• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla ondru Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
Dear Friends,
Thank you so much for your wonderful likes and lovely comments. :):)

இரண்டல்ல ஒன்று – 2

சென்னை வேளச்சேரி பரபரப்பான சாலை அருகே அமைந்திருந்த அபார்ட்மெண்ட். அந்த இரவிலும் வாகனங்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன.

மெத்தையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நந்தினி, "அக்கா..." என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"அக்கா... கண் இல்லாமல்.... அக்கா.. கண் இல்லாமல்..." என்று திக்கி திணறி மூச்சு வாங்கிக் கொண்டு பயத்தோடு முணுமுணுத்தாள் நந்தினி.

அவள் சத்தத்தை கேட்டு எழுந்து வந்த, ஆவுடையப்பன்,செல்வி இருவரும் அவளை மேலும் கீழும் பார்த்தனர்.

"ஏய்! என்ன டீ ஆச்சு?" என்று தூக்க கலக்கத்தோடு கேட்டார் செல்வி.

"அம்மா... அக்கா படம் கண் இல்லாமல்..." என்று தயங்கியபடியே கூற, ஆவுடையப்பன் நந்தினியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு படுக்கச் சென்றார்.

"லூசு... இதுக்கு தான் முட்டாள் தனமா விளையாடாதீங்கன்னு படிச்சி படிச்சி சொல்றேன்." என்று செல்வி கடுப்பாகக் கூறினார்.

"எம்மா.... நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்... எங்களைப் பார்த்தா விளையாடுற மாதிரியா இருக்கு? " என்று கோபமாக கேட்டாள் நந்தினி.

"எது டி சீரியஸ்? உங்க அக்கா பவித்ரா யார் மேலையாவது கோபம் வந்தா, அவ அவங்க படத்தைக் கண் இல்லாமல் வரைவா... கேட்டா… கண் இருந்து பார்க்க முடிந்தால் தப்பு பண்ணுவாங்களான்னு நியாயம் கேட்பா... உடனே நீங்க எல்லாம் தெரிந்த மகராசி… அவங்க கிட்ட சண்டைக்குப் போய், அதைச் சரி செய்து அந்தப் படத்துக்கு கண் வரைவீங்க... இதெல்லாம் ஒரு பொழப்பா ..." என்று செல்வி கோபமாகக் கூற, நந்தினி "ஈ...." என்று சிரித்தாள்.

"அர்த்த ராத்திரில, ஆ ஊ ன்னு கத்திட்டு என்ன டி சிரிப்பு?" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த அலமாரியைத் திறந்தார்.

"பாரு பவித்ரா வரைந்த படங்கள்... அதில் பாதி என் படமும், அப்பா படமும் தான் இருக்கு. அக்காளும், தங்கச்சியும் வரிஞ்சி கட்டிக்கிட்டு என் கிட்டயும், அப்பா கிட்டயும் சண்டைக்கு வந்திற வேண்டியது." என்று கூறி கொண்டே அந்தக் கதவை மூடினார் செல்வி.

"இந்தக் குப்பையை வெளிய போடவும் மனசில்லாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லால்..." என்று செல்வி சலிப்பாக ஆரம்பிக்க, "அம்மா... அக்காவை திட்டாதீங்க... உங்களால் இப்படி படம் வரைய முடியுமா?" என்று கோபமாக கேட்டாள் நந்தினி.

"நான் ஏன் டி வரையனும்? எனக்கு எதுக்கு வரைய தெரியணும்?" என்று அந்தத் தூக்கத்திலும் சட்டம் பேசினார் செல்வி.

'தன் தாயிடம் பேசி ஜெயிக்க முடியாது.' என்றறிந்த நந்தினி, தன் தாயை அமைதியாகப் பார்த்தாள்.

"சரி... விடு... இப்ப எதுக்கு தூக்கத்தில் கத்தி ஊரைக் கூட்டின?" என்று செல்வி அதே கடுப்போடு கேட்க, "ஊரா?" என்று நந்தினி தன் தாயின் பின்னே தேட, அவள் தலையில் நறுக்கென்று கொட்டினார் செல்வி.

