• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 3

ஆனந்த் சுந்தரத்தின் முகத்தை பார்த்தே சந்தேகபட்டான். அதேபோல சுந்தரம் மலரை காணவில்லை என்று கூறவும் சிறிது அதிர்ச்சிக்குள்ளானான். பின்பு சுதாரித்து கொண்டு சுந்தரத்திடம் விசாரித்தான்.

சுந்தரம், “மலர காணோம்.. தம்பி தான் கால் பண்ணான். மலர் காலைல இருந்தே காணோம் அப்டின்னு சொல்றான்...,”

என்று கூறி கொண்டு இருக்கும் போதே ஆனந்த்,

“காலேஜ் போனாளா.. நான் இன்னைக்கு காலேஜ்க்கு லேட்டா தான் போனேன். அதனால நான் கவனிக்கல..”

“இல்லடா இன்னைக்கு மலர் மீனாட்சி கூட போகல... சீக்கிரம் போய்ட்டாளாம். ஆனா காலேஜ்க்கு வரலைன்னு சொல்லிருக்காங்க அவுங்க ப்ரெண்ட்ஸ். க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் சிலர் வீட்டுக்கு போய் கேட்டுட்டும் வந்துருக்கா மீனாட்சி.., ஆனா அவ அங்க இல்ல. இப்போ அவுங்க அங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க.. நான் உடனே அங்க போகணும்..” என்று பதறி கொண்டே பேசினான் சுந்தரம்.

சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆனந்த் தானும் உடனே பதறாமல் நிதானமாக நடந்து கொண்டான்.

“நம்ம முதல்ல அங்க போவோம், பார்ப்போம். அதுவும் எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி எங்கயும் போயிருக்க மாட்டா. அவ சின்ன பொண்ணு இல்ல. மலர் எங்க போனான்னு நாம தான் கண்டுபிடிக்கணும். அங்க அவுங்க பதட்டத்துல சரியா தேடாம விட்டுருக்கலாம்.

எனக்கு புரியுது... இப்போ நேரத்துல நீ தான் அவுங்களுக்கு உடன் இருக்கணும். உனக்கு உதவிக்கு நான் வர்றேன் கூட... வா போகலாம்.”

ஆனந்த் கூறியது போல தானும் பதட்டப்ட்டு செயல் பட கூடாது என்று நினைத்தான் சுந்தரம். இருவரும் கிளம்பினர் தேவலூருக்கு. சுந்தரமும், ஆனந்த் இருவரும் அவர்களது வண்டிகளை எடுத்து கொண்டு கிளம்பினர்.

தேவலூர். அங்கு மீனாட்சியும், அழகனும் குழப்பத்துடன் இருந்தனர். மீனாட்சி தெரிந்த அனைவரிடமும் மறைமுகமாக விசாரித்தாள். வெளியில் சென்று தேடவில்லை. ஒரு சிறு நம்பிக்கை இருந்தது தங்கை எப்படியும் வந்து விடுவாள் என்று மீனாட்சிக்கு.

அதனாலே யாருக்கும் அவள் காணவில்லை என்பதை சொல்லாமல் இருந்தாள். ஒரு பெண்ணை காணவில்லை என்றால் மற்றவர்கள் ஏதாவது தவறாக நினைத்து விடுவார்கள் என்பதற்காக வீட்டு வேலை செய்யும் கோமதி கேட்டதற்கு கூட உண்மையையை மறைத்து மலர் தோழியின் வீட்டிற்கு சென்றதாக சொல்லி சமாளித்து வைத்திருந்தாள்.

பெரியவர்கள் யாரும் இல்லாமல் தனி ஆளாக இருந்து கஷ்ட படுவதை இன்று நன்கு உணர்ந்தாள் மீனாட்சி. பதட்டமும் பயமும் அதிகரித்து கொண்டே இருந்தது நேரம் செல்ல செல்ல. அழகன் சுந்தரத்திற்கு இந்த தகவலை சொல்லி உடனே அழைத்தது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவன் மூலம் மலர் காணவில்லை என்ற தகவல் ஊருக்குள் கசிந்து கெட்ட பெயர் கிடைத்து விடுமோ என்று பயந்து கொண்டு இருந்தால் மீனாட்சி.

