• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
Dear Friends,
Thank you for your wonderful likes and comments...

இரண்டல்ல ஒன்று – 4

ராம்பிரசாத் வைஷ்ணவியை ஆழமாகப் பார்க்க, அவன் மொபைல் ஒலித்தது.

"அண்ணா... சொல்லுங்க அண்ணா..." என்று பதட்டமாக கூறினான் ராம்.

எதிர்பாக்கம் சந்துரு பேசியதைக் கேட்டு மௌனமாக நின்றான். ஏதோ பேச எத்தனித்து, எதுவும் பேச முடியாமல் சம்மதமாக தலை அசைத்தான் ராம்பிரசாத்.

தன் பேச்சை முடித்துக் கொண்டு, ராம் வைஷ்ணவியைக் கண்களில் வருத்தத்தோடு பார்க்க, வைஷ்ணவி அவனை கேள்வியாக பார்த்தாள்.

வைஷ்ணவி கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, "வைஷு. இப்ப கூட அண்ணன் என் சம்மதத்துக்கு தான் call செய்றாங்க. வா இப்பவே நம்ம விஷயத்தை சொல்லுவோம். ஊரில் கல்யாணத்தை ஜாம் ஜாம்முன்னு நடத்துவாங்க." என்று ராம் பிரசாத் பொறுமையாகக் கூற, அவனை வெறுப்பாகப் பார்த்தாள் வைஷ்னவி.

"மேரேஜ் ரிஜிஸ்டர் பண்றோம். நம்ம கல்யாணம், சென்னையில் தான். அப்பாவுக்கு மினிஸ்டர் friends இருக்காங்க. அவுங்க எல்லாரையும் கிராமத்துக்கு வர சொல்ல முடியுமா?" என்று வைஷ்ணவி கோபமாக கேட்டாள்.

"என்னால் அங்க வர முடியாது." என்று அவள் கறாராக கூற, "அப்ப, நான் எங்க வீட்டில் பார்க்கிற பெண்ணுக்குத் தான் சம்மதம் சொல்லணும். வேறு வழி இல்லை." என்று கோபமாக கூறினான் ராம் பிரசாத்.

"என்ன ராம், மிரட்டுறியா? பொண்ணுங்க என்ன விளையாட்டு பொருளா? நீ உன் இஷ்டப்படி விளையாடுவதற்கு..." என்று வைஷ்ணவி கோபமாக கேட்க, "எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி தான்." என்று அவளை விடக் கோபமாக கூறினான் ராம்பிரசாத்.

ஆனால் ராமின் மனமோ வைஷ்ணவிக்குச் செய்யும் துரோகத்தை விட, முகம் தெரியாத அந்தப் பெண்ணுக்கு செய்யும் துரோகத்தை எண்ணி வருந்தியது.

"என்னால் எங்க அப்பாவையும் விட்டுத் தர முடியாது. உன்னையும் எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் விட்டுத் தரமாட்டேன்… அடுத்த வாரம்... இதே நேரம் நமக்கு register marriage. இப்பவே சொன்னால் நீ சென்னையில் இருக்க ஒதுக்க மாட்டாங்க... கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க.. கல்யாணம் பண்றோம் dot. அப்புறம் உங்க வீட்டில் சொல்றோம். நீ அதுக்கு அப்புறம் சென்னையில் இரு... எல்லாரும் ஒத்துப்பாங்க. நாளடைவில் நம்மளை ஏத்துப்பாங்க. நானும் முடிந்த அளவுக்கு வருஷத்தில் சில நாட்கள் உங்க ஊருக்கு வர பழகிக்கறேன்." என்று கோபமாக ஆரம்பித்து சாந்தமாக முடித்தாள் வைஷ்ணவி.

வைஷ்ணவி மேலும் ராம் பிரசாதை, சமாதானம் செய்ய முயல, ராம் ஒரு சலிப்போடு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அழகியபுரத்தின் நினைவுகளோடு தன் அலுவலகம் நோக்கிப் பயணித்தான் ராம் பிரசாத்.

நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.

அழகியபுரம் பண்ணை வீடு. காற்றோட்டமாகப் பசுமையாக காட்சி அளித்தது அந்த வீடு.

சந்திரசேகரின் தந்தை சிவசைலம் வாசல் பக்கம் இருக்கும் திண்ணையில் அமர்ந்து சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். வேஷ்டியும், சட்டையுமாக அவரைச் சுற்றி சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சந்திரசேகர் வயல் வேலையைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி இருந்தான்.

