Kadhal kadan - 15

#35
பதார்த்தங்களின் வரிசை நாவூற வைக்கிறது...😊
ஹா ஹா ஹா
பரத்தாவது?
அவனோட பொண்டாட்டியாவது?
பெண்ணாவது?
யாரு எப்படி போனால்
நமக்கென்ன?
நமக்கு சாப்பாடுதான்
முக்கியம்ப்பா, ராமன் டியர்
 
#38
பெண்டுகள், கன்யா குழந்தைகள், பிரம்மச்சாரி அனைவருக்கும் பர்வதம் மாமியே ஒன்பது கஜம் புடைவைகளையும், உடைகளையும் மடி உணர்த்தியிருக்க, அனைவரையும் கோலம் போட்ட மணையில் உட்காரவைத்து சந்தனம் குங்குமம் கொடுத்து, இரு கைகளின் கட்டை விரல்களால் அவர்களுடைய உச்சி, கன்னம், கைகள் மற்றும் கால்களில் எண்ணையும் மஞ்சளும் தடவி, சீயக்காய், வாசனைப்பொடி கொடுத்து மங்களஸ்நானம் செய்ய அனுப்பியிருந்தார். அனைவரும் அவ்வாறே எண்ணை ஸ்நானம் செய்து, ஒன்பது கஜம் புடவையை மடிசாராகக் கட்டிக்கொண்டு தயாராகி இருந்தார்கள். ஆத்து சம்பந்திகளாகிய ராதிகாவின் அம்மா, மரகதம், கீதாவின் அம்மா, ஸ்ரீராமின் அம்மா, மற்றும் குடும்பத்து தாயாதிப் பெண் குழந்தைகள், ஆகியோரே சுமங்கலிகளாக வரிக்கப்பட்டிருந்தார்கள். நந்தினி ஏழுமாத கர்பிணி என்பதால், அவள் புடைவைக்கலத்தில் உட்காரக்கூடாது என்பதால், குடும்பத்தில் மூத்த சுமங்கலியான ஒரு தாயாதிப் பெண்மணியை புடவைக் கலத்தில் உட்காரும்படியாக வேண்டிக்கொண்டிருந்தார் பர்வதம்.

முற்றத்தில் சுமங்கலிகளுக்கு இலை போடும் இடத்தை சுத்தமாக பெருக்கி மெழுகி, குட்டி குட்டியாக அழகாக இருபத்தியேழு படிக் கோலங்கள் போட்டு காவியிட்டிருந்தாள் துளசி. பூவாடைப் பானைக்கும் புடவைக் கலத்திற்கும் தனித்தனியாக கோலம் போட்டு, அதன் மேல் மனை போட்டு அதிலும் கோலம் போட்டிருந்தாள்.

ஊதுபத்தி சாம்பிராணி தூபம் போடப்பட்டு, அந்த இடமே தெய்வீகமாகக் காட்சியளித்தது. பரத்தும் ராகவனும் சேர்ந்து தலை வாழை இலைகளை அலம்பி எடுத்து வந்திருந்தனர். புடைவைக்கலத்திற்கு அருகில் இருந்த கோலத்தின் மீது இரட்டையாக நுனி வாழை இலைகளைப் போட்டு, மற்ற கோளங்களின் மீது ஒரு நுனி வாழை இலை போடப்பட்டது. எல்லா இலைகளுக்கும் அருகில் ஒரு டம்ப்ளரில் பானகம், ஒரு டம்ப்ளரில் நீர்மோர், ஒரு வெற்றிலையில் சுக்கு வெல்ல உருண்டை, ஆகியவை வைக்கப்பட்டன. பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த சுமங்கலிகளின் தாம்பூலம், புடவைக்கலம், பூவாடைப்பானை ஆகியவற்றிற்கு பூ அட்சதை போட்டு நமஸ்காரம் செய்தார்கள்.

