• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments :)

இரண்டல்ல ஒன்று – 32

வாசுதேவன் கேட்ட கேள்வியின் தாக்கத்தில், அவனை ஆழமாகப் பார்த்தாள் பவித்ரா.

'அத்தான்... அத்தான்... அத்தான்...' என்று கதறியது பவித்ராவின் மனது.

'கடவுளே... நான் என்ன தப்பு பண்ணேன்... என் அத்தான் இப்படி புலம்புவதைப் பார்க்கிற தண்டனையை ஏன் எனக்கு கொடுக்குற?' என்று இறைவனைத் திட்டியபடி வாசுதேவனைச் சோகம் கவ்விய முகத்தோடு பார்த்தாள் பவித்ரா.

பவித்ராவின் மனம் வாசுதேவனின் பக்கம் சாய, 'நீ மன்னிப்பு கேட்கலைன்னா உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை...' அன்று வாசுதேவன் கூறிய, வார்த்தைகள் பவித்ராவின் காதில் தெளிவாக ஒலித்தது.

பவித்ராவின் மனம் சற்று நிலை பெற, அவள் அறிவு வேலை செய்தது. 'பவி... உன் வாழ்வில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்... இப்பொழுது உன் பிரச்சனையைச் சரி செய்யவில்லை என்றால்... ஒரு நாளும் சரி செய்ய முடியாது...' என்று பவித்ராவின் அறிவு எச்சரித்தது.

பவித்ரா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"என்ன பாக்குற பவி?" என்று கேட்டான் வாசுதேவன்.

"இல்லை.... அத்தை இங்க இல்லை... அது தான் இப்படி எல்லாம் பேசுறீங்க... அத்தை இங்க இருந்தா நிலைமையே மாறிரும்..." என்று பவித்ரா நக்கலான சிரிப்போடு கூறினாள்.

"பவி... நீ என்னை நம்பலை?" என்று ஏமாற்றமாகக் கேட்டான் வாசுதேவன்.

"நம்பலை..." என்று அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.

முதன் முறையாக தன் முன் வீற்றிருக்கும் பிரச்சனையின் வீரியம் வாசுதேவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

இழந்தது அன்பை அல்ல... நம்பிக்கையை என்று...

வாசுதேவனுக்கான அன்பு பவித்ராவிடம் உயிருள்ள வரை குறையாது... ஆனால் நம்பிக்கை அது சுக்கு நூறாக உடைந்து எங்கோ காணாமல் சென்று விட்ட அவல நிலை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.

'நான் பவித்ராவுக்கு நம்பிக்கையின் பாத்திரமாக இல்லையா?' இந்த கேள்வி வாசுதேவனின் மனதை ரணமாக்கியது.

"நான் உங்களை எப்படி நம்ப முடியும்? இப்ப உங்க அம்மா என்னைப் பத்தி தப்பா சொன்னா… நீங்க உங்க அம்மா சொல்றதை தான் கேட்பீங்கன்னு நான் நினைக்கிறேன்..." என்று வாசுதேவனைப் பார்த்து ஏமாற்றமாகக் கூறினாள் பவித்ரா.

வாசுதேவனின் கைகள், "பளார்..." என்று பவித்ராவின் கன்னத்தில் இறங்கியது.

"ஏதோ தப்பு பண்ணிடோம்முனு இறங்கி பேசினா... ரொம்ப தான் பேசுற..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.

"அம்மா அப்படி சொல்லுவாங்களா?" என்று உறுமினான் வாசுதேவன். "அப்படி உன்னை யாரவது சொன்னால் நான் அவங்களை சும்மா விட்டுருவேனா?" என்று கோபமாகக் கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா அடி வாங்கிய தடம் எதுவுமின்றி வாசுதேவனைப் பார்த்து கம்பீரமாகச் சிரித்தாள்.

"நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் இது தான்... இது தான் நீங்க... இது தான் பிரச்சனை..." என்று பவித்ரா கூற, அவளைப் புரியாமல் பார்த்தான் வாசுதேவன்.

"புரியலைல.... புரியாது... என்னை பத்தின சிந்தனை உங்களுக்கு அப்புறம் தான் வரும்... உங்க அம்மா சொல்ல மாட்டங்க... இது தான் உங்களுக்கு முதலில் வரும்..." என்று பவித்ரா சீறினாள்.

