• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 8 Full Episode

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்
(8)

அத்திம்பேரிடம் பேசி லேசாகத் தெளிந்திருந்த மனம் ராதிகாவின் நடவடிக்கையால் மறுபடியும் குழம்பிப் போனது. “சரிதானே, அம்மாவும், நந்துக்காவுமே நான் சொல்லறதை காது குடுத்துக் கேக்க தயாரா இல்லை, இன்னிக்கி வந்த பொண்ணு கேக்கணும்னு நான் எதிர்பார்த்தது என்னோட தப்புதான்...ஆனாலும் இத நான் எதிர்பார்க்கவே இல்லையே...ஒண்ணு என்னோட சட்டையப் பிடிச்சு ஏன்டா என்னோட வாழ்க்கைய கெடுத்தேன்னு கேட்டிருக்கணும், இல்லைன்னா மனசு வருத்தப்பட்டு அழவாவது அழுதிருக்கணும், ரெண்டும் இல்லாம, யாரோ சொந்தக்காரா ஆத்துக்கு கெஸ்டா போனாமாதிரி எங்க தூங்கறதுன்னு கேட்டு படுத்துண்டு தூங்கியே போயிட்டாளே...பொறத்தியார் ஆத்துல, முன்ன பின்ன தெரியாத ஆம்பளையோட ஒரே ரூம்ல இருக்கோமேங்கற பயம் கூட இல்லையா இவளுக்கு?” என்று ஏகத்துக்கும் குழம்பிக்கொண்டிருந்தான் பரத்.

“இந்த சீரியல்ல, சினிமால எல்லாம் காட்டறா மாதிரி, ஆத்துக்காரன் சேர்ந்து வாழமாட்டேன்னு சொல்லிட்டா தரையில போர்வைய விரிச்சுண்டு படுத்துண்டு தூங்குவாளே, இந்த ஹீரோயின் எல்லாம், அது மாதிரி எல்லாம் பண்ணாம, என்னோட ரூம்ல இருந்து என்னையே வெளியே தொரத்திட்டு, என்னோட பெட்ல நிம்மதியா தூங்கறா...இப்போ நான் என்ன பண்ண?” என்று யோசித்தவனுக்கு, தன்னுடைய அறையாகவே இருந்தாலும், உள்ளே செல்லத் தயக்கமாக இருந்தது. செய்வதறியாது, அத்திம்பேருக்கு போன் போட்டான்.

இரண்டு நாட்களாய் திருமண வேலைகளைப் பார்த்த அசதியிலும், பரத் செய்த டென்ஷன் காரணமாகவும் தூங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நந்தினியை மார்பில் சாய்த்து தூங்கச் செய்துகொண்டிருந்தார் ஸ்ரீராம்.

பரத்திடமிருந்து போன் வருவதைப் பார்த்து, “நந்தும்மா, போன் வர்றதுடா,” என்று கூறி அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு, நகர்ந்து வந்து போனை எடுத்தவர், “என்னடா பரத், அடி பலமா? டாக்டருக்கு ஏதாவது போன் பண்ணனுமா?” என்று நக்கலடித்தார்.

“கிண்டல் பண்ணாதீங்கோ அத்திம்பேர், நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன், “ என்று மறுமுனையில் பரத் பல்லைக் கடிக்க, “பின்ன என்னடா, பர்ஸ்ட் நைட் ரூமுக்குப் போயிட்டு, அத்திம்பேருக்கு போன் பண்ற முதல் ஆளு நீயாதான் இருக்கணும்...என்ன? ஏதாவது டவுட்டா? தயங்காம கேளு, எனக்கு தெரிஞ்சத சொல்லித்தரேன்...”என்றார் கேலியாக.

“ஒண்ணும் தேவையில்லை, நான் போனை வைக்கிறேன், உங்களுக்குப் போயி போன் பண்ணினேன் பாருங்கோ என்னைச் சொல்லணும்,” என்று போன் வைக்கப் போனவனை, “டேய், கண்ணா, வெச்சுடாதடா, சாரி, சாரி கிண்டல் பண்ணலை, என்ன விஷயம் சொல்லு, எதுக்கு போன் பண்ணினே?” என்று சீரியசாகக் கேட்டார்.

நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் விவரித்த பரத், “இப்போ நான் என்ன பண்ணட்டும், அத்திம்பேர் நீங்களே சொல்லுங்கோ?” என்றான்.

“அவ்வளவுதானே, நீயும் போயி படுத்துண்டு தூங்கு, இதுல என்ன சந்தேகம் உனக்கு?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார் ஸ்ரீராம். “ஐயோ, அந்தப் பொண்ணு தூங்கிண்டு இருக்கா அத்திம்பேர் என்னோட பெட்ல, நானும் போயி எப்படி அங்கேயே தூங்கறது?” என்றான் அறைக்குள்ளே எட்டிப் பார்த்தபடி.

“ஏண்டா, அவளால உன்னோட கற்புக்கு ஏதாவது ஆபத்து வந்துடும்னு பயமா இருக்கா? பரவாயில்லடா, எப்படி இருந்தாலும், ஆத்துக்காரிதானே, அப்படியே ஆபத்து வந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டா, நீ போயி தைரியமா தாச்சுக்கோ போ,” என்றார்.

ஸ்ரீராமின் கிண்டல் தாங்காது தலையில் அடித்துக்கொண்டவன், “உங்களுக்கு என்ன ஆச்சு அத்திம்பேர், ஏன் இப்படியெல்லாம் பேசறேள், நான் சொல்ல வர்றது புரியலையா இல்ல புரிஞ்சுண்டும் உங்க டைம்பாசுக்காக என்னை கிண்டல் பண்ணிண்டு இருக்கேளா?” என்றான் சிறிது கடுமையாக.

அவன் மனம் புரிந்தாலும், அவனாகவே கூறவேண்டும் என்று எண்ணியவர், “இப்போ என்னதான் பண்ணனும்கிற? நீயே சொல்லுப்பா,” என்க, “பொண்களுக்கு எப்பவுமே இந்த செக்யூரிட்டி இன்ஸ்டின்க்ட்ஸ் (Security Instincts) கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும். எங்கேயும் போயி என்ன வேலையானாலும் செஞ்சுடுவா, ஆனா ஒரு புது இடத்துல தூங்கறதுக்கு முன்ன ஒரு தடவைக்கு நாலு தடவை செக்யூரிட்டியைப் பத்தி யோசிப்பா. ஆனா இந்த பொண்ணு, என்னதான் கோபமா பேசினாலும், வேத்திடம் அப்படிங்கற ஒரு உணர்ச்சியே இல்லாம, படுத்துண்டு சட்டுனு தூங்கிட்டா, அவ பக்கத்தில போயி படுத்துண்டு தூங்க நேக்கு தயக்கம் ஒண்ணும் இல்லை, ஆனா அது அந்த பொண்ணை சங்கடப்படுத்திடுமோன்னு யோசனையா இருக்கு. சரின்னு கௌச்லையோ, சோஃபாலையோ தூங்கவும் ஈகோ ஒத்துக்க மாட்டேங்கறது, ரொம்ப டயர்டா இருக்கு, அத்திம்பேர்,” என்றான் சோர்வாக.
“நீ கொஞ்சம் ஓவராவே யோசிக்கறயோன்னு தோணறது பரத், இதையெல்லாம் பத்தி கவலைப்பட வேண்டிய அந்த பொண்ணே நிம்மதியா தூங்கிண்டு இருக்கா, நீ ஏன்பா மண்டையை உடைச்சுக்கறே, பேசாம நீயும் போயி படுத்துண்டு தூங்கு...” என்று பேசிக்கொண்டே இருக்கையில், அவர் கையிலிருந்து போன் பிடுங்கப்பட்டது, பொறுமையற்றுப் போன நந்தினியால்தான்...

