• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaathalaakik kasinthu...: Aththiyaayam 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 3:

சேகரின் தங்கை சடங்கை எடுத்துப் போட்டு செய்ததிலிருந்து மனதுக்குள் ஒரு சந்தோஷம் பூத்திருந்தது கீதாவுக்கு. வாரா வாரம் கயல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஃபோன் செய்து பேசுவது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் முப்பது வயதுக்கு மேற்பட்ட சேகருக்கு எப்படி 12 வயதில் தங்கை இருக்க முடியும்? அதிலும் சேகரின் தாய் இறந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன என அவனே சொல்லியிருக்க 12 வயது தங்கை எங்கிருந்து முளைத்தாள்? என்ற கேள்வி குடைந்தது அவளை. கேட்க முடியாமல் நாகரீகம் தடுத்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை மாலினியின் கணவன் ஊரில் இல்லை என்பதால் அதனைத் தன் தோழியோடு செலவிடத் திட்டமிட்டாள் மாலினி. அவளது 8 வயது மகனை அழைத்துக் கொண்டு வண்டலூர் போகலாம் என நினைத்தாள். அதனால் முந்தைய நாளான சனிக்கிழமையே தன் வீட்டுக்கு வரச் சொல்லி விட்டாள் மாலினி. அதன் படியே வார்டனிடம் திங்கட் கிழமையே எழுதிக்கொடுத்து விட்டாள். சிறு குழந்தையோடும் தோழியோடும் ஞாயிறன்று இருக்கப் போகிறோம் என்ற எண்ணமே இனித்தது. மதியம் உணவு உண்ணும் போது இதனை சேகரிடமும் பகிர்ந்து கொண்டாள்.

"ஏன் கீதா? நீங்க தப்பா நினைக்கல்லைன்னா நானும் என் தங்கச்சியும் வரலாமா?" என்றான் சட்டென.

"இது என்னடா வம்பு?" என திருதிரு என விழித்தாள் கீதா. அவளை முந்திக்கொண்டு பதிலளித்தாள் மாலினி.

"கட்டாயம் வாங்க சார்! முதல்ல நாங்க டூ வீலர்ல போறதா இருந்தோம். இப்ப நீங்களும் வரதால கார் ஏற்பாடு செஞ்சு போகலாமா? நாங்க கையில சாப்பாடு எல்லாமே எடுத்துக்கறோம்" என்றாள்.

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்! எல்லாமே என் தங்கச்சிக்காகத்தான். அவ இது மாதிரி குடும்பமா லேடீசோட வெளிய போனதே இல்ல! எக்சாமும் முடிஞ்சிட்டது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ கீதா இதைச் சொன்னதும் என்னால கட்டுப்படுத்த முடியல்ல!" என்றான். தன் தங்கையிடம் விஷயத்தை ஃபோனில் சொல்ல எழுந்து சென்றான் அவன்.

"ஐ ஆம் சாரி மாலு! நான் அவர்ட்ட சொல்லியிருக்கக் கூடாதோ?"

"சே! என்னடி நீ? வண்டலூர் ஜூ என்ன என்னோட சொத்தா? யார் வேணும்னாலும் வரலாமே? அதுவும் போக அன்னைக்கு அந்தப் பொண்ணைப் பார்த்ததுல இருந்து எனக்கு அவ மேல ஒரு பாசம் வந்துட்டுது. பாவம் தாயில்லாப் போண்ணு. ஹூம்! " என்றாள் மாலினி.

"எனக்கும் அதே தான் மாலு! ஆனா ரொம்ப நெருங்க பயமா இருக்கு! அவ என் மேல ரொம்பப் பாசம் வெச்சு நாளைக்கே அது எனக்குப் பிரச்சனை ஆச்சுன்னா நான் என்னடி சேய்வேன்?" என்றாள் கவலையாக.

தோழியின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள் மாலினி.

"அப்படியே நெருங்குனா என்ன கீதா? நீ இப்படியேவா தானியா இருக்கப் போற?"

