• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 19

சுந்தரம் அபியை வண்டியில் கொண்டு விட சம்மதம் சொன்னான். அபி பட்டு புடவை அணிந்திருந்ததால் ஒரு புறமாக அமர்ந்தாள். அமர்ந்த உடன் வண்டியை எடுத்தான் சுந்தரம். உடனே அவள் இடுப்பில் கை வைத்து மார்போடு அவனை இறுக்கி பிடித்து கொண்டாள்.

அவளது தொடுதலில் அவனுக்கு உள்ளுக்குள் எதோ செய்ய, சட்டென வண்டியை நிறுத்தினான்.

“என்னாச்சு...?” என்று அவள் சாதரணமாக கேட்டாள்.

“கையை எடு... யாராது பார்த்தா என்ன நினைப்பாங்க..?!! கையை எடு.., வண்டிய பிடி..” என்று சொன்னான்..

“நான் டபுள் சைடு உட்கார்ந்து இருந்தா உன்னை பிடிச்சுருக்க மாட்டேன்... இப்போ ஒரு சைடா ல உட்கார்ந்து இருக்கேன், அதான் விழுகாம இருக்க உன்னை பிடிச்சுட்டு இருக்கேன். வண்டிய பிடிச்சேன்.. ஆனா அது சரி வரல, அதான் உன்னை பிடிச்சேன்..” என்று அவன் நம்புமாறு சொல்லவிட்டு அவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்தாள்.

அவனும் வேறு வழி இல்லாமல் ஒப்புகொள்வது போல் சொல்லி விட்டு, ஆனால் உள்ளுக்குள் அது பிடிக்கவே செய்ததால், அனுபவித்து கொண்டே வண்டியை ஓட்டினான். முதல் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிஷம் அவனை என்னன்னவோ செய்தது. சொல்ல தெரியாத, புரியாத அன்பு அவள் மேல் அதிகரித்தது.

இது காலத்துக்கும் நீடித்து இருக்கும் என்று நினைத்து பார்க்கும் போதே, மனதினுள் ஆசை வந்து அவனை குதுகலிக்க செய்தது. அவளை பார்க்க பார்க்க உள்ளுக்குள் அவளுடனான வாழ போகும் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையை வளர்த்து வாழவே தொடங்கியிருந்தான்.

பாதி தூரம் சென்ற நிலையில் அவர்களை சுற்றி போகிறவர்கள் எல்லாரும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கற்பனையில் இருந்து வெளி வந்தவன், அபிநயா அவனை இறுக்கி பிடித்தவாறு முதுகில் சாய்ந்து அமர்ந்திருப்பதை கண்டு வண்டியை உடனடியாக ஓரமாக நிறுத்தினான். நிறுத்திய உடன் அவள் நிமிர்ந்து, “என்ன..?” என்று கேட்டாள். அப்போதும் அவன் மேல் இருந்து கையை எடுக்கவில்லை.

“கையை எடு... எழுந்திரி... விட்டா நீ அப்டியே என் மீதே தூங்குற..” என்று சொல்லி அவளது கையை எடுத்து விட்டு கண்ணாடி வழியாக பார்த்தான்.

அவள் முறைத்து பார்க்கவும், “வண்டி ஓட்ட கஷ்டமா இருக்கு... அதுக்கு தான் சொன்னேன்..” என்று சமாளிக்க சொல்லி திரும்பி கொண்டான்.

“சரி அதுக்கு...?!!” என்று கேட்டாள்.

“தோளுல கை வச்சுட்டு வா.., போகிற வரைக்கும்...” என்று கூறவும்

கோபத்தை அடக்கி கொண்டு, “சரி..” என்று கூறிவிட்டு கையை தோளில் வைத்து கொண்டாள்.

வண்டியை எடுத்தான் சுந்தரம்.

“நான் காலைல சாப்பிடும் போது உன்கிட்ட ஒன்னு கேட்டேன்.. நீ பதில் சொல்லாம இப்போ வரைக்கும் என்னை ஏமாத்திட்டு இருக்க..” என்று அவனை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டே கேட்டாள்.

அவன் சிரித்து கொண்டே பதில் இப்போதும் சொல்லாமல் வந்தான். உன்னை எப்படி சொல்ல வைக்கணும்ன்னு எனக்கு தெரியும்., என்று மனதில் நினைத்து கொண்டு,

“சரி, சரி... வண்டிய அந்த கடை கிட்ட நிறுத்து..” என்று சொன்னாள்.

“எதுக்கு..?”

