• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaathalaakik kasinthu....: Aththiyaayam 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 1:

காலை ஒன்பது மணிக்கே அந்த அலுவலகம் மிகவும் பிசியாக இருந்தது. அனைவரும் வந்து அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். டெஸ்பாட்ச் செக்ஷனில் இருக்கும் கீதாவை மட்டும் காணவில்லை. அவளது தோழி மாலினி நேரத்தைப் பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாக இருந்தாள். ஏனென்றால் அந்த ஏற்றுமதி இறுக்குமதி அலுவலகத்தில் ஐந்து நிமிடம் லேட்டாக வந்தாலும் சம்பளத்தில் ஒரு நாள் பிடித்து விடுவார்கள். ஒன்பது பத்துக்கு முகத்தில் வியர்வை பளபளக்க துப்பாட்டாவால் அதனைத் துடைத்தபடி வந்தாள் கீதா. வயது இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். முகத்தில் ஏனோ ஒரு சோகம் அப்பிக்கிடந்தது.

"சார் ரூமுக்கு அட்டெண்டென்ஸ் போயிரிச்சா?" என்றாள் வந்ததும் வராததுமாக.

"இன்னும் இல்லைன்னு தான் நெனக்கிறேன். சேகர் சாரைத்தான் கேக்கணும். முதல்ல போயி சைன் பண்ணிட்டு அப்புறமா லன்ச் டயம்ல பேசிக்கலாம்" என்று கம்ப்யூட்டரில் ஆழ்ந்தாள்.

சேகர் என்றதும் சற்றே சங்கடப்பட்டாள் கீதா. இருந்தும் சமாளித்துக்கொண்டு அவனது இருக்கையை நோக்கிச் சென்றாள். அவன் தான் அங்கே உதவி மேனேஜர். மிகவும் இனிய சுபாவமும் தன்மையாகப் பழகும்குணமும் கொண்டவன். வயது 32 இருக்கலாம். அவனுக்கு எப்போதுமே கீதா மேல் நல்ல அபிப்பிராயஜ் உண்டு. அதுவே அவளைக் கூசச் செய்தது.

"வாங்க கீதா! இன்னைக்கும் நீங்க லேட்டு! இந்த மாசத்துல இது ரெண்டாவது லேட்டு! உங்களுக்காகத்தான் நான் ரிஜிஸ்டரை மேனேஜர் ரூமுக்குக் கொண்டு போகல்ல! சீக்கிரம் சைன் பண்ணுங்க! இல்லைன்னா நானும் சேர்ந்து மாட்டிப்பேன்" என்றான். அவனை நோக்கி ஒரு புன்னகையை வீசி விட்டு கையெழுத்துப் போட்டு விட்டு தன் இருக்கைக்கு விரைந்தாள். வியர்த்துக்கொட்டியது. ஏசியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

லன்ச் டயத்தில் தோழி மாலினியோடு அமர்ந்து உண்டாள்.

"என்னடி இது? தினமும் லேட்டாவே வர? இத்தனைக்கும் நீ ஹாஸ்டல்ல தானே இருக்கே? சாப்பாடு செய்ய வேண்டாம் புருஷனைக் கவனிக்க வேண்டாம் அப்புறம் என்ன? எழுந்தோமா? வந்தோமான்னு இல்லாம ஏண்டி இப்படி செய்யற?" என்றாள் மாலினி.

"ரத்திரியெல்லாம் தூக்கமே வர மாட்டேங்குது மாலு! காலையில அஞ்சு அஞ்சரைக்குத்தான் தூங்கறேன். எழுந்திருச்சுப் பார்த்தா எட்டாயிடுது. அப்புறம் குளிச்சு சாப்பிட்டு லன்சும் கட்டிக்கிட்டு வர லேட்டாயிருது" என்றாள்.

"வயசுப்பொண்ணு இல்லையா நீ? அதான் தூக்கம் வரல! ஏண்டி உங்க வீட்டுல உங்க அப்பா அம்மா கல்யாணத்துக்குப் பார்க்குறாங்களா?"

"ஊருல அம்மா மட்டும் தான் இருக்காங்க மாலு! வேற யாரும் இல்ல! அவங்க மாப்பிள்ளை பார்க்குற நிலையில இல்ல"

"அப்ப நீயே உனக்கு பார்த்துக்க வேண்டியது தான். நான் சொல்லட்டுமா ஏதாவது நல்ல வரன்?"

"ம்ச்! விடுடி! கல்யாணம்குறது இனிமே என் வாழ்க்கையில இல்ல! அதைத் தவிர வேற ஏதாவது பேசு" என்றாள். புரிந்து கொண்ட மாலினி நாட்டு நடப்பு, சினிமா என்று பேசி விட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தனர். அன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த கீதாவுக்கு மனம் சரியாகவே இல்லை! நல்லவேளையாக அந்த அறையில் உடன் தங்கியிருந்த மற்ற இருவரும் அன்று இன்னமும் வந்திருக்கவில்லை. தனக்கான கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தாள் கீதா.

"வயது என்னவோ எனக்கு 25 தான் ஆகிறது. ஆனால் அதற்குள் என் வாழ்க்கையில் தான் என்னென்ன சம்பவங்கள்! வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது. இனி எனக்கென என்ன எதிர்காலம் இருக்கிறது? கல்யாணம் செய்து கொள்ள முடியாது. அதனால் குடும்பமும் உருவாகாது. இப்படியே வாழ்நாள் முழுக்க ஹாஸ்டலிலேயே தான் தங்கியிருக்க வேண்டுமா? அப்படி யாரும் செய்யாத தவறையா நான் செய்தேன்? அதற்கு இப்படி ஒரு தண்டனையா? அம்மா பாவம் அப்பா இல்லாமல் எப்படியோ கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். நான் செய்த வேலையால் அவளது உடன் பிறந்தவர்களும் கூட பேசுவதில்லை உதவுவதில்லை. எல்லாம் என்னால் வந்த வினை. அப்பா நீங்கள் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்குமா?" என்று எண்ணி எண்ணி ஏங்கினாள். தலையணையில் முகம் புதைத்து அழுதாள்.

ஃபோன் ஒலித்தது. சேகர் தான் அடித்தான்.

"என்ன சேகர் சார்? இந்த நேரத்துல அடிக்குறீங்க?"

"வந்து வந்து...நீங்க உடனே என் வீட்டுக்கு வர முடியுமா? என் தங்கச்சி அழுதுக்கிட்டே இருக்கா! வந்து வந்து...எனக்கு சொல்லத் தெரியல்ல! சொல்ல முடியல்ல! கொஞ்சம் வாங்களேன். அவளுக்கு இப்ப ஒரு பெண்ணோட உதவி தேவை! அதான் உங்களைக் கூப்பிட்டேன். "

புரிந்து கொண்டாள் கீதா.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''காதலாகி
கசிந்து''=ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top