• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! -22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 22

காலையில் எழுந்தவுடன் கிளம்பிய கதிரும், முகிலனும் சென்னை ஏர்போர்டில் இருந்து கோவைக்கு விமானம் வழியாக பறந்தனர்.. கவிமலர் திருப்பூரை நெருக்கும் முன்னரே திருப்பூரை அடைந்தனர் கதிரும் முகிலனும்..

இங்கே கவிமலர் இரயில் நிலையத்தில் இறங்கினாள்.. அவள் இரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வர, அங்கே கதிர்நிலவன் முகிலனை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பஸ் நிலையத்தில் கவிமலருக்காகக் காத்துக் கொண்டிருந்தான்..!

அவள் பேருந்து நிலையத்தில் இறக்கி பல்லடம் பஸ் நிற்கும் இடத்திற்கு நடந்து வர, “கவி அக்கா.. கவி அக்கா..” என்று கத்தினான் வருண்

திரும்பிப் பார்த்தவள், “டேய் வருண் என்னடா இன்றைக்கு ஸ்கூல் கட்ட..?!” என்று கேலியாகக் கேட்டாள் கவிமலர்..

“ம்ம் நாங்க குடும்பத்தோட திருச்சி போகிறோம்.. அதானால் ஸ்கூல் போகல..” என்று கூறிய சிறுவன், தனது கையில் இருந்த கிப்ட்டை அவளிடம் கொடுத்தான்..

அதை வாங்கிய கவிமலர், “என்னடா இது அக்காவிற்கு கிப்ட் எல்லாம் கொடுக்கிறாய்..?” என்று கேட்டபடியே வருணைப் பார்த்தாள் கவிமலர்..

“அக்கா நீங்க அன்னைக்கு எனக்கு கொடுத்த கீசெயின் ஒரு அண்ணா வாங்கிக்கிட்டாங்க.. அதற்கு பதிலாக இந்த வாச் வாங்கிக் கொடுத்தாங்க.. அந்த அண்ணா உங்களை நான் திரும்பவும் பார்க்கும் பொழுது இந்த கிப்ட்டை உங்களிடம் கொடுக்க சொன்னார்..” என்று கூறி தனது அரிசிப்பல் தெரிய சிரிக்க, அவளும் சிரித்தாள்

‘இந்த கிப்ட் கூட ஒரு கடிதம் இருக்குமே..?!’ என்று யோசித்தவள் பின்னே வந்து கொண்டிருந்த கதிர்நிலவனைப் பார்த்த வருண்..

“அண்ணா..” என்று கத்தியபடி அவனை நோக்கி ஓடினான் வருண்..

அவன் சந்தோஷ கூச்சலில் யோசனையில் இருந்து மீண்ட கவிமலர், ‘வருண் யாரை நோக்கி ஓடுகிறான்..?’ என்று மனதில் எழுந்த கேள்வியுடன் அவன் சென்ற திசையை பார்த்தாள்.. அவளின் கண்கள் தனது எதிரில் வருபவனைப் பார்த்தவுடன் இன்னும் அதிர்ச்சியாகவே இருந்தது.. அந்த அதிர்ச்சி அவன் கண்களுக்குத் தப்பவில்லை..

‘நான் காண்பது கனவு இல்லையே..?!’ என்று மனதின் உள்ளேயே கேட்டுக் கொண்டாள் கவிமலர்.. ‘அப்போ கதிர்நிலவனும், கடிதம் வழியே வந்த கனவு காதலன் கதிர்நிலவனும் ஒருவரே தானா..?’ என்று மனதிடம் கேட்க,

‘அந்த கடிதத்தைப் பார்த்து உனக்கு கோபம் வரவில்லையே..?! குழப்பம் தானே வந்தது.. இப்பொழுது வந்த குழப்பம் தீர்ந்து விட்டது.. நீ கனவில் கண்டவனும், கடிதத்தின் வழியே வந்தவனும், நீ நேரில் பார்த்தவனும் அனைத்தும் கதிர்நிலவனே...!’ என்று அவளின் கேள்விக்கு பதில் கூறியது..

‘ஆனால் நடக்கும் எதையும் என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..’ என்று கூறியவள், வருண் சொல்வதைக் கேட்டாள்..

