• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
?எல்லாப் பெண்களும் இப்படி நிமிர்ந்து நின்றால். ...
??????????????
உங்க எழுத்தை வாசித்தால் நிச்சயம் நிமிர்வு தானாகவே வந்துவிடும். ..


??????????????
 




Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
Semma ud ?????????????????????????
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
"பக்கத்தில் ஒரு புத்திசாலி இருந்தா அவங்களை கூட்டணியில் சேத்துக்கணும்..." என்று நந்தினி கூற, "யாரு?" என்று அங்குமிங்கும் தேடினான் ராம் பிரசாத்.

"பிரசாத்... இதெல்லாம் பழைய ஜோக்... நாங்க நிறைய படத்துல பாத்துட்டோம்... நிறைய கதையில படிச்சிட்டோம்..." என்று நந்தினி அவனைக் கலாய்க்க, "உனக்கு என்ன வேணும்?" என்று பொறுமை இழந்தவனாகக் கேட்டான் ராம் பிரசாத்.

"நீங்க ஏதோ பதட்டத்தில் இருக்கீங்க... அது தான் நிதானம் இல்லாம என்னன்னவோ பேசுறீங்க..." என்று ராம் பிரசாத்தின் பொறுமை இழந்த கேள்வியில் நந்தினி அத்தனை நேரம் இருந்த குறும்பு தனம் மறைந்து தீவிர முகபாவனையோடு கூறினாள்.

ராம் பிரசாத் துணுக்குற்றவனாய் அவளைப் பார்க்க, அவனுக்கு தனிமை கொடுத்து நந்தினி அவர்கள் அறையிலிருந்து வெளியே சென்றாள்.

'நான் படித்த படிப்பு வீணாகக் கூடாது... சுதந்திரமாகச் சிந்தித்து செயல் பட வேண்டும்... அது உபயோகமாகவும் இருக்க வேண்டுமென்றால்... நான் பிரசாத்தோடு இணைத்துப் பணிபுரிய வேண்டும்...' போன்ற எண்ணங்கள் நந்தினியின் மனதில் எழுந்தது.

ராம் பிரசாத் செய்வதறியாமல் நாற்காலியில் சாய்வாக அமர்ந்து… தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ராம் பிரசாத்தின் மனதில் பல எண்ணங்கள். தவறு என்று அறிந்தாலும், வைஷ்ணவி பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் எழுந்து கொண்டு தான் இருந்தது. அதுவும் இன்று வைஷ்ணவி அழைத்ததிலிருந்து... பல குழப்பங்கள்... பல கேள்விகள்...

'நான் அனைத்தயும் எப்படி சமாளிக்க போகிறேன்?' என்ற கேள்வி ராம் பிரசாத்தின் மனதில் பூதாகரமாய் எழுந்தது.

'நான் ஏன் நந்தினியிடம் கோபமாக பேசினேன்... பாவம் அவ என்ன தப்பு பண்னா என்னை கல்யாணம் செய்ததை தவிர?' என்று நந்தினிக்காக வருத்தப்பட்டான்.

நந்தியை காயப்படுத்தும் நோக்கமெல்லாம் ராம் பிரசாத்துக்கு இல்லை. 'நந்தினியிடம் பேச்சு இல்லாமல் விலகி நிற்க வேண்டும் என்று எண்ணினாலும், தன் சாமர்த்திய பேச்சால்... என்னை விலக விடமால் செய்கிறாள்... பக்குவமான பெண் என்பதால், நான் சொன்ன விஷயங்களை இயல்பாக எடுத்துக் கொண்டாலும்… இனி புதிதாக பிரச்சனை வந்தால் நந்தினி அமைதியாக இருக்க மாட்டாள்...' என்று நந்தினி பற்றிய ராம் பிரசாத்தின் எண்ணங்கள் அவனை எச்சரித்து நின்றது.

ஜன்னல் வழியாகக் காற்று சில்லென்று வீசியது. நம்மால் ராம் பிரசாத் அறையிலுள்ள ஜன்னல் வழியாகச் சாலையில் சோர்வாக நடந்து செல்லும் வாசுதேவனை காண முடிகிறது.

வாசுதேவன் வீட்டிற்குள் நுழைய, "ஏண்டா... உம் பொஞ்சாதி நீ போனதிலிருந்து அறையை விட்டு வெளியே வரவே இல்லை... வேலை எல்லாம் அப்படி அப்படியே கிடக்கு... என்ன தான் பண்ணுதாலோ அறைக்குள்ள... சந்தோஷ் கூட வெளிய தான் விளையாடுதான்..." என்று உத்தமி குற்றப் பத்திரிக்கை படிக்க… வாசுதேவன் தலை அசைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

உத்தமி தன் போக்கில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.



வாசுதேவன் அறைக்குள் சென்று நாற்காலியில் அமர முற்பட, அவன் வழியை மறைத்தபடி, "அத்தான்..." என்று

கோபமாக... அழுத்தமாக அழைத்தாள் பவித்ரா.

பவித்ராவின் அழைப்பில், அவளைப் பார்த்தான் வாசுதேவன்.

