• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal pandhayam #7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
காலையில் உறக்கம் கலைந்து கண் விழித்து எழுந்த ஹாசினிக்கு அருகில் படுத்து இருந்த அருணாச்சலத்தை காணாது அதிர்ச்சி அடைந்தாள்.

தன்னை எழுப்ப சொல்லி விட்டு அருணாச்சலம் தூங்கியது நினைவுக்கு வந்தது.
(என்னம்மா இப்படி பன்னிட்டியே அம்மா ஹாசினி)

ஹாசினி சுற்றிலும் பார்த்தாள்.

அவன் தென்படாத காரணத்தால் சற்று பயந்தாலும் இங்கேதான் இருப்பார் எங்கே போயிட போறார் என்று மனதை தேற்றிக் கொண்ட அவள் "பாஸ்" என்றழைத்தாள்.

எந்த பதிலும் வராததால் சற்று பயந்து "பாஸ்" என்றாள்.

அருணிடம் பதில் வராதது கவலை அளிக்க அவள் எழுந்து அவனை தேடிக் கொண்டு வெளியில் வந்து தேட ஆரம்பிக்க அவன் தென்படாது போக கலவரமாகி விட்டாள்
(மாப்பு... மாப்பு... வைச்சுட்டியே ஆப்பு)

ஹாசினி நீரோடையை அடைந்த போது அருணாச்சலம் அங்கே குளித்து கொண்டிருந்தான்.

அவள் நிம்மதியாகி அவனை கூப்பிட தயங்கி பார்த்துக் கொண்டிருந்தாள். (ஒ! இதுதான் அழகுல மயங்கறதா)

அவள் நின்ற பக்கம் பார்த்த திரும்பிய அருண் அவளிடம்
"குட் மார்னிங் ஹாசினி" என்றான்.

"குட் மார்னிங் அருண்" என்று அவள் பதில் சொல்ல,
"தண்ணி சூப்பரா இருந்துச்சு. அதான் லைட்டா ஒரு குளியல் போடறேன்" என்றான் அருண்.
(அப்பாடா! பயபுள்ளை ஏன் தூங்கினேன்னு கேட்கலை)

"நல்ல தூக்கம் போல" என்று அருண் கேட்டான் (கேட்டுட்டானே)

"நான் கண்ணு முழிச்சிட்டுதான் இருந்தேன். நேற்று மலை ஏறுன அசதியா ஒரு காற்று அடிச்சதும் தூங்கிட்டேன் சாரி பாஸ்" என்று
ஹாசினி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
(திட்டுவானோ)

"ஏதோ நம்ம அதிர்ஷ்டம் நெருப்பும் எரிஞ்சது. நம்மளை எந்த விலங்கோ பறவையோ பூச்சியோ பாம்போ எதுவும் செய்யலை. ஏதாவது அப்படி நடந்திருந்தா என்ன ஆயிருக்கும் நீயே சொல்லு" என்றான் அருண்.(கேட்டுட்டானே)

ஹாசினி அவன் சொன்னதில் இருந்த நியாயம் உணர்ந்து அவள் அமைதியாக வருத்தபட்டு சாரிப்பா என்றாள்

அவளின் சோகமான முகத்தை பார்த்து "ஏய்! ஹாசினி ஏன் சோமாயிட்டே?" என்றான் அருண்.

"நான் வேண்டும்" என்று அவள் பேச ஆரம்பிக்க அருண் உடனே "ஹாசினி சும்மாதான் உன்னை கலாய்க்க கேட்டேன். அதுக்காக நீ பீல் பன்னாதே." என்றான்.

"இருந்தாலும் அருண்" என்று அவள் சொல்ல "இதை பற்றி நாம் அப்புறம் பேசிக்கலாம். தண்ணி நல்லா இதமாக இருக்கு நீயும் வாயா வந்து குளி. நல்லா இருக்கும்" என்றான் அருண்.
(ஒசியில ஒரு குளியல் சீன் பார்க்க ஆசையா அருணு ஹாசினி உஷாருடா)

"இல்லப்பா என் டிரஸ் பேக் அங்கே இருக்கு அதான் எடுத்து வந்து குளிக்கிறேன்."

