• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments... :)
இரண்டல்ல ஒன்று – 6


முகமன் பேச்சுக்களோடு பவித்ராவின் தாயார் செல்வி, அனைவருக்கும் காபி கொடுக்க, சந்துருவிற்கு காபி கொடுக்கையில், "இல்லை... அவன் கடுங்காப்பி..." என்று ஆரம்பித்துவிட்டு, தன் பற்களை கடித்து பாதியில் நிறுத்தினான் வாசுதேவன்.

மற்றவர்கள் வாசுதேவனை ஆச்சரியமாகப் பார்க்க, சந்துரு சிரித்த முகமாக அவனைப் பார்த்தான்.

சந்துரு சிரித்தாலும் அந்த சிரிப்பின் பின் ஒரு வலி இருந்தது. அன்று வாசுதேவன் கூறிய வார்த்தைகள், இன்றும் வாசுதேவன் முகத்தைப் பார்க்கும் பொழுது சந்துருவின் காதில் ஒலித்தது.

சந்துருவிடம் இருந்து தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்ட வாசுதேவன், "இல்லை... பொதுவா ஊர் பழக்கம்..." என்று சாமளித்து, "நீங்க குடுங்க அத்தை..." என்று கூறினான்.

உரிமையோடு தன்னை அம்மா… என்று அழைத்துப் பேசும் வாசுதேவன், இன்று தடுமாறுவதை தாங்க முடியாமல் தன் தலையைக் குனிந்து கொண்டார் பார்வதி சந்துருவின் தாயார்.

'கடவுளே... இந்தச் சோதனைக்கெல்லாம் ஒரு முடிவைத் தர கூடாதா? நான் சின்ன வயசிலிருந்து, சந்துருவையும், வாசுவையும் வேற மாதிரி நினைத்ததில்லையே... எல்லாம் இந்த சந்துருவால் வந்தது…' என்று இறைவனிடம் கோபிக்க ஆரம்பித்து, மனக் குமுறலை தன் மகனிடம் முடித்தார் பார்வதி.

சிவசைலம் சூழ்நிலையை தன் கைக்குள் கொண்டு வந்து, "பெண்ணைப் பார்க்கலாமா?" என்று கேட்டார்.

கணவரின் குரலில் நிகழ் காலத்திற்கு திரும்பினார் பார்வதி. தன் இரண்டாவது மகன் ராமப்ரசாத்தின் எண்ணங்கள் மேலோங்க தன் கவனத்தை முழுதாக பெண் பார்க்கும் படலத்திற்கு திருப்பினார்.

சந்தோஷ் சந்துரு மடியில் இருந்து இறங்கி, அகல்யாவை அழைத்துக் கொண்டு நந்தினி இருக்கும் அறைக்குள் சென்றான். பவித்ரா சிரித்த முகமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில்… நந்தினி வர, அனைவரும் நந்தினியைப் பார்க்க, நந்தினி தர்மசங்கடமாக தலை குனிந்து கொண்டாள்.

ராம் பிரசாத் குற்ற உணர்ச்சியில் நந்தினியைத் தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஆவுடையப்பன் தன் மகளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது வைஷ்ணவி என்ற பெயர் மின்ன, ராம் பிரசாத்தின் மொபைல் ஒலித்தது.

அந்தச் சத்தத்தில், ராமப்ரசாத்தின் தந்தை சிவசைலம், அவனை முறைக்க callயை துண்டித்தான் ராம்பிரசாத்.

ராம் call யை துண்டிக்க, "என்னை மீறி நீ வேற யாரையாவது கல்யாணம் செய்தால், நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது." என்று வைஷ்ணவியின் மெசேஜ் pop up ஆக, ராம் மொபைலை switch ஆப் செய்தான்.

நந்தினி உள்ளே சென்று விட, "பெண்ணை பிடிச்சிருக்கா?" என்று சந்துருவின் மனைவி கோமதி, ராம் பிரசாத்திடம் கண்களால் வினவ, 'என்னை மீறி நீ வேற யாரையாவது கல்யாணம் செய்தால், நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது.' என்ற வைஷ்ணவியின் message ராம் பிரசாதின் காதில் ஒலித்தது.

வைஷ்ணவியின் குரலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து… அறைக்குள் இருந்த நந்தினியைப் பார்த்தான் ராம்பிரசாத்.

