• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hacksaw Blade | Short Story | My First Story | Humor | Part 1/2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
”தம்பி! உங்க அண்ணன் இருக்கானா?”

“படிச்சுட்டு இருக்கான், என்ன விஷயம்?”

“கொஞ்சம் வரச் சொல்லேன், ப்ளீஸ்...” –கீழே என் தம்பி யாருடனோ பேசிக்கொண்டிருந்தான், இந்தத் தெருல யாருக்காவது ஏதாவது பிரச்சனைனா எங்க ’கேங்’ல இருந்து யாராவது ஒருத்தனைத்தான் உதவிக்குக் கூப்பிடுவாங்க. அநியாயத்துக்கு இன்னிக்கு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டானுங்க, நான் மட்டும் எதோ எம்.எஸ்.சி. வரைக்கும் வந்துட்டோமே இப்பவாவது பரிட்சைக்குக் கொஞ்சம் படிக்கலாமேனு வீட்ல இருந்தேன், இப்ப அதுக்கும் ஆபத்து வந்தாச்சா...!

அது யார் என்று குரலை வைத்து நான் ஓரளவுக்கு ஊகித்திருந்தேன், வாயெல்லாம் பல்லாக, நக்கலாகச் சிரித்தபடியே வந்த என் தம்பியைப் பார்த்தவுடன் என் ஊகம் உறுதியானது.

நேராக என்னிடம் வந்தவன் “உன்னக் கூப்பிடுறாங்க” என்றான்,

“பூட்டா?” என்றேன்,

“மாமியும் பூட்டு, பிராப்ளமும் பூட்டு” என்று இளித்தான்,

“அதான பார்த்தேன், எங்கடா நீங்க படிச்சுக் கிடிச்சு வெச்சு சென்னைல மழை கிழை வந்திருமோனு பயந்துட்டே இருந்தேன், போங்கப்பா போங்க...” என்றாள் நாங்கள் குடியிருந்த கோயில்.

”ரகு, சங்குவையும் கூப்பிடவா?” என்றான் என் தம்பி,

“அவங்க வீட்ல இல்லை, எஸ்கேப்” என்றேன், கேங்கில் இரண்டு நபர் குறைகிறதே என்ற வருத்ததுடனேயே பூட்டு மாமியின் பிரச்சனையைத் தீர்க்கக் கிளம்பினோம்.


'பூட்டுமாமி' எங்கள் தெருவிற்குக் குடிவந்த இரண்டே மாதங்களில் இந்த நாமகரணத்தில்தான் (எங்களிடையே) படு ”பாப்புலர்” ஆகி இருந்தார் அந்த மாமி. இயற்பெயர் வீட்டின் முன் தொங்கிய நேம்போர்டில் மட்டுமே இருந்தது, ’சீதாலஷ்மி’ என்று.

எங்கள் தெருவிற்கு அவர் வீடு பார்க்க வந்த அன்று பார்த்தது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலை வழக்கம் போல நாங்கள் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீட்டிலிருந்து அவர் வெளியில் கிளம்பிப் போகிற பொழுதுதான் பார்த்தோம்.

அனைவருக்கும் சற்றே ஆச்சரியம்தான்.

“என்னடா இது, நாம் பார்க்கும் போதுலாம் வீடு பூட்டித்தான் இருந்துச்சு, இப்ப இவங்க இருக்காங்க? எப்ப ஷிஃப்ட் ஆனாங்கனே தெரியலயே” என்றான் ரகு ஆச்சரியத்துடன்,

“விட்றா! நாம என்ன எப்ப பார் இங்கேயே நின்னுட்டு வாட்ச் பண்றோமா என்ன? அவங்களும் தனியாள்தான, சாமான்லாம் கம்மியாத்தான் இருக்கும், நாம காலேஜ் போயிருக்கிற கேப்ல வந்துருப்பாங்க” என்றேன்,

சங்கு இடையிட்டான், “ஆனா, நான் அப்பவே நோட் பண்ணென் டா, முதல்ல இருந்த பூட்டும் இப்ப இருக்குற பூட்டும் வேற மாதிரி இருக்குனு, அப்பவே டவுட் ஆனேன்...” என்று,

“முதலைக்கு ஏன் பூட்டு போட்டாங்க?” என்று அவனை ஓட்டினான் ரகு,

“ஆமா, இவரு சி.பி.ஐ, பூட்டெல்லாம் நோட் பண்ணி வெச்சுப்பாரு...” என்று நானும் சேர்ந்துகொண்டேன், இப்படி ஏதாவது வாய் கொடுத்து எங்களால் கலாய்க்கப்படுவதே சங்குவின் வழக்கம்.

