• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaadhal pandhayam 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அருணும் ஹாசினியும் குகைக்குள் சென்று அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டுமென்று ஒருமனதாக முடிவு செய்தார்கள்.

"ஹாசினி... குகையில் இருட்டாக இருக்கும் அதனால் நாம் பெரிய தீப்பந்தங்களை ரெடி பன்னிட்டு போகலாம்" என்று அருண் சொல்ல சரிப்பா என்றாள் ஹாசினி.

அருணுடன் ஹாசினி சேர்ந்து சில நிமிடங்களில் மூன்று பெரிய தீப்பந்தங்களை தயார் செய்தார்கள்.

அவர்கள் இருவரும் தங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டியபின் தங்களுக்குள் ஹைபை செய்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
(இது பெரிய தாஜ்மகால் அதை இதுக சுத்தி பார்க்கப் போகுதுக. ரெண்டு பேருக்கும் மனசில் ரூத் அண்ட் மைக் என்று நினைப்பு இதுகளால் நாம பாழுங் குகைக்குள்ளே போக போகிறோம்பா )

அருண் தீப்பந்தத்தில் ஒன்றை ஏந்திக் கொண்டு உள்ளே செல்ல ஹாசினி அவனை பின் தொடர்ந்து பின்னே சென்றாள்.
(நடக்கும் வீபரீதங்களுக்கு நான் பொறுப்பல்ல)

"ஹாசினி... இவைகளை நாம் அப்புறமாக யூஸ் பன்னிக்கலாம்" என்று மற்ற தீப்பந்தங்களை காட்டி அருண் சொல்ல அவள் ஆமோதித்து கையில் வைத்துக் கொண்டு சென்றாள்.

வவ்லால்கள் பறந்து கொண்டும் தொங்கியபடியே தூங்கிக் கொண்டும் இருந்தது. (அதுகளுக்கு இது ஸ்லீப்பிங் டைம்பா)

"வவ்வால் பாஸ்" என்று ஹாசினி சொல்ல அருண் உடனே "நீ வவ்வாலே பார்த்தது இல்லையா?" என்றான்.

"பார்த்திருக்கேன்., குகையில் இதுதான் பர்ஸ்ட் டைம் நீங்க பாஸ்" என்றாள் ஹாசினி.

"நானும் பர்ஸ்ட் டைம் குகையில் பார்க்கிறேன்" என்று சொல்ல "சேம் பிஞ்ச் பாஸ்" என்றாள் ஹாசினி.

அருணாச்சலம் அவளை முறைத்து பார்க்க "சாரி பாஸ்" என்றவள் சில நிமிடங்களில் அவள் "வவ்வால் அழகாக தூங்குகிட்டுருக்கில்லையா பாஸ்" என்றாள்.

"அது பெரிய நயன்தாரா பாரு அதுக தூங்கறதை நீதான் பார்க்கறின்னா நான் வேற பார்க்கனும் பாரு" என்று மனதுக்குள் நினைத்தபடி அவளை முறைத்து பார்த்தான் அருணாச்சலம்
(உனக்கு இந்த ஆசை வேற இருக்காடா அருணு)

"கோபபடாதீங்க பாஸ்" என்று சிரித்த ஹாசினி பின் "லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்" என்றாள்.(தத்துவம்... அதுவும் இந்த குகையில...)

ஹாசினியின் வாய்ஸ் மாடுலேஷன் அருணுக்கு சிரிப்பை உண்டாக்க சிரித்தபடி நடக்க ஆரம்பித்தான்(சிரிங்க... சிரிங்க... நல்லா சிரிங்க...)

"அப்பா! பாஸ் சிரிச்சிட்டாரு" என்று ஹாசினி சொல்ல அருண் சிரிக்க இருவரும் குகை பயணத்தை தொடர்ந்தார்கள்.

"சத்தமாக சிரிக்காதே ஹாசினி ஏதோ பேய் வந்துட்டதாக நினைச்சு எல்லாம் மிரளப் போகுதுக" என்று அருண் சொல்லிவிட்டு சிரித்தான்.

"பாஸ் உங்களை" என்று முறைத்த ஹாசினி பின் "என் சிரிப்பு கேட்டால் அதுகளுக்கு தாலாட்டு மியுசிக் கேட்ட மாதிரி இருக்கும். உங்க சிரிப்பு கேட்டு அதுகள் காண்டாகி நம்ம தாக்காம இருந்தா சரி" என்றாள் ஹாசினி.(மனசுக்குள்ளே பெரிய S. ஜானகி P.சுசீலான்னு நினைப்பு)

"சரிம்மா நீதான் அழகாக சிரிக்கிறே நான் ஒத்துக்கிறேன்." என்று அருண் சொல்ல,
"அப்படி வாங்க வழிக்கு சரி வாங்க போகலாம்" என்று சொல்ல இருவரும் மேலே நடக்க தொடங்கினார்கள்.
(யாருகிட்ட எங்ககிட்ட என்றது ஹாசினியின் மைண்ட் வாய்ஸ்)

