Irandalla Ondru - Episode 29

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
Dear Friends,
Thank you so much for you likes and comments... :)

இரண்டல்ல ஒன்று – 29

பவித்ரா மறுப்பாகத் தலை அசைக்க… வாசுதேவன் அவளை காருக்கு அழைத்துச் செல்ல, பவித்ரா அவனைப் பிடிவாதமாகப் பார்த்தாள்.

"நான் உன்னை அம்மா வீட்டில் விடறேன்..." என்று வாசுதேவன் ஆழமான குரலில் கூற, பவித்ரா எதுவும் பேசாமல் மௌனமாக காரில் ஏறி அமர்ந்துகொண்டு கார் சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்.

மகாதேவன், சுபா அவர்கள் கிளம்பிவிட... செல்வி, ஆவுடையப்பன் வீட்டை நோக்கி முன்னே சென்றனர்.

பவித்ரா காரில் அமர்ந்துவிட, "நந்தினி..." என்று அவளை அழைத்து , ராம் பிரசாத், நந்தினி அருகே சென்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாக பேச ஆரம்பித்தான் வாசுதேவன்.

"நான் அடிக்கடி, வந்து பவியை பாத்துக்கிறேன்... நீ அவளை அப்பப்ப பார்த்துக்கோ... அவளைத் தனியா விட வேண்டாம்..." என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு, புன்னகையோடு கூறினான் வாசுதேவன்.

நந்தினி சிரித்த முகமாகத் தலை அசைத்து, "அத்தான்... என்ன பிரச்சனை நடந்திருந்தாலும்... எல்லாம் சரி ஆகிரும் அத்தான்... அக்காவை மட்டுமே இருபத்தி நான்கு நேரமும் நினைத்துக்கொண்டு இருக்கிற உங்களை மாதிரி அத்தான் கிடைக்க அவ கொடுத்துத் தான் வச்சிருக்கணும்..." என்று நந்தினி கூற வாசுதேவன் சிரித்துக் கொண்டான்.

"வாசு அண்ணா... இவளை நம்பாதீங்க... இப்ப இப்படி பேசுவா? எப்ப சட்டையை பிடிப்பா? எப்ப கழுத்தை பிடிப்பான்னு சொல்லவே முடியாது..." என்று ராம் பிரசாத் வாசுதேவனை எச்சரிக்க, "என்ன ராம்... பயங்கர அனுபவம் இருக்கும் போல..." என்ற நக்கலாக கேட்டான் வாசுதேவன்.

ராம் பிரசாத் பரிதாபமாகத் தலை அசைக்க, நந்தினி இருவரையும் முறைத்துப் பார்த்தாள்.

"நீங்க கிளம்புங்க அத்தான்... நான் வந்து அக்காவை அப்பப்ப பார்த்திக்குறேன்..." என்று கூறி நந்தினி ராம் பிரசாத் காரில் ஏறினான்.

"அது என்ன சந்தடி சாக்குல... அக்காவை மட்டும் இருபத்து நாலு மணி நேரமும் நினைக்கிற அத்தான்னு சொல்ற... யாரை மேடம் மறைமுகமா குத்தி காட்டுறீங்க?" என்று வண்டியைக் கிளப்பாமல், நந்தினி முகம் பார்த்துக் கேள்வியாக நிறுத்தினான் ராம் பிரசாத்.

"குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...." என்று நந்தினி மிடுக்காகக் கூற, அவர்கள் வழியை மறித்தபடி வைஷ்ணவியின் கார் நின்றது.

வைஷ்ணவி, காரிலிருந்து இறங்கி வந்து, "ராம் நீ சொன்னது சரி தான்... நீ அழகியபுரத்துக்கு வர போற. என் கண் முன்னாள் அங்கு தான் வாழ போற. நான் அதைப் பார்க்கத்தான் போறேன்னு சொன்னியே... உண்மை தான் நீ சொன்னது நடந்திருச்சு... நீ அப்பவும், உன் கூட வாழ போறன்னு சொல்லலை... சரியா தான் சொல்லிருக்க... ஆனால் என்னை மீறி உன் கனவு நிறைவேறாது..." என்று வைஷ்ணவி ராம் ப்ரசாத்திடம் மிரட்டலாகக் கூற, ராம் பிரசாத் முகம் சுழித்தான்.

