• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 21

“அண்ணா இப்போ சொல்லுங்க.. அவளுக்கு சேலை எடுத்து அனுப்பியது நீங்கதானே..?” என்றாள் நிலா அவனை குறும்பாகப் பார்த்தாள்..

“ம்ம் நான்தான் எடுத்து அனுப்பியது.. நான் அனுப்பியது என்று உனக்கு எப்படி தெரியும்..” என்றான் கதிர்நிலவன்

“போஸ்டில் வந்ததாக இவர் கொடுத்த பொழுதே கண்டுக் கொண்டேன்.. அது எப்படி அவங்க அம்மா போஸ்டு வந்திருக்கு என்று சொல்லி முடிக்கவில்லை இவர் பார்சலுடன் வருகிறார்.. அதுதான் எங்கேயோ இடித்தது.. அதுமட்டும்மா! அதற்கு அவள் சொன்ன பதில் நான் அதிர்ச்சியே ஆகிவிட்டேன்..” என்றாள் நிலா என்னமோ அப்பொழுது தான் அதிர்ச்சி அடைந்தது போல கூறினாள்.. அவள் சொன்னதைப் பார்த்து கதிரும், முகிலும் சிரிக்க, அகிலும் முகிலினியும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்ததனர்..

அவர்கள் மூவரும் பேசுவது புரியாமல், “அண்ணா இங்கே என்ன நடக்கிறது.. நீங்க கவிக்கு சேலை எடுத்துக் கொடுத்தீங்களா..?” என்று கேட்டுவிட்டாள் முகிலினி..

“ம்ம் அண்ணா சேலை எடுத்துக் கொடுத்ததும், அதை கவியின் கையில் கொடுத்து யார் அனுப்பியது என்று அத்தை கேட்டார்கள்..?” என்று நிலா கூற

“எந்த அத்தை..?” என்று இடையில் நிலாவிடம் கேள்விக் கேட்டான் அகிலன்

“ம்ம் என்னோட அத்தை இவரின் அம்மா..” என்று கூறினாள் நிலா..

“அப்படி புரியும்படி சொல்லு..” என்று அகிலன் கூற, “அவள் என்ன கதையா சொல்கிறாள்..” என்று அகிலனை கிள்ளியவள், அவன் “ஸ்ஸ்!” என்று கத்தியதை பொருட்படுத்தாமல், “நீ சொல்லு நிலா..” என்று கூறினாள்

“அவள் சொல்கிறாள் சேலை எடுத்துக் கொடுத்தது அவரின் மாமாவாம்.. மாமானின் மகன் பெயர் கேட்டதற்கு நொடி கூட யோசிக்காமல் கதிர்நிலவன் என்று கூறுகிறாள்..” என்று கூற, ‘இவ்வளவு நடந்திருக்கிறதா..?’ என்று மனதில் கறுவினாள் நிஷா

“உன்னிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்..?” என்று கேட்டு கதிரின் முகத்தை யோசனையுடன் பார்த்தான் முகிலன்

“கேளுடா..” என்று கூறிய கதிரின் முகம் ரகசிய புன்னகையில் மலர்ந்திருந்தது..

“என்னை எதற்கு போஸ்டில் வந்ததாக சொல்ல சொன்னாய்..? அவள் எப்படி உன்னோட பெயரை சரியாக கூறினாள்..?” என்று கேட்டான் முகிலன்

“போஸ்டில் நான் அனுப்பி இருந்தால், அவள் அதை அடுத்த நொடியே திருப்பி அனுப்பியிருப்பாள்.. அதுதான் உன்னிடம் கொடுத்து போஸ்டில் வந்ததாக சொல்ல சொன்னேன்..” என்று கூற

“அவனோட இன்னொரு கேள்விக்கு பதில்..?” என்று கேட்டான் முகிலன்

“அதை அவளிடம் கேட்க வேண்டியது தானே..?!” என்று கதிர் சிரிப்புடன் கூற,

“இவர் கேட்டதற்கு அவள் மெளனமாக இருந்தாலே..” என்றாள் நிலா

“நான் மட்டும் எப்படி சொல்வேன்..?!” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன்

அவனை பார்த்துக் கொண்டிருந்த நால்வரும் பதில் தெரியாமல் பரிச்சைக்கு போன மாணவ, மாணவியர் போல முழிக்க, இங்கே நிஷா, ‘உண்மையை சொல்கிறானா பார்..?’ என்று பல்லைக் கடித்தாள்..

