• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode - 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments... Really happy to see your comments... Thought of coming with an episode on Sunday... :)

இரண்டல்ல ஒன்று – 30

வாசுதேவனும் பவித்ராவும் பேசிக் கொண்டிருந்த வேளையில் பண்ணை வீட்டில்...

ராம் பிரசாத் யோசனையாக அமர்ந்திருந்தான். 'நந்தினிக்கு என்னைப் பிடிக்கவில்லையா?' இந்த கேள்வி ராம் பிரசாத்தை குடைந்தது. 'நந்தினியின் இன்றைய பேச்சு... பிடிக்கவில்லை என்று சொன்னாலும், அவள் பார்வை... செயல் அப்படிச் சொல்லவில்லையே...' என்று சிந்தித்தான் ராம் பிரசாத்.

ராம் பிரசாத்தின் முகம் குழப்பத்தைப் பிரதிபலிக்க... அப்பொழுது அவர்கள் அறைக்குள் நுழைந்த நந்தினி, "பிரசாத்... நீங்க ஏன் இவ்வளவு யோசனையா இருக்கீங்க... வைஷ்ணவி போட்ட மனு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... அதெல்லாம் சரி ஆகிரும்... நீங்க வேலையை ஆரம்பிங்க... விவசாய நிலத்துக்கு தண்ணீ பாய்ச்சறது, அப்புறம் மருந்தடிக்கிறது... களை எடுக்கிறது... இப்படி எல்லாத்துக்கும் ரோபோட் டிசைன் ரெடி... நாம எப்ப வேலையை ஆரம்பிக்கப் போறோம் ?" என்று நந்தினி ஆர்வமாக வினவினாள்.

"நீ உங்க அக்காவுக்காக தானே இங்க இருக்க... அப்புறம் என் மேலயும்... என் வேலை மேலயும் உனக்கு என்ன அக்கறை..." என்று கோபமாகக் கேட்டான் ராம் பிரசாத்.

'சம்பந்தமே இல்லாம எதுக்கு இவங்க கோபப்படணும்?' என்ற சிந்தனையோடு... தோளைக் குலுக்கிக் கொண்டு... ராம் பிரசாத்தை ஆழமாகப் பார்த்தாள் நந்தினி.

'நல்லா பார்ப்பா... நல்லா இனிய இனிய பேசுவா... ஆனால் விட்டுட்டு போயிருவேன்னு சொல்லுவா....' என்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ராம் பிரசாத்.

'ஏற்கனவே அக்கா பிரச்சனையோடு வீட்டில் இருக்கா... இப்ப நானும் பிரச்சனைன்னு போனேன்... அம்மா அவ்விளவு தான் இரண்டு பேரையும் நார் நாரா கிழிச்சி தொங்க விட்டுருவாங்க... அமைதியா இரு நந்தினி...' என்று தனக்கு தானே கூறிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் நந்தினி.

பார்வதியிடம் தன் அக்காவைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள் நந்தினி.

நந்தினி தலை கோத, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பவித்ரா நிமிர்ந்து பார்க்க... நந்தினி பவித்ராவை பார்த்து புன்னகைத்தாள்.

"அக்கா... ரொம்ப வருத்தப்படாத... வருத்தப்படுற அளவுக்கு எதுவும் நடக்கலை..." என்று சமாதானமாகக் கூறினாள் நந்தினி.

பவித்ரா அவளைப் புரியாமல் பார்க்க, "அத்தான்... உன் மேல் எவ்வளவு பாசமா இருக்காங்க... அந்த பாசம் எல்லா பிரச்சனையும் சரிசெஞ்சிரும் அக்கா..." என்று நம்பிக்கையோடு கூறினாள் நந்தினி.

வாசுதேவன் பற்றிய பேச்சில், பவித்ராவின் கண்களில் கோபத்தைத் தாண்டி, ஒரு கனிவு பிறந்தது.

அந்த கனிவை பார்த்து, 'இவளுக்கெல்லாம் இந்த வீராப்பு தேவையா...' என்ற கேலி நந்தினி மனதில் உதித்தது.

"நான் வீட்டை விட்டு வந்தது தப்பா நந்தினி?" என்று பவித்ரா பரிதாபமாகக் கேட்க, 'ஆம்... நீ உள்ள இருந்து தைரியமா போராடிருக்கணும்... அங்கிருந்து எல்லாரையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்ருக்கணும்...' என்று நந்தினியின் அறிவு சொல்ல விழைந்தாலும், பவித்ராவின் சோக முகம் நந்தினியை அமைதி காக்கச் செய்தது.

