• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 15

மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு பதறி கொண்டு வேகமாக ஓடினான் உள்ளே. அங்கு உள்ளே நடந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டான். அந்த பரமு மீனாட்சியிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். கோபத்தின் உச்சிக்கு சென்றவன் பின்புறம் இருந்து அவனை காலால் எட்டி உதைத்தான். அவன் சென்று கீழே விழுந்த உடன் தங்கையை மீட்டு தனியாக அழைத்து வந்தான்.

கீழே விழுந்த வேகத்தில் பரமுவும் வேகமாக எழுந்து ஓடி வந்தான். சுந்தரம் அதற்குள் சுதாரித்து கொண்டு, அவனிடம் இருந்து மீனாட்சியை விலக்கி வெளியே போக சொன்னான். மீனாட்சி சுந்தரத்தை அங்கே தனியாக விட்டு செல்லவும் மனமின்றி, இருக்கவும் மனமின்றி வெளியே இரண்டடி வைத்துவிட்டு நின்று மீண்டும் உள்ளே பார்த்தாள்.

அங்கு சுந்தரமும், பரமுவும் பயங்கரமாக அடித்து புரண்டு கொண்டிருந்தனர். சுந்தரம் மறுபடியும் அவளை வெளியே போக சொல்லி கத்தினான். அவள் செல்ல எத்தனிக்கும் முன்னர் அந்த பரமு சுந்தரத்தை ஒரு கட்டையால் தலையில் அடித்து விட்டான். அவன் நிலை தடுமாறி விழுகவும் அவள் பயந்து போனாள்.

அந்த பரமு வேகமாக அவளை நோக்கி ஓடி வரவும் பயந்து போய் அவள் தப்பிக்க நினைக்க அதற்குள் அவன் அருகில் நெருங்கி அவளை பிடித்து விட்டான். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் மறுபடியும். அப்போது மீனாட்சி, “அண்ணா... அண்ணா...” என்று கத்தி அழுக

தலையில் இருந்து வரும் ரத்தத்தை ஒரு கையால் துடைத்து கொண்டே எழுந்து ஓடி வந்தான் சுந்தரம். மீனாட்சியை அவனிடம் இருந்து மீட்க முடியாமல் தவித்து கொண்டிருக்க அப்போது பரமு அவனது தலையிலே மறுபடியும் அடித்து விட தலை சுற்றி அங்கயே விழுந்தான்.

மீனாட்சி பயந்து போய், “அண்ணா... அண்ணா.. எழுந்திரிங்க... அண்ணா...” என்று சுந்தரத்தின் மேல் சாய்ந்து அழுதாள்.

பரமுவின் முகத்தில் அப்போது ஏளன புன்னகையை வந்து போனது.

“அவன் எழுந்திரிக்க மாட்டான். நீ வா..” என்று அவளை இழுத்து சென்றான். அவளை கீழே தள்ளி விட்டான். மறுபடியும் அவளிடம் நெருங்க முயற்சித்தான். அப்போது அவனை பின்னாளில் இருந்து கட்டையால் ஒருவர் அடிக்க, வலி தாங்காமல் யார் என்று கோபமாக எழுந்து திரும்பினான்.

அங்கு ஆனந்த் நின்றிந்தான். பரமு கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்க கையிலே அடித்தான். சரமாரியாக அடிக்க தொடங்கினான் ஆனந்த். எக்குதப்பாக எல்லாம் அடி விழுந்தது. பொருத்து கொள்ள முடியாமல் பரமு தத்தளிக்கும் போது கீழே அங்கு இருந்த தூசி மணலை எடுத்து ஆனந்தின் முகத்தில் வீசினான்.

கண்களுக்குள் தூசி சென்றதால் ஆனந்த் கட்டையை கீழே போட்டு விட்டு கண்களை தேய்த்தான். அதை பயன்படுத்தி அவன் ஆனந்தை கால்களிலே அடித்தான். தடுக்க நினைத்து மீனாட்சி பரமுவை தள்ளிவிடவும்., அவளையும் கட்டையால் தலையில் ஒரு அடி அடித்தான். அதில் அவளது தலையில் பலமாக அடி பட்டு ரத்தம் வழிய, “அம்மா...” என்று கத்தி கீழே அமர்ந்தாள்.

