• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
“குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு தேவகியின் பக்கத்தில் வந்து நில்லுங்க..” என்று கூறியவள் அவரும் அவள் சொன்னது போலவே நிற்க, இருவரையும் கைநீட்டிச் சொல்லி,

“உங்கள் இருவருக்கும் என்னுடைய திருமண பரிசு..” என்று சொல்லி குழந்தையை அவர்கள் கையில் கொடுக்க போக இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்..

சிவானந்தம், “அன்பரசி என்ன சொல்ற..? உனக்கு என்ன பைத்தியமா..? நீ சொல்வதின் அர்த்தம் தேர்ந்துதான் சொல்கிறாயா..?” என்று கத்தியே விட்டார்

“அக்கா நான் அத்தானை உங்களிடம் இருந்து பிரிக்க வரவில்லை.. அதேபோல இவன் உங்களின் குழந்தை என்ன நினைத்துக் கொண்டு இப்படி பேசுறீங்க..” என்று திட்டியவள்,

“இவரை நான் விரும்பி இருந்தால் கண்டிப்பாக உங்களின் காதலை உடைத்து என்றோ இவருடன் இணைந்து இருப்பேன்..” என்று விளக்கமும் சொல்ல,

“தேவகி நான் எல்லாம் புரிந்துதான் பேசுகிறேன்.. உனக்குத்தான் நிலைமை புரியவில்லை..” என்று அன்பரசி எடுத்து சொல்ல, “என்ன அவளுக்கு புரியாதது உனக்கு புரிந்துவிட்டது..?” என்று கோபமாகக் கேட்டார் சிவானந்தம்

“நான் சொல்வதை முதலில் பொறுமையாக கேளுங்க சிவா..” என்று அன்பரசி சொல்ல,

“இன்னும் நீ என்ன சொல்லபோற..? இனிமேல் திருமணம் என்று ஏதாவது பேசினால் அடித்தே விடுவேன் அன்பு..” என்று கோபத்துடன் கத்தினார்..

“கொஞ்சம் நிறுத்துங்க.. நான் சொல்வதை முதலில் கேளுங்க..” என்று கத்தியவள், தேவகியின் பக்கம் திரும்பி,

“உனக்கு இன்றைய நிலைக்கு நாங்கள் தான் உனக்கு எல்லாம் தேவகி.. அப்படியே திருமணம் நடந்து இந்த விஷயம் தெரிந்தால் யாரும் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இப்படியே உன்னை எங்களுடன் வைத்துக் கொள்ளலாம் என்றாலும் உங்கள் இருவரைப் பற்றியும் உலகம் தவறாக பேசும்..” என்று சொல்லி நிறுத்தியவள் கணவனைப் பார்த்து,

“எந்த மாதிரி பேசும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.. அதேபோல சொல்லும் உண்மையை யாரும் நம்பவும் மாட்டார்கள்.. கதை கட்டுவதாக கூறுவார்கள்..” என்று அன்பரசி விளக்கம் கொடுக்க,

“நீ சொல்வது எல்லாம் உண்மை என்றாலும் கூட, இவள் என்னை திருமணம் செய்துக் கொண்டேன் என்று சொன்னால் மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்கள் என்று நினைத்தாயா..?” என்று கோபம் குறையாமல் கேட்டார்..

“அவளுக்கு தேவை ஒரு பாதுகாப்பு.. இப்பொழுது அவளின் காயங்களுக்கு மருந்து ஒரு குழந்தை.. கொஞ்சம் யோசிங்க நான் உங்களின் வாழ்க்கையில் வராவிட்டால், உங்களின் மனைவியாக தேவகிதான் இருந்திருப்பாள்.. இந்த நேரம் இந்த குழந்தை உங்கள் இருவருக்கும் பிறந்திருக்கும்..” என்று சொல்ல சிவானந்தம் கேள்வியாக நோக்கினார்

“அவளுக்கு தேவையான பாதுகாப்புக்கு அவளின் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுங்கள்.. அவளின் குழந்தையாக என்னுடைய முகிலன் வளரட்டும்.. நாம் இருவரும் சேர்ந்து இன்னும் எத்தனை குழந்தை வேண்டுமென்றாலும் பெற்றுக் கொள்ளலாம்.. ஆனால் தேவகி அப்படி கிடையாதுங்க.. இந்த காரணங்களால் அவள் தன்னை தானே அளித்து கொள்வாள்..” என்று உண்மையை புரியவைத்தாள் அன்பரசி..

குழந்தையை தேவகியின் கையில் கொடுத்த அன்பரசி, “இது உன்னோட குழந்தை இவனை நீதான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.. கடைசி வரையில் இவன் என்னுடைய குழந்த என்று நான் உரிமை கொண்டாடிட்டு வரமாட்டேன்..” என்று கூறிய அன்பரசி

அவளைப் பார்த்து புன்னகை பூக்க, “அக்கா உங்கள் குழந்தையை எனக்கு கொடுத்திருக்கீங்க..” என்று கண்ணீர் வழிய சந்தோசத்துடன் கூறியவள், முகிலனை தூக்கி முத்தமழை பொழிந்தாள்..

இதைப் பார்த்து கணவனும் மனைவியும் காதலுடன் பார்வையை பரிமாறிக் கொள்ள, “இதை உலகம் தவறாக பேசாதா அக்கா..” என்று கேட்க, “நமக்காக தான் வாழவேண்டும் தேவகி.. மற்றவர் பற்றி கவலை பட கூடாது..” என்று சொன்னவள் இரண்டு குழந்தையையும் பார்த்து புன்னகையுடன் இருந்தாள்..
Veryyy nice so loveable ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top