அவனைத் தூக்கிக்கொண்ட கதிர்நிலவனிடம், “அண்ணா நீங்க சொன்ன மாதிரியே அக்காவிடம் நீங்க கொடுத்த கிப்ட்டைப் பத்திரமாகக் கொடுத்துவிட்டேன்..” என்று வருண் மகிழ்ச்சியாக கூற,

“என்னோட வருண் எப்பொழுதுமே ஸ்மார்ட் தான்..” என்று கூறி வருணின் தலையைக் கலைத்தவன், வருணின் கன்னத்தில் முத்தம் வைக்க, “அண்ணா அம்மாவிடம் சொல்லாமல் வந்துவிட்டேன்.. நான் போய்ட்டு வருகிறேன்..” என்று கதிரிடம் கூறிய வருண்,

கவியின் பக்கம் திரும்பி, “அக்கா அண்ணாவிடம் பேசுங்க.. நான் ஊருக்குப் போய்ட்டு வருகிறேன்..” என்று அவனுக்காக ரெகமண்ட் பண்ணிவிட்டு, கதிர் அவனைக் கீழே இறக்கிவிட, கவிமலரின் பக்கம் வந்தவன்,

“அக்கா கொஞ்சம் குனி..” என்றவன் அவள் குனிய, அவளின் கன்னத்தில் முத்தம் இட, அவளும் குழப்பங்கள் நீங்கியவளாக அவனின் கன்னத்தில் முத்தம் இட, அதை இரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்நிலவன்.. வருண் தனது அன்னையை நோக்கிச் சென்று விட்டான்..

அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு, “நீங்கதான் எனக்கு கடிதம் எழுதுவதா..?” என்று கோபமாகக் கேட்க, அவன் அவளை இரசனையுடன் பார்த்துக்கொண்டே நின்றிருக்க,

“நீங்க என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..?” என்று கோபமாகக் கேட்டவள், அவன் இடையில் எதோ சொல்ல வர, அவனின் முன்னே கைநீட்டித் தடுத்தவள்..

“ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் இப்படித்தான் கடிதம் மூலமாக தொந்தரவு தருவீர்களா..?!” என்று கேட்டாள்

“உன்னை நான் தொந்தரவு செய்தேனா..? நான் விரும்பிய பெண்ணிற்கு கடிதம் மூலம் தனது காதலை உணர்த்தியது தவறா..?” என்று கோபமாகவே கேட்டான்

“உண்மையாகவே தவறுதான்.. இந்த கடிதம் மூலம் நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்..” என்று அவள் கூற,

“என்னோட கடிதம் உனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது என்றால், நான் அனுப்பிய புடவையை எந்த உரிமையில் அணிந்துக் கொண்டாய்..?” என்று கோபமாகக் கேட்டான்

“அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..” என்று கூறிவிட்டு அவள் நடக்க, அவள் முன்னே வந்து நின்றவன், “எனக்கும் உனக்கும் ஆயிரம் சம்மந்தம் இருக்கிறது.. என்னை நீ காதலிக்கவே இல்லை என்றால் இந்த கடிதத்தை எதற்காக அனுப்பினாய்..?” என்று மனதில் இருந்த கேள்வியைக் கேட்டே விட்டான் கதிர்நிலவன்..

அதை வாங்கிப் பார்த்தவுடனே அவளுக்கு புரிந்து விட்டது இது நிஷாவின் வேலை என்று.. “ஆமாம் எழுதினேன் இப்பொழுது அதற்கு என்ன..?” என்று கேட்டாள் கவிமலர்..

“அப்பொழுது உனக்கு நான் வேறொரு திருமணம் செய்ய வேண்டும்..” என்று அவளை ஆழம் பார்த்தான் கதிர்நிலவன்

“யெஸ் நீங்க வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்.. உங்களின் காதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..” என்று கூறியவள் பல்லடம் செல்லும் பஸில் ஏறிவிட, அவள் மோதிரம் அங்கே விழுந்ததை அவள் கவனிக்கவே இல்லை..

அவள் சென்றவுடன் அவனின் காலுக்கு பக்கத்தில் கிடந்த மோதிரத்தைப் பார்த்து எடுத்தவன், “எனக்கு நீ உண்மையான பதில் மட்டும் சொல்லவே இல்லை மலர்.. உன்னோட கடந்த காலம் என்ன என்பதை நான் அறிந்தே தீருவேன்..” என்று சொல்லியவன் தனது காரில் ஏறி முகிலனின் வீட்டிற்கு சென்றான்..