வரி வடிவமாகத் காட்சி அளித்தாள்... அவள் மடியில், அகல்யாவும் சந்தோஷும் அமர்ந்திருக்க அவள் அவர்களோடு சிரித்த முகமாக விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

மனதில் பதிந்த அழகிய வைஷ்ணவியின் முகம் ராம் பிரசாத் கண் முன் தோன்றியது. நந்தினியின் முகத்தை அவன் பார்த்ததுமில்லை. குழந்தைகளிடம் நந்தினி விளையாடிக் கொண்டிருப்பது மட்டுமே மனதில் பதிந்தது.

சந்துருவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, வாசுதேவன் முகத்தில் உள்ள கோபத்தை தாண்டிய ஓர் மெல்லிய உணர்வு... அனைவரின் முகத்தில் உள்ள எதிர்பார்ப்பு ராமப்ரசாத்தின் கண்களில் பட, 'இந்தத் திருமணம் அனைவருக்கும் நன்மை பயக்கும்...' என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியது.

அனைவரையும் மனதில் கொண்டு, "பிடிச்சிருக்கு..." என்று ராம் பிரசாத் தலை அசைத்தான்.

பவித்ரா ஆர்வமாக உள்ளே சென்று நந்தினியிடம் ஏதோ கேட்க, 'மாப்பிளையை சரியா கூட பார்க்கலியே...' என்ற எண்ணம் தோன்றினாலும், தன் அக்காவின் கண்களில் உள்ள ஆர்வத்தையும், சிரித்த முகத்தையும் பார்த்து, "எனக்குச் சம்மதம் அக்கா..." என்று தலை அசைத்தாள் நந்தினி.

ஆண்... பெண்... இருவரும் குடும்பம்… அன்பு… பாசம்… பந்தம்… இவற்றுக்கெல்லாம் கட்டு பட்டவர்கள் தானே!

இதில் நீ… நான்… என்ற அகந்தையும் தோற்று தானே போகிறது.

பேச்சு வார்த்தையாக உறுதி அளித்து, அடுத்த மாதம் அழகியபுரத்தில், நிச்சயதார்த்தத்தையும், கல்யாணத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன. எதிர் காலத்தை யார் அறிவார்?

தம் பணிகளை முடித்துக் கொண்டு சந்துருவின் குடும்பமும், விடுமுறையை இனிதாக முடித்துவிட்டு வாசுவின் குடும்பமும்… என அனைவரும் அழகியபுரம் நோக்கிப் பயணித்தனர்.

நாமும் இவர்களோடு அழகியபுரம் பயணித்தாலும், இடையில் வைஷ்ணவியின் வீட்டுக்குச் சென்று அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வோம்.

வைஷ்ணவி சோகமே உருவாகி கண்ணீரோடு விலை உயர்ந்த மெத்தையில் அமர்ந்திருந்தாள். வைஷ்னவியின் வீட்டில் ஒவ்வொரு இடமும் செல்வத்தை பறைசாற்றியது.

தன் மகளுக்காக வானவில்லையும் வளைக்கும் வல்லமை கொண்ட வைஷ்ணவியின் தந்தை அவள் அருகே சென்று, "வைஷு... இப்ப எதுக்கு அழற? இப்ப அவசரப்பட்டு நாம ராம் பிரசாத் வீட்டில் பேசினா, உனக்கும் அந்தத் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க... ஆனால், நீ காலம் முழுக்க அந்தக் கிராமத்தில் தான் இருக்கனும்…” என்று அழுத்தமாகக் கூறினார். வைஷ்னவி அமைதியாக இருக்க, வைஷ்ணவியின் தந்தை மேலும் தொடர்ந்தார்.

“அதுவே கொஞ்சம் பொறுமையா இருந்து... கல்யாணத்தனைக்கு நாம அங்க போய்… விஷயத்தை சொன்னா மொத்த கிராமமும் உன் கண்ணீருக்கு மதிப்பு கொடுக்கும். அவங்க மேல தப்பு இருக்கிறதால... சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாத்தி… மாப்பிள்ளையை இங்க கூட்டிட்டு வந்திருவோம்." என்று வைஷ்னவியின் தந்தை திட்டம் தீட்ட, வைஷ்னவி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தலை அசைத்தாள்.

'அப்படி என்ன அந்த ராம் பிரசாத் உயர்ந்தவன்? தன் மகளின் கண்ணீருக்கு தகுதியானவன்?' என்ற வருத்தம், கோபம் நிறைந்த கேள்விகள் அவர் மனதில் எழுந்தாலும், தன் மகள் வைஷ்னவயின் கண்ணீரை தாங்க முடியமால் அவளுக்கு ராம் பிரசாதை திருமணம் செய்து வைப்பதாக வாக்களித்தார் வைஷ்னவயின் தந்தை. அவர் முகத்திலும் தன் மகளின் வாழ்க்கையைக் குறித்த கவலையின் ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தது.

