• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!

17.

பவதாரிணி உடல்தேறி வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, இத்தனை நாளாக அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் மொத்தமாக கிருஷ்ணாவின் மீது காட்டினார் பாஸ்கர் மாமா!

கிருஷ்ணாவை தனியே அழைத்துச் சென்று கத்தத் தொடங்கினார் மாமா!

"ஏன் இப்டி பண்ண?"

"நா என்ன பண்ணேன் பாஸ்கரா?" என்று குழப்பமாய்க் கேட்டார் கிருஷ்ணா!

"எதுக்கு நீ வாசுவுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச? அந்தப் பொண்ண இவந்தான் கெடுக்கலல்ல... அப்றம் என்ன ம...க்கு இப்டி ஒரு கல்யாணம்....."

"பாஸ்கரா... நா சொல்றதக் கொஞ்சம் நிதானமா கேளுடா...."

இவர்கள் தனியாகப் போய் பேசினாலும் பாஸ்கர் மாமாவின் குரல்தான் எட்டு ஊருக்கு கேட்கிறதே! வாசுவுக்குக் கேட்காதா? இல்லை யாமினிக்குதான் கேட்காதா? வாசு, யாமினி, பவதாரிணி, ருக்மணி மாமி, மற்றும் இளையவர்கள் ஐஷூ மற்றும் சௌமிக்கும் கூட இதெல்லாம் காதில் விழத்தான் செய்தது!

"நீ ஒண்ணும் சொல்ல வேணாம்..... இந்தக் கல்யாணத்தப் பண்ணி வெச்சி அவன் வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டுட்ட நீ...."

"என்னடா இப்டில்லாம் பேசற...."

"இந்தக் கல்யாணத்துக்கு என்ன அர்த்தம்..... அப்ப இவன ஒரு கெட்டுப் போன பொண்ணுதான் கட்டுவான்னு அர்த்தமா?"

இதைக் கேட்டு யாமினி மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்! ஐஷுவும் சௌமியும் அவளைத் தேற்ற முயல, யாமினி அவர்களிடம் வேண்டாம் என்பது போல தலையாட்டிவிட்டு தனியாகச் சென்று யார் கண்ணிலும் படாதவாறு அமர்ந்துவிட்டாள்! ஆனால் அவள் காதுகளில் இவர்கள் பேசுவது இன்னும் கேட்கத்தான் செய்தது!

"பாஸ்கரா...." அலறினார் கிருஷ்ணா!

"என்ன... நா சொல்றதில இருக்கற உண்மை சுடுதா?"

"பாஸ்கரா... நீ தேவையில்லாம பிரச்சனை பண்ற.... வேணாம்...."

"நா எவ்ளோ நல்ல நல்ல ஜாதகம்லாம் கொண்டு வந்தேன்..... எவ்ளோ பெரிய பெரிய வீட்டு பொண்ணுங்க சம்மந்தம் எல்லாம் எடுத்துண்டு வந்தேன்! அதுல எதையாவது வாசுவுக்கு பாத்திருக்கலாமே..... அப்பனும் புள்ளயும் அதல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இப்ப இந்தக் கேடு கெட்ட.... "

"பாஸ்கரா.... வார்த்தைய அளந்து பேசு...." கிருஷ்ணா கோபமாகச் சொன்னார்!

"சரி வேணாம்..... நீ போலீஸ்காரன்தானே.... அந்தப் பொண்ணு வந்து நியாயம் கேட்டா.... நீ நியாயமானவனா இருந்திருந்தா..... என்ன பண்ணியிருக்கணும்... வாசு தப்பு பண்லன்னு நிரூபிச்சி அந்தப் பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பியிருக்கணும்..... அத வுட்டுட்டு..... பெரிய இவன் மாதிரி..... கட்றா தாலியன்னானாம்.... இவனும் கட்டினானாம்....."

"இப்ப என்ன பண்ணனும்கற...."

"இந்த கல்யாணம் செல்லாது..... அந்தப் பொண்ண வீட்ட விட்டு அனுப்பு....."

"அதச் சொல்ல நீங்க யாரு!" என்று காரமாகக் கேட்டான் வாசு!

"நீ அவ கழுத்தில தாலி கட்டியிருக்கவே கூடாது..... அவள இப்பவே வீட்ட விட்டு வெளிய அனுப்பு..."

"அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பனும்னு சொல்ல நீங்க யாருன்னு கேட்டேன்....." தெளிவாகவும் அழுத்தமாகவும் கேட்டான் வாசு.

"டேய்.... நீ புரிஞ்சிதான் பேசறியா.... அவ யாரோ ஒருத்தனால....." என்று அவர் முகத்தைச் சுளிக்கிக் கொண்டு கூறத் தொடங்கும்போதே வாசுவின் கடுமையான எச்சரிக்கைக் குரல் ஒலித்தது.

"ப்போதும் நிறுத்துங்க மாமா..... எம்பொண்டாட்டியப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசினீங்க... அவ்ளோதான்.... மரியாதை கெட்டுடும்...."