"என்ன விளையாடிகிட்டு இருக்க?" என்று கோபமாக கேட்ட தன் தாயை சமாதானம் செய்து, "அம்மா... அக்காவுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். அக்கா, அவ படத்தை அவளே கண் இல்லாமல் வரைந்த மாதிரி எனக்கு தோணுச்சு அம்மா." என்று தீவிரமாக கூறினாள் நந்தினி.

மெலிதாக சிரித்த செல்வி, நந்தினியின் தலையை ஆதரவாகத் தடவி, "நீ பவித்ராவையே நினைச்சுகிட்டு இருந்ததால் இப்படி எல்லாம் தோணுது." என்று மெதுவாகக் கூறினார்.

"நீ இங்க இருந்தாலும் உன் மனசு பவித்ரா கிட்டத் தான் இருக்கு நந்தினி." என்று பெருமையாக கூறினார் அவர்களின் தாய் செல்வி.

"எதாவது பிரச்சனைனா நம்ம கிட்ட சொல்லிருக்க மாட்டாளா?" என்று செல்வி நந்தினியைப் பார்த்து கேட்க, "அம்மா... உங்களுக்கு பொண்ணு மேல் அக்கறையே இல்லை. யாரவது அக்காவை அப்படி ஒரு கிராமத்தில் கல்யாணம் செய்து குடுப்பாங்களா?" என்று கோபமாக கேட்டாள் நந்தினி.

"அமெரிக்கா... லண்டன் மாப்பிள்ளை வேண்டாமுன்னு நீ தானே சொன்ன?" என்று செல்வி விடாமல் கேட்க, "ஆமா.. அக்கா அங்க போய்ட்டா நான் எப்படி அவளைப் பார்ப்பது? இங்குச் சென்னையில் நாம அடிக்கடி போய் பார்க்க முடியுற மாதிரி நீங்க ஒரு மாப்பிளை பார்த்திருக்கலாம்." என்று நந்தினி முகம் சுருக்கி கூறினாள்.

இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையப்பன், "பவித்ராவுக்கு ஒரு குறையும் கிடையாது. மாப்பிள்ளை அவள் மேல் உயிரா இருக்கார். மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லாத்துக்கும் மேல் சொந்தம்." என்று சமாதானமாக கூறினார்.

சற்று இடைவெளி விட்டு மேலும் தொடர்ந்தார் ஆவுடையப்பன். "அதுவும் பவித்ரா குணத்துக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும், பொறுமையாக இருந்து சமாளித்து வந்திருவா... ஆனால், உன்னை நினைத்துத் தான் எங்களுக்குக் கவலையே... நீ பேசுற பேச்சுக்கு உன்னை எல்லாம் ஒரு நாள் கூட நீ போகிற வீட்டில் வச்சிருக்க மாட்டாங்க." என்று தீவிரமாக ஆரம்பித்து, கேலியாக முடித்தார்.

தன் கணவரை ஆமோதிப்பது போல் தலை அசைத்து, செல்வி நகைத்தார்.

தன் தாயை பார்த்த நந்தினி, "இது அவ்வளவு பெரிய ஜோக் இல்லை." என்று கடுப்பாக கூறினாள்.

"நான் என்ன சொல்றேன்னு யாருக்கும் புரியலை. இதில் என்னைக் கேலி பேச வேண்டியது." என்று நந்தினி மீண்டும் தீவிரமான குரலில் ஆரம்பித்தாள்.

நந்தினியை இடைமறித்து, "தண்ணியை குடிச்சிட்டு பேசாமல் படு." என்று கூறினார் செல்வி, ‘மனதில் பவித்ராவோடு நாளைப் பேச வேண்டும்’ என்ற எண்ணத்தோடு!



தன் தமக்கையின் இடம் காலியாக இருப்பதைப் பார்த்தாள் நந்தினி. திருமணம் ஆகி பவித்ரா சென்று பல ஆண்டுகள் ஆன பின்பும், அவள் இடத்தில் அவள் பொருளில் அவள் வாசனையை உணர்ந்தாள் நந்தினி.

