• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 17

சாப்பிட்டு கீழே வந்த போது அங்கு ஆனந்தின் பெற்றோர் சுந்தரத்திற்காக காத்திருந்தனர். சென்று பேசினான் சுந்தரம்.

“சுந்தரம் எல்லா ஏற்பாடும் நல்லா பண்ணிருக்க.. அதுவும் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குன்னு எங்க சொந்தகாரங்க எல்லாரும் பாராட்டிட்டு போனாங்க... இதே போல நாளைக்கும் நல்லபடியா இருக்கணும்...” என்று சொல்லி அவனிடம் விடாமல் இன்னும் பல விவரங்கள் சொல்லியும், கேட்டும் கொண்டிருந்தனர்.

அனைத்திற்கும் சுந்தரம் சரி சரி என்று சொல்லி நாளை செய்ய இருப்பதை எல்லாம் சொல்லி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஆனந்த் சாப்பிட்டு கீழே வந்தான். அவனும் அருகில் சென்று அமர்ந்தான்.

“உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்... அத...” என்று இழுத்தார் ஆனந்தின் அப்பா. பின் ஆனந்தின் பக்கம் திரும்பி அவனை சொல்லுமாறு கண்ணசைத்தார். அவனும் அருகில் இருந்தவர்களை காட்டி,

“இவங்க என்னோட பெரியப்பா, பெரியம்மா... உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்..?” என்று சொல்லவும்,

“ஹ்ம்ம்... எனக்கும் தெரியும்.. நீங்க என்ன சொல்லணுமோ அத சொல்லுங்க..” என்று கூறி யோசித்தான்.

ஆனந்த் சிரித்தான். “அவங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு... பொண்ண உனக்கு கட்டி வைக்கலாம்ன்னு அவங்க ஆசை படுறாங்க... அத தான் கேட்க நினைச்சோம்..” என்று சொல்லி விக்னேஷ் பக்கம் திரும்பினான்.

“ஆமாம் உனக்கு சம்மதம்ன்னு சொன்னா உடனே நாளைக்கு நிச்சயம் பண்ணிடலாம்ன்னும் நினைக்கிறாங்க.. நீ என்ன நினைக்கிற சொல்லு..” என்று கூறினான் விக்னேஷ்.

சுந்தரம் சற்று அதிர்ச்சிக்குள்ளனான். திடீரென்று கேட்டதால் எதுவும் சொல்ல முடியாமல் அவன் அமைதியாக இருந்தான்.

அழகன் வேகமாக அருகில் வந்து, “அண்ணா.. அண்ணி எனக்கு பிடிச்சுருக்கு.. சிவா அண்ணா, மாமா, அக்கா எல்லாருக்குமே இதுல சம்மதம் தான்.. நாங்க எல்லாருமே அண்ணி பார்த்து பேசிட்டோம். ரொம்ப நல்லவங்க.. நல்லா பேச கூட செய்றாங்க.. எங்க எல்லாருக்குமே பிடிச்சுருக்கு.. பார்த்தா உங்களுக்குமே பிடிக்கும்.. சம்மதம் சொல்லுங்க...” என்றான்.

தனக்கே தெரியாமல் தனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்திருப்பது தெரிந்தது. ஆனாலும் அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மலருக்கும் கல்யாணம் செய்த பிறகு தான் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சுந்தரம் நினைத்து வைத்திருந்தான். எதுவும் சொல்லாமல் அமைதியாக யோசித்து கொண்டிருந்தான்.

உடனே ஆனந்தின் பெரியப்பா, “நீங்க நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க தம்பி... எங்களுக்கு எந்த கட்டாயமும் இல்ல..” என்று சொன்னார். பின் அவர்கள் பேசட்டும் என்று எண்ணி ஆனந்தின் குடும்பத்தினர் அனைவரும் எழுந்து சென்றனர்.

விக்னேஷ், “இன்னும் என்னடா யோசிக்குற..? சம்மதம் சொல்லு..” என்று கட்டாய படுத்தினான்.