எங்கு போய் இருப்பாள், எதற்காக போய் இருப்பாள், ஏன் இன்னும் வர வில்லை என்று எண்ணி எண்ணி சந்தேகம் கோபமாக மாறி கொண்டே சென்றது மீனாட்சிக்கு. பொறுப்பில்லாமல் இப்படி அவள் எங்கு சென்றாலோ என்று எண்ணி அவளை மனதில் திட்டி கொண்டிருந்தாள்.

இரவு ஏழாகி விட்டது மணி. யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு மீனாட்சி ஆவலாக வந்து கதவை திறந்து பார்த்தாள். அங்கு சுந்தரம், ஆனந்த் இருவரும் நின்றிருந்தனர். உள்ளே கூப்பிடவும் இஷ்டம் இல்லாமல் உள்ளே வர சொல்லவும் மனம் இல்லாமல் அவள் முறைத்து கொண்டு அப்படியே நின்றிருந்தாள். அழகன் சத்தம் கேட்டு மாடியில் இருந்து வேகமாக வந்தான்.

வாங்க அண்ணா...!! என்று அவன் அழைத்தான் இருவரையும். உடனே மீனாட்சி கோபமாக முறைத்தாள் அழகனை. “உன்னை யாரு இவுங்களுக்கு எல்லாம் சொல்ல சொன்னது..?” என்று கோபமாக கேட்டாள். பின்பு எரிச்சல் பட்டு கொண்டே உள்ளே சென்று அமர்ந்தாள்.

அழகன் உள்ளே அழைத்தும் இருவரும் உள்ளே வராமல் வெளியே வராண்டாவிலே நின்றனர்.

“மலர் வந்துட்டாளா..?” என்று சுந்தரம் கேட்டான்.

அழகன் சுந்தரத்தின் கையை பிடித்து கொண்டே, “ அண்ணா உள்ள வாங்க அண்ணா..!!” என்று பாவம் போல கூப்பிட்டான்.

பின்பு இருவரும் உள்ளே சென்றனர். “மலர் வந்துட்டாளா..? இல்ல இன்னும் வரலையா..?”என்று அழகனிடம் மறுபடியும் கேட்டான்.

“இல்ல அண்ணா..! இன்னும் அக்கா வரல. எங்க போச்சுன்னே தெரியல.” என்று சிறு வருத்தத்துடன் சொன்னான்.

“அக்கா எங்கயாது ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கும். நீ கவலை படாத. எப்டியும் வந்துருவா மலர்.” என்று அவனுக்கு ஆறுதல் கூறினான்.

உடனே மீனாட்சி, “உங்க ஆறுதல் எங்களுக்கு தேவை இல்ல. மலர் எப்டியும் திரும்பி வந்துரதான் போறா.. அது எங்களுக்கே தெரியும். நீங்க கிளம்பலாம்.” என்று முகத்தில் அடித்தால் போல பேசி இருவரையும் வெளியே போக சொன்னாள்.

ஆனந்திற்கு கோபம் வந்தது. சுந்தரம் பதிலுக்கு அழகனை பார்த்து, “என்னோட தம்பி தங்கைகளுக்கு எதாதுன்னா என்னால தாங்கிக்க முடியாது. மலருக்கு நான் அண்ணன். அது போல அப்பா இடத்துல இருந்து தங்கை பாத்துக்குற பொறுப்பு என்னோடது தான். அது யார் என்ன சொன்னாலும் எப்டி சொன்னாலும் மாறாது. நான் மலர் வர்ற வரைக்கும் இங்க தான் இருப்பேன். மலர கண்டு பிடிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. அது வரைக்கும் என்ன யார் என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்.”

என்று அமைதியாக அதே நேரத்தில் மீனாட்சியை அமைதியாக்கும் வகையில் பேசி விட்டான். அதற்க்கு மேல் அவளும் பேசவில்லை. ஆனால் ஆனந்திற்கு அது பிடிக்கவில்லை என்பதால் அவன் கிளம்புவதாக கூறினான். மீனாட்சிக்காக சுந்தரம் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.

