Evano Oruvan epi 1

anisiva

Moderator
Author
#1
வணக்கம் மக்களே,
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கதையோட வந்திருக்கேன். படிச்சு பாருங்க, உங்க கமெண்ட்ஸ் மறக்காம சொல்லுங்க.
நன்றி.

எவனோ ஒருவன்-1

“16-12 தாரிணி டு சேர்வ்..”
அது ஒரு உள்விளையாட்டு அரங்கம்.
முழுமையாய் ஏசி வசதி செய்யப்பட்டு நகரின் மையத்தில் அமைந்திருந்தது. அங்கு தான் இவர்களின் இன்றைய ஆட்டம்.
“விடாதே, பேக் ல போடு”
அப்படி போட்டும் அதே வேகத்தில் திரும்பி வந்த பந்தை
“அற்புதா லீவ் இட்”,
லாவகமாய் பிளேஸ் செய்திருந்தாள் பவதாரிணி.
எதிரணியினர் இவர்களுக்கு ஒத்த அளவில் வலிமையாய் இருந்தனர்.
இவர்கள் ஜெயிக்க இன்னும் நான்கு பாயிண்ட் தேவை என்ற நிலையில் பிரேக் என்றாள் எதிர் டீமின் சோஃபியா.
“ ஏன் அற்புதா இப்படி லட்டு மாதிரி ஈஸியா அவ கையில் போய் கொடுக்கிற? ஆள் இல்லாத இடமா தான் பார்த்து போடேன்”
மூச்சு வாங்க நின்றிருந்தாள் அவள். இருவரின் ‘அடிடாஸ்’ உடைகளும் அந்த ஏஸியிலும் தெப்பலாய் நனைந்திருந்தது.


“கடைசி இரண்டு பாயிண்டை எப்படி எடுத்தோமோ, அதே போல் விளையாடு அற்பு... நம்ம டிரீட் மறந்துடாதே,கமான்”

வழக்கம் போல் அவள் தோள் தட்டி விட்டு ஆட்டத்தை அரம்பித்து அதை வெற்றிகரமாய் அவர்கள் பக்கமே திருப்பியிருந்தாள் தாரிணி.
எதிரணியினருக்கு சர்வீஸ் போகும் வாய்ப்பே தரவில்லை.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் அந்த கிளப்பின் பாட்மிண்டன் போட்டியில் சேம்பியன் பட்டம் பெற்றுவிட்டனர்.


“சூப்பர் டி!என்னமா விளையாடுது என் செல்லம்”
காரின் சாரதி இருக்கையில் இருந்த அற்புதாவின் கன்னம் பற்றி இவள் கிள்ள, அதிகப்பட்ச சந்தோஷமாய் புன்னகைத்தாள் அவளும்.
“ இப்பவே சாப்பிட போலாமா? பசிக்கிது தாரிணி”
“உனக்கு என்னைக்கு தான் டி பசிக்கலை?நாம இப்படி இந்த டிரஸ்ஸில் போனா கடைக்குள்ள தான் விடுவானா இல்லை, நாம கேட்கிற ஐட்டம் தான் கிடைக்குமா?வீட்டுக்கு போயிட்டு அழகா கிளம்பிட்டு அப்புறம் போலாமே”
அதன்படி அடுத்த ஒரு மணிநேரத்தில் தயாராகி அந்த புகழ்பெற்ற உணவு விடுதியில் அமர்ந்திருந்தனர்.
“ அந்த சோபி, ஊமை கோட்டானாட்டம் இருந்திட்டு என்னமா விளையாடினா பார்த்தியா அற்புதா? போன வாரம் வரைக்கும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னா!”
“ அவளை நம்பினையா நீ? நம்ம ஊரில் இரண்டு வேஷம் போட மனுஷங்களுக்கு சொல்லியா தரணும்?”