ஒரு நொடி மௌனத்திற்கு பின், "அப்படி எல்லாம் இல்லை அக்கா... நீயும் எவ்வளவு நாள் தான் பொறுத்துப் போவ... எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டிருவோம்... உங்க மாமியாரைப் பத்தி ஊரே தப்பு தப்பாத் தான் பேசுது... அவங்களை பார்த்து நறுக்குன்னு ஒரு நாலு வார்த்தைக் கேட்டுட்டு அப்புறம் போலாம் உங்க வீட்டுக்கு..." என்று தன் தமக்கைக்கு ஆறுதலாகப் பேசினாள் நந்தினி.

"கேட்பீங்க... கேட்பீங்க... அக்காளும்... தங்கச்சியும் எல்லாரையும் கேட்பீங்க... அவ போய் அந்த வீட்டில் வாழ வேண்டாம்..." என்று செல்வி கோபமாக கூறிய படி வர, "செல்வி..." என்று தன் மனைவியை அடக்கினார் ஆவுடையப்பன்.

"என்னை அடக்காதீங்க... இவளுக்கே இவ்வளவு வீம்பு இருந்தா... மாப்பிள்ளைக்கு இருக்காதா?" என்று கோபமாகக் கேட்டார் செல்வி.

"அந்த அம்மா வேற ஒரு மாதிரி... மாப்பிள்ளையும் இவளையும் ஒரேடியா பிரிச்சிட்டா என்ன பண்ண முடியும்... உள்ள இருக்கும் போதே பிரிச்சி இவ வெளிய வர அளவுக்கு நடந்துக்கிட்டவங்க… இன்னும் என்ன நாளும் பண்ணுவாங்க... பெண்ணை பெத்த நாம தான் இறங்கி போகணும்... வேற வழி இல்லை..." என்று செல்வி கோபமாகக் கூறினார்.

"அப்படி எல்லாம் ஒன்னும் செய்திற முடியாது செல்வி... கொஞ்சம் பொறுமையா இரு.” என்று கூறினார் ஆவுடையப்பன்.

"அத்தான் பாத்துப்பாங்க..." என்று பவித்ரா உறுதியாகக் கூறினாள். "அப்புறம் ஏன் டீ இங்க வந்த?" என்று செல்வி கோபமாகக் கேட்க, "நான் இங்க இருக்கிறது தான் உங்களுக்கு பிரச்சனைனா… நான் போயிடுறேன்..." என்று கண்ணீர் மல்கக் கூறினாள் பவித்ரா.

"பவித்ரா... நான் அப்படிச் சொல்லலை... பிரச்சனையை வளர்க்க வேண்டாமுன்னு தான் சொல்றேன்... மாப்பிள்ளை மாதிரி நல்லவரை பார்க்க முடியாது... உன்னை இப்ப போகச் சொல்லலை... ஆனால், மாப்பிள்ளை மன்னிப்பு கேட்கும் பொழுது தலைஞ்சி போன்னு தான் சொல்றேன்." என்று பவித்ராவின் தாய் செல்வி கண்ணீர் மல்கக் கூறினார்.

பவித்ரா தன் தாயின் கண்ணீரைக் கையாலாகாத தனத்தோடு பார்த்தாள்.

செல்வி, ஆவுடையப்பன் இருவரும் சென்று விட, "அக்கா... நீ அம்மா அழறதை எல்லாம் பார்க்காத... உன் அத்தையை இரண்டில் ஒன்னு கேட்டே ஆகணும்... நீயும் பேசுவன்னு அவங்களுக்கு தெரியணும்... இந்த பார் உன் பிரச்சனைக்கு நான் பேச முடியாது... நீ தான் பேசணும்... நாம குனிய குனிய இந்த உலகம் நம்மைக் குட்டத் தான் செய்யும்... யாரையும் நாம எதிர்க்க வேண்டாம்... ஆனால், அதே நேரத்தில் நீ இப்படின்னா இப்படி தான்னு இரு அக்கா... நாம குடும்பம் நல்லாருக்கணுமுன்னு வளஞ்சி கொடுக்கலாம்... உடைஞ்சி போக கூடாது... சுயமரியாதையை இழக்கக் கூடாது அக்கா... நம்ம பிள்ளைங்க கூட பிற்காலத்தில் நம்மை மதிக்காமல் போய்டும்..." என்று நந்தினி தீவிரமாகக் கூற, நந்தினி கூறுவதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் பவித்ரா.

"எல்லாரும் நம்ம கிட்ட பழகுற அளவுக்கு நல்லவளா இருந்தா போதும்.. உன்னை போற வர்றவன் எல்லாம் கேள்வி கேட்கற அளவுக்கு நீ நல்லவளா இருந்து என்ன சாதிக்க போற?" என்று நந்தினி பவித்ராவை பார்த்து கோபமாகக் கேட்டாள்.