'முதலில் நாளைக் காலை பவித்ராவுக்கு call செய்து பேச வேண்டும். அக்காவை ஒரு வாரம் இங்கு வர சொல்லணும். நானும், பவித்ராவும் mall, பீச், தியேட்டர் ன்னு scooty இல் சுத்தணும். ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடணும். அக்காவின் திருமணத்திற்கு முன் இருந்த பொன்னான நாட்களை மீட்க வேண்டும்... குட்டி பையன் சந்தோஷோடு விளையாட வேண்டும்…' என்று எண்ணிக் கொண்டே தூங்கினாள் நந்தினி.

மணி இரவு 1 : 30 அனைவரும் உறங்கிவிட, நாம் சாலையில் பயணிப்போம்.

வேளச்சேரி தரமணி சாலையில், இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்தது.

அங்கு ஒரு அபார்ட்மெண்ட் இல் மெலிதான ரகசிய குரல் நம் கவனத்தை ஈர்த்தது.

ஓர் இளம் பெண்ணின் கொஞ்சும் குரல் நம் காதுகளை தீண்ட, சற்று தயக்கத்தோடு நாம் அந்த வீட்டிற்குள் செல்வோம்.

அந்த வீட்டில், ஓர் இளைஞன் கம்பீரமாக சோபாவில் சாய்ந்து, மொபைல் phone இல் பேசிக்கொண்டிருந்தான்.

"ராம்... லவ் யு... லவ் யு.. லவ் யு.. சோ மச்.... இச்… இச்… இச்… " என்று அந்தப் பெண் பல முத்தங்களோடு காதல் சொட்ட சொட்ட அவள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை மொபைல் வழியாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான் ராம்.

அவன் முகத்தில் மெல்லிய புன்னகை. "லவ் யு டார்லிங்." என்று மெதுவாகக் கூறினான் ராம் என்றழைக்கப்பட்ட ராம்பிரசாத்.

"இப்படி தான் லவ் யு சொல்லுவியா?" என்று அந்தப் பெண் குரல் உரிமையோடு சிணுங்க, "வைஷு... நீ என் பக்கத்தில் இருந்தால் நான் லவ் யு சொல்லும் ஸ்டைலே வேற மாதிரி இருக்கும்." என்று கிரக்கமாக கூறினான் ராம்.

மொபைலில் அந்தப் பெண் வெட்க புன்னகை சிந்த, "நாம எப்ப கல்யாணம் செய்துக்கலாம்?" என்று கொஞ்சும் குரலில் கேட்டான் ராம்.

“அழகியபுரம் வேண்டாம்... இந்த அழகி பொதுமுன்னு சொல்லுங்க. கல்யாணத்தை நாளைக்கே வைத்துப்போம்." என்று மயக்கும் தொனியில் ஒலித்தது அந்தப் பெண் குரல்.

"வைஷ்னவி…. விளையாடாத. நான் இங்க வேலை பார்ப்பதே, எங்க ஊரில் கம்பெனி ஆரம்பிக்கணும். அதுக்கு, எனக்கு ஒரு exposure கிடைக்கணும். அதுக்காகத்தான். எனக்கு இவங்க கொடுக்கிற சம்பளம் முக்கியம் இல்லை. நான் எங்க ஊரில் கம்பனி ஆரம்பித்து அம்மா... அப்பா... எங்க அண்ணன்.. அண்ணி கூட தான் இருப்பேன்." என்று கண்டிப்போடு கூறினான் ராம்பிரசாத்.

"ஹா... ஹா...இந்த வைஷு இல்லாமலா ராம்?" என்று கேலியும், கொஞ்சலும் கலந்து கேட்டாள் வைஷ்னவி.

"விதி எப்படி இருக்குன்னு தெரியலை வைஷு. எங்க வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்காங்க. நான் தான் நல்ல படித்த பெண் வேணும்னு சொல்லி அவங்க சொல்ற பெண்ணை எல்லாம் தட்டிக் கழிக்கிறேன்... இது எவ்வளவு நாள் சாத்தியமாகுமுன்னு எனக்கு தெரியலை.” என்று நிதானமாக கூறினான் ராம்.

