• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla ondru Episode - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments... :)

இரண்டல்ல ஒன்று – 19

நம்மை பற்றிப் பிறர் பேசவதை கேட்பதும் ஒரு சுவாரஸ்யம் தான்!

அந்தச் சுவாரசியம் வாசுதேவனின் முகத்தில் தெரிந்தாலும், அதை தாண்டி அவன் முகத்தில் சிந்தனை ரேகைகைள். 'பவித்ரா நந்தினியிடம் மறுத்துப் பேசினால்… நந்தினி சந்துரு குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாள்? அவுக பேசுவதாவும் சொன்னாளே…' என்ற கேள்வி வாசுதேவனின் நல்ல உள்ளத்தில் எழுந்தது.

‘சந்துருவை திட்டவோ... அவனிடம் சண்டையிடவோ... அவனைக் குறை கூறவோ... முழு உரிமை தனக்கு மட்டுமே உண்டு…’ என்ற இறுமாப்பும் வாசுதேவனின் முகத்தில் தெரிந்தது.

பவித்ரா நந்தினியை அமைதியாகப் பார்த்தாள்.

'நந்தினியின் கூற்றை மறுத்து... என் அத்தானுக்கு சாதகமாகப் பேச, எனக்கு ஒரு நொடி போதும்... ஆனால்? அந்த ஒரு நொடியில் நான் என் தங்கை நந்தினி வாழப் போகும் வீட்டின் மீதுள்ள நம்பிக்கையை... அவள் தன் கணிப்பின் மீதுள்ள நம்பிக்கையை உடைத்தது போல் ஆகிவிடும்...' என்று பவித்ராவின் நிதானம் அவளை எச்சரித்தது.



"நீ சொல்றது... உங்க வீட்டில் சொல்றது எல்லாம் சரி தான்... அத்தானுக்கு அவங்க அம்மா மேல பாசம் ஜாஸ்தி தான்... அத்தை சொல்லறதை கேட்கத் தான் செய்வாங்க... ஆனால் அதில் என்ன தப்பு இருக்கு? அம்மா சொல்றதை பசங்க கேட்க மாட்டாங்களா?" என்று பவித்ரா கேள்வியோடு நிறுத்த, வாசுதேவனின் உதடுகள் மெலிதாக வளைந்தது.

'யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டா...' என்று மனதார தன் மனைவியை மெச்சினான் வாசுதேவன்.

"ஏன் நீயும்... நானும்... அம்மா, அப்பா சொல்றதை கேட்கறதில்லையா?" என்று பவித்ரா கேட்க, நந்தினி அவளை யோசனையாகப் பார்த்தாள்.

"அத்தானுக்கு அவுங்க அம்மாக்கு அப்புறம் தான் எல்லாரும்..." என்று நந்தினி கூறியதை நந்தினி போலவே கூறி சிரித்தாள் பவித்ரா.

"ஏன் அக்கா சிரிக்கிற?" என்று நந்தினி பரிதாபமாகக் கேட்க, "அந்த வரிசையெல்லாம் எனக்குத் தெரியாது நந்தினி... ஆனால்..." என்று பவித்ரா ஆரம்பிக்க, வாசுதேவனின் புருவங்கள் யோசனையாக நெளிந்தது.

"அத்தான்... வேறு நான் வேறு கிடையாது பவி... நாங்க ரெண்டு பேரும் ஒன்னு தானே... அத்தான் மனசில் பட்டியில் போட்டு இடம் பிடிக்க எனக்கு அவசியமில்லை... அத்தான் மனசே நான் தான் நந்தினி..." என்று முகத்தில் வெட்கத்தோடு, குரலில் காதல் வழிய கூறினாள் பவித்ரா.

வாசுதேவன் கம்பீர புன்னகையோடு, மீசையை முறுக்கிக் கொண்டு பவித்ராவின் சொல்லில், 'போங்கடா... ஆண்டவனே எங்க பக்கம்...' என்ற பாவனையோடு பட்டாளை நோக்கி நடந்து சென்றான்.

"அப்படினா நீ சந்தோஷமா தான் இருக்க?" என்று நந்தினி சந்தேகத்தோடு கேட்க, "ஏய்... உனக்கு என்ன பிரச்சனை?" என்று பவித்ரா தன் வேலையை விட்டுவிட்டு நந்தினியை கூர்மையாகப் பார்த்து கோபமாகக் கேட்டாள்.

