• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 34

அவள் அறைக்குள் அந்த முடிவுடன் இருக்க, அறைக்கு வெளியே நடப்பவற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.. சரியாய நிச்சயதார்த்த நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். நிஷா மற்றும் அவளின் அப்பா ரவிவர்மா.. இவர்கள் உடனே வந்தார் ராமநாதன்.. நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருந்தனர் ராம்குமார், வசந்தி, தேவகி மூவரும்..

முகிலன் கதிர்நிலவனுக்கு அழைக்க, “இன்னும் பத்துநிமிடம் சமாளிடா வந்துவிடுகிறேன்..” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.. அப்பொழுது முகிலனின் பின்னோடு வந்த நிலா,

“அம்மா நிச்சயதார்த்த புடவை கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னால் கவி கதவை தாளிட்டுவிட்டு வெளியே வராமல் இருக்கிறாள்..” என்று முகிலனிடம் கூற, அவனும் சிரித்துக் கொண்டே,

“இன்னும் பத்து நிமிசத்தில் அவள் ஹாலில் இருப்பாள் பாரு..” என்று சொல்லிவிட்டு தனது வேலையைக் கவனிக்க, நிலா ஒன்றும் பேசாமல் செல்ல,

அவளின் அருகில் வந்த நிஷா, “என்ன பிளான் எல்லாம் எப்படி போகுது..?” என்று சிரிப்புடன் கேட்டது,

“ஏண்டி நீயும் சேர்ந்து என்னை வதைக்கிறாய்.. நம்ம போட்ட பிளான் எல்லாம் நல்ல போகுது.. ஆனால் கவிதான் என்ன செய்ய போகிறாள் என்று தெரியலடா..” என்று வருத்தமாக சொல்லிவிட்டு செல்ல, நிஷாவிற்கும் அவளின் பயம் தொற்றிக்கொள்ள அவளும் என்ன செய்வது என்ற யோசனையில் சென்றாள்..

நிஷா இங்கே இருப்பது கவிக்கு தெரியாது.. அவளோ உள்ளே கதிரை அழைத்துக் கொண்டிருந்தாள்.. அவள் அழைத்தும் குதூகலத்துடன் அவளின் அழைப்புகளை கட்பண்ணி விடவும், இவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கியது..

“கதிர் தயவுசெய்து போனை எடுடா..” என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு அழைத்தாள்..

அவன் அவளை அதிகம் தவிக்க விடாமல் அவளின் பதினோராவது காலை எடுத்து, “இப்பொழுது எதுக்கு கூப்பிடுகிறாய்..? இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னொருவனுடன் நிச்சயதார்த்தம் ஆகப்போகிறது.. போடி போ போய் அவனையே திருமணம் செய்துக் கொள்..” என்று அவன் கோபத்தோடு சொல்ல,

அவன் கூறிய வார்த்தை அவளின் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது! அவளின் கண்கள் கண்ணீர் மழையைப் பொழிய, “எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து என்னை பழிவாங்குகிறாயா கதிர்..?” என்று அழுகையுடே கேட்டாள்..

அவள் அழுகிறாள் என்பது அவனுக்கும் தெரியும் இருந்தும், “ஆமாம் இன்னமும் நீ எந்தவிதமான மறுப்பும் சொல்லையே அப்படி சொல்லியிருந்தால் முகிலன் எனக்கு அழைத்து விவரம் சொல்லி இருப்பான்..” என்று அவன் சொல்ல,

“கதிர் தயவு செய்து வார்த்தையால் என்னை கொல்லாதே.. என்னால் எப்படி அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை அழிக்க முடியும்.” என்று அவள் கூறினாள்..

“எனக்கு அதெல்லாம் தெரியாதுடி.. நீ நான் சொன்னது போல எல்லோரின் முன்னிலையில் நின்று நான் கதிரை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்லு அடுத்து நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று அவன் கூலாகச் சொல்லவே அவள் அமைதியாக இருக்க,

“என்ன அமைதியாக இருக்கிறாய்..?” என்று அவன் கேட்டதும், வெளியே கதவைத் தட்டிய நிலா,

“கவி கீழே மாப்பிள்ளை கூட வந்துவிட்டார்.. இன்னும்மா நீ சேலை கட்டுகிறாய்..?” என்று கேட்டதும், உள்ளே இருந்த கவிக்கு, ‘அடுத்து என்ன செய்வது...?’ என்ற யோசனையில் படுக்கையில் அப்படியே அமர்ந்துவிட்டாள்..

