தூண் நான்கு வழிச் சாலையை நோக்கி மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தனர். விளக்குத் தூண் அருகே நெருங்கிய போது போக்குவரத்து நெரிசலில் அந்த சாலை ஸ்தம்பித்து நிற்பதைப் பார்த்து வண்டியை ஓரம் கட்டினான் ராஜன்.

அந்த சாலையில் ஒரு வட நாட்டு டபிள் ஆக்சில் டூரிஸ்ட் பஸ் தவறாக ஒன்வே சாலையில் திரும்பியதாலும் திரும்பிய சாலையில் மற்றொரு அரசு பேருந்தோடு முத்தமிட்டுக்கொள்வது போல எதிர் எதிரே சொருகிக்கொண்டு நின்றதாலும் அனைத்து வாகனங்களும் உருமத் தொடங்கின. முழுமையாக திரும்பவும் முடியாமல் டிராஃபிக் போலீஸ் பேசும் பாஸையும் புரியாமல் விழித்த வட நாட்டு டூரிஸ்ட் பஸ் ஓட்டுனர் ஒரேடியாக குழம்பிப்போனான்.

சாலையைக் கடக்க வேண்டியவர்கள “அப்பாடா இன்னைக்குதான் ஆர அமர இந்த ரோட்டை கிராஸ் பண்ணிருக்கேன்.” என்று மகிழ்ச்சியாக சொல்வதைக் கேட்டுக்கொண்டே ராஜனும் கோபியும் முன்னே சென்றனர்.

அவர்கள் அருகில் இரு பாதசாரிகள் நெரிசலைப் பற்றி பேசிக்கொண்டனர்.

ஒருவர் சொன்னார் “ஏன்னப்பா அந்த மடையன் பாதி வழியில திரும்பினான்? டிராஃபிக் ஜாம் ஆகிடுச்சு பார்! ”

மற்றொருவர் சொன்னார் “அந்த டூரிஸ்ட் பஸ்காரன் என்கிட்டதான்ப்பா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வழி கேட்டான். திருமலைநாயக்கர் மஹால் போயிட்டு வந்திருப்பான்போல. நான் தெளிவாக சொன்னேன் ‘இந்தப்பக்கம் டூவீலர் தான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போக முடியும். யு கோ டூ பெரியார் அன்ட் டேக் தானப்ப முதலியார் ஸ்டிரிட் ரோட்’ என்று தெளிவாக சொன்னேன். போலிஸ்காரன் ஒன்வேன்னு போர்ட்டு போடுறான். இது டூரிஸ்ட் ப்லேஸ்ன்னு தெரியும. அப்ப என்ன செய்யணும்? டூரிஸ்ட் பஸ்காரனுக்கு அங்க அங்க மீனாட்சிஅம்மன் கோயிலுக்கும் திருமலைநாயக்கர் மஹாலுக்கும் ரூட் மேப் கொடுக்கணும். இல்லை கொட்டை எழுத்தில் இங்கிலீஸ்சில் போர்டாவது வைக்கணும். அந்த டிராஃபிக் போலிஸ்காரனப்பாரு என்ன பண்றான்னு.. ”
இருவரும் டிராஃபிக் போலிசைப் பார்க்க இவர்கள் பேச்சைக் கேட்ட ராஜனும் பார்த்தான்.

வட நாட்டு டிரைவர் டிராஃபிக் போலீசிடம் : “கியா சாகப்? ”
பற்களைக் கடித்துக்கொண்டே டிராஃபிக் போலீஸ் பஸ்காரனுடன் உரையாடினான்.. இல்லை இல்லை பற்களைக் கடித்துக்கொண்டே கஷ்டப்பட்டு பேசினான்.

டிராஃபிக் போலிஸ் : ஏய் வெண்ணெ! திரும்புடா. ர்pவர்ஸ் வா!
வட நாட்டு டிரைவர் போலீஸைப் பார்த்து சலாம் போட்டான். சலாம் போட்டவன் மீண்டும் சொன்னான்

வட நாட்டு டிரைவர் : கியா சாகப்? மீனாட்சி அம்மன் டெம்பிள் விச் வே?
டீராஃபிக் போலிஸ் : ஏய் வெண்ணெ! வெண்ணெ! திரும்புடா. ரிவர்ஸ் வாடா! இது ஒன்வே!
பஸ் டிவைர் ரிவர்ஸ் எடுத்தால் அவனை பின்னால் நிற்கும் குட்டியானை வண்டிக்காரன் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுபோய் ஸம்ஹாரமே செய்திடுவான். அதை அறிந்த பஸ்காரன் பின்னால் செல்வதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. டிராஃபிக் போலிஸ{க்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை வடநாட்டு பஸ்காரன் தன்னையும் அறியாமல் பெல்ட்டால் அடித்து எழுப்பிக் கொண்டிருந்தான்.