“இல்ல நான் என் சின்ன தங்கச்சி கல்யாணமும் முடிஞ்ச பின்னாடி தான் கல்யாணம் பண்ணனும்ன்னு இருக்கேன்... அதான் இப்போ ” என்று கூறும் போதே, மலர் இடையே புகுந்து,

“அண்ணா... எனக்கு இப்போ வயசு இருவது தான் ஆகுது. எனக்கு கல்யாணம் இன்னும் ஒரு நாலு அல்லது ஐந்து வருசம் கழிச்சு தான்.. அப்போ உங்களுக்கு முப்பத தாண்டிடும்... அதுவரைக்கும் நீங்க கல்யாணமே பண்ணாம இருக்குறதா... என்ன அண்ணா பேசுறீங்க..” என்று அவள் சொல்ல,

மீனாட்சி, “அண்ணா இது தான் உங்களுக்கு சரியான வயசு.. நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. அதுவும் அண்ணி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.. நம்ம வீட்டுக்கு சரியானவங்க.. ஒத்துக்கோங்க அண்ணா..” என்று கூறி அவளும் வற்புறுத்தினாள்.

முகுந்தனின் அப்பா, “சுந்தரம் நீங்க அண்ணன் தம்பின்னு எல்லாரும் பசங்க... உன்னோட தங்கச்சி ஒரே பொண்ணு.. இப்போவே சில பிரச்சனைகள் எல்லாம் வந்துருச்சு.. பொண்ணு எல்லா விஷயத்தையும் அண்ணன் கிட்ட சொல்ல முடியாது. அவளுக்கு கூட ஒரு அம்மா மாதிரி, இல்ல அக்கா மாதிரி கூடவே ஒரு பொண்ணு இருக்கணும். அதுக்காகவாது நீ கல்யாணம் பண்ணிக்கணும்... யோசிப்பா..” என்று அவரும் ஒன்று சொல்லி அவனை யோசிக்க வைத்தார்.

சிறிது நேரம் யோசித்தவன், முகுந்தனின் அப்பா சொன்னது போல தங்கைக்காக தாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

சுந்தரம் சம்மதம் சொல்லவும் அங்கு இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர் அனைவரும். சுந்தரத்தை கட்டி தழுவி ஆனந்த் இன்னும் மகிழ்ச்சியானான்.

சுந்தரம் சம்மதம் சொல்லுவான் என்று தான் அனைவரும் எண்ணி இருந்தனர். அதனால் முன்னரே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவனை எப்டியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணி செய்து இருந்தனர். இன்று அவன் சம்மதம் சொன்னதை உடன் பிறப்புக்கள் அனைவரும் கொண்டாடினர்.

ஆனந்த், விக்னேஷ், சுந்தரம் மூவரும் தனியே சென்று பேசினர்.

“என் கிட்ட கேட்காமலே எல்லாம் நடத்திருக்கீங்க.. உனக்கு கூட இது தெரிஞ்சுருக்கு., ஆனா நீயும் என்கிட்டே சொல்லாம மறைச்சுருக்க..” என்று விக்னேஷிடம் போலி கோபம் காட்டினான்.

ஆனந்த், “இது அத்தனைக்கும் முதல் ஆரம்பமே அவன் தான்... அவன் தான் இந்த ஐடியா தந்தது..” என்று கூறினான்.

“அப்போ எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணதுக்கு நீ தான் காரணமா..?” என்று கேட்டான்.

அப்போதும் கல்யாண பெண் யார் என்று கேட்கவில்லை அவன். அத்தனை நம்பிக்கை தம்பி, தங்கைகள் மீது. இருந்தாலும் பெண் பற்றி தெரிந்து கொள்ளவோ, பார்க்கவோ கூட அவனுக்கு தோன்றவில்லை.

அங்கு வந்த அழகன் நாளை அவனுக்கு நடக்கும் நிச்சயத்திற்கு பெண்ணுக்கு போட வாங்கிய மோதிரத்தை அண்ணனுக்கு ஆர்வமாக காட்டினான்.

