Iratturamozhithal 22

lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
தோழிகளே .. என்னை ஞாபகம் இருக்கா?

கொஞ்சம் எல்லா வேலைகளுக்கும் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டிட்டு... ஒரே ஒரு அப்டேட் கொடுத்துட்டு போறேன்.. காரணம் ஏற்கனேவே எழுதியது .. கிளைமாக்ஸ் கடைசி எபி ... அது யாராவது வாட்ஸ்சாப் ல வந்து .... நியாயமாரே - ன்னு கேக்கறதுக்குள்ள குடுத்துடறேன்..

இப்போ கதை ... ஹஹ... ? என்ன கதை? இரட்டுறமொழிதல் ன்னு ஒன்னு.....

IM 22

தீர்க்கமாய் SNP யை பார்த்த கரண், அலட்சியமாய் சிரித்து , "ம்ம்... என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறயே?",

"நான் வில்லன் பா... எனக்கும் மூளை இருக்கு... இப்போ பாத்தியே ஒரு வீடியோ, அத காமிக்கவேண்டிய இடத்துல காமிச்சா... உன் பையன் ஆட்டமாடிக்கா பணத்தை போட்டுட்டு மாட்டான்? " , வன்மம், பகை மொத்தமாய் குத்தகை எடுத்து அவன் விழிகளில் அமர்ந்திருந்தது.

"டேய் .. சிட்டி கமிஷனர் போன் நம்பர்........ ", கர்ஜனையாய் அவன் குரல் ஒலிக்க....

"..ன்னா, தோ .. ன்னா", அலறி அடித்தவாறு அவன் கேட்ட எண்ணை கொடுக்க, கையில் அலைபேசியை வாங்கும் முன், SNP முகத்தில் வந்தமர்ந்த, அந்த ஒரு திமிரான, கோணலான பார்வை, கரணை கிண்டலடிக்க...., "எதொ மிஸ் பன்றோம். அதைத்தான் இவன் கிண்டலா பாக்கறான்" என தோன்றியது.

"என்ன? என்ன .. என்ன யோசிச்ச? சொல்லு...", கரண் மிரட்டலாய் கேட்க...

SNP, பதட்டமின்றி... "நத்திங் .."..

"பொய்", "என்னமோ நினச்ச நீ... , என்ன கண்டுபிடிச்சிடுவாங்க ன்னு தான?", ஆத்திரமாய் கேட்க...

இவனிடமிருந்து மறைக்க முடியாது என்பதை அறிந்து... "ஆமா... மடத்தனமான இருக்கு உன் ஐடியா, நீ போன்-ல பேசினா, உடனே உனக்கு பணம் தூக்கி குடுப்பாங்களா? எத்தனை கிளியரன்ஸ் வாங்கணும் தெரியுமா? எல்லாத்துக்கும் மேல வெறும் குரலை வைத்து பயமுறுத்திடுவியா என்ன? இது... உனக்கே சில்லியா தோணலை... "

"அப்போ என்ன பண்ணினா நம்புவாங்க?, அந்த வீடியோ அனுப்பினா கூடவா நம்பமாட்டாங்க ?", கோபத்தில் ஐடியா எதிரியிடம் கேட்டான்..., இந்த புத்திசாலி.

"நம்புவாங்க... , ஆனா உன் டிமாண்ட்-ஐ கொடுக்க லேட் பண்ணுவாங்க, ஏன்னா... போலீஸ் முதல்ல ... வீடியோ உண்மையா பொய்யான்னு கண்டுபிடிக்கறதுலதான் முனைப்பா இறங்குவாங்க, நிஜமா யார் உயிருக்காவது ஆபத்து இருக்குன்னு காமி,.. எதிரியை பதட்டமா வைக்கணும், அப்போதான் அவன் நம்ம சொல்றத கேப்பான் .. நீயெல்லாம் ஆம்ஸ் & அம்யூனிஷன் கொடுக்கறவன்....?"

"ISIS என்ன வீடியோ குடுத்தான்?, அவனா வீடியோக்கு போஸ் கொடுத்தான்..? அவன் கிட்ட இருக்கிற பணய கைதிகளை முதல்ல காமிச்சான்.. அதுக்கும் மசியலை ... அவங்க தலையை தனியா வெட்றா மாதிரி.... ஷூட் பண்ணி வீடியோ போட்டான்.. உலகமே சும்மா அதிருச்சுல்ல?"

