• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் - 24

ஒருவாரம் காற்றுப்போல கடந்து செல்ல, ராமநாதன் வந்தார் தேவகியைத் தேடி.. ஆனால் இந்த ஒருவாரத்தில் அனைத்தும் சரியாக நடந்தது..

ரவிவர்மா தனது மகளின் திட்டத்தின் படியே சென்னை சென்று ராம்குமார் – வசந்தி இருவரிடமும் பேசினார்.. அதன் மூலம் கதிர்நிலவன் – நிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து திருமணநாளும் குறிக்கப்பட்டு பத்திரிக்கையும் அடிக்கப்பட்டது..

இங்கே முகிலன் – நிலா இருவரும் தேவகியிடம் எல்லாவற்றையும் சொல்ல அவர், “முதலில் கவிமலருக்கு திருமணம் செய்ய வேண்டும்.. அதன் பிறகு உங்களின் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்..” என்று கூற இருவரும் மனநிறைவுடன் ஒப்புக்கொள்ள,

கதிர்நிலவனைப் பற்றி விசாரிக்க, “அம்மா கதிருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து திருமணநாளும் குறிக்கப்பட்டு விட்டது..” என்று அமைதியாக குண்டைத் தூக்கி தேவகியின் தலையில் போட்டான்.

“என்னடா அந்த கதிர்தான் கவியைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான்.. கடைசியில் இந்த திருமணத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டான்..” என்று கோபமாகக் கேட்டார்..

“அதை என்னிடம் கேட்காமல் அங்கே இருக்கிறாளே கவிமலர் அவளைக் கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும்..” என்று முகிலன் கூற, தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை.

“அவள்தான் அவனை வேறொரு திருமணம் செய்ய சொல்லியிருக்கிறாள்.. இவன் விருப்பமே இல்லாமல் சம்மதித்து, இப்பொழுது திருமண ஏற்பாடு மும்பரமாக நடக்கிறது..” என்று கோபத்துடன் கூற தேவகிக்கும் கோபம் வந்தது..

“அம்மா திருப்பூரில் தான் அவனின் திருமணம் நான் நேற்று இரவே கிளம்பிவிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்.. என்னுடன் நிலாவையும் அழைத்து வருகிறேன்..” என்று கூறியவன் அழைப்பைத் துண்டிக்க,

இவர் கோபத்துடன் கவிமலரின் வீட்டை நோக்கி செல்ல, அவளின் வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து கதிர்நிலவனும், நிஷாவும் இறங்குவதைப் பார்த்தவர்.. அங்கிருந்து கோபத்தில் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று அவரின் வீட்டை நோக்கி சென்றார்..

தனது வீட்டின் வாசலின் முன்னே கார் நிற்பதைப் பார்த்து வாசலுக்கு விரைந்தாள் கவிமலர்.. அங்கே பத்திரிக்கையுடன் கவிமலரைக் காண வந்திருந்தான் கதிர்நிலவன்.. அவன் வருவான் என்று தெரியும் கவிமலரும் எதிர்பார்க்கவில்லை.. அதுவும் அவனுடன் நிஷாவும் வந்திருந்தாள்..

கவிமலரின் வீட்டிற்குள் கதிர்நிலவனும், நிஷாவும் நுழைந்தனர்.. வீட்டில் உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்தவள் முதலில் திகைத்து பிறகு தன்னை நிதானத்திற்கு கொண்டுவந்து,

“வாங்க கதிர்..” என்று அழைக்க, “வருகிறேன்..” என்று கூறியவன், பின்னால் திரும்பி, “வா நிஷா..” என்று அழைக்க, கவிமலருக்கு கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது அவள் மனம், ‘என்னோட கதிர், நிஷாவின் கணவன்..’ என்று மனதில் பதியவைக்கும் முயற்சியில் இருக்க, நெஞ்சம் வலித்தது..

இருவரும் உள்ளே நுழைய அவர்களை வரவேற்ற கவிமலர் இருவருக்கும் காபி எடுத்து வந்தாள்.. இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்து காபியைப் பருகினர்..

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், “என்ன விஷயமாக வந்திருக்கீங்க கதிர்.. இவங்கதான் உங்களின் வருங்கால மனைவியா..? எனக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டிங்களா..?” என்று கேட்டாள் புன்னகைக்க முயன்றபடி..