எதிர்முனை அமைதியாக இருக்க, தன் பேச்சை மேலும் தொடர்ந்தான் ராம்பிரசாத். “எங்க வீட்டில் ஒரு படித்த பெண்ணை பார்த்துட்டாங்கன்னா, நான் நம் காதலை பற்றி வீட்டில் சொல்லணும். என் வீட்டில் நிச்சயம் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, சம்மதம் சொல்லுவாங்க. ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் நீ அங்க தான் இருக்கனும். உன் காரணத்தை யாரும் ஏத்துக்க மாட்டாங்க வைஷு.” என்று சூழ்நிலையை விளக்கினான் ராம்பிரசாத்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
"அதுக்கு?" என்று வைஷ்னவி கோபமாகக் கேட்க, "நீ மறுத்தால் நான் அவங்க பார்க்கிற பெண்ணை கல்யாணம் செய்து தான் ஆகணும். எனக்கு வேறு வழி கிடையாது வைஷு. அதுக்கு முன்னாடி நான் நம்ம காதலைச் சொல்லி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன். எனக்காக எங்க ஊரில் வந்து வாழக் கூடாதா?" என்று ஒட்டாத குரலில் ஆரம்பித்து கேள்வியாக கெஞ்சுதலாக முடித்தான் ராம்பிரசாத்.

"என்ன ராம் விட்டுட்டு போய்டுவேன்னு மிரட்டுறியா? ஊர் ஊருன்னு பெரிய சிட்டி மாதிரி சொல்ற. கிராமான்னு சொல்லு. உங்க கிராமத்துக்குப் படித்த பெண்கள் வர மாட்டாங்க. அந்தக் கிராமத்தில் எந்தப் பெண் இருப்பா? No entertainment ... அப்படியே உனக்கு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தாலும் நான் அந்தத் திருமணத்தை நடக்க விட மாட்டேன். என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது." என்று மிரட்டலாக ஆரம்பித்துக் கொஞ்சலாக முடித்தாள் வைஷ்ணவி.

வைஷ்ணவியின் மிரட்டல் தொனியில் கோபம் வந்தாலும், அவளின் கொஞ்சும் குரலில் அதே நொடியில் மனம் மாறினான் ராம்பிரசாத்.

தன் தந்தை கம்பனி, அவள் பண பலம் எனத் தொடர்ந்து வைஷ்ணவி பெருமையாக பேசிக்கொண்டிருக்க, எதற்கும் மனம் மாறாதவனாக மொபைலை வெறித்துப் பார்த்தான் ராம்பிரசாத்.

அவன் கண்களை மூடி, தன் ஊரான அழகியபுரத்தை நினைத்தான். பசுமை நிறைந்த அந்த ஊரில் தான் தன் வாழ்க்கை என்று தீர்மானமாக எண்ணினான்.

"வைஷ்ணவி... என் குடும்பத்தோடு, எங்க ஊரில் வந்து வாழலாம்... அப்படிங்கிற எண்ணம் இருந்தால் என் கிட்ட பேசு. இல்லைனா...." என்று வாக்கியத்தை முடிக்காமல் தன் மொபைல் பேச்சைத் துண்டித்தான் ராம்பிரசாத்.

ராம் பிரசாத்தின் மொபைல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் அதை வெறித்துப் பார்த்தான். 'இவள் ஒருத்திக்காக நான் என் குடும்பத்தை விட்டு விட்டு வர வேண்டுமா?' என்று எண்ணினான் ராம்பிரசாத்.

'எனக்காக அவள் வரக் கூடாதா?' என்ற கேள்வி அவன் மனதில் தோன்றியது. 'நான் வேண்டுமென்றால் அவள் வரட்டும்.' என்று ராம்பிரசாத்தின் மூளை சிந்திக்க, ராம்பிரசாத்தின் மூளையும், மனமும் சண்டையிட்டது.

மூளை வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல, இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த மொபைல் அவன் சிந்தனையை கலைத்தது.

"என் கிட்ட பேசாமல், உன்னால் இருக்க முடியுமா?" என்று வைஷ்னவி கொஞ்சலாகக் கேட்க, ராம்பிரசாத் மீண்டும் குழைவாக பேச ஆரம்பித்தான்.

"வைஷு..." என்று மெலிதாக ராம்பிரசாத் அழைக்க, "ம்.." என்று சமாதானமாக கூறினாள் வைஷ்னவி.