வாசுதேவன் பவித்ராவை குழப்பமாகப் பார்த்தான்.

"உங்க அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க... எதுவும் செய்ய மாட்டங்க... இது தான் உங்க நம்பிக்கை... நான் சொன்னாலும் நம்ப மாட்டீங்க... அப்படி உங்க மூளை... ரத்தம்... நாடி... நரம்பு... எங்கயும் பதிஞ்சிருச்சு... அதை நான் தப்பு சொல்லலை... சொல்லவும் மாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.

"உங்க அம்மா எப்படியும் இருந்துட்டு போகட்டும்... எனக்குக் கவலை இல்லை... அன்னைக்கி அவங்க நெஞ்சு வலி வந்த மாதிரி நடிச்சது எனக்குப் பெரிய விஷயம் இல்லை... புதிய விஷயமும் இல்லை... இதை மாதிரி நிறைய நடிப்பை நான் பார்த்திருக்கேன்… உங்க கிட்ட சொல்லிருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்க... அன்னைக்கி அவங்க நடிப்போ... அவங்க பிரச்சனையைத் திசை திருப்பின விதமோ என்னை பாதிக்கலை... பாதிச்சது நீங்க... உங்க செயல்..." என்று சலிப்பாகக் கூறினாள் பவித்ரா.

"பவி..." என்று வாசுதேவன் கெஞ்சுதலாக அழைத்தான்.

"நான் பேசணும்... இன்னைக்காவது நான் பேசணும்... நான் பேசணுமுன்னு சொல்லை... நீங்க தான் என்னை பேச கூப்பிட்டீங்க... அப்ப நான் பேசுறதை கேளுங்க..." என்று பிடிவாதமாகக் கூறினாள் பவித்ரா.

வாசுதேவன் மௌனம் காக்க, "நான் பழகிட்டேன்... அத்தையை நான் உங்களுக்காக ஏத்துக்கிட்டேன்... என் அத்தானுக்காக அவங்க அம்மா செய்ற எல்லா தப்பையும் ஏத்துக்கிட்டு, பொறுத்துகிட்டு வாழ பழகிட்டேன்... எல்லாம் என் அத்தானுக்காக மட்டும் தான்…" என்று கண்ணீர் மல்கக் கூறினாள் பவித்ரா.

"ஆனால், அன்னைக்கி என்னை பாதிச்ச விஷயம் என்ன தெரியுமா? நீங்க... உங்க அம்மா செய்ற தப்புக்கு விலை பேசியது... என் சுயமரியாதையை... எந்த நேரமும் அம்மா... அம்மா... அம்மா... அப்படின்னா நான் எதுக்கு? உங்களுக்கு எதுக்கு கல்யாணம்?" என்று காட்டமாகக் கேட்டாள் பவித்ரா.

வாசுதேவன் பவித்ராவை புதிதாகப் பார்த்தான். 'இவள் என் பவியா?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.

பவித்ராவின் கேள்விகள் வாசுதேவன் மனதில் சாட்டையடியாக, இறங்கி அவன் கோபத்தை ஏற்றிக் கொண்டு தான் இருந்தது.

"இதை ஏன் இத்தனை வருஷம் கேட்கலைன்னு நீங்க கேட்கலாம்..." என்று பவித்ரா தலை அசைத்து வாசுதேவனை பார்த்து கோபமாகக் கேட்டாள்.

வாசுதேவன், பவித்ராவை மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அம்மா மேல பாசம் இருந்தாலும்... என் அத்தானுக்கு என் மேலும் பாசம் இருக்கும்னு நம்பின முட்டாள் நான்... அம்மா மேல் மரியாதை இருந்தாலும்... என்னை எங்கயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்கன்னு என் அத்தானை பத்து வருஷமா நம்பின மிக பெரிய ஏமாளி நான்." என்று தலையில் அடித்தாள் பவித்ரா.

"நந்தினி சொன்னா உண்மையான அன்பு சுயமரியாதையை விலை பேசாதுன்னு... இப்ப புரியுது உங்களுக்கு என் மேல் இருக்கிறது அன்பே இல்லைன்னு… அன்பே இல்லைன்னு நான் அடித்து சொல்லுவேன்... " என்று பவித்ரா கூற, "எல்லா பிரச்ச்னைக்கும் அவ தான் காரணம்." என்று கோபமாக முணுமுணுத்தான் வாசுதேவன்.
 
Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
"உண்மை தான்... எல்லா பிரச்சனைக்கும் காரணம் உங்க அம்மா இல்லை... நீங்க இல்லை... நான் இல்லை... என் தங்கை தான்... ஏன்னா அவளால் தானே உங்க உண்மை லட்சணம் எனக்கு தெரிஞ்சிது... இல்லனா ஆயுசுக்கும் ஏமாளியாவே வாழ்ந்துட்டு போயிருப்பேனே... " என்று கடுப்போடு கூறினாள் பவித்ரா.

பவித்ராவின் பேச்சில் வாசுதேவனின் கோபம் உச்சிக்குச் சென்றது.

"பெருசா வேண்டாம்... இத்தனை வருஷத்தில், நான் சொல்லும் பொது அம்மா சொன்னா சரியா இருக்கும்… சரியா மட்டும் தான் இருக்கும்ன்னு சொல்ற நீங்க… ஒரு தடவை... எம் பொஞ்சாதி செய்தா ஒரு காரணம் இருக்கும்... சரியா தான் இருக்கும்... ஒரு தடவை... இத்தனை வருஷத்தில் ஒரே ஒரு தடவை உங்க அம்மா கிட்ட சொல்லிருக்கீங்களா?" என்று வாசுதேவனைப் பார்த்து பரிதாபமாகக் கேட்டாள் பவித்ரா.

வாசுதேவன், பவித்ராவின் கேள்விக்குப் பதில் தெரியாமல் அவளைப் பார்க்க, பவித்ரா தோளை குலுக்கி விரக்தியாக சிரித்தாள்.

"ஒரு நாள்... ஒரு தடவை நீங்க அப்படி சொல்லிருந்தா... இவ்வுளவு பிரச்சனையே வந்திருக்காது..." என்று தன் இத்தனை வருட ஆதங்கத்தையும் வார்த்தையாகக் கொட்டினாள் பவித்ரா.

தன் கோபம் வடிந்து ஆயாசமாகச் சாய்ந்தாள் பவித்ரா.

பவித்ராவின் மனம் கோபம் வடிந்த அந்த நொடி, வாசுதேவனுக்காகச் சிந்திக்க ஆரம்பித்தது. ஆசை கொண்ட மனம் அன்றோ?

அங்க ஓர் நிசப்தம் நிலவ, "ஒரு வேளை... இத்தனை வருஷத்தில், ஒரு தடவை கூட நான் செய்றது சரியா இருக்கும்... அப்படிங்கிற நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்கவே இல்லியோ?" என்று ஓர் பைத்தியக்காரியைப் போல் தன் மேலே தவற்றைத் திசை திருப்பி கொண்டு பிதற்றினாள் அந்த பேதைப் பெண்.

தன் அத்தானைக் காயப்படுத்திவிட்ட பதட்டம் அவளைச் சூழ்ந்தது.

பவித்ராவின் பதட்டம், அவள் புலம்பல் வாசுதேவனை தடுமாற செய்தது.

பவித்ராவின் வலியில், வாசுதேவன் நிலை குலைந்து போனான்.

அவள் வாசுதேவனின் பவித்ரா அன்றோ... உத்தமியின் மகன் வாசுதேவன் எத்தனை நிஜமோ.... பவித்ராவின் வாசுதேவன் அத்தனை நிஜம் தானே... இதை யாரால் மறுக்க முடியும்?

பவித்ராவின் முன் மண்டியிட்டு, "பதட்டப் படாத பவி..." அவளிடம் தண்ணீரை நீட்டினான் வாசுதேவன்.

மறுக்காமல், இந்த முறை தண்ணீரை வாங்கி குடித்தாள் பவித்ரா.

"நம்பிக்கை இல்லாமல் இல்லை பவி... அம்மா பெரியவங்க... அதனால் சரியா இருக்கும்ன்னு அதீத நம்பிக்கை... அவ்வுளவு தான்... எட்டி நீ சொல்லி இத்தனை வருஷத்தில் நான் எதையுமே கேட்டதில்லையா?" என்று பரிதாபமாகக் கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா பேச முயல, மறுப்பாகத் தலை அசைத்தான் வாசுதேவன்.

