• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

காதல் கடன் - 20 க்கு லைக்ஸ் அண்ட் கமென்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி. என்னை மாதிரி சைலன்ட் ரீடரா கதையைப் படிக்கிறவங்களுக்கும் நன்றி. உங்களுக்காக காதல் கடன் - 21 இதோ...

சின்ன எபிதான், ஆனால் எழுதுவதற்கு நான் ரொம்ப நேரம் எடுத்துக்கொண்ட எபி இதுவரையில் இதுதான்...பரத்துக்கு ராதிகாவின் மீது மெதுமெதுவாகத் தோன்றிக்கொண்டிருக்கும் ஈர்ப்பை சரியாக கன்வே பண்ணிருக்கேனான்னு எனக்குப் பிடிபடலை...நீங்க எல்லாரும் படிச்சுட்டு சொல்லுங்கோ...இந்த அத்தியாயத்துல ராதிகாவும் பரத்தும் நான் எதிர்பார்த்த அளவுக்கு உங்களை வசீகரிச்சாளான்னு...

காதல் கடன்

(21)

சத்தியம்...
சிவம்...
சுந்தரம்...
சரவணன் திருப்புகழ் மந்திரம்..ம்ம்.
அழகன் முருகனிடம் ஆசை
வைத்தேன்
அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்
அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே
உடல் எடுத்தேன் அவன்
அருளைப் பெறுவதற்கே
உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே
உடல் எடுத்தேன் அவன்
அருளைப் பெறுவதற்கே
உயிர் வளர்த்தேன்
ஆஆஆஆ ஆ.
அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே
பழமுதிர் சோலையிலே

பனி பெய்யும் மாலையிலே
பழமுதிர் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே
கன்னி மனம் கொய்து விட்டான்
கனி கொய்யும் வேளையிலே
கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரெண்டு கண்ணழகைப்
பார்த்திருந்த பெண்ணழகை
பன்னிரெண்டு கண்ணழகைப்
பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல் தான் ஆளவந்தான்
பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான்

அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ
மயில் மேல் வருபவனோ
மலை மேல் இருப்பவனோ
மயில் மேல் வருபவனோ
மெய்யுருகப் பாடி வந்தால்
தன்னைத் தான் தருபவனோ
மெய்யுருகப் பாடி வந்தால்
தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன்
அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன்
அனல் மேல் மெழுகானேன்
அய்யன் கை தொட்டவுடன்
அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன்

அழகன் முருகனிடம்
ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில்
அன்பு மலர் பூசை வைத்தேன்​



மெய்யுருகித்தான் பாடிக் கொண்டிருந்தாள் ராதிகா. மென்மையாகப் பாடிக் கொண்டிருந்தாள்.

கச்சேரி செய்வதுபோல் தொடை தட்டித் தாளம் போட்டு, காதிலிருக்கும் ஜிமிக்கிகள் நடனமாட, முகத்தில் பாவம் காட்டி, கணீரென்ற குரலில் பாடவில்லை அவள்.

கண்களை மூடிக்கொண்டு கேட்டால், கன்னங்களில் மிருதுவாக மயிலிறகால் வருடுவதுபோல் இருந்தது அவளுடைய குரல்.

சாரீரம் என்று அதனைச் சொன்னால் கூட அது அவளுடைய குரலுக்கு வலிமை சேர்த்துவிடுமோ என்று அஞ்சுமளவிற்கு மென்மையான குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.

தேனடையிலிருந்து சொட்டு சொட்டாக இறங்கி வந்து நாவை நனைக்கும் தேன்துளிகள் போன்ற இனிமை அவள் குரலில்.

தேவையில்லாத உடல் அசைவில்லை, ஏன், சுற்றி அமர்ந்திருப்பவர்கள் யாரையும் அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

பாடுகின்ற பாடலில் அவள் எந்த அளவிற்கு மூழ்கிப்போயிருக்கிறாள் என்பது தலை குனிந்து அவள் அமர்ந்திருந்த நிலையிலேயே புரிந்தது.

அவள் ‘மெய்யுருகப் பாடி வந்தால்’ என்று பாடும்பொழுது உண்மையிலேயே அவள் மெய்யுருகுவதைக் கேட்பவர்களால் உணர முடிந்தது, கூடவே அவளுடன் அவர்களுடைய மெய்யும் உருகியது.