ராம் பிரசாத் நந்தினியின் திருமணத்திற்கு இவர்கள் வருகையை உறுதி செய்து, நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.

பண்ணை வீட்டில் அனைவரும் கல்யாண கனவுகளோடு செல்ல, விஷயத்தை அறிந்த உத்தமி கடுங்கோபத்தில் இருந்தார்.

"வாசு... நீ ஏன் என் கிட்ட இதை முதலில் சொல்லலை?" என்று காட்டமாக வினவினார் உத்தமி.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
"அம்மா... நீங்க உடம்பு சரி இல்லைனு என்கிட்டே பேசலை... சுபா, அப்பா கிட்ட சொல்லி உங்க கிட்ட நான் கல்யாண விஷயத்தை சொல்லச் சொன்னேன்..." என்று வாசுதேவன் அங்கு அமர்ந்திருந்த தன் தந்தை மஹாதேவனை பார்த்தபடி கூறினான்.

"பவித்ரா... உள்ள போ... சந்தோஷ் தூங்கிட்டான் பாரு... எவ்வளவு நேரம் சந்தோஷை கையில் வச்சிக்கிட்டு இருப்ப?" என்று மஹாதேவன் கூற,"சரி... மாமா..." என்று தலை அசைத்து உள்ளே சென்றாள் பவித்ரா.

"உத்தமி... அவுக குடும்பத்துக்கும்... நம்ம குடும்பத்துக்கும் ஆகாது... அவுக குடும்பத்தில் என்ன நடந்தா நமக்கென்ன?" என்று மஹாதேவன் சாமர்த்திய சாலித்தனமாக பதில் கூற, உத்தமி அவரைச் சந்தேகமாக பார்த்தார்.

'தன் மகனிடம் தான் பேசாமல் இருந்த பத்து நாள், இத்தனை பெரிய விஷயம் நடக்க வழி வகுக்கும்… என்று தெரியாமல் இருந்து விட்டேனே!’ என்று உத்தமி சிந்திக்க, சந்தோஷை படுக்க வைத்து விட்டு பவித்ரா வெளியே வந்தாள்.

"பவித்ரா... நாங்க என்ன யாரோவா? சொந்தம் தானே... எங்க கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு இந்தச் சம்பந்தத்தை உங்க அம்மா, அப்பா பேசி முடிச்சிருக்கலாம்... சம்பந்தக்காரர்களுக்கும் மரியாதை கொடுக்கணுமுன்னு பட்டணத்தில் இருக்கிறவகளுக்கு தெரியாது போல... பண்ணை வீடெல்லாம் ஒரு குடும்பமா?" என்று உத்தமி தொடர்ந்து பேசி கழுத்தை நொடிக்க, பவித்ரா வாசுதேவனைப் பரிதாபமாக பார்த்தாள்.

'என்னிடம் கேட்டாக... ஆனால், ஏன் என் அம்மா, அப்பாவிடம் கேட்க வில்லை... அம்மா சொல்வது நியாயம் தானே? மரியாதைக்காகவாது கேட்டிருக்கலாமே...' என்ற எண்ணம் வாசுதேவனுக்குத் தோன்றியது.

"ஆமா அம்மா... நீங்க சொல்றது சரி தான்... மரியாதைக்காக உங்க கிட்ட கேட்ருக்கலாம்... என் கிட்ட கேட்டாக… நான் நமக்கு என்ன… சம்பந்தம் இல்லாத விஷயமுன்னு விட்டுட்டேன். பவித்ரா பாவம்… அவ என்ன செய்வா?" என்று வாசுதேவன் பட்டும்படாமலும் பதில் கூற, பவித்ரா அமைதியாக நின்றாள்.

'பொண்டாட்டியை சொன்னா, அப்படியே வந்திருவான், வரிஞ்சி கட்டிக்கிட்டு... அப்படி என்ன அழகியோ? என்ன தான் படிச்சிருக்காளோ? இவனை முந்தானையில் முடிஞ்சி வச்சிருக்கா...' என்று எண்ணி பவித்ராவை பார்த்தார் உத்தமி.

'இவனிடம் பதவிசமாக தான் பேசணும்...' என்ற முடிவோடு பேச்சை தொடர்ந்தார் உத்தமி.

"நீ செய்தது சரி தான் வாசு... பவித்ரா நம்ம கிட்ட ஒரு வார்த்தை பேச சொல்லிருக்கலாம்..." என்று உத்தமி இழுக்க, 'அது தானே இந்த வீட்டில் எல்லாம் நம்ம தலையில் தானே விடியும்...' என்று அங்கு நடப்பதை மௌனமாகப் பார்த்தாள் பவித்ரா.