அதற்குப் பிறகு, சுமங்கலிகளுக்கான இலைகளில், புடைவைக்கலம், அருகில் பூவாடைப்பானைக்கான இலை தொடங்கி, பர்வதம் மாமி நெய்யால் முதலில் சுத்தி செய்ய, ராதிகாவும், கீதாஞ்சலியும் சமைத்த அனைத்து பதார்த்தங்களையும் பரிமாறினார்கள். எல்லா இலைகளிலும் பரிமாறி முடிந்தபின், சுமங்கலிகளாக வரித்த பெண்களை ஆத்து வாசலில் நிற்கவைத்து, அவர்கள் அனைவருக்கும் மஞ்சள் கலந்த நீரைக் கொடுத்து கால் அலம்பிகொள்ளச் சொன்னார் பர்வதம் மாமி. அதன் பின், அவர்களுக்கு கீதா மஞ்சளும் குங்குமமும் கொடுக்க, ராதிகா தலையில் வைத்துக்கொள்ள வெட்டி வைத்த பூச்சரங்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும் “லக்ஷ்மி வா” என்று கூறி அழைத்தனர். அவர்கள் அனைவரையும் அகத்துக்குள்ளே அழைஹ்த்துச் சென்று சுமங்கலிகளுக்காகப் பரிமாறப்பட்ட இலையில் உட்காரவைத்துவிட்டு, பர்வதம்மாமி புடைவைக் கலத்துப் புடவைக்கு சந்தனம் குங்குமம் தெளித்து அட்சதை போட்டு, புடவைக்கலத்திற்கும், பூவாடைப்பனைக்கும் மற்ற சுமங்கலிகளுக்கும் தூப தீபம், கற்பூரம் காட்டிவிட்டு, பின்னர் எல்லார் கையிலும் பஞ்சபாத்திரம் உத்தரணியால் ஜாலம் விட்டு, தத்தம் குற்றி, எல்லாரும் திருப்தியா சாப்பிடணும்,” என்று வேண்டிக்கொண்டார்.

சமையலறையிலிருந்து ஒவ்வொரு பதார்த்தமாக ராகவனும் பரத்தும் எடுத்துக்கொடுக்க, ராதிகா, கீதா, துளசி மற்றும் பானு அனைவரும் சுமங்கலிகளுக்குப் பரிமாறினார்கள். பர்வதம் நின்று மேற்பார்வை பார்த்தபடி, யார் இலையிலும் எதுவும் குறையாமல் பார்த்துக்கொண்டு, மருமகள்களுக்கு பரிமாற வழிகாட்டிக்கொண்டிருந்தார்.
எல்லாம் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்தபொழுது, அங்கு வந்த சொந்தக்கார மூதாட்டி ஒருவர் பர்வதத்திடம் வந்து, “ஏண்டிம்மா பர்வதம், தவறிப்போன பரத்தோட ஆத்துக்காரிக்கும், அவனோட பொண் கொழந்தைக்கும் சேர்த்துதானே கணக்குப்பண்ணி இலை போட்டிருக்கே?” என்று கேட்க,
அதுவரையில் சிரித்தமுகமாக உணவு பரிமாற உதவி செய்துகொண்டிருந்த பரத்தின் முகம் கேட்ட அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் கடுமையாக இறுகிப்போனது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள கை முஷ்டிகளை மடக்கி இறுக்கியவன், அதற்கு மேல் அங்கே நிற்கமுடியாமல், யார் முகத்தையும் ஏறிட்டும் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான்.

பரத்தின் இந்த மாற்றத்தை வேறு யாரும் கவனித்தார்களோ இல்லையோ, பர்வதமும் ராதிகாவும் கவனிக்கத் தவறவில்லை.

மகன் மனம் கலங்கி அறையை விட்டு வெளியேறுவதை பர்வதம் கண்கலங்கிப் போய் பார்த்துக்கொண்டிருந்தார் என்றால், “குழந்தையா?” என்று கதிகலங்கி பரத் செல்வதையே வெறித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா...
 
Top