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்று கனிவாக கேட்க, "சொல்லு ராம்." என்று தன் கோபத்தை விடுத்துக் கூறினாள் வைஷ்னவி.

"நீ அழகியபுரத்துக்கு வர போற. என் கண் முன்னாள் அங்கு தான் வாழ போற. நான் அதை பார்க்கத்தான் போறேன்." என்று ராம்பிரசாத் புன்னகையோடு அழுத்தமாகக் கூற, வைஷ்னவி மௌனம் காத்தாள்.

மீண்டும் வைஷ்ணவி பேச தொடங்க, அவர்கள் பேச்சு கொஞ்சலும் சண்டையுமாக நீண்டு கொண்டே போனது.

அவர்கள் முடிவுக்கு வர நேரம் கொடுத்து, நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.

வாசுதேவன் திரும்பி படுத்து, கைகளைத் தூக்க கலக்கத்தில் தன் மனைவி மீது வைக்க மெத்தையில் அவள் இடம் காலியாக இருந்தது.

தூக்கத்தில் பதட்டமாக எழுந்து, பவித்ராவை தேடினான்.

பவித்ரா அருகில் இல்லாததால், லைட் ON செய்து, மணி பார்க்க மணி 3:00 என்று காட்டியது.

அந்த அறையின் சுவரோரத்தில் சாய்வாக அமர்ந்து தூங்கி கொண்டிருந்தாள் பவித்ரா. அவள் முகத்தில் கண்ணீர் ரேகைகள். பவித்ராவின் கோலம் வாசுதேவனை உலுக்கியது. வாசுதேவன் தன்னை தானே நொந்து கொண்டான்.

பவித்ராவின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் லைட் OFF செய்தான்.

பவித்ராவை தூக்கி, மெத்தையில் படுக்க வைத்து அவளைப் போர்வையால் மூடினான்

பவித்ராவின் சோர்ந்து போன முகம், அவன் மனதிற்குச் சோர்வை அளித்தது.

'நீ ஏதோ மறந்து தொலைச்சிட்டா... அது அவ்வளவு பெரிய குற்றமா? நான் ஒரு கூறு கெட்டவன்... நான் அவ்வளவு கோபப்பட்டிருக்க கூடாது.' என்று தனக்கு தானே முணுமுணுத்தான் வாசுதேவன்.

அவர்கள் அறையில் இருந்த ஒவ்வொரு பொருளும், வாசுதேவனைக் கேலியாகவும், பரிதாபமாகவும் பார்த்தது.

பவித்ராவின் சோர்வை போக்க வழி தெரியாமல், அவள் தலையை ஆதரவாகத் தடவினான் வாசுதேவன். பவித்ரா தூக்கம் கலைந்து, அருகே இருக்கும் அவன் முகத்தைப் பார்த்தாள்.

"பவி... கோபமா." என்று குழைவாக, அன்பாகக் கேட்டான் வாசுதேவன்.

வாசுதேவனின் நெகிழ்வான குரலில், அவன் முன்பு பேசிய பேச்சுக்கள் பின்னுக்கு செல்ல, மெல்லிய புன்னகையோடு தூக்கக் கலக்கத்தில் மறுப்பாகத் தலை அசைத்தாள்.

அன்பு தவறுகளை மன்னிக்கக் கூடியது....

அன்பு மனதை மாற்றும் வல்லமை உடையது.

அன்பு அறிவை மறைக்கும் ஆற்றலையும் உடையது!

அன்பால் நிறைந்த வாசுதேவனின் மனம், தன் தாயின் தவறை அவன் கண்களுக்கு மறைத்து விட்டது. வாசுதேவன் தன் மனைவி மீது கொண்ட எல்லை இல்லா அன்பு, அவளையும் தன் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது.

'விவரம் அறியா வயதில் திருமணமாகி, உலகம் அறியாமல் புகுந்த வீட்டிற்கு வந்த பழங்காலத்து பெண்ணால் அப்படி வாழ்ந்திருக்க முடியுமோ?' என்ற ஐயம் நமக்குள் எழுகிறது.

ஆனால் இன்றைய சூழலில், ஒரு பெண்ணால் அப்படி வாழ முடியாது என்பதை பவித்ராவின் ஒவ்வொரு அணுவும் கூறியது.

