• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 34 (Pre final Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments... :)

இரண்டல்ல ஒன்று – 34

இத்தனை வருடங்கள் கழித்துக் கிடைத்த தனிமையில் அந்த கேள்வியை சந்துரு கேட்க, வாசுதேவன் சந்துருவை ஆழமாகப் பார்த்தான்.

"நீ ஒரு செயல் செஞ்சா அதில் நியாயமிருக்குமுன்னு எனக்குத் தெரியாதா? இல்லை உனக்குச் சுபாவிடம் இல்லாத உரிமையா?" என்று வாசுதேவன் கலங்கிய குரலில் கேட்டான்.

"ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லிருக்கலாம்... நான் தான் செஞ்சேன்னு அம்மா கிட்ட சொல்லிருப்பேன்... குடும்ப பகையாகியிருக்காது... நீ செஞ்சதால் தானே குடும்ப பகையாகிருச்சு... எனக்கு அது கோபம் தான்... வருத்தம் தான்..." என்று வாசுதேவன் உடைய, அவனை ஆரத் தழுவி... 'என் நண்பன்...' என்று பெருமையாக எண்ணினான் சந்துரு.

அப்பொழுது சுபா, உத்தமி, மஹாதேவன் அனைவரும் மருத்துவமனைக்குள் நுழைய, சுபா கார்த்திகேயனை நோக்கி வேகமாக ஓடினாள்.

உத்தமி சந்துருவின் சட்டையை பிடித்து, "உன்னை மகனாய் நினைத்ததற்கு இப்படி எம் பொண்ணு வாழ்க்கையை ஆக்கிட்டியே..." என்று உத்தமி சந்துருவை அடிக்க முற்பட, வாசுதேவன் சந்துருவிற்கு அடி விழாமல், அதைத் தான் வாங்கிக் கொண்டு, "அம்மா... உங்களுக்கு என்ன நேரத்தில், எது பேசணுமுன்னு தெரியாது..." என்று கடுப்பாக கூறினான்.

"இவன் சகவாசமே வேண்டாமுன்னு தான் நான் சொல்றனே... உன் மண்டைக்கு உறைக்கவே உறைக்காதா?" என்று உத்தமி வாசுதேவனை அடிக்க முயல, சந்துரு உத்தமியின் கைகளை உறுதியாகப் பிடித்தான்.

'இவன் தான் சந்துரு... சின்ன வயதிலிருந்து வாசு தவறு செய்தாலும்... மாட்டிக் கொண்டாலும்... யாரையும், எதையும் சிந்திக்காமல் அவனை பாதுகாக்கும் நண்பன் இவன் தான்... சந்துரு தவறே செய்ய விடாமல் அவனைப் பாதுகாக்கும் நல்லவனே வாசுதேவன்...' என்ற சிந்தனையோடு அவர்களைப் பெருமையாக பார்த்தார் மஹாதேவன்.

"அம்மா... தப்பு செஞ்சது நான்... என்னை அடிங்க... எதுக்கு தேவாவை அடிக்கிறீங்க?" என்று உத்தமியின் முகம் பார்த்துக் கேட்டான் சந்துரு.

"ஊரான் வீட்டு பிள்ளையை அடிக்கும் உரிமை எனக்கு கிடையாது..." என்று உத்தமி தன் வார்த்தைகளால் சந்துருவைத் தூர நிறுத்த, "அம்மா... நான் ஊரான் வீட்டுப் பிள்ளையா? நீங்க வளர்த்த சந்துரு இல்லையா?" என்று பரிதாபமாகக் கேட்டான் சந்துரு.



சுபா கண்களைக் கசக்கியபடி வர, "இந்த பார்... பெத்த பாவத்துக்கு உன்னை மன்னிச்சிட்டேன்... அவனை வெளிய போக சொல்லு..." என்று சந்துருவை கை காட்டினார் உத்தமி.

"அம்மா... கொஞ்சம் அமைதியா இருங்களேன்... அன்னைக்கி என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று சுபா கோபமாகக் கேட்க, "சுபா..." என்று அழுத்தமாக அழைத்து, சந்துரு மறுப்பாகத் தலை அசைத்தான்.