இனி இங்கு இருந்தால் நல்லது அல்ல என நினைத்து அங்கிருந்து செல்ல முயற்சித்தான். அதே நேரம் மீனாட்சியை விட்டு வைக்கவும் அவனுக்கு மனம் இல்லை. அப்போது தன்னோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான்.

“எனக்கு கிடைக்காத நீ நல்லாவே இருக்க கூடாது... யாருக்கும் கிடைக்கவும் கூடாது...” என்று கூறி அவள் அருகில் சென்றான்.

கத்தியை கவனித்த மீனாட்சி தன்னை காப்பாற்றி கொள்ள அங்கு இருந்து ஒரு இரும்பு கம்பியை எடுத்தாள்.

“கிட்ட வராத... வந்த...” என்று அவள் நடுங்கிய குரலில் சொல்லி கொண்டே பின்னே சென்றாள்,

“என்ன பண்ணிட முடியும் உன்னால என்னை..”என்று மிரட்டினான்.

சிரித்து கொண்டே அருகில் வந்தவன் அவள் அடிக்க கம்பியை ஓங்க அதை பிடுங்கி எறிந்தான். பின் சிரித்து விட்டு, கத்தியை வயிற்றில் குத்த வந்த போது சுந்தரம் வந்து விட்டான். அந்த இரும்பு கம்பியை கொண்டு பலமாக கையில் அடித்தான். அதில் கத்தி கீழே விழுந்து விட்டது.

மீனாட்சியை அப்போதும் கையால் கழுத்தை நெரிக்க முயற்சி செய்தான். சுந்தரமும், மீனாட்சியும் அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு வெளியே போலீஸ் வந்து சேர்ந்தது. அவர்கள் உள்ளே வரும் போது பரமுவை சுந்தரமும், மீனாட்சியும் சேர்ந்து அடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். பரமு தரையில் கிடந்தவாறு, கீழே அடி பட்டு வலியால் துடித்து கொண்டிருந்தான். இருவரையும் பிரித்து விட்டு அந்த பரமுவை கைது செய்து அழைத்து சென்றனர்.

போலீஸ் மீனாட்சி, சுந்தரம், ஆனந்த் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மூவரும் ஊருக்கு வந்து சேர்ந்தனர். அடுத்து சகோதர சகோதரிகள் அனைவரும் கிருஷ்ண புறத்தில் உள்ள அவர்களது வீட்டிலே இருந்தனர்.

அப்பாவிற்கு சாமி கும்பிடுவதற்கு முதல் நாள் இங்கு போலீஸ் சுந்தரத்தை அழைத்தார். அவனது பணம் கிடைத்து விட்டது என்ற சந்தோஷ செய்தி சொன்னார். சிவாவும் உடன் சென்றிருந்தான்.

“உங்க பணம் கிடைச்சுருச்சு... நீங்க வாங்கிட்டு போகலாம்...” என்று அவர் சொல்லவும் நிம்மதியாக இருந்தது சுந்தரத்திற்கு.

“நம்ம பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு அண்ணா...” என்று சிவா சந்தோஷபட்டான்.

“எப்டி கிடைச்சது சார்...? யாரு எடுத்தது..?” என்று சுந்தரம் கேட்டான்.

“நீங்க நினைச்சது போல தான் நடந்துருக்கு...” என்று இன்ஸ்பெக்டர் சொல்லவும் புரியாமல் இருவரும் பார்த்தனர்.

“நீங்க அந்த எதிர் வீட்டுகாரங்க மீது சந்தேக பட்டீங்க இல்லையா..? அது தான் உண்மை.. அவங்க தான் எடுத்துருக்காங்க...” என்று சொன்னார்.

“நிஜமாவா சார்..? அவங்களா ஒத்துகிட்டாங்களா..?” என்று சுந்தரம் ஆவலாக கேட்டான்.

“நான் அந்தம்மாவோட தம்பிய விசாரிக்க அனுப்பிருந்தேன். ஆனா அவன் அங்கே இல்ல... அதுவும் இல்லாம அவன் ஒரு ரெண்டு நாளாவே இங்க இல்லன்னு பக்கத்துல இருந்தவங்க மூலமா தெரிய வந்தது. அப்பறம் இன்னும் விசாரிச்சதுல அவன் அவங்க அக்கா வீட்டுக்கு போனதா தான் எல்லாரும் சொன்னாங்க...