ஆனால், நிதர்சனம் ?

காலையில் எழுந்து குளித்துவிட்டு தன் வேலைகளை ஆரம்பிக்க வெளியே சென்றாள் பவித்ரா.

உத்தமி பவித்ராவின் முகத்தைக் கூர்மையாக பார்த்து, அதைப் படிக்க முயன்றார். உணர்ச்சி துடைத்த முகத்தில், அவரால் பெரிதாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், அவர் அனுபவம் அவருக்கு சில விஷயங்களைக் கூறியது.

"பவித்ரா... பவித்ரா..." என்று வாசுதேவனின் அலறல் சத்தம் வீடெங்கும் ஒலித்தது.

'இப்ப எதுக்கு இப்படி கூப்பாடு போடுறாங்க...' என்று எண்ணி அவர்கள் அறையை நோக்கிச் சென்றாள் பவித்ரா.

"அம்மா..." என்று சிணுங்கி கொண்டே சந்தோஷ் வெளியே வர, அவனை கை பிடித்து அழைத்துச் சென்றாள் பவித்ரா.

"பவித்ரா. சந்தோஷை என்கிட்டே குடு. வாசு கூப்பிடுறான்... என்னனு கேளு." என்று அதிகாரமாக ஒலித்தது உத்தமியின் குரல்.

'அது தான் போய்கிட்டு இருக்கேன் இல்லை. இதையும் சொல்லனுமா?' என்று எண்ணம் தோன்றினாலும், சந்தோஷை அவரிடம் விட்டுவிட்டு மௌனமாக தங்கள் அறை நோக்கிச் சென்றாள் பவித்ரா.

அவளுக்காகக் காத்திருந்த வாசுதேவன் பவித்ரா அவர்கள் அறைக்குள் நுழைந்தவுடன், அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து, "அம்மா, சொன்னால் தான் வருவியா? நான் கூப்பிட்டா உடனே வர மாட்டியா?" என்று குழைவாக கேட்டான்.

'அது தான் நான் வருவதற்குள், அவங்க அனுப்புவது போல் சொல்லிட்டாங்களே.' என்று சிந்திக்க ஆரம்பித்தாள் பவித்ரா.

'அங்க தான் போறேன். என்று அவர்களிடம் சத்தமாக கூறி இருக்க வேண்டுமா? இல்லை இதை இவரிடம் சொல்லி புரிய வைக்க வேண்டுமா? இல்லை இது தான் என் விதி... என்று அமைதி காக்க வேண்டுமா?' என்று சுய ஆராய்ச்சியில் மூழ்கினாள் பவித்ரா.

"ஓய்... நான் இவ்வளவு அருகாமையில் நிக்கும் பொழுது, என்ன யோசனை?" என்று கொஞ்சலாக கேட்டான் வாசுதேவன். பவித்ரா அவன் முகம் பார்த்தாள். அதில் அவன் கண்களில், காதல் வழிந்தது. அவன் முகத்தை அவன் கண்களில் வழியும் காதலை தன் கண்களால் பருகிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

"என்னை மன்னிச்சிரு டி... நீ தப்பு செய்தால் கூட, நான் உன்னைத் திட்டிருக்க கூடாது." என்று அவன் மன்னிப்பு கோரும் குரலில் கூற, 'இவன் தன் மீது கொண்டுள்ள அளவில்லா காதலை பார்த்து வியப்பதா? அல்லது அவன் தாய் மீது கொண்டுள்ள அன்பைப் பார்த்து கோபம் கொள்வதா?' என்றறியாமல் வாசுதேவனைக் குழப்பமாக பார்த்தாள் பவித்ரா.

பவித்ரா எதுவும் பேசாமல் அவன் முகம் பார்க்க, " நான் அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்திருக்கக் கூடாது. நேத்து நீ கீழ விழுந்துட்ட பவி. எனக்கு மனசு கஷ்டம் ஆகிருச்சு. ஏன் டீ தனியா கீழ படுத்து தூங்குற? நான் உனக்கு அவ்வளவு அந்நியமா போய்ட்டேனா?" என்று வருத்தமான குரலில் ஆரம்பித்து கேள்வியோடு முடித்தான் வாசுதேவன்.

