• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
சென்ற எபிக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. உங்களுக்காக காதல் கடன் - 20 இதோ...
மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் குடுங்க...கதையில் தொய்வு இருக்கா...எந்த விதத்துலயாவது முன்னேற்றம் பண்ணனுமா...உங்கள் மேலான கருத்துக்களைக் கூறி என்னை வழிநடத்துங்க ஃப்ரெண்ட்ஸ்...கமென்ட்சுக்கு பதில் போடலையேன்னு கோவிச்சுக்காதீங்க...அதனால கமென்ட் போடாம இருந்துடாதீங்க...உங்க கமெண்ட்ஸ் தான் என்னை எழுதவைக்கிற டானிக்...எல்லாரோட அன்புக் கருத்துக்களும் கூடிய விரைவில் பதில் போடறேன்...

அன்புடன்
சிவப்பிரியா முரளி

காதல் கடன்
(20)
“ரொம்ப பெரிய சண்டையோ?” என்று கேட்டபடி பரத்தின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள் பானு. வெகு விமரிசையான வரவேற்பு, நலன் விசாரிப்புகள், லைட்டான டிபன் காபிக்குப் பிறகு மாமியார் வீட்டில் மதிய விருந்து தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருக்க, அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மாடியறை வாசலில், கூரை நிழலில் இருந்த சிமென்ட் பென்சில் அமர்ந்து தனது லேப்டாப்பில் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தவன், பானு வந்ததை கவனிக்கவில்லை.

அவளிடமிருந்து திடீரென்று இப்படியொரு கேள்வியையும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“என்ன சண்டை, யாருக்கு? யாரோட?” என்ன கேட்கிறாள் என்று புரியாமல் என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினான் பரத். “இந்தியா பாகிஸ்தானுக்குத்தான், வேற யாருக்கு, சரி விடுங்கோ அத்திம்பேர், அக்கா என்னவோ கோபமா இருக்கறா மாதிரி இருக்கே, ஏதோ உங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேன்னு வந்தேன், வேண்டாம்னா பரவாயில்லை, நீங்க உங்க வேலையைப் பாருங்கோ, நான் போறேன்” என்று கிளம்பிவிட்டாள் பானு.

ஒரு வேலை தங்களிருவருக்கும் இடையிலான சண்டையை ராதிகா தங்கையிடம் சொல்லியிருப்பாளோ என்ற சந்தேகம் வர,

“இப்போ என்ன தெரியனும் உனக்கு, சொல்லு?” என்று நேரிடையாகவே பரத் கேட்க, “நீங்கதான் சொல்லணும் அத்திம்பேர், என்னோட கேள்விக்கு பதில்” என்றபடி மீண்டும் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள் பானு. பானுவுக்கு எதுவும் தெரியாது என்ற லேசான நிம்மதி ஏற்பட்டது பரத்துக்கு.

“ஹ்ம்ம், கொஞ்சம் பெருசுதான்...” என்றான் சிறிய பெருமூச்சுடன்...விவரமேதும் கூறாமல்...

“எத்தனை நாளா?” இது பானு...அவளுக்கும் விவரங்கள் தேவையாக இல்லை போலும்...

“ரெண்டு நாளா?” என்றான் சங்கடமாகப் புன்னகைத்தபடி...

“சூப்பர் அத்திம்பேர், கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல, ரெண்டு நாளா சண்டை, அப்போ ரெண்டு நாளா அக்கா உங்களோட பேசலை அப்படித்தானே?”

ஆமாம் என்று தலையசைத்தான் பரத்... “சமாதானம் பண்ண ட்ரை பண்ணினேளோ?”

“சாரி சொன்னா கட்டையால அடிப்பேன்னு மிரட்டினா உங்கக்கா...” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டான் கள்வன்.

“ஐயோ, அவ்வளவு பெரிய பிரச்சனையா, அப்போ சமாதானமும் பெருசாதான் பண்ணனும்” என்றாள் முகத்தைப் படு சீரியசாக வைத்துக்கொண்டு.