"ஐயோ... சந்துரு அண்ணா போதும்..." என்று சந்துருவைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள் சுபா.

"நானும்... அவங்களும் குற்ற உணர்ச்சியிலே செத்துருவோம் அண்ணா.... உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் தான் நாங்க இவ்வுளவு நாள் அமைதியா இருந்தோம்... போதும் அண்ணா... நான் எல்லாத்தயும் சொல்லுறேன் அண்ணா... நீங்க சரின்னு சொல்லுங்க..." என்று சந்துருவிடம் சுபா யாசகம் கேட்டு நின்றாள்.

சந்துரு வேறு வழியின்றி அமைதி காக்க, "அன்னைக்கி சந்துரு அண்ணா... எங்க கல்யாண விஷயம் கேட்டு, அதைத் தடுக்கத் தான் அங்கு வந்தாக... ஆனால் அதுக்குள்ள, கோவிலில் கல்யாணம் முடிஞ்சிருச்சு... அவங்க என் கழுத்தில் தாலியையும் கட்டிட்டாங்க... நாங்க தான் பண்ணொமுன்னு உங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை பெருசாகும்னு சந்துரு அண்ணா அவங்க கல்யாணம் செஞ்சி வச்சதா சொல்லி பழியை தான் ஏத்துகிட்டாக... சந்துரு அண்ணா அப்புறம் போட்டது சாட்சி கையெழுத்து மட்டும் தான்...." என்று சுபா கூற, அங்கு மௌனம் நிலவியது.

"அந்த ஏமாத்துக்கார பையன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டானா?" என்று உத்தமி கோபமாக வெடிக்க, "நாங்க விரும்பினோம்... உங்க கிட்ட சொன்னோம், நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்களை... அது தான் நாங்களே பண்ணிக்கிட்டோம்..." என்று சுபா இறுமாப்பாகக் கூற, "இப்படி இருக்கிறவனுக்கு யார் பொண்ணு கொடுப்பா?" என்று கோபமாகக் கேட்டார் உத்தமி.

"அம்மா... இதெல்லாம் ஒரு நோயே இல்லை... மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருச்சு... இவர் இப்படின்னு தெரிஞ்சி தான் நான் விரும்பினேன்... நேத்து நம்ம வீட்டில் நடந்த பிரச்சனையில் எனக்கும் அவங்களுக்கு சண்டை... கொஞ்சம் பதட்டமாகிட்டாக காலையில்... அது தான் ரொம்ப வருஷம் கழிச்சி இன்னைக்கி திரும்பி வந்திருக்கு..." என்று சுபா வருத்தம் தொனித்த குரலில் கூறினாள்.

உத்தமி சுபாவை வெறுப்பாகப் பார்க்க, "அம்மா... நம்ம வாசு அண்ணனைச் சின்ன வயசில் கிணற்றில் விழுந்து காப்பாத்தும் பொழுது தலையில் அடிபட்டதால் தான் அம்மா அவங்களுக்கு இப்படி வருது... எல்லாரும் கிணற்றில் தவறி விழுந்த வாசு அண்ணாவைப் பார்த்தோம்... காப்பாத்த போன இவங்களுக்கு பட்ட அடியை அப்ப யாரும் கவனிக்கலை... ரொம்ப நாள் கழிச்சி தான் தெரிஞ்சிருக்கு..." என்று தாழ்ந்த குரலில் கூறினாள் சுபா.

"எனக்கு அவங்களை விரும்பும் பொது இந்த விஷயம் தெரியாது... தெரிஞ்ச பிறகு, யாருக்காகவும் அவங்களை விட எனக்கு மனசில்லை... இது உங்க யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான் அவங்க சொல்லிருந்தாக.... ஆனால், சொல்லாம உங்களுக்கு மனுஷங்களை புரியத் தெரியாது அம்மா..." என்று உத்தமியைப் பார்த்துச் சலிப்பாகக் கூறி சென்றாள் சுபா.