கோமதி சமையல் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்க, சந்திரசேகரின் தாய் பார்வதி முறத்தால் அரிசியை புடைத்துக் கொண்டிருந்தார்.

"ஆச்சி... ஆச்சி...." என்று சத்தம் செய்து கொண்டே ஓடி வந்து தன் பாட்டி பார்வதியை கட்டிக் கொண்டாள் அகல்யா.

"செல்ல அம்மை. என்ன வேணும்?" என்று அகல்யாவை அணைத்துக் கொண்டு கேட்டார் சந்திரசேகரின் தாய் பார்வதி.

"நம்ம வீட்டுக்குச் சித்தி வர போறாங்களா?" என்று ஆர்வமாகக் கேட்டாள் அகல்யா.

"ஆமா டா செல்லக் குட்டி." என்று அவர் கூற, "ஆச்சி.... சந்தோஷ் சித்தி தான் இனி எனக்கும் சித்தியா?" என்று அடுத்த கேள்வியை அகல்யா கேட்க, கன்னத்தில் கை வைத்து அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார் பார்வதி.

"அடி... ஆத்தி... உனக்கு இதெல்லாம் யார் சொல்லி குடுத்தா?" என்று பார்வதி ஆச்சரியமாக வினவ, "தாத்தா..." என்று பெருமையாக கூறினாள் அகல்யா.

இவர்கள் பேசுவதை கவனித்தபடி புன்னகையோடு சமைத்துக் கொண்டிருந்தாள் கோமதி.

"இதைச் சொன்ன உங்க தாத்தா, வேற என்ன சொன்னாங்க?" என்று பார்வதி அகல்யாவிடம் அடுத்த கேள்வியை கேட்க, "தாத்தா வேற ஏதும் சொல்லலை..." என்று தன் உதட்டைப் பிதுக்கினாள் அந்தச் சிறுமி அகல்யா.

"அதுக்குள்ள தாத்தா கிட்ட பேச எல்லாரும் வந்துட்டாங்க." என்று சோகமாக கூறினாள் அகல்யா.

"அதுக்கென்ன... நீ ஆச்சி கிட்ட பேசு..." என்று அவர் அகல்யாவின் தாடையைத் தடவி கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் அகல்யா.

"புதுச் சித்தி வந்த உடன், சந்தோஷ் அடிக்கடி நம்ம வீட்டுக்கு வருவானா?" என்று அகல்யா கண்களில் ஆசையோடு கேட்க, "கண்டிப்பா வருவான்." என்று சந்துரு தன் மகளின் தலையை தடவிச் சிரித்த முகமாகக் கூறினான்.

"ஹே... ஜாலி...." என்று அகல்யா தன் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு குதித்தாள்.

"ஏண்டா சந்துரு... சின்ன புள்ளை மனசில் ஆசையா வளர்க்கிற?" என்று தன் மகனிடம் கடினமாக கேட்டார் பார்வதி.

"ஏன் அத்தை அப்படி சொல்றீங்க? சந்தோஷ் கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வருவான்." என்று பார்வதியிடம் சமாதானமாகக் கூறினாள் கோமதி.

"உனக்குத் தெரியாது கோமதி. வாசு எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமா? ரொம்ப நல்லவன். அவன் இங்க தான் இருப்பான் இருபத்தி நாலு மணி நேரமும். சொல்ற பேச்சை அப்படிக் கேட்பான். ஒரு வார்த்தை மறு வார்த்தை பேசமாட்டான். எல்லாப் பிரச்சனையும் இவனால் வந்தது." என்று சந்துருவை கைகாட்டி கோபமாக கூறினார் பார்வதி.

'நல்லவனா இருந்தா மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும்.' என்று எண்ணினான் சந்துரு.

"வாசுவும் எனக்குப் பையன் மாதிரி தான். சொந்தத்தை விட, நட்பின் பிணைப்பு அதிகமுன்னு நான் சொல்லுவேன். அந்த குடும்பத்தோடான நட்பு அப்படி... இன்னைக்கு அந்த பிள்ளைங்க கிட்ட பேச முடியலைன்னு எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா?" என்று கண் கலங்கக் கேட்டார் பார்வதி.

இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் சந்துரு அமைதியாகத் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான். அகல்யா அவன் மடியில் அமர, அவளை கொஞ்சிக் கொண்டு இருந்தான் சந்துரு.