"நீ கோபப்படறதில் அர்த்தம் இல்லை அக்கா... நான் சம்பந்தமில்லாத யார் கிட்டயோ அவங்க வீட்டு விஷயத்தைத் துருவி துருவி அநாகரிகமாக கேட்கலை... என் அக்கா கிட்ட கேட்கறேன்... என் அக்கா என்னை மாதிரி வெளிப்படையா பேச மாட்டா... ஒவ்வொரு விஷயத்தையும் வெளிய சொல்லாம வருத்தப்படுவா..." என்று சிடுசிடுப்பாகக் கூறினாள் நந்தினி.

பவித்ரா மௌனம் காக்க, "நீ உன் அத்தானுக்கு மனசா இரு... இல்லை மூளையா இரு... எனக்கு அதை பத்தி கவலை இல்லை... எங்க இருந்தாலும் என் அக்கா சந்தோஷமா இருக்கனும்... இல்லைனா நான் அமைதியா இருக்க மாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள் நந்தினி.

"நான் சந்தோஷமா தான்டி இருக்கேன்..." என்று பவித்ரா சமாதானமாகக் கூற, "நீ பொய் சொல்ற அக்கா... சந்தோஷமா இருக்கிற நீ ஏன் கண்ணிலா சித்திரத்தை வரையனும்?" என்று நந்தினி நேரடியாகக் கேட்டாள்.

"உங்க மாமியார் படம் அத்தனை இருக்கு..." என்று கடுப்பாக கூறினாள் நந்தினி.

'எல்லாத்தையும் இவ பாத்து தொலைச்சிட்டா போல... உள்ள தானே வச்சிருந்தேன்...' என்று பவித்ரா சிந்திக்க, "இதில் உன் படம் வேற... அது உன் கையாலாகாத தனத்தை காண்பிக்குது..." என்று நந்தினி சிறு குழந்தையின் பிடிவாதத்தோடு கூறினாள்.

" அப்படி எல்லாம் இல்லை நந்தினி... பல விஷயங்கள் அறிவுக்கு புரியும் மனசுக்கு புரியாது... சுபா வீட்டை எதிர்த்து பண்ண திருமணம்... அதனால் வந்த ஏமாற்றம்... அது தான் அத்தை அப்படி இருக்கிறாங்க... ஆனா மத்த எல்லாருக்கும் நல்லவங்க தான்... சுபா வந்து போனாலும் அங்க எல்லாம் சுமுகமா இல்லை... மகனும் தன்னை விட்டுட்டு போயிருவானோன்னு அத்தைக்கு பயம்... அதனால் வீட்டை தன் கையில் வச்சிக்கணும்னுங்கிற எண்ணம்... " என்று உத்தமியை பற்றி கூறினாள் பவித்ரா.

நந்தினி திருப்தி இல்லமால் பார்க்க, “அம்மா வயசான காலத்தில் வருத்தப்பட கூடாதுங்குற சராசரி மகனோட ஆசை தான் உங்க அத்தானுக்கு... அவங்க அம்மாக்கு நான் விட்டுக் கொடுத்து போகணுமுன்னு, அத்தான் எனக்கு விட்டுக் கொடுக்கிறது நிறைய..." என்று நந்தினியிடம் பக்குவமாக கூறினாள் பவித்ரா.

நந்தினி தன் தமக்கையை பேச விட்டு அமைதியாக இருந்தாள்.

"எல்லாம் அறிவுக்கு புரிஞ்சாலும், இந்தப் பாழா போன மனசு ஏத்துக்காது... மனசு நல்லா தான் இருக்கும்... ஆனால், அந்த நொடி ஏமாற்றத்தை ஏத்துக்கும்போது வரக் கோபம் தான் இந்தக் கண்ணில்லா சித்திரங்கள்... என் கோபத்தின் வடிகால்... எனக்கும் வயசு கம்மி தானே... பொறுமை கம்மியாகும்... கோபம் வரும்... சில சமயம் விஷயங்களை எப்படி கையாளணுமுன்னு தெரியாது... இதெல்லாம் நம்ம பிறந்த வீட்டில் பழக்கமில்லை... இங்க தானே கத்துகிறோம்..." என்று தன் மனபாரத்தை முதன்முறையாக இறக்கி வைத்தாள் பவித்ரா.