‘இவ்வளவு காதலிப்பவள், என்னைத் திருமணம் செய்ய சொன்னாய் அப்பொழுது எனக்கு எப்படி வலித்திருக்கும்..’ என்று மனதில் நினைத்தவன், நன்றாக புன்னகைத்து, “நிஷா என்னுடைய வருங்கால மனைவி..” என்று கூறியவன்,

“நிஷா இவள் கவிமலர்.. உன்னுடைய அப்பா அலுவலகத்தில் வேலை செய்கிறாள்.. இப்பொழுது ஆடிட்டர் இறுதி தேர்வை எழுதி இருக்கிறாள்..” என்று நிஷாவிடம் கூறியவன், மனதில்,

‘மருந்து கூட கசக்கும் என்று குழந்தைக்கு அதைக் கொடுக்காமல் இருந்தால் குழந்தைதான் கஷ்டப்படும்.. நீயும் குழந்தைதான் உனக்கு இந்த கசப்பு மருந்து தேவைதான்..’ என்று மனதில் நினைத்தான்..

“ஹாய் நிஷா..” என்று சொல்ல, அவள் அமைதியாக இருந்தாள்.. ஆனால் அவளின் பார்வையில், ‘நான் உன்னை வென்றுவிட்டேன்..!’ என்ற செய்தி மறைந்திருந்தது..

ஆனால் அவளின் மனம், ‘கவி என்னை மன்னித்துவிடு! உன்னைப் பற்றிய உண்மை இவருக்கும் தெரியாது.. இவருக்குத் தெரிந்த ஒரே உண்மை நீ இவரின் அத்தை மகள் என்பது மட்டும்.. ஆனால் மற்ற உண்மை அறிந்தால் தான் உன்னை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.. உன்னுடைய அமைதியை அனைவரின் வாழ்க்கைக்கும் கொடுத்தவள், அமைதி இல்லாமல் தான் நேசித்தவனைக் கூட விட்டுகொடுக்கும் உன்னுடைய பெருந்தன்மை யாருக்கும் வராது.. ஆனால் இப்படி உன்னை விட்டால், நீ தனிமரமாய் நிற்பாய்.. நானும் கூட உனது தோழிதான் உன்னை அந்த நிலையில் விடக்கூடாது என்று தான் இந்த முயற்சியை செய்கிறேன்..’ என்று நினைத்தவள்.. அமைதியாகவே இருக்க,

கவிமலரின் மனமோ, ‘என்னைவிட நீ அவரை நன்றாக பார்த்துக் கொள்வாய் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நிஷா என்னுடைய கனவுகள் பழிக்காது என்று தெரிந்துதான் காதலித்தேன்.. அப்படி ஒருவன் இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தேன்.. ஆனால் இவன் கண்முன்னால் காதலுடன் வந்தான்.. நான் என்னை மட்டும் யோசித்தால் அவனுக்கு அப்பா, அம்மா என்ற குடும்பம் இருக்காது.. ஆனால் அவனைப்பற்றியும் யோசித்தேன்.. அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும்.. அவர்களின் பாசம் வேண்டும்.. அதுதான் நானே விலகிக்கொண்டேன்..’ என்று நினைக்க,

‘உன்னை எப்படியும் என்னுடன் அழைத்துச் செல்வேன் கவி.. என்னுடைய காதல் தோற்க நான் விட மாட்டேன்..’ என்று மனதில் உறுதியாகக் கூறினான் கதிர்நிலவன்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இவர்கள் மூவரும் மனதில் பேசிக்கொள்ள, அந்த வீட்டில் அமைதி நிலவியது.. அந்த அமைதியை முதலில் கலைத்தது கதிர்நிலவனே...

காபியைப் பருகி முடித்தவன், “இந்தாங்க கவிமலர் அடுத்தவாரம் எங்களின் திருமணம் இங்கே திருப்பூரில் நடக்க இருக்கிறது.. நீங்க கண்டிப்பாக வரவேண்டும்..” என்று பத்திரிக்கையைக் கொடுத்தான்

“ரொம்ப சந்தோசம்.. நான் கண்டிப்பாக வருவேன்..” என்று கூறி பத்திரிக்கையை வாங்கியவள் புன்னகைக்க முயல, நிஷா வெளியே சென்றாள்..