மாமா மட்டும் சளைத்தவரா என்ன?

"என்னடா பெரிய பொண்டாட்டி.... அவ கழுத்தில தாலி கட்டினா, அவ உனக்கு பொண்டாட்டி ஆய்டுவாளா... இல்ல நீதான் அவளுக்கு புருஷனாய்டுவியா..... நடந்தது ஒரு பொம்மைக் கல்யாணம்டா....."

"என் கல்யாணத்தப் பத்தி பேசற யோக்யதை உங்களுக்கில்ல மாமா!" என்று நக்கலாக சொன்னான் வாசு.

"எப்ட்றா கல்யாணம் செஞ்சுண்ட.... என்னமோ அவள தொறத்தி தொறத்தி லவ் பண்ணி.... பார்க், பீச்சுன்னு ஊர் சுத்தி உருகி உருகி காதலிச்சு.... அத நாங்க ஒத்துக்காம ஓடிப்போய் ரிஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிண்டியா..... அவளப் பிடிச்சா கல்யாணம் பண்ணிண்ட.... இல்லல்ல...."

"நா அவள என் மனசால ஏத்துகிட்டுதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்! எது எப்டியிருந்தாலும் இந்த ஜென்மத்துக்கு அவதான்... அவ மட்டும்தான் என் பொண்டாட்டி...."

"பெரிசா பொண்டாட்டின்னு சொல்றியே.... நீயும் அவளும் என்ன லட்சணத்தில குடும்பம் நடத்தறீங்கன்னு எனக்குத் தெரியாதா..... என்ன அப்டியே அவ கூட கொஞ்சிண்டும் குலாவிண்டுமா இருக்க.... அட ஒரு கிஸ்ஸாவது அடிச்சிருப்பியாடா அவள.... அவளும் நீயும் புருஷன் பொண்டாட்டியா வாழவேல்ல.... இந்தக் கர்மமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டிருக்கியா....."

"மாமா.... வயசுப் பொண்ணுங்க இருக்கற வீட்ல எதப் பேசறதுன்னு வெவஸ்தையேயில்லாம....." என்றான் வாசு கோபமாக!

"டேய்.... நீ பேச்ச மாத்தாத....." நக்கலாகச் சொன்னார் மாமா.

"உங்களுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்!" என்றான் வாசு!

"நா கேட்டதுக்கு இது பதில் இல்ல.... நீ அவ கூட குடும்பம் நடத்தவேயில்ல...."

"இவன் கெடக்கான்! வாசு! நீ உள்ள போப்பா! பாரு! யாமினி அழுதுகிட்டிருக்கா! அவளப் போய்ப் பாருப்பா!" என்றார் கிருஷ்ணா!

"இருங்கப்பா! அவளுக்கு ஒண்ணுமில்ல! அவள நா சமாதானப்படுத்திக்கறேன்! ஆனா இதுதான் இப்ப முக்கியம்! இதுக்கு இன்னிக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்!" என்று தன் தந்தையிடம் கூறிவிட்டு மாமாவை நேராகப் பார்த்து சொன்னான்.

"என்ன சொன்னீங்க..... நானும் அவளும் குடும்பம் நடத்தவேயில்லன்னா.... குடும்பம்ன்னா என்ன மாமா... புருஷன் பொண்டாட்டின்னா என்னன்னு நெனச்சீங்க.... கல்யாணம் ஆனதும் எப்பவும் கொஞ்சிகிட்டும் குலாவிகிட்டும் இருக்கணும்! அவ கிட்ட எல்லா வேலையும் வாங்கிகணும்.... அவ கையால சமைச்சி சாப்பிடணும்... அவ கிட்ட எல்லா துணியையும் தோச்சி வாங்கிக்கணும்.... அப்றம் ராத்ரியானா...." என்று கூறிவிட்டு தன் கையை முறுக்கி காற்றில் கோபமாகக் குத்தினான்!

மாமா அவனை ஏளனமாகப் பார்த்தார்! அவன் தொடர்ந்தான்.

"பொண்டாட்டியா வரவ, இதெல்லாம் வாய மூடிகிட்டு செய்யணும்.... அப்றம் புருஷங்காரன் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரச்சே, அழகா பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிகிட்டு...." இன்னும் அதிகக் கோபமாக சுவற்றைக் குத்தினான்.

இதைக் கேட்டு ஐஷுவும் சௌமியும் சங்கடமாக நெளிந்தார்கள்!

"இப்டிதானே குடும்பம் நடத்தறீங்க நீங்க...." என்று ஏளனமாகக்
கேட்டான் வாசு!

இதிலென்ன தப்பு என்பது போல மாமா அவனைப் பார்த்தார்.