அவர்கள் முகத்தை பார்த்து கதிர்நிலவன் சிரிக்க, பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒருவரின் செல்போன் இசைத்தது..

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்!

வானின் நிலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்!

சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்!

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்!

என்ற பாடல் வரிகள் அழகாக ஒலிக்க, அவை சொன்ன செய்தி உண்மை என்று அவர்களுக்கு காட்டிக் கொடுத்தது கதிர்நிலவன் கண்கள்!

“டேய் பாவி நீ சொன்ன சஸ்பென்ஸ் இதுதானா..?” என்று சந்தோசமாக கேட்டான் முகிலன்

“கண்டுபிடித்து விட்டாய்..?” என்று சிரித்தான் கதிர்நிலவன்..

அவனின் கேள்வியை வைத்தே அவனின் மனதை அனைவரும் புரிந்துக் கொள்ள, நிலாவின் மனதில் சந்தேகம் எழுந்தது..

“அண்ணா உங்களுக்கு பிரியாணி பிடிக்கும் என்று நீங்கள் கடிதத்தில் எழுதி இருந்தீங்களா..?” என்றாள் நிலா சந்தேகமாகவே கேட்டாள்

“நான் சொல்லவில்லை நிலா.. ஆனால் நான் சொல்லாமல் அவளுக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டான் கதிர்நிலவன்

அதற்குள் அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவுகள் வர, அதில் அவனுக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியும் இருக்க, “எனக்கு யார் ஆர்டர் பண்ணியது..?” என்றான் கதிர்நிலவன்

“நான்தான் அண்ணா..!” என்றாள் நிலா, “நீ இங்கு தானே இருந்தாய்..?!” என்று கேட்டான் முகிலன்

“நான் ரெகுலர் கஸ்டமர் அண்ணா..! எனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும்..” என்று புன்னகையுடன் கூற,

“ம்ம் நீ செய்த வேலைதானா..?” என்று அகிலன் கோபமாக கேட்க, “என்னுடைய திருவிளையாடலில் ஒரு சின்ன பார்ட்..” என்று சிரித்தபடியே கூறினாள்

“கவியுடன் சேர்ந்து இவளும் ஆரமித்துவிட்டாள்..” என்று அகிலன் சலிப்புடன் கூற,

“கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்..” என்று முகிலினி அவள் பங்கிற்கு கூற, நிலாவும் கவியும் ஹை – பை கொடுத்துக் கொள்ள, கதிரும் முகிலனும் சரிக்க, அகிலன் அவர்களை முறைத்தான்..

“புருசனுக்கே கவுன்டர் கொடுக்கிறாய்..?” என்று முகிலினியைப் பார்த்துக் கேட்க, “நட்புக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா..” என்று நிலா கூற, அங்கே சிரிப்பலை பலமாக அடித்தது..

சிரிப்பு கொஞ்சம் ஓய்ந்ததும், “நீங்கள் சொல்லாமல் அவளுக்கு எப்படி தெரியும் அண்ணா..?” என்று கேட்டாள் முகிலினி..

“தெரியவில்லை முகிலினி..” என்று கூறினான்.. அவன் மனதிலும் அதே கேள்வி இருந்தது.. அவர்கள் தங்களின் உணவை முடித்துவிட்டு கிளம்பவே, நிஷாவிற்கு சற்று நிம்மதியாக மூச்சு விட்டாள்

அவர்கள் பேசியதை வைத்தே கதிர்நிலவன் கவிமலரை விரும்புவது நிஷாவிற்கு தெரிந்துவிட்டது..