அதான் அந்த அம்மா வீட்டுல சோதனை பண்ணோம்...” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே சிவா இடையே

“அங்க தான் பணம் இருந்ததா சார்..” என்று ஆவலாக கேட்டான்.

“இல்ல தம்பி அங்க பணம் இல்ல... உங்க அண்ணன் சொன்னது போல ஒரு ஜிப்லாக் கவர் இருந்தது... அத என்னன்னு விசாரிச்சா கொஞ்சம் அந்த அம்மா கிட்ட தடு மாற்றம் தெரிஞ்சது...

விடாம உன்னோட தம்பி எங்கன்னும் விசாரிச்சோம்... அதுக்கும் பதில் சரியா வரல...”

“அப்பறம் எப்டி சார்..?” என்று சந்தேகமாக கேட்டான் சிவா பொறுமை இழந்து.

“நாங்க எங்க பாணில விசாரிச்சோம்... கொஞ்சம் மிரட்டினதுக்கே அந்த அம்மா உண்மை எல்லாம் சொல்லிடுச்சு.

அந்த அம்மா தம்பி உங்கள கடைல வச்சு பார்த்தப்போவே உங்க கிட்ட பணம் இருக்குறத தெரிஞ்சு கிட்டு, அங்கயே எடுத்துட்டான் போல... ஆனா உங்களுக்கு சந்தேகம் வந்துருச்சான்னு தெரிஞ்சுக்க அவங்க அக்கா வீட்டுக்கு வந்துட்டு உங்கள நோட்டம் விட்டுருக்கான். அவங்க அக்காவுக்கே தெரியாம அவங்க வீட்டுல தான் பணத்தையும் மறைச்சு வச்சுருக்கான்.

அந்த விவரமும் நீங்க மறுநாள் அவங்க வீட்டுல போய் விசாரிச்சத தம்பி கிட்ட சொன்ன பிறகு தான் தெரிய வந்துருக்கு அந்த அம்மாக்கும், அவங்க புருசனுக்கும்..

உடனே ரெண்டு பேரும் பயந்து போய் அன்னைக்குகே பணத்த கொடுத்து அனுப்பிட்டாங்கன்னு சொன்னாங்க... அதுக்கு அப்பறம் தான் உங்க தம்பிய தைரியமா திட்டி அனுப்பிருக்காங்க...

ஆனா தம்பிகாரன் எங்க போயிருக்கான்னு அந்த அம்மாக்கு தெரியாதாம்... எங்க கிட்டயே நல்லா நடிச்சது அந்த அம்மா... அந்த அம்மா வீட்டுக்காரன கூட்டிட்டு வந்து அடிச்சு விசாரிக்கவும், தானா ரெண்டு பெரும் தம்பி எங்க இருக்கான்னு சொல்லிட்டாங்க..

வெளியூருல அவங்க சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி வச்சுருக்காங்க இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து. போய் கையும்களவுமா பிடிச்சாச்சு.. பணமும் அவன் கிட்ட தான் இருந்துச்சு..

இப்போ மூணு பேருமே உள்ள போய்ட்டாங்க..” என்று சொல்லி முடிக்கவும் சுந்தரத்தின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.

“விக்னேஷ் சார் உங்களுக்காக ரொம்ப கேட்டுக்கிட்டாரு.. அவர் தான் ரொம்ப புஷ் பண்ணாரு, அதான் எல்லாம் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சது.” என்று இன்ஸ்பெக்டர் மேலும் சொல்லி விட்டு பணத்தை பெற்று கொண்டதை எழுதி தர சொல்லி விட்டு சென்றார்.

இவர்களும் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்ததும், “எப்டியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது... ஆனா இந்த விக்னேஷ் இத்தனை நாள் கூட இருந்துட்டு இப்போ போய்ட்டான் பாரு...” என்று வருந்தினான் சுந்தரம்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“அவர் எதுக்கு போயிருக்காரு அண்ணா...? நாளைக்கு வருவாரா..?” என்று சிவா கேட்டான்.

“வேலை வந்துருச்சான்.. நாளைக்கு வர்றேன்னு சொல்லிருக்கான். ஆனா வரலைனா கோவிச்சுக்க கூடாதுன்னும் சொன்னான். எப்டின்னு தெரியல..? வருவானா.? இல்ல வர மாட்டானா..? எதுவும் தெரியாது..” என்று சுந்தரம் வருத்தம் கொண்டு சொன்னான்.