"பொண்டாட்டியோட தேவைகளை அவ சொல்லாமயே புரிஞ்சிகிட்டு அத நிறைவேத்தறவன்தான் புருஷன்! அவ கண்லேந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவிடாதவன்தான் புருஷன்! அவ கிட்ட தன்னோட கோவத்தக் காட்டி அவள கண்கலங்க வெக்காதவன்தான் புருஷன்! அவ பசிக்கிதுன்னு வாயால சொல்லாமலே அவ பசிய புரிஞ்சி அத போக்கறவன்தான் புருஷன்! ஒரு பொண்ணு யார் கூட எந்த பயமும் இல்லாம நிம்மதியா பாதுகாப்பா உணர்ந்து தன்னை மறந்து தூங்கறாளோ அவன்தான் அவளுக்கு நல்ல புருஷன்னு அர்த்தம்!"

கேட்டிருந்த யாமினியின் அழுகை குறைந்தது! ஐஷுவும் சௌமியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்! பவதாரிணியும் கிருஷ்ணாவும் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்! ஆனால் ருக்மணி மாமி கண்கலங்கினாள். இதைப் பார்த்த வாசு மேலும் சொன்னான்.

"பொண்டாட்டின்னா யாரு மாமா..... புருஷனோட தேவைகளை மட்டும் செய்யறவளா என்ன..... எல்லா வேலையும் பொண்டாட்டிகிட்ட தள்ளறவன்! ஏன்.... புருஷனுக்கு கைகால் இல்ல? அவன் என்ன எதுக்கும் கையாலாகாதவனா? எதுக்கும் கையாலாகலன்னா அந்தக் கேடு கெட்டவனுக்கு பொண்டாட்டி மட்டும் எதுக்கு? பொண்டாட்டின்னா, புருஷன் சொல்லாமலேயே அவன் பிரச்சனை என்னன்னு புரிஞ்சிக்கறவதான் பொண்டாட்டி! எந்த சூழ்நிலையிலயும் எப்படிப்பட்ட பிரச்சனை வந்த போதும் புருஷன் கூட நின்னு அவனுக்கு மானசீகமா சப்போர்ட் பண்றவதான் பொண்டாட்டி! புருஷனுக்கு சமைச்சி போட மட்டும் பொண்டாட்டியில்ல.... அவனுக்கு எதுனா பிரச்சனையிருக்கும் போது சமயோஜிதமா செயல்படறவதான் பொண்டாட்டி! எல்லாத்துக்கும் மேல யார் கூட இருக்கும்போது அவன் மனசில இந்த உலகத்தையே ஜெயிக்கற அளவுக்கு சக்தி வருதோ அவதான் அவனுக்கு நல்ல பொண்டாட்டி!

இதுக்கு மேல கொஞ்சறதும் குலாவறதும்தான் வாழ்க்கைன்னு நீங்க நெனச்சா அது உங்க அறியாமை!

நா யாமிக்கு நல்ல புருஷன்! அத விட யாமினி எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல பொண்டாட்டி! நாங்க புருஷன் பொண்டாட்டியாதான் வாழறோம்! இத நாங்க யாருக்கும் நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல!"

ருக்மணி மாமி வாசுவிடம் கூறினாள்!

"வேணாம் வாசு! அவர்தான் ஏதோ புரியாம பேசறார்ன்னா.... நீயும் ஏன் அவர்கூட மல்லுக்கு நிக்கற! விடு! அவருக்காக நா மன்னிப்பு கேக்கறேன்! மன்னிச்சுடுப்பா!"

"நீங்க ஏன் மாமி, எங்கிட்ட மன்னிப்பு கேக்கறீங்க! நீங்க என்ன தப்பு பண்ணீங்க!"

"ஐயோ விடேன்! அவருக்கு எதுனா ஆகிடப்போறதுடா...." தன் கணவனின் ரத்த அழுத்தத்தை மனதில் வைத்து கூறினாள் மாமி!

"பாருங்க! நல்லாப் பாருங்க மாமா! நீங்க இப்டி கத்தறதுனால உங்க உடம்புக்கு எதாவது வந்துடுமோன்னு பதறறாங்களே! இவங்க நல்ல பொண்டாட்டி! சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாமா! உங்க இலக்கணப்படியும் சரி! நா சொன்ன இலக்கணப்படியும் சரி! மாமி உங்களுக்கு எப்பவுமே நல்ல பொண்டாட்டியாதான் நடந்துகிட்டிருக்காங்க! ஆனா நீங்க ஒரு நல்ல புருஷன் கிடையாது! நல்ல தகப்பன் கிடையாது! நல்ல மகன் கிடையாது!" என்று கூறி நிறுத்தி பின்னர் மிக மிக அதிகக் கோபமாக, கடுமையான குரலில் "நல்ல அண்ணனும் கிடையாது!" என்று கூறிவிட்டு யாமினியின் அருகில் வேகமாகச் சென்றான்!

அவளை கைதூக்கி எழுப்பினான். அவளுடைய கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினான்!

"நீ ஏன் யாமினி, இந்தாள் பேச்செல்லாம் கேட்டு இப்டி அழற! உன் கண்ணீருக்கு மதிப்பு ரொம்ப ஜாஸ்த்தி! அத நீ இப்டி தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் செலவழிச்சி வீணாக்காத!"