மேலும் ஆனந்தை சுந்தரம் இன்னும் கொஞ்சம் நேரம் உடன் இருந்து பார்த்து விட்டு பின்பு செல்ல சொன்னான். அவனுக்காக ஒப்பு கொண்டான் ஆனந்த். அதிக நேரம் ஆகியும் மலர் வராததால் அனைவரும் பதற்றமாகினர்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
நேரம் எட்டை தாண்டியது. சுந்தரமும், ஆனந்தும் வெளியே சென்று தேடலாம் என்று முடிவு எடுத்தனர். அப்போது அழகன் தானும் உடன் வருவதாக கூறினான்.

மீனாட்சி உடனே எப்பொழுதும் போல நீங்கள் யாரும் தேட செல்ல வேண்டாம், நான் என் தங்கையை தேடி கொள்வேன் என்று வீர வசனம் பேசினாள்.

அதை கேட்ட சுந்தரமோ, ஆனந்தோ எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். அதே நேரத்தில் தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதில் உறுதியாய் இருந்தனர்.

அழகன் தான் மீனாட்சியை வர வேண்டாம் என்று கூறினான். ஆனால் மீனாட்சி தான் பிடிவாதகாரியே. அவளும் வெளியே சென்று தேடியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தாள். ஒருவழியாக எல்லாரும் செல்ல முடிவு எடுத்தனர்.

“அழகா யார் யார் கிட்ட எல்லாம் விசாரிச்சீங்க..? அத சொன்னா தான் நாம போய் தேட வசதியா இருக்கும்..” என்று கேட்டான் சுந்தரம்.

மீனாட்சி, “அழகா நான் போய் அவளோட ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேக்குறேன். நீ வீட்டுல இரு.. நீ வேற எதுவும் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்ல..”என்று அவனை பேச விடாமல் அவள் சொல்ல,

ஆனந்திற்கு எரிச்சல் வந்துவிட்டது.

“ஏம்பா..! ஒரு முடிவு எடுங்க... யார் யார் எங்க போய் தேடுறதுன்னு... இல்ல போய் போலீஸ் ல கம்ப்ளைன்ட் கொடுத்துறலாம்...”

“இல்லடா... போலீஸ் லாம் வேண்டாம். நம்ம முதல்ல தேடுவோம். போலீஸ் போனா பொண்ணோட விஷயம்... வெளில எல்லாருக்கும் தெரிஞ்சு தப்பா பேசுவாங்க. நம்ம யாருக்கும் தெரியாம தான் தேடனும். எப்டியும் அவ கிடைச்சுருவா...”

அழகன், “ஒரு வேள அக்கா இன்னும் வரலைனா... அக்காக்கு ஏதாது தப்பா நடந்துருக்குமா...??!!” என்று பயந்து போய் கேட்டான்.

“தப்பானா...? எப்டி..? ஆக்சிடென்ட்... அப்டின்னு சொல்லுறியா...” என்று பயந்து போய் விட்டாள் மீனாட்சி.

அதுவரை யாரும் அப்டி யோசிக்காததால் அழகன் கூறியது போல நடந்து இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

சுந்தரம், “அப்டிலாம் எதுவும் நடந்துருக்க வாய்ப்பு இல்ல... நீங்க பயப்படாதீங்க..

அது மட்டும் இல்ல நம்ம ஊருல எந்த ஆக்சிடென்ட் நடந்த மாதிரியும் தெரியல. அப்டி நடந்துருந்தா இந்த நேரத்துக்கு ஊருக்குள்ள தெரிய வந்துருக்கும்.” என்று சுந்தரம் கூறவும்

ஆனந்தும், “ஆமாம்... எனக்கு தெரிஞ்சு எந்த ஆபத்தும் இருக்காது.. நீ பதட்ட படாம வீட்டுல இரு அழகா... நாங்க போய்ட்டு வந்துடுறோம்..”

“ஆமாம் அழகா நாங்க போய் தேடுறோம். உனக்கு போன் பண்ணி தகவல் சொல்லுறோம்.. நாங்க போய் தேடும் போது மலர் வீட்டுக்கு வந்துட்டா யாராது இருந்தா தான் நல்லது.