"உளறாதே மாலு! நான் சுட்ட மண்! இனிமே எதோடவும் ஒட்ட முடியாது! அதனால இந்தப் பேச்சை விடு!" என்றாள். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை என்னென்ன சாப்பாடு செய்யலாம் என தீர்மானித்தார்கள். ஒரு வழியாக சனிக்கிழமை வந்தது. தோழியின் வீட்டுக்குப் போனாள் கீதா. அங்கே வரவேற்பறையில் இருந்த குடும்ப படத்தைக் கண்டதும் தொண்டையை அடைத்தது அவளுக்கு. எனக்கும் ஒரு வீடு அதில் குடும்பத்தோடு ஒரு படம் என இருக்க முடியுமா? சே! என்ன நினைப்பு இது" என்று உதறிக்கோண்டாள். தோழிகள் இருவரும் பேசியபடியே உறங்கி விட்டனர். மறு நாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து சாம்பார் சாதம், உருளை பொரியல், கொஞ்சம் பிரிஞ்சி ரைஸ், அதற்குத் தோதாக பனீர் பட்டர் மசாலா என செய்து எடுத்துக்கொண்டனர். எதற்கும் இருக்கட்டும் என ராய்தா செய்தாள் கீதா. சொன்னபடியே சரியாக எட்டு மணிக்கு காரோடு வந்து விட்டான் சேகர். கார்க்கதவு திறந்தது தான் தாமதம் மடை திறந்த வெள்ளம் போல ஓடி வந்து கீதாவைக் கட்டிக்கொண்டாள் கயல்.

"ரொம்ப தேங்க்ஸ்கா! என் ஃபிரெண்ட்ஸ் எல்லார் கிட்டயும் ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். நான் எங்க அக்கா கூட பிக்னிக் போகப்போறேன்னு. எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது" என்றாள். அவளிடம் செய்து வைத்திருந்த ஐட்டங்களைக் காட்டினார்கள்.

"வாவ்! சூப்பர்க்கா! எனக்குக் கொஞ்சம் டேஸ்டுக்குக் குடுங்களேன்" எனக் கேட்டு வாங்கிக்கொண்டாள். சூப்பர் சூப்பர் என புகழ்ந்து தள்ளி விட்டாள். மாலினியின் மகன் ஆகாஷ் கயலிடம் ஒட்டிக்கொண்டான். இருவரும் காரின் முன்னால் அமர பெரியவர்கள் பின்னால் அமர்ந்து கொண்டனர். சேகரின் பக்கத்தில் அமர்ந்திருந்த கீதாவுக்குள் என்னென்னவோ உணர்வுகள் வந்து போயின. இளகிய மனதை கடிவாளம் போட்டு நிறுத்தினாள். சரியாக 9:30 மணிக்கு ஜூவினுள் நுழைந்து விட்டார்கள். டிக்கெட் வாங்கி விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து காலை டிஃபனுக்கு என எடுத்து வந்திருந்த இட்லிகளை உண்டார்கள். கை கழுவும் இடத்தில் கயலை தனியாக மடக்கினாள் மாலினி.

"கயல்! உனக்கு கீதாவை ரொம்பப் பிடிக்கும் தானே?"

"ஆமா ஆண்ட்டி! அவங்க என் கூடவே இருக்க மாட்டாங்களான்னு ஆசையா இருக்கு"

"அப்ப நீ அவங்களை அக்கான்னு கூப்பிடாதே! இனிமே அண்ணின்னு கூப்பிடு! அவங்க உங்க அண்ணனைக் கல்யாணம் செய்துக்கிட்டா உங்க கூடவே இருப்பாங்க இல்ல?"

"இதை நானும் யோசிச்சேன் ஆண்ட்டி! ஆனா கீதாக்காவோட விருப்பம் தெரியாம நாம பேசக் கூடாதுன்னு சொல்லிடிச்சு எங்கண்ணன்!"

"நீ அவங்களை அண்ணின்னு கூப்பிடு! அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்ப்போம். அதுக்கு மேல நான் பார்த்துக்கறேன்." என்றாள் மாலினி. தலையை ஆட்டி விட்டுத் துள்ளியோடும் அந்தப் பெண்ணை பாசத்துடன் பார்த்தாள் மாலினி.

"கடவுளே! என்னால ஒரு நல்ல காரியம் நடக்கணும்னு நான் இந்த முயற்சியில இறங்குறேன். எனக்கு வெற்றியே குடு வினாயகா" என்று மனதில் வேண்டிக்கொண்டாள். சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கழுவி அவற்றை பையில் வைத்து விட்டு நடக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு மிருகமாகப் பார்த்துக்கொண்டே வந்தனர். அது என்ன விலங்கு என்று ஆகாஷிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் கயல்.

"அண்ணி! ரொம்ப தாகமா இருக்கு! தண்ணி இருக்கா" என்றாள் சட்டென.