“அண்ணா நாளைக்கு வரலைனாலும் அடுத்து நம்மள பார்க்க வருவாருல... அவரு உங்களுக்காக கண்டிப்பா வருவாரு... நீங்க ரிலாக்ஸா இருங்க.. தலை வலிக்க போகுது..” என்று அண்ணனுக்காக அக்கறையுடன் பேசினான்.

பதிலுக்கு சுந்தரம் சரி என்பது போல சிரித்தான். பின் வீட்டிற்கு கால் பண்ணி நடந்ததை கூறினான். பணம் கிடைத்ததை நினைத்து அனைவரும் சந்தோஷமடைந்தனர்.

“சரி நான் பணத்த எல்லாருக்கும் கொடுத்துட்டு வர்றேன்... நீ வீட்டுக்கு போ சிவா..” என்று சுந்தரம் சொன்னான்.

“இல்ல அண்ணா நான் உங்கள தனியா எங்கயும் அனுப்ப மாட்டேன். நான் போய் கொடுத்துட்டு வர்றேன். உங்கள வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு நான் எல்லாருக்கும் கொடுத்துட்டு வர்றேன். இல்ல இன்னைக்கே கொடுக்கனுமா என்ன..??” என்று சிவா சுந்தரத்தின் மீது அக்கறையுடன் சொல்லி கேட்டான்.

“இந்த பணத்த இன்னைக்கே கொடுத்துடுவோம் அது அதான் நல்லது. அதுவும் உனக்கு யாரு யாருக்கு எவ்ளோ தரணும்ன்னு தெரியாது. இல்ல ரெண்டு பேரும் சேர்ந்தே போய் கொடுத்துட்டு வந்துருவோம்.”என்று கூறினான்.

சிவா மறுத்தாலும் சுந்தரம் விடா பிடியாக கூற, பின் இருவரும் சென்று அனைவருக்கும் சென்று பணத்தை கொடுத்து விட்டு வீடு வந்து சேர இரவாகியது.

அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே அவர்களை வரவேற்க அங்கு சௌந்தர்யா இருந்தாள். பார்த்தவுடன் சுந்தரத்திற்கு சந்தோசத்தில் கண்ணீரே வந்து விட்டது.

சௌந்தர்யாவும் அவர்களை பார்த்த உடன் கோபமாக இருப்பது போல் முகத்தை திருப்பி கொண்டாள். சுந்தரம் அருகில் சென்று,

“எப்டிம்மா இருக்கா..? உடம்புக்கு நல்லா இருக்கா..? குட்டி செல்லம் எப்டி இருக்காங்க...? டாக்டர் கிட்ட செக்கப் எல்லாம் கரெக்டா போறியா..?” என்று விடாமல் கேள்வியை கேட்க,

“போங்க அண்ணா... நான் உங்க கிட்ட பேசுறதா இல்ல... உங்களுக்கு எல்லாம் நான் வேற ஒருத்தியா ஆகிட்டேன்.” என்று முகத்தை வேறுபுறம் திருப்பி வைத்து கொண்டு சொன்னாள்.

“என்னடா இப்டி சொல்லிட்ட... நீ தான் இந்த வீட்டோட மூத்த மகா லட்சுமி... நீ அடுத்த வீட்டுக்கு போனாலும் நீ எங்க வீட்டோட லட்சுமி தான்.. உன்னை இந்த அண்ணன் மறப்பேனா..?” என்று கொஞ்சி கொண்டே சொன்னான்.

“பொய்... பின் இவ்ளோ நடந்துருக்கு என்கிட்டே யாருமே சொல்லல.., எனக்கு கேட்டதுமே ஒரு நிமிஷம் ஆடி போச்சு. இவ்ளோ நடந்துருக்கு எனக்கு ஒருத்தரும் சொல்லல.. அழகன் கூட சொல்லல..” என்று வருத்தினாள்.

அவளது தலையில் தடவியவாறு, “நீ நிறைமாசமா இருக்க... இதுல உன் கிட்ட சொல்லி உன்னை கஷ்ட படுத்துறது அவளோ நல்லது இல்லைன்னு தான் நான் யாரையும் சொல்ல கூடாதுன்னும் சொல்லி வச்சுருந்தேன். ஆனா மாப்பிள்ளைக்கு எல்லாம் தெரியும்..” என்று கூறி சௌந்தர்யாவின் கணவர் முகுந்தன் முகத்தை பார்த்தான் சுந்தரம்.