அங்கே முகிலனின் வீட்டில் அகிலன், முகிலினி, நிலா, முகிலன் நால்வரும் இருந்தனர்..

கவிமலர் வீட்டிற்கு வந்தவள் தேவகியிடம் சாவியை வாங்க வர, அவளுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுக்க எண்ணியவர்கள் மாடியில் இருந்த அறைக்குள் செல்ல, தேவகி வெளியே வந்தார்..

“அம்மா வீடோட சாவியைத் தாங்க..” என்று கேட்டாள் கவிமலர்.. “வாம்மா இப்பொழுதுதான் வருகிறாய் போல..?!” என்ற தேவகி சாவியை கொடுக்க ஒரு சின்ன புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் கவிமலர்..

அவள் சென்றவுடன் வெளியே வந்தவர்கள், கதிருக்கு அழைக்க.. “நான் திருப்பூர் வந்துவிட்டேன் அகிலன் இன்னும் பத்து நிமிடம் வீட்டில் இருப்பேன்..” என்று கூறியவன் சொன்ன மாதிரியே முகிலனின் வீட்டின் முன்னே கார் நின்றது..

அவனும் முகிலனின் வீட்டின் உள்ளே செல்ல, இரயில் நிலையத்தில் இருந்து வந்தவள் நேராக சென்று குளித்துவிட்டு கதிர்நிலவன் அன்று பார்சலில் அனுப்பிய சேலையை எடுத்து அணிந்துக் கொள்ள நினைத்தவள், “இல்ல இது வேண்டாம்..” என்று தான் எடுத்த சுடிதாரை அணித்துக் கொண்டவள்..

கூந்தலை நன்றாக காயவைத்து பின்னலிட்டு தலையில் மல்லிகை பூ சூடியவள், கண்ணாடியின் முன்னாடி நின்று போட்டு மட்டும் வைத்துக் கொண்டாள்..

அந்த நேரம் ட்ரசிங் டேபிளில் இருந்த அலைபேசி அடிக்க எடுத்தவள்,

“சொல்லு நிலா..” என்றாள் கவிமலர்..

“நீ சென்னை வந்துவிட்டு என்னை ஏன் பார்க்காமல் வந்தாய்..?” என்று கேட்டாள்..

“எனக்கு வேலை விசயமாக வந்தேன்.. அது முடிந்ததும் கிளம்பிவிட்டேன் நிலா.. வர நேரமே இல்லை.. கோவித்துக் கொள்ளாதே..!” என்று நிலாவைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள் கவிமலர்..

“கதிர், முகில், அகில், நிலா, முகி எல்லோரும் சாப்பிட வாங்க..” என்று தேவகியின் குரல் செல்லின் வழியாக கவிமலருக்கு கேட்க,

“நிலா இப்பொழுது நீ எங்கே இருக்கிறாய்..?” என்ற கேள்வியைக் கேட்டாள் கவிமலர்..

“நான் சென்னையில் இருக்கிறேன்..” என்று நிலா போய் சொல்வதைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சத்தமில்லாமல் சிரித்தாள் முகிலினி..

“நிஜமாகவே நீ சென்னையில் தான் இருக்கிறாய் அப்படிதானே..?!” என்றவள் யோசித்தாள்.. ‘எப்படியும் இவள் சொல்வது பொய்யாகத் தான் இருக்க வேண்டும்.. என்ன பண்ணலாம்..?!” என்று யோசிக்க ஆரமித்தாள் கவிமலர்..

“சரிடி நிலா நீ வேலையைப் பார்.. நான் ஊட்டி போயிட்டு உனக்கு போன் செய்கிறேன்..” என்று சொல்ல, “என்னடி விளையாடுகிறாயா..? நான் இப்பொழுது திருப்பூர் வந்துக் கொண்டிருக்கிறேன்..” என்று நிலா சொல்ல,

“என்ன முகிலனின் வீட்டில் இருந்து என் வீட்டிற்கு வர ஏதாவது புது இரயில் விட்டிருக்கீறார்களா..?! ஏய் முகிலினி நீயும் இங்குதானே இருக்கிறாய்..? டேய் அகில் சீனியர் எருமை எதிர் வீட்டில் இருந்துக் கொண்டு என்னிடமே உன்னோட விளையாட்டை காட்டுகிறாயா..?!” என்று கத்த ஆரமித்தாள் கவிமலர்..