"பார்வதி... அது தான் மருமக கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிரும்ன்னு சொல்றால்ல. இன்னும் ஏன் பழசை பேசிட்டு இருக்க?" என்று கடிந்த கொண்டார் சிவசைலம் சந்துருவின் தந்தை.

சந்துரு அமைதியாக இருக்க, "ஊமைக் கோட்டான். செய்றதெல்லாம் செய்துட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருக்க வேண்டியது." என்று பார்வதி முணுமுணுக்க, "பார்வதி..." என்று அதட்டினார் சிவசைலம்.

"நீங்க எப்பவுமே, உங்க மகன் சொல்றது தான் சரின்னு சொல்லுவீங்க... இந்தக் கல்யாணமே நடக்காது... பிரச்சனை அதிகமாகுமுன்னு நான் சொல்றேன். எனக்கு உத்தமியைப் பத்தி நல்லா தெரியும்..." என்று பார்வதி உறுதியாகக் கூற, கோமதி தன் மாமியாரை யோசனையாகப் பார்த்தாள்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
சந்துரு மறுப்பாகத் தலை அசைத்து, "வாசு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான்." என்று அழுத்தமாகக் கூறி, கோமதி தன்னிடம் கூறிய அக்கா கதை நினைவு வர, அவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தான் சந்துரு.

கோமதி வெட்கப் புன்னகையோடு சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இதைப் பார்த்தும் பார்க்காதது போல் தன் பேச்சை தொடர்ந்தார் பார்வதி.

"உங்க வயசு அப்படி.. எல்லாமே விளையாட்டா தெரியுது. நான் சொல்றது புரியலை. வாசு நல்லவன்.. மறுப்பு தெரிவிக்க மாட்டான். ஆனால் அவங்க அம்மா சொல்றதை அப்படியே செய்வான். உங்க ஆசையைக் கெடுக்க நான் விரும்பலை. இதனால் என்ன என்ன பிரச்சனை வர போகுதோ?" என்று குழப்பமான குரலில் கூறினார் பார்வதி.

"பெரிய பிரச்சனை ஒன்னும் வாராது. வாசு அப்பா மஹாதேவன் எல்லாம் பார்த்துப்பான்." என்று சிவசைலம் உறுதியாக கூற, பார்வதி அமைதியாகத் தலை அசைத்தார்.

இவர்கள் பல யோசனையோடு பேசி கொண்டிருக்க, நாம் சென்னை நோக்கிப் பயணிப்போம்.

பவித்ரா, வாசுதேவன், சந்தோஷ் மூவரும் உள்ளே நுழைய, "சந்தோஷ்..." என்று அழைத்து அவனைக் கட்டிக்கொண்டாள் நந்தினி.

வாசுதேவன், பவித்ரா இருவரும் நந்தினியை வாஞ்சையோடு பார்க்க, இவர்களோடு ஓரிரு வார்த்தை பேசிவிட்டு, அவள் சந்தோஷோடு விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

சிலபல முகமன்களுக்குப் பின், பவித்ரா நந்தினி அருகே வந்தாள்.

ஐஸ் கிரீம் ஸ்டிக் வைத்து அவள் செய்த சின்ன சின்ன பொம்மைகளை அங்கும் இங்கும் ஓட, சந்தோஷ் அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"நந்தினி... இது என்னது?" என்று பவித்ரா அந்தப் பொம்மைகளை கண்ணுயர்த்தி பார்த்துக் கேட்க, அவர்களின் தாய் செல்வி தலையில் அடித்துக் கொண்டு, "அதை முதலில் கேளு..." என்று சலிப்பாக கூறினார்.

"அக்கா... இது ரோபோட்." என்று கண்சிமிட்டிக் கூறினாள் நந்தினி.

"பவித்ரா. இப்படி தான் உன் தங்கச்சி கதை விடுவா. நம்பிராத." என்று ஆவுடையப்பன் நந்தினியைப் பார்த்து கேலி பேசி பெரிதாகச் சிரிக்க, நந்தினி தன் தந்தையை முறைத்துப் பார்த்தாள்.

"அப்பா... அவளை ஏன் வம்பு இழுக்கிறீங்க?" என்று தன் தந்தையிடம் கண்டிப்போடு கூறிக்கொண்டு நந்தினி அருகே அமர்ந்தாள் பவித்ரா.