"லூசா நீ... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அதோ போறாங்களே அவுங்க குடும்பத்துக்கும், இவங்க குடும்பத்துக்கும் பகைன்னு நினைச்சிட்டு இருக்கியா? நேர்ல போய்... எங்களுக்கு எதிரா தான் பன்றேன்னு அவங்க கிட்ட சொல்லி பாரு... எங்களுக்கு வேலையே இல்லாம பூனை மாதிரி உக்காந்திருக்க எங்க அக்காவே உன்னை வகுந்துறவா... அத்தான் உன்னை இங்கயே குழி தோண்டி பொதச்சிருவாங்க... சின்ன புள்ள மாதிரி மனு தாக்கல் பண்ணிக்கிட்டு... கிளம்பு காத்து வரட்டும்..." என்று கடுப்பாகக் கூறினாள் நந்தினி.

"ஏய்... எல்லாம் உன்னால் தான்... நீ ராம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், எனக்குப் பிரச்சனையே இருந்திருக்காது... உன்னை இங்க இருந்து காலி பண்ணா எல்லாம் சரியாகிரும்... என்ன பன்றேன்னு பாரு..." என்று வைஷ்ணவி நந்தினியை மிரட்டினாள்.

"இதுல மிரட்டுறதுக்கு என்ன இருக்கு... என்னை கிளப்பறது ரொம்ப சுலபம்... பிரசாத் கிளம்புன்னு சொல்லிட்டா, மறுவார்த்தை பேசாமல் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்... பாவம் நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்..." என்று வைஷ்ணவி மேல் நந்தினி அனுதாபம் காட்டினாள்.

நந்தியின் பேச்சு வைஷ்ணவிக்குக் கோபத்தை வரவழைத்தாலும், 'நான் தப்பு பண்ணிட்டேன்... ராம் கேட்ட பொழுதே, நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கணும்... எல்லாத்தயும் கோட்டை விட்டுவிட்டேன்... இவனுக்கு ஊரில் செல்வாக்கு அதிகம் போலும்... என் திட்டமும் தோற்று தான் போகுமோ..' என்று வைஷ்ணவி யோசனையாக அவள் காரை நோக்கி நடந்தாள்.

ராம் பிரசாத் காரை கிளப்ப, "வைஷ்ணவி, உங்களை சின்சியரா லவ் பண்ணிருக்காங்க..." என்று சாலையை பார்த்தபடி கூறினாள் நந்தினி.

ராம் பிரசாத் மெளனமாக சாலையைப் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

'பிரசாத் கிளம்புன்னு சொன்னா... மறுவார்த்தை பேசாம கிளம்பி போய்கிட்டே இருப்பேன்..' நந்தினி சொன்ன வார்த்தையை எண்ணிக் கொண்டிருந்தான் ராம் பிரசாத்.

சில நொடிகளில், திடீரென்று... "நான் கிளம்பி போகச் சொன்ன என்னை விட்டுட்டு போயிருவியா நந்தினி?" என்று ஆழமான குரலில் கேட்டான் ராம் பிரசாத்.

அந்த கேள்வி நந்தினியை வேரோடு சாய்த்தது. நந்தினி ஒரு நொடி மௌனம் காத்தாள். "என்ன கேட்டீங்க?" என்று அவன் கேள்வியை நம்பாமல் அவனிடம் மீண்டும் கேட்டாள் ராம் பிரசாத்.

"நான் கிளம்பிப் போகச் சொன்னா என்னை விட்டுட்டு போயிருவியான்னு கேட்டேன்..." என்று சற்று அழுத்தமாகக் கேட்டான் ராம் பிரசாத்.

அவன் கேள்வியை உள் வாங்கி, நிதானமாக மூச்செடுத்து, தன்னை சமன் செய்து கொண்டாள் நந்தினி.

"நிச்சயம் போய்டுவேன்... நான் எங்க அக்காவுக்காகத் தான் இங்க வந்தேன்... இப்ப அம்மா, அப்பாவே இங்க வந்துட்டாங்க... நான் ஏன் உங்க கூட இருக்கனும்?" என்று , 'இது தான் மாப்பிளை...' என்று அவளிடம் காட்டிய உடன் பூத்த அன்பை மறைத்துக் கொண்டு, உறுதியாகக் கூறினாள் நந்தினி.

நந்தியின் பதில், ராம் பிரசாத்தை அசைத்துப் பார்த்தது.
 