"சரி நீ போயி எடுத்துட்டு வா" என்று அருண் சொல்ல சரி என்று சென்று தன் பேக்கை எடுத்து வந்தாள்.

அருணாச்சலம் நீரோடை விட்டு வெளியேறி வந்திருந்தான்.

"சரி ஹாசினி. நீ குளிச்சிட்டு வா நான் கொஞ்ச தூரத்தில் வெயிட் பன்றேன். ஏதாச்சுனா ஒரு குரல் கொடு. நான் வர்றேன் "என்றான் அருண்.

"இந்தாப்பா இந்த பேகை பத்திரமாக வைச்சிரு" என்று தன் துணிகளையும் வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு பேக்கை தர அருண் வாங்கி கொண்டு அங்கிருந்து அகன்றான்.

பாஸ் ரொம்ப நல்லவருதான் நீதான் ஹாசினி தூங்கி சொதப்பி வைச்சிட்டேடி. உன்னை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்ட ஹாசினி சில நிமிடங்களில் ஆடைகளை களைந்து விட்டு நீரோடையில் இறங்கினாள்.

இயற்கையான சூழலில் அந்த மெல்லிய ஒடையில் அவள் ஆனந்தமாக குளித்து விட்டு கரையேறி வந்து ஆடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
(குளியல் சீன் வர்ணணை எதிர்பார்த்தவங்களுக்கு "பிம்பிலிக்கா பிலாப்பி")

ஹாசினி குளித்து விட்டு ஈர முடியுடன் மஞ்சள் சுடிதாரில் வந்தாள்

Message…
 
sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"பாஸ்... போகாலாமா?" என்று ஹாசினி மரத்தடியில் அமர்ந்திருந்த அருணிடம் கேட்க சரிப்பா என்றான்.

"ஹாசினி... அப்படியே நம்ம காலை பிரேக் பாஸ்ட் ரெடி பன்னிக்குவோம்." என்று சப்போட்டா பழங்களை காட்டினான் அருண்.

அருணாச்சலம் மரத்தில் ஏறி பறித்து போட துப்பட்டாவை விரித்து பிடித்துக் கொண்டாள் ஹாசினி.
(இன்னிக்கு ஆண்டவன் தந்தது இந்த சப்போட்டா பழம்)

"பாஸ்... நான் வேண்டுமென்று தூங்கலை" என்று ஹாசினி மறுபடியும் செல்லும் வழியில் ஆரம்பிக்க உடனே அவன்

"ஹாசினி... அதை இன்னுமா நினைச்சு பீல் பன்றே. நான் அப்பவே மறந்துட்டேன்" என்றான் அருண்.

"அதில்லைப்பா... நான் உன்னை வேற தூங்க சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன். நல்லவேளையாக கடவுள் புண்ணியத்தால் நமக்கு ஒன்றும் ஆகலைப்பா. நீ சொன்ன மாதிரீ ஏதாச்சும் ஆயிருந்தால் என்ன பன்ன முடியும்? எனக்கு நினைச்சு பார்க்கவே பயமாயிருக்குப்பா " என்றாள் ஹாசினி

"ஏய் ஹாசினி! நீ பீல் பன்ற மாதிரி ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை" என்று அருண் சொல்ல எப்படி என்பது போல் அவனை பார்த்தாள் ஹாசினி.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் சிரித்தபடி "நீ தூங்கின கொஞ்ச நேரத்தில் நான் கண் முழிச்சிட்டேன். நீ நல்லா தூங்கறதை பார்த்து அப்படியே நான் முழிச்சிட்டே நேரத்தை கடத்திட்டேன்" என்றான் அருண்.

"அப்ப நீங்க நைட் தூங்கவே இல்லையா?" என்று ஹாசினி கேட்க அவன் இல்லை என்று உதட்டை பிதுக்கினான்.