"அந்த சுபா... ஒரு சிண்டு... அதெல்லாம் உன்னைக் கேள்வி கேட்டுருக்கு... நீ யார் டீ என்னை கேட்க, கல்யாணம் ஆச்சுல்ல உன் வேலையை பாருன்னு சொல்லாம... அதுக்கெல்லாம் நீ பீல் பண்ணிருக்க... நண்டு, சிண்டெல்லாம் நம்மைக் கேள்வி கேட்க கூடாது அக்கா..." என்று நந்தினி கூற, "உண்மை தான் நந்தினி... எல்லாருக்கும் இடம் கொடுத்துட்டேன்... இப்ப குத்துதே... குடையுதேன்னு சொல்லி என்ன பிரயோஜனம்..." என்று பவித்ரா சலிப்பாக கூறினாள்.

"அப்படி எல்லாம் இல்லை அக்கா... இப்பவாது சொன்னியே... எனக்கென்னவோ அத்தான் அவங்க அம்மாவை கூட்டிட்டு வருவாங்கன்னு தோணுது." என்று நந்தினி யோசனையாகக் கூற, "வரலைனா?" என்று பவித்ரா சற்று அச்சத்தோடு கேட்டாள்.

"வர வைப்போம்... அதுக்கெல்லாம் நமக்கு ஆளு இருக்கு... நீ கவலை படாத..." என்று கூற, பவித்ரா நந்தினியோடு சென்றாள்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில், அவர்களது நாள் நீண்ட நாளாகத் தெரிந்தது. வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல், எங்கெங்கோ சுற்றிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் வாசுதேவன்.

"எங்கடா உம் பொஞ்சாதி?" என்று நாற்காலியில் அமர்ந்தபடி கேட்டார் உத்தமி.

"அவ அம்மா வீட்டில் இருக்கா... டாக்டர் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காக..." என்று கூறினான் வாசுதேவன்.

"உங்களுக்கு நெஞ்சு வலி எப்படி இருக்கு?" என்று கேட்டு உத்தமி எதிரே அமர்ந்தான் வாசுதேவன்.

"எனக்கு பரவாயில்லை... எல்லா பவித்ரா பண்ண வேலை தான்..." என்று உத்தமி கூற, எதுவும் பேசாமல் கண்களை இறுக மூடி கேட்டுக் கொண்டான் வாசுதேவன்.

"ஏன் முகம் எல்லாம் வாடி கிடக்கு? பசி வந்திருக்கும்முன்னு நினைக்கிறேன்... சாப்பிட வா..." என்று கூறி சமயலறை நோக்கி சென்றான் வாசுதேவன்.

அமைதியாக அவரை பின் தொடர்ந்து சென்றான் வாசுதேவன். 'அம்மாவை பார்த்து... நடிசீங்களா? நாடகமான்னு எப்படி கேக்கறது....' சிந்தித்த படி உணவருந்த அமர்ந்தான் வாசுதேவன்.

வாசுதேவன் யோசனையாக அமர்ந்திருக்க, "என்னடா பவித்ரா உன்கிட்ட சண்டை போட்டாளா?" என்று உத்தமி கேட்க, "அவ எதுக்கு அம்மா... என்கிட்டே சண்டை போடணும்..." என்று தன் தாயைப் பார்த்துக் கேட்டான் வாசுதேவன்.

"அதைத் தான் நானும் கேக்கறேன்... ஆனால், அவ எதோ சொல்லிருக்கான்னு உன் முகரையே சொல்லுதே..." என்று உத்தமி கழுத்தை நொடிக்க, வாசுதேவன் மௌனமாக அமர்ந்திருந்தான்.

"நீ ஏன் கவலை படுத? எங்க போயிற போறா? கோழி கூவி விடியவா போகுது... கையில ஒன்னு... வயித்துல ஒன்னு வச்சிக்கிட்டு எங்க போய்ட போறா? வருவா... நீ சாப்பிடு..." என்று உத்தமி கூற, "எனக்குப் பசி இல்லை..." என்று கூறி சாப்பிடாமல் அங்கிருந்து எழுந்து அவர்கள் அரை நோக்கிச் சென்றான் வாசுதேவன்.

உத்தமி தன் மகனை யோசனையாக பார்த்தார்.

அவர்கள் மெத்தையில் குப்புறப் படுத்தான் வாசுதேவன். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

'ஆண் பிள்ளைகள் அழுவதில்லை என்று யார் சொன்னார்கள்? அவர்களுக்குக் கட்டுப்பாடு இல்லை என்று யார் சொன்னது? பெண்களைப் போல் ஆண்களும் இளகிய மனம் கொண்டவர்கள் தானே...' என்று வாசுதேவனின் மனம் எண்ணியது.

'பவித்ரா வருவாள்... என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாள்... ஆனால், அவள் என் பவியாக வருவாளா?' என்ற எண்ணத்தோடு அவன் மனம் தவியாய் தவித்தது.