“அத்திம்பேர், இது க்லாஸிஃபைட் இன்ஃபர்மேஷன், இதை நான்தான் சொன்னேன்னு யாருக்கும் தெரியக்கூடாது, முக்கியமா எங்கக்காவுக்கு தெரியவேகூடாது, ஓகேன்னா சொல்லுங்கோ,” என்றவளிடம்,

“ஒகே, யார்கிட்டக்கவும் சொல்லவே மாட்டேன்,போறுமா?” என்றான் பரத்.

“பிங்கி ப்ராமிஸ்,” என்று அவள் சுண்டுவிரலை நீட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தவனை

“உங்க சுண்டுவிரலை நீட்டுங்கோ, அத்திம்பேர்” என்றவள், ஒரு சுண்டுவிரல் ஷேக் ஹேன்ட் கொடுத்தபடி, “இதுதான் பிங்கி ப்ராமிஸ், இப்பிடி ப்ராமிஸ் பண்ணிட்டு அப்பறம் ப்ராமிசை ப்ரேக் பண்ணினா அப்பறம் கனவுல சூனியக்காரி வந்து மிரட்டுவா...” என்றாள் கண்களை உருட்டியபடி.

அடக்கமாட்டாமல் வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கியவன், “சரி சரி பிங்கி ப்ராமிஸ் மேல ப்ராமிஸா, ப்ராமிசை எந்த சூழ்நிலையிலும் ப்ரேக் பண்ணமாட்டேன் போறுமா...இப்போ விஷயத்துக்கு வா...” என்றான்.

“அது...எங்கக்காவுக்கு சாக்லேட்னா ப்ராணம்...அதுவும் டெய்ரி மில்க் சில்க்னா ரொம்ப பிடிக்கும். சாக்லேட்டோட சைஸை வெச்சு அவகிட்டக்க என்ன வேணும்னாலும் சாதிச்சுக்கலாம்...” என்றாள் பானு, ஏதோ மிகப்பெரிய ரகசியத்தை வெளியிடுவதைப் போல.

“அட அவ்வளவுதானா, நான் என்னவோ சமாதானம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்னு எதிர்பார்த்தேன்...பரவாயில்லை, இது கட்டுப்படியாகற விஷயம்தான்...சரி அதையும் ட்ரை பண்ணுவோம்...” என்றவனிடம்,

“அத்திம்பேர், அக்காக்கு என்ன சைஸ் சாக்லேட் வர்றதோ எனக்கும் அதே சைஸ் சாக்லேட் வரணும்...இல்லன்னா உம்மாச்சி கண்ணை குத்திடும்...அப்பறம் உங்க சமாதானம் பலிக்காது...ஞாபகம் வெச்சுக்கோங்கோ...எனிவே ஆல் த பெஸ்ட்,” என்று கூறிவிட்டு மாடியிறங்கத் தொடங்கினாள் பானு.

“அது சரி...இந்த பிங்கி ப்ராமிஸ் பழக்கம் உனக்கு மட்டும்தானா இல்லை உங்கக்காவுக்கும் இருக்கா?” என்றவனின் கேள்விக்கு “எனக்கு எல்லா விஷயத்துலயும் எங்கக்காதான் குரு அத்திம்பேர்,” புன்னகைத்தபடி இறங்கியவளைப் பின்தொடர்ந்தது அத்திம்பேரின் சிரிப்பு...

