• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 4

மலரை செல்வம் அண்ணன் கூட்டி கொண்டு வந்தார். அதை பார்த்த பின்னரே மீனாட்சிக்கு நிம்மதியாக இருந்தது. வேகமாக மலரிடம் ஓடி சென்று கட்டி கொண்டு அழுதாள் மீனாட்சி. பின்பு செல்வம் அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு மலரை அவள் கூட்டி கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வேகமாக அவள் செயல் பட்டாள். சுந்தரம், ஆனந்த், செல்வம் அண்ணன் அனைவருக்கும் புரியவில்லை. இருந்தாலும் ஒன்றும் கூறாமல் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.

மலரை இழுத்து கொண்டு மீனாட்சி வேகமாக சென்று ஆட்டோ ஒன்றில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டாள். அவள் சென்ற பின் சுந்தரம் செல்வம் அண்ணனிடம் நன்றி சொன்னான்.

“ரொம்ப நன்றி அண்ணே... நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணிருக்கீங்க.. நாங்க மறக்கவே மாட்டோம். நாங்க ரொம்ப பயந்து போயிருந்தோம். ஆனா நீங்க நல்ல நேரத்துல வந்து உதவி பண்ணிட்டீங்க... ரொம்ப நன்றி அண்ணே..” என்றான்.

“இதுக்கு போய் எதுக்கு தம்பி நன்றிலாம் சொல்லிட்டு... உங்க அப்பா எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னாடி இது எல்லாம் ஒண்ணுமே இல்ல...

நீங்க மொதல்ல போய் தங்கச்சிய பாருங்க.. பொண்ணு ரொம்ப பயந்த மாதிரி இருக்கு.. எதுக்குன்னு தெரியல, அழுதுட்டே தான் வந்தது பஸ் ல வரும்போது கூட...

ஏற்கனவே நேரம் ஆச்சு... நான் வீட்டுக்கு போறேன் தம்பி..” என்று செல்வம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

உடனே சுந்தரம் அவரிடம், “அண்ணே..! ஒரு நிமிஷம்.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் அண்ணே... உங்களுக்கே தெரியும் இந்த பொம்பள பிள்ளை விஷயம். வெளில தெரிஞ்சா தப்பா பேசுவாங்க.. அதுக்கு தான் சொல்றேன்.” என்று கூறவும்

“எனக்கும் தெரியும் தம்பி. நான் வேற யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க நிம்மதியா போங்க..”

அங்கிருந்து செல்வம் அண்ணன் கிளம்பவும் அதுவரை பேசாமல் அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆனந்த் அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல்,

“என்ன தான்டா நடக்குது...??!! மலர் எங்க போனா..? செல்வம் அண்ணே எப்டி கூட்டிட்டு வர்றாரு..? எனக்கு ஒண்ணுமே புரியல... என்னன்னு விளக்கமா சொல்லு. மண்டையே வெடிக்குது.” என்று சந்தேகத்தை கேட்டான்.

“இல்ல நம்ம செல்வம் அண்ணா ஏதோ வேலையா தஞ்சாவூர் மெயின் போயிருக்காரு. போயிட்டு திரும்பி வரும் போது பஸ் ஸ்டாண்ட் ல மலர் தனியா உக்காந்துருக்கா..

என்ன, ஏதுன்னு விசாரிச்சுருக்காறு, அதுக்கும் எந்த பதிலும் சொல்லல போல. சரி வா வீட்டுக்கு போகலாம்ன்னு கூட்டிட்டு வந்துருக்காரு..

மற்ற படி என்ன ஏதுன்னு இன்னும் தெரியாது. போய் கேக்கணும்.” என்று சுந்தரமும் யோசித்து கொண்டே சொல்லினான்.

“ஆமாம்... எதுக்கு மலர் பட்டு சேலை எல்லாம் கட்டிருக்கு..? முகத்தை பார்த்தா ரொம்ப நேரம் அழுத மாதிரி தெரியுது.”

“ஆமாம்டா எனக்கும் அது தான் தெரியல..”

யோசித்து கொண்டே ஆனந்த், “ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே..??!!” என்று தயங்கி கொண்டே கேட்டான்.

சுந்தரம் “என்ன..? சொல்லு நான் தப்பா நினைக்க மாட்டேன்...” என்று அவன் அமைதியாகவே அதே நேரத்தில் அவன் என்ன சொல்ல போகிறானோ..? என்று பயந்து கொண்டே கேட்டான்.

