• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaayam Kakkum Kashayaangal ...- Sukku Kashayam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காயம் காக்கும் கஷாயங்கள்...சுக்குக் கஷாயம்.

நம்மில் பலருக்கு செரிமானம் சரியாக இருக்காது. பகலில் உண்டது மாலை நேரத்தில் நெஞ்சைக் கரித்துக்கொண்டு வரும். புளி ஏப்பம் வரலாம். இதனை கவனியாது விட்டால் பின்னால் வயிற்றுப் புண், பித்தக் கோளாறு என்று பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் செரிமானக் கோளாறு உடனடியாக கவனிக்க வேண்டிய ஒன்று. இதனை சுக்குக் கஷாயம் எளிதாக தீர்த்து விடும். நம் சித்தர்கள் சுக்கை நண் பகலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் படி செய்ய முடியவில்லை என்றாலும் சூரிய அஸ்மனத்துக்குள் எடுத்துக்கொள்வது நல்லது.

கஷாயம் என்பது ஏதோ இரு கிளாஸ் தண்ணீரில் சில மூலிகைகளைப் போட்டு கொதிக்க வைத்துக் குடிப்பது அல்ல. அவற்றைத் தயாரிக்கும் முறை உண்டு. முதலில் சுக்குக் கஷாயம் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

4 நபர்களுக்கு

சுக்கு - 25 கிராம்
மிளகு - 10 (எண்ணிக்கை)
வெல்லம்/ கருப்பட்டி - கொஞ்சம்
சுத்தமான தண்ணீர் - 5 கிளாஸ்

தயாரிக்கும் முறை:

முதலில் சுக்கை நன்றாகப் பொடி செய்து அதில் இருக்கும் நாரை முற்றிலுமாக நீக்க வேண்டும். மிளகை லேசாகத் தட்டிக்கொள்ள வேண்டும். 5 கிளாஸ் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அதில் மிளகையும் தூளாக்கி வைத்திருக்கும் சுக்கையும் போட வேண்டும். இப்போது வெல்லம் சேர்க்கத்தேவையில்லை. ஐந்து கிளாஸ் தண்ணீர் 3 கிளாசாக வற்றும் வரையில் அடுப்பில் வைக்க வேண்டும். அப்போது தான் அதன் சத்து முழுவதும் தண்ணீரில் இறங்கியிருக்கும். இப்போது பொடித்து வைத்த வெல்லத்தை/கருப்பட்டி சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இப்போது கஷாயம் தயார். இதனை வடிகட்டி அப்படியேவும் அருந்தலாம் அல்லது பாலோடு சேர்த்தும் அருந்தலாம். இரு வேளைகள் அரை கிளாஸ் எடுத்தால் போதுமானது. சிலருக்கு ஒரு வேளையே போதுமானதாக இருக்கும். ஒரு முறை சுக்குக் கஷாயம் எடுத்துக்கொண்டால் குறைந்ததும் ஒரு வாரத்துக்கு மீண்டும் அதனை எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் 9 நாட்கள் கழித்து மீண்டும் செய்து கொள்ளலாம்.

இந்தக் கஷாயத்தை ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அரை கிளாஸ் கொடுக்கலாம். மூன்று வயது வரை கொடுக்கக் கூடாது. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால் கால் கிளாசே போதுமானது. தாய்ப்பாலூட்டும் அன்னையர் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால் குழந்தைக்கும் செரிமானக் கோளாறு, வாயுப் பிரச்சனை அணுகாது. மதிய உணவு முடித்து அரை மணியில் இதனை எடுத்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
ரொம்ப தேவையான தகவல்.......
இன்னும் உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.
இந்த கஷாயம்.... வயிற்றில் சேர்ந்து இருக்கும் நாட்பட்ட gas trouble க்கு பயன் கொடுக்குமா??
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
ரொம்ப தேவையான தகவல்.......
இன்னும் உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.
இந்த கஷாயம்.... வயிற்றில் சேர்ந்து இருக்கும் நாட்பட்ட gas trouble க்கு பயன் கொடுக்குமா??
கட்டாயம் பலன் கொடுக்கும் சகோதரி. இஞ்சியையும் பெருங்காயத்தையும் உணவில் சேர்த்துவர வாயுத்தொந்தரவே இருக்காது.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ரொம்ப தேவையான கஷாயம் இப்போ வரும் காய்கறிகள் உணவு பொருட்களில் இதில் என்ன கலந்து வருதுன்னே தெரியறது இல்லை எதை கண்டும் பயம் சாப்பிட்ட வாயிரும் அலறுது காஸ் தான்.
Nice info ma ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top