இத்தனை பேச்சுக்கு இடையிலும், 'கொஞ்ச நாள் கழித்து, நந்தினியும் இதே ஊரில் இருப்பாள்...' என்ற எண்ணம் தோன்ற இவர்கள் உரையாடல்கள் பவித்ராவுக்கு சுவாரசியம் தட்ட வில்லை. மகிழ்ச்சியே மேலோங்கியது.

உத்தமி தொடர்ந்து ஏதேதோ பேச, "சம்பந்தி வீட்டில் என்கிட்ட பேசினாக... நான் அவுகளை பத்தி என்ன சொல்றது? பட்டும்படாமலும் பேசிட்டேன்." என்று மஹாதேவன் தன் மகன் குணம் அறிந்து பவித்ராவுக்கு சாதகமாக பேச, "சம்பந்தி அம்மா..." என்று உத்தமி அடுத்த ஆயுதத்தை வீசினார்.

பவித்ரா அவரை அயற்சியாகப் பார்க்க, "பேசினாக... நான்தென் உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி விஷயத்தை முடிச்சிட்டேன்." என்று உத்தமியின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் மஹாதேவன்.

'ஆக... இது இவுக வேலையா? அது முடிந்து போன விஷயம்... ஆனால் இந்தத் திருமணம் நடந்தால்...' என்று சிந்தித்தார் உத்தமி.

'திருமணம் நல்ல படியாக முடிய வேண்டும்...' என்ற எண்ணத்தோடு பவித்ரா இவர்கள் பேச்சை தவிர்த்து, தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

வாசு பவித்ராவை பின் தொடர, "வாசு..." என்று அழைத்து அவர் அருகே அமரும் படி செய்கை காட்டினார் உத்தமி.

சந்தோஷ் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, வாசு என்ற உத்தமியின் அழைப்பில், 'என்ன நடக்குமோ?' என்று யோசனையோடு பவித்ரா சந்தோஷ் அருகே படுத்துக் கொண்டாள்.

மஹாதேவன் எதுவும் பேசாமல், அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, தன் கண்களை இறுக மூடிக்கொண்டார்.

"வாசு..." என்று அன்பாக அழைத்து, தன் பேச்சை தொடர்ந்தார் உத்தமி.

"பவித்ரா பாவம் டா... சூதுவாது தெரியாத புள்ளை... அந்த புள்ளய நீ தானே சந்தோஷமா வச்சுக்கணும்..." என்று உத்தமி எடுத்துக் கூற, வாசுதேவன் தன் தாய் பேசுவது புரியாமல் பார்த்தான்.

பேச்சு செல்லும் திசையை கணித்து மஹாதேவன்… தன் கண்களை திறக்காமல் செவிகளை தீட்டிக் கொண்டார்.

"சந்துரு குடும்பம் அப்படி இல்லை வாசு. கூட இருந்தே குழி பறிக்கும் ஆளுங்க... சந்துரு செய்த வேலையால் நாம பட்ட அவமானம்..." என்று உத்தமி நிறுத்த, தன் நண்பன் சந்துருவை பற்றிய பேச்சு தாங்க முடியாத வலியைக் கொடுத்தாலும்… அதை மறுக்க முடியாமலும், அவன் செய்த துரோகத்தை மறக்க முடியாமலும் வாசுதேவனின் முகத்தில் கோபம் கனன்றது.

"அவன் செஞ்ச வேலைக்கு நாம அவுக வீட்டுக்குப் போய் வந்து இருக்க முடியுமா? நந்தினியும் நம்ம வீட்டுப் பெண் மாதிரி தானே... பவித்ராவும், நீயும் நந்தினியைக் கட்டி குடுக்கிற வீட்டுக்குப் போய் வந்து இருந்தா தானே நால்லாருக்கும்..." என்று மென்மையாகக் கூறி, வாசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் உத்தமி.

தாயின் சொல்லில் உள்ள நியாயம் புரிய, வாசுவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

அந்தச் சிந்தனை ரேகைகள் உத்தமிக்குத் திருப்தி அளிக்க, தன் பேச்சை அவர் மேலும் தொடர்ந்தார்.

"நம்ம பவித்ரா ஆசாபாசமான பொண்ணு... நாளைபின்ன நம்ம பிரச்சனையால் அவுக அக்கா, தங்கச்சிக்கு பிரச்சனை வந்திற கூடாதில்லை... வந்தால் மருமகள் தாங்குவாளா?" என்று உத்தமி பவித்ராவுக்கு சாதகமாகக் கேட்க, வாசுதேவன் மௌனம் காத்தான்.