‘அனல் மேல் மெழுகானேன்’ என்று அவள் உருகிக் கரைந்தபோது, எங்கே அனலில் கரைத்து காணாமல் போய்விடுவாளோ, அதற்குள் காப்பாற்றவேண்டுமே என்ற தவிப்பு உண்டானது கேட்பவர் மனதில். (இவ்விடம் கேட்பவர் என்று வரும் அத்தனை இடங்களிலும், ராதிகாவின் பெற்றோர் உடன் பிறந்தோரைக் கருத்தில் கொள்ளாமல் பரத் என்று மட்டுமே பொருள் கொள்க)

‘அழகுக்கு அழகானேன்’ என்ற வரியைப் பாடும்பொழுது கந்தன் (கந்தனா இல்லை கள்வனா?) கை பட்டதனால் பார்ப்பவர் கண்களுக்கெல்லாம் தான் பேரழகியாகத் தெரிகிறோம் என்ற பெண்மையின் கர்வம் தொனித்தது அவள் குரலில்.

தனது மென்குரல் என்னும் மந்திரக்கோலால் அனைவரையும் கட்டிப்போட்டிருந்தாள் ராதிகா.

இரவு உணவிற்குப் பிறகு அனைவரும் மொட்டை மாடியில் குழுமியிருந்தனர். இது அவர்கள் வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. அவர்களுக்கு இந்த உணர்வு மிகவும் சகஜமானது என்பதால் அவர்கள் அதனை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால் ராதிகாவின் இசை என்னும் மாயவலையில் சிக்கி, அவள் குரல் தந்த மயக்கத்தில் ஆழ்ந்து நிலைகுலைந்து போனது பரத் மட்டும்தான்.

அவனருகில்தான் அமர்ந்திருந்தாள் ராதிகா. தலையில் அவள் சூடியிருந்த நித்யமல்லிச் சரத்தின் வாசம் வஞ்சனையின்றி அவன் நாசியைத் தீண்டிச் செல்லும் அருகாமை. உடலை இதமாய் வருடிச் சென்றது காவிரியில் பிறந்த தென்றல். இவை தந்த மயக்கத்தில் கண்மூடி சுவற்றில் சாய்ந்து கால்நீட்டி வசதியாக அமர்ந்திருந்தான்.

தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க ராதிகா பாடத் தொடங்க, மனதில் எல்லா நிலைகளிலும் இருந்த எல்லா எண்ணங்களும் ஒரு நொடியில் காணாமல் கரைந்து மறைந்து போயின. அவனுடைய மனம் தேனுக்கு மயங்கி மலரின் மையத்தைச் சுற்றியே சிறகடித்து வட்டமிடும் தேன்சிட்டுபோல் ராதிகாவின் குரலில் தெரிந்த இனிமையில் மயங்கி கட்டுண்டு நின்றது.

இந்தப் பொழுதை நினைவடுக்குகளில் நிறைத்து வைத்துக்கொண்டாலும், மென்மேலும் நினைவுகள் சேரச் சேர இந்நினைவின் அழகு மங்கிப் போய்விடுமோ என்ற பேரச்சம் மனதில் எழ, தன்னவள் அமர்ந்திருந்த கோலத்தையும், அவள் பாடிய பாடலையும் யாருமறியாமல் களவாடித் தனது மொபைல் ஃபோனில் பதிவு செய்துகொண்டான் ராதிகாவின் மாயக்கள்ளன்.

பிற்காலத்தில் இருள்சூழ்ந்த இரவில் நட்சத்திரங்களும் நிலவும் மட்டுமே உடனிருக்கும் தனிமையில், தன்னவளின் துணை தேடி கோடைக்காலச் சூரியனின் கொடும் வெம்மையாய் மனம் தவித்து தகிக்கும் வேளைகளில், தொண்டையில் இதமாய் இறங்கும் ஐஸ்க்ரீமின் இனிமையும் குளுமையும் போல, இந்தக் குரலும் மனதில் இதமாய் இறங்கி, தான் தேடியலையும் நிம்மதியைத் தந்துவிடும் என்று நினைத்தானோ அவள் குரலை தனது கைப்பேசியில் கைது செய்து தனதாக்கிக் கொள்ளும்போது...