வட நாட்டு டிரைவர் : “கியா சாகப்? ”
ஒன்றானது இரண்டானது.. பிறகு மூன்றானது..

டிராஃபிக் போலிஸ் : “ஏய் வெண்ணெ! வெண்ணெ! வெண்ண! கோ பேக். ரிவர்ஸ்! ”

ராஜனும் கோபிநாத்தும் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்த இரு பாதசாரிகள் ராஜனின் யுனிபார்ம் பார்த்ததும் கப் சிப் என்றாகினர். எவனுக்கு வெண்ணெய் பட்டம் வந்தால் நமக்கென்ன? என்று வேகமாக நடை போட்டனர்.

ராஜன் நேரே அந்த டிரைவரிடம் சென்றான். எதிரே நின்ற அரசு பேருந்தை ரிவர்ஸ் எடுக்கச் சொன்னான். அரசு பேருந்து ரிவர்ஸ் எடுத்ததும் அதனை ஓரம் கட்டச் சொல்லிவிட்டு ஒன்வேயிலேயே டூரிஸ்ட் பஸ்ஸை போகச் சொன்னான். நாலு அடி நகர்ந்ததும் பக்கத்தில் ஒரு டீ கடையில் இருந்த வாலிபனிடம் கேட்டான்
“உனக்கு இங்கிருந்து மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு பாதை தெரியுமா? ” இளைஞன் ஆம் என்று தலையாட்டவும் ராஜன் சொன்னான் “நீ பஸ்ஸில் ஏறு. அவனுக்கு வழி சொல்லு. ”

இளைஞனும் சட்டென்று கீழ்படிந்தான். டிராஃபிக் போலிஸ் திரு திருவென்று விழிக்க பலர் வேடிக்கை பார்க்க டூரிஸ்ட் பஸ் ஒரு வழிப்பாதையில் ஜம்மென்று சென்றது. ஒரு வழிப்பாதையில் சென்றதால் அடுத்த சிக்னல் வரை எதிரே வந்த வாகனங்ளைத் தாண்டிச் செல்ல கொஞ்ச நேரம் திணறிய பஸ் டிரைவர் அடுத்த சிக்னலில் இளைஞனின் உதவியுடன் சரியான பாதையில் பஸ்ஸைத் திருப்பி சரியான பாதையைப் பிடித்தார். பஸ் சென்றதும் டிராஃபிக் மின்னல் வேகத்தில் சரியானது.

ராஜனும் கோபியும் மீண்டும் தங்களது பைக்கில் ஏறிக்கொண்டு ஸ்டேஷன் சென்றடைய பத்து நிமிடங்கள் ஆனது. இருவரும் தங்களது பணி நிமித்தம் பேசிக்கொண்டே சென்றனர். ராஜன் அப்போதுதான் கோபியிடம் சொன்னான் “கோபி நான் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கல்லாம் என்றிருக்கிறேன். அம்மாவின் தங்கச்சி கமலா சித்தி ஊரிலிருந்து ஒரே அணத்தல்ப்பா. நீ எப்போதுப்பா பண்ணப்போற? ”

“அட போப்பா என் விஷயத்தை விடு. கிரேட் டூவிலிருந்து கிரேட் ஒண்ணிற்கு இப்போதான் என் அண்ணன் வந்திருக்கான். நானும் இப்பதான் பரீட்சை முடிச்சி ஏ.எஸ்.ஐ டிரைனிங் போஸ்டிங்குக்கே வந்திருக்கேன். இன்னும் எஸ்.ஐ ஆக பத்து வருஷம் இருக்கு. அப்ப நினைத்து பார்க்கலாம் என் கல்யாணத்தைப் பற்றி. நீ என்னய்யா நல்ல விஷயத்தைக்கூட சீரியஸாக சொல்ற? நீ ஏ.எஸ்.ஐ யாக டிபார்ட்மென்டடில் சேர்ந்து ஒன்பது வருஷம் ஆகிடுச்சு. நம்ம ஊரிலிருந்து வந்தவனில் நீ ஒருத்தனாவது இன்ஸ்பக்டர் ஆகிடுவ என்று நினைக்கிறேன். எஸ்.ஐ இன்ஸ்பக்டர் ஆக பத்து வருஷம் அனுபவம் வேணும். உனக்கு எப்படியும் இன்னும் ஒரு வருஷத்தில் இன்ஸ்பக்டர் போஸ்ட் போட்டிடுவாங்க. அதுவரை உங்க அம்மாவின் தங்கச்சி பொறுமையாக இருக்கமாட்டாங்க. நீ சட்டுன்னு முடி. ”
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவுகள்,
பாலா சுந்தர் டியர்
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Story a vittu Konjam divert aana mathri feel intha epi 🙄 (Rajan n gopi portion)
Oru velai ethachum clue vachrupingalo🧐🧐🧐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top