• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
Dear Friends,
Thank you for your wonderful likes and comments.. :)

இரண்டல்ல ஒன்று – 33

கோபமாக வீட்டிலிருந்து கிளம்பிய வாசுதேவன், தன் தாயின் பேச்சை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தான். 'பவித்ரா இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வா?' அந்த நினைப்பில் அவனுக்கு தன் தாயின் அறியாமையில் சிரிப்பு தான் வந்தது.

'பவித்ரா இதைச் சொல்லியிருந்தால் நான் நம்பிருப்பேனா?' வாசுதேவனின் மனம் பவித்ராவின் பக்கத்தைச் சிந்திக்க ஆரம்பித்தது.

பல குழப்பங்களுக்கான முடிச்சு அவிழ்வது போல் வாசுதேவனுக்குத் தோன்றியது. முடிச்சு அவிழ்ந்தாலும், வாசுதேவனின் மனம் வாடித் தான் இருந்தது.

சாலையில் நடக்கையில், அவன் பவித்ராவுக்கு மொபைலில் அழைத்தான்.

"எட்டி..." என்று வாசுதேவன் மென்மையாக அழைக்க, "ம்..." என்று பவித்ராவின் குரல் மெலிதாக ஒலித்தது.

'பிடிவாதக்காரி...' என்று எண்ணியபடியே, "நான் உன்னை அத்தான்னு கூப்பிட கூடாதுன்னு சொன்னா கூப்பிட மாட்டியா?" என்று வாசுதேவன் இன்று ஏமாற்றத்தோடு நேரடியாக கேட்டான்.

"என் அத்தான் சொல்லி நான் எதையும் மீறினதை இல்லை..." என்று பவித்ராவின் குரல் முறுக்கிக் கொண்டது. 'அத்தான் குரல் சரி இல்லையே...' என்று எண்ணியபடி.

"சரி... இப்ப சொல்றேன்... வீட்டுக்குக் கிளம்பி வா..." என்று நக்கலாகக் கூறினான் வாசுதேவன், பவித்ராவை வம்பிழுக்கும் எண்ணம் அவனிடம் மேலோங்கியது.

"நீங்க தான் இப்ப என் அத்தான் இல்லியே..." என்று கோபமாகக் கூற நினைத்து பவித்ராவின் குரல் உள்ளே சென்றது.

கோபத்திலும் பவித்ராவின் மென்மை வாசுதேவனை மயக்க, "எட்டி..." என்று உடைந்த குரலில் அழைத்தான் வாசுதேவன்.

"ஏதும் பிரச்சனையா? எங்க இருக்கீங்க?" என்று தன் கண்களைச் சுருக்கி, சந்தேகமாகக் கேட்டாள் பவித்ரா.

தன் தாயின் தவறு புரிந்தாலும், அது வாசுதேவனை பாதித்தாலும் அவனால் தன் தாயை விட்டுக் கொடுக்க முடியுமா?

"அப்படி எல்லாம் இல்லை பவி... நீ என் கூட இல்லைல... அது ஒன்னு தான் குறை..." என்று மெல்லிய சிரிப்போடு கூறினான் வாசுதேவன்.



'அங்க சுத்தி... இங்க சுத்தி இங்க வந்திட வேண்டியது...' என்று சிந்தித்தபடி மௌனம் காத்தாள் பவித்ரா.

மேலும் பவித்ராவை சமாதானம் செய்யும் விதம் தெரியாமல், "நான் அப்புறம் பேசுறேன் பவி..." என்று கூறி மொபைல் பேச்சை முடித்தான் வாசுதேவன்.

'ஏதோ சரி இல்லியே...' என்று சிந்தித்த படி, பவித்ரா நந்தினிக்கு அழைத்தாள்.

"நந்தினி..." என்று பவித்ரா அழைக்க, "சொல்லு அக்கா..." என்று தன் மொபைலை காதில் வைத்தபடி கூறினாள் நந்தினி.