“ஏய் முகி கண்டுபிடித்து விட்டாள்..” என்று முகிலினியிடம் கூறினாள் நிலா.. அலைபேசியை அணைக்க, ஆனால் இவர்கள் யாருமே எதிர்பார்க்க ஒன்று நடந்தது..

“எப்படியும் இங்கேதான் வருவாள்..” என்று நிலா வாசலை நோக்கிச் செல்ல, வீட்டின் முன்னே கார் நின்றது.. வீட்டினுள் இருந்து வெளியே வந்த தேவகி காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்தார்..

அவரைப் பார்த்தவுடன், “அண்ணா வாங்க.. எப்பொழுது மும்பையில் இருந்து திருப்பூர் வந்தீங்க..?” என்று வாசலை நோக்கி விரைந்தார்

“இப்பொழுது தான் வருகிறேன் தங்கையே..” என்று கூறியவர், அவரின் பின்னே வந்த நிலாவைப் பார்த்து, “இந்தப்பெண் யார்..?” என்று கேட்டார்..

“இவள் நிலா..” என்று தேவகி முடிப்பதற்குள் ராமநாதன், “முகிலனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா..?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்

“இன்னும் இல்லை அண்ணா.. இப்பொழுது இவளின் தோழியின் வீட்டிற்கு வந்திருக்கிறாள்..” என்று சந்தோசமாகக் கூறியவர்

அவரின் பின்னே வந்த கவிமலரைப் பார்த்து, “இவள் தான் கவிமலர்..” என்று அவளை அறிமுகம் செய்ய திரும்பியவர் அவளைப் பார்த்தவுடன் திகைத்தார்..

“கவிமலர்..” என்று அழைக்க, அவரைப் பார்த்து அவள் இன்னும் திகைத்தாள்..

“அங்கிள் நீங்க..?!” என்றவள், ‘வேண்டாம் அங்கிள் எதையும் சொல்லாதீங்க..’ என்று கண்களால் அவரிடம் கெஞ்சினாள் கவிமலர்..

“இல்லம்மா நான் ஒரு முக்கியமான வேலை விஷயமாக வந்தேன்..” என்று கூறியவர்..

“நீ வீட்டிற்கு போம்மா நான் வருகிறேன்..” என்றவரைப் பார்த்த தேவகி, “அண்ணா உங்களுக்கு கவிமலரைத் தெரியுமா..?!” என்று ஆச்சர்யமாக கேட்டார்..

“தெரியும்..” என்று சிரித்துக்கொண்டே கூறியவர், அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய அதுவரை வாசலில் நடந்ததை உள்ளே இருந்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எப்பொழுதும் போல அகிலும், முகிலினியும் புரியாமல் விழிக்க, கதிர்நிலவன், ‘அங்கிள் எதற்கு இங்கே வந்திருக்கிறார்..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழ,

முகிலன் ‘இவருக்கு முன்னாடியே என்னைத் தெரியுமா..? அப்படியென்றால் எதற்கு என்னைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாக வேண்டும்...?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது..

அவர் வீட்டிற்குள் வர அங்கே நின்ற கதிர்நிலவனைப் பார்த்தவர், “கதிர் நீ எப்படி இங்கே..?!” என்று கேட்டார்..

“முகிலனுடன் வந்தேன் அங்கிள்..” என்று கூறினான்.. அவர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட, “தேவகி மதுரை வரை ஒரு சின்ன வேலைம்மா.. முடித்துவிட்டு ஒரு வாரத்தில் வந்துவிடுவேன்.. வந்த பிறகு சொல்கிறேன்..” என்று கூறியவர்,

“இரும்மா நான் கவியைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று கூறியவர் அவளின் வீட்டிற்கு சென்றார்..

“கவிமலர்..” என்று வாசலில் நின்று குரல் கொடுக்க, “வாங்க அங்கிள்..” என்று வாசலில் வந்து வரவேற்றாள் அவள்..

வீட்டின் உள்ளே வந்தவர், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிம்மா..” என்று கூற, “தேங்க்ஸ் அங்கிள்..!” என்றவள் பக்கத்தில் இருந்த சோபாவில் அவர் அமர,

அவரின் எதிரே நின்றவளைப் பார்த்து, “கொஞ்சம் உட்கார்ந்து பேசும்மா..” என்று கூறினார்..

