Idaivadaatha Innalgal - 10

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 10

அதிர்ச்சியாக இருந்தது சுந்தரத்திற்கு. பெரும் நம்பிக்கை பொய்யானது. இப்போது அவள் விருப்பட்டு போனாளா..? அல்லது யாரும் கடத்தி சென்று இருப்பார்களா..? என்று சந்தேகம் வந்துவிட்டது அனைவருக்கும். அழகன் மிகவும் பயந்து போய் விட்டான். சுந்தரம் என்ன நடந்திருக்கும் என்று குழம்பி கொண்டிருந்தான்.

ஆனந்த், “இது என்ன புது பிரச்சனை...?” என்று தலையில் கை வைத்தான்.

விக்னேஷ், “உன்னோட தங்கச்சிய யாரும் கடத்திட்டு தான் போய் இருப்பாங்க.. அது யாருன்னு கண்டு பிடிக்கணும்..”

“இல்ல எனக்கு சந்தேகமா இருக்கு. கடத்துறாங்க ன்னு தெரிஞ்சு எப்டி அவங்க கூட அவ போவா..? அது மட்டும் இல்லாம இந்த லெட்டர் எப்டி இங்க வந்தது...? யாரும் வீட்டுக்குள்ள வந்தாங்களா..? எனக்கு ஒண்ணுமே புரியல...” என்று சுந்தரம் புலம்ப,

“நீ சொன்னதும் சரி தான்... அவ அவங்க கூட அமைதியா போயிருக்கான்னா, அவளுக்கே தெரியாம அவள கடத்திருக்கணும்... யாரும் தேட கூடாதுன்னு இப்டி ஒரு லெட்டர் எழுதி அனுப்பிருக்கணும்... அப்டி தான் நடந்திருக்க வாய்ப்பு உண்டு...” என்று விக்னேஷ் கூறினான்.

“இந்த லெட்டர் என்னோட ரூம் ல டேபிள் ல இருந்தது அண்ணா... நம்ம வீட்டுக்குள்ள யாரு வர முடியும். என் கிட்ட, அக்கா கிட்ட மட்டும் தான் சாவி இருக்கு...” என்று அழுது கொண்டே சொன்னான் அழகன்.

அப்போது அங்கு கோமதி வந்தார். அவர் வருவதை பார்க்கவும் அழகன் வேகமாக கண்ணை துடைத்தான். மற்ற மூவரும் பேசுவதை நிறுத்தினர். அவர் உள்ளே வரவும் அவர்களது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் நேராக சமையல் அறைக்கு சென்றார். மற்ற வேலைகளை கவனிப்பது போல இங்கு இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு கொண்டு இருந்தார். அழகன் முகம் அழுது சிவந்து இருப்பதை கண்டு ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது.

விக்னேஷ், “நீ உடனடியா ஒரு கம்ப்ளைன்ட் ரிஜிஸ்ட்டர் பண்ணு... அப்போ தான் கண்டு பிடிக்க வசதியா இருக்கும். அப்பறம் மலர் நம்பர் வேணும் சுந்தரம்... நான் அது இப்போ எங்க இருக்குன்னு செக் பண்ண சொல்லுறேன்...

எப்டியும் அவ எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சுடலாம். யாரும் எதுவும் பண்ணிருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் தைரியமா இருங்க... நான் உன்னோட தங்கச்சிய கண்டுபிடிச்சுடுறேன்.” என்று விக்னேஷ் கூறி கொண்டிருப்பதை மறைந்திருந்து கோமதி கேட்டு கொண்டிருந்தார்.

கோமதி செய்வதை ஆனந்த் கவனித்து விட்டான்.

“ஏம்மா...! என்ன பண்ணுறீங்க..? வேலைக்கு வந்தா வேலைய மட்டும் பாருங்க..” என்று திட்டினான்.

“நான் சும்மா தொடைச்சுட்டு தான் இருந்தேன்.. மற்றபடி ஒன்னும் இல்ல..” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகல பார்க்க,

விக்னேஷ், “இங்க வாங்க நீங்க...” என்று அழைத்தான்.

பயந்து கொண்டே வந்தார் கோமதி...

“நேற்று நீங்க மலர் எப்போ பார்த்தீங்க..?” என்று கேட்டான்.

“நான் காலைல வேலைக்கு வந்தேன். அப்போ மலர் வீட்டுல இருந்துச்சு. ஆனா காலேஜ் க்கு கிளம்பிட்டு இருந்தது. அதுனால என்னை சாயங்காலம் வேலைக்கு வர சொல்லி கிளம்ப சொல்லிடுச்சு. நானும் கிளம்பிட்டேன்.”

