• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 35 Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 35

சென்னையில் இருந்து காரில் கிளம்பியவர்கள், மறுநாள் காலையில் திருப்பூரில் இருந்தனர்.. அங்கே இருக்கும் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் அவனின் சொந்தபந்தங்கள் முன்னிலையில் கவிமலரின் கழுத்தில் தாலி கட்டினான் கதிர்நிலவன்..

அவன் குங்குமத்தை அவளின் நெற்றி வகிட்டில் வைக்கும் பொழுது, “இந்த நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் பாக்கியம் எனக்கே கிடைத்துவிட்டது..” என்று அவளின் காதுகளில் கிசுகிசுக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவளின் கண்களில் தனது கனவு பலித்துவிட்டது என்ற சந்தோசம் நன்றாகவே தெரிந்தது..

கவிமலரின் கண்களில் இருந்த காதலை உணர்ந்தவன், “என்னடி இந்த பார்வை பார்க்கிறாய்..?” என்று கேட்டவன் அவளின் கண்களைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்ட அவனைப் பார்த்து வெக்கத்தில் தலை குனிந்தாள் கவிமலர்..

அதே நாளில் அடுத்த முகூர்த்ததில் நிலா – முகிலன், நிஷா - அவினாஷ் இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடக்க மூன்று ஜோடிக்கும் ஒரே நாளில் திருமணம் முடிய இவர்களின் திருமணத்திற்கு ஐந்து மாத கர்ப்பிணியாக வந்தாள் முகிலினி – அகிலன் இருவரும்..! அங்கே மகிழ்ச்சிக்கு அளவு இல்லாமல் போனது.. பகல் ஓடி மறை இரவும் வந்து சேர்ந்தது..

முகிலனின் வீட்டில் நிலா – முகிலன் இருவருக்கும் முதலிரவை ஏற்பாடு செய்தனர் பெரியவர். நிலாவிற்கு நல்ல தோழியாக இருந்த கவிமலர் அவளுக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்துவிட, “ஏய் புதுபொண்ணு நீ இங்கே என்ன செய்கிறாய்..?” என்ற கேள்வியுடன் அந்த அறைக்குள் வந்தாள் முகிலினி..

முகிலினியைப் பார்த்து சிரித்த கவிமலர், “உனக்கு கண்ணு தெரியாவில்லையா..?! நிலாவிற்கு அலங்காரம் செய்கிறேன்..” என்று அவள் சாதாரணமாகச் சொல்ல, “ஏய் லூசு உனக்கும் இன்றுதான் முதலிரவு..” என்று முகில் சொல்ல, “அதுபற்றி இப்பொழுது என்ன கவலை..?” என்று கேட்டவள் நிலாவிற்கு அலங்காரத்தை முடித்துவிட்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள்..

கவியின் கேள்விக்கு முகிலினி பதில் சொல்லும் முன்னாடியே, “என்னடி எந்த கவலையும் இல்லையா..?” என்று கேட்ட நிலா, “நீயும் உட்காரு நான் உனக்கு அலங்காரம் செய்து விடுகிறேன்..” என்று சொல்ல, “எனக்கு எந்த அலங்காரமும் வேண்டாம் நிலா..” என்று சொன்ன கவியைப் புரியாமல் பார்த்தனர் நிலாவும், முகிலினியும்!

அவர்களின் முகத்தைப் பார்த்து சிரித்த கவி, “நானும், கதிரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை போக போகிறோம்.. அதனால் எனக்கு எந்த அலங்காரமும் வேண்டாம்..” என்று இருவருக்கும் கவி விளக்கம் கொடுக்க, “கவி போகலாமா..?!” என்று கேட்டவண்ணம் அந்த அறையின் வாயிலில் நின்றான் கதிர்நிலவன்..

அவர்கள் இருவரையும் பார்த்த பெண்கள் இருவரும் திகைக்க இந்த விஷயம் அங்கே இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்பதால் அனைவரும் அமைதியாகவே இருந்தனர்..

கதிரின் அருகில் வந்த முகிலன், “மணியைப் பார்த்தாயா..?!” என்றது கையில் கட்டி இருந்த வாச்சைப் பார்த்தவன், “ம்ம் மணி எட்டு.. நாங்க சென்னை போய் சேரும் பொழுது ஒன்பது மணிதான் இருக்கும்..” என்று சொல்ல, “இப்பொழுது நீ போய் தான் ஆகணுமா..?” என்று கேட்டான் முகிலன்..