Last edited:

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
'நான் இவளைப் பார்த்த உடன் விரும்பவில்லை... ஆனால், இந்த சில நாட்களில் என்னை நந்தினி அவள் பக்கம் சாய்த்துவிட்டாள்... ஆனால், நந்தினிக்கு என்னைப் பிடிக்கவே இல்லையோ? இன்னும் என்னை வைஷ்ணவியின் காதலனாய் தான் பார்க்கிறாள்... இல்லைனா என்னை விட்டுட்டு போவேன்னு... இவ்வளவு சாதாரணமா சொல்லுவாளா?' என்ற எண்ணத்தோடு தன் வண்டியை அமைதியாக ஒட்டிக் கொண்டிருந்தான். அவர்களுக்குள் ஒரு நிசப்தமான அமைதி நிலவ, வண்ண வண்ணமாய் இவர்களுக்கு இடையில் பூத்திருந்த மெல்லிய காதல் பூக்கள் சற்று வாடி பரிதாபமாகக் காட்சி அளித்தது.

அதே நேரம் வாசுதேவனின் காரில்,

பவித்ரா கண்களில் நீர் வழிய... சாலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பவித்ராவின் மனமோ, 'அத்தான்... நீங்கள் எப்படிச் சொல்லலாம்?' என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வாசுதேவன் தோல் சாய்ந்து, ஓவென்று கதற வேண்டும் என்று விழைய, பவித்ராவின் அறிவு அவளைப் பார்த்துச் சிரித்தது.

அவர்கள் கார், சந்தோஷ் பள்ளி இருக்கும் சாலையைக் கடக்க, பவித்ரா வாசுதேவனைப் பதட்டமாகப் பார்த்தாள். 'சந்தோஷிற்கு நான் என்னவென்று சொல்லுவேன்?' என்ற கேள்வி பவித்ராவின் கணங்களில் தேங்கி நின்றது.

"அம்மா... அப்பா செய்ற தப்பு பிள்ளையைத் தான் பாதிக்கும்..." கூர் வாளாய் இறங்கியது வாசுதேவனின் வார்த்தைகள்.

தன்னால் சாதிக்க முடியாததை பிள்ளையை வைத்துச் சாதிக்கத் துணிந்தது வாசுதேவனின் மனது.

"நான் வந்து சந்தோஷை கூட்டிக்கிறேன்..." என்று நறுக்கு தெறித்தார் போல் பவித்ரா கூற, "அவசியமில்லை... நீ அலைய வேண்டாம்... நான் கொண்டு வந்து விடறேன்..." என்று அவள் விலகளில் இருந்த கோபத்தில் வாசுதேவன் பட்டும் படாமலும் சாலையை பார்த்தபடி கூறினான்.

உறவுகள் கண்ணாடியைப் போல், உடைந்த பின் பல முகங்களைக் காட்டும்.

அந்த விலகளான குரலில் விரக்தியாகச் சிரித்தாள் பவித்ரா. 'நான் கடுப்பில் இருக்கேன்... இவளுக்கென சிரிப்பு...' என்று கோபமாகச் சிந்தித்தான் வாசுதேவன்.

காரை அவர்கள் வீட்டிற்கு சற்று முன்னதாகவே நிறுத்தி விட, பவித்ரா அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

பவித்ராவோடு இருக்கும் நேரத்தை முடிந்த அளவு அதிகப்படுத்திக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

"கொஞ்சம் தூரம் நடந்து போவோமா?" என்று கேள்வியாக நிறுத்தினான் வாசுதேவன்.

பவித்ரா பதிலேதும் கூறாமல், இறங்கி நடக்க அராம்பித்தாள்.

"ஏய்... நீ இப்படி பேசாம போகிற அளவுக்கு... நான் கொலை குத்தம் பண்ணலை..." என்று காட்டமாக வாசுதேவன் கூற, ஒரு பெரு மூச்சை வெளியேற்றியபடி, பவித்ரா மௌனமாக நடந்தாள்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைய, "நீ அப்ப நம்ம வீட்டுக்கு வர மாட்ட..." என்று கோபமாகக் கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா, "நான் என் வீட்டுக்குத் தான் வந்திருக்கேன்..." என்று கூறி அவர்களுக்கான அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா.

அங்கு செல்வி, ஆவுடையப்பன் இருக்க, "பவித்ரா கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்..." என்று அவர்களை பார்த்து வாசுதேவன் கூற, "சரிங்க மாப்பிளை..." என்று செல்வி தலை அசைத்தார்.

சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவ, தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் வாசுதேவன்.

இவர்கள் பேசுவதைக் கேட்கும் படி... தன் காதுகளைத் தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பவித்ரா.