“நீ தான் நான் தூங்குறதா சொல்லுற.. அதுக்கு தான் அங்க போய் ஏதாது வாங்கி குடிப்போம்.” என்று சொல்லி நிறுத்த சொல்லி கட்டாய படுத்தினாள்.

அவனும் அந்த ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்.

இறங்கிய உடனே அபி உள்ளே சென்று ஒரு ஷேரில் அமர்ந்து விட்டாள். இவன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததும்,

“சீக்கிரம் ஏதாது வாங்கி சாப்பிடு.. லேட் ஆகுது., வீட்டுக்கு போகணும்..” என்று அவசர படுத்தினான் சுந்தரம்.

“இப்போ தான வந்திருக்கு.. உட்காரு.. ஏதாது சாப்பிட்டு கிளம்பலாம்..” என்று கூறினாள்.

“நான் உட்கார்ந்து சாப்பிட வரல... உனக்காக தான் வந்தேன். சீக்கிரம் சாப்பிடு கிளம்பலாம்..” என்று கூறி அப்படியே நின்றிந்தான்.

அவள் வேகமாக எழுந்து அவனது கையை பிடித்து இழுத்து வந்து அருகில் இருந்த ஷேரில் அமர வைத்தாள். அவன் பதறியவாறு முறைத்து கொண்டே, சுற்றி சுற்றி அனைவரையும் பார்த்தவாறே அமர்ந்தான்.

அவள் சாதரணமாக, “என்ன சாப்பிடுற..? ஜூஸ் சொல்லவா..?” என்று கேட்டாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்றேன்ல.. உனக்கு வேண்டும்னா வாங்கி சாப்பிடு..” என்று சொல்லி கோபமாக அவளை பார்த்தான்.

பின் அவள் தனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொல்லிவிட்டு, அவன் புறம் திரும்பினாள். அவன் சுற்றி இருப்பவர்கள் யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டம் விட்டவாறே அமர்ந்திருந்தான்.

“எதுக்கு நீ இப்படி பயந்துட்டே இருக்கே...? இங்க என்னை பாரு... உன்னோட பொண்டாட்டி நான்... என்னை பார்க்காம மற்றவங்கள பார்த்துட்டு இருக்க..? என்ன ஆம்பள நீ..?” என்று சீண்டினாள்.

அவள் பொண்டாட்டி என்று சொல்லியதை கேட்டு சற்று அதிர்ச்சியாகினான். அவளையே தான் பார்க்க வேண்டும் என்று அவள் ஆசை படுகிறாள் என்று புரிந்து கொண்டான்.

“நமக்கு நிச்சியம் தான் ஆகிருக்கு.. அதுவும் காலைல தான் ஆகிருக்கு. அதுக்குள்ளே இப்படி வெளி இடங்கள சுத்துறத யாராது பார்த்தா என்ன நினைப்பாங்க..? அதுக்கு தான் சொல்றேன்.., சீக்கிரம் சாப்பிடு கிளம்பலாம்...”

“நிச்சியம் தான் ஆகிருச்சுல.. நிச்சியம் ஆகிட்டாளே பாதி பொண்டாட்டி தான்...” என்று சிலுப்பிக் கொண்டாள். அதற்குள் ஜூஸ் வரவும், அதை குடித்து கொண்டே,

“நானும் கேட்டுட்டே இருக்கேன்.. எனக்கு பதிலே சொல்லாம தப்பிச்சு ஓடுற.. நான் அப்போ கேட்டதுக்கு நீ இப்போவே பதில் சொல்ற.. இல்ல அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...”

சுந்தரம் அவளது மிரட்டலை பார்த்து சிரித்தான். அவள் புரியாமல் அவனையே பார்க்கவும், “என்னோட தம்பி, தங்கைக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். மற்றபடி உன்ன போல அடாவடி பெண்ணலாம் எனக்கு பிடிக்காது...” என்று விளையாட்டுக்கு சொன்னான்.

அடாவடி பெண் என்று சுந்தரம் அபியை சொல்லவும் அவளுக்குள் கோபம் அதிகரித்தது.

“நான் அடாவடி பொண்ணா...? அப்டி நீங்க யாருக்காகவோ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம். நான் வீட்டுல பேசி கல்யாணத்த நிறுத்திடுறேன்...” என்று அவளும் சொல்ல,

இவள் நிஜத்திலே வீட்டில் சொன்னாலும் சொல்லுவாள் என்று பயந்து, “ஏய்.. என்ன பேசுற..? கல்யாணம் நடக்கும்... இப்போ பிடிக்கல.. அதுக்காக...? பின்னாடி ஒத்துவரும்., ஒரு பிரச்சனையும் இல்ல...” சமாளித்து சொன்னான்.