“பஸ் ஸ்டாண்ட் ல பார்த்ததா சொன்னீங்க... அத கேட்டேன் நான்..” என்று சொல்லவும்,

“அது நான் இன்னொரு இடத்துல வேலைக்கு போவேன்... அங்க போய்ட்டு வீட்டுக்கு போகும் போது தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் ல வச்சு பார்த்தேன்..”என்று சொல்லி நிறுத்தினார்.

“அப்போ காலைல நீங்க வீட்டுக்கு வந்தப்ப மலர் இங்க தான் இருந்தா..?”

“ஆமாம் தம்பி..”

“அப்போ அவ லெட்டர் ஏதாது கொடுத்தாளா..?” என்று கேட்டான் விக்னேஷ்.

“அவ கொடுக்கல தம்பி..”

“வேற யாராது வீட்டுக்கு வந்தாங்காளா..?”

“இல்ல தம்பி.. நான் உடனே கிளம்பிட்டேன். கிளம்பின உடனே மலரும் பின்னாடியே கிளம்பிட்டு இருந்தது.. வேற யாரும் வந்தது போல தெரியல..”

“அப்பறம் எப்டி இந்த லெட்டர் என்னோட ரூம்ல இருந்துருக்கும்...?” என்று அழகன் குழப்பமாக விக்னேஷிடம் கேட்டான்.

அந்த லெட்டரை பார்த்த கோமதி, “இது நான் தான் அழகா உன்னோட ரூம் ல வச்சேன்..” என்று சொல்லவும், மற்றவர்கள் குழப்பத்தோடு பார்த்தனர்.

“நீங்க வச்சீங்களா..?” என்று விக்னேஷ் சந்தேகமாக கேட்க,

“ஆமாம் தம்பி., நான் வரும் போது ஒரு பையன் வந்தான்., உன் கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தான். ஆனா நான் வீட்டுக்கு வந்தப்ப நீ ஸ்கூல்க்கு போய்ட்ட.. அதான் உன்னோட ரூம் ல டேபிள் ல வச்சேன் நான். ஏன், என்னாச்சு..?” என்று கூறி கேட்டார்.

விகேன்ஷ், “போதும் நீங்க கிளம்புங்க.. போய் வேலைய பாருங்க...” என்று சொல்லவும், சிடுசிடுத்து கொண்டே அவர் செல்ல போக,

“ஒரு நிமிஷம்... இங்க நடக்குற விஷயம் எதுவும் வெளில போக கூடாது... நான் ஒரு போலீஸ்., நீங்க நான் சொன்னத கேக்கல அப்டின்னா, அப்பறம் நீங்க ஸ்டேஷன் போக வேண்டி இருக்கும்... என்ன ஓகேவா...?” என்று மிரட்டினான்.

“சரி தம்பி.. இல்ல மன்னிச்சுடுங்க... நான் வெளில சொல்ல மாட்டேன் சார்..” என்று பவ்யமாக சொல்லிவிட்டு சென்று சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.

விக்னேஷ், “வா சுந்தரம் நம்ம போய் ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வருவோம்.” என்று அழைத்தான்.

“சரி வா... உடனடியா போவோம்.. ” என்று சுந்தரம் கிளம்பினான். பின் ஆனந்திடம் திரும்பி, “நீயும் வர்றியா ஆனந்த்..?” என்று கேட்டான்.

“இல்லடா.. நீயும் விக்னேஷ் ரெண்டு பேரும் போய் தங்கச்சிய கண்டுபிடிங்க.. நான் இங்க உன்னோட பணத்த யாரு எடுத்தான்னு கண்டுபிடிக்குறேன்.. நான் போய் அந்த கடைல விசாரிக்குறேன்..” என்று அவன் ஒரு கஷ்டத்தை சமாளிக்க நண்பனுக்கு உதவி பண்ண தயாரானான்.

பின்பு சுந்தரம், விக்னேஷ் இருவரும் கிளம்பி ஸ்டேஷன் சென்றனர். கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்தனர்.

இங்கு ஆனந்தும் அழகனும் சென்று அந்த கடையில் விசாரிக்கின்றனர்.

கடையில் பொருள் வாங்குவது போல சென்று விசாரிக்கலாம் என்று ஆனந்த் கூறினான். அழகனும் சரி என்று கூறி உடன் சென்றான்.

கடையில் ஆள் சிலர் நின்று இருந்தனர். இருவரும் ஒரு நிமிடம் அமைதியாக நின்று எதுவும் வாங்காமல் வேடிக்கை பார்த்தனர். அங்கு இருந்த மற்றவர்கள் வாங்கி சென்ற பின்னர், அழகன் “அண்ணா ஒரு பேனா கொடுங்க..” என்று கேட்டான்.

அவர் எடுத்து வைத்த பின், “வேறு சில மாடல் இருக்க..? காட்டுங்க...” என்று கூறினான்.