அது மட்டும் இல்ல.. ஒருசேர எல்லாரும் வெளில போறத யாராது பார்த்தா எதோ பிரச்சனைன்னு ஊரே என்னன்னு வந்து கேக்கும்... அதுனால நீ வீட்டுலே இரு..”

சுந்தரம் சொன்னதை ஏற்று கொண்டு ஒருவழியாக அழகன் வீட்டிலே இருக்க சம்மதித்தான். அடுத்து மீனாட்சி தனியாக கிளம்பினாள். அழகனை பத்திரமாக இருக்க சொல்லி விட்டு கிளம்பினாள். தன்னுடன் யாரும் வர வேண்டிய அவசியமில்லை என்று கூறி விட்டு சென்றாள்.

இருந்தாலும் தங்கையின் பாதுகாப்பு கருதி சுந்தரம் தான் சென்றால் ஏதாவது சொல்லுவாள் என்பதற்காக ஆனந்தை அவளுக்கு பின்னால் பாதுகாப்புக்காக செல்ல சொன்னான்.

ஆனந்திற்கு அது சந்தோசமாக தான் இருந்தது. இந்த காரணத்தை சொல்லியாவது அவளுடன் சிறிது நேரத்தை செலவழிக்கலாம் என்று எண்ணி உள்ளுக்குள் சிறு சந்தோசமடைந்தான். அது மட்டும் இல்லாமல் மலரை கண்டுபிடிக்க தான் உதவி செய்தால் நம் மேல் உள்ள காதல் வெளி வந்தால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை என்று எண்ணி கொண்டான்.

மீனாட்சி வேகமாக வெளியேறி சென்றாள். பின்னாலே ஆனந்தும் சென்றான்.

அவர்கள் சென்ற பின்னர் சுந்தரம் கிளம்ப நினைத்தான். அப்போது அழகன் சுந்தரத்திடம்,

“அண்ணா..! ஒரு நிமிஷம்.. நில்லுங்க...”என்று கூறவும் சுந்தரம் என்ன என்பது போல பார்த்தான்.

“இல்ல அண்ணா.... அது வந்து அக்கா எதுவும் வீட்ட விட்டுட்டு ஓடி போயடுச்சோன்னு தோணுது...” என்று அழகன் தயங்கி தயங்கி சொன்னான்.

அதை கேட்டவுடன் சுந்தரத்திற்கு தூக்கி வாரி போட்டது. ஏன் தம்பி இப்டியெல்லாம் பேசுகிறான் என்று தம்பி மேல் கோபம் கொண்டான்.

“டேய்..!!?? என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா..? மலர் உனக்கு அக்கா... அக்காவ பத்தி நீயே தப்பா பேசலாமா..?” கோபத்தோடு கேட்டான்.

“இல்ல அண்ணா... எனக்கு அப்டி தான் தோணுது..”

“மறுபடியும் அப்டியே பேசிட்டு இருக்க... நீ இப்டி பேசுவன்னு நான் எதிர் பார்க்கல...

எத வச்சு நீ இப்டி முடிவுக்கு வந்த...??!”

“அது வந்து அண்ணா.. இன்னைக்கு காலைல மலர் அக்கா பேக் ல சேலை எடுத்து வைச்சுட்டு போனத பார்த்தேன்... அதுவும் பட்டு சேலை”

“ஒருவேள காலேஜ் ல இன்னைக்கு எதாது பங்க்சனா இருந்துருக்கும்... அதுக்காக எடுத்துட்டு போயிருக்கலாம்ல... அத வச்சு நீ மலர தப்பா நினைச்சுட்டியா...?” என்று கோபத்தோடே கேட்டான்.

“பங்க்சன் ஏதாது இருந்தா மீனாட்சி அக்காக்கு தெரிஞ்சுருக்கும் ல... ஆனா அக்கா அப்டி எதுவும் சொல்லல...

அதுவும் இல்லாம இன்னைக்கு அக்கா நான் ஸ்கூல் கிளம்பி போறதுக்கு முன்னாடியே கிளம்பி போய்டுச்சு... நேத்து நைட் எல்லாம் ஏதோ போன் பேசிட்டே இருந்துச்சு. யாருன்னு நான் கேட்டதுக்கு ப்ரெண்ட் அப்டின்னு சொல்லுச்சு...