“ஹ்ம்ம்.... அப்டியா... அப்போ சரி.. ஒத்துவரும் போதே கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று விடாமல் அவனை சீண்டினாள்.

“இப்போவே கொஞ்சம் கொஞ்சம் பிடிக்க தான் செய்யுது... கல்யாணம் இப்போவே பண்ணிக்கலாம்..” என்று ஒருவழியாக தானாக அவளை பிடிக்கும் என்று சொன்னான்.

“உனக்கு என்னை பிடிச்சுருக்குன்னு நான் நம்புற மாதிரி நீ ஏதாது பண்ணனும்...” என்று கூறி அவனை ஒருமாதிரி பார்த்து கண்ணடித்தாள்.

அவள் கண்ணடிக்கவும் சுந்தரத்திற்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. அவனது முகத்தில் தானாக சிரிப்பு வந்தது.

“நீ சொல்ற எதையும் பண்றதுக்கு இது இடம் கிடையாது.. கிளம்பு ஜூஸ் குடிச்சுட்டா... போகணும்.. ஆனந்த், தங்கச்சி வர்றதுக்கு முன்னாடி நான் போய் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணனும்...” என்று பொறுப்போடு பேசினான்.

“எந்த ஏற்பாடா இருந்தாலும் போய் பார்த்துக்கலாம்... இப்போ நீ ஐ லவ் யூ ன்னு சொல்லணும்... சொல்லு அப்பறம் கிளம்பலாம்..” என்று சாதாரணமாக கூறி விட்டு அவனது முக பாவங்களை ரசித்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“அதெல்லாம் முடியாது.. நான் கிளம்புறேன்..” என்று அவன் திரும்பவும், அவனை கை பிடித்து நிறுத்தினாள்.

“நான் சொன்னத செய்யல.. அப்பறம் வேற சிலத நான் பண்ணுவேன்..” என்று மிரட்டினாள்.

அப்போதும் அவன் எதுவும் சொல்லமல் முறைத்து பார்த்து, கையை விடுவித்து கொண்டு திரும்பினான். உடனே வேகமாக அபி எழுந்து சுந்தரத்தின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தாள்.

ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு. கன்னத்தில் கை வைத்தவாறே அப்படியே நின்றிந்தான் அனைத்தையும் மறந்து. அவள் சிரித்து கொண்டே அவனை தட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தாள். அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் குடு குடு என்று ஓடினான் சுந்தரம். வண்டிக்கு பக்கத்தில் சென்றும் கன்னத்தை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான். அபி வெளியே வருவதை பார்க்கவும் எதையும் காட்டிகொள்ளாமல் அவளது முகத்தை பார்க்கவும் முடியாமல் தன்னை கட்டு படுத்தி கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றிந்தான்.

வண்டியை ஸ்டார்ட் செய்து அமைதியாக காத்திருந்தான். அவள் வண்டியில் ஏறிய உடன், “இப்டிலாம் பண்ணாத... கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிலாம் பண்ணாத.. அதுவும் பொது இடத்துல இப்டியா நடந்துக்குறது..?” என்று அவளை பார்க்காமலே அவளுக்கு அறிவுரை சொன்னான்.

“அதான் முன்னாடியே சொன்னேன்... நிச்சியம் ஆனாலே பாதி பொண்டாட்டி நான்... பொண்டாட்டி எதுனாலும் பண்ணலாம்., பொது இடமாவே இருந்தாலும்.. நீ எனக்கு மட்டும் சொந்தமான ப்ரைவேட் இடம் தான்...” என்று அவள் ஒரு விளக்கம் சொன்னாள்.

“பதில் சொல்லி வாதிட எனக்கு நேரம் இல்ல... நேரம் ஆச்சு..”என்று கூறி வண்டியை எடுத்தான். ஆனால் மனதில் அவனை அவளுக்கு சொந்தமானவன் என்று கூறியது உல்லாசத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் வீடு சென்றால் அங்கு இவர்களுக்காக மற்ற அனைவரும் காத்திருந்தனர். அழகன் வேண்டும் என்றே கிண்டலுக்காக, “என்ன அண்ணா எங்க போயிருந்தீங்க..? அதுக்குள்ளே அண்ணி கூட சுத்த ஆரம்பிச்சுட்டீங்க...” என்று சொன்னான்.

