• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 9

சுந்தரம் சொன்ன பிறகு கமலா அக்கா மீதான சந்தேகம் அதிகரித்தது ஆனந்துக்கும், விக்னேஷ்க்கும். அந்த நேரத்தில் அந்த கமலா அக்கா அவரது கணவருடன் வண்டியில் வந்து கொண்டிருந்தார். அவர்களை பார்க்கவும் மூவரும் யோசித்தனர்.

“சுந்தரம் நம்ம இப்போவே போய் கேட்போம்..” என்று விக்னேஷ் சொன்னான்.

“இப்போவே போகவா...?!!” என்று சுந்தரம் இழுத்தான்.

“அது தான் சரி... சந்தேகம்ன்னு வந்துட்டா அத கேட்டு தெரிஞ்சுக்குறது நல்லது. அதுவும் இப்போவே போறது தான் நல்லது... நம்ம பணத்த தொலைச்சு ஒரு நாள் ஆக போகுது. அவுங்க பணத்த வேற எங்கையாது மாத்திடும் முன்னாடி நாம கண்டு பிடிக்கணும். அதுக்கு தான் இப்போவே போவோம்ன்னு சொன்னேன்...” என்று விக்னேஷ் சொல்லி சம்மதிக்க வைத்தான்.

அவர்கள் கமலா அக்கா வீட்டை அடைய அதே நேரம் அவர்களும் வந்து இறங்க சரியாக இருந்தது. மூவரும் ஒன்றாக வருவதை பார்க்கவும் கமலா அக்காவிற்கும் அவரது கணவர் முருகனுக்கும் குழப்பம். கமலா அக்கா வண்டியை விட்டு இறங்கினார்.

“என்ன சுந்தரம் எங்க வீட்டுக்கு வந்துருக்க...?!!” என்று முருகன் கேட்டார்.

“அது வந்து அண்ணே... என்னோட பணம் தொலைஞ்சு போச்சுல அதை பற்றி உங்களுக்கு ஏதாது தெரியுமான்னு விசாரிக்க தான் வந்தேன்..” என்று சுந்தரம் இழுத்தான்.

கமலாவும் முருகனும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்தனர்.

“எங்க கிட்ட விசாரிக்க என்ன இருக்குன்னு தெரியல., இருந்தாலும் சரி வா தம்பி வீட்டுக்குள்ள போய் பேசலாம். கூட வந்துருக்க ரெண்டு பேரும் யாரு..?” என்று கேட்டு கொண்டே முருகன் வண்டியை நிறுத்திவிட்டு வந்தார். கமலாவும் சென்று கதவை திறந்தார்.

“இவங்க ரெண்டு பேரும் என்னோட ப்ரெண்ட்ஸ்..” ஆனந்தை சுட்டி காட்டி, “இவன் ஆனந்த்., காலேஜ் ல ப்ரப்பஷரா வேலை பார்க்குறான். இந்த ஊர் தான்.” என்று கூறினான்.

முருகன் விக்னேஷ் பக்கம் திரும்ப உடனே, “இவன் விக்னேஷ், என்னோட காலேஜ் ப்ரெண்ட். இப்போ போலீசா இருக்கான். சென்னைல இருக்கான்.” என்று கூறவும் சற்று முகம் மாறியது முருகனுக்கும் கமலாக்கும். அதை கவனித்து விட்டான் விக்னேஷ்.

“சரி வாங்க எல்லாரும் வீட்டுக்குள்ள...” என்று கூறி கொண்டே உள்ளே அழைத்து சென்றார்.

வீடு அவர்கள் எதிர்பார்த்தை விட சுத்தமாக கடை போன்று அடுக்கி வைத்து அழகாக இருந்தது.

ஆனந்த் ஆச்சர்யமாக, “என்ன அக்கா இவ்ளோ நீட்டா வச்சுருக்கீங்க வீட்ட... நான் இது வரைக்கும் யாரோட வீட்டையும் இப்படி பார்த்தது இல்ல.” என்று சொல்லவும்., கமலா அக்காவிற்கு பெருமை தாங்கவில்லை.

முருகன் தான், “அது அவளுக்கு எப்போவும் உண்டான பழக்கம். எடுத்த பொருள் எடுத்த இடத்துக்கு போகலைனா நம்மள போட்டு வறுத்து எடுத்துருவா..” என்று சலித்து கொண்டே சொன்னார்.

