• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kaadhale thunai 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
காதல் 5

முடிவு பண்ணிய கையுடன், அன்றே வேகமாக ஆதிக் அதற்கான வேலைகளை கவனிக்க அவள் அசந்து தான் போனாள் அவளின் இத்தகையை வேகத்தை பார்த்து.

“பிரீத்தி! அவர் செம ஷார்ப், ஸ்பீடா வேற இருக்கார். நம்ம பண்ண பிராஜக்ட் பார்த்து பாராட்டியதோடு நிறுத்தாமல், அதை அக்கு வேறா அலசி சொல்லுறார். நம்ம அவர் கூட டை அப் பண்ணது சரியா” என்று கேட்டாள் பிரீத்தியின் தோழி ஒருத்தி.

“மாலதி! நான் நேத்து எவ்வளவு பயந்தேன் தெரியாது உனக்கு, ஒரு கட்டத்தில் இவர் என்னை காப்பாத்தி இருந்தாலும், அப்போ இவர் மேல கூட சந்தேகம் எனக்கு. இவரே ஆட்களை அனுப்பி இருக்கலாமே அப்படினு”.

“அதான், நான் விசாரிக்க நினைச்சு உடனே இதை பத்தி நம்ம நேஹா அண்ணா கிட்ட நேத்தே இதை பத்தி பேசிட்டேன். அவங்க இன்னைக்கு காலையில், எனக்கு செமையா ஒரு ஷாகிங் நியூஸ் சொன்னாங்க”.

“அந்த போட்டி கம்பெனி ஆளும், இவரும் ஒரு காலத்தில் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அப்படினு. அப்புறம் அவர் டிராக் மாறவும், இவர் அது பிடிக்காம உடனே விலகி வந்துட்டார் அப்படினு சொன்னாங்க”.

“அதான் யோசிச்சேன், நமக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆகிடுச்சு. நம்ம இந்த பிராஜக்ட் மூலம், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அப்படினு உடனே ஓகே சொல்லிட்டேன்” என்று கூறியவளை கூர்ந்து பார்த்தாள்.

“ஆர் யூ இன் லவ் வித் ஹிம் பிரீத்தி?” என்று கேட்டாள்.

இக்கேள்விக்கு தான் பதில் தேடிக் கொண்டு இருக்கிறாள் இன்னும், ஏனோ அது தான் அவளுக்கு தெரியவில்லை. இதில் திருமண நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது, அது வேறு ஒரு பக்கம் படபடப்பாக வேறு இருந்தது அவளுக்கு.

அவனோ, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் வேலையில் மட்டுமே கவனம் வைத்து இருந்தான். அவனுக்கு இப்பொழுது எண்ணம் எல்லாம், அவளை காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டுமே.

“பிரீத்தி! இதை படிச்சு பார்த்துட்டு ஒரு சைன் பண்ணு. அப்புறம் இந்த பிராஜக்ட் முடியும் வரை, இங்க என் ஆபிஸ் ல ஒர்க் வச்சுக்கலாம். உன் அசிஸ்டன்ட்ஸ் எல்லோருக்கும், தேவையான பாதுகாப்பு கொடுக்க சொல்லி இருக்கேன்”.

“நானே, உன்னை கூட்டிட்டு வரேன் டெய்லி இனி சரியா. வேற எதுவும் கேட்கணுமா உனக்கு, என் கிட்ட இப்போ” என்று கேட்டான்

“நாளைக்கு மார்னிங் ல தான், அப்போ இனி பிராஜக்ட் கண்டினு பண்ண முடியுமா!” என்று கேட்டாள் அவசரமாக.

“ஆமாம், ஏன்?” என்று புரியாமல் கேட்டான்.

“இல்லை! இப்போ தான் முக்கிய கட்டத்துல இருக்கேன், அதை கொஞ்சம் பார்த்து சரி பண்ணிக்கிட்டா, நாளைக்கு கொஞ்சம் மிச்ச வேலை இருக்கு அதை பார்க்கலாம் அதான் கேட்கிறேன்” என்றவள் அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

“ம். ஓகே! பட் சீக்கிரம் முடிக்கனும், இப்போவே லேட் ஆகிடுச்சு” என்று கூறி அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்தான்.
காலையில் இருந்து, அலைந்து திரிந்து எல்லா வேலைகளையும் முடிக்க இரவு எட்டு மணி ஆனது. இவர்கள் பிராஜக்ட் டை அப் செய்யும் வேலைகள்,

இவ்வளவு பெரிய பிராசஸ் இருக்கும் என்று எண்ணவில்லை.
ஆனால், அவன் அதை கணித்து வைத்து எல்லாவற்றையும் ஒரே நாளில் முடித்து இருக்கிறான் என்றால், அவன் இதை முன்னமே எதிர்பார்த்தது போல் தான் உள்ளது என்று அவளின் அடி மனம் அடித்து கூறியது.

இது ஒரு வாரம் இழுக்க கூடிய வேலை என்று அதன் பிராசஸ் முறையிலே தெரிந்தது. ஆனால் அவன் நேரம் கடத்தாமல், உடனே யார் யாரையோ எல்லாம் பிடித்து இதை அவளுக்காக செய்து இருக்கிறான்.

“நிஜமாவே நமக்காக தான் செய்தானா? இல்லை இதுல அவனுக்கு எதும் காரியமாக வேண்டி இருக்கா” என்று மீண்டும் முருங்கை மரம் ஏறின கதையாக யோசிக்க தொடங்கினாள்.