வாசுதேவன் தன் மனைவி பவித்ரா மீது கொண்டுள்ள பாசத்தை, பவித்ராவை விட அதிகமாக அறிந்தவர் உத்தமி. இது தான் இயற்கையின் நியதியோ?

"அம்மா... அவுக பேச்சு வார்த்தையில் உறுதி பண்ணிட்டாக... இனி என்ன பண்ண முடியும்?" என்று வாசுதேவன் பட்டும்படாமலும் கேட்டான்.

'வாசுதேவன் இந்தத் திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறான்?' என்ற கேள்வி மஹாதேவன் மனதில் எழுந்தது.

"பேச்சு வார்த்தை தானே வாசு... ஊரைக்கூட்டி நிச்சயமா பண்ணிருக்காங்க... இது ஒத்து வராதுன்னு நிறுத்தச் சொல்லு... நாம சொந்தத்துல..." என்று கூறி சில மாப்பிள்ளை வீட்டை உத்தமி கூற, மறுப்பாகத் தலை அசைத்தான் வாசுதேவன்.

"அம்மா... நீங்க சொல்றது சரி... இந்த இடம் வேண்டாமுன்னு சொல்லுவோம்... ஆனால் நீங்க சொன்ன மாப்பிள்ளை வீடு சரி வராது. எதுமே பண்ணை வீட்டளவுக்கு பெரிய இடமும் இல்லை. ராம் அளவுக்கு படிச்ச மாப்பிள்ளையும் இல்லை. வேற இடம் தான் பார்க்கணும்..." என்று வாசுதேவன் கண்டிப்போடு கூற, 'அம்மா பிள்ளை தான்... ஆனால் என் மகன் நல்லவன்...' என்று கண்களை திறக்காமல் தலையை அசைத்தார் மஹாதேவன்.

'பெரிய இடம் வேண்டாமுன்னு தானே நான் நினைக்றேன்... பெரிய இடம் வந்தால் சம்பந்தி வீட்டிலும் நம்மை மதிக்க மாட்டாக... பவித்ராவும் மதிக்க மாட்டா... அதுவும் அவ தங்கை பக்கத்திலேயே வந்துட்டா... அவுக அம்மா, அப்பாவும் பக்கத்துல வந்திருவாக... பவித்ராவுக்கு நல்ல தொக்கா போய்டும்... அவுக மெட்ராஸ்ல இருக்கும் போதே, இவளை கைக்குள் வைக்கிறதுக்கு என் உயிர் போயிடுது...’ என்று தனக்கு சாதகமாக யோசித்தார் உத்தமி.

இதை மகனிடம் நேரடியாகச் சொல்லி, மகனிடம் தன் மரியாதையை இழக்க, உத்தமி விரும்பவில்லை. "வாசுதேவன் நல்லவன்..." இது அவர் அறிந்த உண்மையாயிற்றே!
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
வாசுதேவன் தன் தாயிடம் பேசிவிட்டு, அவர்கள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.

'நிச்சயமாகப் பிரச்சனை வெடிக்கும்...' என்று பவித்ராவின் ஆழ்மனம் எச்சரிக்க, அவள் கைகள் சில்லிட்டது. சென்னையில் இருந்து இங்கு வந்ததும் ஓர் தனிமை சூழ்ந்த எண்ணம் அவளுள் தோன்றியிருந்தது.

பவித்ரா குழப்பமான மனநிலையில் படுத்திருந்தாள்.

"பவி..." என்று வாசுதேவன் அவள் அருகே படுத்து கொண்டு மென்மையாக அழைக்க, "ம்..." என்று திரும்பியும் பார்க்காமல் பவித்ரா கூற, அவள் தலை முடியை அன்பாகக் கோதினான் வாசுதேவன்.

"ஏன் பவி... சென்னையில் அத்தனை அத்தான் சொல்லி கூப்பிடற... இங்க வந்தாலே உன் மனநிலை மாறிடுதே..." என்று மனத்தாங்கலோடு கேட்டான் வாசுதேவன்.

'அங்கு மனநிம்மதியோடு இருப்பேன்... ஆனால், இங்கு… என்ன பிரச்சனை எப்ப வருமோனு பயத்தோடு இருப்பேன்...' என்று மனதில் எண்ணியதைக் கூறி வாசுதேவனை வருத்தப்படுத்த விரும்பாமல், "அப்படி எல்லாம் இல்லை அத்தான்..." என்று கூறி அவன் பக்கம் திரும்பி வாசுதேவனின் முகம் பார்த்து படுத்தாள் பவித்ரா.