“எனக்கு இப்பொழுது சென்னை போய் தான் ஆகணும்..” என்று ஒருவிதமான அழுத்தத்துடன் சொன்ன கதிர், “கவி..” என்று அழைக்க அவளும் புன்னகையுடன் வருவதைப் பார்த்த முகில் நிலாவின் அருகில் வந்து, “இதுக இரண்டும் சொன்னால் கேட்க போவது கிடையாது நிலா..” என்றவன், “அப்பா சாமிகளா கிளம்புங்க..” என்று சொல்லி இருவரையும் சந்தோசத்துடன் அனுப்பி வைத்தான்..

அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களை சந்தோசத்துடன் வழியனுப்பி வைக்க அவர்களிடம் விடைபெற்று சென்றனர் கதிரும் கவியும்! அவர்கள் சென்றதும் நிலாவை அவளின் அறைக்கு அனுப்பிவிட்டு மற்றவர்கள் கவியின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்..

அவர்கள் சென்றதும் அறைக்குள் வந்த நிலாவை அணைத்துக் கொண்டான் முகிலன்.. அவனின் அணைப்பில் அவனின் மார்பில் சாய்ந்தாள் நிலா.. நிலாவின் இடையோடு சேர்ந்து அணைத்த முகிலன், “நிலா என்னால் இப்பொழுது கூட நம்பவே முடியலடி நீ என்னோட கைக்குள் இருக்கிறாய்..” என்று முகிலன் காதலோடு சொல்ல, அவனின் கையைக் கிள்ளி வைத்தாள் நிலா..

“ஸ்ஸ்ஸ்..” என்னடி இப்படி கிள்ளுகிறாய்..” என்று கேட்டதும் அவள் அமைதியாக இருக்க அவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தான் முகிலன். அவள் கண்கள் இரண்டும் கலங்கி இருப்பதைப் பார்த்தவன்,

“எதுக்குடி இப்ப நீ கண்கலங்குகிறாய்..?!” என்று கேட்டதும், அவனை நிமிர்ந்துப் பார்த்த நிலா, “எத்தனை நாள் காத்திருப்பு முகில் இது..?!” என்று கேட்டதும், அவள் சொல்ல வருவது புரிந்து நிலாவை அணைத்துக் கொண்டான் முகிலன்..

அவனின் அணைப்பில் பாதுகாப்பை உணர்ந்தவள், “எனக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் இனிமேல் எனக்கு வராது முகில்.. எனக்கு நீ இருக்கிறாய்..” என்று அவள் காதலோடு சொல்ல அவளை காதலோடு அணைத்துக் கொண்டான் முகிலன்.

“உனக்கு எல்லாமாக நான் இருக்கும் பொழுது உனக்கு எதுக்குமா அந்த எண்ணம்..?!” என்றவன் அவளை வேறுபக்கம் திசை திருப்ப, “காதலி என்னை கொஞ்சம் கவனித்தால் என்ன..?!” என்று கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவனின் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டு அவனின் நெஞ்சில் குத்தினாள்..

அவளின் அடிகளை பெற்றுக் கொண்டு சந்தோசமாக புன்னகை பூத்தான் முகிலன்.. அவர்களின் காதல் நல்லபடியாக வெற்றி பெற வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நிலாவை அழைத்துச் சென்றான் முகிலன்..

கவியை அழைத்துக் கொண்டு ப்ளைட்டில் சென்னை வந்து சேர்ந்தான் கதிர்நிலவன்..! ஏர்போர்ட் விட்டு வெளியே வந்ததும், அவளோடு காரில் ஏறியவன் காரை நிறுத்திய இடம் கண்டு திகைத்தவள், “கதிர்..” என்று அழைக்க அவளைப் பார்த்து புன்னகை பூத்தவன், “இறங்கு மலர்..” என்றவன் சொல்ல இருவரும் இறங்கிய இடம் கவியின் சொந்த பிளாட்.

அங்கே காரைப் பார்க் செய்தவன், அவளின் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்ல கவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வீட்டின் கதவை திறந்தவன் அவளை வீட்டின் உள்ளே இழுத்துக் கதவை தாழிட்டான்..

அவளின் விழிகள் இன்னமும் திகைப்பு மாறாமல் இருப்பதைப் பார்த்த கதிர், “என்ன மலர் இந்த இடம் எனக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறாயா..?!” என்று கேட்டதும் அவள் ஆமாம் என்று தலையசைக்க, “நீ கல்லூரி படிக்கும் பொழுது இங்கே உன்னை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன்..” என்று கூறியவன் கதவோடு சாய்ந்து நிற்க அவள் அவனையே பார்த்தாள்..