'இவள் நம் வீட்டில் எவ்வளவு அமைதியாகப் பேசுவாள்?' என்று எண்ணியபடி பவித்ராவை பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

"அக்கா. ரோபோட் அப்படினா படத்தில் வர மாதிரி தான் இருக்கணும்னு அவசியமில்லை. சின்ன சின்ன machine, நாம program செய்து அதை மாதிரி வேலை பார்க்கிற எல்லாமே ரோபோட் தான் அக்கா." என்று நந்தினி பொறுமையாக கூற, பவித்ரா தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

"ஒன்னும் புரியலைல, இப்படி தான் வாய் கிழிய வக்கணையா பேசுவா... ஒரு வேலையில் கூட ரொம்ப நாள் இருக்க மாட்டா. கேட்ட… reasearch பண்றேன்னு சொல்லுவா..." என்று செல்வி காட்டாமாகக் கூறினார்.

"நான் பேசுறது உங்களுக்குப் புரியாது. அக்காவுக்குப் புரியும்." என்று நந்தினி சிடுசிடுப்பாக கூற, "விடுங்க அத்தை அவளுக்குப் பிடிக்கிறதை செய்யட்டும்." என்று வாசுதேவன் நந்தினிக்காகப் பரிந்து பேசினான்.

"அப்படி சொல்லுங்க அத்தான்." என்று வாசுதேவனைப் பார்த்து பிரியத்தோடு கூறினாள் நந்தினி.

வாசுதேவன் தலை அசைப்போடு, வீட்டிற்கு பேசிட்டு வரேன் என்று கூறி அங்கிருந்து செல்ல, "அக்கா, எப்படி இருக்க?" என்று அன்பாகக் கேட்டாள் நந்தினி.

"நல்லாருக்கேன் டா." என்று பவித்ரா சிரித்தமுகமாக கூற, "எனக்கு நீ இல்லாம ரொம்ப அடிக்குது." என்று நந்தினி சோகமாக கூற, அப்பொழுது அங்கு வந்த வாசுதேவன், "பேசாமல், எங்க ஊருக்கு வந்திரு. உனக்கு அங்கு மாப்பிளை பார்த்திருவோம்." என்று நந்தினியைப் பார்த்து கேலியாகக் கூறினான்.

அப்பொழுது ஆவுடையப்பன், "மாப்பிள்ளை... உங்க ஊரில் இருந்து ஒரு சம்பந்தம் வந்திருக்கு. பண்ணை வீடுன்னு சொன்னாங்க." என்று தந்தை கூற, பவித்ரா பதட்டத்தோடு வாசுதேவனைப் பார்த்தாள்.

வாசுதேவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், "நந்தினி, என்ன சொல்றா மாமா?" என்று நிதானமாகக் கேட்டான் வாசுதேவன்.

"அவ படிச்ச படிப்புக்கு அங்க வேலை பார்க்க முடியுமான்னு தெரியலை. படிப்பு வேலை பார்க்க முடியாது. ஆனால், பவித்ரா, நந்தினி ரெண்டு பெரும் ஒரே ஊரில் இருந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்துப்பாங்க. நானும் retire ஆனவுடன் அங்க வந்திரலாம்னு பாக்கறேன்... ஊரில் இருக்கிற நிலங்களை பார்த்துட்டு அக்கடான்னு இருக்கலாம்." என்று ஆவுடையப்பன் நிம்மதி பெருமூச்சோடு கூறினார்.

நந்தினியின் மறைமுக சம்மதம் அதில் அடங்கியிருப்பதாக வாசுதேவனுக்குத் தோன்றியது. பவித்ரா ஏதோ பேச வாயெடுக்க, பவித்ராவை தன் கண்களால் அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினான் வாசுதேவன்.

"மாப்பிளை பேரு ராம்பிரசாத்... உங்களுக்கு எல்லாரயும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்." என்று ஆவுடையப்பன் கூற, "நல்லா தெரியும் மாமா. தங்கமான பையன். அருமையான குடும்பம்." என்று வாசுதேவன் கூற பவித்ரா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

நந்தினி, அங்கு நடப்பவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் பேசி முடித்துவிட்டு உறங்கச் செல்ல, "நந்தினி, நீ என்ன நினைக்கிற?" என்று பவித்ரா பொறுமையாக கேட்டாள்.