அவர் எடுத்து வரும் போது ஆனந்த் விசாரிக்க தொடங்கினான்.

“நேற்று கடை ஓபன் பண்ணிருந்தீங்களா நீங்க..?” என்று ஆரம்பித்தான்.

“ஆமாம் தம்பி... எப்போவும் திறந்து தான் இருக்கும் கடை... சனி, ஞாயிறு கூட திறந்து தான் இருக்கும் தம்பி..” என்று சொன்னார்.

“நேற்று இந்த தெருல, என்னோட ப்ரெண்டோ பணத்த யாரோ திருடிட்டு போய்ட்டாங்க... அத பற்றி உங்களுக்கு ஏதாது தெரியுமா அண்ணா..?” என்று கேக்கவும், அவர் பதில் பேசாமல் அமைதியாக பார்த்தார்.

“இல்ல அண்ணே...! சும்மா தான் கேட்குறேன்..” என்று சொன்னான் ஆனந்த்.

“தெரியும் தம்பி... அந்த வடிவேலு அண்ணே பையன் சுந்தரம் தான பணத்த தொலைச்சது...? எனக்கு அதுவும் தெரியும், இவன் அவரோட சின்ன பையன், நீங்க அந்த சுந்தரத்தோட ப்ரெண்டு எல்லாம் தெரியும்...” என்று அவர் சொல்லி சிரித்தார்.

“தெரியுமா அண்ணா...” என்று அவன் அசடு வழிவது போல கேட்டான்..

“என்ன கேட்கணுமோ நேரடியா கேளுங்க தம்பி..” என்று அவர் அனுமதி கொடுக்கவும் சற்று நிம்மதி அடைந்தான்.
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அழகன், “அண்ணே... நீங்க தெருல வேற யாரையாது புதுசா பார்த்தீங்களா நேற்று..? அத தான் கேட்க வந்தோம்.. உங்களுக்கு ஏதாது தெரிஞ்சுருந்தா சொல்லுங்க... எங்களுக்கு அது உதவியா இருக்கும்...” என்று அழகன் கேட்டான்.

“நான் நேற்று புதுசா யாரையும் தெருல பார்க்கல...” என்று யோசித்து கொண்டே சொன்னார்.

“நல்லா யோசிச்சு சொல்லுங்க அண்ணா... புதுசா ஏதாது விற்கிறதுக்கு கூட வந்துருக்கலாம்... யோசிச்சு பாருங்க...” என்று ஆனந்த் துருவி துருவி கேட்டான்.

“வந்தவங்க எல்லாரும் ஏற்கனவே இங்க வந்துருக்காங்க... தெரிஞ்சவங்க... அப்டி திருடுறவங்க இல்ல.. அதுவும் அவங்க யாரும் உங்க தெருவுக்கு உள்ள வரும் போது சில வீட்டுகாரங்க வெளில தான் இருந்தாங்க.. அப்டி இருக்கும் போது யாராது திருட முடியுமா..?” என்று அவர் ஒன்று கூற,

“சரி அண்ணே.. அவங்க இல்லைனாலும் வேற யாராது புதுசா பார்த்தீங்களா..? “ என்று அழகன் கேட்டான்.

“இல்லையே தம்பி.. நீங்க வேற யாரிடமாது கேளுங்களேன்..?” என்று அவர் சொல்லவும்,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். ஆனந்த் கிளம்பலாம் என்று கண்ணசைத்தான். ஆனால அழகனுக்கு ஏமாற்றமாக இருந்ததால் தலையை தொங்க போட்டு கொண்டே நின்றான்.

அவனுக்காக மறுபடியும் ஆனந்த், “இந்த தெருகாரங்க இல்லாம புதுசா...? இல்லைனா தெருக்காரங்களே வித்தியாசமா நடந்து கிட்டத பார்த்தீங்களா..? தெரிஞ்சா சொல்லுங்க அண்ணா... எங்களுக்கு உதவியா இருக்கும்...” என்று கேட்டான்.

இப்போது அவர் யோசித்து விட்டு, “எனக்கு தெரிஞ்சு சாயங்காலம் இவங்க அக்கா ஓடி போய்டுச்சுன்னு எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க... அப்பறம் சுந்தரம் வரவும் எல்லாரும் உள்ளே போய்ட்டாங்க...

ஆனா ரொம்ப நேரம் அந்த கமலா அக்கா தான் அவங்க தம்பி வர்றாங்கன்னு வெளில நின்று இருந்தாங்க... அவங்க கிட்ட கேட்டு பாருங்க அவங்க யாரையாது பார்த்து இருக்கலாம்..” என்று அவர் சொல்லவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பின்பு சரி என்று கூறி இருவரும் கிளம்பி வீட்டுக்கு வந்தனர்.