அப்பொழுது தான் குளித்திருந்தாள், என்று அவள் தலை முடியிலிருந்து வடிந்து கொண்டிருந்த நீர் கூறியது.

லெஃகிக்ஸ், டாப்ஸ் அணிந்திருந்தாள். ராம் பிரசாத் அவளையே கண்காணித்த படி அவர்கள் அறையில் அமர்ந்திருந்தான்.

"நந்தினி... உங்க அத்தான் குரல் சரி இல்லை டீ..." என்று பவித்ரா கூற, "ம்.." கொட்டி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.



"நீ பேசி... அத்தானை நம்ம வீட்டுக்கு வர சொல்ற மாதிரி சொல்றியா?" என்று பவித்ரா நந்தினியிடம் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.

'இவளுக்கெல்லாம் வீராப்பு தேவையா?' என்று எண்ணியபடி, "ஏன் அதை நீ சொல்ல வேண்டியது தானே?" என்று தோரணையாகக் கேட்டாள் நந்தினி.

"அவங்களை இங்க வர சொல்ல முடியுமா? முடியாதா?" என்று சண்டைக்குத் தயாரானாள் பவித்ரா.

"என் கிட்ட நல்ல பேசு..." என்று நந்தினி பவித்ராவை திட்டிக் கொண்டே, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தபடி பவித்ராவுக்கு சம்மதம் தெரிவித்தாள் நந்தினி.

பவித்ராவின் மனம் வாசுதேவனுக்காக வேகமாய் துடித்தது.

நந்தினி அருகே நின்று கொண்டிருந்தான் ராம் பிரசாத்.

"எங்கயாவது வெளிய போவோம் நந்தினி..." என்று மென்மையாகக் கூறினான் ராம் பிரசாத்.

ராம் பிரசாத்தை அத்தனை அருகாமையில் எதிர் பார்க்காத, நந்தினி சற்று தடுமாறிப் போனாள்.



ராம் பிரசாத் புருவம் உயர்த்தி, "போலாமா?" என்று இன்முகமாகக் கேட்டான்.

'பெயர் தான் ராம்... செய்வதெல்லாம் மயக்கும் கண்ணன் வேலை...' என்று எண்ணியபடி சம்மதமாகத் தலை அசைத்தாள் நந்தினி.

நந்தினியின் முன் முடி, நீர் வடிய அவள் முகத்தில் விழுந்தது.

அதை ஒதுக்கிவிட்டு, நந்தினியை ஆழமாகப் பார்த்தான் ராம் பிரசாத்.

நந்தினி, "அக்கா... அத்தானுக்குக் கால் பண்ண சொன்னா..." , என்று மெல்லிய குரலில் ராம் பிரசாத்திடமிருந்து தப்பிக்கும் நோக்கோடு கூறினாள்.

"உனக்கு இப்படி கூட பேச வருமா?" என்று கேலியாக ஒற்றை புருவம் உயர்த்தி கண் சிமிட்டி கேட்டான் ராம் பிரசாத்.

'உங்களுக்கு இப்படிப் பேச வரும் பொழுது... எனக்கும் எல்லா மாதிரியும் பேச வரும்...' என்று மனதில் எண்ணியபடி, "அக்கா..." என்று கூறினாள் நந்தினி.

"ம்... ச்..." என்று சலிப்பாகக் கூறினான் ராம் பிரசாத்.



ராம் பிரசாத்துக்குக் குரலில் மட்டும் தான் சலிப்பே ஒழிய, முகத்தில் செயலில் இல்லை. நந்தினியின் வழியை மரித்தபடி நின்று கொண்டு... பேச்சை வளர்த்தான் ராம் பிரசாத்.

"எனக்கு ஒன்னு மட்டும் புரியலை..." என்று நந்தினியை யோசனையாகப் பார்த்தான் ராம் பிரசாத்.

"உங்க வீட்டில் நீயும், நானும் புது ஜோடியா? இல்லை வாசு அண்ணனும்... பவித்ரா மதினியும் புது ஜோடியா? " என்று அது தீவிரமாக ராம் பிரசாத் சந்தேகம் கேட்டான்.