“அப்டியே உங்க அண்ணனுக்கு அண்ணியையும் கூட்டிட்டு வந்து காட்டிடு.. அத கூட கேட்கமாட்டான்... ரொம்ப நல்லவன் தான்..” என்று கிண்டலாக சொன்னான் விக்னேஷ்.

அப்போது தான் சுந்தரத்தின் மண்டைக்கு உரைத்தது பெண் பற்றி நாம் எதுவுமே கேட்கவில்லை என்று. அடுத்த நொடி அவனுக்கு மனதில் ஒரு பெண் தோன்றி மறைந்தாள். அவள் தான் சற்று முன்பு அவன் பார்த்து ரசித்தவள்.

“அவ இங்க இல்ல.. அவளுக்கு அவசர வேலை வந்துருச்சு.. அதான் போய்ட்டா... நாளைக்கு தான் நீ பார்க்க முடியும்.” என்று ஆனந்த் சொன்னான்.

சுந்தரம் மெதுவாக, “உன்னோட தங்கச்சி பேரு என்ன.. அவங்கள பத்தி சொல்லு...” என்று பட்டும் படாமல் கேட்டான்.

“அப்பாடா.. கேட்க தோணிடுச்சு... இதுக்கு என்ன என்ன சொல்ல வேண்டி இருக்கு...” என்று விக்னேஷ் கூற, ஆனந்த் போனை எடுத்து சுந்தரத்திடம் நீட்டினான்.

அதை வாங்கி பார்த்தவன் முகத்தில் ஆனந்த அதிர்ச்சி. அவன் ரசித்த அதே பெண் தான் அந்த போட்டோவிலும் இருந்தாள். நம்ப முடியாமல் அவன் தலையில் கை வைத்து கண் மூடி சிரித்தான்
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“அவ பேரு அபிநயா... அவ டாக்டர். மற்றத எல்லாம் அவளே நாளைக்கு சொல்லுவா..” என்று சொன்னான் ஆனந்த்.

“எப்டிடா இப்டிலாம் பண்றீங்க...” என்று சிரித்து கொண்டே சொன்னான். மனதில் ஒரு நிம்மதி சுந்தரத்திற்கு. இப்போது மனம் இன்னும் அதிகமாக நினைத்து ரசித்தது. இருந்தாலும் அவளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் தானா என்ற சந்தேகம் வந்தது.

தம்பி, தங்கை அனைவரும் பேசியதாக கூறியது நினைவு வந்து, அவளுக்கும் இதில் சம்மதமாக தான் இருக்கும் என்று தோன்றியது. இருந்தாலும் நிச்சயத்திற்கு முன்பு தான் நம்மிடம் சொன்னது போல அவளிடம் நம்மை பற்றி எதுவுமே சொல்லாமலே சம்மதம் வாங்கி இருந்தால் என்ன செய்வது என்று நினைத்தான்.

“உன்னோட தங்கச்சிக்கு இதுல விருப்பம் தானா..? இல்ல உங்க வீட்டுல சொன்னதுக்காக ஒத்துக்கிட்டாளா..? என்னை பத்தி முழுசா தெரியுமா..?”என்று அவளது விருப்பத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக கேட்டான்.

“அவளுக்கு எல்லாம் தெரியும்.. நீ என்ன பண்ணுற, என்ன படிச்சுருக்க எல்லாம் சொல்லி தான் சம்மதம் வாங்கினோம். நீ கவலை படாத...”என்று சொன்னான் ஆனந்த்.

“உண்மையாவே உனக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்ன்னு உன் தம்பி அழகன் தான் சொன்னான். எனக்கும் சரின்னு தோணுச்சு.அதுவும் அந்த பொண்ணு ஆனந்த் தங்கச்சின்னு தெரியறதுக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்தது.” என்று விக்னேஷ் சொன்னான்.