பவித்ரா மறுப்பாகத் தலை அசைக்க, அவள் முகத்தைக் கையில் ஏந்தி, அவள் நெற்றில் இதழ் பத்திதான் வாசுதேவன்.

"பேச மாட்டியா பவி... நீ தானே பவி எனக்கு எல்லாம்... நீ இல்லாமல் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன். உனக்கு அது தெரியாதா?" என்று அவள் மௌனத்தைக் குற்றம் சாட்டும் விதமாகச் செல்ல கோபத்தோடு கேட்டான் வாசுதேவன்.

"அத்தான்..." என்று தேனினும் இனிய குரலில் அவனை அழைத்தாள் பவித்ரா.

"இப்படி கூப்பிட இவ்வளவு நேரமா?" என்று வாசுதேவன் அவளை தன் மேல் சாய்த்து கடினமாகக் கேட்டான்.

 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
வாசுதேவன் குரலில் உள்ள கடினம், அவன் செயலோடு ஒட்டாமல் நிற்க, அவன் தலை கோதி, "அப்படி எல்லாம் இல்லை அத்தான். சுபா கொஞ்ச நேரத்தில் வந்திருவா..." என்று மெலிதாக கூறினாள் பவித்ரா.

"வரட்டும்..." என்று அவள் முகம் பார்த்து கூறினான் வாசுதேவன். அவர்கள் செல்ல சீண்டல்கள் நீண்டு கொண்டே போக, "வாசு..." என்று உத்தமியின் குரல் ஓங்கி ஒலித்தது.

"வரேன் அம்மா." என்று கூறி வாசுதேவன் அவர்களை நோக்கிச் சென்றான்.

சுபா வந்திருக்க அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கோவிலுக்குக் கிளம்பினர்.

சுபா, வாசுதேவன்,பவித்ரா அவர்களின் மகன் சந்தோஷ் அனைவரும் காரில் கோவிலுக்குச் சென்றனர்.

காரை வாசலில் நிறுத்திவிட்டு, அவர்கள் கோவிலுக்குள் செல்ல, வாசுதேவன், பவித்ரா வயதை ஒட்டிய இளம் ஜோடி எதிரே வந்தது. அவர்களுடன் சந்தோஷ் வயதை ஒட்டிய ஒரு பெண் குழந்தையும் வந்தது.

அந்தப் பெண் குழந்தையைப் பார்த்ததும் சந்தோஷ் வேகமாக அவர்களை நோக்கி ஓடினான்.

"ஹை... அகல்யா..." என்று சந்தோஷ் பெரிய மனிதன் போல் கூற, "ஹாய் சந்தோஷ்...." என்று பெரிய மனுஷியாக அவனுக்கு கை குலுக்கினாள் அகல்யா.

அவர்களைப் பார்த்ததும் தன் கணவனை தயக்கத்தோடு பார்த்தாள் பவித்ரா. வாசுதேவனின் முகம் இறுகி இருந்தது.

வாசுதேவன் வீடு அருகே வசிக்கும் இவர்கள் பண்ணை வீடு என்று அழைக்கப்படுவர்.

'இவர்கள் குடும்பத்திற்குள் ஏதோ பகை. இவர்களைப் பற்றி அத்தான் பேச விருப்பப்பட்டதும் இல்லை. நானும் கேட்டதில்லை. ஏதாவது பொது இடத்தில் கோமதியை பார்த்தால், நான் பேசுவதோடு சரி. சந்தோஷுக்கு அவங்க வீட்டு பெண் தோழியா... நல்ல புடிக்கிறாய்ங்க freindship...' என்று யோசனையோடு தடுமாற்றமாக நின்றாள் பவித்ரா.

பண்ணை வீட்டு மனிதர்களை கண்டதும், அவர்கள் அருகே ஓடி சென்று, "சந்துரு அண்ணா... சுவமா இருக்கீயளா?" என்று பாசமாக கேட்டாள் சுபா.

'இவளுக்கு இந்த வீட்டுக் கட்டுப்பாடு எதுவும் பொருந்தாது.' என்று எண்ணி பவித்ரா அங்கு நடப்பதை மெளனமாக வேடிக்கை பார்த்தாள்.