“இன்னொரு பாட்டு பாடட்டுமாப்பா?” ராதிகாவின் குரல் அவனுடைய மோனத்தவத்தைக் கலைத்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

பெரிதாக ஒப்பனை எதுவும் செய்துகொள்ளவில்லை ராதிகா.

நெற்றியில் ஒரு குட்டித் திலகம்.

வகிட்டில் தீற்றலாய் குங்குமம்.

காந்தமாய் அவன் மனதைச் சுண்டியிழுக்கும் கதை பேசும் விழிகளுக்கு மைதீட்டி அழகூட்டியிருந்தாள்.

நித்யமல்லியைச் செண்டாகச் சுற்றி தலையில் வைத்திருந்தாள்.

மாலையில் போட்ட பின்னலில் இருந்து முடிக்கற்றைகள் விடுபட்டு வீசும் தென்றலால் சலனப்பட்டு அவளுடைய ரோஜா நிறம் பூசிய பட்டுக்கன்னத்தில் சதிராடிக்கொண்டிருந்தன.

கழுத்தில் புதுத் தாலியுடம் ஒரு மெலிதான சங்கிலி. பாடும்பொழுது அவளிடம் தென்பட்ட ஒரேஒரு சலனம், அந்தச் சங்கிலியுடன் விளையாடிய வெண்டைப்பிஞ்சு விரல்கள் மட்டுமே. தாமரைப்பூ விரல்களுக்கு அழகூட்டிய கல்யாண மருதாணி இன்னும் அவ்வளவாக நிறம் மங்கியிருக்கவில்லை.

லாவண்டர் நிறத்தில் வெள்ளைப்பூக்கள் சிதறிய ஒரு சாதரணமான ஷிபான் புடவை, அவள் அமர்ந்திருந்த விதத்தில் தெரிந்தும் தெரியாமலும் கண்களுக்கு விருந்தாகிய கொடியிடை, புடவை விளிம்பில் ரகசியம் போல் கொஞ்சமே கொஞ்சமாக எட்டிப்பார்த்த முயல்குட்டிப் பாதங்கள். பரத்தின் பார்வை குறும்பு செய்யப்பார்க்கும் குளிர்த்தென்றல் போல ராதிகாவை தலை முதல் கால்வரை வருடிச் சென்றது.

ஏற்கனவே அவளுடைய குரலில் இருந்த இனிமையிலும், பாடலில் தொனித்த காதலிலும் மயங்கியிருந்த மனதிற்கு ராதிகாவின் எழில் தோற்றம் உன்மத்தமேற்றியது. அவனது மேயும் பார்வையை உணர்ந்தது போல் ராதிகாவும் தலையை உயர்த்தி பரத்தின் விழிகளைச் சந்தித்தாள். அந்தப் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று அவளைப் பெரும் நாணம் கொள்ளச் செய்தது. செந்தாமரைப்பூவாக முகம் சிவக்க மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள் அவனுடைய பஞ்சுமிட்டாய்.

அவர்களுடைய இந்தப் பார்வை விளையாட்டை மற்றவர்கள் கவனித்தார்களா என்று அவர்கள் கவனிக்கவில்லை. “போறும் ராதும்மா, இப்போவே நாழியாயிடுத்து, படுத்துக்கொங்கோ,” என்றபடி அனைவரையும் அவ்விடம் விட்டுக் கிளப்பினார் மரகதம். “ஃபிரிஜ்ஜுல பாட்டில்ல ஜலம் நிரப்பி வெச்சிருக்கேன், வந்து எடுத்துக்கோ ராதும்மா, தூங்கப்போறச்சே மொட்டைமாடிக் கதவை மறக்காம பூட்டிடுங்கோ,” என்றபடி அவரும் படியிறங்கத் தொடங்கினார்.

“சரிம்மா, நான் வந்து எடுத்துக்கறேன்,” என்றவள் மெதுவாகத் திரும்பி வந்து பரத்தின் அருகில் நின்றுகொண்டாள். மெல்லிய பூவாசமும், மெலிதான கொலுசொலியும் அவளுடைய அருகாமையை உணர்த்தினாலும், அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. கைப்பிடிச் சுவற்றில் கைகளை ஊன்றியபடி எங்கோ தொலைதூரத்தில் வானத்தை வெறித்தபடி நின்றிருந்தான் பரத்.