என்னை யாராது பெருமையா சொன்னா உங்களுக்கு பிடிக்காதே என்று கமலா தான் முகத்தை சிலிப்பி கொண்டார்.

ஆனால் ஆனந்த் சந்தேகத்தை தெரிந்து கொள்ளவே அப்படி கேட்டான் என்பது அங்கு தான் தெரியாது.

சுந்தரம் அடுத்து பேச ஆரம்பித்தான்.

“நேற்று என்னோட பணம் காணாம போச்சு இல்லையா அதுக்கு தான் விசாரிச்சுட்டு போலாம்ன்னு வந்தேன். அதுவும் இங்க தெருவுல வச்சு காணாம போனதால தான் விசாரிக்க வந்தோம்.” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கமலா தான்

“அது எங்க வீட்டுக்கு வந்து விசாரிக்கிறீங்க..? ஏன்.. எங்க மேல எதுவும் சந்தேக படுறீங்களா..?” என்று கேட்டார்.

“இல்ல அக்கா அப்டிலாம் இல்ல. ஏற்கனவே பக்கத்து வீட்டுக் காரங்க கிட்ட விசாரிச்சோம். அது போல உங்க கிட்டயும் விசாரிக்க வந்தோம்.” என்று சுந்தரம் சொல்லவும்,

“எவ்ளோ பணம் தொலைஞ்சு போச்சு தம்பி..?” என்று முருகன் கேட்டார்.

“ஐந்து லட்சத்துக்கு கிட்ட காணாம போச்சு அண்ணே...”

“அவ்ளோ வா...” என்று கமலா கமலாவை வாய் பிளந்தார்.

முருகன் கமலாவை திரும்பி பார்த்து முறைத்தார். உடனே அமைதி ஆகிவிட்டார் கமலாவும்.

“அண்ணே நீங்க நேற்று தெருவுல வேற யாரையாது புதுசா பார்த்தீங்களா..? இல்ல யாராது என்னோட பைக்குல இருந்து பணத்த திருடுறத பார்த்தீங்களா..?” என்று கேட்டான்.

“இல்லையே தம்பி நாங்க யாரையுமே பார்க்கலையே.. அதுவும் நான் வந்ததுல இருந்து வீட்டுக்குள்ள தான் இருந்தேன். நான் வசூலுக்கு கிளம்பி வெளியே வந்தப்ப தான் நீ உட்கார்ந்து இருந்தத பார்த்தேன். எனக்கு வேற எதுவும் தெரியாது...” என்று கூறினார்.

“நீங்க நல்லா யோசிச்சு பாருங்க அண்ணே... அக்கா கிட்டயும் கேட்டு பாருங்க., யாரையாது பார்த்தாங்களான்னு...?” என்று சொல்லி கமலாவை பார்த்தான் சுந்தரம்.

கமலா, “நான் யாரையும் பார்க்கல தம்பி.. நானும் வெளிலையே வரல...” என்று சாதரணமாக சொன்னார்.

“இல்ல அக்கா நீங்க நேற்று எங்க வீட்டுக்கு வந்துட்டு போனீங்க இல்லையா.. அப்போ யாரையாது வண்டி கிட்ட பார்த்தீங்களா..?”

“இல்ல தம்பி.. பார்க்கல...” என்று கமலா சொல்லி கொண்டிருக்கும் போதே,

“நேற்று எப்போ நீ அங்க போன...?” என்று முருகன் கோபமாக கமலாவை பார்த்து கேட்டார்.

“அது நீங்க வர்றதுக்கு முன்னாடி போனேன்... சும்மா சுந்தரம் வந்துருக்கேன்னு பேச போனேன்...” என்று அவர் இழுத்து பேச,

“சும்மா போனியா... இல்ல அவுங்க வீட்டு விஷயத்துல முக்க நுழைக்க போனியா...?” என்று அவர் முறைத்து கொண்டே கேட்டார்.

“அப்டிலாம் ஒன்னும் இல்ல... என்ன சாப்பிடுற சுந்தரம்..? நான் ஏதாது உங்களுக்கு குடிக்க எடுத்துட்டு வர்றேன்... ” என்று தனது கணவரின் கேள்வியில் இருந்து தப்பிக்க எண்ணி வேகமாக பேசிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

சென்று மூன்று பேருக்கும் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.

“என்ன அக்கா உங்களுக்கு உடம்பு சரி இல்லையா..?” என்று சுந்தரம் கேட்டான்.