திடுக்கிட்டு பதறினாள் கீதா. முகம் சிவந்து விட்டது அவளுக்கு. இதனைக் கவனித்த மாலினி மனதுக்குள் தனக்குத்தானே சபாஷ் போட்டுக்கொண்டாள். எதுவும் பேசாமல் மௌனமாக தண்ணீரை எடுத்து நீட்டினாள். சேகருக்கே கூட திகைப்பு தான். இருந்தும் சமாளித்துக்கொண்டான். நடந்து நடந்து களைத்துப் போனார்கள் பெரியவர்கள். கால் வலிக்க அங்கே இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டர்கள். குழந்தைகள் இருவரும் சற்றே தள்ளி இருந்த விளையாட்டுத்திடலில் சென்று வேடிக்கை பார்த்தபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

"கயல் ஜாக்கிரதையா இருந்துக்கோம்மா! எங்க கண் பார்வையிலேயே இரு! ஆகாஷையும் பார்த்துக்கோ" என்றாள் கீதா.

அவளை தனது கூரிய கண்களால் தூளைத்தான் சேகர். அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டாள். சேகர் சென்று மூன்று டீ வாங்கி வர அதை பருகியபடியே சுற்று முற்றும் பார்த்துக்கொண்டிருந்தனர். இரு குழந்தைகளும் ஓடி வந்தனர்.

"அண்ணி! அதோ ஒரு பேட்டரி வண்டி போகுது! அது ஃபுல் ஜூவையும் சுத்திக்காட்டுமாம். நாங்க போலாமா அண்ணி" என்று கெஞ்சினாள் கயல்.

"போகலாம்! ஆனா வழியில எங்கேயும் இறங்கக் கூடாது என்ன?" என்று சொல்லி அவர்களை அழைத்துப் போய் டிக்கெட் வாங்கி அமர வைத்தாள். ஓட்டுநரிடம் சொல்லி பத்திரமாக அழைத்து வந்து விடுமாறு சொன்னாள். அதில் பல குழந்தைகள் அவர்களை விடவும் சின்னவர்கள் இருந்ததால் சமாதானமாக மீண்டும் மரத்தடிக்கு வந்தாள். அவளைப் பார்த்து சிரித்தனர் மாலினியும் சேகரும்.

"எதுக்கு சிரிக்கறீங்க?"

"உனக்கு கயல் மேல ரொம்பப் பாசம் இல்ல?"

"அவ மேல மட்டும் இல்ல! ஆகாஷ் மேலயும் பாசம் தான்" என்றாள் பட்டென. முகம் கறுத்துப் போனது சேகருக்கு. அவர்களை பேட்டரி வண்டி கடந்த போது ஓவெனக் கத்தி கையாட்டினார்கள் ஆகாஷும் கயலும். அவர்களைப் பார்த்தும் கையாட்டாமல் கம்மென்றிருந்தாள் கீதா.

"என் மேல உள்ள கோபத்துல ஏன் கயலை தண்டிக்கறீங்க கீதா?' என்றான் சேகர்.

"சே சே! அப்படி ஒண்ணும் இல்ல" என்றாள். அவளுக்கே அவள் செய்ததை நினைத்து அவமானமாக இருந்தது.

"கயல் உங்களை ரொம்ப விரும்பத் தொடங்கிட்டா கீதா. அவ வாழ்க்கையில இத்தனை சந்தோஷமா இருந்து இப்பத்தான் பார்க்குறேன்." என்றான்.

"உங்க தங்கச்சி மேல் உங்களுக்கு ரொம்பப் பாசம் இல்ல?"

"நான் உயிர் வாழுறதே அவளுக்காகத்தான் மாலினி மேடம்! இல்லைன்னா நான் எப்பவோ சன்னியாசியாப் போயிருப்பேன். இல்ல தற்கொலை செஞ்சிட்டு இருந்திருப்பேன். எங்கம்மா இறந்தப்ப எனக்கு ஆறுதலா இருந்தது கயல் தான்" என்றான்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இவனுக்கு என்ன துயரம்? என்று நினைத்துக்கொண்டாள் கீதா.

"சார்! வாழ்க்கையில பல கெட்ட விஷயங்கள் நடக்கலாம் ஆனா அதுக்காக தற்கொலை செய்துக்கிட்டிருப்பேன்னு சொல்றதுல என்ன பெருமை?" என்றாள் கீதா கோபமாக.

அவளை முறைத்துப் பார்த்தான் சேகர். அவனது பார்வையில் உனக்கு என்ன தெரியும் என்றிருந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top