வீட்டில் நுழைந்த உடன் ஆனந்த், “கமலா அக்கா பேசுறத பார்த்தா நல்லா தான் இருக்கு... எந்த சந்தேகமும் வரல... அதுபோல அவங்க வீட்டுகாரரும் நல்லவரா தான் தெரியுறாரு... ஆனா அவங்க மேல தான் சந்தேகம் வர்ற மாதிரி பல தகவல்கள் வருது...”

“ஆமாம் அண்ணா... இந்த முறை நான் உங்க கூட வர்றேன்... இப்போ அந்த அண்ணாவும் வீட்டுல இருக்க மாட்டாங்க... கடைக்கு போயிருப்பாங்க.. நான் கேக்குறேன்.. அதுவும் அவங்க எப்டி பேசுவாங்க, நடந்துப்பாங்க ன்னு எனக்கு நல்லா தெரியும்.. மறுபடியும் ஒருமுறை விசாரிப்போம்... வாங்க இப்போவே போவோம், சந்தேகத்தை கேட்போம்...” என்று ஆனந்தை வழுகட்டாயமாக கூட்டி சென்றான் அழகன்.

ஆனந்த் சற்று தயங்கியே நின்று கொண்டிருந்தான். காலையில் தான் சுந்தரத்துடன் சென்று விசாரித்தோம், இப்போது மறுபடியும் அழகன் சென்று விசாரிக்கலாம் என்று சொல்வது அவனுக்கு சரி என்று படவில்லை. அவர்களுக்கு சந்தேகம் ஏதாது வந்துவிட கூடாது, அது நமக்கு தான் தேவை இல்லாத பிரச்சனை என்று நினைத்து சொன்னான். ஆனால் அழகன் கேட்காமல் சென்று விசாரித்தான். அங்கு சென்றால் அதற்கு மேல் இருந்தது.

கமலா அக்கா, தம்பியை தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை என்று கூறினார் மறுபடியும். அதுமட்டும் இன்றி இனி இங்கு விசாரிக்க வர வேண்டாம் என்று திட்டினார் அழகனை. அவனுக்கு பதிலுக்கு கோபம் வர,

“என்ன அக்கா சமாளிக்க பேசுறீங்களா..? உங்க மேல தப்பு இல்லைனா எப்போ வந்துனாலும் விசாரிங்கன்னு சொல்லுறத விட்டுட்டு, நீங்க சொல்லுறத பார்த்தா உங்க மேல தான் ஏதோ தப்பு இருக்க மாதிரி தெரியுது...” என்று சொல்ல, கோபம் வந்து விட்டது கமலா அக்காக்கு.

“என்ன தம்பி தேவை இல்லாம விசாரிக்குறேன்னு சொல்லி என்ன மிரட்டுற...? தப்பு பண்ணாத நாங்க ஏன் பயப்படனும்... நீ இப்டியே பேசிட்டு இருந்தா நான் போலீஸ் கிட்ட போக வேண்டிருக்கும்...” என்று அவர் பங்குக்கு மிரட்டினார்.

“என்ன க்கா இப்டி சொல்றீங்க... எதோ தம்பி பணம் காணோம் அப்டின்னு இப்டியெல்லாம் பேசிட்டான். நாங்க எதுவும் சந்தேகபடல, நீங்களும் எதுவும் பண்ண வேண்டாம். இனி நாங்க வர மாட்டோம்...” என்று கூறி சமாளித்து விட்டு அழகனை இழுத்து கொண்டு வந்தான் ஆனந்த்.

வீட்டிற்குள் வந்ததும் சென்று கோபமாக சோபாவில் அமர்ந்தான் அழகன். ஆனந்த் அவனை திட்டி கொண்டிருந்தான். அதற்குள் அங்கு விக்னேஷ், சுந்தரம் வந்து சேர்ந்தனர். அவர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர்.

“உன்னோட தம்பி இருக்கானே சரியான அவசர குடுக்கை...” என்று திட்டிவிட்டு நடந்ததை விவரித்தான்.

“என்ன அண்ணா.. நான் பேசினதுல எதுவும் தப்பு இருக்கா..? அவங்க தான் அதிகமா பேசினாங்க...” என்று சொல்லவும்,

“டேய்... நீ உன்னோட இடத்துல இருந்து யோசிக்குற... அவங்க அவங்க இடத்துல இருந்து யோசிக்குறாங்க.. அத ஏன் நீ தப்புன்னு சொல்லுற...? இதே போல அவங்க பணத்த தொலைச்சுட்டு வந்து நம்ம கிட்ட விசாரிச்சா நீ சொல்ல மாட்டியா..?” என்று ஆனந்த் கேட்டான்.