"உண்மையா எனக்குத் தெரியலை அக்கா. எனக்கு இங்க கிடைக்கிற வேலை பிடிக்கலை. நான் நானா இருக்க முடியலை. என் ஆசைகளும், கற்பனைகளும், யாருக்கும் புரியாது. என் வேலையை நான் படித்த படிப்புக்கு ஏற்ற மாதிரி சுதந்திரமா செய்யணும்னு நினைக்கிறேன். என்னைக்கோ ஒரு நாள் யாரையோ கல்யாணம் செய்யணும். அது நீ இருக்கிற ஊரில், உன் பக்கத்தில் இருந்தா சந்தோசம் தான்." என்று நந்தினி நிதானமாகக் கூறினாள்.

"நீ பெரிய பெரிய வேலைக்கெல்லாம் போவன்னு நான் ஆசைப்பட்டேன்." என்று பவித்ரா வருத்தம் தொனித்த குரலில் கூற, "அக்கா... இப்பவும் அது நடக்கும். நான் பெருசா எதையாவது சாதிப்பேன்." என்று நந்தினி சிரித்தமுகமாக கூறினாள்.

பவித்ரா யோசனையாக வாசுதேவன் இருக்கும் அறைக்குள் செல்ல, "என்ன பவி, இவ்வளவு யோசனை?' என்று வாசுதேவன் அக்கறையாக வினவினான்.

பவித்ரா தன் தலையை இருபக்கமும் அசைக்க, "அட... மகாராணி அவங்க வீட்டுக்கு வந்த உடனே பயங்கர பௌசா இருக்கீக..." என்று வாசுதேவன் பவித்ராவை அவன் பக்கம் இழுத்து, வம்பிழுத்தான்.

"அட... நீங்க அழகியபுரத்தில், மீசையை முறுக்கி காட்டுற பௌச விட இது கம்மி தான்..." என்று கூறினாள் பவித்ரா.

வாசுதேவன் பெருங்குரலில் சிரிக்க, "இது உங்க ஊரில்லை. அபார்ட்மெண்ட் பக்கத்து வீட்டிலிருந்து வந்துருவாங்க." என்று பவித்ரா புருவம் சுருக்கி கிசுகிசுத்தாள்.

"ஒய்.. அது என்ன... உங்க ஊரு... நம்ம ஊருன்னு சொல்லு..." என்று கண்டிப்போடு கூறினான் வாசுதேவன்.

பவித்ரா புன்னகையோடு, "நீங்க நினைத்தால் இந்தக் கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிறக்கலாமே?" என்று யோசனையாகக் கூறினாள் பவித்ரா.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
"அவுக நல்ல குடும்பம். ராம் நல்ல பையன். அதுவும் நம்மள விட பெரிய குடும்பம். எதுக்கு மறுக்கணும்? அதுவும் நாம வேணாமுன்னு சொன்ன பொறாமையில் சொல்லுதோமுன்னு நினச்சிறை கூடாதில்ல?" என்று மெதுவாக பவித்ராவிடம் எடுத்துக் கூறினான் வாசுதேவன்.

பவித்ரா குழப்பத்தோடு அவனை ஏறிட்டுப் பார்க்க, வாசுதேவன் அவன் கண்களை சுருக்கி அவளைப் பார்த்தான்.

பவித்ரா மேலும் தொடர்ந்தாள். "இல்லை.. உங்களுக்கும், அவங்களுக்கும் ஆகாது. அத்தை வேற எப்பவுமே அவங்களை திட்டிகிட்டே இருப்பாங்க... எனக்கென்னவோ எதாவது பிரச்சனை வருமோன்னு தோணுது." என்று பவித்ரா சந்தேகிக்கும் குரலில் கூறினாள்.

"எங்க அம்மாவைப் பார்த்தா பிரச்சனை பண்ற மாதிரி தெரியுதா?" என்று கோபமாக கேட்டான் வாசுதேவன்.

"நான் அப்படிச் சொல்லலை. ஆனால், நீங்க ஊருக்குப் போனதுக்கு அப்புறம்..." என்று தயக்கத்தோடு தன் பேச்சை பாதியில் நிறுத்தினாள் பவித்ரா.

அவள் கன்னங்களை பிடித்து, "நீ என்ன சொல்ல வர?" என்று கோபமாக கேட்டான் வாசுதேவன்.

'வந்த இடத்தில் பிரச்சனை வேண்டாம்...' என்றெண்ணி அவனை அமைதியாகப் பார்த்தாள் பவித்ரா.

"இதே வீட்டில், தாவணி கட்டிக்கிட்டு என்னை வாசு அத்தான்னு அன்பா கூப்பிடுவ... அப்ப நான் என்ன சொன்னாலும் சரின்னு சொல்லுவியே டீ...", என்று தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் வாசுதேவன்.