“இல்ல இன்னைக்கு மலர் கூட படிக்கிற ஜனா கிட்ட பேசினேன். ரெண்டு மூணு முறை அவன் மலர ஒரு பையன் கூட வெளில பார்த்ததா சொன்னான்.

அதான் ஒருவேள அவ யாரையாது காதலிச்சு, அவன கல்யாணம் பண்ண எதுவும் போயருப்பாலோ..?

எனக்கு அப்டி தோணுது...” என்று ஆனந்த் கூறினான்.

சுந்தரம் வேகமாக, “இல்லடா தங்கச்சி அப்டி பட்டவ இல்ல.. கண்டிப்பா வேற ஏதாது நடந்துருக்கணும்.” என்று ஏதோ போல் சொன்னான்.

“மலர் எங்க போனான்னு மீனாட்சிக்கு தெரியுமா..?”

என்று ஆனந்த் மறுபடியும் கேள்வி கேக்க, எரிச்சலாய் பார்த்தான் சுந்தரம்.

“இல்ல.... அவ எந்த கேள்வியும் கேக்காம மலர கூட்டிட்டு வேகமா போய்ட்டா... அதான் அவளுக்கு எங்க போனான்னு தெரிஞ்சுருக்குமோன்னு கேட்டேன். இதுக்கு போய் முறைக்கிற..?” என்று சலித்து கொண்டான்.

“டேய்..! அவ கூட நீயும் தான் இருந்த...??! அப்பறம் எப்டி, அவளுக்கு தெரிஞ்சு கிட்டே அவ மலர காணோம்னு அழுவாளா..? முட்டாள் தனமா கேள்வி கேக்காத...

நான் கிளம்புறேன். நீயும் கிளம்பு. லேட் ஆகிடுச்சு, நீ போய்ட்டு வா, வீட்டுல தேட போறாங்க...” என்று சுந்தரம் ஆனந்தை அனுப்ப முயற்சித்தான்.

“ஏண்டா..?!! என்ன அணுப்புறதுல குறியா இருக்க... நான் தேடுற வரைக்கும் வேணும், கிடைச்சதுக்கு அப்பறம் வேணாம்... போடா...

என்ன விஷயம்ன்னு என்கிட்டயே மறைக்கிறயா...

போடா...! போய் தங்கச்சிய பாரு... நான் உங்க குடும்ப விஷயத்துல தலையிடல....

சரியா, போதுமா...?! நான் கிளம்புறேன். ” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

சுந்தரம் அவனை சமாதான படுத்த எதுவும் முயற்சிக்க வில்லை. மீனாட்சிக்கு பாதுகாப்பாக உடன் சென்றதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

அதை எல்லாம் யோசிக்கும் மன நிலையில் அவன் இல்லை அப்போது. தங்கச்சி பற்றிய கவலை தான் உள்ளுக்குள் இருந்தது.

அங்கிருந்து நேராக வீட்டிற்கு சென்றான். அப்போது தான் மீனாட்சியும் மலரும் கூட ஆட்டோவில் வந்து இறங்கினர். அவர்களை பார்த்ததும் அழகன் தான் சந்தோஷ மடைந்தான்.

ஆட்டோவில் இருந்து இறங்கியதும் நேராக மலர் உள்ளே சென்றாள். அவளிடம் அழகன் வந்து பேசுவதை கூட கவனிக்காமல் பிரம்மை பிடித்தது போலவே நடந்து போனாள்.

சுந்தரமும் பின்னாலே சென்றான். மீனாட்சி உள்ளே வந்ததும்,

“ஏய்...! மலர்...” என்று அழைத்தாள்.

மலரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்.

மீனாட்சி மலரை அவள் புறம் இழுத்து திரும்ப செய்தாள். அவள் பொம்மை போல நடந்து கொண்டாள். எதிர் பார்க்காத நேரத்தில் மீனாட்சி சட்டென்று மலரை கன்னத்தில் ஓங்கி அடித்தாள்.

சுந்தரம், அழகன் இருவரும் அதிர்ந்தனர். அதற்கு மாறாக மலர் அப்போது தான் சுயநினைவுக்கே வந்தது போல, மீனாட்சியை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தாள். விடாமல் அழுது கொண்டே இருந்தாள்.