*****
கீழே சமையலறையை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தாள் ராதிகா.

“அப்பளம் ஒரே எண்ணையா இருக்கே,சரியா பொரிக்கக் கூடாதா?”
“பருப்பு வடை தானே பண்றே,”

“அவருக்கு தயிர்சாதத்துல இஞ்சி பச்சைமிளகா தாளிச்சுக்கொட்டினா பிடிக்காதும்மா, வெறும் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டு போறும்,”

“ரசத்துக்கு பச்சை மிளகாய் போட்டியா, அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்காது தெரியுமா,”

இப்படியாக எல்லாவற்றிற்கும் ஏதாவது அலம்பல் பண்ணிக்கொண்டிருக்க, ஒரு வரம்பிற்கு மேல் தாங்கமுடியாமல் அவளை தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து ஹால் சோபாவில் அமரவைத்தவர்,

“சாப்பாட்டுக்கு இலை போடற வரைக்கும் இங்கேருந்து நகர்ந்தே...காலை ஓடைச்சுப்புடுவேன் ஜாக்கிரதை...” என்று மிரட்டியவரிடம் ஏதோ கூற ராதிகா வாயெடுக்க,

“மூச்...வாயிலருந்து ஒரு வார்த்தை வெளில வரக்கூடாது, கரண்டிய பழுக்க காய்ச்சி நாக்குலே சூடு போட்டுடுவேன்,” என்று கரண்டியைக் காட்டி மிரட்டிவிட்டு,

“நேத்து பிறந்த மாகாணிக் கிழங்குல்லாம் எனக்கு சமைக்கக் கத்துக்குடுக்க வந்துடுத்து, அம்மா தனியா சமைச்சுண்டு இருக்காளே கொஞ்சம் ஒத்தாசை பண்ணலாம்னு இல்லை, உபத்ரவம் பண்ண வந்துட்டா,” என்று முணுமுணுத்தபடியே சமையல் வேலையைத் தொடரச் சென்றார்.

தனியாளாக நின்று தன் பாணியிலேயே பிரமாதமான விருந்தைச் சமைத்திருந்தார் மரகதம். ராதிகாவை மாப்பிள்ளையுடன் அமரவைத்து தலைவாழை இலை போட்டு அவர் அன்புடன் பரிமாறிய விருந்தை மாப்பிள்ளை ரசித்து ருசித்து சாப்பிட்டதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி, வேற்றுமுகமில்லாமல் தன்னருகில் தரையில் அமர்ந்து, மாப்பிள்ளை உணவுண்டதில் ஆடியபாதத்திற்கும் பெரும் திருப்தி.

“சாப்பாடு பிரமாதம் மாமி,” என்று பரத் மனதார புகழ, உச்சி குளிர்ந்து போனது மரகதத்திற்கு. உண்ட களைப்பிற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று மாடியறைக்கு வந்தவன், மதியம் தூங்கும் வழக்கம் இல்லாததால், மொட்டை மாடியில் இங்குமங்குமாக உலாத்திக்கொண்டிருக்க, அவனைத் தேடிக்கொண்டு வந்தாள் ராதிகா.

ஏதோ பேசவேண்டும் என்பதுபோல் தயங்கி நின்றவளைப் பார்த்து ‘என்ன’ என்பதுபோல் தலையை அசைக்க,

“ரொம்ப சாரி, நான் அம்மாகிட்டக்க எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் உங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு...ஆனா இந்த அம்மா பாருங்கோ நான் சொன்னதை காதுலையே போட்டுக்காம தன் பாட்டுக்கு இஷ்டம் போல சமைச்சுருக்கா, இருந்தாலும் அம்மாவோட திருப்திக்காக நீங்க சமையல் நன்னாருக்குன்னு சொன்னேளே அதுக்கு தேங்க்ஸ்” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“இரு இரு ஒரு நிமிஷம், சமையல் நிஜமாவே ரொம்ப நன்னா இருந்துது, அதனாலதான் நன்னா இருக்குன்னு சொன்னேன், இதுல சமாளிக்கரதுக்கோ பொய் சொல்றதுக்கோ அவயசிமே இல்லை, உனக்கு ஏன் இப்பிடி தோணித்து?”

“இல்லை சமையல் நம்பாத்துல பண்ணறா மாதிரி, உங்களுக்கு பிடிச்சா மாதிரி இல்லையோன்னு...”