அவரும் ஆம் என்பது போல தலை அசைத்தார்.

“நீங்களும் என்கிட்டே மறைச்சுட்டீங்க பாருங்க..” என்று கணவர் மீதும் கோபம் கொண்டாள்.

“அவர எதுவும் சொல்லாத.. நான் தான் அவர உன் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன். எங்க எல்லாருக்கும் கஷ்டம் வந்தாலும் அத சமாளிச்சுடலாம். உனக்கு ஒரு கஷ்டமும் வந்துற கூடாதுன்னு தான் அப்டி சொன்னேன்.

இப்போ அதுனால என்ன..? எல்லாம் நல்லதா முடிஞ்சுடுச்சு... நமக்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு அப்பா... அதுக்கு அப்பறம் இப்போ அப்பா நமக்கு கடவுளா இருந்து நமக்குள்ள இருந்த எல்லா பிரச்சனையும் சரி செஞ்சுட்டாரு.. அடுத்து அவரு உனக்கு மகனா பிறக்க போறாரு...

அதுனால நீ எதுக்கும் கவலை படாம நிம்மதியா இரு.. நல்லபடியா குழந்தைய பெத்து எடுக்கணும் அத மட்டும் பாரு...” என்று சொல்லி தங்கையை ஆதரவாக கைகளை பிடித்து பேசினான்.

சௌந்தர்யா அண்ணனின் தலையில் அடிபட்ட இடத்தில் கைவைத்து, “ரொம்ப வலிக்குதா அண்ணா...” என்று பரிவோடு கேட்டாள். கேட்கும் போதே கண்களின் ஓரம் கண்ணீர் எட்டி பார்த்தது.

“இப்போ தான சொன்னேன், நீ எதுக்கும் கவலை பட கூடாது...” என்று கூறி கொண்டே அவளது கண்களை துடைத்து விட்டான். பின், “என்னோட தங்கச்சிங்க யாரும் எதுக்கும் கவலை பட கூடாது...” என்று அருகில் நின்றிந்த மீனாட்சியையும், மலரையும் பாருத்து சொன்னான்.

மற்றவர்களும் கண்களை துடைத்து கொண்டே, “எங்க அண்ணா எங்க கூட இருக்கும் போது எங்களுக்கு இனி எந்த கவலையும் இல்ல...” என்று மீனாட்சி கூறி சுந்தரத்தின் கைகளை பற்றி கொண்டாள். மலர் சென்று சௌந்தர்யாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அப்போது அங்கு, “தள்ளுங்க.. தள்ளுங்க..” என்று மீனாட்சியை விளக்கி கொண்டு அழகன் வந்தான்.

கையில் எதையோ எடுத்து வந்து அண்ணனுக்கு ஊட்டி விட்டான்.

“எப்டி இருக்கு அண்ணா... நான் செஞ்சேன் பால்கோவா...” என்று கேட்டான். மற்ற மூன்று பெண்களும், “அச்சோ... ஆரம்பிச்சுட்டியா... அப்போ இருந்து எங்கள சாப்பிட சொல்லி கொடுமை படுத்திட்டு இருந்தான். இப்போ நீங்க வந்தாச்சு. அடுத்து நீங்க தான்... நாங்க தப்பிச்சாச்சு..” என்று மலர் சொல்லி அங்கிருந்து விலகினாள்.

அவன் இன்னொரு கையிலுமே எதோ வைத்திருக்க, “அதுல என்ன வச்சுருக்க...?” என்று சுந்தரம் கேட்க,

வேகமாக சிவாவிடம் சென்று, “இது சிவா அண்ணா க்கு..”என்று ஊட்ட செல்ல, அவனோ, “அய்யோ.. நான் ஆட்டைக்கு வரல... விட்டுடு...” என்று கூறி ஓடினான்.

அனைவரும் சந்தோஷமாக மகிழ்ந்தனர்.