“அப்டிலாம் இல்ல தம்பி நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்.” என்று கூறவும்,

“இல்ல நேற்று நைட் அண்ணா வெளில வந்து என்கிட்டே பேசிட்டு இருக்கும் போது நீங்க வெளில வரவே இல்ல... அதான் உடம்பு சரி இல்லையோன்னு நினைச்சேன்... சாரி அக்கா...” என்று கூறி உண்மை என்ன என்று கேட்டான்.

கமலா எதுவும் பேசாமல் நின்றார். பெருமூச்செறிந்து விட்டு முருகன் தான் பேசினார்.

“இவள நான் தான் வீட்டுக்குள்ள இருக்கனும் வெளில வர கூடாதுன்னு சொல்லி வச்சுருந்தேன். அதான் வரல...”

மூவரும் புரியாமல் விழிக்க, அவரே பேசினார்.

“இவ நேத்து எதுக்கு உங்க வீட்டுக்கு வந்துருப்பான்னு எனக்கு தெரியும் தம்பி. உன்னோட தங்கச்சி இப்போ வீட்டுல இல்ல. அவ ஓடி போயிட்டாளான்னு கேட்டு விசாரிக்க தான வந்தா...? எனக்கு நல்லா தெரியும் இவள பத்தி. அதுக்கு தான் கண்டிப்பா வந்துருப்பா.

இந்த பொம்பளைங்களே அப்டி தான்... ஏதாது ஒரு விஷயம் கிடைச்சா போதும், அத ஊருக்கே தெரிவிச்சடனும்... என்ன எண்ணம்மோ...??” என்று அவர் சலித்து கொண்டார்.

“அப்டிலாம் இல்ல அண்ணே...” என்று சுந்தரம் சொல்ல,

“சும்மா சமாளிக்காத தம்பி.., எனக்கு தெரியாதா இவள பத்தி... இவளும் அந்த பக்கத்து வீட்டுகாரியும் சேர்ந்து செய்யுற வேலை எனக்கு தெரியாதா... அதான் நேற்று நான் இவள கொஞ்ச நாளுக்கு வெளிலையே வர கூடாது... யார் வீட்டு பிரச்சனைளையும் மூக்க நுழைக்க கூடாதுன்னு வீட்டுக்குள்ளயே இருக்க சொன்னேன். அதான் அவ வரல... நீ அத தப்பா நினைச்சுட்டியா..?” என்று கேட்டார்.

“அப்டிலாம் இல்ல அண்ணே... அக்கா எப்போவும் வெளில இருப்பாங்களே.. நேற்று வெளிலையே வரலையே, அதான் உடம்பு சரி இல்லையோன்னு நினைச்சு அப்டி கேட்டுட்டேன்.

மற்றபடி நான் தப்பா நினைக்கல, அவுங்க தான் தங்கச்சி தனியா இருக்கும் போது பக்கத்துல இருந்து பார்த்துக்குறாங்க.. அப்டி பட்டவங்களுக்கு உடம்பு சரி இல்லைனா விசாரிக்கனுமே ன்னு கேட்டுட்டேன். வேற ஒன்னும் இல்ல.

அத விடுங்க அண்ணே.. உங்களுக்கு வேற ஏதாது தெரிஞ்சா மட்டும் எனக்கு தகவல் சொல்லுங்க..

நாங்க கிளம்புறோம் அண்ணே.. கிளம்புறோம் அக்கா..” என்று கூறிவிட்டு மூவரும் வெளியே வந்தனர்.

நேராக சுந்தரம் வீட்டுக்குள் சென்றான். பின்னாடியே இருவரும் வந்தனர்.

உள்ளே நுழைந்து சோர்வாக அதே நேரம் ஏமாற்றத்தோடு சென்று சோபாவில் அமர்ந்தான். பின்னே வந்த விக்னேஷ், ஆனந்த் இருவரும் அவனிடம் சென்று “என்னடா வேகமா வந்துட்ட..?” என்று கேட்க,

அவன் பதிலே பேசாமல் யோசித்து கொண்டே அமர்ந்திருந்தான். அழகன் என்ன நடந்தது என்று கேட்டான். ஆனந்த் நடந்ததை விவரித்தான். அப்போ எதுவும் தெரியலையா அவங்க கிட்ட இருந்து..? என்று அழகன் ஏமாற்றமானான்.