“டேய் பரத், இந்த நேரத்துல என் ஆத்துக்காரரோட உனக்கு என்னடா பேச்சு? பர்ஸ்ட் நைட்ல புது பொண்டாட்டிய விட்டுட்டு அத்திம்பேரோட அரட்டை அடிச்சுண்டு இருக்கே, பேசாம போயி தூங்குடா இல்லைன்னா நான் வருவேன் இப்போ ஹாக்கி பேட் எடுத்துண்டு...உன் மண்டைய ஓடைக்க...தூக்கம் வரதுடா...” என்று காட்டமாய் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தாள் நந்தினி.

“உன்னை யாருடி தூங்கவேண்டாம்னு சொன்னது, நீ பாட்டுக்க தூங்க வேண்டியதுதானே, உன்னை யாரோ கையப் பிடிச்சு தடுத்தாமாதிரி கத்திண்டு இருக்கே, மனுஷனோட டென்ஷன் புரியாம...” என்று அவன் எகிற, ஏதோ பிரச்சினையோ என்றெண்ணி கணவனிடம் என்ன என்பதுபோல் தலையை கேள்வியாய் உயர்த்தினாள்.

அவரும் சிரித்த முகமாய் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்ட...நிம்மதியானவள்... “தலைகாணி இல்லாம எப்படிடா தூங்கறது, நீதான் என்னோட தலைகாணியோட அர்த்தராத்திரியில அரட்டை அடிச்சுண்டு இருக்கியே...எனக்கு வர்ற கோபத்துக்கு...மரியாதையா போனை வெச்சுட்டு போய் தூங்கு, போனை வைடா...” என்று திட்டிய அக்காவின் பேச்சைக் கேட்டு தன் குழப்பங்களையும் மீறி சிரிப்பு வந்தது பரத்துக்கு. “போம்மா, போ... உன்னோட தலகாணிய அழைச்சுண்டு போய் நன்...னா தூங்கு...” என்றுவிட்டு போனை ஆப் செய்தான் பரத்.

நந்தினியும் ஸ்ரீராமின் சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் மீண்டும் சேம் பொசிஷனில் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள். மார்பின் மீது தலை வைத்திருந்த மனைவியின் கூந்தலை மெல்ல வருடி “நந்து குட்டி, உங்க அம்மா ஜீனியஸ்டி,” என்று கூறிய கணவனின் நெஞ்சிலே மேலும் நெருக்கமாய்ப் புதைந்து கொண்டு, “ம்ம்...தெரியும், தெரியும், இருந்தாலும் நீங்க சொன்னேள்னு கார்த்தால நான் அம்மாகிட்ட சொல்றேன்,” என்று தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

ஸ்ரீராமுடன் பேசிய பிறகும் பரத்தின் மனதிலிருந்து தயக்கம் நீங்கவில்லை, சிறிது நேரம் பால்கனியிலே நின்றிருந்தவனை காலையிலிருந்து திருமணம், வேலை என்று ஓயாமல் அலைந்த அசதி வெகுவாய் அழுத்த அறைக்குள் நுழைந்தான். அத்திம்பேர் கூறியது போல படுக்கையின் இன்னொரு பக்கம் படுத்துக்கொள்ள ஏனோ அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், அறையின் சிட்டிங் ஏரியாவில் இருந்த ஒரு சோபாவில் அமர்ந்து டீப்பாய் மேலே கால்களைப் போட்டுக்கொண்டு அமர்ந்தவிட்டான். சில கணங்களில் எல்லா எண்ணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நித்ரா தேவியும் அவனை சுகமாய் ஆட்கொண்டாள்.
*********​
யாரோ தன்னைத் தட்டி எழுப்பியது போன்ற உணர்வு ஏற்பட ராதிகாவிற்கு சட்டென்று விழிப்பு தட்டியது. ஒரு நொடி அவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. பிறகுதான் அவள் தன் வீட்டில் இல்லை என்பதும், சென்னையில் கணவன் வீட்டில் இருக்கிறோம் என்பது உரைக்க, சட்டென்று திரும்பி படுக்கையின் மறுபக்கத்தைப் பார்த்தாள். காலியாக இருந்தது. அப்போதுதான், இரவு அவள் பரத்திடம் பேசியதும், அதன் பின்னர் அவன் பால்கனிக்குச் சென்றதும் நினைவுக்கு வந்தது.

“எங்கே இவரைக் காணோம், ஆனாலும் கொஞ்சம் அதிகமாத்தான் பேசிட்டேனோ, கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம, இப்படி தூபரதண்டி மாதிரி படுத்துண்டு தூங்கிருக்கேனே அவர் என்னைப் பத்தி என்ன நெனைச்சிருப்பார். படுக்கையில படுத்துண்டு தூங்கலைன்னா எங்கே போயிருப்பார்? ஒரு வேளை பால்கனிலேயே தூங்கிடாரோ, ஐயோ ஒரே குளுரா இருந்திருக்குமே...ச்சே ஏன்தான் இப்படியெல்லாம் பண்ணறேனோ?” என்று தன்னைத்தானே சாடியபடி படுக்கையறையை விட்டு வெளியே வந்தவளுக்கு சோஃபாவில் அமர்ந்தபடியே தூங்கும் பரத்தைப் பார்த்து ‘ஐயோ’ என்றாகிப் போனது.

“சீ பாவம், என்னாலதான் இவர் இப்படி சோஃபால தூங்கவேண்டியதா ஆயிடுத்து. எழுப்பி வேணா படுக்கையில படுத்துண்டு தூங்கச் சொல்வோமா?” என்று யோசித்தவள், எப்படி எழுப்புவது என்று தயக்கமாய் இருக்க அவனை அப்படியே தூங்குவதற்கு விட்டுவிட்டாள்.

தாய் எடுத்து வைத்திருந்த மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவள், குளித்துவிட்டு வெளியே வந்து பார்க்கையில் பரத் சோஃபாவில் இல்லாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். மனதில் லேசான திருப்தியுடன், அதிக சப்தம் செய்யாமல், அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். வீடே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

மெதுவாகக் கீழே இறங்கி வந்தவள், அம்மாவின் அறைக்குச் சென்று பார்க்க, அவர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார், அவரை எழுப்ப மனமில்லாமல், அறையை விட்டு வெளியே வந்தவள் சமையலறையில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டு இருந்ததைக் கண்டாள். தயக்கத்தோடு உள்ளே நுழைந்தவளை புதிதாகப் போட்ட டிகாக்ஷன் மணம் வரவேற்றது. ஆழ்ந்த மூச்சுடன் புது டிகாக்ஷனின் மணத்தை உள்ளிழுத்துக்கொண்டே சமையலறைக்குள் வந்த ராதிகாவை “குட் மார்னிங், ராதும்மா...என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டே, மணி அஞ்சுதானே ஆறது” என்று அங்கு காபி குடித்துக்கொண்டிருந்த பர்வதம் வரவேற்றார்.