பதில் சொல்ல தெரியாமல் விழித்தான் அழகன். இருந்தாலும் ஏற்று கொள்ள மனம் இன்றி அமைதியாக அமர்ந்திருந்தான்.

“சின்ன பையன் நீ... அப்டியே இரு நீ... உங்க அண்ணனுக்கு இன்னும் பிரச்சனைய கொண்டு வந்துடாத..” என்று ஆனந்த் அதிகமாகவே திட்டிவிட, அழகன் மனம் உடைந்து விட்டான்.

தன்னுடைய அண்ணனுக்கு நாமே பிரச்சனையை உண்டு பண்ணுகிறோம் என்று எண்ணி வருத்தினான். கண்களில் வரும் கண்ணீரை மறைத்து கொண்டு அங்கிருந்து எழுந்தான். ஆனால் எதுவும் சொல்லாமல் ரூம்க்கு செல்ல பார்த்தான்.

சுந்தரம் அழகனை தடுத்து, “நீ பண்ணது நல்லது தான் அழகா... இப்போ இதுல இருந்து அவங்களுக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சுருக்கு... நம்ம வேற மாதிரி தேட ஆரம்பிக்கணும்.., இல்லைனா போலீஸ் கண்டு பிடிப்பாங்கன்னு விட்டுடுவோம்...” என்று கூறி அழகனை ஆறுதலாக தழுவி கொண்டான்.

சுந்தரம் கூறியது கேட்ட பின்னர் அழகனுக்கு கொஞ்சம் மன பாரம் குறைந்தது.

“நீ போ.. போய் படி...” என்று கூறி அவனை மேலே செல்ல சொன்னான் சுந்தரம்.

“சரி அண்ணா...” என்று கூறி திரும்பியவன், மறுபடியும் “அண்ணா மலர் அக்கா பற்றி ஏதாது தெரிஞ்சதா..?” என்று கேட்டான்.

“இன்னும் இல்ல... கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கு... சீக்கிரம் அக்காவ கண்டு பிடிச்சுடலாம், நீ அது எதையும் நினைச்சுட்டு இருக்காம போய் படி.. நாங்க கொஞ்சம் வெளில போக வேண்டி இருக்கு... நான் வர்ற வரைக்கும் நீ பத்தரமா இரு...” என்று கூறி அனுப்பினான்.
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
ஆனந்த், சுந்தரம், விக்னேஷ் மூவரும் கிளம்பி வெளியே சென்றனர். விக்னேஷ் ஆனந்த் வண்டியில் ஏறி கொண்டான். சுந்தரம் தனது வண்டியை எடுத்து கொண்டான். எங்கு செல்வது என்று சொல்லாமல் பாதி தூரம் கூட்டி சென்றான் சுந்தரம்.

வழியிலே வண்டியை நிறுத்தினான். புரியாமல் ஆனந்தும் வண்டியை நிறுத்த, சுந்தரம் சென்று தனியாக நின்று யோசித்தான். ஆனந்தும் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் வந்து நின்றான்.

“எதுக்கு இங்க நின்ற..?” என்று ஆனந்த் கேட்டதற்கு, முறைத்து பார்த்தான் சுந்தரம்.

“என்னடா..? பேசு... எதுக்கு இங்க வந்த..?” என்று விக்னேஷும் கேட்டான்.

கோபமாக ஆனந்தை பார்த்து, “எதுக்கு அழகன பார்த்து அப்டி சொன்ன..? அவன் சின்ன பையன்... அவன எனக்கு இடைஞ்சல் ன்னு நீ சொன்னத அவன் எப்டி எடுத்துப்பான்னு யோசிக்காம இப்டி பேசிருக்க கூடாது நீ..” என்று கூறி முறைத்து கொண்டே நின்றான்.

“டேய்.. நான் அப்டிலாம் நினைக்கல... அதுவும் நான் அவங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருவோம் ன்னு சொல்லவும் தான் அப்டி சொல்லிட்டேன்.. நான் எதுவும் யோசிக்காம பேசிட்டேன், தப்பு தான். அது நான் பேசினதுக்கு அப்பறம் தான் தோனுச்சு..” என்று அவனும் சங்கட பட்டு சொன்னான்.

“டேய்.. தம்பி வருத்த பட கூடாதுன்னு நீ சமாளிச்சு பேசிட்டேல.. அப்பறம் என்ன...? விடுங்க... இப்போ இருக்க பிரச்சனைய பார்ப்போம்..” என்று விக்னேஷ் கூறி பேச்சை திசை திருப்ப நினைத்தான்.