பவித்ராவின் அத்தான் அத்தான் என்ற அழைப்பு அறை எங்கும் ஒலிப்பது போல் தோன்றியது.

'நான் அவளை எப்படிச் சரி செய்யப் போகிறேன்... இத்தனை நாள் என்ன என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை... இனியாவது பிரச்சனை வராமல் நான் சாமாளிக்க வேண்டும்...' என்று வாசுதேவனின் அறிவு சிந்தித்துக் கொண்டிருந்தது.

'அம்மா.... அம்மா... அவர்களும் காயப்பட்டு விடக் கூடாது...' என்று சிந்தித்தான் வாசுதேவன்.

'அத்தான்... உங்களால் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது...' என்றோ பவித்ரா கூறியது நினைவு வர, 'நான் என் பவித்ராவுக்கு நல்லவனாக இல்லவே இல்லையா? நான் என் பவி மீது வைத்த பாசம் உண்மை இல்லையா?' என்று கோபமாகத் தலையணையைக் குத்தினான் வாசுதேவன்.

இதே நேரம் பண்ணை வீட்டில், 'திமிரு பிடிச்சவ... திட்டனா இது தான் சாக்குன்னு அம்மா வீட்டுக்கு போயிருவா....' என்று கோபமாக நந்தினியைத் திட்டிக் கொண்டிருந்தான் ராம் பிரசாத்.

செல்வி அவர்கள் வீட்டில், அனைவரையும் திட்டிக் கொண்டிருக்க, "செல்வி சும்மா இரு... நீ புலம்பற அளவுக்கு ஒன்னும் நடக்கலை... மாப்பிள்ளை பவித்ரா மேல உருகுதாரு... இவுக சண்டை இரண்டு நாள் கூட தாங்காது... நந்தினிக்குத் தான் வாய்த் துடுக்கு ஜாஸ்தி... சின்ன மாப்பிள்ளை என்னனா பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார் போல... இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க நாம குடுத்து வச்சிருக்கணும்..." என்று ஆவுடையப்பன் தன் மனைவியைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

"அது எல்லாம் சரி தான்... ஆனால், அவுங்க இரண்டு பேரையும் பாருங்களேன்... கொஞ்சம் கூட கவலையே இல்லமால்..." என்று செல்வி தன் இரு புதல்விகளையும் கை காட்டினாள்.

நந்தினி பவித்ராவை சமாதானம் செய்திருந்தாள். பவித்ரா சற்று தெளிவான முகத்தோடு காட்சி அளித்தாள்.

"அக்கா... வா சேர்ந்து சாப்பிடுவோம்... அத்தான் எப்ப உன்னைக் கடத்திக் கொண்டு போவாங்கன்னு சொல்ல முடியாது... என் ஆளு எப்ப கால் பண்ணவாங்கன்னு சொல்ல முடியாது... கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி சேர்ந்து சாப்பிடற சந்தர்ப்பம் கிடைப்பதே பெரிய விஷயமா இருக்கு..." என்று கூற, பவித்ரா மெலிதாக சிரித்தாள்.

"முருங்கைக்கீரை நல்லதுன்னு அம்மா உனக்காகப் புளியில்லா குழம்பு வச்சிருக்காங்க... வா ஒரு கட்டு கட்டுவோம்..." என்று கூறி இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

"கூட பிறந்தவங்க ஒற்றுமையா இருக்கிறது தான் செல்வி அவுங்களுக்கு பலமே... நம்ம காலத்துக்கு அப்புறமும் அக்காவுக்கு ஒன்னுனா தங்கச்சி கேட்பா... தங்கைக்கு ஒன்னுனா அக்கா கேட்பானு இருக்கணும்... பயனா இருந்தா என்ன... பொண்ணா இருந்தா என்ன? இவங்க ரெண்டு பெரும் இப்படி இருக்கிறது தான் நமக்கு பெருமை..." என்று ஆவுடையப்பன் கூற, "அது சரி... உங்க பொண்ணுங்க பெருமை போதும்... சாப்பிட வாங்க..." என்று கூறி எழுந்து சென்றார் செல்வி.

அவர்கள் சாப்பிடுகையில்... இருவரின் மொபைலும் ஒலிக்க, நந்தினி பக்கென்று சிரித்தாள்.

"சொன்னேன்ல... ரெண்டு பேருக்கும் நாம பேசி சிரிச்சா மூக்கு மேல வேர்த்திரும்..." என்று நந்தினி கூற பவித்ரா ஆமோதிப்பாய் தலை அசைத்து அழகாய் சிரித்தாள்.

"யார் கிட்ட இருந்து என்ன குண்டு வர போகுதோ..." என்று பவித்ராவை பார்த்துக் கண்ணடித்தாள் நந்தினி.



இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top