“இதுவரைக்கும் நீங்க பார்த்த பழகின பொண்ணுங்க எல்லாருமே உங்களுக்கு தங்கச்சியா தெரிஞ்சாங்க.. இவங்க ஒருத்தர் தான் அப்டி இல்லாம இருந்தது அப்டின்னு விக்னேஷ் அண்ணா சொன்னார். அதான் அவங்களையே அப்போ உங்களுக்கு பேசி கட்டி வச்சுடலாம்ன்னு நான் சொன்னேன். அத அண்ணா தான் நடத்த எல்லாம் பண்ணாரு...”

“எல்லாம் பண்ணுறீங்களே... ஒரு வேளை நான் இதுக்கு ஒத்துக்கலைனா என்ன பண்ணிருப்பீங்க...?” என்று சற்று கேலியாக சொன்னான்.

விக்னேஷ் உடனே, “சரி சரி... அப்போ வேண்டாம்ன்னு போய் சொல்லிடவா...” என்று சொல்லி, வேகமாக கிளம்பினான்.

“அச்சோ... அப்டிலாம் இல்ல... சும்மா தான் சொன்னேன். அப்பறம் அவங்க தப்பா நினைக்க போறாங்க... எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இப்போ இப்டி பேசினா யாரும் நம்பவும் மாட்டாங்க... நானும் நம்ப மாட்டேன்.”என்றான் சாதரணமாக.

உடனே அனைவரும் சிரித்தனர்.

“டேய்.. பெரியப்பா, பெரியம்மா தான் முதல்ல உன்னை பார்த்து நல்ல பையனா இருக்கான், அபிநயாக்கு பேசலாம்ன்னு சொன்னாங்க. அதே நேரம் தான் விக்னேஷ் ஹாஸ்பிட்டல்ல பார்த்த பொண்ணும் அபிநயா தான்னு சொன்னான்.

சரின்னு சொல்லி உடனே அபிநயா கிட்ட கேட்டேன். அவளும் சம்மதிச்சா, அடுத்து எல்லாம் அதுவே நடந்துடுச்சு...” என்று நடந்ததை சொல்லி முடித்தான்.

அடுத்து அனைவரும் வீட்டிற்கு கிளம்ப தயாரானர். தங்கைகள் அனைவரையும் கூட்டி கொண்டு சிவாவும், அழகனும் கிளம்பினர். மாப்பிள்ளை வீட்டாரும் கிளம்ப தயாராகினர்.

ஆனந்த், சுந்தரம், விக்னேஷ் மூவரும் கிளம்பாமல் இருந்தனர். விக்னேஷ் அவர்கள் இருவரையும் பேச வேண்டும் என்று இருக்க வைத்திருந்தான். அனைவரும் சென்ற பின்னர் தான் விக்னேஷ் சொல்ல ஆரம்பித்தான்.

“எதுக்குடா இருக்க சொன்ன..? என்னன்னும் சொல்ல மாட்டேங்குற..?” என்று பொறுமை இழந்து கேட்டான் ஆனந்த்.

“இரு சொல்றேன்..” என்று விட்டு சென்று கதவை அடைத்து விட்டு வந்தான்.

சுந்தரம் புரியாமல், “அப்டி என்ன ரகசியம் சொல்ல போற.. இப்டி கதவ எல்லாம் சாத்துற..?” என்று கேட்டான்.

“வேற யாருக்கும் இது தெரியகூடாது அதுக்கு தான்...” என்று கூறவும் இருவரும் குழப்பத்தோடு பார்த்தனர் விக்னேஷை.

“உன்னோட தங்கச்சி விஷயத்துல என்ன நடந்ததுன்னு உனக்கு முழுசா தெரியனும்ல...” என்று புதிர் போல பேசினான்.

“அதான் எல்லாம் முடிஞ்சதுல..?!!” என்று ஆனந்த் அவசரமாக கேட்டான்.

“அப்டி சொல்லிட முடியாது. ஆனாலும் முடிஞ்சும் இருக்கலாம்.”

“என்னன்னு தெளிவா சொல்லு..” என்று சுந்தரம் கேட்டான்.