அவரைப் பார்த்து சங்கோஜமாக புன்னகைத்த ராதிகா, மெல்லிய குரலில், “இல்லைம்மா, நேக்கு எப்போவுமே சீக்கிரம் எழுந்து பழக்கம்தான். அதனால தன்னால முழிப்பு வந்துடுத்து.” என்று கூறினாள்.

“காபி குடிக்கிற பழக்கம் இருக்குல்லியா? இல்லன்னா வேற என்ன குடிக்கிற?” என்று கேட்டபடியே எழுந்தவரிடம், “ம்ம், குடிப்பேன்மா, கார்த்தால காபி குடிச்சாதான் முழுசா முழிச்சுண்ட மாதிரியே எனக்கு. நீங்க உக்காருங்கோம்மா, நானே போட்டுக்கறேன்,” என்று காபி போடப்போனவளைக் கைப்பிடித்து சேரில் உட்காரவைத்து, “இரு நான் போட்டு குடுக்கறேன், எவ்வளவு சக்கரை போடட்டும்” என்றபடி காப்பி கலக்க முற்பட்டார். “ஒரு ஸ்பூன் போறும்மா,” என்றவளின் கையில் ஆவி பறக்கும் காப்பியை கொடுத்தவர், தானும் இன்னொரு காபியைக் கலந்துகொண்டு அவளுடன் அமர்ந்துகொண்டார்.

“காபி சாப்பிடற இந்த கொஞ்ச நாழிதான் நமக்கு கிடைக்கப்போற ஃப்ரீ டைம், இன்னிக்கி நெறைய்ய வேலை இருக்கும்மா ராது, பரத்தோட குரு வரப்போறார், ஏழு மணியில இருந்து எட்டு மணி வரை குரு ஹோரை இருக்கு, அந்த டைம்ல பரத் ருத்ர ஹோமம் பண்ணனும்னு சொல்லிருக்கார், நீயும் அவனோட சேர்ந்து சங்கல்பம் பண்ணிக்கணும், அதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணனும், கீது இப்போதான் வாசல்ல கோலம் போட்டுட்டு குளிக்க போனா, நீ தோட்டத்துல போயி பூ பறிச்சுண்டு வா, நான் பூஜை ரூம் சுத்தம் பண்ணிடறேன், இன்னும் அரைமணி நேரத்துல எல்லாம் ரெடியா இருக்கலைன்னா உன் ஆத்துக்காரன் துர்வாசன் இருக்கானே வந்து ருத்ர தாண்டவமே ஆடிடுவான்.” என்றபடி ஒரு பூக்குடலையை அவள் கையில் கொடுத்துவிட்டு பூஜையறையைச் சுத்தம் செய்ய விரைந்தார்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
பூக்கூடையை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றவள், அங்கிருந்த ரம்யமான சூழலில் இதயம் தொலைத்தாள், தை மாதத்து குளிரில், மென்மையான பூவாசமும், இன்னும் விடியாத அரையிருள் சூழலும், மனதை மயக்க, பூக்களைப் பறிக்காமலேயே தோட்டத்தை ஒரு முறை சுற்றி வந்தாள். மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பிங்க் ஆரஞ்சு என்று பல்வேறு நிறங்களில் செம்பருத்திப் பூக்களும், அரளி, நந்தியாவட்டை, கொழக்கட்டை மந்தாரை, முல்லை, ஜாதி, பவளமல்லி, சம்பங்கி, சாமந்தி என்று ஒரு நந்தவனமே இருந்தது. பவளமல்லி தரையில் உதிராமல் இருக்க மரத்தைச் சுற்றி நெட் கட்டி விட்டிருந்தார்கள். கூடவே மா, கொய்யா, சப்போட்டா, தென்னை என்று பல்வேறு மரங்களும் இருந்தன.

இதழ் பிரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்த பனியில் நனைந்த மலர்களை எல்லாம் சேகரித்து எடுத்துக்கொண்டவள், கூடை போதாமல் போகவே புடைவை முந்தானையிலும் பூக்களை வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அதற்குள் வீட்டில் பெரும்பாலும் அனைவரும் எழுந்து அவ்விடமே கலகலப்பாக ஆகியிருந்தது. அனைவருக்கும் காபி பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க, பரத்தும் குளித்துவிட்டு கீழே வந்திருந்தான்.

எட்டு முழம் பட்டு வேஷ்டியை பஞ்சகச்சமாகக் கட்டிக்கொண்டு, அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டியிருந்தான். பூஜை அறையில் அமர்ந்து சத்யோஜாதி மந்திரத்தை உச்சரித்து பஸ்மோத்தாரணம் (வீபூதிப் பட்டை) செய்துகொண்டிருந்தான். பூக்களை பூஜையறையில் வைக்கவந்த ராதிகா அவனைக் கண்டதும் தயங்கி நிற்க, அவனோ அவளை நிமிர்ந்து பார்த்தவன், உள்ளே வருமாறு சைகை செய்தான்.

கொண்டுவந்திருந்த பூக்களை வகைவாரியாகப் பிரித்து அங்கிருந்த தாம்பாளத்தில் வைத்துவிட்டு வெளியேற முற்பட்டவளை, “விளக்கேத்திட்டு போ” என்ற அவனது குரல் நிறுத்தியது. “இல்லை அம்மா ஏத்துவாளோன்னு...” என்று இழுத்தவளை, “அம்மா வேலையா இருக்கா, நாழியாயிடுத்து, நீயே ஏத்திடு” என்று கூறிவிட்டு பஞ்சபாத்திரத்தை எடுத்துகொண்டு சந்தியாவந்தனம் செய்ய பூஜையறையை விட்டு வெளியேறினான் பரத்.

இரண்டு பெரிய வெள்ளிக்குத்து விளக்குகளும், இரண்டு நிலைகளில் ஒவ்வொரு காமாட்சி விளக்கும் இருக்க, மாமியாரின் அனுமதியின்றி விளக்கேற்றலாமா கூடாதா என்ற குழப்பத்தில் நின்றிருந்தவளை, “உன் கையால இன்னிக்கி விளக்கேத்தும்மா ராதிகா” என்றபடி பூஜையறைக்குள் நுழைந்த பர்வதம் மாமி, எது நெய்விளக்கு, எது எண்ணை விளக்கு என்று சுட்டிக்காட்டி விளக்கேற்றும்படி பணித்தார். “அப்படியே தலையத் தொடைச்சு நுனி முடி போட்டுக்கோ, பின்கட்டுல உனக்கு மடி ஒணத்தியிருக்கேன், எடுத்து மடிசார் கட்டிண்டு வா,”என்று கூறியவர், “நம்பாத்து கட்டு கட்டிக்க தெரியுமில்லையா?” என்றும் கேட்டார், அதற்குத் தலையை ஆட்டிய ராதிகா, “தெரியும்மா, அம்மா சொல்லி குடுத்துருக்கா,” என்றுவிட்டு புடைவை மாற்றச் சென்றாள்.

kempu attigai.jpg

kempu valaiyal.jpg

ஸ்டோர் ரூமில் உடை மாற்றிக்கொண்டு வந்தவள் கழுத்தில் ஒரு கெம்புக்கல் அட்டிகையையும், கைகளில் நான்கு கெம்பு வளையல்களையும் போட்டுவிட்ட பர்வதம், “போம்மா, பரத் ஹோமத்துக்கு கலசம் ரெடி பண்ணிண்டு இருக்கான், நீ தேங்காய்க்கு மஞ்சள் தடவி வெச்சுட்டு ஹோமகுண்டம் வெக்கிற எடத்துல கோலம் போட்டுட்டு வா, அப்படியே சமையலறை டேபிள்ள பூ வெச்சிருக்கேன் எடுத்து தலையில வெச்சுண்டுடு,” என்று அனுப்பி வைத்தார்.