பேசிக்கொண்டிருக்க இவர்களிடம் வந்தான் சர்வேஷ்!
“என்ன தாரிணி அதிசயம்! வராதவங்க கூடவெல்லாம் வெளியே வந்திருக்கே!”
ஓரக்கண்ணால் அற்புதாவை அவன் பார்க்க, அவளோ அங்கே யாரும் இல்லாததை போல் மிக சாதாரணமாய் இருந்தாள்.
அவன் வம்பு பேச்சு புரிந்து அதை வளர்க்க விடாது தாரிணியோ,
“ ஆபிஸ் டைமில் இங்கே என்ன செய்றே நீ?”
அவர்கள் உரையாடல் சற்று நேரம் தொடர,
“ ஓகே யூ கண்டினியு தாரிணி.நான் கிளம்புறேன்.ஈவினிங் வீட்டுக்கு வரேன். வீட்டில் இருப்பதானே?”அவள் பதில் கேட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.
“ அவன் கிட்ட ஒரு ஹாய் சொன்னா என்ன? என்ன தான் டி பிரச்சனை உனக்கு. அவன் நம்ம கூட படிச்சவன் தானே!”
“எனக்கு பிடிக்கலைன கம்பெல் செய்யாதே தாரிணி”
‘நீ தேறவே மாட்டே!’
“ சரி என்ன சாப்பிடுறே?” அதன் பின் அங்கு பேச்சு சத்தம் இல்லை.


“என்ன செய்றே?கையை விடு சர்வேஷ்!”
வீட்டிற்கு வரேன் என்றவன் வந்தபின் இப்படி ஒரு அத்துமீறலில் இறங்கியிருந்தான். அவனிடம் பிடிபட்டிருந்த தன் கையை விலக்க முயன்றாள்.அவன் பிடி இறுகியிருந்தது, முயன்றும் முடியவில்லை!
“நான் சொல்றதை முழுசா கேளு தாரிணி,ஏன் பயப்படுறே?இந்த சொஸைட்டிக்காகவா?”
“இடியட் நீ என்ன பேசுறே?ஆர் யூ நட்ஸ்?உனக்கு என்னாச்சு? முதலில் என் கையை விடு”
ஆத்திரம் வர ஆரம்பித்திருந்தது தாரிணிக்கு.
“உனக்காக தான் இத்தனை நாளும் கல்யாணம் கூட செய்துக்கலை தாரிணி. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு நல்லா பார்த்துப்பேன். இப்படி கஷ்டப்படணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?”
அந்த பெண்ணின் எண்ணம் தெரிந்து கொள்ள அவன் முயலவில்லை.
தாரிணிக்கு அவன் சொன்ன எதுவும் செவிக்கு எட்டவில்லை. அவளுக்கு எப்போதோ அவனை பற்றி எச்சரிக்க பட்டிருந்தது இத்தனை சீக்கிரம் நடந்துவிட்டிருந்ததில் அதிர்ச்சி.


சர்வேஷுக்கு தன் விருப்பத்தை அவளிடம் காட்டி விட வேண்டும் என்ற நினைப்பிருந்தாலும், அவள் கண்ணில் எட்டி பார்த்த கண்ணீர் கொஞ்சம் அவனை இம்சிக்க தான் செய்தது.அவனின் நீண்ட கால தோழியாயிற்றே!அந்த யோசனையில் அவன் பிடி சற்று தளர,அவனிடமிருந்து ஓடிச் சென்று வாசல் கதவைத் திறந்து வைத்தாள்.
“ தாரிணி” அவள் பின்னோடு ஓடி வந்தவன் அவள் வாசலைக் கண்டு சிலையாய் நிற்பதைக் கண்டு யாரென்று பார்க்க, அது அவன் தான்!


சரணை கண்டவள், தன் விழிகளிலிருந்து தெரித்த கண்ணீரை துடைத்துக் கொள்ள அவளின் வெளுத்த முகமும் அவள் நண்பனின் பதட்டமும் வந்தவனுக்கு வேறு கதை சொல்லிற்று!

அவனை அங்கு எதிர்பார்க்காத சர்வேஷ்
“நான் கிளம்புறேன் தாரிணி”
என்றபடி யார் முகத்தையும் ஏறிட்டும் பார்க்காமல் தன் காலணிகளை அணிந்துக் கொண்டு வெளியே விரைந்துவிட்டான்.


வாசல் கதவை திறந்து வைத்திருந்த தாரிணியை சற்று நேரம் பார்த்த சரண், அவள் அழைப்பை எதிர்பார்க்காமல் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.அவனை வரவேற்றது டீபாயின் மேல் இருந்த ஒரு சிகப்பு ரோஜா பொக்கேயும், சாக்லேட்டும்.
நடந்த நிலவரம் பிடிபட தாரிணியின் பார்வையை சந்திக்க முயன்றவனுக்கு அவளின் தயங்கிய பார்வை மட்டுமே பதிலாய் கிடைத்தது.


