• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode -28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Dear Friends,
Thank you so much for your likes and comments. :):):)

I am trying to streamline the days for episodes... From today episodes will be on Tuesday, Thursday, Sunday or the previous nights as before. Will try to stick to this schedule as much as I can... :) Thank you so much for your patience...


இரண்டல்ல ஒன்று – 28

வாசுதேவனின் அழைப்பில் அவன் முகம் பார்த்தாள் பவித்ரா.

பவித்ராவின் பார்வையில் துளி அளவும் அன்பு, காதல், கோபம், வெறுப்பு என எந்த உணர்ச்சிகளும் இல்லை. ஏமாற்றம், வலி இரண்டையும் கண்களில் தேக்கிக் கொண்டு விலகல் தன்மையோடு வாசுதேவனைப் பார்த்தாள் பவித்ரா.

பவித்ராவின் விலகல் பார்வை வாசுதேவனுக்குப் புரிந்தாலும்... அதை ஏற்றுக் கொள்ளாமல் பவித்ராவை பரிதாபமாகப் பார்த்தான் வாசுதேவன்.

வாசுதேவன் அருகே நின்று கொண்டிருக்க… பவித்ரா எழுந்து அமர்ந்தாள்.

"எழுந்திருக்காத பவி... படுத்துக்கோ..." என்று கரிசனத்தோடு கூறினான் வாசுதேவன்.

பவித்ராவின் காதில் வாசுதேவன் பேசியது விழுந்ததா இல்லை விழவில்லையா என்று நமக்கு தெரியவில்லை.பவித்ரா அசையாமல் அமர்ந்திருந்தாள்.

"இப்ப பரவாலையா பவி?" என்று வாசுதேவன் அவள் முகம் பார்த்துக் கேட்க, தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள் பவித்ரா.

"பேசமாட்டியா பவி..." என்று வாசுதேவன் கேட்க, பவித்ரா மௌனமாக அவனைப் பார்த்தாள்.

"எட்டி..." என்று வாசுதேவன் அழைக்க, அந்த அழைப்பில் பவித்ராவின் கண்கள் கலங்கியது.

"பவி பேசுட்டி... அத்தான் கிட்ட பேச மாட்டியா?" என்று கெஞ்சுதலாகக் கேட்டான் வாசுதேவன்.

"பவி... நான் ரொம்ப பயந்துட்டேன்ட்டி... நீ கண் முழிச்ச பிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சு..." என்று கலங்கிய குரலில் பயம் முழுதும் அகலாதவனாகக் கூறினான் வாசுதேவன்.

பவித்ரா எந்தவித ஒட்டுதலுமின்றி வாசுதேவனைப் பார்த்தாள்.

"பவி... அப்படிப் பார்க்காத... அத்தான் மேல கோபப்படு பவி... அத்தானைத் திட்டிரு பவி..." என்று வாசுதேவன் உடைந்த குரலில் கூற, அவனைக் கண்கலங்கப் பார்த்தாள் பவித்ரா.

"எனக்குத் தெரியாதே... எனக்கு என் அத்தான் மேல் கோபப்படத் தெரியாது... என் அத்தானைத் திட்டவும் தெரியாது..." என்று அழுத படி கூறினாள் பவித்ரா.

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதுவரைக்கும் நான் என் அத்தான் கிட்ட ஒவ்வொரு தடவையும் கோபப்பட்டதும், சண்டை போட்டதும்... அவங்க அம்மா மேல் உள்ள கோபமும்... அவங்க அம்மா கிட்ட போட வேண்டிய சண்டையும் தான்... அத்தான் மேல... இத்தனை வருஷத்தில் எனக்குக் கோபமே வந்ததில்லையே... என் அத்தான் மேல், எனக்கு வருத்தம் கூட வந்ததிலேயே..." என்று தன் முகம் மூடி கதறினாள் பவித்ரா.

செய்வதறியாமல் வாசுதேவன் பவித்ராவை பார்க்க, "என் அத்தான் கோபத்தில் தான் மன்னிப்பு கேட்க சொல்லுதாங்கன்னு நினச்சேன்... ஆசைப்பட்டு மன்னிப்பு கேட்க சொல்லுதாங்கன்னு எனக்கு தெரியாம போச்சே... அத்தான் ஆசைப் பட்டு மன்னிப்பு கேட்க சொல்லுதாங்கன்னு தெரிஞ்சிருந்தா, முதலிலேயே கேட்டு தொலைச்சிருப்பேனே... அத்தான் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வராமலே இருந்திருக்குமே..." என்று தலையில் படார் பாடாரென்று அடித்துக் கொண்டு அழுதாள் பவித்ரா.



பவித்ராவின் அழுகையையும்… செயலும் தாங்க முடியாமல், "பவி..." என்று வாசுதேவன் பவித்ராவின் கைகளைப் பற்ற, பவித்ராவின் கைகள் விறைத்து, அவள் உடல் கம்பாய் இறுகியது.

பவித்ராவிடமிருந்து சட்டென்று விலகி… வாசுதேவன் புரியாமல் அவள் முகம் பார்க்க, "என் அத்தான் விருப்பப்பட்டுக் கேட்டு கொடுக்காமலிருந்து எனக்குப் பழக்கமில்லை.. அது என்ன மன்னிப்பு கேளு... இல்லைனா உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லைன்னு சொல்றது... அத்தான் கேட்ட இரண்டையும் கொடுத்திருவேன்... மன்னிப்பும் கேட்டுட்டேன்... அத்தான் சொன்ன மாதிரி இனி அத்தானுக்கும், எனக்கும் ஒண்ணுமில்லை..." என்று உறுதியான குரலில் கூறினாள் பவித்ரா.