‘இவர்களின் காதலை பிரிக்க வேண்டும்..’ என்ற எண்ணம் நிஷாவின் மனதில் ஆழமாக வேரூன்றியது..

அதன்பிறகு நிஷாவிற்கு அமைதியான இடம் தேவைப்பட அவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்..

‘தன்னை நிச்சயத்தார்த்தம் வரையில் கொண்டு சென்று என்னை வேண்டாம் என்று கூறினான்.. அப்பொழுது என்ன கூறினான், ‘நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவேன்..’ என்று கூறினான்.. ‘அவன் எப்படி அவன் விரும்பிய பெண்ணை மணக்கிறான் என்று பார்க்கிறேன்..’ என்று மனதினுள் கறுவினாள்..

‘என்னுடைய அப்பா என்மேல் இருந்த பாசம் மாறி, அவள் புராணமே பாடுகிறார்.. அதனால் தான் நான் அவரை விட்டு பிரிந்து வந்தேன்..’ என்று கவிமலரை சூழ்நிலை கைதியாக மாற்றினாள் நிஷா..

ஆனால் அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியவில்லை.. ‘நாம் எல்லோரும் இப்படி காரணம் கண்டு பிடித்தால், அனைவரும் ஒரு இடத்தில் சூழ்நிலை கைதியாகத் தான் இருக்கிறோம்...’ என்பதை சுத்தமாகவே மறந்துவிட்டு அவளை சூழ்நிலை கைதியாக பட்டம் சூட்டிக்கொண்டிருக்கிறாள்..

‘இருவரையும் பழிவாங்க இவர்களின் காதலை பிரிக்க வேண்டும்.. காதலனைப் பிரிந்தால், அவள் கண்ணீர் கடலில் மிதப்பாள்.. கதிர் கடைசியில் என்னையே திருமணம் செய்துக் கொள்வான்.. என்னை திருமணம் செய்வதே அவனுக்கு நான் கொடுக்கும் ஆயுள்தண்டனை.. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதைப் பார்த்து அவள் செத்தே போவாள்.. நான் என் அப்பாவுடன் நிம்மதியாக இருப்பேன்..’ என்று மனதில் திட்டம் தீட்டினாள்

இவள் மனதில் வளர்ந்த வன்மைக்கு அவர்கள் இருவருமே காரணம் அல்ல.. அவளின் தந்தையின் பாசமே அவளை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது...

மனதினுள் திட்டம் திட்டியபடியே வீட்டிற்கு வந்தவள் தனது தந்தைக்கு அழைத்து, “அப்பா கவிமலரை சென்னையில் பார்த்தேன்..” என்று தெரியாதது போல கேட்டாள்

“ம்ம் சென்னை தான் வந்திருக்கிறாள்.. ராமனைப் பார்க்க..” என்று அவர் கூற,

“அவள் எங்கே தங்கி இருக்கிறாள் அப்பா..?” என்று கேட்க, “எனக்கு தெரியாதும்மா.. ராமனிடம் கேள் சொல்வான்..” என்று சொன்னவர் அலைபேசியை வைத்துவிட,

ராமனுக்கு அழைத்து, “அங்கிள் நான் நிஷா..” என்று கூற, “சொல்லும்மா என்ன விஷயம்..?” என்று கேட்டார் ராமன்

“கவிமலர் பார்க்க வேண்டும் அங்கிள் அவள் எங்கே தங்கியிருக்கிறாள் என்று சொல்லுங்கள் அங்கிள் நான் அவளைப் பார்க்க வேண்டும்..” என்று சோகமாக கூறினாள்

அவரும் அவளின் முகவரி கொடுக்க அவள் அங்கு சென்று அங்கே நடந்ததை பார்த்து சவால் விட்டுவிட்டு வந்தவள், கதிரின் அலுவலகம் சென்று கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள்..

