• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 9: Tharkalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 8.

பேராசிரியர் பூபாலன் அடித்த அடி பேராசிரியர் ராமநாதனை வீழ்த்தியது. வெளி வராத கல்வெட்டுக்களும் ஓலைச் சுவடிகளும் இன்னமும் இருக்கக் கூடும் என்று யோசித்தவரே அல்ல அவர். வியப்புடன் எதுவும் பேசாமல் புரஃபஸர் பூபாலனையே பார்த்துக்கொண்டிருந்தார் ராமநாதன். அவரது மனைவி சாவித்திரி கணவனுக்கு விஷயங்களைப் புரிய வைக்க சரியான நபர் அகப்பட்டு விட்டார் என்ற மகிழ்ச்சியில் பார்த்திருந்தாள். தொடர்ந்து பேசினார் பேராசிரியர் பூபாலன்.

"நான் உங்களைப் பார்த்து பேசணும்னு தான் வந்தேன் ஏன் தெரியுமா?" என்று பூபாலன் சொன்ன போது இடை மறித்துப் பேசினார் பேராசிரியர் நாராயணன்.

"எங்கிட்ட ஜீன் ஆராய்ச்சி செய்யுறவங்க யாரையாவது தெரியுமான்னு கேட்டாரு புரஃபசர் பூபாலன். எனக்கு உடனே உங்க நினைவு தான் வந்தது. அது தான் கூட்டிக்கிட்டு வந்தேன்." என்றார் நாராயணன்.

இது என்ன புதுக்கதை? என்று இருவரையும் பார்த்தார் ராமநாதன்.

"ஆமா சார்! எனக்கு ஜீன்ஸ் அதாவது நமது மரபணுக்களைப் பத்தி சில தகவல்கள் தேவைப்படுது. அதுக்காகத்தான் கேட்டேன்" என்றான் பூபாலன்.

புரஃபசர் ராமநாதனின் முகம் பிரகாசமானது. காரணம் ஜீன் ஆராய்ச்சியைக் குறித்துப் பேசுவதும் விளக்கம் தருவதும் அவருக்கு மிகவும் விருப்பமான செயல்.

"என்ன தகவல் வேணும் புரஃபசர்?"

"பிறக்குற குழந்தை சில குறைப்படுகளோட பிறக்க ஜீன் தான் காரணம்னு நீங்க வந்த உடனே சொல்லிட்டீங்க! அது எப்படி காரணமாகுதுன்னு தான் தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்"

"சொல்றேன்! ஒரு கரு உருவாகும் போது ஆணுடைய விந்து பெண்ணுடைய கருமுட்டையைப் போய்ச் சேருது. அப்படிச் சேரும் போது நமது பேசிக் பில்டிங்க் பிளாக்னு சொல்லுவோம். அதாவது நம்மோட அடிப்படை கட்டமைப்புகுக் காரணமான ஜீன்சும் ஒண்ணு சேருது. அப்படிச் சேரும் போது வெப்ப நிலை மாறுபாடு, ஹார்மோனல் இம்பேலன்ஸ் அதாவது சுரப்பிகளில பிரச்சனை இது காரணமாகவும் சில தேவையில்லாத மாற்றங்கள் ஜீன்சுல ஏற்படுது. அந்த மாற்றங்கள் தான் பிறவிக்குறைப்பாடுகளா வெளிப்படுது"

"நீங்க சொன்ன காரணம் இல்லாமலும் கூட அதாவது எல்லா விஷயமும் சாதகமா இருந்தும் கூட சில நேரங்கள்ல குறைபாடு ஏற்படலாம் இல்லையா?"

"ஏற்படலாம்! அதைத்தான் ம்யூட்டேஷன் அப்படீன்னு சொல்வோம்"

"இந்த ம்யூட்டேஷன் பெரியவங்க உடம்புலயும் நடக்கலாம் இல்லையா? அப்படி நடந்தா அது தான் கேன்சரா, சில சமயம் கட்டிகளா வெளிப்படுது இல்லையா?"

"ஏறக்குறைய அப்படித்தான். நீங்க ஹிஸ்டரி புரஃபசராயிருந்தும் இன்றைய ஜெனிடிக்ஸ் பத்தி இத்தனை தெரிஞ்சு வெச்சிருக்கீங்க?"

"நன்றி சார்! என்னோட கேள்வி இன்னமும் முடியல்ல! ஒரு வேளை அப்படிப்பட்ட ம்யூட்டேஷனே நடக்க விடாம செஞ்சிட்டா மரபணு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்காது அதே போல பெரியவர்களுக்கும் கேன்சர் போன்ற நோய்கள் வராது இல்லையா?"

"ஒரு பேச்சுக்கு வேணும்னா அப்படிச் சொல்லிக்கலாம். ஆனா அது சாத்தியமே இல்ல! ஜீன்கள் எப்ப எதுக்காக ம்யூட்டேட் பண்ணும்னு இன்னி வரைக்கும் யாராலயும் கண்டு பிடிக்க முடியல்ல! ஆனா பரம்பரை வியாதிகளான சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த இப்ப ஜெனிடிக்ஸ்ல ஆராய்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. அதுல ஓரளவு வெற்றியும் பெற்றிருக்காங்க! ஆனா ம்யூட்டேஷனே இல்லாம செய்ய முடியாது"

தமிழ்ப்பேராசிரியர் நாராயணனும் வரலாற்றுப் பேராசிரியர் பூபாலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"சார்! எனக்கு ஜெனிடிக்ஸ் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்குன்னு சொல்லி பெருமைப்பட்டீங்க இல்ல?"

"ஆமா! வரலாற்றுப் பேராசிரியரான நீங்க அறிவியல்ல ஈடுபாடு காட்டுறது எனக்கு ரொம்பப் பிடிச்சது"

"ரொம்ப சந்தோஷம்! ஆனா இதை எல்லாமே நான் ஓலைச் சுவடி மூலமா கத்துக்கிட்டேன்னா உங்களால நம்ப முடியுதா?"

வயை மூட மறந்து அவர்களையே வெறித்தார் ராமநாதன்.

"நம்ப முடியல்ல இல்ல? நீங்க முதல்ல அகத்தியர் பற்றி நான் எழுதின கட்டுரையை நம்பாம என்னைக் கேள்வி கேட்டப்ப உங்களுக்கு விளக்கம் சொல்ல ஒரு காரணம் இருக்குன்னு நான் சொன்னேன் நினைவுருக்கா? அந்தக் காரணம் இது தான்" என்றார்.

இன்னமும் நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார் ராமநாதன்.

"உங்களுக்கு விளக்கமாச் சொல்றேன். அப்பத்தான் புரியும்" என்று சொல்லி தனது பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து வெளியில் வைத்தார். ஒரு ஓலைச் சுவடியிலிருந்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதைப் போல இருந்தது அது. அதில் இருந்த சில விளக்கப்படங்கள் ராமநாதனது கவனத்தைக் கவர்ந்தன. அவை இரு ஜீன்கள் ஒன்று சேரும் ம்யூட்டேஷனைக் குறிக்கும் வரைபடத்தை ஒத்திருப்பதை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் கவனித்தார் அந்தப் பேராசிரியர்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
wow sis.tharkalam agathiar kalm parthu wondering, now the genetic disorders are found to be prevalent... nice ud sis(y)(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top