அவனை முறைத்து கொண்டே உள்ளே சென்றான் சுந்தரம். அபியின் அம்மா வந்தார். அவர் அபியிடம், “எங்கடி போன இவ்ளோ நேரம்..?” என்று குசு குசு என்று கேட்டு கொண்டே அவளது கையை இழுத்து கொண்டு சென்றார்.

“மன்னிச்சுடுங்க அத்தை... கொஞ்சம் தாகமா இருந்துச்சுன்னு, நான் தான் ஜூஸ் குடிக்க கூட்டிட்டு போனேன்... அதான் லேட் ஆகிடுச்சு..” என்று மன்னிப்பு கேட்டான்.

சுந்தரம் மன்னிப்பு கேட்கவும், “ஐயோ தம்பி மன்னிப்பு எதுக்கு கேட்குறீங்க..? அதெல்லாம் தேவை இல்ல... ஆனால் அவளுக்காக எப்போவும் பொய் சொல்லாதீங்க.. அவ தான் உங்கள எங்கையாது கூட்டிட்டு போயிருப்பான்னு எங்களுக்கு தெரியும். அவ கொஞ்சம் விட்டா தலைல ஏறி உட்கார்ந்து ஆடுவா..” என்று அவளை முறைத்து கொண்டே சொன்னார் அபியின் தாய்.

தனது மகளுக்காக இப்படி மன்னிப்பு கேட்கும் நல்ல மாப்பிள்ளை கிடைத்ததை நினைத்து மனதில் மகிழ்ச்சி கொண்டார்.

அடுத்த ஆறு மாதத்திலே சுந்தரத்திற்கும், அபிநயாவிற்கும் திருமணம் ஆனது. இருவரும் அவர்களது இல்லற வாழ்க்கையை சந்தோசத்துடன் தொடங்கினர்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு...

அதிகாலை நேரம். ஈர தலையை கீழாக ஒரு முடி போட்டவாறு, மஞ்சள் நிற பட்டு உடுத்தி மங்களகரமாக வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாள் அபி. சுந்தரம் பின்புறம் அமர்ந்து, ஒவ்வொரு கலராக எடுத்து கொடுக்க, அதை கோலத்தில் போட்டு முடித்தாள் அபி.

இந்த ஐந்து வருடத்தில் இருவருக்குமான காதல் எல்லை இல்லாமல் பெருகி கொண்டே சென்றது. இன்னுமே ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாகவே அன்பு செலுத்தி கொண்டிருக்கின்றனர். அபி சுந்தரத்தை பிரிந்து ஒரு நாள் கூட இருந்தததே இல்லை. அம்மா வீட்டிருக்கு கூட சென்றால், காலை சென்று மாலை வீட்டிற்கு வந்து விடுவாள். சுந்தரத்திற்கும் அவளை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

இப்போது அனைத்து கடன்களும் தீர்ந்து நல்ல நிலைக்கு வந்து விட்டனர். அப்பாவின் ஆசை படி சிவாவிற்கும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டார் ஒன்றை தொடங்கிவிட்டான். இருந்தும் சிவா அவன் விருப்பத்திற்காக ஐடி கம்பெனியிடம் அடிமையாக வேலை பார்த்து வருகிறான். அழகனும் அவன் ஆசை படி மெடிக்கல் படித்து கொண்டிருக்கிறான். அதனால் அந்த மூன்று கடைகளையுமே சுந்தரமே பார்த்து கொண்டிருக்கிறான்.

ஆனாலும் சுந்தரத்திற்கும், அபிக்கும் ஒரே ஒரு கவலை. இன்னும் அவர்களுக்கு என்று ஒரு குழந்தை இல்லாதது. அபி குழந்தை இல்லாததை எண்ணி வருந்தும் போதெல்லாம் சுந்தரம் ஆதரவாக இருந்து குழந்தை கண்டிப்பாக வரும் என்று நம்பிக்கை தந்து பேசுவான். சுந்தரம் வருந்தும் போது அபியும் நம்பிக்கையோடு பக்க பலமாக இருப்பாள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து சந்தோசமாக வாழ்கின்றனர்.

அப்பாவின் கடைசி ஆசை படி, மலருக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சியம் செய்து வைத்தான் சுந்தரம். இன்னும் மூன்று நாட்களில் மலருக்கு திருமணம். திருமண ஏற்பாடுகள் வெகு விமர்ச்சியாக நடை பெறுகிறது. இன்று மூகூர்த்தகால் ஊண்டி, மணபெண்ணிற்கு சில சடங்குகளும் நடைபெற உள்ளது. அதற்கு தான் சௌந்தர்யா, மீனாட்சி அனைவரும் தங்களது குடும்பத்தோடு வருகை தந்திருந்தனர்.