இப்பொழுது இவள் கொடுத்த கடிதம் தான் அவளின் வாழ்வில் மறந்திருக்கும் கடந்த காலத்தை நினைக்க போகிறாள் என்பதை அறியாமல் சந்தோசமாக இருந்தாள் நிஷா..

அவள் இங்கே நிம்மதியாக தூங்க, ரயிலில் பயணம் செய்த மலர் அவளை விடவும் நிம்மதியாக இருந்தாள்..

வானிலை மாறி மழை பொழிய ஆரமிக்க, அதை ரசித்துக் கொண்டிருந்தவளின் அலைபேசி அழைத்தது.. மணியைப் பார்த்தவள் மணி சரியாக பன்னிரண்டு ஆக மூன்று நிமிடம் இருக்க, அலைபேசியை எடுத்தாள் அவள்

“ஹலோ!” என்று சொல்ல, “கவிமலர்..” என்று அவன் மென்மையாக அவளின் பெயர் சொல்ல, அவன் குரல் கேட்டே பேசுவது யார் என்று தெரிந்து விட, அவனின் அழைப்பு அவளின் உயிரைத் தீண்டி, உடல் சிலிர்த்து அடங்கியது..

அவள் எதுவும் பேசாமல் மெளனமாக இருக்க, “என்னுடைய மனதில் நீங்காமல் ஓவியமாக தங்கிவிட்டவளே.. என்னுடைய சுவாசத்தில் கலந்திருக்கும் என்னுடைய இதயக்காதலிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..” என்று அவன் கூற, அவளின் கண்கள் கண்ணீர் சிந்தியது..

“ஏய் எனக்கு ஒரு தேங்க்ஸ் கூட கிடையாதா..?” என்று அவன் ஏக்கமாக கேட்க, அவள் அதுக்கும் மௌனம் சாதித்தாள்..

“ஏய் பேசமாட்டியா..?” என்று மட்டும் கேட்டான்.. ‘பேசுவேன் கதிர் உன்னுடன் காலம் முழுவதும் எனது இதயத்தின் வழியாக..!’ என்று மனதில் கூறியபடி அலைபேசியை காதில் வைத்திருந்தாள் கவிமலர்

அதற்கு காரணம் அவனின் குரலைக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் காதிலேயே வைத்திருந்தாள்..

அவளின் எண்ணம் புரிந்தவன், “நான் மட்டும் பேச வேண்டும்.. நீ மட்டும் என்னிடம் பேச மாட்டாய்.. என்னோட கிப்ட் பிடித்திருக்கிறதா..?!” என்று உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கேட்டான் அவளின் காதலன்..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“நீங்க எப்பொழுது எனக்கு கிப்ட் கொடுத்தீங்க..?!” என்று கேட்டுவிட, அவளின் கேள்வியைக் கேட்டு அவன் சத்தமாக சிரித்தான்..

அவனின் சிரிப்பைக் கேட்டு, “ஐயோ பேசிவிட்டேனா..?” என்று சிரித்தபடியே உதட்டைக் கடிக்க, “ஏய் மலர் அந்த இதழ்கள் பாவம் மலர்.. அதை மட்டும் கடிக்காதே..” என்றுக் கூற அவளுக்கு வெக்கம் வந்து அவளின் முகத்தை சிவக்க வைத்தது..

‘நான் உதட்டைக் கடித்தது இவருக்கு எப்படி தெரியும்..?!’ என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது..

“எனக்கு எப்படி தெரியும் என்று தானே யோசிக்கிறாய்..?” என்று அவன் சிரித்தவண்ணம் கேட்டான்

அவனின் கேள்வியில் அவளின் முகம் இன்னமும் சிவக்க அவள் மெளனமாக இருந்தாள்..