அவள் விழிகள் இரண்டும் அவன் மீதே மையம் கொள்ள, “என்னடி இந்த பார்வை பார்க்கிறாய்..?” என்று காதலோடு கேட்டான் கதிர்..

“இல்ல கதிர் இதுவும் என்னோட கனவோ என்று யோசிக்கிறேன்..” என்று அவள் காதலோடு சொல்ல,

அவளின் அருகில் வந்த கதிர், அவளின் முகத்தை ஒரு விரலால் அளந்து அந்த விரல்கள் வந்த வழியே தனது உதடுகளில் ஊர்வலம் நடத்தினான்.. கண், மூக்கு உதட்டின் அருகில் வந்ததும் அவளின் முகத்தைப் பார்த்தவன், “கனவு இல்ல மலர் நிஜம் தான்..” என்று சிரிப்புடன் கூறியதும் அந்த மயக்கத்தில் இருந்து வெளி வராமல் அவள் கண்ணை மூடியே நிற்க,

“ஏய் மலர் கண்ணைத் திறந்து என்னைப் பாரு..” என்று கதிர் சொல்ல, “ம்ஹும்..” என்று மட்டும் கூறியவளை அருகில் இருந்த சுவற்றில் சாய்த்து நிறுத்தியவன்,

“இப்பொழுது நீ கண்ணைத் திறக்க போகிறாயா..? இல்லையா..?” என்று கேட்டதும் அவள் வீம்பாக கண்ணை மூடியே இருக்க அவளின் முகத்தைப் பார்த்தவன் அவளின் இதழோடு இதழ் பொருத்தினான்..

அந்த இதழ் தேனை பருகியவன் அவளை நிமிர்ந்து பார்க்க அவளின் முகம் செந்தாமரை மலர் போல மலர்ந்திருக்க, “என்னை எப்படி காதலிக்க ஆரமித்தாய் மலர்..” என்று அவன் கேட்ட கேள்வியில் பட்டென்று கண்திறந்து அவனைப் பார்த்தவளின் இடையோடு கைகொடுத்துத் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்..

அவளைப் படுக்கையில் விட்டு தூக்கி தனது மார்பில் போட்டுக் கொண்டு, “இப்பொழுது சொல்லு என்னை நீ எப்பொழுது காதலிக்க ஆரமித்தாய் மலர்..?” என்று கேட்டதும், அவனை நிமிர்ந்து பார்த்த கவி,

“என்னோட கனவில் தான் கதிர் உன்னை முதல் முறையாக பார்த்தேன்..” என்று அவள் சொன்னதும், அவனுக்கு அதிர்ச்சியாக இருக்க அந்த அதிர்ச்சியுடன் அவளை நோக்கினான் கதிர்..

அவனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவள், “நிஜம்தான் கதிர்.. என்னோட கனவில் தான் உன்னை நான் முதல் முதலாக சந்தித்தேன்.. அந்த சந்திப்புதான், என்னோட மனதில் காதல் வரக்காரணம்..” என்று சொன்னதும், அவன் திகைப்புடன் அவளைப் பார்க்க அவளோ அவனின் மார்பில் சாய்த்துக் கொண்டு அவனையே பார்த்தாள்..

பிறகு கவியே, “நம்பவே முடியல இல்ல.. ஆனாலும் நீ நம்பித்தான் ஆகணும்.. என்னோட முதல் கனவில் தான் உன்னோட பெயரை நான் அறிந்துக் கொண்டேன்.. இரண்டாவது கனவில் என்னிடம் காதலைச் சொல்லி என்னோட கையில் மோதிரத்தைப் போட்டுவிட்டு புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தாய்.. அடுத்த கனவில் உன்னைக் கோவிலில் பார்த்தேன்..” என்று சொன்னவள் தன் கண்ட கனவுகளை கூறினாள்..

“அதுமட்டுமா..? அடுத்து உன்னோட கடிதம் வந்ததும் குழப்பத்தில் பலநாள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.. நான் உன்னை நேரில் சந்தித்தப்பிறகு நான் அழுகாத நாளே இல்லை.. இருந்தாலும் மனதில் ஒரு சந்தோசம்..” என்று கண்கள் பளபளக்க கூறினாள்..