"ஆனா.... அவர் சொல்ற மாதிரி நா கெட்டுப் போனவதானே வாசு!" என்று மேலும் அழுதாள் யாமினி!

"ஒரு பொண்ண வெறும் உடம்பா பாக்கறவங்க அப்டிதான் உளறுவாங்க! பொண்ணுங்கறவ ஒரு உயிர்! அவளுக்கும் மனசு இருக்கு! அவளுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கு! உன்ன நா உயிராதான் பாக்கறேன்! அதுவும் எனக்கே எனக்குன்னு இருக்கற என்னோட சொந்த உயிராதான் பாக்கறேன்! நீ என் உயிர் யாமினி! நீ என்ன நெனச்சி என்ன கல்யாணம் பண்ணிகிட்டியோ.... ஆனா உன் கழுத்தில இப்டி நெனச்சிதான் தாலி கட்டினேன்!" என்றான் வாசு தெளிவாக!

யாமினிக்கு அவன் சொல்வது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது! மகிழ்ச்சியாக இருந்தது! தன்னையும் ஒருவன் உயிராக நினைக்கிறானா என்று நினைத்தாள்!

மாமா மறுபடியும் குறுக்கிட்டார்!
 
Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
"டேய்! சரிடா! நா ஒத்துக்கறேன்! நீதான் இந்த உலகத்திலயே நல்ல புருஷன்! உம்பொண்டாட்டிதான் உலகத்திலயே நல்ல பொண்டாட்டி! நீயும் அவளும் புருஷன் பொண்டாட்டிதான்னு இவ்ளோ நேரம் லெக்சர் அடிச்சியே! நீ அப்டி நெனக்கிற! ஆனா அவ அப்டிதான்னு உனக்கு எப்டி தெரியும்?"

அவனை மடக்குவதாய் நினைத்து கேள்வி கேட்டார் மாமா! அவரை ஒரு புழுவைப் பார்ப்து போல பார்த்துவிட்டுச் சொன்னான் வாசு.

"நானாச்சும் கொஞ்சம் யோசிச்சேன் மாமா! ஆனா அவ எதையுமே யோசிக்கல! எனக்காக அவ உயிரக் குடுக்கக் கூட தயங்கல! நா தப்பு பண்லன்னு புரிஞ்சுகிட்ட அடுத்த செகண்டே, என் வாழ்க்கை தன்னால கெடக் கூடாதுன்னு தன் கையக் கட் பண்ணிகிட்டா! அது தப்புன்னு நா புரிய வெச்சதும் புரிஞ்சிகிட்டா! என் கூடதான் இனிமே அவ வாழ்க்கைன்னு புரிஞ்ச அடுத்த நிமிஷமே இந்த வீட்ல குடி வர அவ தயங்கல! இந்த வீட்டுக்கு வந்த மறு நிமிஷத்திலேந்து இந்த வீட்டுல இருக்கற வேலைய தன்னோடதா நெனச்சி தன் கை வலிய பொருட்படுத்தாம செஞ்சா! எல்லாத்துக்கும் மேல எங்கம்மாக்கு அடுத்தபடியா என்னோட பசிய புரிஞ்சிகிட்டு சமையால் பண்ணி வெச்சா! இதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை! ஆனா இத நீங்க நம்பணும்னு எந்த அவசியமும் இல்ல! அது எனக்குத் தேவையும் இல்ல!"

"அப்ப ஏண்டா அவ உங்கப்பனையும் அம்மாவையும் அத்த மாமான்னு கூப்பிட ஆரம்பிக்கல...."

"ஏன்? முறை வெச்சி கூப்பிட்டாதான் அவ என் பொண்டாட்டின்னு ஒத்துப்பீங்களோ? அப்டீன்னா நீங்க ஒத்துக்கவே வேணாம்!"

"டேய்! இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம்! நீ அவள பொண்டாட்டியா நெனக்கிற! ஆனா அவ உன்ன புருஷனா நெனக்கலங்கறேன்!"

"மாமா! உங்களுக்கு வயசாச்சே தவிர இன்னும் அறிவு வளரவேயில்ல!"

"டேய்! அப்ப ஏண்டா உங்கப்பன் அவளப் பாத்து மருமகளே! மருமகளேன்னு உருகிகிண்டிருக்கான்! அவளுக்கு ஞாபகப்படுத்தவா? இல்ல அவனுக்கே ஞாபகம் வெச்சிக்கவா?" என்று மிகவும் ஏளனமாகக் கேட்ட மாமாவின் மேல் ரொம்பக் கோபமாக வந்தது கிருஷ்ணாவுக்கு! அவரைத் தன் கண்களால் சமாதானப் படுத்திய வாசு,

"ஹூம்... சில ஜென்மங்கள்..... மாமா... நீங்க வாய் நெறைய ஏதோ சுலோகம்லாம் முணுமுணுத்துகிட்டே கோவிலுக்குப் போறீங்களே.... அங்க அப்பப்ப கோவில் மணி அடிக்கறாங்களே! எதுக்கு தெரியுமா?"