“நான் கொடுத்த கிப்ட் உன்னிடம் இருக்கும் நான் வாங்கிய புத்தகங்கள்.. உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று இரகசியமாகக் கேட்டான்

“அப்பொழுது கேட்டதற்கு நான் யார் என்று தெரியாதது போல பேசினீர்கள்..?” என்று கேட்க, “உன்னை எனக்கு நல்ல தெரியும் நீதானே எனது அத்தை மகள்..” என்று கூற,

“நான் உங்களின் அத்தை மகளா..?” என்று புரியாமல் கேட்டாள்

“நான் உனது மாமன் மகன் என்றால், நீ எனது அத்தை மகள் தானே..” என்று குறும்பாகக் கூறினான்

“கதிர்நிலவன் என்ன சொல்றீங்க..?! எனக்கு புரியல..” என்று கூற, “என்னோட பெயர் கதிர்நிலவன் என்று உனக்கு எப்படி தெரியும் மலர்..? காலையில் என்னைப் பார்த்தவுடன் எதற்கு அதிரச்சியானாய்..? எனக்கு என்ன பிடிக்கும் என்பது வரையில் தெரிந்து வைத்திருக்கிறாய்.. அது உனக்கு எப்படி தெரியும்..?” என்று கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவள் அதற்கும் மௌனமாகவே இருந்தாள்..

“ஏய் பதில் சொல்லு மலர்.. மெளனமாக இருக்காதே.. என்னோட கேள்விக்கு பதில் சொல்லு..” என்று கேட்டான்

அவள் பதில் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தாள்.. அழைப்பைத் துண்டித்தவள் கண்களில் கண்ணீர் மழையாகப் பொழிய, “உன்னோட கேள்விகள் அனைத்திற்கும் என்னிடம் பதில் இருக்கிறது.. ஆனால் சொல்லத்தான் விருப்பம் இல்லை..” என்று கூறினாள்

‘ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது கவிமலருக்கு..

‘நீ திருப்பூர் போனவுடன் உன்னோட கனவு காதலன் கதிர்நிலவனிடமிருந்து எத்தனை கடிதம் வந்திருக்கிறதோ..?’ என்று அவள் மனம் அவளைக் கேலி செய்ய,

‘உன்னோட கேள்விதான் எனக்கும்.. என்னை அவனும் காதலிக்கிறான் கடிதத்தின் வழியாக.. நானோ அவனை காதலிக்கிறேன் எனது கனவின் வழியாக.. அவனோ என்னைக் காதலிக்கிறான் நிஜமாகவே.. இதில் யார் வெற்றி பெறுவார்கள்..? நானா..? கடிதம் வழியாக காதலிக்கும் கதிர்நிலவனா..? இல்லை நேரில் நான் பார்த்த கதிர்நிலவன் காதல் வெற்றி பெறுமா..?’ என்ற பெரிய குழப்பத்தில் இருந்தாள் கவிமலர்..

இருவரும் ஒருவராக இருப்பார்களோ என்ற எண்ணம் அவள் மனதில் எழவே இல்லை.. அந்த சேலையைக் கட்டிய நினைவு அவளுக்கு இல்லவே இல்லை..

ஆனால் இங்கே கதிரோ, கோபத்தின் உச்சியில் இருந்தான்.. அவளிடம் கோபத்தைக் காட்டக்கூடாது என்று நினைத்தாலும் முடியாமல் கோபத்தை அவளை கட்டிவிட்டான்..

அவன் மனதில், ‘இவள் கடந்தகாலம் என்ன..? இவள் எதற்கு இப்படி ஒரு கடிதத்தை எனக்கு எழுத வேண்டும்..? இவளுக்கு என்னை எப்படி தெரியும்..?’ என்ற கேள்வியே அவனின் மனத்தைக் குடைந்தது..

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்க அவர்களின் இரவு தூங்க இரவாக மாறிப்போனது...!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
Me Second,
சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Arumaiyana pathivu Sandhiya.. eppo than kavi iruvarum oruvar than nu purinjukka pora..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top