“நம்பாத்துல சமைக்கறாமாதிரி, நமக்கு பிடிச்சாமாதிரியே சமைச்சு சாப்பிடனும்னா நாம நம்பாத்துலையே இருந்திருக்கலாமே, விருந்துன்னு எங்கேயும் போகவே தேவையில்லையே, ஒருத்தராத்துக்கு போறோம்னா, அவாத்து பழக்கவழக்கத்துக்கு தகுந்தா மாதிரிதான் நாம இருக்கணும், அதை விட்டுட்டு நமக்கு தகுந்தா மாதிரி அவா மாறணும்னு எதிர்பார்க்கக் கூடாது... அதோட இது ஒண்ணும் பொறத்தியராம் கிடையாதே, என்னோட மாமியார் வீடு, அதனால எனக்கு என்ன வேணுமோ, என்ன பிடிக்குமோ அதை நானே என் மாமியார் கிட்ட உரிமையோட கேட்டு செஞ்சுப்பேன், நீ அனாவசியமா இதுக்காகவும் உன்னோட நீயே தனியா பேசிண்டு திரியாதே சரியா?” என்று கூறியவனை கோபமாக ஏறிட்டவளிடம்,

“உனக்கொரு சீக்ரெட் தெரியுமா, இன்னிக்கி சமையல் மெனுவை நானும் என் மாமியாரும் நேத்திக்கே டிஸ்கஸ் பண்ணி முடிவு பண்ணிட்டோம்,” என்று அவளுக்கு இன்னும் அதிகமாக அதிர்ச்சியளித்தான் பரத்.

சர்வசாதாரணமாக தனது குடும்பத்தினருடன் ஒன்றாகி, அவர்களில் ஒருவனாகிப்போய் நிற்பவனின் முகத்தை விழியகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா.

தான் ஒரு கோடீஸ்வரன் என்ற பகட்டோ, தனது வாழ்க்கைமுறை வேறு என்ற ஒதுக்கமோ இல்லாமல் வெகு இயல்பாய் எல்லோரிடமும் பழகினான்.

அவன் பேச்சிலோ செயலிலோ எந்தவிதமான பொய்மையோ நடிப்போ எள்ளளவும் இல்லை என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவனுடைய இவ்வளவு இணக்கமான நடத்தை ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும், ராதிகாவுக்குக் குழப்பமாகவும் இருந்தது. அதையும் நேரடியாக அவனிடமே கேட்டுவிட்டாள்.

“நான் என்ன பண்ணுவேன்னு எதிர்பார்த்தே? என் மனசுல இருக்கற கோபத்தையும், குழப்பத்தையும் உன்னோட அப்பாம்மா மேலயும், பானு, சீனு மேலயும் காட்டுவேன்னு நெனைச்சியா?” என்றான் அவள் முகம் பார்த்து.

‘ஆமாம்’ என்றும் சொல்லமுடியாமல், ‘இல்லை’ என்றும் சொல்லத் தோன்றாமல், தலையைக் குனிந்துகொண்டாள் ராதிகா.

ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டவன், அவளை நோக்கித் திரும்பி “இங்க பாரு, எனக்கு இருக்கற பிரச்சினைக்கும் குழப்பங்களுக்கும் எந்தவிதத்துலயும் சம்பந்தமே இல்லாத உன்னை தேவையில்லாமல் என்னோட வாழக்கையில இன்வால்வ் பண்ணி ஒரு பெரிய்ய தப்பை செஞ்சுட்டேன், அதையே எப்பிடி சரி பண்ணப்போறேன்னு தெரியாம தவிச்சுண்டு இருக்கேன், இந்த நிலைமையில எங்காத்துல பொண்ணு குடுத்துருக்காங்கறதைத் தவிர வேற எந்த தப்புமே பண்ணாத உன்னோட அம்மா அப்பாவை அனாவசியமா எதுக்கு கஷ்டப்படுத்தணும். நானும் அக்கா தங்கைகளோட பொறந்தவன் தானே, ஆத்துக்கு முதல் தடவையா மாப்பிள்ளை வர்றார்னா, அது எவ்வளவு முக்கியம்னு எனக்கும் தெரியும். கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆனப்பறமும், இன்னிக்கும் ஸ்ரீராம் அத்திம்பேர் ஆத்துக்கு வரார்னா, அம்மாக்கு கால் தரைல பாவாது. வீட்டையே ரெண்டு பண்ணிடுவா. இத்தனைக்கும் மாசத்துக்கு ரெண்டு தரமாவது ரெஸ்டாரன்ட் வேலையா அவர் ஆத்துக்கு வருவார். ஆனாலும் அம்மா என்னவோ அவர் முதல் தடவையா ஆத்துக்கு வராமாதிரிதான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணுவா...அப்படி இருக்கறச்சே, இப்போதைக்கு நான்தான் உங்காத்துக்கு ஒரே மாப்பிள்ளை, அதுவும் கல்யாணத்துக்கு அப்பறம் முதல் தடவையா பொண்ணும் மாப்பிள்ளையும் ஆத்துக்கு வர்றதை எவ்வளவு ஆசையோடவும் ஆவலோடவும் எதிர்பார்த்திருப்பான்னு எனக்கு நன்னா புரியறது, அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு அவாளை எந்த விதத்துலையும் கஷ்டபடுத்தமாட்டேன்,” என்று கூறியவனை

‘இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுப்போமா’ என்று அவளுடைய மனம் அத்துமீறி வினவியது.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
‘எல்லாரையும் பக்கத்துல சேர்த்துண்டு என்னை மாத்திரம் ஏண்டா தள்ளி நிறுத்தற?” என்று அவனுடைய காலரைப் பிடித்து உலுக்கவேண்டும்போல் வெறி பிடித்துக்கொண்டது அவளுக்கு.

ராதிகாவின் மனம் போட்டுக்கொண்டிருக்கும் கெட்ட ஆட்டத்தை உணராதவன் மெதுவாக அவள் முன் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய (ஒரு முழம் நீளத்துக்குப் பெரிய) டெய்ரி மில்க் சில்க் ஸ்பெஷல் எடிஷன் சாக்லேட் ஒன்றை நீட்டினான்.

dairymilk silk.jpg

ஊதா நிற பின்னணியில் குட்டியாக பிங்க் நிற இதயங்கள் பறக்கும்படி இருந்த அந்த அட்டைப்பெட்டியை அவளிடம் கொடுக்கும்போது அவனிடம் தென்பட்ட சங்கோஜமும் சங்கடமும் அதனால் லேசாகச் சிவந்த அவன் முகமும், ராதிகாவிற்குப் பிடிக்க ஆரம்பித்த பைத்தியத்தை இன்னும் அதிகமாக்கி ‘தகராறு ஏது தமிழ் முத்தம் போடு’ என்று தறிகெட்டு ஓட செய்தது.

பரத் கொடுத்த சாக்லேட்டைக் கையில் பிடித்துக்கொண்டு குறுகுறுவென்று அவனையே பார்த்தபடி ராதிகா நின்றிருக்க, “சாரி, அன்னிக்கி ஏதோ டென்ஷன்ல தப்பு தப்பா பேசி உன்னை ஹர்ட் பண்ணிட்டேன், இனிமேல் அப்படியெல்லாம் நடக்காது,” என்று அவளிடம் மன்னிப்புக் கேட்கும்விதமாகக் கூற,

ராதிகாவோ, இதயங்கள் பறக்கும் சாக்லேட்டின் மேலட்டையையும், அவனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய், “பிப்ரவரி மாசம் இல்லையா, எல்லா கடையிலயும் இந்த சில்க்தான் இருக்கு, அதான், வேற வழியில்லாம இதையே வாங்க வேண்டியதா ஆயிடுத்து, ராங் மெசேஜ் குடுக்கறதுக்கு சாரி, சாக்லேட்டை மட்டும் எடுத்துண்டு டப்பாவை தூக்கிப் போட்டுடு, சரியா?” என்றவனிடம்