எனக்கு அப்போ எல்லாம் சந்தேகம் வரல. இன்னும் வரலனும் போது தான் அதெல்லாம் தப்பா தோணுது...

இருந்தாலும் இந்த கோணத்துலையும் நாம விசாரிச்சு பார்த்தா தான் எங்க போயிருக்கும்ன்னு தெரிய வரும் அண்ணா...

அத தான் நான் சொல்ல வந்தேன்...”

அழகன் தெளிவாக சொல்லிய பிறகு தான் சுந்தரத்திற்கு புரிந்தது. இருந்தாலும் அவன் சொல்லியதை அவன் முழுவதுமாக ஏற்று கொள்ள வில்லை.

“மலர் நம்ம வீட்டு பொண்ணு... அவ எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டா... நீ சொல்லுறத முழுசா ஏத்துக்க முடியல. சரி இருந்தாலும் நான் பார்த்துக்குறேன் இனி. நீ கவலை படாத... நான் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கிறேன்.

மலர் எங்க இருக்கான்னு கண்டு பிடிப்போம்...”

என்று சுந்தரம் சொன்ன பிறகு தான் அழகன் கொஞ்சம் நிம்மதியாக இருந்தான். இனி அண்ணன் பார்த்து கொள்வார் என்று அமைதியாகினான்.

“சரி அண்ணா.. எப்டியாது அக்காவ கூட்டிட்டு வந்துருங்க..”

“சரி அழகா.” என்று கூறிவிட்டு திரும்பியவன் மறுபடியும் யோசனை வந்தது போல திரும்பி அழகனிடம், “ மலர் காலைல யார் கூட போனான்னு தெரியுமா... அதாது அவளோட அந்த ப்ரெண்ட் யாருன்னு தெரியுமா...?”

“இல்லண்ணா தெரியாது.. ஆனா அவுங்க இங்க பக்கத்துல கவர்மெண்ட் ஹாஸ்டல் ல தான் தங்கி படிக்குறாங்கன்னு மலர் அக்கா ஒரு முறை சொல்லிருக்கு. அவுங்க பேரு கூட எனக்கு ஞாபகம் இல்ல..”

“சரி இது போதும். நான் போய் விசாரிச்சுக்குறேன்.”

அங்கிருந்து கிளம்பினான் சுந்தரம்.

மீனாட்சி நடந்து மலரின் தோழியின் வீட்டிற்கு சென்றாள். அவளுக்கு ஐந்து மீட்டர் இடைவெளியில் பின்னாலே தொடர்ந்து வந்தான் ஆனந்த்.

பாதி நேரம் அவன் மலர் தேட தான் போகிறோம் என்பதை கூட மறந்து மீனாட்சியை ரசித்தவாறு சென்றான். சிலர் வீடுகளில் மீனாட்சி விசாரிக்கும் போது தள்ளி நின்றான்.

ஒரு மூன்று வீடுகளில் விசாரித்து எங்கும் சரியான தகவல் இல்லை என்றவுடன் மீனாட்சிக்கு அழுகையாக வந்து விட்டது. தங்கை எங்கு எப்படி கஷ்ட படுகிறாளோ என்று எண்ணி வருந்தி கொண்டிருந்தாள்.

நேரம் ஒன்பதை தொட்டது. ஆனந்த் வீட்டில் இருந்து அவனுக்கு கால் வந்தது.

மீனாட்சி மிகவும் ஆர்வமுடன் அருகில் வந்தாள்.

“நான் வர்றேன்மா... கொஞ்சம் வேலையா இருக்கேன். எப்டியும் சீக்கிரம் வந்துடுவேன். நேரம் ஆச்சு.. நீங்க எல்லாரும் சாப்பிட்டு தூங்குங்க...” என்று கூறி வைத்தான்.

ஏமாற்றத்துடன் மீனாட்சிக்கு தங்கையின் கவலை அதிகரித்தது. அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாமல் அந்த இடத்தில் நின்று அழுக ஆரம்பித்து விட்டாள்.