"இதென்ன கேள்வி! சுவாமிக்கு ஏதாவது நைவேத்யம் பண்ணிருப்பா.... யாராவது சுவாமி தரிசனம் பண்ண வந்திருப்பா.... அதுக்காக மணியடிப்பா....."

"அதெல்லாம் சரி! பூஜை பண்ணும் போது நடுநடுல ஏன் மணியடிக்கறாங்க?"

"அது..... அதான் சொன்னேனே..... நைவேத்யம்....."

"இவ்ளோதான் உங்களுக்குத் தெரியும்ன்னு சொல்லுங்க! பூஜைக்கு நடுல மணியடிக்கறது பக்தர்களுக்காக! பக்தர்கள் மனசில எதையாவது நெனச்சிகிட்டே கோவிலுக்கு வருவாங்க! வாயால சுலோகம் சொன்னாலும் மனசில அவங்க நெனப்பு வேறதான் இருக்கும்! அவங்க நெனப்ப சுவாமி பக்கம் திசை திருப்பறதுக்காக மணியடிக்கறாங்க! மணிச்சத்தம் கேட்டதும் நம்ம கவனம் முழுசும் தெய்வத்துகிட்ட குவியணும்னுதான் மணியடிக்கறாங்க! அது மாதிரிதான் எங்கப்பாவும் அப்பப்ப மணியடிக்கற மாதிரி மருமகளே! மருமகளேன்னு கூப்பிட்டு, நீ மனசால இந்த வீட்டு மருமகளா எப்பயோ ஆயிட்டம்மா! நெனப்பால சீக்கிரமே மருமகளா ஆய்டும்மான்னு யாமினிக்கு ஞாபகப் படுத்தறார்! இது கூடப் புரியல உங்களுக்கு!"

"டேய்! நீதான் அவள பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்ற! ஆனா அவ....."

"என்ன சொல்லணும்னு எதிர் பாக்கறீங்க! வாசுதான் எம்புருஷன்னு அவ வாயால சொல்லணும்னு எதிர்பாக்கறீங்களா? அவ சொல்ல மாட்டா! சொல்லவும் வேணாம்! போங்க! போய் வேலையப் பாருங்க! மாமி! இவர கூட்டிட்டுப் போங்க! பிபி ஏறிடப் போகுது...." என்றுவிட்டு யாமினியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்!

தன்னுடைய அறைக்குச் சென்ற வாசு, யாமினியின் முகத்தை நன்றாகத் துடைத்து விட்டான்! அவளைத் தன் கட்டிலில் படுக்க வைத்தான்!

"மத்தவங்க பேச்செல்லாம் பெரிசா நெனச்சன்னா நம்ம வாழ்க்கை நரகமாய்டும்! எதையும் யோசிக்காத! நிம்மதியா தூங்கு! நா சாப்பாடு ரெடி பண்ணிட்டு வந்து எழுப்பறேன்!" என்று கூறிக் கொண்டே ஏஸியை ஆன் செய்துவிட்டு அறையைச் சாத்திக் கொண்டு வெளியே போனான்!

விந்தையிலும் விந்தையாக யாமினிக்கு உடனேயே தூக்கம் வந்து அவள் தூங்கியும் விட்டாள்!

வெளியே வந்த வாசு,

"ம்மா! அப்பா! ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க! சாப்பாடு பத்தியெல்லாம் கவலப்படாதீங்க! ஐல் டேக் கேர்! ரெடியானதும் கூப்பிடறேன்!" என்று கூறி அவர்களை அவர்களுடைய அறைக்கு அனுப்பினான்!

"மாமி! மாமாவ கூட்டிட்டு போய் சமாதானப் படுத்துங்க! நமக்கு வேற வழியில்ல! அவர் அப்டிதான்! நம்மதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்! விடுங்க!" என்று அவர்களையும் அனுப்பினான்! பின்னர் தன் தங்கைகளிடம் வந்தான்!

"ப்யூட்டி! ஸ்வீட்டி! வாங்க! இன்னிக்கு நம்ம சமையல்! நம்ம மூணு பேரும் சேர்ந்து சமையல ஒரு கை பாக்கலாம்!" என்று அழைத்தான்!

"அண்ணா! சாரிண்ணா!" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்!

"டேய்! என்னடா? என்னாச்சி ரெண்டு பேருக்கும்?"

"அண்ணிக்கு இப்டியாய்டுச்சின்னு தெரிஞ்சப்ப...."

"ம்..... நம்மதான் அவளுக்கு முழு சப்போர்ட்டும் பண்ணனும்! அதப்பத்தி இனிமே அவளுக்கு ஞாபகமே வராத மாதிரி நம்ம நடந்துக்கணும்! சரியா!"

"சரிண்ணா!" திரும்பவும் ஒரே குரலில் கூறினார்கள்!