காலையில் எழுந்ததிலிருந்து ராதிகாவைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டிருந்த மரகதம், சமையலறையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த மகளைப் பார்த்து சிலையாய்ச் சமைந்து நின்றுவிட்டார். பச்சையில் சிவப்பு பார்டர் போட்ட ஒன்பது கஜம் புடவையை கச்சிதமாக மடிசார் கட்டி, கூந்தலை குடலைப் பின்னல் போட்டு, நுனி முடிந்து, அதில் நித்யமல்லிச் சரத்தைச் சூடியிருந்தாள். மஞ்சள் பூசிய முகத்தில் அளவாய்ப் பொட்டிட்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, கழுத்தில் மின்னிய புதுத் தாலியுடனும் மாமியார் அணிவித்த அட்டிகையுடனும் பார்ப்பதற்கு செப்புச் சிலை போல் இருந்தாள் ராதிகா.

“அம்மா, புடவை சரியா கட்டிண்டு இருக்கேனா?” என்று முன்னும் பின்னும் திருப்பிக் காட்டிய மகளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் “அழகா கட்டிண்டு இருக்கேடி கண்ணா, என் சமத்து,” என்றவர், “அது சரி, மாப்பிள்ளைக்கு காப்பி குடுத்தாச்சா?” என்று கேட்க, அப்பொழுதுதான் பரத்திற்கு காபி கொடுக்கவேண்டுமென்ற எண்ணமே ராதிகவிற்குத் தோன்ற, குற்றமாக இல்லை என்பது போல் தலையசைத்தாள். “நல்ல பொண்ணு போ, முதல்ல போயி மாப்பிள்ளைக்கு காபி கொண்டுவந்து கொடு, இப்படி எனகென்னன்னு இருக்கப்படாது பாத்துக்கோ, கொஞ்சம் பொறுப்பா இரு,” என்று கூறி அனுப்பினார்.

வேகமாக சமையலறைக்குள் நுழைந்த ராதிகா, பர்வதத்தின் முன்னால் தயக்கத்துடன் சென்று நின்றாள், ”என்ன?” என்பது போல் தலையுயர்த்திய மாமியாரிடம், “அம்மா, அவருக்கு காபி...” என்று இழுக்க, “அவருக்குன்னா யாருக்கும்மா?” என்று அவர் குறும்பாய்க் கேட்க, “அதாம்மா உங்க பிள்ளைக்கு,” என்று வெட்கத்துடன் பதிலளித்தவளை இன்னும் சீண்டும் நோக்கத்துடன், “யாருக்கு ராகவனுக்கா, அவன் அப்போவே காபி குடிச்சுட்டானே...கீதா நீ ராகவனுக்கு காபி கொடுத்தாய்தானே” என்று தன்னருகில் நின்றிருந்த கீதாவிடம் கேட்க, கீதாவும் நமுட்டாய் சிரித்தபடி “ஆச்சும்மா, ரெண்டாவது காபியும் ஆச்சு,” என்று கூறினாள், உடனே ராதிகா “அவருக்கில்லைம்மா, உங்க ரெண்டாவது பிள்ளைக்கு,” என்று முகம் சிவக்க தலைகுனிந்து வார்த்தைக்கே வலிக்குமோ என்று கூறிய மருமகளைப் பார்த்து “ஓ, பரத்துக்கா, குடுக்கலாமே...இதோ அவனுக்குதான் கலந்துண்டு இருக்கேன், இந்தா கொண்டு போய் குடு,” என்று ஆற்றிக்கொண்டிருந்த காப்பியை அவள் கையில் கொடுத்து, “சூடு ஆறரதுக்குள்ள குடிக்கச்சொல்லு” என்றும் கூறி அனுப்பினார்.

பூஜையறைக்கு முன்னால் இருந்த இடத்தில் ஹோமத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து செய்துகொண்டிருந்தனர். பரத் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு கலசக் குடத்தைச் சுற்றி வெள்ளை நூலைச் சுற்றிக்கொண்டிருந்தான்.
fcd73ad1a1b82b0f7c062ae153317ef7.jpg
கையில் காபியோடு அவன் முன் சென்ற ராதிகா அவனை எப்படிக் கூப்பிடுவது என்று தயங்கி நின்றிருக்க, தன் பார்வை வட்டத்தில் தோன்றிய மருதாணியிட்ட புதுமெட்டி போட்ட கொலுசுப் பாதங்களைக் கண்டு தலையை நிமிர்த்தி, “என்ன?” என்பது போல் புருவம் உயர்த்தினான், பளிச்சென்று நெற்றியில் விபூதிப்பட்டை போட்டு தீட்சண்யமாக இருந்த முகத்தைப் பார்த்தவளுக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை, இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு “காபி” என்று கையில் இருந்த டபரா டம்ப்ளரை அவன் முன் நீட்டினாள்.

பரத்தும் முணுமுணுத்துக்கொண்டிருந்த மந்திரத்தை நிறுத்தாமல் அதை அவனருகில் வைக்குமாறு சைகை செய்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான், இன்னும் சில நொடிகள் கடந்து தலையை நிமிர்த்தியவனின் கண்களில் இன்னும் நின்றுகொண்டிருந்த ராதிகாவின் கால்கள் படவே, “இன்னும் என்ன?” என்பதுபோல் அவளைப் பார்த்து தலையை உயர்த்தினான், “சூடு ஆறிடும்,” என்று அவனருகில் வைத்திருந்த காபியைச் சுட்டிக்காட்டி கூறினாள் ராதிகா.

உடனே அருகிலிருந்த காப்பியை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு, “போதுமா?” என்பதுபோல் அவளைப் பார்த்தான் பரத்...”ஐயோ ரொம்ப சூடு...” என்று மனம் பதைத்தாலும் வேலை முடிந்தது என்பது போல தலையை மீண்டும் குனிந்து வேலையைத் தொடர்ந்தவனிடம் எதுவும் சொல்லாது அங்கேயே நின்றாள், மீண்டும் தலை உயர்த்தியவனின் முன் நகராமல் நின்றிருந்தவளை “இப்போது என்ன? என்பதுபோல் முறைக்க, “ஹோமகுண்டத்துக்கு கோலம் போடணும், எங்கே போடணும்னு சொன்னேள்னா...” என்றவளுக்கு தன் முன்னே இருக்கும் இடத்தைக் கைகாட்டிவிட்டு மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான் பரத்.

அவன் காட்டிய இடத்தில் செம்மண்ணிட்டு படிக்கோலம் போட்டு முடித்துவிட்டு விலகியவளை, “ஒரு நிமிஷம்,” என்ற பரத்தின் குரல் நிறுத்தியது, இப்போது “என்ன?” என்பது போல் ராதிகா அவனைப் பார்க்க, “இந்தா இந்த தோண்டிய (சிறு குடம்) எடுத்துண்டு போயி பின்னாடி கிணத்துல இருந்து தண்ணி இறைச்சுண்டு வா, கலசத்துல நிரப்பணும்,” என்றான்.

