• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vantha Kalvane...! - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 16

மறுநாள் காலையில் முகிலன் சென்னை செல்ல இரயில் டிக்கெட் பதிவு செய்தான். அதன்பிறகு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்தவன், “அம்மா நான் இன்று சென்னை கிளம்புகிறேன்.” என்று கூறினான்

“என்னடா முடிவு எடுத்திருக்கிறாய்..?” என்று தேவகி அவனிடம் கேட்டார்..

“சென்னை சென்ற ஒருமாதத்தில் பதில் சொல்கிறேன் அம்மா..” என்றவன், தன் அறைக்குள் வந்து அந்த கடிதத்தை மறக்காமல் எடுத்து வைத்தான்.

அவனுக்கும் அந்த கடிதத்தைப் பற்றிய பின்னணியை அறியவேண்டிய அவசியம் இருந்தது. அந்த நேரம் தேவகியைப் பார்க்க நிலா வந்தாள்.

“அத்தை..” என்ற அழைப்புடன் உள்ளே வந்தவள், சமையல் அறையில் தேவகி இருப்பதைப் பார்த்து அங்கே சென்றாள்..

“வாம்மா நிலா.. என்ன காலையில் இந்த பக்கம்..?” என்றார் புன்னகையுடன்

“நான் ஊருக்கு செல்கிறேன் அத்தை” என்றவள் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கி நிற்க, அவளின் தயக்கத்தைப் பார்த்தவர்,

“என்னம்மா ஏதாவது சொல்ல வேண்டுமா..?” என்று கனிவுடன் கேட்டார்..

“அத்தை ரொம்ப நன்றி..” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் நிலா கண்களில் கண்ணீருடன்

“என்ன நிலா என்ன பண்ணுகிறாய்..?” என்று அவளின் செய்கைப் பார்த்து பதறியவர் அவளின் கையை கீழே இறக்க, “இரண்டு வயதில் அம்மாவின் முகத்தைப் பார்த்தது.. அவர்களின் இறப்பிற்குப் பிறகு அம்மாவின் நேசத்தை உங்களிடம் பார்த்திருக்கிறேன்.. இந்த இரண்டு நாளை என்னால் மறக்க முடியாது..” என்றவள் நிறுத்தி பிறகு தொடர்ந்தாள்..

“அத்தை கவியைக் கொஞ்சம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.. அவளுக்கும் வாழ்க்கையில் ஏதோவொன்று நடந்திருக்கிறது.. அவளைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.. .. நான் செல்கிறேன் அத்தை..” என்று சொன்னாள் நிலா..

“என்னிடம் அடிவாங்க போகிறாய், போய்ட்டு வருகிறேன் என்று சொல்லு..” என்று அவளைக் கடிந்துக் கொண்டவர்..

“பத்திரமாக போகவேண்டும்.. போனவுடன் கவிமலருக்கு போன் பண்ணு.. நல்ல சாப்பிட வேண்டும்..” என்று அறிவுரை வழங்கியவர்..

“எதையும் நினைத்து மனத்தைக் குழப்பிக்கொள்ள கூடாது..” என்று அவளை அணைத்துக் கொண்டவர்..

“பத்திரமாக இரும்மா..” என்று பலமுறை சொன்னவர், அவளிடமிருந்து விலகி அறைக்குள் சென்று திரும்பி வந்தார்.. அவளுக்கு எடுத்த சேலையை அவளிடம் கொடுத்தவர், “இந்த உனக்கு நான் எடுத்த சேலை” என்று அவளிடம் கொடுத்தவர்..

“அத்தை இது எனக்கு வேண்டாம்..” என்று நிலா மறுக்க, “அத்தை சொன்ன கேட்க வேண்டும்” என்று அதட்டியவர் அதட்டலில் அதை வாங்கிக் கொண்டாள்..

அதன் பிறகு அவள் கிளம்பிச் செல்ல, அவளை இரயில் நிலையம் அழைத்துச் செல்ல தயாராகக் காத்திருந்தாள் கவிமலர். இவளும் ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள இருவரும் செல்வதைப் பார்த்தவர் உள்ளே சென்றார்..

நிலா செல்வதை மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.. மாலையில் முகிலனும் கிளம்பிச் சென்றான்.

