23.04.19 அன்று *'குவாண்டம் இயற்பியலு'க்கு* வித்திட்ட இடாய்ச்சு நாட்டு இயற்பியலாளர் *மேக்சு பிளாங்கின்* பிறந்தநாள்...
(அறுசீர் விருத்தம்)
கரும்பொருள் வீசும் கதிரைக்
.....கணக்கிட முனைந்த வேளை
வருமலை ஆற்றல் துண்டாய்
.....வருமெனும் கருத்தால் புதிய
புரிதலைத் தந்தோன் இன்றும்
.....புதிரென விளங்கு 'குவாண்டம்'
கருத்ததன் தந்தை
.....மேக்சு பிளாங்கினைப் போற்று வோமே!
ஒளியினை ஆற்றல் துண்டாய்
.....உமிழ்கையில் ஒவ்வோர் துண்டும்
கொளுமொரு ஆற்றல் அதிர்வெண்
.....கூறுநேர் விகித மாகும்
குலைவிலை, கூடல் உண்டு
.....குவியுமே முழுவெண் கணக்கில்
மலைவிலா விகதப் பாட்டின்
.....மாறிலிக் கன்னோன் பேரே!
(விளக்கம் பின்னர்...)
(அறுசீர் விருத்தம்)
கரும்பொருள் வீசும் கதிரைக்
.....கணக்கிட முனைந்த வேளை
வருமலை ஆற்றல் துண்டாய்
.....வருமெனும் கருத்தால் புதிய
புரிதலைத் தந்தோன் இன்றும்
.....புதிரென விளங்கு 'குவாண்டம்'
கருத்ததன் தந்தை
.....மேக்சு பிளாங்கினைப் போற்று வோமே!
ஒளியினை ஆற்றல் துண்டாய்
.....உமிழ்கையில் ஒவ்வோர் துண்டும்
கொளுமொரு ஆற்றல் அதிர்வெண்
.....கூறுநேர் விகித மாகும்
குலைவிலை, கூடல் உண்டு
.....குவியுமே முழுவெண் கணக்கில்
மலைவிலா விகதப் பாட்டின்
.....மாறிலிக் கன்னோன் பேரே!
(விளக்கம் பின்னர்...)