பதறி கொண்டு என்ன நடந்தது என்று அனைவரும் ஒருபுறம் கேக்க, மீனாட்சி முதுகில் தடவி கொடுத்து கொண்டே சமாதான படுத்த முயற்சித்தாள். ஆனால் மலரின் அழுகையும் குறைய வில்லை, அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மீனாட்சிக்கு கோபம் வந்தது. மலரின் தோள்களை குலுக்கி,

“ஏன் அழுகுற....? என்ன நடந்தது...? எங்க போன...?!! சொல்லிட்டு அழு...” என்று சத்தமாக கேட்டாள்.

சுந்தரம் அழகனை பார்த்து, “ போய் தண்ணி எடுத்துட்டு வந்து அக்காக்கு கொடு...” என்று கூறிவிட்டு அவர்களிடம் சென்று, “மீனாட்சி, மலர் கொஞ்சம் அமைதி ஆகட்டும். அப்பறம் கேளு இதெல்லாம்...” என்று கூறி மலரை கை பிடித்து கூட்டி சென்று ஷேரில் அமர செய்தான்.

அழகன் வந்து தண்ணீர் கொடுக்கவும், அதை குடிக்க ஆரம்பித்தாள். சிறிது அழுகை குறையவும், கண்களை மூடி தன்னை தானே ஆசுவாசபடுத்தி கொண்டு பேசினாள்.

“அக்கா... நான் ப்ரெண்ட் கல்யாணத்துக்காக தஞ்சாவூர் போனேன்.”

“சரி... அத ஏன் முன்னாடியே சொல்லல என்கிட்ட...??”

“சொன்னா நீ என்னை தனியா அனுப்புவியோ என்னம்மோன்னு தான் சொல்லல...”

“சரி அப்போ சொல்லல... அதுக்கு அடுத்தாது சொல்லிருக்கலாம்ல...? ஏன் சொல்லல...?” என்று மீனாட்சி கேக்கவும் மலர் பதிலே சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“நான் உன்கிட்ட அக்கா மாதிரியா இருந்துருக்கேன்... ஒரு ப்ரெண்ட் மாதிரி தான இருக்கேன்...??! அப்டி இருந்தும் என்கிட்டே சொல்ல என்ன தயக்கம்..? இல்ல பயமா...?!!” என்று வருத்த பட்டு கேட்டால் மீனாட்சி.

“சாரி அக்கா...”

“சரி. அப்டி எந்த ப்ரெண்ட் க்கு கல்யாணம்...?”

“அது.... ராஜி க்கு தான் கல்யாணம். அந்த பொண்ணு ஒரு பையன லவ் பண்ணா... அவன் கூட ஓடி போய் கல்யாணம் பண்ண தான் என்ன கூப்பிட்டா. அதான் சொன்னா நீ என்னை அனுப்ப மாட்டியோன்னு சொல்லாமல் போனேன்..” என்று தலை தொங்க போட்டவாறே மலர் சொன்னாள்.

சுந்தரம், “சரி கல்யாணம் எப்போ நடந்தது...?” என்று கேட்டான்.

“காலைல...” என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள்.

“அப்பறம் ஏன் அக்கா இவ்ளோ லேட்டா வர்ற..?” என்று அழகன் சரியாய் கேட்டான்.

பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“என்ன நடந்தது, ஏன் இவ்ளோ லேட் ன்னு கேட்டுட்டு இருக்கோம்...? அப்டியே உக்காந்துருக்க..? பதில் சொல்லு மலர்..”என்று எரிச்சலுடன் கேட்டால் மீனாட்சி.

அப்போதும் அவளிடம் பதில் இல்லை. “என்ன நாங்க கேள்வி கேக்க கேக்க, அதுக்கு மட்டும் நீ பதில் சொல்லுவியா...? நீயா என்ன நடந்ததுன்னு சொல்லமாட்டியா..?!!

நீ ஏன் இப்டி இருக்க...?? என்ன நடந்ததுன்னு சொல்லு...” என்று கேட்டு கொண்டே இருந்தாள் மீனாட்சி.

சுந்தரம், “சரி விடும்மா... நீ போய் ரெஸ்ட் எடு மலர்... நாளைக்கு காலேஜ் போகணும் ல... அப்பறமா எல்லாம் பேசிக்கலாம்.” என்று கூறவும் அவள் எழுந்தால் செல்வதற்கு.