"அப்போ.....", யோசித்தவன்.....SNP யை பார்த்தான்... போட்டிருந்த உடை கலைந்து, தலையில் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிந்து புருவம் வரை வழிந்திருந்தது... எவனாக இருந்தாலும் தந்தையை இப்படி ஒரு கோலத்தில் கண்டால், பயம் வரும், . எனவே... கரண் அவனது முகத்தை காட்டாமல், SNP -யை வீடியோ எடுக்க முடிவெடுத்து... , அவனை பார்த்து கோணலாய் ஒரு சிரிப்பு சிரித்து , "நீயா வாய கொடுத்து, வாண்டட் - ஆ வந்து சிக்கினா நான் என்ன பண்றது ?", என்று கூறி, "ஏய் , இந்தாள் வாய் - ல பிளாஸ்டர் போடுங்க, இவனையும் வீடியோவையும் பாத்தும் பயம் வரலைன்னா... இவனை போட்டு தள்ளி அதை பதிவா அனுப்பலாம் ", என்று கடினமான குரலில் கூறி ... SNP[க்கு முன்பாய் இருந்த மேஜையில் கேமராவினை செட் செய்து , மைக்-கினை அவன் சட்டையில் பொருத்திக் கொண்டான்...

பதிவு ஆரம்பித்தவுடன், கரண் அவனது தேவைகளை ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தான், முதலாவது பணம் அவனது கணக்கிற்கு மாற்றியாகவேண்டும், இவனது ஆட்களுடன் இவன் செல்லவென தனி விமானம், பைலட்டுடன் வேண்டும், எங்கேயும் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட கூடாது என்று ஐந்து நிமிடங்கள் பேசியவன்..., இதற்கு சம்மதிக்காவிட்டால் ... என்று பேச்சினை பாதியில் நிறுத்தி மிரட்டியவன்... SNP -க்கு காண்பித்த வீடியோ பதிவினை ஒளிபரப்பினான் ....

அது::

சின்னதாய் பிள்ளைகள் விளையாடும் பொம்மை போலிருந்த அந்த ட்ரோன் [drone ] எனப்படும் ஆளில்லா குட்டி விமானம், அதன் பாதையை தீர்மானிக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக செயல்பட ஆரம்பித்தது. அந்த குட்டி விமானம் சென்ற இடம்... SNP வீட்டின் கார் ஷெட். ஐந்தாறு கார்களை நிறுத்த ஏதுவான விசாலமான இடம். மெதுவே டயர்களை அடுக்கி இருக்கும் பகுதிக்கு சென்ற அந்த ட்ரொன், குறைந்தது, 5 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை அடுத்தவருக்கு தெரியாமல், அங்கே வைத்துவிட்டு சமர்த்தாய் வெளியேறி, அடுத்த காம்பவுண்டில் இருந்த பள்ளியை காண்பித்தது. ஆ..... அது சென்னையின் பெயர் பெற்ற உலகளாவிய உண்டு உறைவிட பள்ளி, அப்ளிகேஷனுக்கே பெற்றோர் ஆலாய் பறந்து, இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு... பிள்ளைகளை லட்சங்கள் கொட்டி கொடுத்து அப்பள்ளியில் சேர்ப்பர்.

இரண்டாவது ஷாட். :

அதே ட்ரொன் .. இப்பொழுது போனது SNP -யின் தொழிச்சாலைகளுக்குள்... வெவ்வேறு திசைகளில் சென்று, அதன் காரியத்தை செவ்வனே செய்து வெளியே வந்தது.

முடிந்த பதிவினை நிறுத்தி , SNP யை நோக்கி....

"எப்போவும் விடியகாலைங்கிறது ரொம்ப நல்ல நேரம்-னு சொல்லுவாங்க. ஒரு நிமிஷம் செக்யூரிட்டி கண்ணசந்தா போதும் அந்த நேரத்துக்குள்ள, எத்தனை சாமர்தியமா போயிட்டு வந்துடுச்சு பாத்தியா இந்த ட்ரோன் ..??"