கூறிய மாத்திரத்தில் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல், அவன் வேலையில் மும்முரமாகிவிட, ராதிகா மௌனமாக தோண்டியைத் தூக்கிக்கொண்டு கிணற்றடிக்குச் சென்றாள். நீரிறைத்துக்கொண்டு திரும்பி வந்தவள், தோண்டியை வைத்துவிட்டு இன்னும் போகாமல் நின்றிருப்பதைக் கண்டு, “இப்போ என்ன?” என்று பரத் சிடுசிடுக்க, “கலசத் தேங்காய்க்கு மஞ்சள் பூசணும்னு அம்மா சொன்னா, எந்த தேங்காய்ன்னு சொல்லுங்கோ,” என்றவளை முறைத்துக்கொண்டே இரண்டு தேங்காய்களைக் கொடுக்க, “சும்மா ஏண்டா அந்தபொண்ணு மேல வள்ளுன்னு விழறே, பூஜை ரூம்குள்ள மஞ்சள் டப்பா இருக்கு, எடுத்துக்கோம்மா,” என்று அவனுடன் அபிஷேகத்திற்குத் தயார் செய்துகொண்டிருந்த ராகவன் பரிந்துகொண்டு வந்தான். அண்ணனை ஒரு முறை முறைத்துவிட்டு பரத் கையிலிருந்த கலசக் குடத்தை ‘ணங்’ என்று கீழே வைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான் பரத்.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு என்கிட்டே இப்படி சிடுசிடுங்கறார், அவருக்குத்தானே உதவி பண்ண வந்தேன். இவர் எப்போவுமே இப்படித்தானா எல்லாரன்டையும் வள்ளுவள்ளுன்னேதான் விழுவாரா? அம்மா துர்வாசர்னு சொன்னது கரெக்ட்தான், எப்படி கட்டி மேய்க்கப்போறேனோ, ரங்கா...நீதான் காப்பாத்தணும்,” என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே தேங்காய்க்கு மஞ்சள் பூசிக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் பரத்தின் குருவாகிய திரு. வைத்தியநாதன் அவர்கள் வந்துவிட, வீடே பரபரப்பைத் தத்தெடுத்துக் கொண்டது. சமையலறையில் பர்வதத்துடன் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள் ராதிகா, வேகமாக அங்கு வந்த பரத், “அண்ணா வந்துட்டார்மா, அவளை அனுப்பு,” என்று கூறிவிட்டு திரும்பியும் பாராமல் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான், “உன்னைத்தான் கூப்பிடறான் ராதிகா, போம்மா,” என்று பர்வதம் கூறவும்தான் பரத் கூறிய ‘அவள்’ தான்தான் என்று ராதிகா உணர்ந்தாள். கோபம் ‘சுர்றென்று’ ஏறியது ராதிகாவிற்கு. “ஏன்? பேர் தெரியாதாமா இவருக்கு, அதென்ன அவ இவன்னு கூப்பிடறார், கொஞ்சம் கூட மேனர்சே இல்லை,” என்று அவனை வைதபடியே பரத்தைப் பின்தொடர்ந்தாள். ஆனாலும் சபை மரியாதை கருதி கடுகடுவென இருந்த முகத்தை சுமுகமாக்கிக்கொண்டு பரத்தைப் பின்தொடர்ந்தாள்.

பரத்தின் முகம் தீட்சண்யம் என்றால், அவனுடைய குரு அதிதேஜஸ்வியாக இருந்தார். அவரைக் கண்டதும் வாசல் என்றும் பாராமல் அஷ்டாங்கமாகக் காலில் விழுந்தான் பரத். அவன் அப்படிச் செய்வான் என்றும் கிஞ்சித்தும் எதிர்பாராத ராதிகா, என்ன செய்வதென்று அறியாமல் தயங்கி நின்றாலும் சற்று சுதாரித்து, அவளும் அவருக்கு பஞ்சாங்க நமஸ்காரம் செய்தாள்.

அவரும் “ஷதமானம் பவதி; ஷதாயுப்புருஷ; ஷதேந்த்ரிய; ஆயுஷ்ஷேவேந்த்ரியே ப்ரதி திஷ்டதி” (நூறாண்டுகாலம் அனைத்து இந்திரியங்களும் ஆரோக்கியமாகச் செயல்பட்டு, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து புலன்களும் ஆரோக்கியமாக இருந்து, உடல்ரீதியான, மனவியல் சார்ந்த, சமூக மற்றும் ஆன்மீக வாழ்க்கைமுறையை செவ்வனே பின்பற்றி நீடூழி வாழ்க) என்று வாழ்த்தினார்.

பின்னர் அவருக்குப் பாதபூஜை செய்து அவரை சகல மரியாதையுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். வீட்டினுள்ளே சென்றவர் நேராகப் பூஜையறைக்குச் சென்று பகவானைச் சேவித்து, பின்னர், பர்வதம் மாமியைப் பார்த்து, “படி பூஜைக்குத் தேவையானதெல்லாம் ரெடியம்மா? எடுத்துண்டு வாங்கோ,” என்று கூறியவிட்டு, “பரத், நீ உன் ஆம்படையாளை அழைச்சுண்டு வா, நிலைப்படிக்கு பூஜை பண்ணணும், அங்க ரெண்டு ஆசனம் போடு,” என்று பணித்தவர், “அம்மா, பெரிய நாட்டுப்பொண்ணு, நீ துளசி பூஜைக்குத் தேவையானதை ரெடி பண்ணிக்கோ, உனக்கு பத்து நிமிஷம் டைம், உன் ஒர்ப்படிக்கு நீதான் பூஜை பண்ணி வைக்கணும்,” என்று கூறிவிட்டு வாசல் நோக்கி விரைந்தார்.
 




Last edited:

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
வீட்டு வாசலில் இருவரையும் ஆசனமிட்டு அமரவைத்தவர், அதற்கான மந்திரங்களைச் சொல்லி தூபம் தீபம் காண்பித்து, தாம்பூலம் நெய்வேத்யம் செய்து நிலையின் இரு பக்கமும், உத்திரணியால் பாலும், தீர்த்தமும் வார்க்கச் செய்து ராதிகாவை நிலைப்படியின் இரு பக்கத்திலும் மஞ்சள் குங்குமம் வைக்கச் சொன்னார்.

நிலைவாசலின் அகலத்திற்குள் இருவரும் உட்கார வேண்டி இருந்ததால், இடம் கொஞ்சம் நெருக்கடியாகவே இருந்தது. அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் ஒட்டியே அமர வேண்டிய சூழ்நிலையில், பரத்தின் இடது பக்கம் அமர்ந்திருந்த ராதிகாவின் வெற்றிடையில் (மடிசார்ல வலது பக்கம்தான் ப்ரீ ஷோ) பரத்தின் முட்டி அவள் குனிந்து பூஜை செய்யும் ஒவ்வொரு முறையும் உரச, பார்வையாளர்களாக நின்றிருந்த குடும்பத்தினர் அனைவரின் முன்னாலும் எதையும் செய்யவோ சொல்லவோ முடியாமல் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் ராதிகா. பரத் இதை உணர்ந்தானோ என்னவோ தெரியாது, ஆனால் பூஜை செய்து முடியும் வரையில் இந்த இம்சை தொடர்ச்சியாகத் தொடர்ந்தது. அவன் முகத்திலோ எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல், குரு கூறுவதை கடமையாகச் செய்துகொண்டிருந்தான் நம்ம ஜடம் , வெள்ளிக் கொடம்.