சுபாவிடம் தலை அசைத்து, பதில் பேசாமல் சந்துரு என்ற அழைக்கப்பட்ட சந்திரசேகர் வாசுதேவனைக் கூர்மையாக பார்த்தான்.

கோமதி சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டு, "சுவம் தான் சுபா... நீங்க எல்லாரும் எப்படி இருக்கீக?" என்று கோமதி வினவச் சுபா சிரித்தமுகமாக தலை அசைத்தாள்.

"நான் பவித்ராவை அங்கனக்குள்ள அப்ப அப்ப பாப்பேன்... உன்னைத் தான் பாக்க முடியறதில்லை சுபா..." என்று கோமதி கூற, "உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்கே..." என்று சுபா உணர்ச்சி பொங்க கூறினாள்.

"என்ன சுபா இப்படி சொல்லிப்புட்ட.... இவுக உங்களைப் பத்தி பேசாத நாளே கிடையாது." என்று கோமதி சுபாவிடம் கூற, வாசுதேவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

" நானும் உங்களை பார்க்கணும்... பேசணுமுன்னு நினைப்பேன்... முடியறதில்லை.. நான் உங்களை மதினின்னு கூப்பிடட்டுமா?" என்று பாசமாக கேட்டாள் சுபா.

கோமதி சிரித்த முகமாகத் தலை அசைத்தாள்.

அகல்யாவும், சந்தோஷும் பேசிக்கொண்டிருக்க, "குழந்தைகளுக்குத் தெரிந்த நாகரிகம் கூட பெரியவர்களுக்குத் தெரியலை." என்று குழந்தைகளை பார்த்தபடி முணுமுணுத்தாள் சுபா.

"பவித்ரா கோவிலுக்கு வந்தியா இல்லை கதை பேசிட்டு இருக்க வந்தியா?" என்று பவித்ராவிடம் எகிறினான் வாசுதேவன்.

'அது தானே சிங்கம் என் கிட்ட தானே சீறும்..." என்று அவனை அமைதியாகப் பார்த்தாள் பவித்ரா.

"சுபா, உன் வீட்டுக்காரரை கூட்டிட்டு வீட்டுக்கு வா." என்று உரிமையோடு அழைத்தான் சாத்திரசேகர்.

"வரேன் அண்ணா..." என்று சுபா சம்மதமாகத் தலை அசைக்க, வாசுதேவனின் கை முஷ்டி இறுகியது.

வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்த தந்தையை அழைத்து, "அப்பா. My friend அகல்யா." என்று சந்தோஷ் கூற, மௌனமாக தலை அசைத்தான் வாசுதேவன்.

தன் உணர்ச்சிகளை மறைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

"தேவா அங்கிள். அப்பா உங்களை அப்படி தான் சொல்லுவாங்க." என்று அகல்யா மழலை குரலில் கூற, அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தான் வாசுதேவன்.

'தேவா.. இந்த அழைப்பு அவனுக்கு மட்டுமே உரிமையான அழைப்பு...' என்ற எண்ணம் வாசுதேவனை நிலை குழைய செய்தது.

வாசுதேவன் அகல்யாவை தூக்கி கன்னத்தில் முத்தமிட, 'இவன் என் தேவா.' என்று அவனைப் பெருமையாக பார்த்தான் சந்திரசேகர்.

குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, "போகலாம்... நேரம் ஆகிருச்சு." என்று கடினமான குரலில் கூறினான் வாசுதேவன்.

பவித்ரா, சுபா அனைவரும் தலை அசைப்போடு கோவிலுக்குள் சென்றனர்.

"என்றாவது ஒரு நாள் எல்லாப் பிரச்சனைகளும் தீராதா?" என்று பெருமூச்சு விட்டான் சந்திர சேகர்.

"நிச்சயமாகச் சரி ஆகிரும்..." என்று கோமதி நம்பிக்கையோடு கூறி, சந்துருவோடு நடந்தாள் கோமதி.

விதி இவர்களைப் பார்த்து Rolling on the Floor Laughing emoji :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆக மாறி உருண்டு உருண்டு சிரித்தது.

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…

அடுத்த பதிவோடு உங்களை வெள்ளி அன்று சந்திக்கிறேன்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top