விக்னேஷ், “அவுங்க பேசினது சந்தேகம் வர்ற மாதிரி இல்ல தான்... அதுக்காக உடனே சோர்ந்து போக கூடாது. நம்ம இன்னும் விசாரிக்கணும். அப்போ தான் தெரிஞ்சுக்க முடியும். அதுவும் நம்ம பணம் காணமா போய் ஒரு நாள் கூட ஆகல.. கண்டுபிடிச்சுடலாம்.” என்று சொல்லவும் சுந்தரம்,

“இல்ல எனக்கு அவுங்க மேல இன்னும் சந்தேகம் இருக்கு... அவுங்க பேசினது சந்தேகம் வர்ற மாதிரி இல்ல தான். இருந்தாலும் ஏதோ இடிக்குது... அத கண்டு பிடிக்கணும். அடுத்து நம்ம போய் தெரு முக்குல இருக்க கடைகாரர் கிட்ட விசாரிக்கணும்... இப்போ கடை மூடி இருக்கும், அதுனால சாயங்காலம் போய் விசாரிப்போம்.” என்று சுந்தரம் சொன்னான்.

சரி என்று மற்றவர்கள் சம்மதித்தனர்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“நாம இப்போ மலர் பத்தி விசாரிக்கணும்.” என்று அடுத்த செய்ய வேண்டியதை சொன்னான் சுந்தரம்.

ஆனந்த், “அவ தான் எதுவும் சொல்லாம லெட்டர் எழுதி வச்சுட்டு போயிட்டாளே.., அப்பறம் எப்டி..?” என்று கேட்டான்.

“அவ அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வந்த பின்னாடி தான் ஒரு மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சா... அதுக்கு முன்னாடி அவ கிட்ட எந்த மாற்றமும் இருந்தது இல்ல...

அதுனால தான் நான் உறுதியா அவ ஓடி போகலைன்னு நம்புறேன்..”

“சரி அப்போ அவ எங்க போய்ருப்பா..?” என்று ஆனந்த் மறுபடியும் சந்தேகத்தோடு கேட்க,

“அத தான் நாம கண்டு பிடிக்கணும்..” என்று தீர்க்கமாக சொன்னான்.

மூவரும் யோசித்து கொண்டு இருக்க... ஏதோ யோசனை வந்து போல சுந்தரம் ஆனந்திடம் திரும்பி, “டேய்... நீ அன்னைக்கு மலர் கூட படிக்குற பையன் யாரோ ஒருவன் பத்தி சொன்னேல... அவன் கூட மலர யார் கூடவோ பார்த்ததா சொன்னதா நீ என்கிட்டே சொன்ன... உனக்கு அது ஞாபகம் இருக்கா...?” என்று வினவினான்.

“ஹ்ம்ம்... அது ஜனா... எதுக்கு கேக்குற..?” என்று ஆனந்த் குழப்பத்துடன் கேட்டான்.

“அவனுக்கு கால் பண்ணு... அன்னைக்கு பார்த்த பையன் எப்டி இருந்தான் அப்டின்னு கேட்போம்.” என்று கூறவும் இன்னும் குழம்பினான் ஆனந்த்.

விக்னேஷ், “எதுக்குடா அத கேக்குற..?” என்று கேட்டான்.

“சொல்றேன். அழகா நீ கோமதி அக்காக்கு கால் பண்ணி கேளு... நேற்று மலர் கூட பார்த்த பையன் எப்டி இருந்தான்னு.. அதே போல நான் அந்த ஹாஸ்டல் ல இருக்க அந்த பொண்ணு கிட்ட விசாரிக்குறேன்.” என்று சொல்லி அழகனை முதலில் கால் செய்ய சொன்னான். போன் ஸ்பீக்கர் ஆன் செய்து பேச சொன்னான்.

அழகனும் கால் செய்தான். கோமதி போன் எடுத்தார்.

“சொல்லு அழகா... என்ன இப்போ கால் பண்ணிருக்க...?” என்று கேட்டார்.

“என்ன அக்கா நீங்க வேலைக்கு வரல.. அதான் கேக்க போன் பண்ணேன்.” என்று அழகன் சொல்லவும்,

“நீ ஸ்கூல்க்கு போயிருப்ப, உங்க அக்கா ஓடி போய்ட்டா... வீட்டுல யாரும் இருக்க மாட்டீங்க அதான் நான் வரல... ஏன் இப்போ நீ வீட்டுலையா இருக்க..?” என்று கேட்டார்.

“ஆமாம். அப்பறம் நான் இன்னொன்னு கேக்கணும் ன்னு நினைச்சேன்... நேத்து அக்காவ யார் கூட பார்த்தீங்க..?” என்று கேட்டான்.