ஒருவழியாக படி பூஜை முடிந்து எழுந்த ராதிகாவை, கீதாஞ்சலி மற்றும் பர்வதம் மாமியுடன் துளசி பூஜை செய்ய அனுப்பினார் வைத்தியநாதன். பரத்துடன் ஹோமத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டவர், ராதிகா வந்ததும், “வாம்மா, இப்படி வந்து உக்காரு,” என்று பரத்தின் இடதுபக்கத்தைச் சுட்டிக்காட்டி உட்காரச் சொல்ல, “ஐயோ மறுபடியுமா? என்று அவளுடைய மடிசாரை வலதுபக்கம் இடுப்பை மூடிவதுபோல இழுத்துவிட்டுக்கொள்ள முயன்றாள், இழுத்துக்கட்டிய மடிசார் அவளுடைய முயற்சிக்கு ஒத்துழைக்காமல் போக, இன்னும் அமராமல் நின்றிருந்தவளை, “ஒரு இடத்துல வந்து ஒக்கார இவ்வளவு நாழியா?” என்பது போல் பரத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

“மொறைக்கரதுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை, பண்ற இம்சைக்கு பக்கத்துல வேற வந்து ஒக்காரணுமாக்கும், போடா நான் வரமாட்டேன்” என்று மனதில் அவனுடன் முரண்டியபடி இடுப்பை உரசும் இம்சை அரசனின் அருகில் சென்று இன்னொரு முறை இம்சைபட அமர்ந்துகொண்டாள்.

முக்கால்வாசி மனையில் பரத் அமர்ந்திருக்க, மீதமிருந்த கால்வாசி இடத்தில் தன்னால் இயன்ற வரை தள்ளி உட்கார முயற்சிக்க, அதற்கு மேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே விழுந்துவிடும் அபாயம் இருந்ததால், அதுவும் முடியாமல் போனது. வேறு வழியில்லாமல் அவனுக்கு நெருக்கமாகவே அமர்ந்துகொண்டு ஹோம கைங்கரியங்களில் மனதை ஈடுபடுத்த முயன்றாள் ராதிகா.

இதற்குள், கலசத்தை தயார்பண்ணி, ஹோமம் செய்யும் பரத்திற்கும், அபிஷேகம் செய்யவிருக்கும் ராகவனுக்கும் அணிந்துகொள்ள பவித்ரம் (வலது கையில் மோதிரவிரலில் அணியப்படும் தர்ப்பையால் செய்யப்படும் மோதிரம்) கொடுத்து அணியச் செய்து ஆசமனம் செய்யச் சொன்னார், பின்னர் கணபதி பூஜை செய்து, ருத்ரமூர்த்தியை கலசத்தில் ஸ்தாபனம் செய்து, ஹோமகுண்டத்தில் வடகிழக்குப் பக்கத்தில் வைத்தார். பின்னர் பரத் ராதிகா இருவர் கையிலும் ஒவ்வொரு மாலையைக் கொடுத்து மாற்றிக்கொள்ளச் சொன்னவர், ராதிகாவின் கையில் தர்பையைக் கொடுத்து, அதை பரத்தின் வலதுதோளில் வைத்துக்கொண்டு அவன் பின்னால் நிற்கச் செய்து ஹோமத்திற்கான சங்கல்பம் செய்து வைத்தார்.

சங்கல்பம் முடிந்ததும், ராதிகாவை தர்பையை அருகிலுள்ள தாம்பாளத்தில் வைக்கச் சொன்னவர், “அப்படியே மனையை பரத்துக்குப் பின்னாடி போட்டுண்டு உக்காந்துக்கோ, அவனோட வலது தோள்ல உன்னோட வலது கையை வெச்சுக்கோ,” என்றார். அவ்வாறே அமர்ந்து நடுக்கத்துடன் தன் விரல்களை பரத்தின் தோளில் வைத்தாள் ராதிகா, மிகவும் மென்மையாக, பட்டாம்பூச்சி இறகுகள் தீண்டியது போன்ற அவளுடைய சில்லென்றிருந்த விரல்களின் ஸ்பரிசம் பரத்தின் இதயம் தீண்டியதோ என்னவோ, இடைவிடாமல் மந்திரங்களைக் கூறிக்கொண்டிருந்தவன், ஒரு நொடி சர்வாங்கமும் சிலிர்க்க செயலற்று ஸ்தம்பித்தான். நொடிப்பொழுதே ஆனாலும் அவனுடைய உடலில் தோன்றிய இந்த மாற்றத்தை வேறு யாரும் கவனிக்காவிட்டாலும், ராதிகா அதிதுல்லியமாக உணர்ந்துகொண்டாள்.

வெகு விரைவாக பெருமூச்செறிந்து தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டவன், மீண்டும் சங்கல்ப மந்திரங்களை குருவுடன் கூறத் தொடங்கினான், ஒரு நிலையில் சங்கல்பம் முடிவடைந்து வைத்தியநாதன் ராதிகாவைப் பார்த்து, “உன்னை ஏன் உன் ஆத்துக்காரனுக்குப் பின்னால உக்காத்தி வெச்சுருக்கேன் தெரியுமாம்மா? என்று கேட்டார்.

‘தெரியாது’ என்று தலையசத்தவளுக்கு, “இந்த காலத்துப் பொண்கள் மெத்தப் படிச்சவாளா இருக்கா, நான் ஆம்பளைக்கு சமம், அவனுக்குப் பின்னால நான் நிக்கறதா? அவனுக்கு நிகரா அவன் பக்கத்துலதான் நிப்பேன்னு சமத்துவம் பேசறா, ஆனா அவா புரிஞ்சுக்காத விஷயம் என்னன்னா...நம்ம வேதாகமங்கள் எல்லாம் ஆணை விட பொண்ணுக்குதான் அதிக அதிகாரமும் சக்தியையும் குடுத்துருக்குங்கறதைத்தான்...ஒரு பெண்தான் ஆணோட முதுகெலும்பு, லௌகீக வாழ்க்கையிலயும் சரி, தார்மீக வாழ்க்கையிலையும் சரி, ஒரு பொண்ணு குடும்பத்தை நல்ல விதமா நிர்வகிச்சுட்டா, அந்த ஆத்து ஆம்பளை வெளியில போயி நல்லவிதமா ஜெயிச்சுண்டு வந்துடுவான்...அதனாலதான் கார்யேஷு தாசி, கரநேஷு மந்த்ரி, போஜ்யேஷு மாதா, ஷயநேஷு ரம்பா, ரூபெஷு லட்சுமி, க்ஷமயேஷு தரித்ரி, அப்படின்னு சொன்னா...இது ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணு எப்படியெல்லாம் சேவை செய்யணும்னு சொல்ற மந்தரமில்லை, ஒரு குலத்தைக் காப்பாத்தற மகாஷக்தியா ஒரு பொண்ணு ஆணுக்கு இப்படி சர்வஸ்வமா இருந்தால் மட்டுமே அவனால வெற்றிகரமானவனா இருக்கமுடியும்னு பெண்ணுக்குள்ள மஹாசக்தியை வெட்ட வெளிச்சமா போட்டு உடைக்கிற மந்திரம். சுருக்கமா சொன்னா, உன் ஆம்படையான் மொபைல் ஃபோன்னா, நீதான் அதுக்கு சார்ஜர். உனக்கு பவர் எங்கிருந்து கிடைக்கறதுன்னு கேக்கறியா? நீ பண்ற நித்யானுஷ்டானங்கள்ள இருந்துதான். வாசல்ல கோலம் போட்டு, நிலைப்படிக்கு பூஜை பண்ணி, துளசிய சேவிச்சுண்டு, விளக்கேத்தி வெச்சு, நித்யப்படி ஆத்துக்காரியங்களை சரியா பண்ணினாலே போதும். அப்பறம் இவனை மாதிரி என்னை மாதிரி ருத்ர ஹோமம் பண்ற துச்ச ஜீவிகளுக்கு எல்லாம் நீங்கள்லாம் தான் பவர்பேங்க்...இப்போ புரியறதா?” என்றார்.