அவளின் அருகில் இருக்கும் நிச்சயபுடவையைப் பார்த்தவள், போனில் கதிரின் குரல் கேட்டு, “நீ சொல்வதையும் என்னால் செய்ய முடியாது.. அதேபோல இன்னொருவன் முன்னால் அவனுக்கு சொந்தமானவாக போய் நிற்கவும் முடியாது.. என்னோட முடிவை நானே எடுக்கிறேன்..” என்று சொன்னவளின் குரல் இறுகி இருந்தது..

“காதலிக்க ஆரமித்த பிறகு இருவரின் முடிவும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் மலர்.. நீ சென்று இந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்று சொல்லு.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்லவும், அவள் மறுக்காமல் போனை வைத்தாள்..

நிலா மீண்டும் கதவைத் தட்டவர, கதவை திறந்த கவியைப் பார்த்தவள், “என்னடி நீ இன்னும் ரெடி ஆகாமல் இருக்கிறாய்..? உன்னோட அண்ணா பார்த்தால் கத்தியே ஒரு வழி பண்ணிவிடுவான்..” என்று சொல்ல அவள் சொல்வதையெல்லாம் காதில் வாங்காமல் மாடியை விட்டு இறங்கியவள்

அவள் கீழே வரும் பொழுது ஹாலில் ராம்குமார், வசந்தி, தேவகி, முகிலன், ராமநாதன் மற்றும் சிலர் இருந்தனர். அங்கிருந்த அனைவரின் முகத்திலும் இருந்த சந்தோசத்தை ஒரு நொடிப்பார்த்தவள், ‘இவர்களின் சந்தோசத்தை அழிக்க போகிறோமே..’ என்று மனம் கவலை கொள்ள கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

அவளின் அம்மாவின் அருகில் சென்று, “அம்மா..” என்று அழைக்க அவளின் பக்கம் திரும்பிய தேவகி, அவளின் தோற்றம் கண்டு, “இன்னும் என்னம்மா ரெடியாமல் இருக்கிறாய்..?” என்று கேட்டவர்,

அவளின் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்து, “என்னடா கண்ணெல்லாம் கலங்கி இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே அவளின் கண்களைத் துடைக்க,

“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை..” என்று சொல்ல, அப்பொழுது அனைவரின் முகத்தில் இருந்த சந்தோசமும் மறைத்து அவர்கள் முகம் சோகத்தில் மூழ்க, அங்கிருந்த அமைதியில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் என்ற நிலை!

அவளின் அருகில் வந்த முகிலன், “நாளைக்கு திருமணம் இன்னைக்கு வந்து உண்மையைச் சொல்கிறாய்.. நீ நினைத்து போல நடக்க இது ஒன்றும் சினிமாவும் இல்லை.. நீ சொன்னதும் நிறுத்த இது ஒன்றும் விளையாட்டு விஷயம் இல்லை..” என்று அவளிடம் கோபத்தைக் காட்ட,

“முகிலன் எதுக்கு அவளைத் திட்டுகிறாய்.. பாருடா அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று நீ கேட்டிருக்க வேண்டும்.. இல்லை நானாவது கேட்டிருக்க வேண்டும்.. இந்த இரண்டும் நாம் செய்யவில்லை.. இப்பொழுது அவளைத் திட்டினால் என்ன அர்த்தம்..” என்று தேவகி கேட்டதும் தலை குனிந்தான் முகிலன்..

அவர்கள் பேசுவதை கண்டு கண்கள் கலங்கியவள், “அம்மா இதை நான் வேண்டும் என்றே செய்யல.. அண்ணாவைத் திட்டாதீங்க..” என்று முகிலனுக்கு சப்போர்ட் செய்தாள்..

அவளின் அருகில் வந்த நிலா அவளின் கைகளைத் பற்றிக் கொள்ள, திகைப்பு மாறாமல் நின்றிருந்த ராம்குமார், வசந்தியின் அருகில் சென்றவள்,

“என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் தான் உங்களுக்கும் தலை குனிவு.. எனக்கு இதை விட்டால் வேற வழி தெரியவில்லை.. எனக்கு உங்களின் மகனைப் பிடிக்கவில்லை..” என்று சொல்ல அவளின் அருகில் வந்த முகிலன்,

“வேற யாரைத்தான் உனக்கு பிடித்திருக்கிறது..?” என்று முகிலன் கோபத்தோடு கேட்டதும், “அவளுக்கு என்னைத்தான் பிடித்திருக்கிறது..” என்று வாசலின் அருகில் நின்றிருந்தான் கதிர்நிலவன்..