"வீட்டில ஒரு சின்ன பிரச்சனை... தப்பு என் மேல தான்... பவித்ராவை...." என்று வாசுதேவன் தயக்கமாக நிறுத்த, "நாங்க பவித்ராவை ஒன்னும் சொல்ல மாட்டோம் மாப்பிளை..." என்று ஆவுடையப்பன் கூறினார்.

ஆவுடையப்பன் முகத்தில் மெல்லிய நகை தோன்ற, அதை வாசுதேவன் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டார்.

'இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை...' என்று பவித்ரா தன் பற்களைக் கடித்தாள்.

வாசுதேவன் இவர்கள் அறை நோக்கி வர, அவன் காலடி சத்தத்தில் ஜன்னல் அருகே சாலையைப் பார்த்தபடி நின்று கொண்டு, வாசுதேவனின் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள் பவித்ரா.

"பவி..." என்று வாசுதேவன் அழைக்க, பவித்ரா மெளனமாக நின்றாள்.

"எட்டி..." என்று வாசுதேவன் அழைக்க... "..." பவித்ராவின் பக்கம் மௌனமே நீடிக்க,

"பவி... நீ சொன்ன மாதிரி உங்க அம்மா வீட்டுக்கு வந்தாச்சு... இப்ப எதுக்குட்டி பேசாம இருக்க?" என்று மென்மையாகக் கேட்டான் வாசுதேவன்.

பவித்ராவின் கண்கள் கண்ணீரை வடிக்க, "பவி..." என்று வாசுதேவன் அழைக்க, அவளிடமிருந்து பதில் இல்லாமல் போக, அவளை வேகமாக தன் பக்கம் திருப்பினான் வாசுதேவன்.

நிலை தடுமாறி, வாசுதேவன் அருகே அவன் பிடிமானத்தில் நின்றாள் பவித்ரா.

வாசுதேவனின் நெருக்கத்தில், பவித்ரா அவனைக் கோபமாகப் பார்க்க... "நடந்தது தப்பு தான்... என்னை மன்னிச்சிரு..." என்று கெஞ்சுதலாக கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா அவள் முகத்தை வேறு பக்கம் திருப்ப, பிடிவாதமாக அவள் முகத்தைக் கையில் ஏந்தி, " எட்டி … என்னை பார்க்க மாட்டியா?" என்று கடுமையாக கேட்டு தன் உரிமையை நிலை நாட்டினான் வாசுதேவன்.

பவித்ரா அவனை மிரட்சியாகப் பார்க்க… "நான் உன் அத்தான்... அதை நீ கூப்பிட்டாலும் சரி... கூப்பிடலானாலும் சரி..." என்று கோபமாக கூறினான் வாசுதேவன்.
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
வாசுதேவனின் கெஞ்சல், கோபமாக மாறிக் கொண்டிருந்தது. தன் மிரட்சியைச் சரி செய்து கொண்டு, "நான் என் வீட்டில் இருக்கேன்... பாதுகாப்பா இருக்கேன்... உங்க மிரட்டல் என்னை ஒன்னும் செய்ய முடியாது..." என்று பவித்ரா தரையை பார்த்தபடி மெதுவாக கூறினாள்.

"உன்னால் என்னை விட்டுட்டு இருக்க முடியாதுடி..." பவித்ரா சமாதானம் அடையாத கோபம் வாசுதேவனின் வார்த்தைகளாய் வெளி வந்தது.

"அது தான் விதினா... யார் என்ன செய்ய முடியும்?" என்று பவித்ரா விரக்தியாக கூற, 'என்னால் நீங்கள் இல்லாமல் வாழ முடியும்..' என்று கூறாமல், ‘ விதி’ என்று பவித்ரா கூறியதை மனதில் குறித்துக் கொண்டான் வாசுதேவன்.

"எட்டி பவி... விதி இல்லை... உன் பிடிவாதம்... அத்தான் எல்லாம் சரி செய்யறேன்... என் கூட வீட்டுக்கு வா..." என்று கெஞ்சினான் வாசுதேவன்.

பவித்ரா மௌனம் காக்க, வாசுதேவன் கோபமாக கிளம்பினான்.

"ஒரு நிமிஷம்... இன்னைக்கி கூட உங்க அம்மாவுக்கு நெஞ்சு வலி வரலை... படபடப்பும் வரலை... எல்லாம் பொய்... நாடகம்..." என்று பவித்ரா கூற, அவளை கூர்மையாகப் பார்த்தான் வாசுதேவன்.