“ஒரு ஆம்பள கூட பார்த்தேன். காலைல பஸ் ஸ்டாண்ட்ல வச்சு தான் பார்த்தேன். ஆனா அந்த ஆள நான் சைடு ல இருந்து தான் பார்த்தேன். அதுனால முகத்த பார்க்கல...”

உடனே சுந்தரம் “கலரா இருந்தானா..? இல்லையா..? குட்டையா, நெட்டையா..? கேளு..” என்று மெதுவாக சொன்னான்.

“சரி அக்கா... அவன் எப்டி இருந்தான்...? உயரமா..? இல்ல குட்டையா..? நிறமா இருந்தானா..? இல்ல கருப்பா இருந்தானா..? அவுங்க எந்த பஸ் ஏறிட்டு இருந்தாங்க அது கவனிச்சீங்களா..?” என்று வினவினான் அழகனும்.

“அந்த ஆளு நல்ல உயரமா இருந்தான். பார்க்க கலரா தான் தெரிஞ்சான். அவுங்க எந்த பஸ் ல ஏறினாங்கன்னு தெரியல... நான் அத பார்க்குரதுக்குல அவங்க அங்க இருந்து நகண்டு போய்ட்டாங்க... ஆனா அவுங்க திருச்சி பஸ் கிட்ட தான் நின்னுட்டு இருந்தாங்க...”

“சரி அக்கா..”

“எதுக்கு இப்போ இதெல்லாம் விசாரிக்குற..? எதுவும் விவரம் தெரிஞ்சுருக்கா..?” என்று கோமதி கேட்டார்.

“அப்டிலாம் ஒன்னும் இல்ல அக்கா... சும்மா தான் கேட்டேன். சரி நீங்க சீக்கிரம் வாங்க வேலைக்கு., நான் வச்சுடுறேன்..” என்று போனை கட் செய்தான்.

நிமிர்ந்து சுந்தரத்தை பார்த்தான் அழகன். அவன் ஆனந்திடம் திரும்பி, “நீ இப்போ கால் பண்ணு..” என்றான். ஆனந்தும் போன் பண்ணினான் ஜனாவிற்கு.

“ஹலோ ஜனா...?”

“எஸ் சார்... நீங்க என்ன இப்போ கால் பண்ணிருக்கீங்க..?”

“அது அன்னைக்கு நீ மலர ஒரு பையன் கூட பார்த்ததா சொன்னியே., அது உண்மை தானா... இல்ல பொய்யா..?” என்று ஆனந்த் கேட்டான்.

“அது உண்மை தான் சார். நான் எதுக்கு தேவை இல்லாம ஒரு பொண்ண பத்தி அப்டி தப்பா சொல்லனும்..? நிஜமாவே நான் பார்த்தேன் சார்...” என்று சொல்லவும்,

சுந்தரம் ஆனந்திடம், “எப்போ, எத்தனை தடவை, அப்பறம் எப்டி இருப்பான் கேளு..?” என்று மெதுவாக சொன்னான்.

“அப்போ எங்க வச்சு பார்த்த..? எப்போ பார்த்த..? எத்தன முறை பார்த்து இருக்க...? உனக்கு அவன தெரியுமா..? அவன் எப்டி இருப்பான்..?” என்று அவனும் கேள்வியை கேட்டான்.

ஜனா சற்று அமைதியாகினான்.

“என்ன சொல்லு..?” என்று மறுபடியும் கேட்டான்.

“அது நம்ம காலேஜ் ல இருந்து வரும் போது பார்த்தேன். அதுவும் ஒரு மூணு முறை பார்த்து இருப்பேன். அவன் கொஞ்சம் குட்டையா மலருக்கு ஈகுவல் ஹெய்ட் ல இருந்தான். அதுவும் கருப்பா இருந்தான். டிஷர்ட், ஜீன்ஸ், ஷூ எல்லாம் போட்டு இருந்தான்.”

“சரி சரி... அவன மறுபடியும் எங்கையாது பார்த்தா சொல்லு..”

“சரி சார்... அப்பறம் அந்த மலர் எங்க சார் போயிருக்கா..?” என்று ஜனா கேட்கவும்,

“அது எதுக்கு உனக்கு...? நான் வைக்குறேன் போன். எனக்கு வேலை இருக்கு..” என்று கூறி அவன் கட் செய்தான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அடுத்து சுந்தரம் அந்த ஹாஸ்டலில் இருக்கும் பொண்ணுக்கு கால் செய்தான்.

