• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaathalaakik kasinthu...: Aththiyaayam 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 2:

சேகரின் தங்கை வயதுக்கு வந்திருக்க வேண்டும் தாயில்லாத அந்தப் பெண் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டது என எண்ணிக்கொண்டாள்.

"32 வயது சேகருக்கு இத்தனை சிறிய தங்கையா? அவன் அம்மா எங்கே?" என்று மனதில் தோன்றிய கேள்விகளை புறக்கணித்து அவனது வீட்டுக்கு தனது டூ வீலரில் விரைந்தாள். ஒரு தனி வீட்டில் மாடியில் இருந்தது அவர்கள் வீடு. உள்ளே நுழைந்ததுமே அவளது கைகளைப் பிடித்துக்கொண்டான் சேகர்.

"ரொம்ப தேங்க்ஸ் கீதா வந்ததுக்கு! கயல் அந்த ரூமுல இருக்கா" என்று சொல்லி அவளை மட்டும் அனுப்பினான்.

கச்சிதமாக பராமரிக்கப்பட்ட அறையில் சுமார் 12 வயது இளம் பெண் அழுது கொண்டிருந்தாள். கீதா அருகில் சென்று தோளைத் தொட்டாள்.

"நீங்க யாரு? எனக்கு ஒண்ணும் இல்ல! நான் நல்லாத்தான் இருக்கேன்" என்றாள் அழுகையினூடே.

அவளை சமாதானப்படுத்தி எல்லாவற்றையும் புரிய வைத்து இது பெண்களுக்கு சகஜம் தான். என்று எடுத்துச் சொல்லி அவளை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது கீதாவுக்கு. அதற்குள் மணி பத்தாகி விட்டது. ஹாஸ்டலுக்கு ஃபோன் செய்து மிகவும் வேண்டிய பெண் சடங்காகி இருப்பதால் அன்று இரவு வர முடியவில்லை என்பதைத் தெரிவித்தாள். தங்கையை விடப் பதட்டமாக இருந்தான் சேகர்.

"இப்ப நாம என்னங்க செய்யணும்?" என்றான்.

"முதல்ல கயலுக்கு மஞ்சத்தண்ணி ஊத்தனும். அப்புறமா நல்ல சேலை அல்லது பாவாடை தாவணி எடுத்து அலங்காரம் செஞ்சு தாய் மாமன் வந்து சீர் செய்யணும். அப்பவும் திரும்பவும் மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க! இதை நல்ல நாள் பார்த்துச் செய்யலாம்" என்றாள்.

யோசனையில் ஆழ்ந்தான் அவன்.

"எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல கீதா! எனக்கு இருக்குற ஒரே சொந்தம் என் தங்கச்சி தான்."

"அப்ப எதுவுமே செய்ய வேண்டாம்னு நினைக்கறீங்களா?"

"ஐயையோ! நான் அப்படிச் சொல்லல்ல! இது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வீட்டுக்குப் பெரியவுங்கன்னு யாருமே இல்ல! கீழே குடியிருக்கறவங்க இருக்காங்க! தயவு செஞ்சு இந்த சடங்கை மட்டும் கூட நின்னு நடத்திக்கொடுத்துருங்களேன். உங்களுக்கு ரொம்ப நன்றி உள்ளவனா இருப்பேன்" என்றான்.

தன் பங்குக்கு தானும் யோசித்தாள்.

"சேகர் சார்! இந்த ஃபங்க்ஷனை நானே நடத்தறேன். கயல் ஸ்கூலுக்குப் போறதால ரொம்ப நாள் லீவு போட முடியாது. இன்னைக்கு புதன் கிழமை. வர ஞாயிற்றுக்கிழமை தலைக்கு தண்ணி ஊத்தி சடங்கு வெச்சுக்கலாம். நிறையப் பேரைக் கூப்பிடாம சிம்பிளா முடிச்சிடலாம். நான் என் ஃபிரெண்ட்சைக் கூட்டிக்கிட்டு வரேன். கீழ் வீட்டம்மாவை நீங்க கூப்பிடுங்க! உங்க வீட்டு மொட்டை மாடியிலேயே வெச்சுக்கலாம்." என்றாள்.

"என்னென்ன வாங்கணும்னு ஒரு லிஸ்ட் குடுத்துருங்க கீதா! நான் வாங்கிட்டு வந்துருவேன். வரவங்களுக்கு சாப்பாடு போடணும் இல்ல? அதுக்கு என்ன செய்ய?"