"கடைசியில் எல்லாரும் நல்லவங்களா ஆகி என்னை ஒதுக்கி வச்சிட்டிங்கள்ள?" என்று வாசுதேவன் வருத்தமாகக் கேட்க, வாசுதேவனைத் தோளோடு அணைத்து, "நல்லவன் நீ வருத்தப்பட்டிற கூடாதுன்னு தான் தேவா..." என்று உணர்ச்சி பொங்கக் கூறினான் சந்துரு.

'நல்ல நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமே...' என்று எண்ணினான் வாசுதேவன்.

சில மணி நேர சிகிச்சைக்குப் பின், கார்த்திகேயன் உடல் நிலை தேறிவிட... அனைவரும் வீடு திரும்பினர்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. உத்தமியால், சுபா சொன்ன எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் எந்த உறவையும் புதுப்பித்துக் கொள்ளவும் விரும்பவில்லை.

ஆனால், முன் போல் வாசுதேவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சந்துரு, வாசுதேவன் இருவரும் முன் போல் சுதந்திரமாக ஊரை சுற்றினர்.

கார்த்திகேயனும் அவ்வப்பொழுது இவர்களோடு சேர்ந்து கொண்டான்.

ராம் பிரசாத் நந்தினியின் நெருக்கம் அதிகமானாலும், வாசுதேவன் பவித்ராவின் இடைவெளி குறையவில்லை.

வாசுதேவனின் அன்பு குறையவில்லை. "எட்டி..." என்ற அழைப்பும் குறையவில்லை.

அதே நேரம், அவன் பவித்ராவை முன் போல் வீட்டிற்கு அழைத்துக் கட்டாயப்படுத்த வில்லை. பவித்ராவின் அன்பும் குறையவில்லை. கோபமும்... வலியும் குறைந்தபாடில்லை. அவள் பிரசவத்திற்கான நாளும் நெருங்கி இருந்தது.

அவர்கள் சண்டை சந்தோஷுக்கு தெரியாமல் இருவரும் சாமர்த்தியசாலித்தனமாக பார்த்துக் கொண்டார்கள்.

அன்று, வாசுதேவன் சந்தோஷை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு மறுபடியும் பவித்ராவை தேடி வந்தான்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
பவித்ரா அவள் அறையில் யோசனையாக ஜன்னல் வழியாகத் தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பவி..." என்று வாசுதேவன் அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைய, "நீங்க வேலையைக் கவனிக்கப் போகலையா?" என்று பவித்ரா வாசுதேவனை பார்த்தபடி கேட்டாள்.

மறுப்பாகத் தலை அசைத்தான் வாசுதேவன். "மனசுக்கு ஏதோ சரி இல்லை பவி... உன் முகம் ரொம்ப வாடி இருக்குட்டி.." என்று அவள் அருகே நின்று கொண்டு கூறினான் வாசுதேவன்.

"அது ரொம்ப நாளா அப்படி தான் இருக்கு..." என்று சலிப்பாகக் கூறினாள் பவித்ரா.

"எட்டி... உனக்கு எதுக்கு இந்த சலிப்பு? இந்த நேரத்தில் சந்தோஷமா இருக்கனும்..." என்று வாசுதேவன் அவள் தோள் மீது கை போட்டு கூறினான் வாசுதேவன்.

"அதுக்கு நீங்க என்னை சந்தோஷமா வச்சிக்கணும்..." என்று வாசுதேவனைக் குற்றம் சாட்டினாள் பவித்ரா.

"எம் பொஞ்சாதியை சந்தோஷமா வச்சுக்கிட்டா போச்சு... என்ன செய்யணுமுன்னு சொல்லு... செய்றேன்... அதுக்கு தானே நான் இருக்கேன்...." என்று வாசுதேவன் சிரித்தமுகமாக கூறினான்.

பல நாட்களாக பல விதமாக பவித்ராவிடம் பதிலைத் தேடிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

"நீங்க உங்க வேலையைப் பார்க்க கிளம்புங்க... எனக்கு இன்னும் ஏழு நாள் இருக்கு... ஏதாவதுன்னா நான் உங்களை கூப்பிடறேன்..." என்று பவித்ரா கூற, வாசுதேவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி, "நான் கிளம்பட்டுமா... உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லிலை?" என்று கேட்டு உறுதி செய்து கொண்டே அங்கிருந்து கிளம்பினான் வாசுதேவன்.