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவனின் மீதான காதல் வெளிப்படையாகவே தெரிந்தது.. அவள் அருவி போல தனது மனதில் இருப்பதை அவனிடம் கொட்டித்தீர்க்க, அவன் திகைப்புடன் வாய்மொழி இன்று அவளையே பார்க்க, “எனக்கு கடிதம் எழுதிய நீ! என்னோட கனவில் வந்தும் நீ என்பதில் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா..?” என்று கேட்டதும், அப்பொழுது நிலா சொன்னது அவனின் ஞாபகத்திற்கு வந்தது..

உடனே அவளின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தவன், “எனக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் தெரிந்து வைத்திருந்தும், நான் முதன் முதலாக உன்னோட வீட்டிற்கு வந்ததும், ‘இத்தனை நாள் கனவில் வந்து கொன்றான்.. இப்பொழுது நேரிலும் வர ஆரமித்துவிட்டாயா என்று கேட்டதும் இந்த கனவின் தாக்கத்தில் தானா..?” என்று கேட்டதும் அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவளைப் பார்த்த அவனின் மனம், ‘நான் அனுபவித்ததை விடவும் பலமடங்கு அவள் அனுபவித்திருக்கிறாள்..’ என்று உணர்ந்தவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, அவனின் அணைப்பில் அமைதியாக அடங்கினாள் கவி.. ஆனாலும் அன்று அவள் நிஷாவைத் திருமணம் செய்ய சொன்னது அவனின் நினைவிற்கு வர,

“அதுக்கு என்னை நிஷாவைத் திருமணம் செய்ய சொல்வாயா..? அந்த கடிதத்தை நீ எழுதாமல் பழியை மட்டும் உன்மேல் போட்டுக் கொண்டாயே..?” என்று ஆதங்கத்துடன் அவன் கேட்டதும்,

அவனை நிமிர்ந்து பார்த்த கவி, “எனக்கு மட்டும் ஆசை பாரு! அவளைக் காட்டிக்கொடுக்க மனம் வரவில்லை.. நான் என்ன பண்ணட்டும் எனக்கும் வேற வழி தெரியலடா..” என்று வருத்ததோடு சொன்னாள்.. அவனோ அவளைக் கேள்வியாகப் பார்த்தான்..

“அதுக்கு என்னையே அவளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பாயா..?” என்று கோபமாகக் கேட்டவன் அவளின் இதழ்களில் அவனின் கோபத்தைக் காட்ட அவள் சந்தோசமாக அவன் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொண்டாள்..

பிறகு அவனின் அணைப்பில் அடங்கியவள், “நான் அவளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது உன்னோட குணம் எனக்கு தெரியும் கதிர்.. நீ என்னைத் தவிர வேறு யார் கழுத்திலும் தாலி கட்ட மாட்டாய் என்று எனக்கு நன்றாக தெரியும்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல,

“என்ன இதையும் கனவில் தான் கண்டாயா..?” என்று அவன் துள்ளலுடன் கேட்டதும், அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “உனக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டாள்

அவளின் விழிகளில் மயங்கியவன், “ம்ம் நானும் கனவு கண்டேன்..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, அவனின் மார்பில் குத்தியவள், “பொய் சொல்லாதடா..” என்று சிணுங்கவும்,

அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் விழிகளைப் பார்த்தவன், “இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு எதுக்கு என்னை பயமுறுத்தினாய்..” என்று கேட்டதும், அவனின் விழிகளைப் பார்த்தவள்,

அவனின் பார்வை புரிந்து, “நான் எப்படி பேசினால் நீ இங்கே வருவாய் என்று எனக்கு தெரியும்.. அதுதான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..” என்று சொன்னவளின் முகம் மலர்ந்திருந்தது.

இத்தனை வருட காதலில் இன்று தான் அவளின் முகத்தை அருகினில் பார்க்கிறான்.. அவளின் முகத்தைப் பார்த்தும், “இப்பொழுது இவ்வளவு பேசுகின்ற நீ அன்னைக்கு எதுக்கு அப்படி சொன்ன..?” என்று கேட்டான்..

“அப்பொழுது ஒரு கோபம் அதுதான் அப்படி சொன்னேன்.. அதுக்கு நீயும் நிஷாவோடு வந்து எனக்கு பத்திரிகை வைக்கிறா..?!” என்று அவனை அடித்தவள், “கடைசியில் எல்லாம் கூட்டு களவாணிங்க..” என்று திட்டியவள், “நான் காதலித்தது இந்த மக்குகளுக்கு எல்லாம் எப்படி தெரிந்து என்று தெரியவே இல்ல..” என்று கவி புலம்பவும் கதிரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. அவன் சிரிப்பதைப் புரியாமல் பார்த்தாள் கவிமலர்..