அவள் வெளியே சென்றவுடன் நின்றவன், “என்னுடைய காதலுக்கு சமாதியே கட்டிட்ட இல்ல..” என்று பல்லைக் கடித்துக் கொண்டுக் கேட்டான்

“நாம் இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் பெற்றோருக்கு கல்லறை கட்டுவதற்கு, காதலுக்கு சமாதி கட்டுவது எவ்வளவோ மேல்.. அதன் மூலம் சிலர் சந்தோசமாக இருப்பதையாவது மனதாரப் பார்க்கலாம்..” என்று கூறினாள்

“எப்படியே நீ ஜெய்ச்சிட்ட..” என்று கூறியவன் முகம் பாறைப் போல இறுக்கிடந்தது.. அவளின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.. இவர்கள் வருவதைப் பார்த்து வீட்டிற்குள் சென்று விட்டார் தேவகி..

அங்கே முகிலன் – நிலா இருவரும் வந்திருக்க, அவர்களைக் காண வந்திருந்தார் ராமநாதன்.. அவருடன் வந்திருந்தார்கள் ராம்குமார் – வசந்தி மற்றும் ரவிவர்மா நால்வரும் வந்திருந்தனர்.. இவர்கள் வந்தது கவிமலருக்கு தெரியாது..

பத்திரிக்கைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த கதிர்நிலவன் மற்றும் நிஷா இருவரும் முகிலனின் வீட்டை நோக்கி நடக்க, கவிமலர் கனத்த இதயத்துடன் வீட்டிற்குள் சென்று கதவை சாத்தியவள் பின்வாசலை நோக்கி நடந்தாள்..

வெளியே மழை நன்றாகக் கொட்ட துவங்கியது.. எப்பொழுது மழையை ரசிப்பவள், இன்று கொட்டும் மழையில் மாடிப்படி சென்று அமர்ந்தவள் அழுகத் துவங்கினாள்..

இத்தனை நாளும் மனதில் அடக்கி வைத்திருந்த வலிகள் எல்லாம் கண்ணீராக வந்து மழை நீருடன் கலந்து கரைந்து சென்றது.. அதுமட்டும் இல்லாமல் கடந்த காலம் கண்முன்னே படமாக விரிந்தது..

யாரிடமும் சொல்லவும் முடியாமல், யாரையும் காயப்படுத்த விரும்பாமல், குருவி கூடாக இருக்கும் குடும்பத்தை கலக்கவும் விரும்பாமல் தன்னுள் போட்டு புதைத்த தன்னுடைய கடந்த காலம் கண்முன்னே விரிந்தது..

கவிமலர் பிறந்து பொள்ளாச்சி. அவள் பிறந்ததும் தனது நடுத்தர வாழ்க்கை மாறி, தான் ஒரு நல்ல நினைக்கு வந்தார் சுந்தர். அவருக்கு மகளைப் பார்த்தால் மலர் போலவே இருக்கிறாள் என்று கவிமலர் என்று பெயரிட்டனர்..

அவள் அன்னை ஜோதி இருந்த வரையில் கவிமலரின் வாழ்க்கை ஒரு பூஞ்சோலையாக இருந்தது.. அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அவளின் தாயார் இருதய நோயால் இறந்துவிட, தாயின்றி தனிமையில் விடப்பட்டாள் கவிமலர்.

அவளின் தந்தையும் ஜோதி இறந்த ஒருவருடத்தில் மறுதிருமணம் செய்துக் கொள்ள, அவளின் சித்தியோ வந்த ஒரே மாதத்தில் கவிமலரை அவளின் தந்தையிடம் இருந்து பிரித்து ஹொஸ்டலில் சேர்த்துவிட்டாள்..

அதன்பிறகு கவிமலரை ஹொஸ்டலில் சேர்த்துவிட, அங்கிருந்த பள்ளி விடுதியில் தங்கிப்படித்தாள். அவள் படிப்பில் படு சுட்டியாக இருந்தாள்.. அதேபோல பாடல் பாடுவதில் அவளை வெல்ல யாரும் இல்லை, ஓவியம் வரைவது என்ற கலையில் திறமையுடன் விளங்கினாள்..

தாயின் அரவணைப்பும் இன்றி, தந்தையின் அரவணைப்பும் இன்றி தனித்துவிடப்பட்ட, கவிமலர் தன் வாழ்க்கையை தானாகவே இன்னும் சொல்ல போனால் தனியாகவே வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டாள்..

அதன்பிறகு படிப்பில் முழுகவனமும் செலுத்தி பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தாள். சென்னையில் கல்லூரியில் சேர்ந்தபிறகு அவளின் தோழியாக அறிமுகம் ஆகினாள் முகிலினி..