பவித்ராவின் செவ்விதழ்களை தன் விரலால் மூடினான் வாசுதேவன். "நாம நிதானமா பேசுவோம்... உன்னை ரொம்ப அலட்டிக்காத..." என்று கூறி அவள் கன்னத்தை மென்மையாகத் தடவினான் வாசுதேவன்.

வாசுதேவனின் கைகளை ஒதுக்கியபடி, "எனக்கு இது வலிக்கலை... அத்தையை சொன்னா அடிப்பீங்க... சங்கை பிடிப்பீங்க... கோபப்படுவீங்க... இதெல்லாம் நான் எதிர்பார்த்தது தான்... நான் எதிர்பார்க்காதது... நீங்க அன்னைக்கி சொன்ன வார்த்தையைத் தான்..." என்று வெறுப்பாகக் கூறினாள் பவித்ரா.

"பவி..." என்று வாசுதேவன் குழைய, "போலாம்..." என்று கூறி பவித்ரா வேகமாக நடக்க, "எட்டி... பய போ...." என்று கூறி அவளை பின் தொடர்ந்தான் வாசுதேவன்.

ஒரே எட்டில் பவித்ராவிடம் அணுகி, அவளை தன்னோடு இறுக்கி அணைத்து, "எட்டி... அத்தான் கிட்ட சொல்லிட்டல்ல... இந்த அத்தான் எல்லாத்தயும் பாத்துப்பான்... நீ கவலைப்படாம இரு... புரியுதா?" என்று வாசுதேவன் அவளோடு நடந்த படியே கேட்க, வேண்டாம் என்று நினைத்தாலும், வாசுதேவனின் அணைப்பில் தேனாய் உருகி... பாகாய் கரைந்தாள் பவித்ரா.

"எட்டி... பதில் சொல்லு..." என்று வாசுதேவன் அவளை கெஞ்ச, "ம்..." என்று சங்கீதம் வாசித்தாள் அவள்.

"நல்லா... சாப்பிடு... உடம்பை பாத்துக்கோ... அத்தான்... அடிக்கடி வந்து பாத்துக்குறேன்..." என்று பவித்ராவை கட்டாயப் படுத்தாமல், பவித்ராவிடம் சமாதானம் பேசினான் வாசுதேவன்.

'எனக்கும் சிந்திக்க சற்று தனிமை வேண்டும்...' என்று எண்ணியது வாசுதேவனின் மனம்.

வாசுதேவன், பவித்ரா வீட்டை நோக்கிச் சென்றனர்.

பண்ணை வீட்டில், அவர்கள் அறைக்குள் நுழைந்த நந்தினி அனைத்து பெட்டிகளும் கீழே கிடைக்க... "ஏன் எல்லாம் கீழே கிடக்கு?" என்று ராம் பிரசாத்தைப் பார்த்து தோரணையாகக் கேட்டாள்.

வெளியே கிடந்த கிபிட் பாக்ஸ், நந்தினியின் பதட்டத்தை அதிகப் படுத்த, "நீங்க எதையும் எடுக்கலைல?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.

அவள் பதட்டத்தை ரசித்தபடி... "எங்களுக்கு வேற வேலை இல்லை... உங்க பெட்டியை எடுத்து பாக்கிறது தான் வேலை பாரு..." என்று ராம் பிரசாத் அசட்டையாக கூறினான்.

நந்தினி அவனறியமல் அந்த கிபிட் பாக்ஸை பெட்டிக்குள் மறைக்க, அவள் செய்கையைக் குறும்பாய் பார்த்தபடி, "உன் பெட்டியில் பார்க்க பெருசா என்ன இருக்கும்? பொம்மை தான் வச்சிருப்ப..." என்று தோல் குலுக்கி நக்கலாகக் கூறினான் ராம் பிரசாத்.

நந்தினி தூக்கி வாரிப் போட்டு படாரென்று திரும்பி, கீழே விழப் பார்த்தாள்.

நந்தினியைக் கீழே விழாமல் பிடித்து, "ஈஸி... ஏன் இப்படி பதட்டப்படுற?" என்று அவள் அருகே நின்று புருவம் உயர்த்தி, இன்முகமாகக் கேட்டான் ராம் பிரசாத்.

'இவங்க சரி இல்லை...' என்ற நினைப்போடு ராம் பிரசாத் நின்று கொண்டிருந்த நெருக்கம், நந்தினிக்குப் பதட்டத்தைக் கொடுத்தது.

