Idhu Irul Alla! - 20

#1
இது இருளல்ல!

20.

சௌமியும் ஐஷுவும் ருக்மணி மாமியை தனியே அழைத்து வந்து கேட்டார்கள்!

"ம்மா.... அப்ப.... வாசுண்ணா.... நம்ம அத்தையோட பையனாம்மா...."

"ம்... ஆமா சௌமி! வாசு உன்னோட பத்மினி அத்தையோட மகன்தான்!" என்றாள் கண்களில் கண்ணீருடன்!

"அப்ப ஏன் மாமி, இவ்ளோ நாளா இதப்பத்தி நீங்க யாருமே எதுவுமே சொல்லல.... அண்ணனுக்கு இது ஏற்கனவே தெரியுமா.... சொல்லுங்க மாமி..." என்று படபடத்தாள் ஐஷு!

வாசு மயங்கியிருந்ததால் தண்ணீர் குடிக்க எழுந்து வந்த யாமினி இவர்களின் இந்தப் பேச்சைக் கேட்டு,

வாசுவின் தங்கையிடம், "அவரோட அம்மா செஞ்ச தப்புக்கு இப்ப இவர் தண்டனை அனுபவிக்கறார்னு நெனச்சுக்கோ ஐஷு!" என்று அழுத்தமாகக் கூறியவளை வாசுவின் அலறல் நிறுத்தியது!

"இல்ல...... எங்கம்மா எந்தத் தப்பும் பண்ணல..... எங்கம்மா எந்தத் தப்பும் பண்ணல யாமினீஈஈஈஈஈ...."

வாசுவின் அலறல் கேட்டு திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள்!

வாசு கண்கள் சிவந்த நிலையில் முகமெல்லாம் வியர்த்து வழிய, வேதனை கப்பிய கண்களுடன், கையில் குத்திய ட்ரிப்ஸைக் கழற்றிவிட்டு அறையிலிருந்து வெளிவர முயன்று கொண்டிருந்தான்! ஆனால் அவனுடைய உடல் அவனுக்கு ஒத்துழைக்காமல் முரண்டு பிடிக்க, தள்ளாடி விழப் போனான்!

தள்ளாடி விழப் போனவனை ஓடிச் சென்று தாங்கிப் பிடித்தாள் யாமினி!

"எங்கம்மா..... எந்த தப்பும்..... பண்ல.... யாமினி...." அவனுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது!

இவனுடைய அலறல் கேட்டு ஓடி வந்த ஆகாஷும்,

"சரி.... சரி... சரி வாசு.... சரி... அம்மா தப்பு பண்ல..... சரி வாங்க...." என்றபடியே யாமினியும் சேர்ந்து அவனை மெத்தையில் படுக்க வைத்தார்கள்!

ஆகாஷ் மீண்டும் ட்ரிப்ஸை போட்டு விட்டான்! அதில் அவன் தூங்குவதற்காக ஊசி போட வரும் போது, வாசு அவனைத் தடுத்தான்!

"என்னத்..... தூங்க..... வெக்காத....." தன் கையை ஆட்டி ஆட்டி வாய் குழறியபடியே ஏதோ சொல்லத் துடித்தவனைப் பாவமாகப் பார்த்தாள் யாமினி!

ஆகாஷின் அறிவுரைப்படி, யாமினி, வாசு ஏதோ பேசுவதாக நினைத்து அவனுக்கு பதிலை கூறுவது போல "ம்!" கொட்டினாள்!

"ம்...!"

"......."

"ம்....!"

இதில் அமைதியடைந்த வாசு ஊசியில்லாமலேயே தூங்கத் தொடங்கினான்!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் கண்ணீர் சிந்தினர்!

வாசு நன்றாகத் தூங்கிவிட்டான் என்று உறுதி செய்து கொண்டு வெளியில் வந்தார்கள் யாமினியும் ஆகாஷும்!

கிருஷ்ணாவிடம் எதையோ சொல்லிவிட்டு ஆகாஷ் தன்னுடைய அலுவல் அறைக்குச் சென்றுவிட்டான்!