“எனக்கு சாக்லேட் வாங்கிக் குடுக்கற ஐடியாவை உங்களுக்கு கொடுத்தது யாரு? பானுவா? இதுக்கு அவளுக்கு என்ன லஞ்சம் குடுத்தேள்?” என்ற ராதிகாவின் கேள்விக்கு, மெதுவாக இன்னொரு சில்க் சாக்லேட்டை எடுத்துக் காட்ட, அது ஸ்பெஷல் எடிஷனாக இல்லாமல், சாதாரண சாக்லேட்டாகவே இருக்க,

“இந்த டைப் சாக்லேட் கிடைக்கல்லைன்னு சொன்னேள்?” என்று அவனுடைய காலை வார,

“ஒண்ணுதான் கிடைச்சுது அதனாலதான் இதை பானுக்கு குடுக்கலாம்னு...” என்று மென்று விழுங்கினான்.

‘அப்படியா’ என்பதுபோல் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தபடி ராதிகா தலையை ஸ்லோ மோஷனில் மேலும் கீழுமாக ஆட்ட,

“என்ன நீ ரொம்பதான் சந்தேகப்படற, ஹார்ட் போட்ட சாக்லேட்டை ஆத்துக்காரிக்கு குடுக்கலாம், அதையே மச்சினிக்கு குடுத்தா ஊர் ஒலகம் ஒத்துக்குமா? இல்லைன்னா ஆத்துக்காரி நீதான் சும்மா இருப்பியா? அதனாலதான் உனக்கு குடுத்தேன்...அதுவும் வேணும்னே போய் உனக்காக தேடில்லாம் ஹார்ட் போட்ட சாக்லேட் வாங்கலை கேட்டியா, அது ஏதோ யதார்ச்சையா அமைஞ்சுடுத்து, சமாதானம் ஆக சாக்லேட்தான் முக்கியம், ராப்பர்லாம் முக்கியம் இல்லை, தெரிஞ்சுக்கோ” என்றான் அவசர அவசரமாக.

பரத் அவளை ஆத்துக்காரி, ஆத்துக்காரி என்று திரும்பத் திரும்பக் கூற, அவன் கூறிய மற்ற விஷயங்களை எல்லாம் ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு “ஓ, பட்டர்ஃப்ளை, பட்டர்ஃப்ளை...ஏன் விரித்தாய் சிறகை?” என்று அவளுடைய லிட்டில் ஹார்ட் ஆயிரமாயிரம் பட்டர்ஃப்ளைகளைப் பறக்கவிட்டது.

ஆனாலும் தன்னை ஒருவழியாகச் சுதாரித்துக்கொண்டு, சிறகடித்துப் பறந்து ஹார்ட்டில் குறுகுறுப்பை உண்டாக்கிகொண்டிருந்த பட்டர்ஃப்ளைகளை எல்லாம் அடக்கிவைத்த விடாக்கண்டனின் கொடாக்கண்டி...

“சரி சரி, நீங்க என்ன சொல்ல வரேள்னு நேக்கு நன்னாவே புரியறது. சாக்லேட்டுக்கு தாங்க்ஸ், இதை வாங்கிக் குடுத்ததனால இப்போதைக்கு அமைதி, அஹிம்சை, அவ்வளவுதான். சமாதானம் ஆகற விஷயத்தை ஊருக்கு போய் பாத்துக்கலாம், அப்பறம் முக்கியமா, நீங்க ஹார்ட் போட்ட சாக்லேட் வாங்கிக் குடுத்ததனால, நீங்க எனக்கு வேலன்டைன்ஸ் டே கிஃப்ட் குடுத்திருக்கேள்னு உங்களை நான் தப்பால்லாம் நெனைச்சுக்க மாட்டேன், கவலைப் படாதீங்கோ,” என்று அவனை நன்றாகக் குழப்பிவிட்டு வேடிக்கைப் பார்த்தாள் அவனுடைய பஞ்சுமிட்டாய்.