வாழ்க்கை பாடத்தை ஒரு பெண் எவ்வளவு பொறுமையாக கற்று எத்தகைய சாமர்த்தியசாலித்தனமாக வாழ்வின் போக்கை கையாளுகிறாளோ அதுவே அவள் வாழ்வின் வெற்றியின் அளவுகோல்.

"இது வரைக்கும் நீ இதை சொன்னதே இல்லியே?" என்று நந்தினி வினவ, "பிரச்சனை இல்லாத வீடு உண்டா நந்தினி... சின்ன சின்னப் பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும்... மாமியார் அம்மாவாக முடியுமா? இல்லை மருமகள் தான் மகளாக முடியுமா?" என்று பவித்ரா விளக்கம் கொடுக்க, "சின்ன சின்னப் பிரச்சனைனா அத்தான் கிட்ட சொல்ல வேண்டியது தானே..." என்று நந்தினி தன் கண்களைச் சுருக்கி கேட்டாள்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
"சிலது உன் அத்தானுக்கு புரியும்... சிலது உனக்கே புரிய மாட்டேங்குது... உங்க அத்தானுக்கு புரியுமா?..." என்று பவித்ரா கடுப்பாகக் கூற, "புரியலைனா?" என்று நந்தினி கேட்க... "சண்டை தான் வரும்..." என்று பவித்ரா சிரித்தாள்.

"அத்தான் கிட்ட சண்டை போடுறதுக்கு நீ நேரா உன் அத்தை கிட்ட உன் பிரச்சனையைச் சொல்ல வேண்டியது தானே... நீ சொல்றதை பார்த்தா அத்தான் பாவம் தான்... உனக்கும் அத்தைக்கும் இடையில்... பேசாம உன் விஷயத்தை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு நீயே டீல் பண்ண வேண்டியது தானே?" என்று நந்தினி கேட்க, பவித்ரா மெலிதாகச் சிரித்தாள்.

"அப்படி எல்லாம் குடும்பத்தில் சட்டு சட்டுன்னு பேசக் கூடாது நந்தினி... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கையாள்றதுக்கு குடும்பம் சாதாரண விஷயம் இல்லை... கண்ணாடி பாத்திரம் மாதிரி... ஜாக்கிரதையா கையாளனும்..." என்று பவித்ரா கூற, நந்தினி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"நான் அத்தை கிட்ட பேசி ஏதாவது பிரச்சனை ஆகிருச்சுனா அத்தான் தாங்கமாட்டாங்க... அதுக்கு தான் நான் பொறுமையா இருக்கேன்..." என்று பவித்ரா கூற, "ஆனால்... அத்தான் கூடச் சண்டை போடுவ?" என்று கிடுக்கு பிடியாகக் கேட்டாள் நந்தினி.

'ஒரு படத்தைப் பார்த்திட்டு ஆயிரம் கேள்வி கேக்கறாளே...' என்று மனதிற்குள் நொந்து கொண்டு பவித்ரா அமைதி காக்க...

"அக்கா... அம்மா சின்ன வயசுல என்ன செல்லுவாங்க தெரியுமா? அக்கா பாவம் டீ... பயப்படுவா... நீ தான் அவளைப் பாத்துக்கணுமுன்னு... அது ஏனோ என் மனசில் பதிஞ்சிருச்சு... நான் உன் பக்கத்துல இருக்கணுமுன்னு தான் இந்த ஊருக்கு வந்திருக்கேன்..." என்று நந்தினி கூற, அவளைப் பாசத்தோடு பார்த்தாள் பவித்ரா.

'என் தங்கை வந்தா பாத்துப்பா... உங்களைக் கேள்வி கேட்பா...' என்று அன்று வாசுதேவனிடம் கூறியது நினைவு வர, பவித்ராவின் கண்கள் கலங்கியது. தன் கண்ணீரை நந்தினி அறியாவண்ணம், மறைத்துக் கொண்டாள்.