“அவன அவசர குடுக்கைன்னு சொல்றான்... இவனும் தான் இப்போ அவசர குடுக்கையாட்டும் பேசிட்டு நிக்கிறான்...”என்று கூறி திரும்பி கொண்டான். விக்னேஷும் ஆனந்தும் எப்படி சமாளிக்க என்று குழம்பி கொண்டிருக்க, அவனே

“நீ வீட்டுக்கு போனதும் அழகன் கிட்ட பேசி அவன சமாதான படுத்துற.. அப்போ தான் நான் எனக்கு நிம்மதி... அத நீ கண்டிப்பா பண்ணனும்..” என்று ஆனந்தை பார்த்து சொல்லவும், அவனும் சம்மதம் சொல்லி அந்த பிரச்சனையை முடித்தான்.

“இப்போ மலர யாரு கடத்தினான்னு தெரிஞ்சதா..?” என்று கேட்டான் ஆனந்த்.

“அதுக்கு தான் நான் ஒன்னு பண்ண சொல்லிருக்கேன் சுந்தரத்த..”

“என்ன சொல்லிருக்க..?”

“நான் அந்த பொண்ணுக்கு போன் பண்ணேன்.. எடுக்கல, தொந்தரவுன்னு நினைச்சுட கூடாதுன்னு தான் விட்டுட்டேன்...” என்று சுந்தரம் சொல்ல, புரியாமல் ஆனந்த்,

“எனக்கும் சொல்லிட்டு பேசுங்க டா... என்ன தான் பண்ணுறீங்க..? யாரு அந்த பொண்ணு..? அப்போ பேசுனையே அந்த பொண்ணா..?” என்று கேட்டான்.

“ஆமாம் அந்த பொண்ணு தான்... அவ கிட்ட எந்த கோவில்ன்னு கேட்டு தெரிஞ்சுக்க தான் கால் பண்ணேன். அது தெரிஞ்சா அங்க போய் ஏதாது விசாரிக்கலாம். அன்னைக்கு அந்த கல்யாணத்தன்னைக்கு என்ன நடந்துன்னும் நாம தெரிஞ்சுக்கலாம். அதுக்காக தான் கால் பண்ணிருக்கேன். எப்டியும் நான் கால் பண்ணினத பார்த்தா அடுத்து கூப்பிடும்ல... அப்போ கேட்கலாம். இல்லைனா மெசேஜ் பண்ணி கேட்கணும்...”

“ஓ... சரி சரி.... ஆரம்பத்துல இருந்து தெரிஞ்சுக்க போறியா...?” என்று ஆச்சர்யமாக ஆனந்த் கேட்டான்.

“அதுக்காக இல்ல... கடத்தினவன பற்றி சொன்ன அடையாளமும், அன்னைக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை கூட வந்தவனும் ஒரே போல இருப்பதா தான நமக்கு விசாரிச்சதுல தெரிஞ்சது... அதுக்கு தான் அங்க போய் விசாரிக்க நினைச்சுருக்கு...” என்று ஆனந்திருக்கு பதில் தந்து விட்டு, சுந்தரத்திடம் திரும்பி,

“நீ அந்த பொண்ணுக்கு மெசேஜ் பண்ணி கேளு.. நைட் ஆகிடுச்சு... அடுத்து பேசுமான்னு தெரியல, மெசேஜ் பண்ணா பதிலுக்கு மெசேஜ் பண்ணலாம்..” என்று விக்னேஷ் கூறினான்.

சரி என்று கூறி சுந்தரம் அந்த பெண்ணிற்கு மெசேஜ் அனுப்பினான்.

“அனுப்பிட்டேன்.. பதில் வரணும், இல்லைனா நாளைக்கு பேசலாம்..”

“சரிடா... அப்பறம் நம்ம இந்த பணம் தொலைஞ்சதுல ஏதோ தப்பா விசாரிக்கிறோமோன்னு எனக்கு தோணுது..”

“ஏண்டா அப்டி சொல்ற..?” என்று குழப்பமாய் விக்னேஷிடம் கேட்டான் சுந்தரம். இருவரது பேச்சையும் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றிந்தான் ஆனந்த்.

“நீ எப்போ பணத்த கடைசியா பார்த்த..?”

“நான் எவனிங் ஒருத்தருக்கு பணத்த கொடுத்தேன். அப்போ கையோட பணத்த எடுத்துட்டு போனேன். அதுக்கு அப்பறம் நான் பார்க்கல, நேர இங்க தான் வந்தேன். அதுக்கு அப்பறம் தான் பணம் காணோம்..” என்று சொன்னான் சுந்தரம்.

“அப்போ இங்க வந்த பின்னாடி தான் காணாம போனதா..?” ஆனந்த் கேட்கவும், சுந்தரம் ஆம் என்பது போல தலையை அசைத்தான்.

“இடைல எங்கையாது வண்டிய நிறுத்துனையா..?”