பவித்ராவின் கண்கள் அழுது சிவந்திருந்தது. அவள் சோகமான முகம் வாசுதேவனின் மனதைத் தொட, எதுவும் பேசாமல் அமைதியாகப் பவித்ராவை பார்த்தான்.

"அத்தான்... கோபமாக இருந்தா என்னைத் திட்டுங்க... அதுக்காகப் பேசாமெல்லாம் இருக்க கூடாது... இப்படி பேசாம வெளிய போகக் கூடாது..." என்று பவித்ரா கண்டிப்போடு கூறினாள்.

'செய்றதையும் செய்திட்டு... பேசுறதையும் பேசிட்டு... இப்ப இப்படி மிரட்டல் வேற... இம்புட்டு தைரியமும் என்கிட்டே மட்டும் தான்... யாரு என்ன சொன்னாலும் என்னைச் சந்தேக பட வேண்டியது... இல்லை அம்மாவைப் புரிஞ்சிக்கிறது கிடையாது...' என்ற எண்ணத்தோடு வாசுதேவன் பவித்ராவை பார்த்தான்.

'பேசினால் தான் வழி விடுவேன்...' என்று பிடிவாதமாகப் பவித்ரா நிற்க, " பவி… உன்னைத் தூக்கி அப்படி போடுறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?" என்று அவன் காதில் கிசுகிசுத்தான் வாசுதேவன்.

"எதுக்கு அத்தான் என்னை தூக்கி போடணும்? அது தான் என்னைத் திட்டினாலும் பரவால்லைன்னு சொன்னேன்ல?" என்று பவித்ரா கண்கலங்க, " எட்டி… யாரைத் திட்டச் சொல்ற? புள்ள தாச்சியையா? இல்லை என் பவியையா? இல்லை எம்பொஞ்சாதியையா?" என்று வாசுதேவன் புருவம் உயர்த்தி கேட்டான்.



அவன் குரல், சொல், முகம் அவன் கோபத்தின் அளவை கூற, 'என் அத்தானுக்கு என்மேல் கோபம் எவ்வளவு நேரம் தாங்கும் என்று எனக்குத் தெரியாதா?' என்ற எண்ணத்தோடு பவித்ரா வாசுதேவனை காதல் பொங்கப் பார்த்தாள்.

"நெக்கலஸ் அன்னைக்கே நீங்க அவசரப்பட்டுக் குடுத்துடீங்க... உங்களுக்கு விஷயம் இன்னக்கி தானே உறுதியா தெரியும்... எனக்குக் கிபிட் எதுவும் கிடையாதா?" என்று சரசமாக வாசுதேவனை சமாதானப்படுத்தும் விதமாக வினவினாள் பவித்ரா.

கோபம், வருத்தம் அனைத்தையும் மறைத்துக் கொண்டு, "உனக்கு என்ன வேணும் பவி?" என்று அவள் கண்களைப் பார்த்து ஆழமாகக் கேட்டான் வாசுதேவன்.

"என்னை மன்னிச்சிருங்க அத்தான்... நான் உங்க கிட்ட தான் முதலில் சொல்லிருக்கணும்... நீங்க ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பீங்க... யார் என்ன சொன்னா என்னனு நான் யோசிச்சிருக்கணும்... சந்தோஷ பட வேண்டியவங்களை வருத்தப்பட வச்சிட்டேன்..." என்று மன்னிப்பை பரிசாக கேட்டாள் வாசுதேவனின் மனைவி.

வாசுதேவன் மெலிதாகப் புன்னகைத்தான். பவித்ராவின் தலை கோதி, அவள் மனதை படிக்கும் நோக்கோடு பவித்ராவின் கண்களை ஊடுருவி பார்த்தான். பவித்ராவின் கண்கள் வாசுதேவன் மீது அவள் கொண்டுள்ள அளவில்லா அன்பை காட்டியது.

வாசுதேவனின் பார்வை, செயல் என ஒவ்வொன்றும் தன் மனைவி கேட்ட மன்னிப்பை முழு மனதாய் கொடுக்க... வாசுதேவனின் தலையோ இரு பக்கமும் மறுப்பாய் அசைந்தது.

"எட்டி... தப்பு பண்ணா... நிச்சயம் தண்டனை உண்டு..." என்று அவன் உதடுகள் மெலிதாகப் பவித்ராவின் காதில் கிசுகிசுத்தது.

வாசுதேவன் கூறிய தண்டனையில் தன் இரு கண்களையும் விரித்து அவனை பரிதாபமாகப் பவித்ரா பார்க்க… தன் மனைவியை புருவம் உயர்த்தி, மீசையை முறுக்கி… குறும்பாய் பார்த்தான் வாசுதேவன்.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…

அடுத்த பதிவோடு உங்களை செவ்வாய் அன்று சந்திக்கிறேன்...
Vasu varuthapatadhu kashtama irundhadhu
But avangalum pavam
Aana Evlo prechana nalum rendu perum sanda pottalum avanga anbu and kadhal ellathaiyum saei panidudhu....
Orutharukoruthar vitu tharanga.....
Vasu and Pavi lovely couple.....❤😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top