இருவரும் சேர்ந்து தனியாக வெளியே வீடெடுத்துத் தங்கினர்.. அங்கே பக்கத்து வீட்டில் இருந்தவன் அகிலன்.. அகிலன், முகிலினி, கவிமலர் மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்.. அவனுக்கு முகிலினி என்றாள் மிகவும் பிடிக்கும். அவன் இஞ்சினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான்.. அதனால் அவன் முகிலினியை வம்பிழுக்க அவளுக்கு பதில் அவனை ஒரு வழி செய்வாள் கவிமலர்..

இவர்கள் இருவரும் கலை கல்லூரியில் படிக்க, அவன் இன்ஜினியரிங் படித்தான்.. தினமும் காலையில் இருவரும் பஸ் ஸ்டாப்பில் அவர்களை வம்பிழுக்க அவர்களும் சலிக்காமல் பதில் கொடுப்பார்கள்..

“இங்கு வாம்மா அபிநய சரஸ்வதியே..” என்று கவிமலரை அழைத்தான் அகிலன். [இது கவிமலருக்கு அகிலன் வைத்த பட்ட பெயர்]

“என்ன சீனியர் இன்னைக்கும் வீதி உலா.. உனக்கு படிக்கவே எதுவும் இருக்காதா..? ஆமா நீ எப்பொழுது இருந்து இங்கே நிற்கிறாய்..” என்று கவிமலர் அகிலனிடம் கேள்வியை அடுக்கிக்கொண்டே செல்ல,

அவனோ முகிலினியை பார்வையால் விழுங்கிக் கொண்டிருக்க, அவளும் சலிக்காமல் பதில் பார்வை வீசிக் கொண்டிருந்தாள்.. அதை கவனித்த கவிமலர்,

“ஏய் கவி என்னைக் காப்பாற்று.. நான் இந்த ஜொள்ளு என்ற சூழலில் வசமாக மாட்டிக் கொண்டேன்.. என்னைக் காப்பாற்று..” என்று கூறினாள் முகிலினி

“நீயே தானே மாட்டிக் கொண்டாய் நீயே வெளியே வா..” என்று கவி நக்கலாக கூற,

“வெளியே வர மனசே இல்லை..” என்று இருவரும் கோரஸ் பாட, “ஐயோ.. ஐயோ..” என்று தலையில் அடித்துக் கொண்டவள்,

“டேய் சீனியர் இவளைத் திருமணம் செய்து என்னை இவளிடமிருந்து காப்பாற்று உனக்கு புண்ணியமாகப் போகட்டும்..” என்று கவிமலர் கையெடுத்துக் கும்பிட,

“நீடோடி வாழ்க..” என்று வாழ்த்த கையில் இருந்த அக்கௌன்ட் புத்தகத்தை அவனின் தலையில் போட்டாள் கவிமலர்..

“ஐயோ வலிக்குதுடி எருமை..” என்று தலையைத் தேய்த்துக்கொண்டு, “முகில் இவளிடம் பேசாதே இவள் என்னை அடிக்கிறாள்..” என்று கூற,

“கவி ஒரே அடியோட விட்டுட்ட இன்னும் நாலு சாத்து சாத்து..” என்று தனது அக்கௌன்ட் புக்கையும் கொடுத்தாள் முகிலினி..

இப்படி கேலியும் கூத்துமாக அவர்களின் நாட்கள் நகர, ஒருவருடம் கல்லூரி படிப்பு முடிய அகிலன் அவனின் வீட்டில் சொல்லி முகிலினியை திருமணம் செய்து அவளின் டிசியை வாங்கிக்கொண்டு சென்று விட்டான்..

இவர்களின் திருமணம் முடிந்ததும் திரும்பவும் தனித்துவிடப்பட்ட கவிமலர் தனது படிப்பில் கவனம் செலுத்துவாள்.. அப்படி நேரம் செல்லவில்லை என்றால் பக்கத்தில் இருந்த ஆசரமத்திற்கு சென்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்கா சென்று விளையாடிவிட்டு வருவாள்

அந்த குழந்தையில் அவளுக்கு பிடித்தது ஹரிசரண். அவனுக்கு ஏதாவது என்றாள் அவளால் தாங்கவே முடியாது.. அவனின் மீது உயிரையே வைத்திருந்தாள் கவிமலர்..