"ஆனா அண்ணா..." என்று ஆரம்பித்தாள் ஸ்வீட்டி!

"இப்ப என்ன ஸ்வீட்டீ...."

"எப்டி அண்ணி நீங்க சொன்னதும் தூங்கினாங்க?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் அவள்!

"அடி என் மக்கு தங்கச்சீ.... அவ நா சொன்னதுனால தூங்கலடீ..... அவளுக்கு தூக்கம் வந்ததினால தூங்கினா...."

"அதெப்டி அவங்களுக்கு தூக்கம் வந்திச்சுன்னு உனக்கு தெரியும்?"

"ஸ்வீட்டீ.... அவ இவ்ளோ நேரம் அழுதிருக்கா.... அதான் தூக்கம் வந்திருச்சு.... நம்மல்லாம் குழந்தையா இருக்கும் போது நம்ம அழுதா அம்மா என்ன பண்ணுவாங்க! மடியில போட்டு தட்டி தூங்க வெப்பாங்க! அதே டெக்னிக்தான்!"

உடனே அவள் அடுத்த சந்தேகத்தைக் கேட்டாள்.

"அப்ப.... நீயும் அண்ணிய இப்ப உன் மடில போட்டு தட்டினியாண்ணே... அதான் அவங்க உடனே தூங்கினாங்களா?" என்று அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டு விட்டு ஓடினாள்! ப்யூட்டி இதைப் பார்த்து சிரித்தாள்.

"அடியேய்.... இருடீ..... உன்ன இப்ப தட்ற தட்டுல...." என்று தன் கையை ஓங்கிக் கொண்டு அவளைத் துரத்திப் பிடித்தான்!

எங்கே அவன் அடித்து விடுவானோ என்று அவன் தங்கை பயப்பட,

"என் செல்லத் தங்கச்சீ!" என்று கொஞ்சி விட்டு,

"சரி! சரி! சீக்கிரம் வாங்க! எல்லாரும் பசியாயிருக்காங்க! அம்மாவுக்கும் டேப்லெட்ஸ் எடுக்கணும்! க்விக்! க்விக்!" என்று அவர்களை அழைத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றான் வாசு!

- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
பொண்டாட்டியோட தேவைகளை அவ சொல்லாமயே புரிஞ்சிகிட்டு அத நிறைவேத்தறவன்தான் புருஷன்! அவ கண்லேந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவிடாதவன்தான் புருஷன்! அவ கிட்ட தன்னோட கோவத்தக் காட்டி அவள கண்கலங்க வெக்காதவன்தான் புருஷன்! அவ பசிக்கிதுன்னு வாயால சொல்லாமலே அவ பசிய புரிஞ்சி அத போக்கறவன்தான் புருஷன்! ஒரு பொண்ணு யார் கூட எந்த பயமும் இல்லாம நிம்மதியா பாதுகாப்பா உணர்ந்து தன்னை மறந்து தூங்கறாளோ அவன்தான் அவளுக்கு நல்ல புருஷன்னு அர்த்தம்!"
supeeeeeeeeeeeeeeeerb sis(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)nice epi sis baska mama yamini vasuvai pathi therinchukanum krathukaga pesunara:unsure::unsure::unsure::unsure::unsure: nice epi sis:love::love::love::love:
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
"டேய்! சரிடா! நா ஒத்துக்கறேன்! நீதான் இந்த உலகத்திலயே நல்ல புருஷன்! உம்பொண்டாட்டிதான் உலகத்திலயே நல்ல பொண்டாட்டி! நீயும் அவளும் புருஷன் பொண்டாட்டிதான்னு இவ்ளோ நேரம் லெக்சர் அடிச்சியே! நீ அப்டி நெனக்கிற! ஆனா அவ அப்டிதான்னு உனக்கு எப்டி தெரியும்?"

அவனை மடக்குவதாய் நினைத்து கேள்வி கேட்டார் மாமா! அவரை ஒரு புழுவைப் பார்ப்து போல பார்த்துவிட்டுச் சொன்னான் வாசு.

"நானாச்சும் கொஞ்சம் யோசிச்சேன் மாமா! ஆனா அவ எதையுமே யோசிக்கல! எனக்காக அவ உயிரக் குடுக்கக் கூட தயங்கல! நா தப்பு பண்லன்னு புரிஞ்சுகிட்ட அடுத்த செகண்டே, என் வாழ்க்கை தன்னால கெடக் கூடாதுன்னு தன் கையக் கட் பண்ணிகிட்டா! அது தப்புன்னு நா புரிய வெச்சதும் புரிஞ்சிகிட்டா! என் கூடதான் இனிமே அவ வாழ்க்கைன்னு புரிஞ்ச அடுத்த நிமிஷமே இந்த வீட்ல குடி வர அவ தயங்கல! இந்த வீட்டுக்கு வந்த மறு நிமிஷத்திலேந்து இந்த வீட்டுல இருக்கற வேலைய தன்னோடதா நெனச்சி தன் கை வலிய பொருட்படுத்தாம செஞ்சா! எல்லாத்துக்கும் மேல எங்கம்மாக்கு அடுத்தபடியா என்னோட பசிய புரிஞ்சிகிட்டு சமையால் பண்ணி வெச்சா! இதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை! ஆனா இத நீங்க நம்பணும்னு எந்த அவசியமும் இல்ல! அது எனக்குத் தேவையும் இல்ல!"