'ரொம்ப முக்கியம்...' என்று நந்தினி எண்ணியபடி ராம் பிரசாத்தைப் பார்த்து, "அக்கா சொன்னா... அத்தானுக்கு நான் ஒரு கால் பண்ணிட்டு வந்திறட்டுமா?" என்று பவ்யமாகக் கேட்டாள் நந்தினி.

"கல்யாணமாகி பத்து வருஷம் ஆகுது... அவங்க ரெண்டு பேரும் இனி சண்டை போட்டு என்ன ஆக போகுது? அவங்க பிரச்சனையை அவங்க சரி செஞ்சிப்பாங்க... நீ என்னைக் கவனி..." என்று தீவிரமாகக் கூறி, "அவங்க ரெண்டும் பேரும் தான் கதாநாயகன்... கதாநாயகி மாதிரி ஜாலியா இருக்காங்க... நாம தான் புது ஜோடி... நாம எப்ப ஜாலியா சுத்தறது?" என்று ராம் பிரசாத் கண்ணடித்துக் கேட்டான்.

'இது சரி வராது...' என்று எண்ணியபடி, "வைஷ்ணவி இங்க தான் இருக்கிறா... மறந்திருச்சா?" என்று தான் தப்பிக்கும் ஆயுதத்தை வீசினாள் நந்தினி.

நந்தினியின் வெட்கம், பதட்டம் பல செய்திகள் கூற, 'இது தான் மேடமோட கவச குண்டலமோ?' என்று எண்ணி, "இருக்கட்டும்... அதுக்கு..." என்று அசராமல் கேட்டான் ராம் பிரசாத்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
'இன்னைக்கி இவங்க ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல...' என்று எண்ணி நந்தினி ராம் பிரசாத்தைப் பார்க்க, "வைஷ்ணவி என் மனதில் இல்லை... ஊரில் தானே இருக்கா... ஒன்னும் பிரச்சனை இல்லை..." அழுத்தமாகக் கூறினான் ராம் பிரசாத்.



"நான்..." என்று நந்தினி மீண்டும் ஆரம்பிக்க, "என்னை ராம்ன்னு கூப்பிடு வழி விடறேன்..." என்று ராம் பிரசாத் கூற, "பிரசாத் அதெல்லாம் முடியாது..." என்று மறுத்தாள் நந்தினி.



"ஏன் நந்தினி... ராம்ன்னு சொல்லிட்டா வழி விட்டிருவேன்... போகணும்... ஆனால் உனக்கு இப்படி என் பக்கத்திலேயே நிற்க பிடிச்சிருக்கு சரியா?" என்று ராம் பிரசாத் நந்தினியைச் சீண்ட, அவள் அவனைக் கோபமாக முறைத்தாள்.

"நீ கோபப்பட்டா கூட அழகா இருக்க..." என்று குழைந்தது ராம் பிரசாத்தின் குரல்.

"சாப்பிட வாங்க..." என்று கோமதி பட்டாளையிலிருந்து அழைக்க, "உங்க மதினி சாப்பிட கூப்பிட்றாங்க..." என்று நந்தினி தடுமாற்றமாக கூற, "ராம்ன்னு சொல்லு சாப்பிட போவோம்... நேரமாச்சு ஹனி..." என்று ராம் பிரசாத் மணியைப் பார்த்தபடியே கூறினான்.

"ஹனி..." என்று நந்தினி ஆச்சரியமாகக் கேட்க, "ம்... டிவைசை இல்லை... உன்னைத் தான் சொல்றேன்... ராம்ன்னு சொல்லு ஹனி..." என்று விடாப்பிடியாகக் கூறினான் ராம் பிரசாத்.