"சாரிப்பா" என்றபடி ஹாசினி நன்றியுடன் அவனை பார்க்க "ஹாசினி... உனக்கு சோகம் செட்டாகலை. நீ சிரிச்சிட்டே இரு அப்பதான் நல்லா இருக்கு" என்றான் அருண்.

"சரி பாஸ்" என்று ஹாசினி டிரேட்மார்க புன்னகையுடன் சிரிக்க "இப்பதான் நீ ஹாசினி" என்றான் அருணாசலம்.

தான் ஒரு நல்லவனுடன்தான் இருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு ஆனந்தம் அளிக்க சந்தோஷமாக நடந்தாள் ஹாசினி.

காலை டிபனாக சப்போட்டா பழங்களை பறித்துக் கொண்டு அவர்கள் குகைக்கு திரும்பி அங்கே அமர்ந்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தனர்.

"சரி வாங்க பாஸ் அப்படியே பவளமாலை உச்சிக்கு கிளம்பலாம்" என்று ஹாசினி சொல்லும் போது அருண் குகை வாயிலையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் எதற்காக குகை வாசலையை பார்க்கிறான் என்று யோசித்தவளாய் அவனிடம்

"பாஸ்... என்ன அங்கே பார்க்கிறிங்க?" என்று கேட்டாள் ஹாசினி.

"எனக்கு இந்த குகைக்கு உள்ளே போயி பார்க்கலாமுன்னு தோணுதுயா?" என்று பதில் கூறிவிட்டு அவளையே பார்த்தான் அருணாச்சலம்.

"எனக்கும் நேற்று ராத்திரி இந்த குகையை பார்த்துட்டு இருந்தப்ப அப்படிதான் தோணுச்சுப்பா" என்று அவனுக்கு ஆதரவாக பேசினாள் ஹாசினி.

அவர்கள் இருவரின் மனமும் ஒத்து போக அடுத்து குகைக்கு உள்ளே செல்ல தயாராகி விட்டார்கள்.

குகை பயணம் அடுத்த அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் Write your reply...
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திபிரியா டியர்
 
N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
காலையில் உறக்கம் கலைந்து கண் விழித்து எழுந்த ஹாசினிக்கு அருகில் படுத்து இருந்த அருணாச்சலத்தை காணாது அதிர்ச்சி அடைந்தாள்.

தன்னை எழுப்ப சொல்லி விட்டு அருணாச்சலம் தூங்கியது நினைவுக்கு வந்தது.
(என்னம்மா இப்படி பன்னிட்டியே அம்மா ஹாசினி)

ஹாசினி சுற்றிலும் பார்த்தாள்.

அவன் தென்படாத காரணத்தால் சற்று பயந்தாலும் இங்கேதான் இருப்பார் எங்கே போயிட போறார் என்று மனதை தேற்றிக் கொண்ட அவள் "பாஸ்" என்றழைத்தாள்.

எந்த பதிலும் வராததால் சற்று பயந்து "பாஸ்" என்றாள்.

அருணிடம் பதில் வராதது கவலை அளிக்க அவள் எழுந்து அவனை தேடிக் கொண்டு வெளியில் வந்து தேட ஆரம்பிக்க அவன் தென்படாது போக கலவரமாகி விட்டாள்
(மாப்பு... மாப்பு... வைச்சுட்டியே ஆப்பு)

ஹாசினி நீரோடையை அடைந்த போது அருணாச்சலம் அங்கே குளித்து கொண்டிருந்தான்.

அவள் நிம்மதியாகி அவனை கூப்பிட தயங்கி பார்த்துக் கொண்டிருந்தாள். (ஒ! இதுதான் அழகுல மயங்கறதா)

அவள் நின்ற பக்கம் பார்த்த திரும்பிய அருண் அவளிடம்
"குட் மார்னிங் ஹாசினி" என்றான்.