“ஹலோ... யாரு..?” என்று அந்த பெண் கேட்கிறாள்.

“நான் சுந்தரம். மலர் அண்ணன். உனக்கு கூட தெரியுமே.. அன்னைக்கு ஒரு நாள் ராஜி அந்த பொண்ணோட கல்யாணத்துக்கு நீயும் என்னோட தங்கச்சியும் ஒண்ணா போனீங்களே... அத பத்தி விசாரிக்க வந்தேன் நான்.. ஞாபகம் இருக்காம்மா..?” என்று சுந்தரம் கேட்கவும்,

“ஹம்ம்... சொல்லுங்க அண்ணா... என்ன இப்போ திடீருன்னு கூப்பிட்டு இருக்கீங்க..?” என்று சந்தேகமாக கேட்டாள் அந்த பெண்.

“அது வந்தும்மா... நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்... நான் இப்போ ஹாஸ்டல் க்கு வரலாமா..?” என்று அனுமதி கேட்டான்.

“இல்ல அண்ணா... நான் எங்க ஊருக்கு வந்துருக்கேன். அதுனால நீங்க ஹாஸ்டல் வர வேண்டாம். நான் அடுத்த வாரம் வர்றேன். அப்போ பேசலாமா..?” என்று கேட்கவும்,

“இல்லம்மா... நான் போன்லே கேக்குறேன். இப்போ நீ ப்ரீயா...? பேசலாமா..?” என்று கேட்கவும்,

“சரி அண்ணா.. நான் ப்ரீ தான் கேளுங்க..”

“தப்பா நினைக்காதம்மா நான் இப்டி கேக்குறேன்னு... அந்த ராஜி எப்டி பட்ட பொண்ணு..?”

“நல்ல பொண்ணு தான் அண்ணா.. லவ் பண்ணுறது தப்பு இல்லையே..”

“நான் அதுக்கு கேக்கலம்மா... அவங்க பேமிலி ல யாரும் இல்லையா..? அந்த பொண்ணு எந்த ஊரு..?”

“அவுங்க கேரளா அண்ணா... அவுங்க அம்மா இல்ல., சித்தி தான் இருக்காங்க... இந்த பொண்ணு அங்க இருந்தா தொந்தரவுன்னு இங்க கொண்டு வந்து படிக்க வைக்குறாங்க... லீவ்க்கு கூட அங்க போகாது. அங்க நல்லா பார்த்துக்க மாட்டாங்க போல.. அந்த பொண்ணு எல்லாரு கூடவும் அதிகமா பழகாது. நானும் மலரும் தான் ப்ரெண்ட்ஸ். நாங்க மட்டும் தான் கல்யாணத்துக்கு கூட போனோம்.”

“அந்த பொண்ணு லவ் பண்ண பையன் பற்றி தெரியுமா உனக்கு...?”

“அந்த பையன நான் ஒரு சில முறை தான் பார்த்து இருக்கேன். அந்த பையன ஒரு மூணு மாசமா தான் லவ் பண்ணிட்டு இருந்தது... அவங்க குடும்பம் ஏத்துக்காதுன்னு இப்போவே கல்யாணம் பண்ணிடுச்சு.”

“அந்த பையன் எப்டி... ஹைட்டா, கலரா இருப்பானா..?” என்று கேட்டான்.

“இல்ல அண்ணா... அந்த பையன் பார்க்க கருப்பா இருப்பான்.அதுவும் குட்டையா இருப்பான். எதுக்கு அண்ணா கேக்குறீங்க இதெல்லாம்..?”

“இல்ல நேற்று மலர ஒரு பையன் கூட பார்த்தேன். அதான் அது அந்த பையனோ அப்டின்னு விசாரிச்சேன். மலர் உனக்கும் ப்ரெண்ட் தானா..? அதான் கேட்டேன்..” என்று சொல்லவும்,

“எனக்கு மலர் பற்றி தெரியாது அண்ணா... மலர் ராஜி மூலமா தான் எனக்கு பழக்கம்...”

“சரிம்மா... ரொம்ப தாங்க்ஸ்ம்மா... நான் வைக்குறேன்.” என்று கூறி போன் கட் செய்தான்.

இப்போது சுந்தரம் அமைதியாக இருந்தான். குழப்பமாக இருந்தான்.