அவனோ, பிசி முன் அமர்ந்து வேலை செய்வது போல் தோன்றினாலும், அவன் கண்கள் முழுவதும் அவள் மேல் தான் இருந்தது. அவனை பொறுத்த வரை, எடுத்து வைத்த முதல் படியில் வெற்றி பெற்று விட்டான்.

“குழம்பின குட்டையில் தான் மீன் பிடிக்க வசதியாக இருக்கும். இப்படியே குழம்பிகிட்டு இரு, அப்போ தான் நீ தெளிய முன்னாடி என் காரியத்தை நான் சாதிசிக்க முடியும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அங்கே பஞ்சாயத்து முன் நின்று கொண்டு இருந்த ஆதி, நேர்கொண்டு பார்த்த பார்வை அவ்வளவும், அஜய் தந்தை மீது தான்.

“இவளை இப்போ என்ன செய்யலாம்? முடிஞ்சு போன சாப்டர் எல்லாம் ஓபன் பண்ணி, குறைந்த பிபியை எல்லாம் ஏத்தி விட போறா இங்க எங்க அப்பாவுக்கு” என்று சலித்துக் கொண்டும், வருந்திக் கொண்டு இருந்தான் அஜய்.

அவனின் தந்தையோ, மகனை முறைத்துக் கொண்டு இருந்தார், இப்படி இங்கே நிறுத்தி வைத்து விட்டானே என.

“ஐயா! உங்க பதில் என்னன்னு சொல்லிபுடுங்க ஐயா, நாளைக்கு திருவிழாவுக்கு காப்பு கட்டணுமே” என்று ஒருவர் அவரிடம் கேட்கவும், அவர் சற்று யோசித்தார்.

“இந்த பிள்ளைக்கு, என் பையன் மேல எந்த ஈடுபாடும் இல்லை போலவே, அப்புறம் வேண்டாம் சொல்லாம ஏன் இப்படி சொல்லுது?” என்று யோசித்தார்.

அப்பொழுது தான், அவள் சொன்ன விஷயம் பொறி தட்டியது அவருக்கு, புரிந்து கொண்டார் உடனே. அவளை நினைத்து, இப்பொழுது ஒரு வித பெருமையே அவருக்கு.

எல்லோரும் முன்னும், இப்பொழுது அவர் அவளின் தந்தையிடம் பகிரங்க மன்னிப்பு வேண்டினார். அது மட்டுமின்றி, அப்பொழுதே இருவருக்கும் நிச்சயம் அப்பொழுதே செய்ய எண்ணி, வெத்தலை மாற்றிக் கொண்டனர்.

அவர் இப்படி ஒத்துக் கொள்ளுவார் என்று எண்ணவில்லை அவள், அதை விட உடனே நிச்சயம் செய்யும் அளவுக்கு செல்வார் என்றும் நினைக்கவில்லை, மலைத்து நின்றாள்.

“திருவிழா முடிஞ்ச உடனே, கல்யாணம் வச்சுக்கலாம். என்ன சொல்லுறீங்க சம்மந்தி?” என்று அவளின் தந்தையிடம் அவர் கேட்கவும், மயக்கம் வராத குறை தான் அவளுக்கு.

“ஏத்தா ஆதி! இனி என்ற மவனை நண்டுன்னு கூப்பிட கூடாது. மாமா என்று கூப்பிடனும் இனி, சரியாத்தா” என்று மீசையை முறுக்கி கூறவும், அவள் தலை தானாக ஆடியது.

அதன் பின் பஞ்சாயத்தில், திருவிழா சம்பந்தமாக பேசி முடித்து, அங்கு இருந்து எல்லோரும் நகரவும் இன்னும் நம்ப முடியாமல், அங்கே நின்று கொண்டு இருந்தாள் ஆதிசேகரி.

“ஹே கேசரி! என்ன இன்னும் கனவில் இருந்து வெளியே வரல போல” என்று அவளை பார்த்துக் கொண்டே வந்தான் அஜய்.

“ஆத்தி! அப்போ கனவுதேன் கண்டோமா” என்று அவள் அலரவும் அவன் சிரித்தான்.

“கனவு எல்லாம் இல்லை கேசரி! எல்லாம் உண்மை உண்மை மட்டும்தேன். இத்தனை நாள் வீம்பு பிடிச்சுகிட்டு இருந்த என் அப்பா, நீ போட்ட போடுல உடனே வீம்பை கை விட்டார்”.

“விட்ட கையோட, உங்க அப்பாரு கூடவும் நல்லா பேசிக்கிட்டு தான போனாங்க. நீங்க இன்னும் அது கனவு அப்படினு நினைச்சுகிட்டு இருக்கீங்க போல, மேடம் இறங்கி வாங்க கொஞ்சம்” என்று குரலில் நக்கல் விரவி இருந்தது அவன் பேச்சில்.

அதில் சிலிர்த்தவள், உடனே அவனை துரத்த தொடங்கினாள். இதை பார்த்த ஊர் பெரியவர் ஒருத்தர், ஆண்டவா சீக்கிரம் இதுங்க கல்யாணத்தை நடத்திடு என்று வேண்டிக் கொண்டார்.

அந்த அளவு அவர்களின் அட்டகாசம் இருந்தது.


தொடரும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top