"அப்ப ஏண்டா அவ உங்கப்பனையும் அம்மாவையும் அத்த மாமான்னு கூப்பிட ஆரம்பிக்கல...."

"ஏன்? முறை வெச்சி கூப்பிட்டாதான் அவ என் பொண்டாட்டின்னு ஒத்துப்பீங்களோ? அப்டீன்னா நீங்க ஒத்துக்கவே வேணாம்!"

"டேய்! இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம்! நீ அவள பொண்டாட்டியா நெனக்கிற! ஆனா அவ உன்ன புருஷனா நெனக்கலங்கறேன்!"

"மாமா! உங்களுக்கு வயசாச்சே தவிர இன்னும் அறிவு வளரவேயில்ல!"

"டேய்! அப்ப ஏண்டா உங்கப்பன் அவளப் பாத்து மருமகளே! மருமகளேன்னு உருகிகிண்டிருக்கான்! அவளுக்கு ஞாபகப்படுத்தவா? இல்ல அவனுக்கே ஞாபகம் வெச்சிக்கவா?" என்று மிகவும் ஏளனமாகக் கேட்ட மாமாவின் மேல் ரொம்பக் கோபமாக வந்தது கிருஷ்ணாவுக்கு! அவரைத் தன் கண்களால் சமாதானப் படுத்திய வாசு,

"ஹூம்... சில ஜென்மங்கள்..... மாமா... நீங்க வாய் நெறைய ஏதோ சுலோகம்லாம் முணுமுணுத்துகிட்டே கோவிலுக்குப் போறீங்களே.... அங்க அப்பப்ப கோவில் மணி அடிக்கறாங்களே! எதுக்கு தெரியுமா?"

"இதென்ன கேள்வி! சுவாமிக்கு ஏதாவது நைவேத்யம் பண்ணிருப்பா.... யாராவது சுவாமி தரிசனம் பண்ண வந்திருப்பா.... அதுக்காக மணியடிப்பா....."

"அதெல்லாம் சரி! பூஜை பண்ணும் போது நடுநடுல ஏன் மணியடிக்கறாங்க?"

"அது..... அதான் சொன்னேனே..... நைவேத்யம்....."

"இவ்ளோதான் உங்களுக்குத் தெரியும்ன்னு சொல்லுங்க! பூஜைக்கு நடுல மணியடிக்கறது பக்தர்களுக்காக! பக்தர்கள் மனசில எதையாவது நெனச்சிகிட்டே கோவிலுக்கு வருவாங்க! வாயால சுலோகம் சொன்னாலும் மனசில அவங்க நெனப்பு வேறதான் இருக்கும்! அவங்க நெனப்ப சுவாமி பக்கம் திசை திருப்பறதுக்காக மணியடிக்கறாங்க! மணிச்சத்தம் கேட்டதும் நம்ம கவனம் முழுசும் தெய்வத்துகிட்ட குவியணும்னுதான் மணியடிக்கறாங்க! அது மாதிரிதான் எங்கப்பாவும் அப்பப்ப மணியடிக்கற மாதிரி மருமகளே! மருமகளேன்னு கூப்பிட்டு, நீ மனசால இந்த வீட்டு மருமகளா எப்பயோ ஆயிட்டம்மா! நெனப்பால சீக்கிரமே மருமகளா ஆய்டும்மான்னு யாமினிக்கு ஞாபகப் படுத்தறார்! இது கூடப் புரியல உங்களுக்கு!"

"டேய்! நீதான் அவள பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்ற! ஆனா அவ....."

"என்ன சொல்லணும்னு எதிர் பாக்கறீங்க! வாசுதான் எம்புருஷன்னு அவ வாயால சொல்லணும்னு எதிர்பாக்கறீங்களா? அவ சொல்ல மாட்டா! சொல்லவும் வேணாம்! போங்க! போய் வேலையப் பாருங்க! மாமி! இவர கூட்டிட்டுப் போங்க! பிபி ஏறிடப் போகுது...." என்றுவிட்டு யாமினியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்!

தன்னுடைய அறைக்குச் சென்ற வாசு, யாமினியின் முகத்தை நன்றாகத் துடைத்து விட்டான்! அவளைத் தன் கட்டிலில் படுக்க வைத்தான்!

"மத்தவங்க பேச்செல்லாம் பெரிசா நெனச்சன்னா நம்ம வாழ்க்கை நரகமாய்டும்! எதையும் யோசிக்காத! நிம்மதியா தூங்கு! நா சாப்பாடு ரெடி பண்ணிட்டு வந்து எழுப்பறேன்!" என்று கூறிக் கொண்டே ஏஸியை ஆன் செய்துவிட்டு அறையைச் சாத்திக் கொண்டு வெளியே போனான்!