“உன்னோட தங்கச்சி மலர் சொன்னாலே தன்னோட ப்ரெண்ட் ராஜி லவ்வர் அவ கீழ தள்ளிவிட்டு கொலை பண்ணிட்டதா சொன்னாலே.. அத அப்டியே விட்டுட்டீங்க... என்ன நடந்ததுன்னு அடுத்து தெரிஞ்சுக்கவே இல்ல.

உண்மைலயே என்ன நடந்துன்னு நான் சொல்றேன்..” என்று விக்னேஷ் கூற, மற்ற இருவர் முகத்திலும் பதட்டம் தொற்றி கொண்டது.

“நான் இந்த ஊருக்கு எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு தெரியாது. நான் இங்க வந்தது ஒரு கேஸ் விஷயமா அப்டின்னு மட்டும் தான் சொன்னேன் உங்க கிட்ட. அது என்ன கேஸ் அப்டின்னு நீங்களும் கேட்கல.

நம்ம ஸ்டேட் ல பல பெண்கள் காணாம போறதாவும், பின்னர் அவங்க எல்லாரும் வேற ஸ்டேட் அப்பறம் அதர் கன்ட்ரிக்கு விற்க படுறதாவும் கேஸ் வந்தது. ஆனா அந்த பெண்கள் காணாம போனதுக்கோ இல்ல கடத்தபட்டதுக்கோ எந்த கேஸும் பதிவாகுறது இல்ல. அப்டி இருந்த நிலைமைல தான் எங்களுக்கு மும்பைல கிடைச்ச ஒரு பொண்ணு மூலமா அவங்க எப்படி கடத்த படுறாங்கன்னு தெரிய வந்தது. அதுவும் அந்த பொண்ணு இந்த தஞ்சாவூர் தான். அதுக்காக தான் நான் இங்க வந்தேன் விசாரிக்க...” என்று சொல்லி இருவரையும் பார்த்தான்.

சற்று அதிர்ச்சியாக இருந்தது இருவருக்கும். இப்படி கூட நடக்கும் என்று அவர்கள் இதுவரை நினைத்து பார்த்தது கூட இல்லை. அப்படி ஒன்றை அவன் சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர். சுந்தரத்திற்கு இதற்கும் தனது தங்கைக்கும் என்ன சம்மந்தம் இருக்கும் என்று எண்ணி குழம்பினான்.

“இங்க வந்தப்ப எனக்கு அந்த பொண்ண பற்றி எந்த தகவலும் கிடைக்கலை. அப்பறம் உன்னோட பிரச்சனை தெரிஞ்சு அத சரி பண்ண உன் கூட இருந்தேன். அப்பறம் உன்னோட தங்கச்சி காணாம போனதுக்கும் இதுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ அப்டின்னு விசாரிக்க ஆரம்பிச்சேன்.

நான் விசாரிக்குற கேஸ் ல அவங்க அநாதை பொண்ணுங்கள பார்த்து பார்த்து தான் கடத்திட்டு இருந்துருக்காங்க.. அப்போ தான் யாரும் கேஸ் கொடுக்கவும் மாட்டாங்க. அவங்களும் ஈஸியா தப்பிக்கலாம்ன்னு இப்படி பண்ணிட்டு இருந்துருக்காங்க.

நீ விசாரிச்சதா சொன்னியே அந்த ஹாஸ்டல்... அங்க போய் நானும் விசாரிச்சேன். உன்னோட தங்கச்சி கேஸ்காக தான் விசாரிக்க போனேன். பட் அங்க நான் தேடி வந்த பெண்ணை பற்றி தெரிய வந்தது. அப்போ தான் என்னோட சந்தேகம் இன்னும் அதிகம் ஆச்சு.

அடுத்து உன்னோட தங்கச்சியே திரும்ப வந்துட்டா.. அவ சொன்னத வச்சு அந்த இடத்துல தேடினதுல அவங்க கிடைக்கல. இருந்தாலும் அங்க சில பெண்கள கடத்தி வச்சுருந்தது தெரிய வந்தது. அதுவும் உன்னோட தங்கச்சி ப்ரெண்டும் அப்டி தான் கடத்த பட்டுருக்கா..