"இப்ப நான் என்ன சொன்னாலும் நீ நம்ப மாட்டேங்குற..." என்று குரலில் சலிப்போடு கூறினான் வாசுதேவன்.

'நம்பணுமுன்னு தான் நினைக்கிறேன். ஆனால்.....' என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் பவித்ரா.

அப்பொழுது மொபைல் ஒலிக்க, "சொல்லு சுபா.அம்மா நல்லார்க்காங்களா..." என்று கேள்வியாக நிறுத்த, "அண்ணா... அம்மா நல்லாருக்காங்க. நீ நிதானமா வா...நான் பார்த்துகிறேன்." என்று கூறினாள் சுபா.

'நான் இந்தப் பக்கம் வந்தா, உடனே உடம்பு சரி இல்லைன்னு சொல்லிருவாங்க.' என்ற சிந்தனையோடு சலிப்பான மனநிலையில் அறையிலிருந்து வெளியே சென்றாள் பவித்ரா.

வாசுதேவன் திருமண விஷயத்தைச் சுபாவிடம் கூற, "அண்ணா... ரொம்ப நல்ல விஷயம்... இந்தக் கல்யாணம் நடக்கணும் அண்ணா. தயவு செய்து நீ தடுத்திராத..." என்று குரலில் இந்தத் திருமணம் முடிய வேண்டும் என்ற எண்ணத்தோடு கூறினாள் சுபா.

வாசுதேவன் சம்மதமாக தலை அசைத்து, "அம்மா... கிட்ட குடு..." என்று கூறினான்.

அழகியபுரத்தில், உத்தமி மறுப்பாகத் தலை அசைக்க, 'அண்ணா மெட்ராஸ் போனாலே அம்மாவுக்கு கீனம் வந்திரும்...' என்று யோசித்து, "அம்மா... தூங்கிறாங்க." என்று கூறினாள் சுபா.

"சரி... அப்பா கிட்ட குடு..." என்று வாசுதேவன் கூற, வாசுதேவன் தன் தந்தை மஹாதேவனிடம் திருமண விஷயத்தைப் பற்றி பேசி தாயிடம் தெரிவிக்குமாறு கூறி மொபைல் பேச்சை முடித்தான் வாசுதேவன்.

சுபா பேசிவிட்டு தாய் அருகே செல்ல, "இவன் பொண்டாட்டி வீட்ல இருந்துகிட்டு பேசினா நான் பேசணுமா?" என்று உத்தமி கோபமாக கூற, சுபா மௌனமாக தன் வேலையைத் தொடர்ந்தாள்.

"என்னடி சொல்றான் உங்க அண்ணன். அவன் மாமியார் வீட்டில் எல்லாரும் சுகமா?" என்று கேட்க, சுபா தன் தந்தையைப் பார்த்தாள்.

மஹாதேவன் எதிர் பக்கம் நின்று மறுப்பாகத் தலை அசைக்க, 'சுபா, உன்னால் ஏற்பட்ட பிரச்சனை தீர ஒரு வழி கிடைச்சிருக்கு. தந்தை சொல்வது தான் சரி. இப்பவே தெரிஞ்சா எதாவது சொல்லுவாங்க. கல்யாணம் நிச்சயம் ஆன பின் என்ன செய்ய முடியும். எல்லாம் முடிந்த பிறகு சொல்லிக்கலாம்.' என்று சிந்தித்தாள் சுபா.

"நான் கேட்கற கேள்விக்குப் பதில் சொல்லாம... என்ன யோசனை?" என்று உத்தமி வினவ, "அண்ணா... ஒன்னும் சொல்லலியே... உன் உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் பாத்துக்கிறேன். திட்டப்படி பத்து நாள் கழித்து வந்தா பொதுமுன்னு சொல்லிட்டேன்." என்று சுபா கூறினாள்.

'சுபா வந்துட்டா எல்லாம் அவ இஷ்டம் தான். இவளுக்கு அதிக செல்லம் தான்.' என்று எண்ணியபடி உத்தமி எதுவும் பேசாமல், படுத்துவிட்டார்.

' ‘இடையில் நடந்த அனைத்துப் பிரச்சனைகளையும் மறக்க இந்தத் திருமணம் வழி வகுக்கலாம். இந்தத் திருமணம் நடக்குமா? நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால்...' என்று சிந்தனையில் மூழ்கினார் வாசுதேவனின் தந்தை மஹாதேவன்.

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top