"பவி... நந்தினிக்கு இந்த இடம் சரிவருமுன்னு நீ நினைக்கிறியா?" என்று வாசுதேவன் கேள்வியாக நிறுத்த, பவித்ரா படக்கென்று எழுந்து மெத்தையில் அமர்ந்தாள்.

வாசுதேவனும் எழுந்து அமர, அவனை ஆராயும் கண்களோடு பார்த்தாள் பவித்ரா.

"அது என்ன இந்தக் கேள்வியை சாவகாசமா இப்ப கேட்கறீங்க?" என்று பவித்ரா மெதுவாகக் கேட்க, "ஊரை கூட்டியா நிச்சயம் பண்ணிருக்கோம்... பேச்சாத்தானே உறுதி பண்ணிருக்கோம்..." என்று வாசுதேவன் நிதானமாகக் கூறினான்.

'இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது உத்தமியின் செல்வன் வாசுதேவன்...' என்று பவித்ராவுக்கு தெளிவாகப் புரிய, என்ன செய்வதென்று தெரியாமல் அவள் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. புகுந்த வீட்டில் பவித்ராவின் வரலாறு அப்படி!

'இல்லை... வழக்கம் போல், நான் அமைதி காக்க முடியாது. இது என் தங்கையின் வாழ்க்கை.' என்ற எண்ணம் பவித்ராவின் தலையில் சமட்டியாய் அடித்தது.

"என்ன சொல்ல வரீங்க?" என்று பவித்ரா நேரடியாக அழுத்தமாகக் கேட்டாள் .

"இந்த இடம் வேண்டாம்... இதை விட நல்ல இடம்... பெரிய இடம் பாப்போம்... நீயும் நந்தினி வீட்டுக்குப் போய் வந்து இருக்க முடியும்." என்று வாசுதேவன் உறுதியாகக் கூற, "இதைத் தானே நான் அன்னைக்கே சொன்னேன்..." என்று பவித்ரா வாசுதேவனிடம் பரிதாபமாக கேட்டாள்.

"அப்ப தோணலை... இப்ப தோணுது..." என்று வாசுதேவன் தயக்கமாக கூற, "நான் தான் சொன்னேனே அத்தை பிரச்சனை பண்ணுவாங்கன்னு..." என்று பிரச்சனையின் அடி வேரை பவித்ரா பிடித்துவிட்டாள்.

"ஏய்... அம்மா எங்க டி பிரச்சனை பண்ணாங்க?" என்று பவித்ரா தன் தாயை சொன்னவுடன், வாசுதேவன் கோபமாக கேட்டான்.

"உங்க அம்மா சொல்லாமலா, இப்ப என் கூட சண்டை போட்டுட்டு இருக்கீங்க?" என்று பவித்ரா கடுப்பாக கேட்க, "நான் சண்டை போடலை பவித்ரா... நீ தான் என் கூட சண்டை போடுற..." என்று முகத்தை திருப்பிக் கொண்டு கூறினான் வாசுதேவன்.

பவித்ரா அமைதியாக அமர்ந்திருக்க, "உனக்கெல்லாம் என் அம்மாவின் பெருமை ஒரு நாளும் புரியாது. அவுக பாவம், உன் நல்லதுக்காக எவ்வளவு யோசிச்சி பேசினாக தெரியுமா... அது புரியாம, எப்ப பார்த்தாலும் அவுகளை குறை சொல்லிட்டு..." என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான் வாசுதேவன்.

"ஆக... அத்தை கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி உங்க கிட்ட பேசிருக்காங்க..." என்று பவித்ரா ஆணித்தரமாகக் கேட்க, "அம்மா நிறுத்தச் சொல்லலை. நல்லதில்லைன்னு சொன்னாங்க... நான் தான் இந்த இடம் வேண்டாமுன்னு சொல்றேன்." என்று வாசுதேவன் வெட்டொன்று துண்டுரெண்டாக கூறினான்.

"இதை நான் பண்ணை வீடு ஒத்துவருமா ன்னு கேட்டப்ப நீங்க சொல்லிருந்தா நான் சந்தோஷமா தலை அசைச்சுருப்பேன்... ஆனால், இப்ப கேட்க முடியாது…” என்று பவித்ரா பிடிவாதமாகக் கூற," எங்க அம்மா என்ன உனக்கு விரோதியா? அப்படி என்ன எங்க அம்மா சொன்னா கேட்க முடியாதுன்னு பிடிவாதம்?" என்று பவித்ராவின் முகத்தைப் பார்த்து கூர்மையாகக் கேட்டான் வாசுதேவன்.