அவன் ஏதோ பேச தொடங்க, பவித்ரா கை உயர்த்தி அவனை அமைதி காக்கச் செய்து மேலும் தானே பேசினாள்.

"இத்தனை வருஷம்... இதை மாதிரி என் அத்தான் கிட்ட நிறைய சொல்லிருக்கேன்... அவங்க இன்னைக்கி வரைக்கும் எதையுமே நம்பலை... உங்க கிட்ட இன்னைக்கி சொல்றேன்... நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்... ஆனால், மறுப்பா பேசி என்னை கஷ்டப்படுத்தாம இங்கிருந்து கிளம்பிருங்க..." என்று பரிதவிப்போடு வாசலை கை காட்டினாள் பவித்ரா.

வாசுதேவன் பவித்ராவை ஆழமாகப் பார்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று, தன் காரை நோக்கி நடந்தான்.

பவித்ரா வேகமாக மாடிப்படி ஏறி, அங்கிருந்த திண்டில் மறைந்து கொண்டு, கண்களில் கண்ணீர் வழிய வாசுதேவனை பார்த்தபடி நின்றாள்.

வாசுதேவன் காரில் ஏற, சுபா அவனை மொபைலில் அழைத்தாள்.

"சொல்லு சுபா..." என்று வாசுதேவன் கூற, "அண்ணா... அது வந்து..." என்று தயங்கினாள் சுபா.

"பவித்ரா மயங்கி விழுந்தப்ப அம்மா என்ன சொன்னாங்க?" என்று வாசுதேவன் அழுத்தமாகக் கேட்க, "அண்னா...." என்று அதிர்ச்சியாக அழைத்தாள் சுபா.

"உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும் சுபா..." என்று வாசுதேவன் கூற, "இல்லை அண்ணா... நீ அப்ப ஒரு மாதிரி இருந்த, அது தான் சொல்ல பயமா இருந்துச்சு... ஆனால் கண்டிப்பா உன்கிட்ட சொல்லணுமுன்னு தான் கூப்பிட்டேன்... அம்மா... மதினியைப் பார்த்து நடிப்புன்னு சொன்னாங்க..." என்று சுபா தயக்கத்தோடு கூறினாள்.

"அது தான் எம் பொஞ்சாதியை பார்க்க அம்மா ஆஸ்பத்திரிக்கு வரலையா?" என்று கோபமாக கேட்டான் வாசுதேவன்.

"அம்மாவை பத்தி தான் உனக்கு தெரியுமில்லை..." என்று சுபா தயக்கமாகக் கூற, "அம்மாவுக்கு நெஞ்சு வலி எப்படி இருக்கு?" என்று கேட்டான் வாசுதேவன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா..." என்று சலிப்பாகக் கூறினாள் சுபா.

"ஒண்ணுமில்லைனா?" என்று வாசுதேவன் தன் கண்களைச் சுருக்கி கோபமாகக் கேட்க, "என்ன நீ எல்லாமே புதுசா கேட்குற... அம்மாவை பத்தி உனக்கு தெரியாத... இல்லை மதினி உன்கிட்ட சொன்னதில்லையா?" என்று சுபா கோபமாகக் கேட்டாள்.

"சரி... நான் வீட்டுக்கு வரேன்..." என்று வாசுதேவன் கூற, சுபா தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

வாசுதேவன் கார் சீட்டில் சாய்ந்தமர்ந்தான்.

'இத்தனை வருஷம்... இதை மாதிரி என் அத்தான் கிட்ட நிறைய சொல்லிருக்கேன்... அவங்க இன்னைக்கி வரைக்கும் எதையுமே நம்பலை... உங்க கிட்ட இன்னைக்கி சொல்றேன்... நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்... ' பவித்ராவின் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க, வாசுதேவன் நெஞ்சம் சுக்கு நூறாக உடைந்தது.

தன் தாயின் பிம்பம் எங்கோ சரிவது போன்ற எண்ணம் உருவாக, வாசுதேவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கார் ஸ்டெயரிங்கில் தன் கைகளை கோபமாக குத்தினான்.

பவித்ரா தன்னிடம் பேசிய பல விஷயங்கள் நினைவு வர, தலையை உலுக்கிக் கொண்டான் வாசுதேவன்.

'எல்லாம் அப்படி இருக்காது... இன்று ஏதோ தவறிவிட்டார்கள்...' என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான் வாசுதேவன்.