நந்தினியிடம் தெரிந்த இந்த புது முகத்தில், ராம் பிரசாத் தன்னை மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்.

ராம் பிரசாத்தின் பார்வை பல செய்திகள் கூற, "பெட்டி எப்படி கீழே விழுந்துச்சு?" மிடுக்காய் ஒலித்தது நந்தினியின் குரல்.
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
"எலி கீழ தள்ளி விட்டுருச்சு..." என்று கேலியாகக் கூறினான் ராம் பிரசாத்.

"இவ்வளவு பெரிய பெட்டியையா? பெருச்சாளி வேலை மாதிரி இருக்கு..." என்று நந்தினி முறுக்கிக் கொள்ள... "அடுத்த தடவை அந்த பெருச்சாளியை பிடிச்சி வைக்கிறேன்..." என்று கண் சிமிட்டி சென்றான் ராம் பிரசாத்.

'அந்த பெருச்சாளியே... இவங்க மாதிரி தான் இருக்கு...' என்று புலம்பிக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்தாள் நந்தினி.

பல பிரச்சனைகளோடு தொடங்கிய அந்த நாள் இரவை எட்டியது.

ராம் பிரசாத்தின் பார்வை... நந்தினிக்குப் பல அர்த்தங்களை உணர்த்த நந்தினி தூக்கம் வராமல் தவித்தாள். ராம் பிரசாத்தின் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தாலும்... என்றுமில்லாமல் நந்தினியின் அருகாமை இன்று அவனை இம்சித்து அவன் தூக்கத்தைக் கெடுக்கத்தான் செய்தது.

பவித்ரா அவள் வீட்டில் தூக்கத்தைத் துளைத்து, கண்ணீர் வடிய ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாசுதேவன் மெத்தையில் உருண்டு படுத்தான்.

பவித்ரா அவனருகே இல்லை. முதல் பிரசவத்திற்காக அவள் சென்னை சென்ற பொழுது கூட உடன் சென்றிருந்தான் வாசுதேவன். இன்று பவித்ரா அவனை விட்டுச் சென்றது, வாசுதேவனுக்கு பெரும் தண்டனையாகத் தோன்றியது.

'என் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டாளே...' வாசுதேவனுக்குக் கோபம் கனன்றது.

'ஒரு தடவை எனக்காக உங்க அம்மா கிட்ட பேசிருக்கீங்களா?' இப்பொழுதும் பவித்ரா கேட்பது போல் வாசுதேவனின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

'நான் ஏன் அப்படிப் பேசவில்லை?' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான் வாசுதேவன்.

'தெரியலியே... எனக்குப் பதில் தெரியவில்லை...' வாசுதேவனின் அறிவு அவனிடமே மன்றாடியது.

'நான் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமா இல்லையா?' பவித்ராவின் பிதற்றல் வாசுதேவனை மனம் கனக்கச் செய்தது.

'நான் இத்தனை வருடம், அவள் பேசியதைக் காது கொடுத்துக் கேட்கவில்லையா? அம்மா சொன்னா சரியா தான் இருக்கும்... ஆனால், பவித்ரா சொல்வதையும் கேட்டிருக்கலாமோ? நான் கேட்காமலில்லை... பவித்ரா சம்பந்தப்பட்ட விஷயத்தை அவளிடம் தான் கேட்பேன்... எங்கோ தவறி விட்டு இன்று என் பவித்ராவை கதற வைத்து விட்டேனே...' என்று வாசுதேவனின் மனம் பவித்ராவுக்காக துடித்தது.

'நான் புரிந்து கொண்டேன் என்றால் பவித்ரா நம்புவாளா?இல்லை இத்தனை வருடம் புரியாத விஷயம் எனக்குத் தான் இந்த ஒரு நாளில் புரிந்து விடுமா? இல்லை புரிந்தாலும் என் குணம் மாறுமா?' வாசுதேவனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல சிந்தனைகளோடு அந்த இரவு வாசுதேவனுக்கு தூக்கமில்லா இரவாக அமைந்தது.

மறுநாள் காலை வாசுதேவன் வெளியே கிளம்ப, "வாசு சாப்பிட்டு போ..." என்று உத்தமி குரல் கொடுக்க, மஹாதேவன் தன் மகனை அமைதியாகப் பார்த்தார்.