"பவித்ரா..." என்று அழுத்தமாக வாசுதேவன் அழைக்க, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் பவித்ரா.

அப்பொழுது, நந்தினி மருத்துவர் சொன்ன மருந்தை வாங்கி கொண்டு கதவைத் தட்டி உள்ளே வர, "நந்தினி..." என்ற கதறலோடு அவள் தோள் சாய்ந்து விம்மினாள் பவித்ரா.

"அக்கா... அழாத அக்கா.... என்ன பிரச்சனைனாலும் சரி பண்ணலாம்... யாரை கேட்கணும்ன்னு சொல்லு... நாக்கை புடுங்கிற மாதிரி கேட்ருவோம்... நீ அழாத அக்கா... இந்த மாதிரி நேரத்தில் அழலாமா சொல்லு... பாப்பாவும் அழுமில்லை?" என்று குழந்தையைச் சமாதானம் செய்வது போல், தன் சகோதரியைச் சமாதானம் செய்தாள் நந்தினி. பவித்ரா விம்மியபடி நந்தினியிடம் சாய்ந்து கொண்டாள்.

வீட்டில் பிரச்சனையில் தனியாகப் போராடி, இதுவரை யாரிடமும் பேசாமல் மௌனம் காத்த பவித்ரா, வாசுதேவனிடம் பேசியபின், இத்தனை நேரம் இல்லாத பற்றுக்கோல் கிடைத்தது போல், தன் தங்கையின் தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள் பவித்ரா.

வாசுதேவன் பவித்ராவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் துணை தேடாமல், தனியாக அழுத பவித்ராவும், தன்னை அத்தான் என்று அழைக்காத பவித்ராவும் வாசுதேவனுக்குப் பல செய்திகளை உணர்த்தி விட்டாள்.

'நீங்க என் பக்கத்திலேயே இருக்கீங்களே... வேற என்ன வேணும்?' என்று கூறி தன் தோல் சாய்ந்து கொண்ட பவித்ரா தன்னை விட்டு எங்கோ தொலை தூரம் சென்றுவிட்டதை பவித்ராவின் செயல் உணர்த்திக் கொண்டிருக்க… அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாசுதேவன் மறுப்பாகத் தலை அசைத்தான்.

"அக்கா..." என்று நந்தினி அவள் தலை கோதி அழைக்க, "நந்தினி என்னை அவங்க வீட்டுக்குப் போக சொல்லாதீங்க... எனக்கு அவமானமா இருக்கு... ரொம்ப தனிமையா இருக்கு நந்தினி.... நான் அவுங்க வீட்டுக்குப் போகலை..." என்று பவித்ரா வாசுதேவனை கைகாட்டி கண்களில் பயத்தோடு கூறினாள்.

பவித்ராவின் கைகள் நடுங்கி, அவள் உடல் சில்லிட்டது.

"பவி... என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது...." என்று நந்தினி அங்கு இருப்பதையும் மறந்து கண்களில் கண்ணீர் வழிய பவித்ராவிடம் கெஞ்சினான் வாசுதேவன்.

"நான் இத்தனை வருஷம் அப்படி தான் நினைச்சுகிட்டு இருந்தேன்... ஆனால்... அப்படி எல்லாம் இல்லைன்னு எனக்கு தெரிஞ்சுருச்சு..." என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள் பவித்ரா.

வாசுதேவன் மீதுள்ள கோபம் மொத்தமும் வடிந்து, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் நந்தினி.

'ஆனால், என்ன நடந்திருக்கும்? அக்கா மனசளவில் காயப்பட்டிருக்காளே?' என்று யோசனையோடு இருவரையும் பார்த்தாள் நந்தினி.

வாசுதேவன் கண்களில் காதல் வழிய, அத்தோடு வலியோடு கண்ணீரும் வழிந்தது. பவித்ராவின் கண்கள் ஏமாற்றத்தையும், வலியையும் மட்டுமே சுமந்து கொண்டிருந்தது.

'இவர்களுக்குத் தனிமை ஒரு தீர்வாக இருக்கும்...' என்றெண்ணி, "அக்கா... நான் வெளிய எல்லாரையும் பார்த்துட்டு வரேன்... நீ அத்தான் கூட பேசிட்டு இரு." என்று கூறி நந்தினி வெளியே செல்ல, அவள் கைகளை பிடித்து, "நீயும் என் கூட இருக்க மாட்டியா?" என்று பிடிவாதமாகக் கேட்டாள் பவித்ரா.

நந்தினி தர்மசங்கடமாக நெளிய, "நந்தினி... நீ இரு, நான் எல்லாரையும் வர சொல்றேன்..." என்று கூறி தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றான் வாசுதேவன்.

ராம் பிரசாத் வீட்டில், அவனைத் தவிர அனைவரும் கிளம்பிவிட, செல்வி, ஆவுடையப்பன், மகாதேவன், சுபா அனைவரும் உள்ளே வந்தனர். வாசுதேவன் வெளியே நின்று கொண்டான்.


பவித்ரா சுபாவிடம் பேசவில்லை. சிறிது நேரத்தில், சுபா வாசுதேவன் அருகே வந்து நின்று கொண்டாள்.
Vasu um pavam Pavi um pavam....yen Author ji ipd panreenga.....🥺🥺
But konja naal vilagi irundha vachum Uthami thirundharanga la nu paklam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top