"குட் மார்னிங் அருண்" என்று அவள் பதில் சொல்ல,
"தண்ணி சூப்பரா இருந்துச்சு. அதான் லைட்டா ஒரு குளியல் போடறேன்" என்றான் அருண்.
(அப்பாடா! பயபுள்ளை ஏன் தூங்கினேன்னு கேட்கலை)

"நல்ல தூக்கம் போல" என்று அருண் கேட்டான் (கேட்டுட்டானே)

"நான் கண்ணு முழிச்சிட்டுதான் இருந்தேன். நேற்று மலை ஏறுன அசதியா ஒரு காற்று அடிச்சதும் தூங்கிட்டேன் சாரி பாஸ்" என்று
ஹாசினி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
(திட்டுவானோ)

"ஏதோ நம்ம அதிர்ஷ்டம் நெருப்பும் எரிஞ்சது. நம்மளை எந்த விலங்கோ பறவையோ பூச்சியோ பாம்போ எதுவும் செய்யலை. ஏதாவது அப்படி நடந்திருந்தா என்ன ஆயிருக்கும் நீயே சொல்லு" என்றான் அருண்.(கேட்டுட்டானே)

ஹாசினி அவன் சொன்னதில் இருந்த நியாயம் உணர்ந்து அவள் அமைதியாக வருத்தபட்டு சாரிப்பா என்றாள்

அவளின் சோகமான முகத்தை பார்த்து "ஏய்! ஹாசினி ஏன் சோமாயிட்டே?" என்றான் அருண்.

"நான் வேண்டும்" என்று அவள் பேச ஆரம்பிக்க அருண் உடனே "ஹாசினி சும்மாதான் உன்னை கலாய்க்க கேட்டேன். அதுக்காக நீ பீல் பன்னாதே." என்றான்.

"இருந்தாலும் அருண்" என்று அவள் சொல்ல "இதை பற்றி நாம் அப்புறம் பேசிக்கலாம். தண்ணி நல்லா இதமாக இருக்கு நீயும் வாயா வந்து குளி. நல்லா இருக்கும்" என்றான் அருண்.
(ஒசியில ஒரு குளியல் சீன் பார்க்க ஆசையா அருணு ஹாசினி உஷாருடா)

"இல்லப்பா என் டிரஸ் பேக் அங்கே இருக்கு அதான் எடுத்து வந்து குளிக்கிறேன்."

"சரி நீ போயி எடுத்துட்டு வா" என்று அருண் சொல்ல சரி என்று சென்று தன் பேக்கை எடுத்து வந்தாள்.

அருணாச்சலம் நீரோடை விட்டு வெளியேறி வந்திருந்தான்.

"சரி ஹாசினி. நீ குளிச்சிட்டு வா நான் கொஞ்ச தூரத்தில் வெயிட் பன்றேன். ஏதாச்சுனா ஒரு குரல் கொடு. நான் வர்றேன் "என்றான் அருண்.

"இந்தாப்பா இந்த பேகை பத்திரமாக வைச்சிரு" என்று தன் துணிகளையும் வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு பேக்கை தர அருண் வாங்கி கொண்டு அங்கிருந்து அகன்றான்.

பாஸ் ரொம்ப நல்லவருதான் நீதான் ஹாசினி தூங்கி சொதப்பி வைச்சிட்டேடி. உன்னை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்ட ஹாசினி சில நிமிடங்களில் ஆடைகளை களைந்து விட்டு நீரோடையில் இறங்கினாள்.

இயற்கையான சூழலில் அந்த மெல்லிய ஒடையில் அவள் ஆனந்தமாக குளித்து விட்டு கரையேறி வந்து ஆடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
(குளியல் சீன் வர்ணணை எதிர்பார்த்தவங்களுக்கு "பிம்பிலிக்கா பிலாப்பி")

ஹாசினி குளித்து விட்டு ஈர முடியுடன் மஞ்சள் சுடிதாரில் வந்தாள்

Message…
ஈஈஈஈஈஈஈஈ ஓஓ
சரிதான்
நல்லாப்போகுது.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top