ஹாஸ்பிட்டல் ல சில பசங்க முகங்கள் தான் பதிவாகி இருந்தது. அத வச்சு தேடினதுல ஒருத்தன் கிடைச்சான். உன் தங்கச்சி கொலை பண்ணதா சொன்னாலே அது அவன் தான். அவன் சாகவே இல்ல. அவன வச்சு இன்னும் சில பேர் கிடைச்சாங்க. ஆனா அவங்க எல்லாரையும் சேர்த்து வச்சு இந்த கடத்தல பண்றது யாருன்னு தெரியவே இல்ல...

ஆனா எங்களுக்கு கிடைச்ச ஒருத்தன் மூலமா ஒரு நம்பர் கிடைச்சது. அன்னைக்கே தான் உன்னோட இன்னொரு தங்கச்சி மூலமா அந்த பரமு கைதானான். அவனும் இந்த கேஸ்ல சமந்த பட்டுருக்கதும் எங்களுக்கு தெரிய வந்தது. அவனும் இதேபோல பொண்ணுங்கள கடத்திட்டு தான் இருந்துருக்கான்.

மலர் காணாம போகவும், அதுவும் நீ போலீஸ் ல கம்ப்ளைன்ட் கொடுத்து தேடுறதும் தெரிஞ்சு பரமு அவங்க குரூப் ல சொல்லி மலர தப்பிக்க வைக்க சொல்லிருக்கான். ஆனா அதுக்குள்ளே உன் தங்கச்சி அவளாவே தப்பிச்சு வந்துட்டா... அது தெரிஞ்ச உடனே குரூப்க்கு இன்பார்ம் பண்ணி எல்லாரையும் தப்பிக்க வைச்சுருக்கான்.

இப்போதைக்கு சில பேர் தான் கைதாகிருக்காங்க. இன்னும் இந்த கேஸ்ல உண்மையான குற்றவாளி யாருன்னும் தெரியவரல. கைதான யாருக்குமே அவங்கள வழி நடத்துறது யாருன்னே அவங்களுக்கே தெரியாத அளவுக்கு பிளான் பண்ணி எல்லாம் செஞ்சுருக்காங்க.. இன்னும் செஞ்சுட்டு இருக்காங்க. ஆனா அந்த கூட்டத்தையே கண்டிப்பா நாங்க பிடிப்போம்.

இத நான் எதுக்கு உங்களுக்கு சொல்றேனா, மலர் மூலமா தான் எங்களுக்கு இவங்க எல்லாரும் கிடைச்சுருக்காங்க. மலருக்கும் மீனாட்சிக்கும் இனி தான் பாதுகாப்பு அதிகம் தேவை. மலரோட பேரு வெளில வராத மாதிரி தான் எல்லாம் செஞ்சுருக்கேன்.

இருந்தாலும் ஒரு வேளை தெரிய வந்தா அவங்களுக்கு ஆபத்து வரும். அதுனால அவங்கள பாதுகாக்க வேண்டியது உங்களோட பெரிய பொறுப்பு.” என்று விக்னேஷ் நடந்த அத்தனையும் சொல்லி முடிக்கும் போது சுந்தரத்திற்கும், ஆனந்திற்கும் இதயம் துடிப்பதே நிற்பது போல இருந்தது.

தொடரும்...
 




Keerthi Elango

மண்டலாதிபதி
Joined
Jul 25, 2018
Messages
225
Reaction score
294
Location
Karur
Super epi sis...parra...thala mrg ku ok soliduchu...un vithida ava kita maatitu mulika pora...malarukum meenachikum police protection podanum polaye...
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,708
Location
Coimbatore
அடயேப்பா சுந்தரத்துக்கு கல்யாணம்
விக்னேஷ் சொல்லும் விசயம் எத்தனை ஆபத்தானது
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top