மறுநாள் சாமி கும்பிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் முகுந்தனும் முன் நின்று செய்தான். ஆனந்த் குடும்பத்துடன் வந்தான். மற்றும் பல குடும்ப நண்பர்கள் உறவினர்கள் வந்தனர். நல்ல படியாக அனைத்தும் முடிந்தது. அன்று இரவு முகுந்தன் கிளம்பி கொண்டிருந்தார். ஆனால் சௌந்தர்யா கிளம்பாமல் இருக்கவும்,

“என்ன மாப்பிள்ளை நீங்க மட்டும் கிளம்புறீங்களா..? எதுவும் அவசர வேலையா..? சௌந்தர்யாவை நான் கொண்டு வந்து ரெண்டு நாள் கழித்து விடுறேன்..” என்று யோசித்து கொண்டே கேட்டான்.

“இல்ல சுந்தரம் அவள் இங்கயே இருக்கட்டும் டெலிவரி வரைக்கும்.. அவளுக்கு அது ரொம்ப சந்தோஷத்த தரும்...” என்று கூறினார் முகுந்தன்.

அவளை இங்கு விட்டு செல்வது சந்தோஷமாக இருந்தாலும் சுந்தரம் யோசித்தான்.

“இல்ல மாப்பிள்ளை இங்க ஹாஸ்பிட்டல் வசதி அவ்ளோ கிடையாது.. அதுனால அவளுக்கு டெலிவரி அங்க ஊருல வச்சு பாருங்க.., நான் எல்லா செலவையும் பார்த்துக்குறேன்...” என்று சொன்னான்.

“சுந்தரம் நான் செலவுக்காக சொல்லல.. அவளுக்கு இங்க இருக்குறது மனசுக்கு உடம்புக்கு எல்லாம் நல்லது. அதுனால தான் சொன்னேன். அதுமட்டும் இல்லாம என்னோட குழந்தைக்கு நான் தான் எல்லா செலவும் பண்ணுவேன்.. நீ மாமா முறைல பண்ண ஆசை படுறத மட்டும் பண்ணு..” என்று முகுந்தன் தெளிவாக சொன்னார்.

“இல்ல மாப்பிள்ளை... சௌந்தர்யாக்கு இன்னும் பத்து நாள்ல டெலிவரி.. அதுனால நான் ஒரு ரெண்டு மூணு நாள் கூட வச்சுருந்துட்டு அனுப்பி விடுறேன். குழந்தை பிறந்ததுக்கு அப்பறம் வரட்டும். இங்க ஊருல குழந்தைங்களுக்கு பார்க்குறதுக்கு நிறையா டாக்டர் இருக்காங்க... ஆனா டெலிவரி பார்க்க சில ஹாஸ்பிட்டல் தான் இருக்கு... நான் அதுக்காக சொல்றேன்...” என்று புரியவைத்தான் சுந்தரம்.

பின் முகுந்தனும் சம்மதித்தார். சௌந்தர்யா இரண்டு நாட்கள் அண்ணன், தங்கை, தம்பி அனைவருடன் இருந்துவிட்டு கிளம்பினாள். சுந்தரம் கார் ஏற்பாடு செய்து அழைத்து சென்றான். பின் ஒரு வாரத்தில் அவர்கள் எதிர்பார்த்தது போல சௌந்தர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஹாஸ்பிட்டலில் இருந்தவாறே சௌந்தர்யாவை சுந்தரம் இங்கு அழைத்து வந்தான். பின் ஒரு மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடந்தது.

குழந்தைக்கு அவர்களது அப்பாவின் பெயர் வருவது போலவும், அவரது அப்பாவின் ஆசைக்கும் ஏற்றவாறு, வடிவேலு என்கின்ற கவின் என்று வைத்தனர்.

விழாவிற்கு ஆனந்த் குடும்பத்துடன் வந்தான். விழா முடிந்த பின்னர் ஆனந்தின் பெற்றோர் மீனாட்சியை, ஆனந்திற்கு பெண் கேட்டனர். சம்மதம் என்றவுடன் அங்கயே வைத்து தட்டு மாற்றி கொண்டனர். மீனாட்சிக்கு அப்பா அம்மா ஸ்தானத்தில் முகுந்தனின் பெற்றோர் இருந்து தட்டு மாற்றி கொண்டனர். அடுத்த மாதத்தில் கல்யாணம் என்று முடிவும் செய்யப்பட்டது.

தொடரும்...
 




Keerthi Elango

மண்டலாதிபதி
Joined
Jul 25, 2018
Messages
225
Reaction score
294
Location
Karur
Shapada...oru valiya ela prblm um solved...parra meenakshiku mrg fix paniyacha...super...i think vignesh ku malar jodiya irukumooo...super epi sis...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபிரசாத் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top