"ஆனால், உன் எல்லா பிரச்சனைக்கும் நான் மட்டுமில்லை அத்தானால் கூட உன் கூட இருக்க முடியாது... நீ தான் அக்கா தைரியமா எதிர்த்து நிக்கணும்... இப்படி தனியா உக்காந்து படம் வரையாத அக்கா... தைரியமா எதிர்த்துக் கேளு... முடியும் முடியாதுன்னு சொல்லு... பிரச்சனைகள் வரும் பொழுது, you should not react… Always respond…" என்று நந்தினி பவித்ராவுக்கு பாடம் புகட்டினாள்.

"நீ நினைக்குற அளவுக்கு ஒன்னும் இல்லை நந்தினி... நான் பேசி ஏதாவது பிரச்சனை வந்திருமோன்னு ஒரு பயம்... அது தான் அமைதியா போயிருவேன்... உங்க அத்தான் என் பக்கம் தான் இருப்பாங்க... ஆனால், சூழ்நிலை... ஒருவேளை உங்க அத்தான் எனக்கு எதிரா பேசிட்டா என் உயிர் இந்த உடலில் இருக்காது..." என்று உணர்ச்சி பொங்க பேசினாள் பவித்ரா.

"அக்கா... லூசா நீ... பாசம் இருக்கலாம் தப்பில்லை... ஆனால்... சுயமரியாதை இருக்கனும்... உண்மையான பாசம் சுயமரியாதையை விலை பேசாது... நீ தைரியமா பேசினா... அத்தான் நிம்மதியாகவும், நீ சந்தோஷமாகவும் இருப்பன்னு நான் நினைக்கிறேன்...” என்று நந்தினி தன் தமக்கைக்கு ஆலோசனை வழங்கினாள்.

"அம்மா... சின்ன வயசிலிருந்து என்கிட்டே ஒன்னு சொல்லிருக்காங்க என்னனு தெரியுமா?" என்று பவித்ரா கேள்வியாக நிறுத்த, நந்தினி, 'என்ன?' என்பது போல் பார்த்தாள்.

"தங்கைச்சிக்கு கொஞ்சம் துடுக்கு தனம் ஜாஸ்தி... எங்க போனாலும் வம்பு வளர்த்துருவா... அவளைப் பொறுமையா பார்த்துக்கணும்ன்னு சொல்லிருக்காங்க..." என்று பவித்ரா நக்கல் தொனியில் கூற, நந்தினி அவளை அடிக்கக் கம்பு தேடினாள்.

'இதற்கெல்லாம் அஞ்சுவேனா...' என்ற எண்ணத்தோடு, "நந்தினி... எந்தப் பிரச்சனை வந்தாலும் நீ கேள்வி கேட்டன்னு வை... தினமும் உங்க வீட்டில் பஞ்சாயத்து தான் கூடும்... நானும் உங்க அத்தானும் தான் வரணும்... கொஞ்சம் பார்த்துப் பண்ணு டீ... எங்களுக்கும் நிறைய வேலை இருக்கு..." என்று பவித்ரா கண் சிமிட்ட அவள் காதைத் திருகினாள் நந்தினி.


அப்பொழுது அங்கு வாசுதேவன் வர, "நீங்கச் சாப்பாடு கொண்டு வருவீங்கன்னு நாங்க அங்க உட்காந்திருக்கோம்... ரெண்டும் பேரும் என்ன விளையாடிகிட்டு இருக்கீங்க..." என்று வாசுதேவன் அவர்களை அன்போடு மிரட்டினான்.

சூப் முதல் dessert வரை பவித்ரா பலவிதமாகப் பரிமாற, "அக்கா எல்லாரும் சேர்ந்தே சாப்பிடுவோம்..." என்று நந்தினி கூறினாள். "மாப்பிள்ளையும்... பெண்ணும் சாப்பிடுங்க... உங்க கூட சந்தோஷ் சாப்பிடுவான்..." என்று வாசுதேவன் கூற, "அண்ணா... வாங்க அண்னா... நாம சேர்ந்து சாப்பிடுவோம்..." என்று ராம் பிரசாத் வாசுதேவனை அழைத்தான்.