அங்கிருந்த அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவனின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், அவன் பட்டுவேட்டி சட்டையில் நிற்பதைப்பார்த்து அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தாலும், ‘இவர் எப்படி இங்கே..?’ என்ற கேள்வியும் எழுந்தது..

அவளின் பார்வைப் படித்தவன், “நான் எப்படி இங்கே என்று யோசிக்கிறாயா..? உன்னை கையோடு அழைத்துச் செல்ல வந்தேன்..” என்று அவன் கூறியதும்,

“ம்ம் எனக்கு இவரைத்தான் பிடித்திருக்கிறது.. நான் இவரைத்தான் காதலிக்கிறேன்..” என்று அனைவரின் முன்னிலையிலும் கூறியவள்

அவனின் பக்கம் திரும்பி கண்களில் கண்ணீர் வழிய அவனின் கண்களில் தெரிந்த காதலில் தன்னைத் தொலைத்தவள், அவனின் அருகில் வந்து,

“நீ சொன்னது போல செய்துவிட்டேன் கதிர்! நான் இவர்களைக் கஷ்டபடுத்த மனம் இல்லாமல் தான் இந்த காரியத்தை செய்தேன்.. ஆனால் இதெல்லாம் உனக்காக.. உன் மீது கொண்ட காதலுக்காக செய்தது.. ஆனால் என்னையே மனதில் நினைத்திருக்கும் என்னோட மாமன் மகனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்..?” என்று அவனிடம் கேட்டதும், அவன் அவளைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டினான்..

“அதை உன்னோட மாமன் மகனிடமே கேட்கிறாயே கவி..?” என்று அறையை விட்டு வெளியே வந்தாள் நிஷா.. நிஷாவின் குரல் கேட்டு திரும்பிய கவி திகைத்தாள்..

இவள் கீழே வருவதைக் கவனித்த ரவிவர்மா, நிஷா இருவரும் விருந்தினர் அறையின் உள்ளே சென்றுவிட்டனர்.. அவளின் கண்ணின் முன்னே தாங்கள் இருவரும் இருந்தால் அவளுக்கு சந்தேகம் எழும் என்று அவர்கள் அறையின் உள்ளே சென்றுவிட்டனர்..

அதுவும் இப்படி ஒரு சூழலில் அவளை அங்கே எதிர்பார்க்காதவள், “நிஷா நீ இங்கே..?!” என்று குழப்பத்துடன் கேட்டவளின் மனம்,

‘இவளுக்கும் இந்த நேரம் அங்கே திருமண ஏற்பாடுகள் நடக்குமே..?’ என்று மனதில் தனக்கு தானே கேட்டாள்

“நாங்க வந்தது இருக்கட்டும்.. உன்னோட மாமன் மகனை அடையாளம் தெரியுதா..?” என்று நிஷா சிரிப்புடன் கேட்டதும் அவளின் பின்னோடு இருந்த அனைவரின் முகத்தைப் பார்க்க அவர்கள் முகம் மலர, திரும்பி கேள்வியாக கதிரின் முகத்தைப் பார்த்தாள்..

அவனின் கண்களில் இருந்த குறும்பைக் கண்டு, அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் அவனையே பார்த்தவளின் முகத்தைக் கையில் ஏந்தி, “உன்னோட மாமன் மகனிடம் எனக்கு கதிரைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடு..” என்று சொல்ல,

அதுவரை நடந்த எதுவும் புரியாமல் இருந்தவள், “நீங்க என்னோட மாமன் மகனா..?” என்று கேட்டதும் அவளைப் பார்த்து கண்ணடித்தான் கதிர்நிலவன்..

“அப்புறம் எதற்கு இந்த விளையாட்டு..” என்று கேட்டதும், “நேரடியாக கேட்டால் நீ உண்மையைச் சொல்ல மாட்டாய்.. அதுதான் இந்த விளையாட்டு..” என்று கூறியதும் அவள் எதுவும் சொல்லாமல் மாடியேறி சென்றுவிட்டாள்..

அவளின் அறைக்கு சென்றவள் கதவைத் தாளிட்டுவிட்டு அப்படியே சரிந்து அமர்ந்து அழுக ஆரமித்தாள்.. ஒருப்பக்கம் சந்தோசமாக இருந்தாலும் நிஷாவின் வாழ்க்கையைக் கேடுத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு நெஞ்சில் உறுத்தியது..