"வேண்டாம் அம்மா... எனக்கு பசிக்கலை..." என்று கூறிவிட்டு வாசுதேவன் வெளியே செல்ல எத்தனிக்க, "அது எப்படிடா பசிக்காம இருக்கும்... உம் பொஞ்சாதி வெளிய போனதிலிருந்து நீ பச்ச தண்ணீ கூட குடிக்கலை..." என்று உத்தமி கோபமாகக் கூற, வாசுதேவன் மெளனமாக நின்றான்.

"அவ வீட்டுலே இருந்து உன்னை கவனிச்சிக்கிட்டா, நான் ஏன் உன்னைக் கேட்க போறேன்? நான் ஒரு ஓரமா நின்னுப்பேன்.." என்று உத்தமி கழுத்தை நொடிக்க, "நீ ஓரமா நின்றிருந்த பவித்ரா பிரசவத்துக்குக் கூட நம்ம வீட்டில் இருந்திருப்பா..." என்று மஹாதேவன் ஆதங்கத்தோடு கூறினார்.

'பவித்ரா அப்படி தானே சொன்னாள்... இங்கே இருப்பதாக...' வாசுதேவனின் மனம் பவித்ராவை நாடியது.

உத்தமியை எதிர்த்துப் பேசும் எண்ணம் அப்பொழுதும் வாசுதேவனுக்கு வரவில்லை.

"வாசு... அவ திமிரா போனா போறா டா... பாரு வரலான்னு... இல்லைனா அவளை வெட்டி விடு... உனக்கு வேற பொண்ணு பாப்போம்..." என்று உத்தமி கூற, தன் தாயை அதிர்ச்சியாகப் பார்த்தான் வாசுதேவன்.

" உனக்கென்ன நீ ராஜா மாதிரி இருக்க... பட்டணத்து பொண்ணு வேண்டாம்... நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி... சொல் பேச்சு கேட்டு நடக்கிற மாதிரி ஒரு பெண்ணை பாப்போம்..." என்று உத்தமி நிதானமாகக் கூற, வாசுதேவனின் கோபம் கட்டுக்கடங்காமல் ஏறியது.

வாசுதேவன், அவன் முன் இருந்த முற்காலியை தூக்கி படாரென்று வீசினான். வாசுதேவன் வீசிய வேகத்தில், பட்டாளையில் இருந்த தூணில் பட்டு, அந்த முற்காலி மூன்றாகத் தெறித்து விழுந்தது.

"அம்மா... இன்னொரு தடவை இந்த பேச்சு பேசினா... என்னை உயிரோட பார்க்க முடியாது..." என்று மெதுவாக அழுத்தமாகக் கூறிவிட்டு வாசுதேவன் வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்றான்.

வாசுதேவன் வெளியே சென்றதும், "இப்ப எதுக்கு இவன் சாமானை எல்லாம் உடைச்சிட்டு போறான்?" என்று உத்தமி கோபமாகக் கேட்க, "அவன் நல்லவன்... அது தான் பெத்த தாயோட மண்டையை உடைக்க கூடாதுன்னு வீட்டுச் சாமானை உடைச்சிட்டு போறான்." என்று குத்தலாகக் கூறினார் மஹாதேவன்.

"உடைப்பான்... உடைப்பான்... வாசு அவன் பொஞ்சாதிகாக என் மண்டையைக் கூட உடைப்பான்..." என்று புலம்பினார் உத்தமி.

"இவனுக்கு ஊரெல்லாம் அம்மா புள்ளைன்னு வேற பேரு..." என்று சலிப்பாகக் கூறினார் உத்தமி.

மஹாதேவன் மௌனமாக தன் மனைவியைப் பார்க்க, "நீங்க சொல்லுங்க... எந்த விஷயத்தில் அவன் என் பேச்சை கேட்டிருக்கான்?" என்று உத்தமி கழுத்தை நொடிக்க, மஹாதேவன் தன் மனைவியின் பேச்சில் உத்தமியை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

"அந்த கார்த்திகேயன் கூட பழகாதான்னு சொன்னேன்... வாசு கேட்டானா... இல்லை... நான் கிணற்றில் விழுந்தப்ப காப்பாத்தினா, உயிர் தோழன்னு சொல்லிட்டான்.... கடைசில என்ன ஆச்சு... அந்த சீக்காளி பையன் சுபாவை கட்டிக்கிட்டு நம்ம மானத்தை வாங்கிட்டான்." என்று உத்தமி பேச்சை நிறுத்த, "இப்ப எதுக்கு பழைய கதை?" என்று மகாதேவன் முகம் சுழித்தார்.