யாமினி கிருஷ்ணாவிடம் வந்தாள்!

"மாமா! அவருக்கு என்ன பிரச்சனை மாமா! ப்ளீஸ் சொல்லுங்க மாமா!"

"அது... வாசு....."

"நானும் அதப் பத்தி எதையும் தெரிஞ்சுக்க வேணாம்னு தான் நெனச்சேன்! ஆனா அவர் இவ்ளோ தவிக்கறாரே.... என்னால அத பாத்துட்டு சும்மாயிருக்க முடியுமா? அவருக்கு நா ஆறுதலா இருக்கணும்னா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரிஞ்சாதானே என்னால அவருக்கு ஆறுதலா நடந்துக்க முடியும்! ப்ளீஸ்! சொல்லுங்க மாமா!"

"என்னண்ணா பாக்கறீங்க..... இனிமேலும் மறைக்க எதுவுமில்ல.... இந்த நாளதானே நாம எதிர் பாத்தோம்.... அது வந்துடுத்து.... இவ கிட்ட உண்மைய சொல்ற நேரம் வந்துடுத்து! உரிமைப்பட்டவ கேக்கறா... சொல்லுங்கோண்ணா...." என்றாள் ருக்மணி!

இவளின் குரல் கேட்டு தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த பாஸ்கர் மாமா,

"யாருடீ உரிமைப்பட்டவ... இவளா.. . இவளா என் வாசுவுக்கு உரிமைப்பட்டவ...." என்று கொந்தளித்தார்!

"இவர.... இரும்மா யாமினி! இதோ வரேன்!" என்று நகர்ந்த ருக்மணி மாமியை,

"நீங்க இருங்கம்மா!" நிறுத்திவிட்டு மாமாவிடம் சென்றாள் யாமினி!

"சரி! நா எதுவும் கேக்கல... எனக்கு எந்த உரிமையும் வேணாம்! ஆனா..... அவர் உங்க தங்கச்சி மகன்தானே? நீங்களே அவர இவ்ளோ தவிக்க விடலாமா? அவரப் பாத்தா உங்களுக்கு பாவமாயில்லையா? உங்க தங்கை உயிரோட இருந்திருந்தா, அவர் இவ்ளோ தவிக்கறத பாத்து, ஐயோ! எல்லாரும் இருந்தும் என் மகன் இப்டி தவிக்கறானேன்னு எவ்ளோ துடிச்சிருப்பாங்க! நீங்க அவர் தவிக்கறதப் பாத்துகிட்டு இப்டி கோவமா நடந்துக்கலாமா?" என்று தன்மையாகக் கேட்டாள்!

"இவ்ளோ நாள் நல்லாதான் இருந்தான்! நீ வந்தப்றம்தான் அவனுக்கு ஒடம்புக்கு வந்துடுத்து...." என்று குதர்க்கமாகக் கூறினார் மாமா!

இதைக்கேட்ட யாமினி உள்ளுக்குள் துடித்தாள்!

"சரி! இப்ப நா இவர விட்டு போய்ட்டா.... இவர் நல்லாகிடுவாரா?"

"ஆமா... அவன் நல்லாய்டுவான்! நா அவனுக்கு எம்பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சுட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்..."

எல்லாருமே இதைக்கேட்டு கோபப்பட,

"நீ என்ன யாமினி? இவருகிட்ட போய் இவ்ளோ பேசிண்டிருக்க? நீ நெனக்கற மாதிரி எடுத்து சொன்னா புரிஞ்சிக்கற ஆள் இவரில்ல.... நீ நகரு! இவருக்கு கோமா ட்ரீட்மென்ட் தான் சரிப்படும்....." என்று கோபமாகக் கூறிய ருக்மணி மாமி, ஆகாஷின் அறை நோக்கி நடக்க, ஆகாஷே அங்கு வந்தான்!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் ஐஷுவும் மாமாவை கோபமாக முறைக்க, சௌமி தன் தந்தையின் அருகில் சென்றாள்.