அவன் பெருமை பேசும்போதே, அலைபேசியில் எதோ ஒரு பொத்தானை தெரியாது அழுத்திவிட .. ஒரு பெண்ணின் முனகல் சப்தம் அலைபேசியில் இருந்து கேட்டது.. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல்..., கரண் தலையில் தட்டிக்கொண்டே.. "டேய் இதை டெலீட் பண்ணுங்கப்பா... நல்ல அருமையான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். பேசின பணத்தை விட ஒரு பத்தாயிரம் ரூபா சேர்த்து கொடுத்துடு, நல்ல வேளை பொண்ணை இங்க கூட்டிட்டு வரணுமோ-ன்னு நினச்சேன். இவன்தான், இரும்படிக்கிற இடத்துல ஈ-க்கு என்ன வேலை ?, வெறும் முனகலை ரெக்கார்ட் பண்ணினா போதும்-னு சொன்னான். உனக்கும் கிட்னி அப்போப்போ வேலை செய்யுது", சொன்னவாறே, இரண்டு கட்டு நோட்டுகளை அந்த அடியாளின் புறம் தள்ளினான்..."

" ஓகே.. வீடியோ பாத்துடீங்க.. வச்ச பாம் பத்தி கொஞ்சம் தெளிவு பண்ணிடறேன்.. எல்லா பாம்லயும் சென்சார் பொருத்தியிருக்கேன். அது அசைஞ்சாலே எனக்கு தெரியும்...சோ பாமை எடுத்து வேற இடத்துல வைக்க முயற்சி செய்யாதீங்க... சென்சாரை தொல்லை பண்ணாதீங்க.... பண்ணினா, ஒன்னுமாகாது... வெடிச்சுடும்.."

"ஒன் செகண்ட்", என்று சொல்லி பேச்சை நிறுத்தியவன் ,ஒரு பீப் சத்தம் வர மீண்டும் அவன் பேச்சினை தொடர்ந்தான்..."சரியா இந்த நிமிஷம் ...இப்போ.... அந்த பாமை ஆன் பண்ணிட்டேன்... இன்னமும் ரெண்டு மணி ஜஸ்ட் டூ ஹர்ஸ் உங்களுக்கான நேரம்.. அதுக்குள்ள.. நான் என் பணத்தோட இந்த இந்திய எல்லையை விட்டு பறந்துகிட்டு இருக்கணும்.. , பாஸ்கர்.... இதை கேட்டுத்தான் இருக்கேன்னு தெரியும்.. உனக்கு மட்டும் சரியா 20 நிமிஷம்தான் டைம்... லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் உங்கப்பா SNP ரத்தம் சிந்துவார்.",

"ஆங்... போலீசுக்கு ஒரு போனஸ் .... இங்க இருக்கிற இடங்களை தவிர இன்னமும் ஒரு இடத்துல பாம் வச்சிருக்கேன்... ஏதாவது தப்பானா ... அதை வெடிக்க வைக்கறத தவிர வேற வழி இல்ல.... எல்லா கண்டரோலும் என் கைவிரல்ல இருக்கு....புரியலல்ல?, நான் என்னோட மொபைல்-லேர்ந்து குரூப் கால் பண்ணினா மட்டும்தான் அந்த சென்சார் எல்லாம் அதோட வேலையை நிறுத்தும்.. இல்லன்னா... ரெண்டு மணி நேரத்துல எல்லாமும் வெடிக்கும்... ஆண்டவனால் கூட தடுக்க முடியாது... வேற ஏதாவது வேணும்ன்னா நானே கூப்பிடறேன்.. பை .. ", ரெக்கார்ட் செய்த பதிவை ஒரு முறை சரிபார்த்தான்... அதில் இவனது குரல் தெளிவாய் இருந்தது. கூடவே, இறுகிப் போய் அமர்ந்திருந்த SNP, டென்சன் அதிகம் போல.. மணிக்கட்டை இருக்கையின் கைப்பிடியில் கட்டியிருந்ததால், விரல்கள் நடுங்குவது தெரிந்தது.