“நான் அப்படி சொல்லலை... அவுங்களுக்கு வாக்கு கொடுத்தாச்சு. சொந்தபந்தம் கிட்ட சொல்லியாச்சு. இந்தக் கல்யாணம் நடக்கணும். இப்ப கல்யாணம் நின்னா இது நந்தினி வாழ்க்கைக்கு நல்லதில்லை. நீங்க சுய புத்தி இல்லாமல் உங்க அம்மா பேச்சை கேட்டுட்டு ஆடுற மாதிரி என்னால் ஆட முடியாது." என்று பவித்ரா காட்டமாக கூறினாள்.

"என்ன வாய் ரொம்ப நீளுது?" என்று அவளை நெருங்கி கோபமாக கேட்டான் வாசுதேவன்.

"உங்க அம்மாவுக்கு பயம்... என் தங்கை பக்கத்தில் வந்துட்டா, உங்களுக்கு தெரியாம அவங்க செய்ற வேலையெல்லாம் வெளிய வந்திருமுன்னு பயம். " என்று பவித்ரா முணுமுணுக்க, அவள் தலை முடியைக் கொத்தாக பிடித்து, "என்ன சொன்ன?" என்று அழுத்தமாக கேட்டான் வாசுதேவன்.

"நீங்க சொல்றதை கேட்க முடியாது... இவ்வளவு நாள் கேட்ருந்தா, அது என் வாழ்க்கை... போன போகுதுன்னு விட்டுத் தொலைத்தேன்... உங்க முட்டாள் தனத்துக்கும், உங்க அம்மா வில்லத்தனத்துக்கும் என் தங்கை வாழ்க்கையைப் பலியாக்க முடியாது." என்று அவன் கோபத்தை சிறிதும் சட்டை செய்யாமல் முதல் முறையாக அவனை எதிர்த்து வார்த்தைகளைத் தாறுமாறாக வீசினாள் பவித்ரா.

பவித்ரா கோபப்படுவாள். ஆனால் அதில் பிடிவாதம் இருக்காது. பவித்ரா தான் நினைத்ததை சொல்லுவாள். கேட்கவில்லை என்றால், சரி என்று தலை அசைத்து ஏற்றுக் கொள்வாள். இதுவே வாசுதேவன் அறிந்த பவித்ராவின் சுபாவம். பவித்ராவும் அவள் வாழ்க்கையில் அப்படி தான் இருந்தாள்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
இந்த பவித்ராவின் பரிமாணம் புதிது. பவித்ராவின் பேச்சு வாசுதேவனை நிலைகுலைய செய்தது. வாசுதேவனின் கோபம் கட்டுக்கடங்காமல் ஏற, அவன் கைகள் பவித்ராவின் கன்னத்தை பதம் பார்த்தது.

வாசுதேவன் கோபப்படுவான்... பவித்ரா நிலை தடுமாறுவாள்... ஆனால், அடிப்பது...

வழக்கமாக வாசுதேவனின் தொடுகையில் குழையும் பவித்ரா, இன்று அவன் தொடுகையில் பெண்ணுக்கே உண்டான அழுத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

தன் தலை முடியை கொண்டையிட்டு... அவன் முன் கண் கலங்க நின்றாள்.

"ஆக... இது தான் நீங்க... உங்க அம்மா சொல்றதை கேட்கலைன்னா அடிப்பீங்க?" என்று பவித்ராவின் கண்களில் நீர் வழிந்தாலும், வார்த்தைகள் சாட்டையாக வெளி வந்தது.

"ஏய் அறிவில்லை...நம்ம சண்டையில் ஏன் தேவை இல்லாமல் அவகளை இழுக்கற? என்ன கேள்வி கேட்கற? " என்று வாசுதேவன் வெறுப்பாக கேட்க, "ஆமா… இழுப்பேன்... இப்ப என்கிட்டே பேசிட்டு இருக்கிறது என் வாசு அத்தான் இல்லியே... அவங்க பையன் வாசுதேவன்... அப்படி தான் கேட்பேன்..." என்று பவித்ரா வாசுதேவனை கோபமாக பார்த்து கண்ணீர் மல்க கூறினாள்.

பவித்ரா சொன்ன வார்த்தை வாசுதேவனை ரணமாய் அறுத்தது. "நான் அவள் வாசு அத்தான் இல்லையா? நான் யார் சொல்லி கூறினால் என்ன? நான் அவளுக்காகத் தானே கூறுகிறேன்..." என்று வாசுதேவனின் மனம் ஊமையாய் அழுதது.