“ம்ம்கும்...தாரிணி குடிக்க கொஞ்சம் தண்ணி”
உரிமைக்காரன் போல் அவன் கேட்க, தண்ணீர் பாட்டிலை அவன் முன் வைத்தவள் எதையும் கூறாது வீட்டை விட்டு வெளியே போயிருந்தாள்.


சற்று நேரத்தில் மழலையின் பேச்சுக் குரல்.அவள் வீட்டினுள் நுழையும் அரவம் கேட்க, அப்படியே அமர்ந்திருந்தான்.
“மா யார் வந்திருக்கா? சர்வேஷ் பா வா?”
குழந்தை கேட்டதற்கு அவளிடம் பதிலில்லை.
அதற்கு மேல் காத்திருக்காமல் உள்ளே ஓடி வந்தவனை எதிர்க்கொண்டான் சரண்,
முகம் முழுக்க புன்னகையுடன்.
“ஹய் அப்பா”
பிள்ளையை தலைக்கு மேல் அவன் தூக்க அவன் பிள்ளையோ குனிந்து தந்தையின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தது.
“ஏன் பா இவ்ளோ நாள் என்னை பார்க்க வரலை? உங்களை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?”
இனி எங்கையும் விடப் போவதில்லை என்பதாய் தந்தையின் கழுத்தை நெருக்கிக் கட்டிக் கொண்டான்.
“மித்ரன் வா, கை கால் கழுவிக்கோ”
தங்கள் இருவரை தவிர யாருமே அங்கில்லை என்று எண்ணியிருந்திருப்பான் போல அந்த குட்டி மித்ரன்.
“பா வாங்க, வெளியே இருந்து வந்தா கை கால் கழுவணும், உங்க மம்மி சொல்லலை?”
தாரிணியின் கண்கள் இன்னமும் கலங்கியிருந்தது. நடந்து முடிந்த சர்வேஷ் விஷயத்தில் மட்டுமில்லை, இப்போது நடந்து கொண்டிருந்த செயல்களிலும் தான்.
அவனை தாலாட்டி சீராட்டி வளர்த்தவள் அவள், அவனானால் மூன்றாம் மனுஷி போல தன்னை நிற்க வைத்துக் கொண்டு தன் தந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறான்.
‘நன்றிக் கெட்ட கழுதை’


சரணின் பார்வை மனைவியை அடிக்கடி தொட்டுச் சென்றதை அவள் அறியவில்லை. காட்டன் சுடிதாரில் என்றும் போல் லட்சணமாய் இருந்தாள்!முகம் மட்டும் ஜீவன் இல்லாதிருந்தது.

சர்வேஷின் உள்நோக்கம் அவனுக்கு எப்போதோ தெரிந்தது தான்.அதை அவளுக்கு புரிய வைக்க முயன்று இவர்களுக்குள் இடைவெளி அதிகமானது மட்டுமே நடந்த காரியம்!இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது தாரிணி அதை அவளாகவே பட்டு தெரிந்து கொள்ள!
“ மித்து குட்டி ஹோம்வர்க் செய்யலாம் வா மா”
தன்னிடமிருந்த அத்தனை விளையாட்டு சாமான்களையும் தன் தந்தை முன் கடைப் பரப்பியிருந்தான்.அதனைப் பற்றிய வீர தீர சாகசங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.அன்னை சொன்னது அவன் காதில் விழக் கூட இல்லை.
“அம்மா என்ன சொல்றாங்க பாரு”
சரண் சொன்னதும்
“இன்னிக்கி நோ ஹோம்வர்க் டே மா!ஜாலி, நான் அப்பா கூட இன்னிக்கி ஃபுல்லா விளையாட போறேன்” தாரிணியும் சரணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் .அந்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருந்தது இருவருக்கும்!
----
“கண்ணா டேய்,ஏன் டா இப்படி பண்றே பூரா வடையும் நீயே சாப்பிடுறே? எனக்கும் கொஞ்சம் வையேன் டா! மா பாரு மா இவனை!”
பத்தாம் வகுப்பிலிருந்த தாரிணி தன் அண்ணனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.செய்ய மாட்டாளா பின்னே! கைக்கு மூன்று வடைகள் வீதம் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தான் அவனும்!
“செஞ்சிட்டே தானே இருக்கேன், கொஞ்சம் அவன் கூட பொறுமையா போயேன் டி”
“நீங்க எப்போ பாருங்க இந்த தடியனுக்கே சப்போர்ட் பண்னுங்க,நான் கோவமா போறேன்.இவன் சாப்பிட்டு எதுவும் வடை மிச்சம் இருந்தா எனக்கு எடுத்து வைங்க!”


