• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

happy birthday doctor vijayalkshmi navaneethakrishnan madam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் அம்மா.வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறோம்.

1580103645466.png

விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன்

மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 'சூழ்நிலை பாரதம்' என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'பச்சைக்கோயில்' என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார்.

கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்.

நாட்டுப்புற கலை அழிந்து வரும் நிலையில், நாட்டுப்புற கலைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட நல் உள்ளங்கள் பலர் இருந்தாலும் என் சிறிய வயதில் dd சேனல் மூலம் நம் கலை,கலாச்சாரம், கிராமியம் பற்றி எனக்கு சொல்லி கொடுத்த குரு இவர்.

சிறு வயதில் இவர் பாடலை போடும் போது ஆடியதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

பத்ம ஸ்ரீ பட்டம் கொடுக்கப்பட வேண்டிய உன்னத கலைஞ்சர்கள் இவர்கள்.

https://www.youtube.com/watch?v=Xk7EwX8kuUU
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top