Chinese, Italian விதமான உணவு வகைகள் மேஜையை நிரப்பி இருக்க, 'உனக்கு இதெல்லாம் செய்யத் தெரியுமா?' என்ற எண்ணத்தோடு வாசுதேவன் பவித்ராவை குறும்பாகப் பார்க்க... 'செய்ய விட்டா தானே...' என்று பவித்ரா அவனை கடுப்பாகப் பார்க்க... பவித்ராவின் கடுகடுத்த முகத்தை வாசுவேதேவன் ரசனையோடு பார்த்தான்.

"நல்ல வேளை உன் ஹனியை வைத்துச் சமைக்கலை... இவ்வளவு dishesக்கு சமையல் முடிய நம்ம Wedding day வரைக்கும் ஆகியிருக்கும்..." என்று ராம் பிரசாத் நந்தினியிடம் ரகசியமாக பேசினான்.


அனைவரும் தங்கள் ஜோடியொடு ரகசியம் பேச, 'உத்தமி இருந்திருந்தா இந்நேரம் ரகசியமா என்கிட்டே ஏதாவது வம்பு சொல்லியிருப்பா...' என்று எண்ணினார் மஹாதேவன்.

அனைவரும் ரசித்து உண்ண... பவித்ரா சாப்பிட முடியாமல் திணற, வாசுதேவன் அவளைக் கரிசனத்தோடு பார்த்தான்.

"அக்கா... எதாவது விசேஷமா? நீ அப்பத்திலிருந்தே ஒரு மாதிரி இருக்க?" என்று நந்தினி பவித்ராவின் காதில் கிசுகிசுப்பாகக் கேட்க, பவித்ரா மேலும் கீழும் தலை அசைத்தாள்.

"அக்கா... இப்படி இருக்கும்பொழுது, ஏன் அக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யுற?" என்று நந்தினி தன் தமக்கையிடம் யாரும் அறியா வண்ணம் கோபித்துக் கொண்டாள்.
அப்பொழுது, ராம் பிரசாத்தின் மொபைல் ஒலிக்க, அதில் மின்னிய பெயரைப் பார்த்த ராம் பிரசாத் பதட்டம் அடைந்தான்.


ராம் பிரசாத்தின் பதட்டத்தை பார்த்த வாசுதேவன், "யாரு கூப்பிடறாக?" என்று உணவை ருசித்துக் கொண்டே, புருவம் உயர்த்திக் கேட்டான்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
"Unknown number அண்ணா..." என்று தன் மொபைலை silent mode க்கு மாற்றினான் ராம் பிரசாத்.

நந்தினி ராம் பிரசாத்தின் பதட்டத்தை மனதில் குறித்துக் கொண்டு உணவை ரசித்துச் சாப்பிட்டாள். ராம் பிரசாத் அதன் பின் உணவைக் கைகளால் அளந்த படி அமர்ந்திருந்தான்.

அவர்கள் உணவு முடிந்து சிறிது நேரத்தில் உத்தமி வர, "அத்தை நல்லா இருக்கீங்களா?" என்று மரியாதையாகக் கேட்டாள் நந்தினி.

உத்தமி, நந்தினியிடம் சிரித்த முகமாகத் தன்மையாக பேசிக் கொண்டார். ராம் பிரசாத்தை அவர் பார்த்தாரா... இல்லை பார்க்கவே இல்லையா என்று கேள்வி கேட்கும் படி நடந்து கொண்டார்.
உத்தமியின் செய்கையை யாரும் கண்டுகொண்டது போலவும் தெரியவில்லை.


அப்பொழுது உத்தமி, தன் பையிலிருந்து, தட்டை, முறுக்கு போன்ற பலகாரங்களை எடுக்க, "அக்கா... இந்நேரம் சாப்பிட நல்லாருக்குமுன்னு வாங்கினீகளா அத்தை?" என்று நந்தினி சகஜமாக கேட்க, பவித்ரா தர்மசங்கடமாக நெளிந்தாள்.

நந்தினியின் கேள்வி, பவித்ராவின் தர்மசங்கடம் உத்தமிக்கு விஷயத்தைத் தெளிவு படுத்த, "ஆமா... நந்தினி..." என்று உத்தமி சிரித்த முகமாகத் தலை அசைத்தார்.

நந்தினி, ராம் பிரசாத் இருவரும் கிளம்ப, ராம் பிரசாத்தின் மொபைல் மீண்டும் மீண்டும் vibrate ஆனது.