அவளின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்க விரும்பியவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.. அவள் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று கதவை சாத்தி தாளிடுவதைப் பார்த்து அனைவரின் மனமும் பயத்துடன் அவளின் அறையை நோக்கியது..

அவளின் செல்வதை வைத்தே விபரீதத்தைக் கணித்தவன், அவளின் பின்னோடு செல்ல நினைக்க, “ஏண்டா இப்படி படுத்தி எடுக்கிறாய்..? கதிர் உன்னோட விளையாட்டுக்கு அளவே இல்லையா..?” என்று வசந்தி கேட்டதும், அவர்களுக்கு பதில் சொல்ல அவனது கவனம் இங்கே இல்லை.. அவனின் கவனம் எல்லாம் கவியின் மீது இருந்தது..

“ஹலோ கவி.. என்னடி செய்ய போகிறாய்..?” என்று பயத்துடன் ஹாலில் இருந்து குரல் கொடுக்க, “உன்னோட அந்த பயமே சொல்லும் கதிர் நான் என்ன செய்ய போகிறேன் என்று..!” அவள் கூறியதும் அவனுக்கு அடிவயிற்றில் பகீரென்றது.. அவன் கவியின் அறையை நோக்கி வேகமாகச் சென்றான்..

அவனின் பதட்டம் அனைவரையும் தொற்றிக்கொள்ள, அவர்களும் அவனின் பின்னோடு கவியின் அறையை நோக்கிச் செல்ல, “நீங்கள் யாரும் வரவேண்டாம்.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொன்னவன் அவர்களை கீழே அனுப்பிவிட்டு அவளின் அறையை நோக்கிச் சென்றான்..

அவன் மனம் பயத்தில் படபடவென அடிக்க, அவளின் அறை முன்னே சென்று நின்றவன், “கவி கதவைத் திற.. நான் கதிர் வந்திருக்கிறேன்..” என்று அவன் சொல்ல அந்த அறையில் எந்த சத்தமும் இல்லை..

அவன் கதவை பலமாகத் தட்டி, “ஏய் கவிமலர் கதவை திற.. எந்த தப்பான முடிவும் எடுக்காதே.. உன்னைப் போலத்தான் நானும்.. உன்னைத் தவிர வேறொருத்தியின் கழுத்தில் தாலிக்கட்ட என்னால் முடியாதுடி.. எனக்கு என்னோட மலர் மட்டும் தான் வேண்டும்..” என்று அவன் புலம்பியபடியே கதவைத் தட்ட, கதவுகள் திறந்தது..

அவன் பயத்துடன் உள்ளே செல்ல, அவளின் கண்முன்னே அவள் நின்ற கோலம் கண்டு வியந்தான் கதிர்நிலவன்.. அவன் வாங்கிக் கொடுத்த சேலையில் தேவதை போல அழகாக நின்றிருந்தாள் கவிமலர்.. அவளின் அத்தைக் கொடுத்த நகைகள் அவளை அலங்கரிக்க, அவள் சூடிய மல்லிகை அவளின் அழகிற்கு அழகு சேர்க்க, அவனின் கண்களை அவனால் நம்பமுடியவில்லை..

அவனின் பார்வைக் கண்டு, “எப்படியும் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று முடிவெடுத்தாச்சு.. அதுதான் இந்த புடவைக் கட்டிப் பார்க்கலாம் என்று கட்டினேன்.. இந்த புடவையில் எப்படி இருக்கிறேன்..” என்று குறும்பாகக் கேட்டவளை அதிசயத்தைப் பார்ப்பது போல பார்த்தான் கதிர்நிலவன்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அடுத்த நொடியே அவள் செய்ய இருந்த காரியம் மனதில் தோன்ற, அவனின் கைகள் அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது.. அவன் அடியில் தனது இடது கன்னத்தைக் கைகளால் தாங்கிய வண்ணம் நிமிர்ந்தவளின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரை வெளிவிடவில்லை..

“உனக்கு எல்லாவற்றிலும் விளையாட்டா.? மனுசனை கொஞ்சநேரத்தில் என்ன பாடுபடுத்திவிட்டாய்..?” என்று கேட்டவன் தொப்பென்று சோபாவில் அமர, ‘நீ மட்டும் இந்நேரம் வரையில் என்னைப் படுத்தவில்லையா..? நீயும் கொஞ்சம் அனுபவி மகனே..’ என்று மனத்திற்குள் நினைத்தாள்..

