• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal pandhayam -8(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"இறகுகள் மூலம் வரைகிற ஒவியங்களுக்கு தூரிகை ஒவியங்களுன்னு பேருப்பா. ரசாயன கலவைகளை அதற்கேற்ற குடுவைகளில் வைத்து அவைகள் மூலமாக சித்திரங்களை வரைவாங்களாம் ஹாசினி" என்றான் அருண்.

"பாஸ்... அதுமட்டுமில்ல பல வர்ணங்களுக்கு அதற்கேற்ற கலவையை தயாரிப்பார்கள். இயற்கையான இந்த மூலிகை பலவருசங்களுக்கு அழியாதாம். இந்த ஒவியங்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளை கடந்து இருக்கிறதுன்னு பார்த்துக் கொள்ளுங்கள்"

"ஹாசினி... இந்த ஒவியங்களை அவங்க வரையறதுக்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் காலத்து வாழ்க்கை முறைகள், வீரம், கொடை, ஆலய வழிபாடு, நடனம்,கலை, அரசர்கள் எல்லாவற்றையும் வருங்கால தலைமுறைகள் தெரிஞ்சுக்க வேண்டிதான் இப்படி குகை ஒவியங்களாக வரைஞ்சு வைச்சுறாங்கப்பா"

"ஆமாப்பா... தமிழர்கள் அந்த காலத்திலேயே கெமிஸ்ட்ரியில் எவ்வளவு திறமை ஆக இருந்தார்கள் என்பது இந்த ரசாயண மை ஒவியங்கள் சொல்லுது. அவங்க ஆர்ட்டுல எவ்வளவு சூப்பராக இருந்து இருக்கறாங்க பாஸ்"

"ஆமாப்பா... இந்த மாதிரி ஒவியங்களை எல்லாம் நாம் பாராட்டாமல் மார்டன் ஆர்ட், டாவின்சியின் ஒவியங்களை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடறோம் ஹாசினி"

"இந்த இருட்டு குகையில் மெல்லிய வெளிச்சத்தில் இப்படி வரைஞ்ச ஒவியங்களை விட பாரின் ஒவியங்கள் பெரியது இல்லை பாஸ். தமிழன் கிரேட் பாஸ். நாம் தமிழ் மக்கள் சொல்லிக்க பெருமை படலாம் இல்லையா பாஸ்"

"ஆமாப்பா" என்ற அருண் உடனே "ஹாசினி... ஒரு விஷயத்தை கவனிச்சியா? நம்ம இந்த குகையில் இருக்கோம் ஆனா நம்மால் சுவாசிக்க முடியுது. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேச முடியுது. நீ அதை பற்றி யோசிச்சியா?" என்று சந்தேகத்தை கிளப்பினான்.

"ஆமாம் பாஸ். அதுக்கு காரணம் நம்ம முன்னாடி தெரியற இந்த சூரிய கதிர்கள்தான் பாஸ்." என்று ஹாசினி காட்டிய இடத்தில் பார்த்தான் அருண்.

குகையின் மேல்புறத்தில் இருந்த சிறு துவாரம் வழியாக சூரிய கதிர்கள் உள்ளே பாயந்துக் கொண்டிருந்தன. காற்றும் உள் நுழைந்து வெளியே போய் கொண்டு இருந்தது.

குகையின் பாதையில் அவைகள் சிறிய இடைவெளியில் அமைக்க பட்டிருந்ததும், அந்த துவாரங்கள் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்ததும் அவனுக்கு ஆச்சரியமளித்தது.

"பாஸ்... இந்த துவாரங்கள் சரியான இடைவெளியை கணக்கிட்டு வைச்சிருக்காங்க. நாம மேல் இருந்து பார்த்தால் இவைகள் பாறை இடுக்கு மாதிரி தெரியும் தவிர அவர்கள் அமைத்து வைச்சிருக்கிற இயற்கை லைட்டுன்னு தெரியாது" என்றாள் ஹாசினி.

"இந்த மாதிரி நேர்த்தியாக திட்டமிடப்பட்டு அமைக்கபட்ட குகைகள் தான் இப்போதைய சப்வே(சுரங்கபாதை) அமைக்க பேசிக்கான அறிவை தருது. இந்த நேச்சர் லைட்டிங் சான்சே இல்லை ஹாசினி" என்று பாராட்டினான் அருண்.

"இதை அமைத்து இருக்கிற காரணத்தால் அவங்களால் நீண்ட நேரம் இந்த குகையில் இருக்க முடியும். இவைகள் இல்லை என்றால் சுவாசிக்க தடை ஏற்பட்டு நாம மயக்க நிலைக்கு போயிடுவோம் பாஸ்"

இதை எல்லாம் நானும் நெட்ல படிச்சிருக்கேன்" என்று அருண் சொல்ல வழி நெடுக ஒவியங்களை கண்டு பிரமித்தபடி அவர்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள்.
Message…
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஒவியங்கள் ஒரிடத்தில் சென்று முடிந்து விட்டது

அவர்கள் இருவரும் அதன்பின் வெளிச்சம் அதிகமாகி போவதை கண்டு வியக்க ஆரம்பித்தார்கள்.