மீனாட்சிக்கு அதிக கோபம் வந்து விட்டது. “என்னடி நினைச்சுட்டு இருக்கு... பேசிட்டு இருக்க என்னை பார்த்தா முட்டாளு மாதிரி இருக்கா... கேட்ட எதுவும் பதில் சொல்லாம அப்டியே போற...?” என்று மலரின் கையை இறுக பிடித்து கொண்டு கேட்டாள்.

“ராஜி தான் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமும் என்னை கூடவே இருன்னு சொல்லி கட்டாய படுத்துன்னா... அதான் கூட இருந்துட்டு வந்தேன்...” என்று சொல்லி மீனாட்சியின் கையில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு கிளம்பினாள்.

மறுபடியும் திரும்பி, “போன் ஒடைஞ்ச போச்சு.. அதான் கால் பண்ணி இன்பார்ம் பண்ண முடியல... என்னோட பணத்த யாரோ திருடிட்டு போயிட்டாங்க... அதான் எப்டி வர்றதுன்னு தெரியாமா யார் கிட்டயும் உதவியும் கேக்க முடியாம தனியா பஸ் ஸ்டாண்ட் ல நின்னுட்டு இருந்தேன்.

அப்போ தான் செல்வம் அண்ணா வந்தாங்க. என்னை கூட்டிட்டு வந்தாங்க. அவ்ளோ தான் நடந்தது.” என்று வேகமாக பேசிவிட்டு மாடியில் இருக்கும் தனது ரூம்க்கு சென்றுவிட்டாள்.

அவள் கூறியதில் உண்மை இருக்குமோ அல்லது சமாளிக்க பொய் பேசுகிறாளோ என்று எண்ணம் அழகனுக்கும் மீனாட்சிக்கும் வந்தது. ஆனால் சுந்தரம் மலரை நம்பினான்.

“சரி விடுங்க... தங்கச்சி அதான் எல்லாம் சொல்லிட்டால... அப்பறம் என்ன...?

கிளம்பி ஊருக்கு வர காசு இல்லைன்னு தான் மலர் பயந்து போய், தனியா நிக்கிறத நினைச்சு அழுதுருப்பா...

மற்றபடி வேற எதுவும் இருக்காது. நீங்க நிம்மதியா போய் படுங்க..” என்று சுந்தரம் கூறவும்,

“இல்ல அண்ணா...!” என்று அழகன் இழுத்தான்.

“மனச போட்டு குழப்பிக்காத... அதெல்லாம் ஒன்னும் இல்ல... நான் கிளம்புறேன்...” என்றான் சுந்தரம்.

சமாளித்து விட்டு சுந்தரம் அங்கிருந்து கிளம்பினான். வண்டியில் போகும் போது அவனுக்கும் அழகன் சொல்லியது, ஆனந்த் சொல்லியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் நம் தங்கை நம்மிடம் பொய் சொல்ல என்ன அவசியம் இருக்கு, நாம தான் தேவை இல்லாம சந்தேக படுறோம் என்று எண்ணி தன்னையே திட்டி கொண்டான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
ஒரு வாரம் கடந்தது. அன்று வெள்ளி கிழமை. திங்கள் கிழமை வந்து லோன் பணத்தை பெற்று செல்லுமாறு தகவல் வந்தது சுந்தரத்திற்கு.

இந்த ஒரு வாரமும் அடிக்கொருமுறை அழகனுக்கு கால் செய்து மலரை பற்றி விசாரித்தான். தங்கையிடம் எந்த மாற்றமும் இல்லை, அவள் இயல்பாக தான் இருக்கிறாள் என்ற பின்பு தான் நிம்மதி அடைந்தான்.

மறுநாள் சுந்தரம் கடை வேலையாக ஒருவரை பார்க்க பக்கத்து ஊருக்கு சென்றான். அங்கு ஆனந்தை பார்த்தான். அப்போது தான் அன்று மீனாட்சிக்கு துணையாக சென்றதற்கு இன்றுவரை அவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று தோன்றியது.

“ஆனந்த்...” என்று அழைத்தான்.

அவன் பார்த்ததும் இயல்பாக பேசினான்.

“என்னடா எப்டி இருக்க..? சிவா எப்டி இருக்கான்...?” என்று விசாரித்தான்.