"பெயர் நல்லாருக்கா? நீ வச்ச பெயர் தான்... நான் உனக்கே வச்சிட்டேன்... எனக்கு ஹனி ரொம்ப பிடிச்சிருந்தது... உன்னை மாதிரி சோ ஸ்வீட்...." என்று ராம் பிரசாத் கூற, ராம் பிரசாத்தின் இந்த புதிய அவதாரத்தில் நந்தினி, ‘என்னவோ நடந்திருக்கு... இப்ப ராம்ன்னு கூப்பிடாம எப்படி தப்பிப்பது?' என்று எண்ணியபடி நந்தினி அசந்து நிற்க...

"கார்த்தி..." என்ற வாசுதேவனின் சத்தம் ஓங்கி ஒலித்தது.

அப்பொழுது சந்துரு சாப்பிடுவதற்காக அமர, அந்த அலறல் சத்தம் சந்துருவின் மனதை ஊடுருவிச் சென்றது.

"அம்மா.. தேவா சத்தம்..." என்றான் சந்துரு தடுமாற்றமாக, "உனக்கு எப்ப பாரு அவன் நினைப்பு..." என்று பார்வதி சிடுசிடுக்க, சிவசைலம் சந்துருவைப் பார்த்தார்.

"அம்மா... எனக்கு தேவா சத்தம் தெரியாதா?" என்று கோபித்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினான் சந்துரு.

'அத்தான்... அத்தானோடு சத்தம்.... ஐயோ... ஏதோ சரியில்லைன்னு அக்கா கால் பண்ண சொன்னாலே...' என்று எண்ணியபடி பதறிக் கொண்டு வாசலை நோக்கி ஓடினாள் நந்தினி.

சந்துரு வீட்டின் அருகே, கார்த்திகேயன், வலிப்பு வந்து கையும் காலும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தான்.

வாயில் நுரை தள்ளி, கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியக் கார்த்திகேயன் தரையில் கிடக்க.... செய்வதறியாமல் வாசுதேவன், "கார்த்தி... கார்த்தி..." என்று அலறிக் கொண்டிருந்தான்.

முதல் முறையாக வலிப்பு வரும் நபரை நேரில் பார்த்த நந்தினி நடுநடுங்கிப் போனாள்.

தான் இப்பொழுது காரில் வராததால், கார்த்திகேயனை அழைத்துச் செல்ல முடியாமலும்... செய்வதறியாமலும் தவிக்க, "தேவா..." என்று அழைத்துக் கொண்டு சந்துரு ஓடி வந்தான்.

சந்துரு காரை எடுக்க... வாசுதேவன், சந்துரு இருவரும் கார்த்திகேயனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.

பதட்டத்தில் நந்தினி, "ராம்... இதனால் தான் உத்தமி அம்மா சுபா கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லலியா?" என்று பரிதாபமாகக் கேட்டாள் நந்தினி.

நந்தினியின் ராம் என்ற அழைப்பை உள்வாங்கும் மனநிலையில் இப்பொழுது அங்கு யாருமில்லை.

"ஆம்..." என்று ராம் பிரசாத் தன் தலையை மேலும் கீழும் அசைக்க, நந்தினி யோசனையாக உள்ளே சென்றாள்.

'அறிவியல் வளர்ந்துவிட்டாலும்... மருத்துவம் மேன்மை அடைந்துவிட்டாலும்... மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்...' என்று எண்ணியபடி அங்கிருந்த திண்ணையில் சாய்வாக அமர்ந்தாள் நந்தினி.

மருத்துவமனையில் கார்த்திகேயனுக்கு வைத்தியம் நடை பெற, மருத்துவமனை வருவதற்குள் சுயநினைவை இழந்த கார்திகேயனையும், சுபாவையும் எண்ணி பதட்டமாக நின்று கொண்டிருந்தான் வாசுதேவன்.

அப்பொழுது வாசுதேவனின் தோள் தொட்டு, "தேவா... நீ முறுக்கு கிட்டு நின்னாலும்... உனக்கு என் மேல் கோபம் இல்லைன்னு தெரியும்... ஆனால் வருத்தமா தேவா?" என்று கலங்கிய கண்களோடு கேட்டான் சந்துரு.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top