பூங்காவில் குழந்தையின் நடுவே குழந்தையாக அமர்ந்து குதுகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்த கவிமலரின் அருகில் வந்த ஹரிசரண், “அக்கா எனக்காக ஒரு பாட்டு பாடுக்கா..” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டுக் கூற,

“என்ன பாட்டு பாடனும் அதையும் நீயே சொல்லு பார்ப்போம்..” என்று அவனின் மூக்கைப் பிடித்தது ஆட்டியவள், குறும்பாக கூற,

கொஞ்ச நேரம் யோசித்தவன், “நீ எப்போதும் பாடுவாயே, மழைபாட்டு அதைப் பாடுக்கா..” என்றான் சரண்

“சரிடா செல்லம்..!” என்று அவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள், பாட ஆரமித்தாள்..

“மழையே ஓ மழையே புன்னகை தூவுறியே!

சிலையாய் ஒரு சிலையாய் நிற்க வைத்துப் பார்க்கிறீயே..

மொட்டு மொட்டு மல்லிகையாய் முத்தம் மிட்டு சிரிக்கிறீயே

சின்ன உளி நீர்த்துளியாய் என்னை கொஞ்சம் செதுக்குறீயே

உலகினில் சேவை செய்ய உன்னைத் தந்தது வானம்

புன்னகையே அணிந்தாடுவோம்.. புன்னகையால் உலகாலுவோம்..” என்று அவள் பாடுவதைப் பார்த்து அந்த குழந்தைகள் குதுகலத்துடன் புன்னகையுடன் அவளைச்சுற்றி நடனம் ஆடியது

அவள் பாடி முடித்ததும் அவளின் பாடலுக்கு பரிசாக தனது கைத்தட்டலை வழங்கியது அந்த சின்னஞ்சிறு மடல்கள்!

“டேய் சரண் உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டாள் கவிமலர்.. இவளின் ஒருவன் தன்னிலை மறந்துப் பார்ப்பதே அவளுக்கு தெரியவில்லை..

இதை கவனிக்காத அவளுக்கு, “ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா உன்னுடைய பாடல்..” என்று கூறினான் ஹரி.. அவளின் கடந்த காலத்தில் மறக்கமுடியாத ஒருவன் என்றால், அது ஹரிசரண் மறக்க முடியாத ஒருவன்..

“தேங்க்ஸ் செல்லம்..” என்று கட்டியணைத்து முத்தமிட்டாள் கவிமலர்.. அதன்பிறகு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆசரமம் சென்றுவிட்டாள்.

இப்படியே நாட்கள் நகர, ஹரிக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்தால் பிழைப்பான்.. நேரு மருத்துவர்கள் கூற அதிகம் துடித்தவள் கவிமலர் தான்..

ஆனால் அவனின் அருகில் இருந்தால் அவள்.. அவனை விட்டு பிரிய அவளுக்கு மனமே இல்லை.. ஆனால் கடைசி நொடியில் அறைக்குள் அழைத்த ஹரிசரண், “அக்கா நீ என்னை ரொம்ப நல்ல பார்த்துக் கொண்டாய்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அக்கா.. எனக்கு அம்மாவாக இருந்தாய்.. நான் விரும்பிய அனைத்தும் செய்தாய்..” என்று கூறியவன் மூச்சுவாங்க,

“அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், நான் தான் உனது மகனாக பிறப்பேன்.. எனக்கு ஹரிசரண் என்று பெயர்வைத்துக் கூப்பிடு..” என்று கூறியவன் அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க அவனின் உயிர் பிரிந்தது.. அவனின் பிரிவை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

அதன்பிறகு அவள் அந்த ஆசரமத்திற்காக ஓவியம் வரைய ஆரமித்தாள். அதை அப்படியே அந்த நிர்வாகி ராமனிடம் கொடுத்தாள்.. ராமன் ஒரு ஓவிய பள்ளியை நடத்தி வருபவர்.. அவரும் நோயாளி குழந்தைகளுக்கு நிறைய செய்தார்..

நாட்கள் அழகாக நகர கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஆடிட்டர் படிப்பிற்கு சேர்ந்தாள்.. அதிலே இரண்டு வருடம் ஓடிவிட, மூன்றாம் வருடத்தின் ஒருநாள் தந்தையை காண, பொள்ளாச்சி சென்றாள்..

அவளின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள் அது.. அவளைப் பற்றிய அவள் அறியாத பலவிசயங்களை தெரிந்துக் கொண்ட நாள் அது..!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top