“அத்திம்பேர், கிளம்பலாமா? எல்லாரும் நமக்காக காத்துண்டு இருக்கா,” என்று சீனு குரல் கொடுத்தபடியே வந்து நிற்க,
‘இவள் சமாதானம் ஆனமாதிரியா இல்லைன்னா ஆகாதமாதிரியா,’ என்ற குழப்பத்துக்கு நடுவிலும் பரபரப்பு பற்றிக்கொண்டது பரத்துக்கு.

“ரெண்டு நிமிஷம் சீனு, ட்ரெஸ் மாத்திண்டு வந்துடறேன்,” என்று கிளம்பியவனை, “திடீர்னு இப்போ எங்கே புறப்பாடு? அதுவும் இவ்ளோ வெய்யில்ல?” என்று ராதிகா கேட்க,

“சீனுவோட ஃப்ரெண்ட்சோட கிரிக்கெட் விளையாட க்ரவுண்டுக்கு போறேன்,” என்றபடி அறைக்கதவைச் சாத்திக்கொண்டான் உடை மாற்ற.

“ஏண்டா ஊர் வெயிலெல்லாம் உன் தலைல வாங்கிக்கத்தான் சொன்ன பேச்சே கேக்காம ஊர் சுத்தறயே, இதுல அவரையும் எதுக்கு இழுத்து விடற, அவருக்கு இதெல்லாம் பழக்கமிருக்கோ என்னவோ, வெயில்ல விளையாடி ஒடம்புக்கு ஏதாவது வந்துடப்போறதுடா,” என்று தம்பியிடம் படபடத்தாள் ராதிகா.

“நீ சும்மா இருக்கா, இதெல்லாம் ரெண்டு நாள் முன்னாலேயே முடிவான ப்ரோக்ராம், நானும் அத்திம்பேரும் எப்படா விளையாடப்போகலாம்னு அப்போலேருந்து காத்துண்டு இருக்கோம், வெயிலெல்லாம் ஒரு விஷயமா, சரி சரி உன் ஸ்கூட்டியதான் எடுத்துண்டு போறோம், நீ பாட்டுக எப்பவும் போல வண்டியை குடுக்கமாட்டேன்னு அழும்பு பண்ணி அத்திம்பேர் முன்னாடி என்னோட மானத்தை வாங்கிடாத சரியா?” என்று மிரட்டலாக விண்ணப்பமும் வைத்தான் சீனு அக்காவிடம்.

அவனுக்கு பதிலளிக்க வாயைத் திறக்கும் முன் பரத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்துவிட்டான். வெள்ளை நிற அரைக்கை டிஷர்டும், நீல நிற ட்ராக் பேண்டும், தலையில் ஒரு கேப்புமாகத் தயாராகி வந்தவனைப் பார்த்து திறந்த வாயை மூடமறந்து சமைந்து போனாள் ராதிகா.

மனம் வெட்கமே இல்லாமல், “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...” என்று முழு ஆர்கெஸ்ட்ராவுடன் ஹம்மிங் செய்தது.

சுற்றுப்புறம் மறந்து தன்னையே விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளின் முன் மலர்ந்த புன்னகையும், குறும்பு கூத்தாடும் கண்களுமாய் வந்து நின்றவன், அவளுடைய முகத்திற்கு நேராகச் சொடுக்கிட்டு அவளுடைய மோனத்தைக் கலைத்துவிட்டு... “மறக்காம சாக்லேட் சாப்பிடு,” என்று அவளுடைய கையிலிருந்த சாக்லேட்டை கண்ஜாடை காட்டிவிட்டு, ‘போய்வருகிறேன்’ என்பதுபோல் தலையையும் ஆட்டிவிட்டு சீனுவுடன் கிளம்பிவிட்டான்.

நாளொரு அவதாரமும் பொழுதொரு கோலமுமாய் தன் முன் வந்து, தீராத மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு, அதற்கு நான் பொறுப்பல்ல என்று விட்டேத்தியாய் கை விரிக்கும் கணவன் எனும் மாயக்கள்வன் விரித்த மோக வலையில் விரும்பியே சிக்கி நின்றாள் ராதிகா...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top