தயக்கமாகத் தலையாட்டிய ராதிகாவிடம், “இப்போ இங்க உன்னோட வேலை முடிஞ்சுது, ஹோமம் முடிஞ்சு நெய்வேதியத்துக்கு இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகும். அதுக்குள்ள நீ உன் மாமியாரோடவும், ஒர்ப்படியோடவும் போயி, நெய்வேத்யத்துக்கு தளதளன்னு ஒரு வெண்பொங்கலும், கமகமன்னு ஒரு சக்கரைப்பொங்கலும் ரெடி பண்ணு. இன்னிக்கி உன் ஆத்துக்காரன் நீ சமைச்சதைத்தான் சாப்பிடணும். அதுக்கு முன்னாடி ஹோமத்துக்கு ஹவிசு பண்ணி கொண்டுவா. மாமியார்கிட்ட அனுமதி வாங்கிண்டு, எப்படி செய்யணும், என்ன செய்யணும்னு கேட்டுண்டு செய். இன்னும் சரியா ஒண்ணே முக்கால் மணிநேரத்துல எல்லாம் ரெடி பண்ணிட்டு பூர்ணாஹுதிக்கு நீ இங்க இருக்கணும்,” என்று கட்டளையிட்டார்.

“ஓம் நமோ பகவதே ருத்ராயா; நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நமஹ, நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாமுததே நமஹ...” என்ற மந்திர கோஷத்துடன் ருத்ர ஹோமம் இனிதே தொடங்கியது.

பரத் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும், ஷ்ரவன் உட்பட, மந்திர கோஷத்தில் இணைந்ததால் ஓங்கி ஒலித்த வேத நாதத்தின் தெய்வீக அதிர்வில் அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்க்க கட்டுண்டு நின்றனர்.

இதற்கிடையில் சமையலறைக்குள் இரு மருமகள்களுடனும் நுழைந்த பர்வதம் மாமி, வரிசையாக என்ன செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டே போக, கீதாஞ்சலியின் உதவியுடன் புக்ககத்தில் முதல்முதலாகச் சமைக்கத் தொடங்கினால் ராதிகா. அடுப்பும் மேடையும் துப்புரவாகத் துடைக்கப்பட்டு, கோலம் போடப்பட்டு தயாராக இருந்தது. மூன்று வெண்கலப் பானைகள் தங்கம் போல் பளபளப்பாக தேய்த்து அலம்பப்பட்டு, சுற்றி சுண்ணாம்பால் கோடு போடப்பட்டு குங்குமம் இடப்பட்டிருந்தது. மேடைக்கு அருகே கும்மிட்டி கரி அடுப்பு ஒன்றும் கோலம் போடப்பட்டு தயாராக இருந்தது. அதைக் காட்டிய பர்வதம் மாமி, “இதுலதான் ஹவிசு பண்ணனும் ராதும்மா, மீதியை எல்லாம் கேஸ்ல பண்ணிக்கலாம். நோக்கு பழக்கமில்லைன்னா பரவால்ல, நான் பண்ணறேன், நீ மீதி வேலையைப் பாருடா,” என்றார்.

img_0453-001.jpg

அதற்கு ராதிகா, “இல்லைம்மா, நீங்க எப்படி பண்றதுன்னு சொல்லுங்கோ, நான் பண்றேன்,” என்க, கும்மிட்டியில் இருந்த கரிக்குத் தணலிட்டு, விசிறியால் விசிறி பற்றவைக்கச் சொன்னார். ராதிகாவும் தனது தாய்வீட்டில் அதன் உபயோகத்தைப் பார்த்திருந்ததால், எளிதிலேயே அடுப்பைப் பற்றவைத்து, பர்வதம் மாமி சொல்லச் சொல்ல, ஒரு சிறிய வெண்கலப் பானையை நீரூற்றி அடுப்பிலேற்றினாள், நீர் கொதித்ததும், ஹவிசுக்கென வைக்கப்பட்டிருந்த புதிய அரிசியை அதில் போட்டு, கஞ்சியை வடிக்காமல் குழைய சாதம் வடித்து, பானையை அடுப்பிலிருந்து இறக்கி, சிப்பிலித் தட்டால் மூடி ஹோமம் நடக்கும் இடத்தில் கொண்டு வைத்தாள்.

இதற்குள், கீதா பொங்கல் செய்வதற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க, இரு அடுப்பிலும் வெண்கலப் பானைகளை வைத்து பொங்கல் செய்யும் பணியைத் தொடங்கினாள். அமைதியாக நடந்துகொண்டிருந்த வேலையை துளசியின் வரவு கலகலப்பாக்கியது. “என்னம்மா, நாட்டுப் பொண்களா, காரியமெல்லாம் சரியா செஞ்சுண்டு இருக்கேளா, ஏதாவது டவுட்டுன்னா கூச்சப்படாம கேளுங்கோ...” என்றபடி நுழைந்தவளைத் தொடர்ந்து, நந்தினியும் உள்ளே வந்தாள், ஹோமப் புகையில் கண்கள் எரிச்சலெடுத்து, கண்ணீர் வரத்தொடங்க, தாங்கமுடியாமல், ஸ்ரீராம் மனைவியை சமையலறைக்குப் பார்சல் பண்ணியிருந்தார்.

“அது சரி, சின்ன மன்னி, மடிசார் நீங்களே கட்டிண்டேளா, இல்லை யாராவது கட்டி விட்டாளா?” என்று கனசுவாரசியமாகக் கேள்வி கேட்டவளுக்கு, “ஆமாம், நானேதான் கட்டிண்டேன், ஏன் சரியாதானே இருக்கு?” என்று சந்தேகமாக மீதியிருந்த மூவரின் முகத்தையும் பார்க்க, “கச்சிதமா கட்டிண்டு இருக்கே, ராதிகா, இவ பேச்சை காதுல போட்டுக்காதே, ஏதாவது கலகம் பண்ணவே கேப்பா,” என்றாள் நந்தினி.
 




Last edited:

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
“இதுல கலகம் பண்ண என்ன இருக்கு? அழகாத்தான் இருக்கு, அதுதான் கேட்டேன், எப்படி மன்னி, இவ்ளோ செக்ஸியா மடிசார் கட்டிக்கக் கத்துண்டேள், எனக்கும் கத்துக்குடுங்கோ, எதிர்காலத்துல யூஸ் ஆகும்,” என்றாள்.