“எல்லாம் நல்ல இருக்கோம்டா... அப்பறம் ரொம்ப சாரி... அன்னைக்கு நீ ஹெல்ப் பண்ணதுக்கு நான் தாங்க்ஸ் கூட சொல்லல. சாரி டா...”

“இதுக்கு எல்லாம் எதுக்கு சாரி... உண்மைய சொல்லனும்னா நான் தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லணும். அன்னைக்கு அப்பறம் தான் மீனாட்சி என்கிட்டே கொஞ்சம் பேசுறா.. இல்லைனா திட்டிட்டே இருப்பா... இப்போ கொஞ்சம் முகத்த காட்டாம பேசுறா...

கூடிய சீக்கிரம் உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகிடுவேன்... ம்ம்ம்....” என்று சிரித்தான்.

உடனே சுந்தரம் நக்கலாக சிரித்தான்.

“என்ன நக்கல் சிரிப்பு..? நான் நிஜமா தான் சொல்லுறேன்...” என்றான் கோபமாக.

“டேய்...! ஆகுற கதைய சொல்லு... எப்போ பாரு நடக்காத ஒன்ன பேசிகிட்டு...” என்று அவன் சிரித்தான்.

“டேய்...! நீ என்னை ரொம்ப அசிங்க படுத்துற... நல்லதுக்கு இல்ல இதெல்லாம்...”

“நான் என்ன பொய்யா சொல்லுறேன்... இதே டையலாக் தான் ரெண்டு வருசமா சொல்லிட்டு இருக்க... நடந்துச்சா...?!! இல்லேல...”

“அப்போ எல்லாம் அவ பார்த்தாலே முகத்த திருப்பிகிட்டு போவா...

ஆனா இப்போ அப்டி இல்ல... நேத்து எல்லாம் என் கிட்ட அவளா வந்து பேசினா... நம்பவே முடியல. அது மட்டுமா, அவ என்னை பார்த்து சிரிக்க கூட செஞ்சா... “

“அதெல்லாம் தங்கச்சிய கண்டு பிடிக்க உதவினன்னு அப்டி நடந்துருப்பா... மறுபடியும் லவ் ன்னு போய் நின்னன்னு வச்சுக்கோ.. அவ்ளோ தான்.... சொல்லிட்டேன், அப்பறம் பார்த்துக்கோ...”என்று கூறி சுந்தரம் ஆனந்த் சொல்லியதை நினைத்து சிரித்தான்.

ஆனந்த் கோபமாக பார்த்தான். ஆனால் அவனது கோபம் வெகு நேரம் தாக்கு பிடிக்காது. முகத்தை திருப்பி கொண்டு நின்றான். அவனை மாற்ற சுந்தரம்,

“நீ எதுக்கு இங்க வந்த..?” என்று கேட்டான்.

“அதுவா... ஒரு முக்கியமான விஷயமா வந்தேன்... அது இப்போதைக்கு நடக்காது போல...” என்று சலிப்புடன் சொன்னான்.

அதை கேட்டவுடன் தான் சுந்தரத்திற்கு அன்று ஆனந்த் மீனாட்சி பற்றி ஏதோ சொல்ல வந்தான் என்பது நினைவுக்கு வந்தது.

“ஆனந்த்... அன்னைக்கு நீ ஏதோ மீனாட்சி பத்தி முக்கியமான விஷயம் பேசணும்ன்னு வந்த... ஆனா அத சொல்லவே இல்ல. நானும் மறந்துட்டேன். அப்டி என்ன விஷயம் சொல்ல வந்த...??” என்று கேட்டான்.

“ஓ.... அதுவா....”

“என்னடா... சொல்லு.”

“அது உங்க தாய் மாமா...” என்று கூற

“என்னது என்னோட தாய் மாமாவா...??” என்று அவன் சந்தேகமாய் கேட்க,

“அதான் அந்த பரமு(பரமசிவன்)...

ஓ... அது மீனாட்சியோட தாய் மாமா ல...?!!!

சாரி சாரி... அதுவும் அந்த ஆளுக்கு எல்லாம் என்ன மரியாத...