அவள் அகன்றதும்,சாந்தி மகனை பாவமாய் பார்த்தார்.ராஜா போலிருந்தான்.ஆணுக்குரிய அத்தனை அம்சமும் தன் மகனுக்கு உண்டு என்பதில் அத்தனை பெருமை அவளுக்கு ஆனால் இப்போது அப்படியில்லை எல்லாம் தன் கணவர் பார்த்து வைத்து சீமை மகராசி செய்து வைத்த கோலம்!

உறவில் சென்னையில் போய் செட்டிலாகிவிட்ட பெரிய தொழிலதிபரின் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.
“ஏங்க அவன் வயசுக்கு இப்பவே எதுக்கு கல்யாணம்? கொஞ்ச வருஷம் போகட்டுமே! சாந்தி மன்றாடி பார்த்தாலும் இரத்தினவேல் ஒத்துக் கொள்ளவில்லை.
“ நல்ல குடும்பம் , தங்கமான பெண். இப்படி ஒரு இடத்தில் சம்மந்தம் அமைஞ்சா கண்ணாவுக்கு நல்லதுதானே!”
மேலும் என்னென்னவோ சொல்லி அத்தனை பேர் வாயையும் அடைத்து மகனுக்கு திருமணத்தை நடத்திவிட்டார்.
இப்போது மகன் வந்தவளிடம் அல்லோல்படுவதை பெற்றவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“என்ன மா யோசனை ?”
“ ஆங், இல்ல இங்கேயே சாப்பிட்டு போயேன். என்ன வேணும் சொல்லு, அம்மா செஞ்சு தரேன்”
“ இல்லமா, கம்பெனில கொஞ்சம் வேலை இருக்கு , முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும். பூஜாவுக்கு இன்னிக்கி வெளியே போய் சாப்பிடணுமாம்.
கிளம்புறேன்”
மகன் தனியாக குடியிருக்கும் அந்த வீட்டிற்கு சமையல் கட்டு எதற்கு தான் இருக்கிறதோ! எப்போது கேட்டாலும் அங்கே,இங்கே என்கிறான். சாந்திக்கு மனம் அடித்துக் கொண்டது.
“ தாரிணி நல்லா படிக்கிறாளா மா?அப்பா ஏதோ புலம்பிகிட்டு இருந்தாரே!”
“படிக்கிறது பரவாயில்லை, வாய் தான் அதிகம்.எந்த வாத்தியார் கிட்டையும் அடங்குறது இல்லை.போன வாரம் என்னை ஸ்கூலில் கூப்பிட்டு விட்டாங்க, அவ லட்சணத்தை பத்தி சொல்ல”


அவளுக்கு டியூஷன் ஏற்பாடு செயவதாக அன்னையிடம் கூறிவிட்டு புறப்பட தயாரானான்.
“என்னடா சரவண பவன், ஒரு வழியா முடிச்சிட்டே போலிருக்கு! நல்லா சாப்பிடு தம்பி, பாரு தொப்பை கூட சின்னதா போச்சு!”
அவன் பைக் அருகில் வந்த தாரிணி அவனைச் சீண்டி, தமையனிடமிருந்து தலையில் கொட்டு வாங்கிக் கொண்டாள்.
“இந்த வாய் இல்லைன்ன உன்னை நாய் கூட மதிக்காது தாரிணி”
“நாய் மதிக்கிறதெல்லாம் இருக்கட்டும்.ஊருக்குள்ளே அவனவனை பொண்டாட்டியே மதிக்க மாட்றா!”
அவள் பேச்சில் போபம் வந்து இரட்டை ஜடையில் ஒன்றை பற்றி இழுத்துவிட்டான்.


“உன் பொண்டாட்டி உன்னை மிரட்டுறதில் தப்பே இல்லை டா, இரு இன்னும் கொஞ்சம் அவ கிட்ட வத்தி வைக்கிறேன்”
“கொள்ளியே வைடி, எனக்கு கவலை இல்லை! வரட்டா, டாட்டா”
பிள்ளைகளின் சம்பாஷனைகள் கேட்டு முறுவலித்த சாந்தி, இவளுக்காவது வாழ்க்கை ஒழுங்காய் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுவும் பொய்த்து போகும் என்று அறியாமல்!
 
Last edited:
#9
:D :p :D
உங்களுடைய "எவனோ
ஒருவன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அனிசிவா டியர்
 
Last edited:

Latest updates

Latest Episodes

Top