மீனாட்சி அழுவதை பார்த்ததும் ஆனந்திற்கு தாங்கி கொள்ளவே முடியவில்லை. தைரியமான பெண் இன்று இப்படி அழுவதை பார்த்ததும் அவனுக்கே ஏதோ போல ஆகிவிட்டது. அதுவும் தனக்கு பிடித்து பெண் இப்படி கண் கலங்கி நிற்பதை பார்த்ததும் அவனுக்கும் கஷ்டமாக இருந்தது.

“ஐயோ...!! அழுகாத மீனாட்சி... ரொம்ப கஷ்டமா இருக்கு..

கண்டிப்பா மலருக்கு ஒன்னும் ஆகிருக்காது... எப்டியும் கண்டுபிடிச்சுடலாம்... நீ அழுகாத...” என்று அவன் பதறி போய் பேசினான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அவளுக்கு அப்போது அவனிடம் உறவை போல அழுது ஆறுதல் தேட தான் மனம் ஏங்கியது. அவனது ஆறுதலான பேச்சு அவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது. இருந்தாலும் மலரை நினைத்து பார்க்கும் போது அழுகையை கட்டு படுத்த முடியவில்லை. அழுது கொண்டே தான் இருந்தாள்.

அதன் பின்னர் தான் ஆனந்த் யோசித்து செயல் பட ஆரம்பித்தான்.

“நீ அழுகாத... நான் நம்ம காலேஜ் ல அவ கூட படிக்கிற ஜனாக்கு பேசி பாக்குறேன். ஏதாது விவரம் கிடைக்கலாம்.”

என்று அவன் கூறவும், உடன் படிப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்தால் என்ன ஆவது என்று எண்ணி வேகமாக “இல்ல வேணாம்...” என்று மீனாட்சி கூறினாள்.

“நீ என்ன நினைச்சு இத வேணாம்ன்னு சொல்லுறன்னு எனக்கு தெரியும். அப்டிலாம் யார் கிட்டயும் மலர் காணோம் அப்டின்னு சொல்லிடமாட்டேன். விஷயத்த வேற மாதிரி பேசி அவன் கிட்ட மலர பத்தி விசாரிக்கிறேன். நீ பயப்புடாத...” என்று தைரியம் கூறினான்.

பின்னர் மலருடன் படிக்கும் அந்த ஜனாவிற்கு போன் செய்து விசாரித்தான். போனை ஷ்பீக்கரில் போட்டான்.

“என்ன ஜனா எப்டி இருக்க..? நான் ஆனந்த் பேசுறேன்.”

“ஹலோ சார்.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணுறீங்க...? எதுவும் முக்கியமான விசயமா..?”

“அது வந்து உங்க கூட படிக்கிற மலர யாரோ டிஸ்டர்ப் பண்றதா கேள்வி பட்டேன். அதான் விசாரிக்கலாம்ன்னு கால் பண்ணேன்...”

“சார் அப்டிலாம் இல்ல... நாங்க யாரும் அவ கிட்ட அப்டி நடந்து கிட்டது இல்ல... அது மட்டும் இல்ல அவ எப்போவும் அமைதியா தான் இருப்பா...

அவளுக்கு ப்ரெண்ட்ஸ் கூட அதிகம் கிடையாது. நாங்க யாரும் அப்டி கிடையாது. வெளில யாராது அவ கிட்ட வம்பு பண்ணிருக்கலாம்... அத பத்தி எனக்கு தெரியாது.”

“சரி சரி... நான் பாத்துக்குறேன்..”

“சார்... அப்பறம் இன்னொன்னு...”

“என்ன...?”

“அந்த பொண்ண நான் வெளில ரெண்டு மூணு முறை ஒரு பையனோட பார்த்துருக்கேன்... நம்ம குமரன் கூட ஒரு முறை பார்த்ததா சொல்லிருக்கான்.”

என்று அந்த ஜனா சொன்னவுடன் இருவருக்கும் அதிர்ச்சி. அதை நம்புவதா என்று புரியாமல் குழம்பினர்.

“நீ உண்மைய தான் சொல்லுறியா...”