”அதவிடுங்கண்ணா, அந்த மாமிக்கு இந்த வயசுல எவ்ளோ பலம் பாருங்க, புல்-அப்ஸ்-லாம் எடுக்குறாங்க!” என்றான் என் தம்பி ரகுவிடம், அவன் தவறிகூட என்னை ‘அண்ணா’ என்று கூப்பிட மாட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டுச் சற்றே குழப்பத்துடன் நாங்கள் அந்த மாமியின் வீட்டுப் பக்கம் நோக்கினோம், அவன் சொன்னது முக்கால்வாசி உண்மை என்று புரிந்தது.

மூன்று தாழ்ப்பாள்கள் இருந்த அந்தக் கதவிற்கு நான்கு பூட்டுக்களைப் போட்டுவிட்டு, எல்லாம் நன்றாகப் பூட்டியிருக்கிறதா என்று பூட்டு மாறிப் பூட்டு தொங்கிப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த மாமி. ஒரு வழியாக திருப்தி அடைந்தவுடன் கடவுளின் மேல் (அல்லது கதவின் மேல்) பாரத்தைப் போட்டுவிட்டுக் கிளம்பினாள் லஷ்மி மாமி. (இச்சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் அவருக்கு ‘பூட்டுமாமி’ பட்டாபிஷேகம் நடந்திருக்கவில்லை என்பதை வாசகர்கள் மனத்தில் கொள்ள வேண்டுகிறோம்!)

அவர் எங்களைக் கடந்து செல்கையில் அசரீரி வாக்கு போல் கேட்டது, “அந்தப் பூட்டுக்களோட வெயிட்லயே கதவு பேர்ந்து விழுந்துடும்னு நினைக்கிறேன்” என்ற ரகுவின் கமெண்ட், சற்றே தயங்கி நின்ற மாமி, பின் இறைவன் மேல் இருந்த நம்பிக்கையில்(!) வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு நடையைக் கட்டினார். நாங்களும் சற்று நேரம் அரட்டையடித்து, எங்கள் தெருவின் மற்ற முக்கிய ’ஸ்காண்டல்’களையும் அலசிவிட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றோம்.

(இறுதிப் பகுதி இங்கே)

குறிப்பு: இது நான் எழுதிய முதல் சிறுகதை. கிட்டத்தட்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது. எனக்குள்ளும் ஒரு கதாசிரியர் இருக்கிறான் என்பதை எனக்கும் என் நண்பர்களுக்கும் உணர்த்திய கதை. :giggle::giggle::giggle: சுமார் கி.பி. 2006-இல், நான் முதுகலை படிக்கும்போது, எழுதப்பட்டது! உங்கள் விமர்சனங்களை / கருத்துகளைத் தயங்காமல் கூறுங்கள்... நன்றி :):)(y)(y)
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
முழுதாக போடலாமே ஆசிரியரே... எப்படி பூட்டு மாமி பேர் வந்தது. கிபி 2006 ஆஆ.. ஹாஹா சரி சரி. ??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
முழுதாக போடலாமே ஆசிரியரே... எப்படி பூட்டு மாமி பேர் வந்தது. கிபி 2006 ஆஆ.. ஹாஹா சரி சரி. ??
போட்டாச்சு போட்டாச்சு... :):):cool:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அடேங்கப்பா! எத்தனை பழமையான கதை!
கி.பி 2006 என்றால் இதை சங்கம், சங்கம் மருவிய போன்று எந்த வகையறாக்குள் சேர்க்கலாம் ஆசிரியரே?
ஏதாவது அனுமானம் உண்டா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அடேங்கப்பா! எத்தனை பழமையான கதை!
கி.பி 2006 என்றால் இதை சங்கம், சங்கம் மருவிய போன்று எந்த வகையறாக்குள் சேர்க்கலாம் ஆசிரியரே?
ஏதாவது அனுமானம் உண்டா?
இதுவும் சங்க காலக் கதைதான், எங்கள் சங்க காலக் கதை! :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஓ... உங்கள் சங்க காலத்துக் கதையா? பலே... பலே...???
அதே அதே சபாபதே... :LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top