சிறிது நேரம் யோசித்தான். பின், “ஆமாம்... நான் வழியில ஒரு கடைல டீ, வடை சாப்பிட நிற்பாட்டினேன்... அப்போ கூட நான் வண்டிக்கு பக்கத்துல தான் நின்று இருந்தேன். யாரும் வந்து எடுக்க வாய்ப்பே இல்ல. அப்டி எதுவும் நடக்கவும் இல்ல...”

“சரி... நீ அப்போ பணத்த வெளில எடுத்தியா..? இல்ல எதுக்காவாது பார்த்தியா...?” என்று விக்னேஷ் கேட்டான்.

“ஹ்ம்ம்... பர்ஸும் உள்ளயே வச்சுட்டேன்ன்னு நான் அத எடுக்க லாக் ஓபன் பண்ணேன். எடுத்துட்டு மறுபடியும் மூடிட்டேன்.”

“ஹ்ம்ம்..... இங்க தான் தப்பு நடந்துருக்கணும்... ஒன்னு அங்க யாராது நீ வச்சுருந்த பணத்த பார்த்து அங்கயே எடுத்துருக்கணும்... இல்லைனா உன்னை தொடர்ந்து வந்து எடுத்துருக்கணும்...”

சுந்தரம் புரிந்து கொண்டான் விக்னேஷ் சொல்லவந்ததை.

“அப்டி கூட நடந்து இருக்கலாம்... ஆனா அதுவும் உறுதி இல்லையே...” என்று சுந்தரம் தெளிவில்லாமல் இருந்தான்.

“நான் உன் கிட்ட இன்னொன்று சொல்றேன்... கேளு....” என்று விக்னேஷ் சொல்ல, என்ன என்பது போல கேட்டு கொண்டிருந்தான் சுந்தரம்.

“நம்ம இந்த ஒரு விஷயத்த போலீஸ் கிட்ட விட்டுடலாம். அவங்க கண்டு பிடிக்கட்டும்.., நாம மற்றத பார்ப்போம்... நீ விசாரிக்கிறத விட போலீஸ் விசாரிச்சா ஏதாது தெரிய வரலாம்.., என்ன சொல்ற..?” என்று தான் ஒன்று சொல்லி அதை சுந்தரத்திடம் சம்மதம் கேட்டான்.

“சரி பார்க்கட்டும். ஆனா அவங்க கண்டு பிடிக்கலைனா நாம தான் பார்க்கணும். நான் இந்த வாரத்துல பணத்த ரிட்டர்ன் கொடுக்குறதா சொல்லிருக்கேன்... அதான் அப்படி சொல்லுறேன்..”

அப்போது சுந்தரத்தின் மொபைல் க்கு மெசேஜ் வந்தது. எடுத்து பார்த்தான்,

“அந்த பொண்ணு கோவில் எதுன்னு சொல்லிருக்கு... நாம போய் விசாரிக்கலாம்...” என்று சுந்தரம் சொல்லவும்,

“நீ அந்த பையன் நேம், பொண்ணோட நேம் எல்லாம் சரியா கேட்டு சொல்லு... ரிஜிஸ்டர் பண்ணதுல தேட வசதியா இருக்கும்...”

அவனும் சரி என்று மெசேஜ் அனுப்பி கேட்டான். பதிலும் ஐந்து நிமிடத்தில் வந்தது. பார்த்ததும் சற்று குழப்பமடைந்தான். விக்னேஷ் என்ன என்று கேட்டதற்கு பொறு என்று கையமர்த்தி விட்டு மறுபடியும் மெசேஜ் அனுப்பினான். ரிப்ளே வந்த உடன் முகம் மாறியது சுந்தரத்திற்கு...

“என்னடா... சொல்லு... என்ன சொல்லுது அந்த பொண்ணு..?”

“டேய்.. அந்த பையன் பேரு தெரியாது. அதுவும் அவங்க மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணவே இல்லையாம்...”

“என்னடா சொல்லுற...?”

“அந்த பையன் சென்னை கூட்டிட்டு போய் ரிஜிஸ்டர் பண்ணி கல்யாணம் பண்ண போறோம்ன்னு சொல்லி, சும்மா தாலி மட்டும் கட்டிருக்கான்...” என்று சுந்தரம் எரிச்சலுடன் சொன்னான்.

“இப்போ அந்த கல்யாணமே சரியா நடக்கலையா..? எனக்கு இதுலையே சந்தேகம் வருது.. சரி அது எதுக்கு நமக்கு...” என்று ஆனந்த் சொன்னான்.

“நீ கோவில் பேரு கேட்டியா..?” என்று விக்னேஷ் கேட்டான்.

“தஞ்சாவூர் ல நீல மேக பெருமாள் கோவில் ல வச்சு தான் கல்யாணம் நடந்துருக்கு... நம்ம நாளைக்கு போய் விசாரிக்கலாம்...”