விக்னேஷ், “எதுக்கு இத்தனை பேருக்கு கால் பண்ண சொன்ன..? உன்னோட தங்கச்சி கூட நேற்று இருந்தது அந்த ராஜி லவர் ன்னு நினைச்சியா..? அத கன்பார்ம் பண்ணிக்க இப்போ இப்படி கேட்டியா..?” என்று சுந்தரத்தை புரிந்து சரியாக கேட்டான்.

“ஆமாம்... ஆனாலும் என்ன பண்ண... நான் நினைச்ச மாதிரி இல்ல... அந்த பையன் தான்னு தெரிஞ்சுருந்தா, அந்த ராஜிய தான் பார்க்க போய்ருப்பா கண்டுபிடிச்சுடலாம், அப்டின்னு நினைச்சேன். ஒரு நிமிஷம் எல்லாம் மாறி போய்டுச்சு. இப்போ எப்டி கண்டுபிடிக்குறது..?” என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே அவனது போன் ஒலித்தது.

அந்த பெண் மறுபடியும் கால் செய்தாள். மறுபடியும் எதற்கு கால் செய்கிறாள் என்று யோசித்து கொண்டே அட்டென்ட் செய்தான்.

“ஹலோ சொல்லும்மா..”

“அண்ணா நீங்க எதோ ஹிட்டா, கலரா யாரையோ சொன்னீங்க...”

“ஆமாம்... ஏன் கேக்குறம்மா..? உனக்கு யாரையாது அப்டி தெரியுமா..? மலர் கூட பார்த்து இருக்கியா..?” என்று சுந்தரம் கேட்கவும்,

“மலர் கூட பார்த்தது இல்ல... அன்னைக்கு கல்யாணத்துக்கு போனப்ப அங்க அந்த பையனுக்கு கூட வந்தவர் அப்டி தான் இருந்தார். அவர் லேட்டா தான் வந்தார். அப்பறம் கூடவே இருந்தார்...”

“அப்டியாம்மா... நல்லா யோசிச்சு தான் சொல்லுறியா...?”

“ஆமாம் அண்ணா.. அவர் தான் அப்டி இருந்தார்.”

“அவர் கூட மலர் பேசிட்டு இருந்தாளா..?”

“இல்ல அண்ணா... மலரும் நானும் தான் ஒண்ணா இருந்தோம். ஆனா கல்யாணம் முடிஞ்சு ஒரு மணி நேரத்துல நான் கிளம்புறேன்னு சொன்னேன். ஆனா மலர் கொஞ்சம் நேரம் ராஜி கூடவே இருந்துட்டு வர்றேன். நீங்க கிளம்புங்கன்னு சொல்லி அனுப்பிடுச்சு. ஆனாலும் அப்போவும் ராஜி கூட தான் இருந்தத பார்த்தேன். ஒரு வேலை நான் வந்த பின்னாடி அவுங்க கூட பேசுச்சான்னு எனக்கு தெரியல அண்ணா...” என்று சொன்ன பிறகு ஓரளுக்கு நடந்தது புரிந்தது.

“சரிம்மா... ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்மா...”

“பரவா இல்ல அண்ணா... நான் வச்சுடுறேன்.”

போன் பேசி வைத்த பிறகு சுந்தரம், “நான் நினைச்ச மாதிரி மலர் அந்த ராஜி தான் பார்க்க போய்ருக்கணும்... எப்டியும் அவள கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்துடலாம்...” என்று கூறி சந்தோஷ பட்டான்.

விக்னேஷ், “அது எப்டி நீ அது அந்த பையன் தான்னு இவ்ளோ உறுதியா நம்புற..?”

“தங்கச்சி நல்ல பொண்ணு.. அவ காதல் எதுவும் பண்ணிருக்க மாட்டா.. கண்டிப்பா அவ ப்ரெண்ட் பார்க்க தான் போய்ருக்கணும்.. வேற காரணம் என்னவா இருக்கும் வீட்ட விட்டு வெளில போக...?!!” என்று கூறி மற்றவர்களையும் யோசிக்க வைத்தான்.

அழகன் தான் குழம்பி போய் இருந்தான்.

“அண்ணா நீங்க சொல்லுறது சரியா தான் இருக்க மாதிரி இருக்கு... ஆனா அப்பறம் எதுக்கு அக்கா அப்படி லெட்டர் எழுதி வச்சுட்டு போகணும். ராஜி அக்காவ தான் பார்க்க போகுறதா இருந்தா, அதையே எழுதி வச்சுருக்கலாம் ல... ஏன் எழுதல..? எனக்கு குழப்பமாவும் சந்தேகமாவும் இருக்கு அண்ணா...” என்று சொல்லி சென்று ஷோபாவில் அமர்ந்தான்.