அவன் வந்தான் மீனாட்சிய பார்க்க. என்ன பேசிகிட்டாங்கன்னு தெரியாது. ரொம்ப நேரம் வழிஞ்சுட்டு குலைஞ்சு கிட்டு பேசிட்டு இருந்தான். எனக்கு அது தப்பா தான் தெரிஞ்சது.

எதுக்கு வந்தான்னு உன் கிட்ட கேக்கலாம்ன்னு வந்தேன்.” என்று சொன்னான்.

பரம சிவன் மீனாட்சியின் தாய் வள்ளிக்கு உடன் பிறந்த தம்பி. சிறு வயதில் இருந்தே வள்ளியின் அம்மா வடிவு, மீனாட்சி பரமுக்கு தான் என்று கூறி கொண்டே இருப்பார். வடிவு பணத்தாசை பிடித்தவர். அதனால் தான் வள்ளியின் விருப்பம் இன்றி அவளை இரண்டாம் திருமணம் செய்து வைத்தார் சொத்துக்காக.

வள்ளியின் மூலம் பணம் பல பெற்று சொத்துக்களை தன் மகனுக்கு சேர்த்து வைத்தார் வடிவு. ஆனால் அது ரொம்ப காலங்களுக்கு நீடிக்கவில்லை. வள்ளி இறந்த பின்பு பண வரவு குறைந்தது. அதன் பின் குழந்தைகளை சில வருடங்கள் அவர் தான் பணத்திற்காக வளர்த்தார். ஆனால் ஒரு இரண்டு வருடங்களிலே அவர்களது புட்டு உடைந்து விட குழந்தைகளை வடிவேலு தனது வீட்டிற்கே அழைத்து சென்று விட்டார்.

அப்போது தான் மீனாட்சிக்கு சுந்தரம், சிவாவை பற்றி தப்பு தப்பாக கூறி அங்கு இருந்து தனியாக பிரித்தார். இருந்தாலும் பண வரவு இல்லை என்று உடன் தனது மகனுக்கு மீனாட்சியை கட்டி வைத்தால் மொத்த சொத்தையும் அல்லது பாதி சொத்தையாது பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு வைத்து அப்படியே சொல்லி சொல்லி வளர்த்தார்.

ஆனால் மீனாட்சிக்கு பரமுவை கண்டாலே பிடிக்காது. அதுவும் மீனாட்சிக்கும் பரமுவுக்கும் பணிரெண்டு வயது இடைவெளி வேறு. பரமுவுக்கு மீனாட்சி என்றால் பிடிக்கும். அதுவும் மீனாட்சியை போன்ற அழகு தேவதை கட்டி கொள்ள யாருக்கு தான் பிடிக்காது என்று அனைவரிடமும் சொல்லி கொள்வான்.

சுந்தரம், “அது வந்துடா அவுங்க தாத்தாக்கு சாமி கும்பிடுறது வருது அடுத்து இரண்டு நாள்ல, அதுக்கு தான் வர சொல்லி கூப்பிட வந்துருப்பான்.”

“ஓ... அதுக்கு தானா... அப்போ எல்லாரும் போறாங்களா... அப்போ கொஞ்ச நாளுக்கு நான் மீனாட்சிய பார்க்க முடியாதா...??!! எத்தனை நாள் போறாங்க...” என்று சலிப்புடன் கேக்க,

“அது ஒரு மூணு நாள். ஆனா மீனாட்சி மட்டும் தான் போறா..

தம்பிக்கு எக்ஸாம் இருக்கு. அதான் அவன இங்க வர சொன்னேன். மீனாட்சி தான் அப்டிலாம் அனுப்ப மாட்டாளே... மலர கூட இருக்க சொல்லிட்டு அவ மட்டும் போறா போல. அழகன் சொன்னான்.”

என்று சுந்தரம் சொல்லியதும் ஆனந்த் முகம் மாறியது.

“அது எனக்கு என்னம்மோ சரின்னு படல. அவ அங்க ஷேவ்பா இருப்பாளா...??” என்று கேட்டான்.

“எனக்கும் அந்த சந்தேகம் வந்துச்சு. இருந்தாலும் அவுங்க பாட்டி கூட தான இருப்பாங்க. அதான் விட்டுட்டேன்.”

“எனக்கும் புரியுது. ஆனா மீனாட்சி ரொம்ப தைரியசாலி. அவ சமாளிச்சுப்பா.” என்றான்.

“அதுவும் சரி தான். மீனாட்சி கிட்ட யாரும் நெருங்க முடியாது.