சரியென்று தலையாட்டியவள், “அங்கிள் எந்த உண்மையும் அவர்களுக்கு சொல்லவில்லையே..?!” என்று மட்டும் கேட்டாள்

“சொல்லவில்லை கவி ஆனால் சொல்லும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக சொல்லியே தீருவேன்..” என்று கூறியவர்,

“நான் மதுரை செல்கிறேன்.. நான் வந்தவுடன் எந்த முடிவாக இருந்தாலும் எடு..” என்று கூறிவிட்டு சென்றுவிட, அவளைப் பிடித்து ஆட்டிய தலைவலி அவளை விட்டு செல்ல அமைதியாக இருந்தாள் கவிமலர்..

அப்படியே அமர்ந்திருந்தவள், கைகளின் விரல்களை மாறியபடியே விளையாட விரலில் இருந்த மோதிரத்தை காணாமல் வீடு முழுவதும் அந்த மோதிரத்தைத் தேட ஆரமித்தாள்

அவள் தேடும்போது உள்ளே நுழைந்த கதிர்நிலவன், “என்ன மலர் எதை தேடுகிறாய்..?” என்று கேட்டான்.. அவனின் குரலைக் கனவென்று நினைத்தவள்,

“என்னோட அம்மா எனக்கு கொடுத்த மோதிரம் காணவில்லை.. அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்..” என்று கூறியவள்,

“எப்பொழுதும் கனவில் வந்து மனதை ஒருவழி பண்ணிவிட்டு போவாரு.. இப்பொழுது நேரிலும் வந்து எனக்கு ரொம்ப தொல்லைக் கொடுக்கிறான்..” என்று கூறியபடி தனது தேடுதலைத் தொடர்ந்தாள்..

“உன்னோட அம்மா எப்படி இருப்பாங்க மலர்..” என்ற கேள்விக்கு, “என்னோட அறையில் சென்று பார் கதிர் அவர்களின் புகைப்படம் இருக்கும்..” என்று கூறிவிட்டு தேடிக்கொண்டே இருந்தாள்..

கதிர்நிலவன் அவளின் அறைக்குள் சென்று பார்க்க அங்கே இருந்த புகைப்படம் பார்த்து அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று வந்தான்..

“அத்தையின் புகைப்படம்...!” என்று அதிர்ச்சியில் கூற, “என்னோட அம்மா உனக்கு அத்தை தானே..?” என்று குரல் கொடுத்தாள்

“அந்த மோதிரம் உனக்கு ரொம்ப முக்கியமான ஒன்றா..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..

“என்னோட அம்மாவின் மோதிரம் எனக்கு ஸ்பெஷல் இல்லையா..? என்னோட அம்மாவே என்னுடன் இருப்பது போல இருக்கும்...!” என்று கவிமலர் சிரித்தாள்..

“இந்த மோதிரமாக இருக்குமோ..?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட, “எந்த மோதிரம்..?” என்று அவள் கேள்விக் கேட்டாள்..

அப்பொழுதுதான் கையில் வைத்திருந்த மோதிரத்தைப் பார்த்தவன் மனம், ‘இவள் நிஜத்திலேயே என்னுடைய அத்தை மகளா..? இந்த உண்மை இவளுக்கு தெரியுமா..?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது..

அவள் எதிரே வந்து நின்று அவளின் முகத்தைப் பார்த்தான் கதிர்நிலவன்.. “நான் வாங்கிக் கொடுத்த சேலையை ஏன் கட்டவில்லை..?” என்று அவளின் மனதை மோதிரத்திலிருந்து திசைத்திருப்ப அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

அதுவரையில் கனவு என்று நினைத்தவள், “இது கனவு இல்லையா..?” என்று அவனைக் கிள்ளியவள், “ஐயோ வலிக்குதுடி..!” என்று அவன் கத்தினான்..

“நீங்க எப்பொழுது இங்கே வந்தீங்க..?” என்று கோபமாகக் கேட்டவள், “முதலில் வெளியே போங்க..” என்று கூற காலையில் இருந்து நடப்பதை ஒரு சின்னதொரு அதிர்ச்சியாகவே இருந்தது..