விழிகள் குத்திட்டு நிற்க... கட்டுப்பட்ட நிலையில் SNP திரையில் தெரிய, பின்னணியில் கரணின் குரலும்.... போலீசான இளம்பரிதியையே சற்று ஆட்டுவித்தது. திரும்பிப்பார்த்தான், பாஸ் மிக மிக உன்னிப்பாய் அந்த பதிவினை பார்த்துக்கொண்டிருந்தான்... இமைக்க கூட மறந்தவனாய், அவன் கவனம் முழுதும் குவியமாய் அந்தப் பதிவில் மட்டும்...

"ஹே .. என்னாச்சு? இவ்ளோ டென்சன் வேண்டாம் ", என்று பேச ஆரம்பிக்க...

"உஷ்... அப்பா என்கிட்டே பேசிட்டு இருக்கார்", என்று இடை மறித்தான் பாஸ்கர் ஆதித்யா..."வாட்??", என்று இளா அவனை புரியாத பார்வை பார்க்க..., பாஸ்கர் அவர்களின் பரிபாஷையை விளக்க ஆரம்பித்தான்...
 
Last edited:

lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
"இது எங்க குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த சைன் லாங்குவேஜ். எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும் போது, நிமோனியா அட்டாக் ஆகி ICU ல இருந்தேன்.. வென்ட் போட்டுட்டாங்க.. பேசவும் முடியாது.. அப்போ நாங்க எங்களுக்குள்ள பேசிக்கறதுக்காக இந்த வழிய எங்கப்பா கண்டுபிடிச்சாரு.. ஜஸ்ட் அஞ்சு விரல் மட்டும் போதும். எதையும் பேசலாம்..."

"கவனிங்க.. இதுல நம்பர்கள் & இங்கிலிஷ் எழுத்துக்கள் மட்டும் தான் உபயோகிக்க முடியும்..

ஆள்காட்டி விரல் a - m [முதல் 13 எழுத்துகள் ], ஒரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினா, a ன்னு அர்த்தம்.. 2 தட்டு b ..

நடு விரல் n - z [ மீதி 13 எழுத்துகள் ], ஒரு தட்டு, கட்டை விரல் ஒரு தட்டு.. n ன்னு அர்த்தம்.. z வரைக்கும் தட்டு அதிகமாகும்.

மோதிர விரல் 0 - 9. மோதிர விரலால ஒரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினா, 0 ன்னு அர்த்தம்.

சுண்டு விரலை உபயோகிச்சா, முற்றுப்புள்ளி.இனி அடுத்த வாக்கியம்-ன்னு அர்த்தம் ...

கட்டை விரல் தான் செலக்ட் பட்டன்"

"இப்போ என் விரலை பாருங்க.. நடு விரலை ஒரு முறை தட்டி கட்டை விரலை ஒரு முறை தட்டினான். ஆள் காட்டி விரலை ஐந்து முறை தட்டி கட்டை விரலை தட்டினான், மீண்டும் நடு விரலை பதினோரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினான். அடுத்து நடுவிரலை ஏழு முறை தட்டி. கட்டை விரலை தட்டினான்..."

"நடு விரல், ஒரு முறை , கட்டை விரலை தட்டினால் - N .

ஆள் காட்டி விரல், ஐந்து முறை.கட்டை விரலை தட்டினால் - E , மீண்டும் நடு விரல் பதினோரு முறை தட்டி, கட்டை விரலை தட்டினான் - X . அடுத்து நடுவிரலை ஏழு முறை தட்டி. கட்டை விரலை தட்டினால் - T ..."

"நம்மை சுத்தி எங்க, எப்போ எத்தனை பேர் இருந்தாலும், நம்மளால, நமக்குள்ள மட்டும் பேச முடியும். ஆரம்பத்துல குழப்பமா இருந்தாலும் போக போக வேகமும் வரும், சுலபமாவும் ஆகிடும்.. டெண்டர்ஸ் , ஏலம் இப்படி முக்கியமான முடிவுகளை, பொது இடத்துல முடிவு பண்ண நாங்க இப்படிதான் பேசிப்போம்.."

"வெல் .. இப்போ அவரோட விரல்களை மட்டும் பாருங்க.."

"அவர் என்ன சொல்லி இருக்காருன்னு நான் எழுதறேன்."

trfrfnd. evakkids. ve92fs. dedinair.tc

"ஓகே இதுக்கான அர்த்ததையும் யோசிக்கலாமா?"