“ராம ராமா, பேசற பேச்சைப் பாரு, வாயிலேயே நன்னா போடணும், செல்லம் குடுத்து கெடுத்து வெச்சுருக்கா உங்க அப்பாவும் அண்ணாக்களும் சேர்ந்து உன்னை,” என்று கையிலிருந்த கரண்டியாலே அடிக்க வந்த பர்வதத்திடமிருந்து தப்பித்து, ராதிகாவின் பின்னால் ஒளிந்துகொண்டவளை ராதிகா முன்னுக்கு இழுத்து, அவள் காதைத் திருக, “பகவானே, மொதல்ல ரெண்டுதான் இருந்துது இப்போ மூணாயிடுத்து, இவா கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா? உக்காந்துண்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கியே உதவாக்கரை அக்கா, இந்தாத்துப் பொண்ணை மாமியாரும் நாட்டுப்பொண்களும் சேர்ந்து கொடுமைப்படுத்தறா, மொச்சைக்கொட்டைக் கண்ணை வெச்சுண்டு முழிச்சு பார்த்துண்டு இருக்கியே...” என்று நந்தினியையும் வம்புக்கிழுத்தாள் துளசி.

“நீ பேசியே எங்களுக்கெல்லாம் பண்ற கொடுமைக்கு இதுவே கம்மிடி, வாயாடி நாத்தனாரே, உன்னோட வாயை கோணி ஊசி வெச்சு தெக்காம இருக்கேனேன்னு சந்தோஷப்படு...” என்று துளசியின் இன்னொரு காதையும் கீதா திருக, “உங்களுக்கு காண்டு கீது மன்னி, நம்ம ஹீரோ ஹீரோயினோட மடிசார் காஸ்டியூமை கவனிச்சானா இல்லையாங்கற குழப்பத்துல, ராகவ் அண்ணா மடிசார் காஸ்டியூம்ல இருக்கற உங்களை சைட் அடிச்சதை யாருமே கண்டுக்கலைன்னு காண்டு, அதை என்கிட்டே காட்டாதீங்கோ...” என்று கீதாஞ்சலியையும் கலாய்க்க, வெட்கத்தில் முகம் சிவந்த கீதா துளசியின் முதுகில் ரெண்டு மொத்து மொத்த, “போறுமே, அச்சு பிச்சுன்னு ஏதாவது உளறிண்டு, ஆம் முழுக்க சொந்தக்காரா இருக்கா, நீ இப்படி கன்னாபின்னான்னு பேசறது யாரோட காதுலயாவது விழுந்தா என்ன நெனைப்பா? நான்தான் சரியா வளக்கலைன்னு என்னைத்தான் தூத்துவா...” என்று வைதார் பர்வதம்.

இதற்குப் பின் கொஞ்சம் அடங்கிய துளசி, “சரி, சரி, குழந்தையை ரொம்ப திட்டாதே,” என்று தனக்குத்தானே பரிந்துகொண்டவள், “ அப்படியே மூணு பேரும் ஸ்டவ் கிட்ட சமைக்கிறமாதிரி நடிச்சு ஒரு போஸ் குடுங்கோ பாப்போம், நான் வாட்சாப் டிபி போடணும்,” என்றாள். நடுவில் மாமியாருடன் இருபக்கத்திலும் மருமகள்கள் நின்றுகொண்டு ஆளுக்கொரு கரண்டியை தோளில் வைத்து சைட் போஸ் கொடுக்க, மாமியார் வீட்டில் ராதிகாவின் முதல் டிபியும் கோலாகலமாய் அரங்கேறியது. பிறகு நந்தினியுடனும் சேர்ந்து ஐந்துபேரும் பல விதமாக பல செல்பிக்களை எடுத்தபிறகே துளசி சமையலறையை விட்டு வெளியேறினாள். இத்தனை கூத்துகளுக்கு இடையேயும் மணக்க மணக்க வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் தயாராகி இருக்க, தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் செய்து வைத்தாள் ராதிகா.

சரிடிம்மா, எல்லாத்தையும் கொண்டுபோய் நெய்வேத்யத்துக்கு வெச்சுடு, வேலை முடிஞ்சுது என்ற மாமியாரிடம், “அம்மா, வெறும் பொங்கலை சட்னியோட சாப்பிட்டா வெக்குவெக்குன்னு தொண்டையைப் பிடிக்கும்மா. அவரால எப்படி சாப்பிட முடியும், இன்னும் கொஞ்சம் டைம் இருக்கே, நான் சீக்கிரமா ஒரு கொத்சு பண்ணிடவா ?” என்று கேட்க, மகனின் மீது அக்கறையாய் கேட்ட மருமகளின் கன்னம் தொட்டு முத்தமிட்டவர், ப்ரிட்ஜுல கத்திரிக்காய் இருக்கு, எடுத்து செய்,” என்று அனுமதியளித்தார்.

ஒருவழியாகச் சமையலை முடித்துவிட்டு பெண்கள் நால்வரும் நெய்வேத்தியத்தை கொண்டுவரவும், பூர்ணாஹுதி சங்கல்பம் தொடங்கவும் சரியாக இருந்தது. மீதி பூஜாக்கிரமங்களும் விரைவாக முடிய, வைத்தியநாத சாஸ்திரிகளும் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்துவிட்டு விடை பெற்றார்.

அனைவருக்கும் காலை உணவிற்கு இல்லை போடப்பட, பரத்தின் இலை முன்னால் ராதிகா சமைத்த உணவைக் கிண்ணங்களில் நிரப்பிக் கொண்டுவந்து வைத்த கீதா, “இங்கே முன்னாடி உக்காந்து பரிமாறு, ராதிகா,” என்று அவளையும் இலையின் முன்னால் உட்காரவைத்துவிட்டு சென்றுவிட்டாள். சுற்றி மற்ற அனைவரும் உணவுண்ண அமர்ந்திருந்ததால், எதுவும் சொல்ல முடியாமல், மௌனமாய்க் கடந்தது உணவு வேளை. இலையில் அமர்ந்தவன் பரிமாறியவளை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் போட்டதைச் சாப்பிட, ராதிகாவும் சங்கடமின்றி பரிமாறினாள். ஒரு கட்டத்தில் போதுமென்று கையால் தடுத்துவிட்டு அபிகாரம் செய்துகொண்டு எழுந்தும் சென்றுவிட்டான்.

அதன்பிறகு மாமியார் பரிமாற உணவுண்டு முடித்தவளுக்கு ஏதோ பெரிய போர் முடித்து வந்த அசதி ஏற்பட்டது. முற்றத்தில் உள்ள ஒரு சோபாவில் உட்கார்ந்து கண்மூடியவளை எழுப்பியது பரத்தின் குரல். “இன்னும் கொஞ்ச நாழியில பியூடிஷியனோட மேகாவும் அரவிந்தும் வருவா, எல்லாரும் ரெடியா இருங்கோ,” என்று கூறிவிட்டு கடமை முடிந்தது என்ற பாவனையோடு மாடியேறிச் சென்றுவிட்டான் பரத்.

இன்னும் நாளில் பாதி கூட முடிந்திருக்காத நிலையில், “இப்போவே கண்ணைக் கட்டுதே” ஃபீலில் இருந்த ராதிகா, “அதுக்குள்ள அடுத்த ரவுண்டா???” என்றாள்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top