"கவலைப்படவேண்டாம். இப்ப நிறைய கேட்டரிங்க் சர்வீஸ் வந்திருக்கு. நாம இத்தனை சாப்பாடுன்னு ஆர்டர் கொடுத்திட்டோம்னா வீட்டுக்கே கொண்டு வந்து குடுத்துருவாங்க! நாம இலை போட்டு சர்வ் பண்ணிக்கலாம்." என்றாள்.

"கீதா தயவு செஞ்சு என்னைத் தப்பா நினைககதீங்க! எனக்கு இது எதுவுமே புரியல்ல ! கண்ணைக் கட்டிக் காட்டுல விட்டா மாதிரி இருக்கு. இந்த ஃபங்க்ஷன் முடியுற வரைக்கும் நீங்க எங்க வீட்டுலயே தங்கிக்கறீங்களா? என் தங்கச்சிக்கும் ஒரு துணை கெடச்சா மாதிரி இருக்கும்" என்றான்.

மிகவும் தயங்கினாள் கீதா. கயலில் அழுத பயந்த முகம் வந்து போனது.

"சரி சேகர் சார்! ஆனா ஒரு கண்டிஷன். நம்ம ஆபீசுல இருந்து யாரையும் கூப்பிடாதீங்க! ஏன்னா நான் இங்க ஓடியாடி எல்லா வேலையையும் செய்யுறதைப்பார்த்தா ஏதாவது வம்பு பேசுவாங்க! இன்னும் நாலு நாளைக்கு கயல் ஸ்கூலுக்குப் போக வேண்டாம். நானும் லீவு போட்டுட்டு அவ கூடவே இருக்கேன். நீங்க வழக்கம் போல ஆபீஸ் போங்க! எங்க ஹாஸ்டல்ல நான் சொல்லிக்கறேன்" என்றாள்.

திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. கயலுக்கு நல்ல சத்தான உணவாகக் கொடுத்தாள். உளுந்தக்களி செய்து கொடுத்தாள். ஒரு தாயைப் போல தன்னைக் கவனித்துக்கொள்ளும் கீதாவிடம் ஒட்டிக்கொண்டு விட்டாள் கயல். தனது தோழியர் அவர்கள் சொல்லும் ஜோக் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள். ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. மாலினியை மட்டுமே அழைத்திருந்தான் சேகர். ஹாஸ்டலில் இவளுடன் அறையில் தங்கும் பிரியா மற்றும் கோகிலாவை அழைத்து வந்தாள் கீதா. கீழ் வீட்டில் இருக்கும் பெரியம்மா மிகவும் உதவியாக இருந்தாள். அனைவரும் சேர்ந்து கயலுக்கு மஞ்சள் நீராட்டி பூச்சூட்டி சேலை அணிவித்து அழகு செய்தனர். தனது தங்கையை அந்தக் கோலத்தில் பார்த்த சேகர் கண்கள் கலங்கி விட்டான்.

கீழ் வீட்டுப் பெரியம்மாவின் மகன் ஐ டியில் வேலைப் பார்ப்பவன் தாய் மாமன் சீர் செய்ய பெரியம்மா ஆரத்தி சுற்ற நல்லபடியாக முடிந்தது சடங்கு. சாப்பாடு வந்து காத்திருந்தது. அனைவருக்கும் இலை போட்டு கீதாவும் தோழியரும் பரிமாற நன்றாக உண்டனர் தெருவினர். எல்லாருக்கும் தாம்பூலம் கொடுத்து அனுப்பி விட்டு சாப்பிட உட்கார்ந்தாள் கீதா. அவளுக்குப் பரிமாறினான் சேகர். ஒரு மிகப்பெரிய ஃபங்க்ஷனை இருவருமாக நன்றாக முடித்து விட்ட அலுப்பு தெரிந்தது அவர்கள் முகங்களில். தானும் தாம்பூலம் எடுத்துக்கொண்டு விடை பெற்றுக்கொண்டாள் கீதா.

இந்த நாலு நாட்களில் கீதாவோடு மிகவும் நெருங்கி விட்ட கயல் ஓவென அழ அவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் தானும் கலங்கினாள் அவள். அடிக்கடி வந்து பார்ப்பதாகச் சொல்லி விட்டு தன் ஹாஸ்டல் அறைக்கு வந்து படுத்த போது உடலில் அசதியால் வெகு நாட்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்கினாள். கனவில் கயல் அவளை அண்ணி என்றழைக்க திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top