பவித்ராவிடம் பேச மனம் இல்லாமல், இருக் கைகளால் தலையை கட்டிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டு அமைதியாகப் படுத்து விட்டான் வாசுதேவன்.

வாசுதேவன் அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், பவித்ராவின் கோபம் கனலாய் எரிந்தது.

"எங்கயோ இருக்கிற அம்மா அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நான் அமைதியா இருக்கேன். என் கஷ்டத்தையும், நீங்க அடிச்சா கூட சொல்லி அழ கூட யாரும் இல்லாமல் நான் இந்த ஊரில் தனியா வாழற வாழ்க்கைக்கு விடிவு காலம்... என் தங்கை இங்க வந்தவுடன் வரும். அவ என்னைப் பார்க்க அடிக்கடி வருவா... யாரும் எனக்காக இங்க அடிக்கடி வறதில்லைன்னு தானே எல்லாரும் இந்த ஆட்டம் ஆடுறீங்க?" என்று கண்ணீரோடு புலம்பினாள் பவித்ரா.

பவித்ராவின் பேச்சில் வாசுதேவனின் கண்கள் கலங்கியது. 'நான் அவள் அருகே இருக்கும் பொழுது, இவள் தனியாக வாழ்கிறாளா?' என்று மனவருத்தத்தோடு தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் வாசுதேவன்.

"என் தங்கச்சி வாழ்க்கைன்னு வந்திருச்சனா... எனக்கு யாரும் முக்கியம் இல்லை... நான் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை..." என்று இறுகிய முகத்தோடு படுத்திருந்த வாசுதேவனைப் பார்த்து கோபமாகக் கூறினாள் பவித்ரா.

'ஐயோ... இதுக்கே இவ்வளவு பிரச்சனை... அம்மா சொன்ன மாப்பிள்ளை வீட்டை மட்டும் சொல்லிருந்த நீ காலி டா...' என்று வாசுதேவன் தன் புத்திசாலித்தனத்தை அந்த நேரத்திலும் மெச்சிக் கொண்டான்.

படம் வரையவும் மனமில்லாமல், ,'சண்டையிடும் ஒவ்வொரு முறையும் நான் ஏன் கீழே படுக்க வேண்டும்?' என்ற வீம்பு மனதில் எழ, மெத்தையில் இருந்த இடத்தில் வாசுதேவன் அருகே வேறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள் பவித்ரா.

பவித்ரா உறங்கிவிட, அவள் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

பவித்ராவின் விசும்பல், வாசுதேவனை ஈட்டியால் குத்துவது போல் வலிக்க, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவளைச் சமாதானம் செய்ய, வாசுதேவனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

இருவரும் அருகருகே இருந்தாலும் அவர்களுக்கு இடையில் பலர் இருப்பது போன்ற பிரமை இருவருக்கும் தோன்றியது.

அதிகாலையிலும் பவித்ராவின் விசும்பல் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. பவித்ரா எழுவதற்கு முன் , வாசுதேவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டான். தோட்டத்தில் இருள் சூழ்ந்திருந்தது. அங்கு வேலை மேற்கொள்ள, அரிவாளை எடுக்க வாசுதேவன் எத்தனிக்க, அவன் எண்ணம் பவித்ராவை சுற்றி வந்தது. கவனமில்லால் அரிவாளைத் தலை கீழாகப் பிடித்தான் வாசுதேவன்.

மற்ற பேச்சுக்கள் மறந்து, 'நான் ஏன் பவித்ராவை அடித்தேன்?' இந்தக் கேள்வி வாசுதேவனின் மனதில் விஸ்வரூபம் எடுக்க, அவன் கைகள் இறுகியது. அரிவாள் அவன் கைகளை அழுத்த, வாசுதேவனின் கைகளில் இருந்து, இரத்தம் வடிந்தது. ஆனால் வாசுதேவனுக்கு வலிக்க வில்லை. அவனை முழுதாக வாட்டியது அவன் மனதின் வலி.

'ஏன் என் பவித்ரா என்னைப் புரிந்து கொள்ளவில்லை? நான் அவளுக்காகத் தானே சொல்கிறேன்... நான் இருந்தும் அவள் இங்குத் தனியாக இருக்கிறாளா?' போன்ற கேள்விகளால் அவன் நெஞ்சிலும் உதிரம் கொட்டியது.

பவித்ராவின் விசும்பல் சத்தத்தோடும்... வாசுதேவனின் உதிரம் வடியும் கைகளோடும் நெஞ்சோடும் …

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top