அவளின் பார்வை கண்ட கதிர், “இந்த விஷயம் தெரியாமல் இன்னுமா இந்த மண்டையைப் போட்டு உடைக்கிறாய்..?!” என்று அவன் சிரிப்புடன் கேட்டதும், அவளின் முகத்தில் குழப்பம் அதிகரிக்க, “நீதான் செல்லம் எல்லோரின் முன்னாலும் எனக்கு ஐ லவ் யூ சொன்னாய் மறந்துவிட்டதா..?” என்று கேட்டதும், அவளின் முகம் தெளியாமல் இருக்க அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்..

“நீ மழையில் நனைந்த அன்று சுயநினைவை இழக்கும் பொழுது என்னிடம் சொன்னாய்..” என்று கூறியவன், “என்னால் அந்த நாளின் தாக்கத்தை இன்னும் மறக்க முடியலடி.. கனவில் வந்த ஒருவன் நிஜத்திலும் வருவான் என்று எனக்காகவே காத்திருக்கிறாய் என்பது எனக்கு இப்பொழுது தான் தெரிகிறது..” என்றவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் கன்னத்தில் பட்டுத்தெறிக்க அவனை நிமிர்ந்து பார்த்த கவியின் கண்களும் கலங்கியே இருந்தது..

அவளின் கலங்கிய கண்களில் முத்தமிட்டு நிமிர்ந்த கதிர், “நான் உன்னை பார்த்தது முதல் எல்லாவற்றையும் உனக்கு கடிதம் மூலம் எழுதினேன்.. ஆனால் நீ கனவில் வந்த எனக்காக எதிர்பார்ப்பு இல்லாமல் காதலித்து இருக்கிறாய்..?!” என்றவன் அவளின் மௌனம் கண்டு,

“என்னைவிட உனக்கு தாண்டி வலி அதிகம் இருந்திருக்கும்.. கனவில் நடக்கும் எல்லா விஷயமும் பலருக்கு நிஜத்தில் நடப்பது இல்லை.. அப்படி அந்த கனவுகள் பலிக்காமல் இருந்தால் என்ன செய்திருப்பாய்..?” என்று அவன் கேட்டதும், அவளின் மௌனம் விட்டு வெளி வந்தவள்,

“காலம் முழுவதும் இந்த கனவில் வந்த கள்வனை தேடியே என்னோட காலத்தைக் கடந்திருப்பேன்..” என்று அவள் காதலோடு சொல்ல அவளின் முகத்தை இரு கைகளிலும் தாங்கியவன் அவளின் முகம் முழுவதிலும் முத்தம் பதிக்க அவளின் முகம் அழகாக சிவந்து அவளின் இதழ்கள் அழகாக மலர்ந்தது.. அவனின் காதலை அவன் முத்தத்தில் வெளிபடுத்த அவன் கொடுத்த அச்சாரத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்..

அவளின் முகத்தில் முத்தமிட்டு நிமிர்ந்த கதிர், அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்து, “எனக்கு நீ வேண்டும் என்று கண்ணம்மா..” என்று அவன் காதலோடு சொல்ல அவனின் கைகளில் தன்னை ஒப்படைத்தாள் கவிமலர்..

அவளின் விழியசைவில் அவளின் அனுமதியைப் பெற்ற கதிர் அந்த மலரிடம் தனது காதலைக் காட்ட அவனின் காதலில் பாவை அவள் மெழுகாய் உருகினாள்..

தனது காதல் கைகூடிய சந்தோஷத்தில் கனவில் வந்த அந்த கள்வனின் மார்பில் நிம்மதியாகத் துயில் கொண்டாள் கவிமலர்.. அவளை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அவளின் காதலில் அவளின் கரம்பிடித்த அந்த கள்வனும் நிம்மதியான துயில் கொண்டனர்.. இரு உள்ளங்களும் இணைந்து காதல் என்ற ஒரு கனவை கண்டனர்..

கனவுகள் என்றும் பொய்யாகப் போவது கிடையாது.. அந்த கனவுகள் பலிக்கும் பொறுமையோடு நாம் காத்திருந்தால்...!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top