“சரி... நானும் மலர் நம்பர் கொடுத்துருக்கேன். நாளைக்கு பார்ப்போம்...” என்று சொன்னான்.

“சரிடா கிளம்பலாமா..?” என்று ஆனந்த் கேட்டான்.

“சாப்பிட்டு போகலாம்... எனக்கு பசிக்குது..” என்று விக்னேஷ் சொன்னான்.

“சரி, நாம வீட்டுக்கு போய் சாப்பிடலாம். தம்பிக்கும் வாங்கிட்டு போய்டலாம்...”

“டேய்... மீனாட்சிய மறந்துட்ட... அவளுக்கும் வாங்கிட்டு போலாம். அவளும் வந்துடுவா...”என்று ஆனந்த் சிரித்து கொண்டே சொன்னான்.

சுந்தரம் சிரித்தான்.

“அவ சாப்பிட்டு தான் வருவா... இருந்தாலும் தம்பிக்கிட்ட கேட்டுக்கலாம்..” என்று சுந்தரம் சொல்லி வீட்டிற்கு கால் செய்தான்.

சுந்தரம் தள்ளி நின்று அழகனிடம் பேசினான். விக்னேஷ், ஆனந்த் இருவரும் பேசி கொண்டிருந்தனர். பேசி விட்டு இவர்களிடம் வந்து,

“மீனாட்சி இன்னைக்கு வரலைன்னு சொல்லிட்டாலாம்...”

“ஏன்..? என்ன ஆச்சு..?” என்று பதறி கொண்டு கேட்டான் ஆனந்த்.

“தெரியல... ஆனா மீனாட்சி சரியா பேசல போல.. அழகனும் சந்தேகமா சொல்றான். நாளைக்கு அந்த கோவிலுக்கு போய் விசாரிச்சுட்டு, அப்டியே மீனாட்சிய பார்த்துட்டு என்னன்னு கேட்டுட்டு வரலாம்..” என்று சுந்தரம் சொன்னான்.

“நான் இன்னைக்கே போகலாம்ன்னு சொன்னேன்.. நீ தான்... இப்போ என்ன பிரச்சனைன்னு தெரியல..” என்று ஆனந்த் வருத்தமாக கூறினான்.

“ஏன்.. எப்போ பாரு பிரச்சனைன்னு நினைச்சுட்டு இருக்க... அவன் நல்ல படியா இருந்தா கூட நீ பிரச்சனைய வர வச்சுருவ போல...” என்று விக்னேஷ் திட்டினான்.

பின் மூவரும் அங்கிருந்து கிளம்பி பார்சல் வாங்கி கொண்டு வீடு சென்றனர்.

வீட்டிருக்கு சென்று சாப்பிட்டு முடித்தவுடன் விக்னேஷ் அங்கயே தங்கினான். ஆனந்த் வீட்டிருக்கு கிளம்பினான். காலையில் வருவதாக கூறி சென்றான்.

மறுநாள் காலையில் விக்னேஷ் கிளம்பி ரெடியாக வெளியே வந்தான். அப்போது ஆனந்தும் வந்து விட்டான்.

“என்னடா ரெடியா..? கிளம்பலாமா..?” என்று ஆனந்த் கேட்க,

“பொறு... இன்னும் சுந்தரம் வரல... அவன் வரவும் சாப்பிட்டு கிளம்பலாம்..” என்று விக்னேஷ் கூறி கொண்டிருந்தான்.

அப்போது சுந்தரம் வந்தான். அவன் வேட்டி அணிந்திருந்தான். அவனை விக்னேஷ் அவனை குறுகுறுவென்று பார்த்தான்.

சுந்தரம் கண்களாலே என்ன என்று கேட்டான்.

“என்னடா டிரஸ் இது... நேற்று தான் இப்டி இருந்த, சரி கடைல இருந்து அப்டியே வந்துட்டன்னு நினைச்சேன்... ஆனா இன்னைக்கும் அதே போல வேட்டியே கட்டிட்டு வர்ற..?” என்று சந்தேகமாக கேட்டான்.

“டேய்... உனக்கு தெரியாதுல... அவன் இப்போலாம் வேட்டி மட்டும் தான் கட்டுறான்... மாறிட்டான்..” என்று ஆனந்த் சலித்து கொண்டே சொன்னான்.

“ஏன் கட்டினா என்ன தப்பு...?!! எனக்கு பிடிச்சுருக்கு...” என்று சுந்தரம் கூறி கொண்டிருக்க, அங்கு லலிதா வந்தாள். சற்று பதற்றத்தோடு இருந்தாள். அதை பார்க்கவும் மற்றவர்கள் குழம்பினர். அது போல அவளும் ஒரு அதிர்ச்சி தகவலை தந்தாள்...

தொடரும்...
 

Advertisements

Top