வாசுதேவன் சென்று ஒரு மணி நேரத்தில், பவித்ராவுக்கு வலி விண்விண்ணென்று எடுத்தது.

"அம்மா... அத்தானை வர சொல்லுங்க..." என்று பவித்ரா முனங்கினாள்.

செல்வி வாசுதேவனுக்கு அழைக்க, அவன் மொபைல் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.

செல்வி நந்தினியை அழைக்க, நந்தினி விரைந்து வந்தாள்.

"ஏன் இன்னும் ஹாஸ்பிடல் கிளம்பளை?" என்று நந்தினி பதட்டத்தோடு கேட்க, "அத்தான் வரணும்..." என்று பிடிவாதமாகக் கூறினாள் பவித்ரா.

"லூசாடி நீ... அத்தான் வந்து என்ன ஆக போகுது?" என்று நந்தினி சண்டையிட ஆரம்பிக்க, ராம் பிரசாத் சந்துருவுக்கு அழைத்து வாசுதேவனை அழைத்து வர சொன்னான்.

சந்துரு, வாசுதேவனை அழைத்துக் கொண்டு வர, பவித்ரா வலியோடு வாசுதேவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

அனைவரும் பவித்ராவை திட்டிக் கொண்டிருக்க, "அத்தானுக்கு என்னைக் கூப்பிட்டுட்டு போறதை விட என்ன முக்கிய வேலை..." என்று வலியோடு முனங்கி கொண்டிருந்தாள் பவித்ரா.

"பவி..." என்று அழைத்துக் கொண்டு வாசுதேவன் அவள் அருகே நெருங்கினான்.

வாசுதேவன் பவித்ராவிடம் அவள் பிடிவாதத்திற்குச் சிறிதும் கோபித்துக் கொள்ளாமல், "எனக்குத் தெரியும்ட்டி... நீ நான் வராமல் கிளம்ப மாட்டேன்னு..." என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

ராம் பிரசாத் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

பவித்ரா வலியால் துடிக்க, வாசுதேவனின் உடல் நடுங்கியது. பவித்ரா வாசுதேவனின் பயத்தை உணர்ந்தாள்... "பயப்படாதீங்க... எனக்கு ஒண்ணுமில்லை... நானும் குழந்தையும் நல்ல படியா வருவோம்..." சோர்வாக ஒலித்தது பவித்ராவின் குரல்.

வாசுதேவன் கண்கலங்க.... அதைத் தாங்காதவளாய்... "அத்தான்..." என்று பல நாட்களுக்குப் பின் வலி தாங்காதவளாக வாசுதேவனின் காதில் கிசுகிசுப்பாய் அழைத்தாள் பவித்ரா.

"எட்டி... நீ அப்படி என்னைக் கூப்பிடாத... வலியோடு அப்படி கூப்பிடாதட்டி... என்னால் தாங்க முடியலை..." என்று வாசுதேவனின் குரல் பதட்டத்தோடு பயத்தோடு கரைந்து மெலிந்து ஒலித்தது.

மருத்துவமனைக்குச் செல்ல.. அனைவரும் வெளியே காத்திருக்க, சில மணி நேர போராட்டத்திற்குப் பின் பவித்ரா ஓர் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

உத்தமி அங்கு நின்று கொண்டிருந்தார். "என் பேத்தி..." என்று பெருமையாகக் கூறியபடி, குழந்தையைக் கையில் பெற்றுக் கொண்டார்.

மாப்பிள்ளை வீட்டுத் தோரணையில், தன் உரிமையை அங்கு நிலை நாட்டிக் கொண்டிருந்தார். செல்வி, ஆவுடையப்பன் இருவரின் பார்வையிலும் அவர் வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. "பெண்ணை பெற்றவர்கள் பல இடங்களில் வேலை செய்வதற்கு மட்டும் தான் போலும்." என்று ராம் ப்ரசாத்திடம் நந்தினி தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

"நமக்குக் குழந்தை பிறக்கும் பொழுது அதை மாத்திருவோம்..." என்று நந்தினியின் ஆதங்கத்திற்குத் தீர்வு சொன்னான் ராம் பிரசாத்.