பறவைகளின் எச்சங்களினாலும், விலங்குகளின் கழிவுகளினாலும் இறந்த விலங்குகள் மிச்சங்கள் மூலமாகவும் தூர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது (குகையில் என்ன சந்தன வாசமா வீசும்பா. கலிஜ் வாசம்தானே வீசும்)

பறவைகளின் அலறல் சப்தம், தவளைகளின் சப்தம், பூச்சிகளின் சப்தம் எல்லாம் கேட்க அந்த நிசப்தம் நிறைந்த குகையில் அந்த சப்தங்கள் அவர்கள் காதை கிழிக்கும் அளவுக்கு இருந்தது மட்டுமில்லாமல் அச்சுறுத்தும் வகையிலும் இருந்தது.
Message…
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
கரடுமுரடான கற்களும் மண்ணும் நிறைந்த பாதையில் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. (அங்க இவங்க வர்றாங்கன்னு ரோடு போட்டு வைச்சிருப்பாங்களா)

சில பூச்சிகள் வேறு பறந்து கொண்டிருந்தாலும் அவைகள் தீயின் வெளிச்சத்தால் ஈர்க்க பட்டு அருகில் வந்து தீயில் கருகி உயிரை விட ஆரம்பித்தன.

அவர்களை வலிய கடிக்க வந்த பூச்சிகளை தீயால் கருக்கி விட்டான் அருண் (எங்ககிட்டயே உன் வேலையை காட்டினா அவ்வளவுதான்)

அவர்கள் இருவரும் குகையின் உள்ளே மேலும் பல அடிகள் தூரத்தை கடந்து உள்ளே சென்றதும் குகையின் சுவற்றில் ஏதோ தென்பட ஆரம்பித்தது.

"பாஸ்... குகையோட சுவரை பாருங்க. ஏதோ தெரியுது பாஸ்" என்றாள் ஹாசினி.

"ஆமாப்பா" என்றபடி அருண் உடனே தீப்பந்தத்தை அங்கே திருப்ப சுவற்றில் பல ஒவியங்கள் வரையப் பட்டு இருந்தன.

"ஏதோ பெயின்டிங் இல்லை டிராயிங் ஹாசினி." என்று அருண் சொல்ல,

"ஆமா பாஸ் இது குகை ஒவியங்கள். அந்த காலத்தில் வாழ்ந்தவங்கள் இப்படி குகை ஒவியங்களை வரைஞ்சு வைப்பாங்கன்னு புக்ஸ்ல படிச்சிருக்கேன்." என்றாள் ஹாசினி.

"நானும் படிச்சிருக்கேன். சரி வா... இந்த குகையில் அடுத்து என்ன எல்லாம் வருதுன்னு நாம் மேலே போயி பார்ப்போம்" என்று அருண் கூறினான்.

குகையின் அடுத்த மர்மத்தை அறிய இருவரும் தொடர்ந்து போக தீர்மானித்து அவர்கள் குகைக்குள்ளே மேலும் நடக்க ஆரம்பித்தார்கள்.
(பார்றா... பயபுள்ளைகளுக்கு தைரியத்தை)

ஹாசினிக்கு சில அடிகளில் இருள் நிறைந்த அந்த குகையும் அதன் நிசப்தமும் வவ்வால்கள் முதலான பறவைகளில் ஒலியும் பயத்தை ஏற்படுத்த அவள் அருணின் கைகளை கெட்டியாக பிடித்தபடி நடக்க ஆரம்பித்தாள்.
(அந்த பயம் இருக்கட்டும்)

தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அவர்கள் மெல்ல அடிமேல் வைத்து நடக்க அந்த ஒவியங்கள் பல அடி தூரங்கள் வரையபட்டு இருந்தன.

ஆண்கள், பெண்கள், விலங்கு, பறவை, மரம், செடி, தேர், வில், வாள், ஆயுதங்கள், நடனம், அரசன், கோவில், மாளிகைகள், ஆறு, கடல் என்று பலவகை ஒவியங்கள் வரையபட்டு இருந்தன்.

"பாஸ் இந்த குகையில் ஏதோ மர்மம் இருக்கு பாஸ். இங்கே அந்த காலத்தில் மக்கள் வந்து போயிருக்காங்க பாஸ். அவங்கள் எல்லாம் இங்கே வந்து தங்கி இந்த பெயின்டிங்கள் எல்லாம் வரைஞ்சு வைச்சிட்டு போவாங்க அப்படின்னு புக்ல படிச்சிருக்கேன் பாஸ் " என்றாள் ஹாசினி.

"நானும் படிச்சிருக்கேன்" என்று அருண் சொல்ல வழி நெடுக ஒவியங்களை கண்டு பிரமித்தபடி அவர்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

"அது மட்டுமில்லை பாஸ் இந்த ஒவியங்கள் எல்லாம் மூலிகை செடிகளிலிருந்து ஒருவித ரசாயன கலவையை இங்காக பயன்படுத்தி பறவை இறகுகள் அல்லது குச்சிகள் பயன்படுத்தி வரைவாங்க அப்படின்னு படிச்சிருக்கேன் பாஸ்"

Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திபிரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top