"நீங்க ஏன்ப்பா இப்டி இருக்கேள்? அண்ணாவா நெனச்சி பழகிண்டு இருக்கற ஒருத்தர எப்டி எனக்கு கல்யாணம் பண்ணி வெப்பேள்? இதனால நீங்க என்ன சாதிக்க நெனக்கறேள்? அவர் மேல உங்க ஆதிக்கத்த செலுத்த நெனக்கறேளா இல்ல என் மேலயா? நேக்கு புரியல.... நீங்க ரொம்ப மோசம்.... பேசாம.... பேசாம நீங்க செத்து போய்டுங்கோப்பா......" என்று அழுது கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து போனாள் செளமி!

இவள் பேச ஆரம்பிக்கும் போது அதை ஒரு பொருட்டாகவே எண்ணாத பாஸ்கர் மாமா, அவள் கடைசியாகக் கூறியதைக் கேட்டதும் தன் தலையில் இடி இறங்கியதைப் போல உணர்ந்தார்!

அவள் கூறிய வார்த்தையில் இருந்த வீரியம் அவரை தாக்கத் தொடங்க, அப்படியே திக்பிரமை பிடித்தது போல நின்றுவிட்டார்!

அங்கே வந்த ஆகாஷுக்கும் மாமாவின் மீது அபரிமிதமான கோபம் வந்தது! ஆனாலும் தான் ஒரு மருத்துவனாயிற்றே! இப்போது இவர் மேல் தன் கோபத்தைக் காட்டக் கூடாதென்று முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாமாவை அழைத்துச் சென்று அவருடைய அறையில் விட்டு, அவருக்கு ஒரு ஊசியைப் போட்டு படுக்க வைத்துவிட்டுப் போனான்!

அதன் பிறகு ஒரே ஒரு முறை கண்விழித்துப் பார்த்த பாஸ்கர் மாமா, அன்றிரவே ஆகாஷின் ஊசியில்லாமலேயே கோமாவுக்கு சென்றுவிட்டார்!

ஆகாஷின் தீவிர கண்காணிப்பினாலும் அவனுடைய அதீத அன்பினாலும் உடல் நிலை தேறத் தொடங்கினான் வாசு!

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் வாசு!

வீடு வந்த அன்றிரவு தூங்கிக்கொண்டிருந்த வாசுவின் அருகில் அமர்ந்திருந்த யாமினி வாசுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

உங்களுக்கு என்னதான் பிரச்சனை வாசு! உங்க மாமா ஏன் இப்டி நடந்துக்கறார்? எனக்கு எதுவும் புரியல! என்று அவனிடம் பேசுவதைப் போல் தனக்குள் பேசிக் கொண்டிருந்தாள்!

இவள் பேசியது கேட்டது போல கண்விழித்தான் வாசு!

"எ... என்ன வாசு? எதாவது வேணுமா? குடிக்க எதுனா கொண்டு வரவா?" என்று கேட்டாள் யாமினி!

அவன் சில நிமிடங்கள் அவளையே ஆழமாகப் பார்த்துவிட்டு, பெரு மூச்சு விட்டான்! பின்னர் அவன் பேசத் தொடங்கினான்!

"யாமினி! இப்ப இருக்கற சூழ்நிலைல நா உனக்கு வாழ்க்கை குடுத்ததா நீ நெனச்சிகிட்டு இருக்க! ஆனா அது உண்மையில்ல! நீதான் எனக்கு வாழ்க்கை தரணும்! நீ எனக்கு வாழ்க்கை தரலாமா வேண்டாமான்னு நா சொல்றத முழுசா கேட்டப்றமா முடிவு பண்ணு!" என்று பீடிகையுடன் வாசு கூற ஆரம்பித்ததை அவள் மிகவும் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்!

- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!

#9

Nice
ஆனால் ஏன் இப்படி அடுத்த அத்தியாயம் இடையே தாமதம்
 
Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top