விந்தையிலும் விந்தையாக யாமினிக்கு உடனேயே தூக்கம் வந்து அவள் தூங்கியும் விட்டாள்!

வெளியே வந்த வாசு,

"ம்மா! அப்பா! ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க! சாப்பாடு பத்தியெல்லாம் கவலப்படாதீங்க! ஐல் டேக் கேர்! ரெடியானதும் கூப்பிடறேன்!" என்று கூறி அவர்களை அவர்களுடைய அறைக்கு அனுப்பினான்!

"மாமி! மாமாவ கூட்டிட்டு போய் சமாதானப் படுத்துங்க! நமக்கு வேற வழியில்ல! அவர் அப்டிதான்! நம்மதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்! விடுங்க!" என்று அவர்களையும் அனுப்பினான்! பின்னர் தன் தங்கைகளிடம் வந்தான்!

"ப்யூட்டி! ஸ்வீட்டி! வாங்க! இன்னிக்கு நம்ம சமையல்! நம்ம மூணு பேரும் சேர்ந்து சமையல ஒரு கை பாக்கலாம்!" என்று அழைத்தான்!

"அண்ணா! சாரிண்ணா!" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்!

"டேய்! என்னடா? என்னாச்சி ரெண்டு பேருக்கும்?"

"அண்ணிக்கு இப்டியாய்டுச்சின்னு தெரிஞ்சப்ப...."

"ம்..... நம்மதான் அவளுக்கு முழு சப்போர்ட்டும் பண்ணனும்! அதப்பத்தி இனிமே அவளுக்கு ஞாபகமே வராத மாதிரி நம்ம நடந்துக்கணும்! சரியா!"

"சரிண்ணா!" திரும்பவும் ஒரே குரலில் கூறினார்கள்!

"ஆனா அண்ணா..." என்று ஆரம்பித்தாள் ஸ்வீட்டி!

"இப்ப என்ன ஸ்வீட்டீ...."

"எப்டி அண்ணி நீங்க சொன்னதும் தூங்கினாங்க?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் அவள்!

"அடி என் மக்கு தங்கச்சீ.... அவ நா சொன்னதுனால தூங்கலடீ..... அவளுக்கு தூக்கம் வந்ததினால தூங்கினா...."

"அதெப்டி அவங்களுக்கு தூக்கம் வந்திச்சுன்னு உனக்கு தெரியும்?"

"ஸ்வீட்டீ.... அவ இவ்ளோ நேரம் அழுதிருக்கா.... அதான் தூக்கம் வந்திருச்சு.... நம்மல்லாம் குழந்தையா இருக்கும் போது நம்ம அழுதா அம்மா என்ன பண்ணுவாங்க! மடியில போட்டு தட்டி தூங்க வெப்பாங்க! அதே டெக்னிக்தான்!"

உடனே அவள் அடுத்த சந்தேகத்தைக் கேட்டாள்.

"அப்ப.... நீயும் அண்ணிய இப்ப உன் மடில போட்டு தட்டினியாண்ணே... அதான் அவங்க உடனே தூங்கினாங்களா?" என்று அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டு விட்டு ஓடினாள்! ப்யூட்டி இதைப் பார்த்து சிரித்தாள்.

"அடியேய்.... இருடீ..... உன்ன இப்ப தட்ற தட்டுல...." என்று தன் கையை ஓங்கிக் கொண்டு அவளைத் துரத்திப் பிடித்தான்!

எங்கே அவன் அடித்து விடுவானோ என்று அவன் தங்கை பயப்பட,

"என் செல்லத் தங்கச்சீ!" என்று கொஞ்சி விட்டு,

"சரி! சரி! சீக்கிரம் வாங்க! எல்லாரும் பசியாயிருக்காங்க! அம்மாவுக்கும் டேப்லெட்ஸ் எடுக்கணும்! க்விக்! க்விக்!" என்று அவர்களை அழைத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றான் வாசு!

- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
இந்த குடும்பம் இதே மாதிரி இருக்கணும்.
யார் அந்த பத்மினி... வாசுவை அவன் குடும்பத்தை பாதித்த விடயம் என்ன
எல்லாம் தெரிந்த பிறகும் யாமி வாசு கூட துணையாக நிற்கணும்.....
ராணிக்கு இனியாவது வீட்டை விட்டு போறன் என்ற எண்ணம் வர கூடாது...
வாசுவின் பாஸ்கர் மாமா யாரின் அண்ணா? பாஸ்கர் மாமா ஏன் இப்படி கதைச்சார்... ஒருவேளை வாசு மனசில் என்ன இருக்கு என்பது யாமிக்கு தெரியம் என்று நினைத்தரா?
வாசு சொன்ன பதில் தானே யாமிக்கு ஆறுதலாக இருந்தது
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top