அவள் அப்படியே அமைதியாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு கோபம் வந்தது.. “அப்படியே மரம் மாதிரி நிற்கிறாய்.. கொஞ்ச நேரத்தில் எனக்கு உயிர் போய் உயிர் வந்தது எனக்கு தானே தெரியும்.. உனக்கு எப்பொழுதுமே என்னோட மனம் புரியவே புரியாத..?” என்று வருத்ததுடன் கேட்டான்..

அவனின் குரலில் இருந்த வருத்தம் அவளை பாதிக்கவே இல்லை.. அவள் இன்னும் சிலைபோலவே நின்றாள்.. அவள் அப்படி நிற்பதைப் பார்த்து, “மலர்..?!” என்று அவன் அழைக்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஒரே நாள் மட்டும் நேரில் பார்த்துவிட்டு காதலிக்க ஆரமித்து கடிதம் வழியாக காதலை எனக்கு உணர்த்திய உனக்கே இந்த அளவிற்கு மனம் வலிக்கிறதே..” என்று அவள் சொல்லி நிறுத்த அவன் அவளைப் பார்த்துக் கொண்டே அவள் பேசுவதில் கவனம் செலுத்தினான்..

“உன்னை நான் காதலித்தது நீ அனுப்பிய கடிதத்திற்காக என்று நினைக்கிறாயா கதிர்..?” என்று அவள் கேட்டதும் அவனுக்கு எதுவும் புரியாமல் ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைக்க,

“இத்தனை எனக்காக செய்த நீ உன்னை நான் எப்பொழுது பார்த்தேன்..? எப்படி காதலிக்க ஆரமித்தேன் என்று உனக்கு தெரியுமா..?” என்று கேட்டதும் அவனுக்கு குழப்பமே அதிகரித்தது..

‘மகனே என்னை எப்படி எல்லாம் தவிக்க விட்ட, இன்னும் இரண்டு நாளுக்கு மனதில் குழப்பத்துடனே சுற்று நான் சொல்ல மாட்டேன்..’ என்று மனதில் நினைத்தவள், காதில் கேட்டது நிலாவின் குரல்!

“இன்னும் என்ன பேச்சு..? இருவரும் சீக்கிரம் வாங்க நிச்சயதார்த்தத்திற்கு நேரம் ஆகிறது..” என்று குரல் கொடுக்க, அவனின் பக்கம் திரும்பியவள்,

“நான் உண்மையைச் சொல்வேன் ஆனால் அது நம்முடைய திருமணத்திற்கு பிறகுதான்..” என்று அவள் குறும்பாகக் கண்சிமிட்டிச் சொல்ல,

“பெரிய சிதம்பர ரகசியம் பாரு..” என்று கூறியவன், படுக்கையில் இருந்து எழுந்து, அவளை அருகில் இழுத்து அவளின் சிற்பி உதட்டில் முத்தம் பதித்து நிமிர்ந்தவன், “உனக்கு இதுக்கெல்லாம் சேர்த்து இருக்குடி..” என்று சொல்லி அவளைக் கீழே அழைத்து செல்ல,

நிஷா அவளிடம் வந்து, “என்னை மன்னித்துவிடு கவி..” என்று சொல்லவும், “உன்னோட அப்பாவின் மீது வைத்திருந்த பாசம் தான் நீ அப்படி செய்ய காரணம் அதனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..” என்று சொல்லவும்

அவளின் அருகில் வந்த வசந்தி, “என்னம்மா உனக்கு என்னோட மகனைப் பிடித்திருக்கிறதா..?” என்று சிரிப்புடன் கேட்டதும்,

இல்லை என்று தலையசைத்தவளைப் பார்த்து கதிர் அவளை முறைக்க, “எனக்கு என்னோட கதிரைப் பிடித்திருக்கிறது..” என்று கூறியவளைப் பார்த்து அனைவரின் முகத்திலும் சந்தோசம் நிலையாக மலர்ந்தது.

அன்று அவள் கனவில் கண்டது போலவே அவளின் தளிர் விரலைப் பிடித்து கண்களில் காதல் மின்ன அவளின் கண்களில் தெரிந்த சந்தோசத்திலும், அவளின் உதட்டில் மலர்ந்த புன்னகையிலும் தன்னுடைய காதல் வெற்றி பெற்றதை உணர்ந்தவன் அவளின் கையில் மோதிரத்தை அணிவித்தான்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஒருவழியாக கதிர் கவி சேர போறாங்க இந்த வாலுகள் அட்டகாசம் தாங்கலைடா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top