அவள் சொல்வதைக் கேட்டவன் அவளின் கண்களைப் பார்த்து, “கனவா..?” என்று கேட்டான் கதிர்நிலவன்

அதற்கு கேக்குடன் உள்ளே நுழைந்தாள் நிலா.. யாரோ உள்ளே வரும் ஆரவாரம் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,

அங்கே நின்றவர்களைப் பார்த்து சந்தோஷத்தில், “முகில்..” என்று கத்தியபடி ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள் கவிமலர்..

“முகில் எங்கே அந்த நல்லவன் என்னோட சீனியர்..” என்று கேட்டவள் அகிலனைத் தேட, “இதோ இங்கே இருக்கிறேன்..” என்று சிரித்தபடியே கூறியவன்..

“உன்னோட முகிலை தயவுசெய்து நீயே வைத்துக்கொள்..” அகிலன் அவளை வம்பிழுக்க, “என்னோட முகிலை விட்டுவிட்டு நீ இருந்துவிடுவாய்..?” என்று இடையில் கையூன்றி கோபமாக கேட்க,

“டேய் கதிர் என்னைக் காப்பாற்று..” என்று அவனிடம் ஓட, அவனின் தோளில் கைபோட்ட கதிர்நிலவன்,

“கவி இந்த உன்னோட பிறந்தநாளிற்கு கேக்கிற்கு பதில் இவனை ஒரு வழி பண்ணும்மா.. என்னோட தன்கையாவது பிழைத்துப் போகட்டும்..” என்று சிரிப்புடன் முகிலன் கூறினான்

“நீதான் எதிர்வீட்டிற்கு இரயில் விட்ட நல்லவனா..?” என்று அடுத்த கேள்வி முகிலைப் பார்த்துக் கேட்க, அவன் தலையை எல்லா பக்கமும் ஆட்ட,

“நிலா எருமையே எப்பொழுது வந்தாய்..?” என்று நிலாவைப் பார்த்துக் கேட்டவள், “ஆமா நீங்க மூன்று பெரும் பிரிண்ட்ஸா..?” என்று அகிலன், முகிலன், கதிர்நிலவன் மூவரையும் பார்த்துக் கேட்டவள்,

“ரொம்ப சீக்கிரம் கண்டுபிடித்துவிட்டாய்..” என்று கூறிய அகிலனை அடிக்க துரத்தியவள், “ஏய் முகில் உன்னோட அகிலை அடித்தால் என்னைத் திட்ட கூடாது..” என்று முகிலினியிடம் கவி பர்மிஷன் வாங்க..

“அப்படி..” என்று நிலாவிட்ட பெருமூச்சுயில் “நீ முகில் அண்ணாவைத் தானே நினைத்தாய்..?” என்று நிலாவின் காதில் முகிலினி கிசுகிசுத்தாள்

அதன்பிறகு மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை அவர்களுடன் கொண்டாடியவள், கதிரிடம் மட்டும் நேரடியாக பேசவே இல்லை..

கதிர்நிலவன் “சீக்கிரம் சென்னை போக வேண்டும்..” என்று கூற, அனைவரும் அவன் சொன்னதை ஆமோதித்தனர்..

முகிலனுக்கு நிலாவைப் பார்த்தவுடன், ‘அந்த பெண்ணிடம் விரைவில் பேசவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது..’ என்றால்,

கதிர்நிலவனுக்கு, ‘கவிமலர் தனது அத்தை மகளா..?!’ என்று தெரிந்துக் கொள்ள வேண்டி இருந்தது..

நாள்கள் கடந்து செல்ல, நிலாவிற்கு ‘முகில் தன்னை மறந்துவிட்டானோ..?’ என்ற பயம் வர, ‘தனது காதலை சென்னை சென்றதும் சொல்லி முடிக்க வேண்டும்..’ என்று நினைத்தாள்..

தேவகிக்கு ‘இப்பொழுது எதற்கு ராமநாதன் அண்ணா வந்தார்..?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது..

இவர்களின் எண்ணம் வலுப்பெற அனைவரும் கிளம்பிச் சென்றனர்.. தேவகியும், கவிமலரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்..

கதிர்நிலவன் செல்லும் போது கூட அவளின் முகம் பார்க்கவே இல்லை என்பதில் அவள் மனம் வலித்தது..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சந்தியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Dhivyabharathi

மண்டலாதிபதி
Joined
Oct 21, 2018
Messages
115
Reaction score
236
Age
29
Location
Coimbatore
Suspense ah seekiram break pannunga pa... Eagerly waiting for next episode
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top