"இதுக்கு அந்த சந்துரு பையன் உடந்தை... அவனை வெட்டி விடுன்னு சொன்னா... கேட்டானா?" என்று உத்தமி கூற, மஹாதேவன் அவர் கண்களைச் சுருக்கி உத்தமியைப் பார்த்தார்.

"நான் சொன்னதுக்காக பேச மாட்டான்... அவ்வுளவு தென்... சந்துரு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவன் இழையறது எனக்குத் தெரியாதா? அவன் பிள்ளையை இவன் கொஞ்சுறதும்... இவன் பிள்ளையை அவன் தாங்குறதும்... அவன் இடம் வாங்க இவன் விட்டுக் கொடுக்கறதும்... எனக்கு தெரியாதுன்னு வாசு எல்லாம் பண்ணிட்டு இருக்கான்... சுபாவுக்கும், அவ மாப்பிள்ளைக்கும் தெரியாமலே, அவ வீட்டுக்கு வாசு மறைமுகமா எவ்வுளவு செய்தானு எனக்குத் தெரியும்... பவித்ராவுக்கும் தெரியும்... புருசனும் பொண்டாட்டியும் என்கிட்டே மறைச்சிருவாக..." என்று உத்தமி சலிப்பாகக் கூறினார்.

"ரெண்டு பெரும் நல்லது தானே பண்ணிருக்காக..." என்று மஹாதேவன் தன் மகனுக்கு ஆதரவாகப் பேசினார்.

"நான் வேண்டானும்னு சொன்ன குடும்பத்தில், பெண்ணை கொடுத்து பிரச்சனையை வளர்த்து... செய்ததெல்லாம் அவுக... ஆனா ஊரெல்லாம் அம்மா பிள்ளைன்னு கெட்ட பெயர் எனக்கு... பொஞ்சாதியை சொன்னா இவனுக்கு பொத்துக்கிட்டு கோபம் வருது... எப்படி அவ இந்த வீட்டுக்கு வரான்னு நானும் பாக்கறேன்..." என்று உத்தமி சவாலாகக் கூறினார்.

மஹாதேவன் செய்வதறியாமல் குழம்பினார்.

வாசுதேவன் கோபத்தோடும், மனவேதனையோடும் சாலையில் நடந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது சந்துருவின் வீட்டில் சந்துரு உண்பதற்காக அமர, ஓர் அலறல் சத்தம் கேட்டது.

"அம்மா தேவா சத்தம்..." என்று சந்துரு கூறியபடி வெளியே ஓடி வர, "அத்தான் குரல் கேட்குது..." என்று பதறிக் கொண்டு வந்த நந்தினி கண்ட காட்சியில் சற்று உடல் நடுங்கிப் போனாள். அவள் நீண்ட நாள் கேள்விக்கு விடையும் கிடைத்தது.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதெல்லாம் கொஞ்சம் கூட
நல்லாயில்லே, அகிலா டியர்
வாசுதேவன் ரொம்பவே
பாவப்பட்ட பிறவி
பெற்ற தாய்க்கும் கட்டின
மனைவிக்கும் இடையில்
கிடந்து அல்லாடுறவனை
இப்படி விபத்தில் மாட்டி
விட்டுட்டீங்களே?
இது உங்களுக்கே
நல்லாயிருக்காப்பா?
 
Last edited:

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai

Nice update
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Mudiyala.. ithuku antha ud yae paravaala.. naan eppadi nalaki exam eluthuven.. ???..

Vaasu ku enna.. intha uthami anga suthi inga suthi adi madiyila kai vaikuthu.. ????.. ini nee sethadi.. kandippa antha chair un mandayila poda vendiyathu thaan.. unna.. kalutha nerikanum pola iruku d.. unnala marupadiyum pavi adi vaangura.. ?????..

Akila kaaaaaaaaaaaaaaaaaaaaa.... This is toooooooo much... Ram nanthini ellam pinnadi poyitaanga.. uthami yaala avanga romance aa kooda jolly yaa ennala padika mudiyala
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top