“ஆமாம் நீ சொல்லுறதும் சரி தான்.., ஆனா அதையே யோசிக்காம விட்டுட்டேன்...” என்று அவனும் சற்று யோசிக்க ஆரம்பித்தான்.

விக்னேஷ், “அப்டி என்ன எழுதிருந்தா லெட்டர்ல உன்னோட தங்கச்சி...?” என்று கேட்டான்.

அழகன், “பொறுங்க அண்ணா...” என்று கூறி விட்டு மாடி ஏறி சென்று மலர் எழுதிய கடிதத்தை எடுத்து வந்தான். அதை விக்னேஷிடம் கொடுத்தான். அவன் வாங்கி வாசித்து பார்த்தான்.

“இதுல மலர் யாரயும் காதலிக்குறத எழுதல தான்.., ஆனா தன்னோட வாழ்க்கை ன்னு சொல்லிருக்கா... அது கல்யாணம் இல்லைன்னா வேற ஜாப் அது போல இருக்கலாம் ல...?” என்று கேக்கவும்

ஆனந்த், “எழுதினவ வந்து சொன்னா தான் தெரியும், என்ன மீனிங்ல எழுதிருக்கான்னு.. அவ எழுதினது அவளுக்கு தான் வெளிச்சம்..” என்று சொல்லி சலித்து கொண்டான்.

உடனே விக்னேஷ், “இது உன்னோட தங்கச்சி எழுதினது தானா..?” என்று கேட்டான்.

சுந்தரம், “அப்டி தான் நினைக்கிறேன். எனக்கு மலரோட ஹேண்டு ரைட்டிங் தெரியாது. இது இங்க வீட்டுக்குள்ள தான் தம்பி ரூம்ல இருந்துச்சு. அப்போ மலர் தான எழுதிருக்கனும்...” என்று சொன்னான்.

விக்னேஷ் அழகனிடம் திரும்பி, “உனக்கு உங்க அக்கா எழுதினது தான் இதுன்னு தெரியுமா..?” என்று கேட்டான்.

“ஆமாம் அண்ணா.. இது அக்கா ஹேண்டு ரைட்டிங் தான்...” என்று உறுதியாக சொன்னான்.

“சரி. இருந்தாலும் ஒரு தடவை செக் பண்ணிடுவோம்... போய் உங்க எழுதின நோட் இருந்தா எடுத்துட்டு வா..”என்று பணித்தான்.

அவனும் சென்று எடுத்து வந்தான். விக்னேஷ் அதனை பார்த்து விட்டு யோசித்தான். “இத வெளில கொடுத்து செக் பண்ணிடுவோம ஒரு முறை..?” என்று சுந்தரத்திடம் கேட்டான்.

சந்தேகத்துடன் பார்த்தனர் மற்ற மூவரும். “இது தங்கச்சி எழுதினது இல்லையா..?” என்று பதற்றத்துடன் கேட்டான் சுந்தரம்.

“அத நாம உடனே சொல்லிட முடியாது. இருந்தாலும் ஒருமுறை செக் பண்ணிடுறது நல்லது தான்னு தோணுது... அதான்... நீ பயப்புடாத..” என்று கூறி அதை வாங்கி கொண்டு புறப்பட்டான்.

இங்கு அனைவரும் குழப்பத்துடன் இருந்தனர்.

அடுத்த ஒரு மணி நேரமும் அவர்களுக்கு பதட்டத்துடனே இருந்தது. விக்னேஷ் வரவுக்காக காத்திருந்தனர். விக்னேஷ் வந்த உடன் வேகமாக வந்து சுந்தரம், “என்ன சொன்னாங்க... அது தங்கச்சி எழுதினது தான..?” என்று கேட்டான் பதட்டத்துடன்.

விக்னேஷ் இல்லை என்பது போன்று தலை அசைத்தான்.

“என்ன தெளிவா சொல்லு..”

“நான் சந்தேக பட்டது சரி தான். அது மலர் எழுதல...” என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான்.

தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபிரசாத் டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi sis malarai yaarum kadathitangala .. nice investigation sis.intha kamala ka kitta than panam irukka waiting eagerly for next epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top