சரி உன்னோட லோன் விஷயம் என்னாச்சு..?”

“நாளான்னு வந்துரும். போய் வாங்கணும் பேங்க் ல.”

“ஹ்ம்ம்.... சரி நான் கிளம்புறேன். அம்மாவ ஊருக்கு பஸ் ஏத்திவிட போகணும்.”

“சரி கிளம்பு. எனக்கும் கடைல வேலை இருக்கு.”

இருவரும் அவர்களது வேலை பார்க்க கிளம்பினர்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அன்று இரவு சிவாவிற்கு பேசினான் சுந்தரம். இங்கு நடக்கும் அனைத்தும் அவனுக்கும் தெரியும். தினந்தோறும் சுந்தரம் சிவாவிற்கு பேசுவான். அங்கு சிவாவிற்கு மெஸ் சாப்பாடு ஒத்து கொள்ளாமல் இரண்டு நாளாக உடம்பு சரி இல்லையென்று வேலைக்கு செல்லாமல் ரூமிலே முடங்கி கிடந்தான்.

முதலில் சுந்தரம் அவனை பார்க்க சென்னை வருவதாக கூறினான். ஆனால் லோன் பணம் வர போவதாக கூறி இருந்ததால் சிவா அண்ணனை வர வேண்டாம் என்று தடுத்து விட்டான். தான் இங்கு தனியாக சமாளித்து விடுவேன், ஆனால் அங்கு பணத்தை இப்போதே வாங்கினால் தான் கடனை அடைத்து ஓரளவுக்கு கஷ்டத்தை சமாளிக்க முடியும் என்று கூறினான்.

அவன் கூறியதை ஏற்று சுந்தரம் சென்னை செல்லாமல் இங்கேயே இருந்தான்.

பேங்கில் சொன்ன அந்த நாளில் லோன் வாங்க சென்றான் சுந்தரம். ஆனால் அவர்கள் எப்போதும் போல அன்னைக்கும் ஏமாற்றத்தை தந்தனர். அன்று அவர்களிடம் சண்டை போடாத குறையாக பேசிவிட்டான். நாளை மறுநாள் கண்டிப்பாக பணம் கிடைக்க பெற்றுவிடலாம் என்று மேனேஜர் உறுதி தந்த பின்னரே ஒப்பு கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

நேராக கடைக்கு செல்லாமல் சோர்வாக இருக்கிறது என்று வீட்டிற்கு சென்றான் சுந்தரம். எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணி அது நடக்காததை நினைத்து நினைத்து சோர்ந்து போய் இருந்தான். அதில் அவன் அயர்த்து தூங்கியே விட்டான்.

மாலை அவனது போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் சுந்தரம். அப்போது தான் தாம் வெகு நேரம் தூங்கிவிட்டோம் என்று தெரிந்தது அவனுக்கு. போனில் அழைப்பது யார் என்று பார்த்தான். அழகன் என்று வரவும், ‘தம்பி லோன் பணம் வந்து விட்டதா என்று கேக்க தான் போன் செய்துள்ளான்’ என்று நினைத்ததும் ‘அவனை எப்படி சமாளிக்க..’ என்று எண்ணி வருந்தினான்.

இருந்தாலும் பேசினான். ஆனால் அங்கு அவனோ வேறு ஒரு பிரச்சனை சொன்னான்.

“சொல்லுடா அழகா, எப்டி இருக்க...??”

“ஹ்ம்ம் நல்ல இருக்கேன் அண்ணா... நீங்க எப்டி இருக்கீங்க...??”

சிவா அண்ணாக்கு இப்போ உடம்புக்கு எப்டி இருக்கு...? பரவா இல்லையா...??” என்று அக்கறையோடு வினவினான்.

“ஹ்ம்ம்... இப்போ பரவா இல்லடா...

மீனாட்சிக்கு ஊருக்கு கிளம்பிட்டாளா...??” என்று கேட்டான்.

“ஆமாம் அண்ணா... அக்கா ஊருக்கு கிளம்பிடுச்சு. காலைலே கிளம்பிடுச்சு. நான் வேற ஒன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்.” என்று அவன் சொல்லவும்,

“என்ன... என்னாச்சு...??” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“இன்னைக்கு மலர் அக்கா ரூம விட்டு வெளிலே வரல. அது மட்டும் இல்ல இன்னைக்கு காலேஜ் க்கும் போகல போல..