"ம்ம் trfrfnd - ட்ரான்ஸ்பஃர் பண்ட் . பணத்தை கொடு."

"அடுத்து evakkids - evacuate கிட்ஸ் [குழந்தைகளை அப்புறப்படுத்து]" , என்று பாஸ்கர் ஆதித்யா கூற... அருகிலிருந்த இளம்பரிதி "வாவ் .. " என்றான்..

ve92fs - இதுக்குதான் என்ன அர்த்தம்-ன்னு தெரியலை... ம்ம் .. சரி பின்னால பாக்கலாம்..

dedinair - டெட் இன் ஏர் - யாரோ பறக்கும் போதே சாக போறாங்க...", என்று பதட்டமுடன் கூறியவன். சட்டென அவன் எழுதிய மூன்றாவது வார்த்தையை வெறித்தான்... அவன் அப்பா சொல்ல வந்தது புரிய... " ஓஹ் மை காட்.... மை ...", என்று சொல்லும்போதே வியர்வையில் மொத்தமாய் குளித்திருந்தான்.

இளாவிடம் திரும்பி , "மாமா , அப்பாவோட கன் அதான் துப்பாக்கி ... ",சொல்லும்போதே கண்கள் கலங்க ஆரம்பித்தது, எதற்கும் சட்டென்று கலங்காத பாஸ்கர் ஆதியாவிற்கே...

"யெஸ் .. தெரியும்.. பெரேட்டா 92 FS மாடல்... எடுத்துட்டு போயிருக்கார்.. 've 92fs -ன்னா I have Berettaa 92 FS ன்னு அர்த்தம்.. ரைட்..? " இளம்பரிதி SNP விரலின் மொழியை புரிந்து பதிலுரைத்தான்..

கடைசி tc - take care .. இதை இருவருக்கும் சொல்ல துணிவில்லை.. SNP, அவரது ஸ்டைலில் விடை பெற்றிருந்தார்...

கண்களை அழுந்த துடைத்த பாஸ்கர், கைக்கடிகாரத்தை பார்த்து வேகமானான்.. "உங்க சிஸ்டம் கொடுங்க, பண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்"

"எப்படி அவ்வளவு பணமாச்சே?"

"எல்லாம் அப்பா friend அக்கவுண்ட் ல தான இருக்கு, உடனே பண்ணிடலாம்."

உள்துறை அமைச்சகம், காவல் அதிகாரிகளுக்கு உறுதுணையாய் இருப்பதாக வாக்களிக்க, பள்ளியில் இருந்து குழந்தைகளை வெளியேற்ற ஒரு குழு சென்றிருந்தது. தவிர, கரண் கூறியது போல, விமானியோடு தனி விமானத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கரண் சொன்ன கெடுவிற்கு முன்பாகவே, அவன் கூறிய அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. காவல் துறை கூறிய ஒரே வேண்டுதல் , எப்படியாவது அந்த கடைசியாக கரண் கூறிய வெடிகுண்டின் இருப்பிடம் தெரிய வேண்டுமென்பதே..

கரணோ, அந்த ஒரு வீடியோ பதிவினை கொடுப்பதற்கென , ஜாமரை நிறுத்தியவன்.. அதை ஒளிபரப்பியவுடன், இடத்தை காலி செய்தான், அவன் கூட்டாளிகள், மற்றும் SNP அனைவரும், ஆம்புலன்ஸ்-ல் பயணமாயினர்.. ஆமாம் அவசர ஊர்திதான்.. SNP யை, நோயாளியாய் படுக்க வைத்து, இரண்டு பேர், மருத்துவர் உடையுடன் இருக்க... இன்னமும் இரண்டு பேர் நோயாளியின் சொந்தம் போல் அமர்ந்திருந்தனர். ஓட்டுனருடன் ஒருவன் அமர்ந்து தெருக்களில் கலந்தனர்.

விமான நிலையம் செல்லும்வரை, பாதுகாப்பாய் செல்ல இத்தனை முன்னேற்பாடு...

கரண் வெல்வானா? வீழ்வானா ?
 

Advertisements

Top