'யாருன்னு கேட்போமா...' என்று நந்தினி சிந்திக்க, 'குடும்பம்னா பார்த்துப் பக்குவமா நடக்கணுமுன்னு அக்கா சொல்லிருக்கா... படக்குன்னு கேட்கக் கூடாது... ஆனால் எதுக்கு இப்படி டென்ஷன் ஆகணும்... யாரா இருக்கும்?' என்று எண்ணத்தோடு நந்தினி அமைதியாக நடந்தாள்.


வாசுதேவனின் இல்லத்தில், "வாசு பாத்தியா டா... நம்ம கிட்ட கூடச் சொல்லலை... அவ தங்கச்சி கிட்ட சொல்லிருக்கா..." என்று உத்தமி கூற, "அம்மா... எனக்குத் தெரியும் அம்மா... நான் தான் மருத்துவரைப் பார்த்துட்டு எல்லார் கிட்டயும் சொல்லலாமுன்னு சொன்னேன்..." என்று பவித்ராவை பார்த்தபடி அழுத்தமாகக் கூறினான் வாசுதேவன்.

உத்தமி சந்தேக கண்களோடு, அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள் பவித்ரா, வாசுதேவன் இருவரும் அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

வாசுதேவன் அவர்கள் அறைக்குள் நுழைந்து, எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.


சிறிது நேரம் கழித்து, "உன் தங்கை கிட்ட சொல்லணுமுன்னு தோணிருக்கு... ஆனால், என்கிட்டே சொல்லணுமுன்னு தோணலைல..." என்று வாசுதேவன் கேட்க, "அத்தான் நந்தினி கிட்ட நான் சொல்லலை... அவளா கண்டுபிடிச்சிட்டா... உங்க யாருக்கும் தெரியாதுன்னு கூட, அவளுக்கு தெரியாது..." என்று அந்த நேரத்திலும் தன் தங்கையை விட்டுக் கொடுக்காமல் கூறினாள் பவித்ரா.

"எனக்கும் தெரியும் பவித்ரா... நந்தினி கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்... நீயா சொல்லுவ... நீ சந்தோஷமா சொல்லும் பொழுது கொடுக்க தான் நெக்லஸ் வாங்கி வச்சிருந்தேன்... நீ கல்யாணத்திலயும் புதுசா போட்டுக்கலாமுன்னு தோணுச்சு... ஆனால், நீ சொல்லவே இல்லை..." என்று வாசுதேவன் குறைபட, "அத்தான் கல்யாண வேலை முடிஞ்சி நிதானமா சொல்லலாமுன்னு தான் அன்னைக்கி சொல்லலை..." என்று பவித்ரா தரையை பார்த்தபடி கூறினாள்.


வாசுதேவன் பவித்ராவை கேள்வியாகப் பார்க்க, "அப்புறம்... அன்னைக்கி சண்டை வந்திருச்சு..." என்று பவித்ரா பட்டென்று கூறினாள்.

"அப்புறம்?" என்று வாசுதேவன் பவித்ராவை கேள்வியாகப் பார்க்க, பவித்ரா கூறிய பதிலில் வாசுதேவன் கண்கலங்க அவளை விலகல் தன்மையோடு பார்த்தான்.

வாசுதேவன் கேட்ட கேள்வியில், "அத்தான்..." என்ற விம்மலோடு அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் பவித்ரா.


அழும் மனைவியை ஆதரவாகத் தழுவ வாசுதேவனின் மனம் எண்ணினாலும், வாசுதேவனின் கோபம் பவித்ராவை தூர நிறுத்தச் செய்தது.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நல்ல அக்கா, தங்கைதான் போங்க.
நல்ல விஷயம் பேசும் போது, சங்கடம் வந்திருச்சே!??
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
சூப்பர் அகிலா அடுத்து என்ன என்ற ஆவலுடன்
நன்றி... நன்றி... ஞாயிறு அன்று வந்துருவேன் அக்கா...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
நல்ல அக்கா, தங்கைதான் போங்க.
நல்ல விஷயம் பேசும் போது, சங்கடம் வந்திருச்சே!??
ஆமா... அழகி... என்ன பண்றது? வாழ்க்கை அப்படி தான் இருக்கு...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top