நந்தினி வெட்க புன்னகையோடு குழந்தையைக் காண ஆர்வமாகச் சென்றாள்.

வாசுதேவன், பவித்ராவை காண அறைக்குள் சென்றான்.

பவித்ரா சோர்வாகப் படுத்திருந்தாள்.

பவித்ராவின் தலை கோதி, அவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

உள்ளே நுழைந்த உத்தமி, "சீக்கிரம் உடம்பை தேத்திட்டு... நம்ம வீட்டுக்கு வர வழிய பாரு... நீ வீட்டை விட்டு போனதிலிருந்து வாசு வீட்டில் சாப்பிடறதில்லை... வந்து அவனைக் கவனி..." என்று கம்பீரமாக கூறினார்.

"சீக்கிரம் வந்திருவா..." என்று செல்வி கூற, அங்கு அமைதி நிலவியது.

பவித்ரா பதில் எதுவும் பேசாமல், தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். பவித்ராவின் மௌனம் மற்றவர்களுக்குச் சோர்வாகத் தெரிந்தாலும்... வாசுதேவனுக்கு விடையில்லா கேள்வியாகத்தான் இருந்தது.

மாதங்கள் உருண்டோடின... பவித்ராவின் பிடிவாதம் தளர்ந்தபாடில்லை... செல்வி செய்வதறியாமல் தவிக்க… வாசுதேவன் மெலிந்து சோர்வாக காணப்பட்டான்.

"இருந்தாலும்... ஒரு பொம்பளைக்கு இவ்வுளவு பிடிவாதம் ஆகாது..." என்று அவர்கள் வீட்டில் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார் உத்தமி.

வாசுதேவன் எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். "இவன் ஒருத்தன் பேசவும் மாட்டான்... வீட்டில் சாப்பிடவும் மாட்டான்... இவன் பொஞ்சாதி வரதுக்கு முன்னாடி என் கிட்டத் தானே பேசினான்... நான் தானே சாப்பாடு போட்டேன்." என்று உத்தமி கழுத்தை நொடித்தார்.

"உத்தமி.. நாம இன்னைக்கி பவித்ரா வீட்டுக்கு போறோம்... பவித்ராவை வீட்டுக்கு கூப்பிடறோம்..." என்று மஹாதேவன் உறுதியாகக் கூறினார்.

மறுப்பு தெரிவிக்க வாய் திறக்க எண்ணிய உத்தமி வாசுதேவனைப் பார்த்தார்.

மெலிந்து, சோர்ந்து உயிரில்லா ஜீவனாய் காட்சி அளித்த வாசுதேவன் உத்தமியின் எண்ணப் போக்கை மாற்றினான்.

'அப்படி என்ன தான் இருக்கோ அவ கிட்ட...' என்று எண்ணியபடி, "பவித்ராவுக்கு உன் மேல் அக்கறை இல்லாமல் இருக்கலாம்... ஆனால்... நாங்க அப்படி இல்லை... எங்களுக்கு உன் மேல் அக்கறை இருக்கு... அவளை அப்படியே விட முடியாது... பேசுற விதமா பேசி கூட்டிட்டு வருவோம்..." என்று பெருந்தன்மையாகப் பேசுவது போல் பேசினார் உத்தமி.

அன்று மாலை, பவித்ராவை காண, உத்தமி, மஹாதேவன், வாசுதேவன் மூவரும் சென்றனர்.

'பிரச்சனை இல்லாமல் பவித்ரா அவர்களோடு கிளம்பிச் செல்ல வேண்டும்... இவங்க என்ன பேசுவாங்களோ?' என்ற எண்ணத்தோடு செல்வி ஆவுடையப்பன் இருவரும் உத்தமியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
நான் தான் பஸ்ட்:love::love::love::love::love: அருமையான பதிவு, பவித்ரா மஹாதேவன் உத்தமியுடன் அவர்கள் வீீட்டுக்கு செல்வாளா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top