“குடிக்கறதுக்கு பால் சூடுபண்ணி கொண்டுவரவா?” பாடியபோது இருந்த குரலின் மென்மை இன்னும் குறைந்திருக்கவில்லை. தென்றலின் தீண்டலாய் நா மறக்க விரும்பாத தீஞ்சுவையாய், மனம் வருடிச்சென்ற அந்த மென்மையை கண்மூடி அனுபவித்தான். பதிலேதும் கூறாமல் சில நொடிகள் மௌனமாகவே நின்றிருந்தான்.

“இல்லை, எனக்கொண்ணும் வேண்டாம், நீ போய் படுத்துக்கோ,” என்றவன் தனது வான்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்தான்.

அவன் விரும்பும் தனிமையை அவனுக்கு வழங்கி அங்கிருந்து விலகி இரண்டடி நகர்ந்தவள், மீண்டும் திரும்பி அவனருகில் வந்து, “ம்ம், நாளைக்கு கார்த்தால கோவிலுக்குப் போலாமா?” என்றாள்.

“நானும் நெனைச்சுண்டுதான் இருந்தேன், ரங்கநாதர் கோவில் மட்டுமில்லை, மத்த எல்லா இடத்துக்கும் நாளைக்கு எல்லாரும் சேர்ந்து போயிட்டு வரலாம்.” என்றான் பரத்.

“கண்டிப்பா போகலாம், அப்பாவுமே சொல்லிண்டு இருந்தார், ஆனா நான் சொல்றது வேறமாதிரி,” என்றாள்.

“வேறமாதிரின்னா?”

“அது...நீங்க கேள்விப்பட்டிருப்பேள், விடியகார்த்தால ரங்கனுக்கு பண்ற அபிஷேகத்துக்கு தினமும் கொள்ளிடத்துல இருந்து ஜலம் கொண்டுவருவா. எனக்குத் நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் அப்பாவோட தினமும் அந்த சமயத்துல கோவிலுக்குப் போய், அபிஷேகமும் விஸ்வரூப தரிசனமும் பண்ணிட்டு வருவோம். அப்பா தினமும் கார்த்தால கோவில்ல பாசுரம் பாடுவார். நாளைக்கு கார்த்தால தோதுபட்டா அப்பாவோட நாமளும் போலாமா?”

ராதிகாவின் குரலில் தொனித்த எதிர்பார்ப்புக்கு மறுப்புத் தெரிவிக்கத் தோன்றவில்லை பரத்துக்கு.

“சரி, போகலாம்.” என்றான்.

“கார்த்தால நாலு, நாலரைக்கு எழுந்து குளிச்சு கிளம்பினாத்தான் சரியா இருக்கும், பரவாயில்லையா? கஷ்டம்னா வேண்டாம், சாயங்காலம் போயிக்கலாம்,”

“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை, கார்த்தலையே போகலாம், இப்போ போய் தூங்கு போ,”

“ம்ம், சீக்கிரம் தூங்கினாத்தான் சீக்கிரம் எழுந்துக்க முடியும்...” என்று ராதிகா இழுக்க

“நீ கீழ போய் குடிக்கறதுக்கு ஜலம் கொண்டுவா, நான் அஞ்சு நிமிஷத்துல வறேன்,” என்று அவளை அனுப்பிவைத்தான்.

தலையை ஆட்டியபடி ராதிகா விலகிச் செல்ல...அவளுடன் சேர்ந்து அவனை விட்டு விலகிச்சென்ற மலர் வாசமும், அவள் செல்லச் செல்ல மெதுவாக ஒலித்து மறைந்த கொலுசின் நாதமும் பரத்தின் மனதை சொல்லவொண்ணா வெறுமையில் ஆழ்த்தியது...
 




Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
இவ்ளோ அழகான எபிசொட் இவ்ளோ சின்னதா போயிடுத்தே. பரவாயில்லை அடுத்த எபிசோடிக்காக காத்திருக்கிறேன்.
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அந்த ரெங்கநாதர் விஸ்வரூப தரிசனத்தை பார்க்க நாங்களும் இருக்கிறோம் யானை மேல் தீர்த்தம் வரும் அழகையும் வெள்ளை புரவி கோமாதா இவர்களுக்கே முதல் காட்சி தருவார் அந்த ரங்கர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top