உத்தமி, பவித்ராவுக்கு இடையில் வாசுதேவனின் மனம் ஊசலாட, மகனாய் அவன் பிம்பம் உத்தமி பக்கம் நின்று, 'அம்மா செஞ்சது தப்பாவே இருந்தாலும்... பவித்ரா என்னை விட்டுட்டு போகணும்னு முடிவு எடுக்கலாமா?' என்று பவித்ராவை எதிர் பக்கம் நிறுத்தியே கேள்வி கேட்டது.

பவித்ராவின் நிராகரிப்பு கோபத்தைக் கிளப்ப, வாசுதேவன் தன் காரை வேகமாகச் செலுத்தினான்.

வாசுதேவனின் கார் வேகமாகக் கிளம்பிச் செல்ல, 'பவி என்ன பண்ணிட்டு இருக்க... அத்தான் என்னைக்கும் உத்தமி மகன் தான்... உன் சுயமரியாதையும் விலை போய் பல வருடங்கள் ஆகுது முட்டாள் பெண்ணே... அம்மா தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சாலும், எனக்காக நீ பொறுத்து போக கூடாதான்னு தான் கேட்பாங்க... இதற்கெல்லாம் பிரிவு ஓர் தீர்வா? அத்தானும் அப்படி தான் கேட்பாங்க... ஊர் உலகமும் அதை தான் கேட்கும்... ' என்று பவித்ராவின் மனம் அவளைப் பார்த்து வலிக்க வலிக்க துடிக்க துடிக்க கேட்டுக் கொண்டிருந்தது.

பவித்ரா மாடியில் அமர்ந்து, வழி இல்லா பாதையில் வலியோடு வழியை தேடி தன் மடியில் முகம் புதைத்து விம்ம, அவள் தலையை ஆதரவாக ஒரு கை தடவியது.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…

Next Episode on Tuesday Friends...
 

lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
Nice update. Unarvugalin pathivu.. velipaduthiya vidham, merpoochu illa iyalbana nadai.. arumai thozhi.

Pengal suyamariyadhai paarthal, veedu iniya ilama aagadhu. Indru netralla, endrendrum naam , mariyadhayay mootai katti paranil pottuthaan aagavendiyulladhu.
 
#6
I never Commented for any stories. I am reading in this site for an year. I am a big fan of all four Zainab stories. I admired your Kattangal story too. Still I never commented. I used to read and go. I feel each girl is a combination of both the heroines character (Pavithra and Nandhini) in this story. I cannot resist myself from commenting to this story. Why next episode on tuesday? Why cant you post everyday one episode? I feel if there is a fast forward button, I can go forward and read this story of yours fully. Hats off to your writings.
 
#7
Super epi dear, கல்யாணம் ஒன்னு நடந்தாலே எதிலையும் திடமான கொள்கையில் இருக்க முடியாது, அப்படி நிலையாக இருந்தால் குடும்ப அமைப்பு பாதிக்கப்படும்,

ஐயோ பாவம் பவி எப்போதும் அழும் நிலை தான்
 
#8
Nice update. Unarvugalin pathivu.. velipaduthiya vidham, merpoochu illa iyalbana nadai.. arumai thozhi.

Pengal suyamariyadhai paarthal, veedu iniya ilama aagadhu. Indru netralla, endrendrum naam , mariyadhayay mootai katti paranil pottuthaan aagavendiyulladhu.
True dear, மரியாதை அப்படி ஒரு option மறந்துறனும் அப்படிப்பட்ட நிலைதான்
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
Nice update. Unarvugalin pathivu.. velipaduthiya vidham, merpoochu illa iyalbana nadai.. arumai thozhi.

Pengal suyamariyadhai paarthal, veedu iniya ilama aagadhu. Indru netralla, endrendrum naam , mariyadhayay mootai katti paranil pottuthaan aagavendiyulladhu.
Thank you so much😁 So happy to see your comments
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
I never Commented for any stories. I am reading in this site for an year. I am a big fan of all four Zainab stories. I admired your Kattangal story too. Still I never commented. I used to read and go. I feel each girl is a combination of both the heroines character (Pavithra and Nandhini) in this story. I cannot resist myself from commenting to this story. Why next episode on tuesday? Why cant you post everyday one episode? I feel if there is a fast forward button, I can go forward and read this story of yours fully. Hats off to your writings.
Thank you so much.... So happy to see your comments
 

Latest Episodes

Sponsored Links

Top