"பாஸ்... வெளிச்சம் அதிகமாக வருது பாஸ். ஒருவேளை நாம் குகைக்கு வெளியில் வரப் போறோமோ?" என்று சந்தேகத்தை கிளப்பினாள் ஹாசினி.

அருணும் அவளும் உற்று பார்க்க கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எந்த வெளிப்புற வழியும் தெரியவில்லை.

"இல்லைப்பா. நமக்கு பக்கத்தில் எந்த குகை வாசலும் தெரிய வில்லைப்பா" என்று அருண் சொல்ல அவளும் அதை பார்த்துக் கொண்டிருந்தால் ஏற்றுக் கொண்டாள்.

குகையின் மேலே பார்த்தால் வழக்கம் போல் அதே போல் சிறு துவாரங்கள் மட்டும் தெரிய அவர்கள் குழம்பி விட்டார்கள்.

"பாஸ்... மேலே இருந்தும் இந்த வெளிச்சம் வரவில்லை ஏன்னா அதே மாதிரி துவாரங்கள் இருக்கு. நமக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் குகை வாசல் தெரியலை அதனால் பக்கத்தில் ஏதோ இருக்குது பாஸ்" என்றாள் ஹாசினி.

"எனக்கு அப்படித்தான் தோன்றுகிறதுப்பா. வா... நாம் சென்று என்னவென்று பக்கத்தில் போயி பார்க்கலாம்" என்று அவர்கள் இருவரும் செல்ல தொடங்கினார்கள்.

ஹாசினியும் அருணும் செல்லும் குகை பாதையில் பாறைகள் மூலம் சுவர்கள் போன்ற அமைப்புகள் அவர்களுக்கு தென்பட ஆரம்பித்தன.

"பாஸ்... இங்கே பாருங்க குகையில் பாறையில் சுவர்கள் எழுப்பி வைச்சிருக்காங்க பாஸ்" என்று அவள் ஆச்சரியத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

"ஹாசினி... இந்த இடத்தை பார்க்கிறப்ப எனக்கு புதுசா பார்க்கிற மாதிரியே தெரிய வில்லை. எப்பொழுதோ நாம் வந்த மாதிரி தெரியுது" என்று அருண் பேசத் துவங்கினான்.

அருணாசலத்தின் நினைவுகளில் பல வித காட்சிகள் நிழலாய் ஒடி மறைய ஆரம்பித்து விட்டன.

"பாஸ்... சும்மா கதை விடாதீங்க. நாம் ரெண்டு பேரும் சந்தித்ததே நேற்று காலையில் பவளமலையில் வருகிற வழியில்தான். நீங்க இங்கே வந்தது சூசைட் பன்னிக்க வந்தீங்க. நான் பவளமலை உச்சியை பார்க்க வந்தேன். நாம் குகையை நேற்று ராத்திரி தங்க பார்த்தோம். இன்னிக்கு மார்னிங்தான் உள்ளே போக முடிவெடுத்து வந்தோம். நீங்க என்னாடான்னா ஏற்கனவே வந்த மாதிரி இருக்குன்னா எப்படி பாஸ்" என்றாள் ஹாசினி.

"ஹாசினி... எனக்கு அதை எப்படி சொலறதுன்னு தெரியலைப்பா. என் மனசில் நிறைய காட்சிகள் ஒடுதுப்பா. அவைகள் என்னன்னு எனக்கு ஸ்டரைக் ஆகலை. எனக்கு எதையும் தெளிவாக பிக்சரைஸ் பன்ன முடியலை ஆனால் இந்த இடம் எனக்கு புதுசா தெரியலை அதுமட்டும் உண்மை" என்றான் அருண்.

அருணாச்சலம் தன்னிடம் விளையாடுகிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

ஹாசினி மனதில் "பாஸ்... எங்கிட்டேயே நீங்க விளையாடறிங்களா இப்ப பாருங்க"என்று நினைத்துக் கொண்டாள்.

"சரி பாஸ்... அப்படின்னா நீங்க இப்ப சொல்லுங்க. இதுக்கு மேல் என்ன எல்லாம் இருக்கு? இந்த வெளிச்சம் எப்படி வருது? எங்கே சொல்லுங்க பார்க்கலாம்" என்று கேட்டுவிட்டு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று பார்த்தாள் ஹாசினி.
Write your reply...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
தமிழன் என்று காலர் தூக்கி விட்டுக்குவோம் செம பதிவு சகோ.we too wait what arun will going to say(y)(y)
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top