“ஆமாம் சார்... நிஜமா தான். ஒரு வேளை அவ அந்த பையன காதலிக்கிறாளோ என்னவோ...? தெரியல...”

மீனாட்சிக்கு உடனே கோபமாக வந்தது. தன் தங்கையை பற்றி ஒருவர் தப்பாக கூறியதை ஏற்க முடியவில்லை. அது ஆனந்த் பக்கம் தான் கோபத்தை ஏற்படுத்தியது.

“சரி சரி. நான் அப்பறம் பேசுறேன்.” என்று கூறிவிட்டு கால் கட் செய்தான். மீனாட்சியை திரும்பி பார்த்தால் அங்கு அவள் கோபமாக முறைத்து கொண்டு நின்று இருந்தாள்.

அவனுக்கு அவளிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை. “மலரை பற்றி அவன் கூறியது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியல, ஆனால் அதனால் எனக்கு தான் ஆப்பு. நல்ல பேசிட்டு இருந்தா... இப்போ நல்லா முறைச்சுட்டு இருக்கா... தேவை தான் எனக்கு இது.” என்று மனதில் எண்ணி கொண்டு ஒன்றும் பேசாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான்.

“நீங்க மலர கண்டுபிடிக்க உதவி பண்ணுற மாதிரி தெரியல சார்... என்னோட தங்கச்சி பேர கெடுக்க ஏதோ வேலை பண்ணுற மாதிரி இருக்கு..” என்று கூறி விட்டு சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

உடனே அவனும் வேகமாக பின்னாடி சென்றான். அவளை சமாதான படுத்த முயற்சித்தான்.

“நான் அப்டி எதுவும் பண்ணலையே மீனாட்சி. அவுங்க சொல்றததுக்காக என் கூட சண்டை போடணும்னு இப்போ எந்த அவசியமும் இல்ல. நாம மலர கண்டு பிடிக்க வேண்டியது தான அவசியம்.” என்று தாழ்ந்த குரலில் சொல்லவும் மீனாட்சிக்கு சற்று கோபம் போனது.

மனதில் உள்ளுக்குள் தங்கை நலமாக தான் இருப்பாள்... எங்காவது சென்று விட்டு வீட்டுக்கு வர நேரமாகி கொண்டு இருக்கும், எப்படியும் வீட்டுக்கு தான் வந்து கொண்டு இருப்பாள் என்று எண்ணி தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டிருந்தாள்.

ஆனந்த் அவளது கோபம் மாறியதை கவனித்து சந்தோசமடைந்தான்.

“நாம ரெண்டு பேரும் சேர்ந்தே தேட போவோமா மீனாட்சி..?” என்று ஆனந்த் கேக்க,

அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள்... அவன் ஒன்றும் அறியாதது போல சாதரணமாக முகத்தை வைத்து கொண்டான். அவனை தன்னிடம் நெருங்க விட கூடாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, “இல்ல இனி நான் தேடிக்குறேன். நீங்க போங்க சார்..” என்று கூறினாள்.

“இனி தான் நான் பாதுகாப்புக்கு கூட வர வேண்டியது இருக்கும். ஏற்கனவே டைம் ஒன்பது க்கு மேல ஆச்சு... பொம்பள பிள்ளைய தனியா விட கூடாது. விடவும் மாட்டேன் நான்.

உனக்கு நான் கூட வர்றது தப்பா தெரியும்னா சொல்லு... நான் அப்ப மாதிரி ஒரு அஞ்சு அடி பின்னாடி தள்ளியே வர்றேன். ஆனா நான் உன் கூட தான் வருவேன்.

அது மட்டுமில்லாம உன்னோட அண்ணன் என்னை உனக்கு துணையா பாதுகாப்பா இருக்க சொல்லி தான் அனுப்பியே இருக்கான்..” என்று ஆனந்த் கூறினான்.

அதற்க்கு மேல் அவனை அனுப்ப முடியாது என்று தோன்றியது. அவன் உடன் வருவது அவளுக்கு ஒரு பாதுகாப்பையும் நிம்மதியையும் தந்தது. அதனாலும் ஒப்பு கொண்டாள். அதை வெளி காட்டாமல்,

“என்னம்மோ பண்ணுங்க.. ஆனா என் கூட மட்டும் வராதீங்க..” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

பின்னாலே சென்றான் ஆனந்த்.