சிவா, அழகன் கூட அதற்காக தான் வந்திருக்கின்றனர். சிவா சென்னையில் வேலை பார்க்கிறான். அழகனும் சென்னையில் மெடிக்கல் படித்து கொண்டிருக்கிறான்.

ஆனந்த் இப்போது நல்ல குடும்ப தலைவனாக இருக்கிறான். மீனாட்சிக்கும், ஆனந்திற்கும் மூன்று வயதில் வர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

அபி கோலத்தை முடித்து உள்ளே நுழைய, அங்கே அவர்கள் இருவருக்கும் சிவா, இரு கோப்பையில் காபி கலந்து கொண்டு வந்திருந்தான். அதை வாங்கி குடித்த உடனே, அவரவர் ஒரு ஒரு வேலையை பார்க்க சென்றனர்.

அபி நேராக மேல் மாடியில் இருக்கும் அறைக்கு சென்றாள். அங்கு கதவை திறந்து, லைட் சுவிட்ச் ஆன் செய்தாள். அங்கே கட்டிலில் மலரும், மீனாட்சியும், தலையணையை எடுத்து முகத்தில் மறைத்து கொண்டு தூங்கி கொண்டிருந்தனர்.

“ரெண்டு பேருக்கும் எத்தனை முறை சொல்றது...? இப்போ எழுந்திருக்க போறீங்களா..? இல்ல நான் தண்ணிய கொண்டு வந்து முகத்துல ஊத்தவா..?” என்று இடுப்பில் கை வைத்தவாறு கோபமாக கேட்டு கொண்டிருந்தாள். ஆனால் அவர்கள் இருவரும் அசைந்த பாடில்லை.

“அண்ணி... மணி நாலு தான் ஆகுது... அதுக்குள்ளே எழுப்பினா எப்டி அண்ணி... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்... ப்ளீஸ்..” என்று மீனாட்சி கெஞ்சினாள்.

“அங்க உன் மகள் அழுதுட்டு இருக்கா... சௌந்தர்யா ஒன்னுக்கு ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாமல் தத்தளிச்சுட்டு இருக்கா.. போய் உன்னோட மகளை ரெடி பண்ணு... அப்பறம் வந்து தூங்கு...” என்று சொல்லி அவளை முதுகில் அடித்து எழுப்பினாள்.

“அதான் அக்கா பார்த்துக்குறாங்க.. அப்பறம் என்ன அண்ணி...” என்று மறுபடியும் அவள் தூங்கவே செய்தாள்.

“சரி நீ எழுந்திரி மலர்... நீ தான் கல்யாண பொண்ணு... முகூர்த்த கால் ஊண்டும் போது முன்னாடி நீ தாண்டி நிற்கணும்... எழுந்திரி..” என்று அவளை எழுப்ப முயற்சித்தாள்.

அவளும் எழ மறுக்கவும், “உங்க ரெண்டு பேரையும் சுந்தரம் தான் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்கான்...” என்று சொல்லி புலம்பினாள்.

உடனே சகோதரிகள் இருவரும் ஒரு முறை கண் திறந்து அபியை பார்த்தனர். பின் மறுபடியும் தலையணைக்குள் முகத்தை புதைத்து கொண்டனர்.

“அப்போ ரெண்டு பேரும் எழுந்து குளிக்க போக போறது இல்ல... அப்போ சரி., நான் சூர்யாக்கு கால் பண்ணி, மலருக்கு உங்கள கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை அப்டின்னு சொல்லிடுறேன்..:”என்று சொல்லவும், மலர் பதறி கொண்டு எழுந்தாள்.

“அண்ணி... விளையாடாதீங்க... அப்டிலாம் அவர் கிட்ட சொல்லிடாதீங்க, ப்ளீஸ்... நான் கிளம்புறேன்...” என்று கூறி எழுந்து போர்வையை மடித்து வைத்தாள்.

“அப்டியே உங்க அக்காவ எழுப்பி விடு.. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவேன், அதற்குள்ள ரெண்டு பேரும் ரெடி ஆகிருக்கணும்..” என்று கூறி விட்டு கிளம்பினாள்

காலை நல்ல படியாக முகூர்த்தகால் ஊண்டி, மற்ற அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவரும் மதிய சாப்பாடையும் முடித்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்போது சுந்தரம் எங்கையோ கிளம்பி கொண்டிருந்தான். அவன் கிளம்பி வாசல் வரும் போது அங்கு அவர்கள் வீட்டின் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து விக்னேஷ் இறங்கினான்.

தொடரும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top