ஏன் போகலன்னு கேட்டா ஏதோ ஏதோ சொல்லி சமாளிக்குது. எனக்கு இது சரின்னு படல. நேத்தே கூட உம்முன்னு தான் இருந்தது. நான் மீனாட்சி அக்கா ஊருக்கு போறது கஷ்டமா இருக்கு போலன்னு நினைச்சு விட்டுட்டேன். ஆனா இன்னைக்கு என்னன்னா இப்டி இருக்கு.

என்னனே புரியல..” என்று குழப்பத்துடனே சொன்னான்.

“இல்லடா மலர் ஒருவாரமா நல்லாதான இருந்தா... உண்மையிலே மீனாட்சி இல்லாம தனியா இருக்கோம்னு வருத்தத்துல அப்டி இருப்பாளா இருக்கும். நீ தேவை இல்லாம வருத்த படுற...” என்று சுந்தரம் சொல்ல,

“இல்ல அண்ணா... அக்கா எப்டி இருப்பான்னு எனக்கு தெரியாதா...? நான் சொன்னது போல உண்மையிலே அக்கா அன்னைக்கு பொய் தான் சொல்லிருப்பா...” என்றான் விடாமல்.

“இல்ல அழகா... அவ சொன்னது உண்மை தான். நீங்க சந்தேக பட்டது போல தான் நானும் அன்னைக்கு சந்தேக பட்டேன். இருந்தாலும் ஒரு சேர அவள எல்லாரும் சந்தேக பட்டு பேசினா அவ வேற மாதிரி பண்ணிட்டா...

அதுக்கு தான் நான் அப்டி பேசிட்டு வந்தேன். ஆனா நான் அடுத்த நாளே போய் அந்த ஹாஸ்டல் ல விசாரிச்சேன்.

மலர் சொன்னது உண்மை தான். அந்த பொண்ணு உண்மையாவே ஓடி போய் கல்யாணம் பண்ணிருக்கு. அவ கூட தங்கிருக்க பொண்ணும், நம்ம மலரும் தான் போய் கல்யாணத்துக்கு கூட போய் இருக்காங்க. அத பொன்னே சொன்ன பிறகு தான் நம்பினேன்.

கல்யாணம் பண்ண உடனே கிளம்பிடுச்சு போல அந்த பொண்ணு... அப்பறம் என்ன நடந்ததுன்னு அந்த பொண்ணுக்கு தெரியல போல...

அதான் நான் விட்டுட்டேன். ஆனாலும் அவ அன்னைக்கு எதுக்கு அழுதான்னு தான் தெரியல...??!! நீங்க எதுவும் அவ கிட்ட கேட்டு பாத்தீங்களா..?!!” என்று சுந்தரம் கேக்கவும்,

“மீனாட்சி அக்கா தான் கேட்டுச்சு. ஆனா அப்போவும் அக்கா சரியா பதில் சொல்லல. சரி விடுங்க. அதான் கல்யாணத்துக்கு தான போயிருக்கு... அப்போ ஓகே தான்...”

“ஹ்ம்ம்... அத தான் நானும் சொல்லுறேன். இனி அக்காவ சந்தேக படாத...”

“ஓகே அண்ணா... அப்பறம் லோன் வந்துருச்சா அண்ணா...?”

“இன்னும் இல்ல...”

“எப்போ தான் கொடுப்பாங்களோ...? இல்ல மறந்துட்டாங்களா...?” என்று அழகன் கடுப்புடன் கேட்டான்.

“இந்தா தர்றேன், அந்தா தர்றேன்னு நம்மள நல்லா அலைய தான் வைக்குறாங்க... என்னத்த சொல்ல...” என்று சலித்து கொண்டான்.

“விடு அண்ணா... சீக்கிரம் நம்ம பிரச்சனை எல்லாம் சரியாகிடும்...”

“நானும் நம்புறேன்... சரி அழகா நான் அப்பறம் பேசுறேன்...”

“சரிண்ணா...”



தொடரும்...
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
மலர் என்ன விஷயம் மறைக்கிறாள்
மீனாட்சி தனியாக ஊருக்கு போய் இருப்பது
சரியாக இல்லை
ஆனந்த் ஏதேனும் உதவி செய்வானா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top