“அப்டியே கூட வந்தாலும் என்ன வந்தது... இந்த ஊருக்கே நம்ம விஷயம் தெரியும்.. ஆனாலும் இவ மட்டும் ஏத்துக்க மாட்டா..” என்று சலித்து கொண்டே முணுமுணுத்தான்.

சட்டென்று திரும்பி, “என்ன சொன்னீங்க..?” என்று அவள் கேக்க,

“இல்ல ஒன்னும் இல்ல.. சும்மா பேசிட்டு வந்தேன்..” என்று சமாளித்து வைத்தான்.

அடுத்து மலர் உடன் படிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தால் மீனாட்சி. அங்கும் மலரை பற்றி எந்த சரியான தகவலும் தெரியவில்லை.

சோகத்தோடு திரும்பி வந்தாள் மீனாட்சி.

“ஒருவேளை மலர் வீட்டுக்கு எதுவும் வந்துட்டாளான்னு தம்பிக்கு கால் பண்ணி கேளேன் மீனாட்சி..” என்று ஆனந்த் கூறினான்.

அவளும் உடனே தம்பிக்கு கால் பண்ணி கேட்டாள். ஆனால் மலர் இன்னும் வர வில்லை என்று கூறவும் ஒன்றும் புரியவில்லை.

மலர் இப்படி பொறுப்பு இல்லாம நம்மள தவிக்க விட்டுடாலே...

என்று கோபத்தில் “எங்கடி போன..?!!” கலகலத்த குரலில் புலம்பினாள்.

அப்போது ஆனந்திற்கு கால் வந்தது. எடுத்து பார்த்தான். சுந்தரம் என்று வரவும் அட்டென்ட் செய்து பேசினான்.

“என்னடா எதுவும் தெரிஞ்சதா..?” என்று கேட்டான் ஆனந்த்.

“உடனே பஸ் ஸ்டாண்ட் வர்றீங்களா...” என்று அவன் சொல்லவும்,

“என்னடா மலர கண்டு பிடிச்சுடியா..?” என்று ஆனந்த் கூறவும், மீனாட்சி சந்தோசமடைந்து வேகமாக எங்க இருக்கா என்று கேட்டாள்.

பொறு என்று கையசைத்து விட்டு

“மலர் அங்க தான் இருக்காளா..?” என்று மறுபடியும் கேட்டான்.

“நீ வா... மலர கண்டு பிடிசாச்சு...” என்று கூறினான்.

“இதோ வர்றோம் நாங்க அங்க...” என்று கூறிவிட்டு இருவரும் சந்தோசமாக அங்கு சென்றனர்.

அங்கு சென்றால் சுந்தரம் மட்டும் இருந்தான்.

குழப்பமாகினர் இருவரும்.

“எங்கடா மலர்...??!!! நீ மட்டும் நிக்கிற...??! என்ன...?” என்று சந்தேகத்தை கேள்வியாய் கேட்டான்.

“மலர கண்டுபிடிச்சாச்சு...” என்று கூறவும்

மீனாட்சிக்கு எரிச்சலாக வந்தது. உஷ்... கொட்டிவிட்டு திரும்பி கொண்டாள்.

“இத தானடா போன் ளையும் சொன்ன...!! அவ எங்கடா..?” என்று மறுபடியும் கேட்டான்.

அப்போது அவர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு பஸ் வந்து நின்றது. முவரும் விலகி நிற்க, அதில் இருந்து ஆட்கள் இறங்கினர்.

அப்போது சுந்தரம் வண்டியை நோக்கி கையை காட்டி “மலர்...” என்று கூறினான்.

அங்கு செல்வம் அண்ணன் மலரை கூட்டி கொண்டு வந்தார். அவள் பட்டு சேலை அணிந்தவாறு தலை தொங்க போட்டவாறே நடந்து வந்து கொண்டிருந்தாள்.



தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபிரசாத் டியர்
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமை. இடைவிடாத இன்னல்கள் ஏன் இத்தனை இடைவெளி விட்டு வருகின்றது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top