அவர்கள் இருவரும் சென்ற பிறகு, தனது தேர்விற்கு படிக்க முழு மூச்சாக இறங்கினாள். அவளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற நன்றாக படித்தாள்

இடையே நிலா பலமுறை அழைத்துப் பேசினாள்.. முகிலன் கவிமலரைப் பற்றி விசாரித்துக் கொண்டான்.. வாரத்தில் ஒருமுறை கவிமலரை அவளே அறியாத வண்ணம், நேரில் வந்து பார்த்துச் சென்றான் கதிர்நிலவன்.

நாட்கள் செல்ல அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க, படிப்பு முடிந்தது என்ற பெருமூச்சுடன் வீட்டிற்கு வந்தாள் கவிமலர். இன்னும் பன்னிரண்டு நாளில் அவளின் பிறந்தநாள்!

அந்த நேரம் அவளது அலைபேசி அழகாக சிணுங்கியது.. ‘யார்..?’ என்ற கேள்வியுடன் அலைபேசியின் திரையைப் பார்க்க, அதில் இருந்த என்னைப் பார்த்தவள்,

“ஹலோ சார் நன்றாக இருக்கிறீங்களா..?” என்று உற்சாகத்துடன் கேட்டாள்..

“ம்ம் நன்றாக இருக்கிறேன் கவிமலர்.. தேர்வுகள் அனைத்தும் முடிந்ததா..?” என்று கேட்டார் ராமன்

“ம்ம் இப்பொழுதுதான் தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்குள்ளே வருகிறேன்..” என்று பதில் சொல்ல,

“கவிமலர் நாளைக்கு என்ன நாள் நினைவில் இருக்கிறதா..?” என்றார் ராமன் ஒரு புன்னகையுடன்

“வந்துவிடுகிறேன் சார்.. என்னுடைய திங்க்ஸ் அங்கே எனது அறையில் தானே இருக்கிறது..?” என்று கேட்டாள் கவிமலர்..

“ம்ம் அப்படியே இருக்கிறது. உனக்கு டிக்கேட் புக் பண்ணிவிட்டேன்.. டிக்கெட் வீட்டிற்கு வந்துவிடும் நாளை நீ இங்கே இருக்க வேண்டும்..” என்று சொன்னவர் போனை வைத்தார்..

அவர் போனை வைத்தவுடன் தேவையானவற்றை எடுத்து வைத்தவள், இரவு ரயிலுக்கு கிளம்புவதற்கு தயாரானாள் கவிமலர்..

தனது திங்க்ஸ் எடுத்துக்கொண்டு, “அம்மா நான் சென்னை செல்கிறேன் எப்படியும் இன்னும் பத்து நாளில் வந்துவிடுவேன்..” என்று சாவியை தேவகியிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.

இரவு ஒன்பது மணிக்கு இரயில் நிலையம் வந்தவள் ரயிலில் ஏறி அமர்ந்து, தான் வரும் நேரத்தை தெரிவித்துவிட்டு போனை வைக்க, இரயில் கிளம்பியது.

இரவுநேரம், இரயில் பயணம், குளிர்ந்த தென்றல் காற்று அனைத்தும் அவளை இனிமையாக இருக்கவே அவற்றை ரசித்தவண்ணம் உறங்கிபோனாள் கவிமலர்..

கடற்கரை மணலில் அமர்ந்திருந்தாள் கவிமலர். மாலை நேரம் சூரியன் தனது பணியை முடித்துவிட்டு வானத்தைக் காதலுடன் சிவக்க வைத்துவிட்டு மேற்கே மறைய தொடங்கியிருக்க.. அவளின் முன்னே பரந்துவிரிந்திருந்த கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும் சத்தம், எவ்வளவு உயரம் எழுந்தாலும் கடலின் கரையை நேசத்துடன் தொட்டுச் செல்ல,

காதலரின் காலடி சுவடுகளையும்

திருடிச் செல்லும் கடல் அலைகள்!

திருடிய சுவடுகள் கடலில் தொலைக்கிறது

எத்தனை முறை திருடினாலும்

கவலைக் கொள்கிறது அலைகள்!

கரையை கடக்க முடியவில்லை என்று!

எவ்வளவு உயரம் எழும்பினாலும் என்றுமே

கரையை கடக்காத கடலலைகள்!” என்ற கவிதை வரிகளே அவளின் மனதில் தோன்றி இதழ்கள் தானாக மலர்ந்து புன்னகை உதிர்ந்தது..

“என்னடா யோசனையில் இருக்கிறாய்..?! தனியாக அமர்ந்து தானாகவே சிரிக்கிறாய்..?” என்ற கேள்வியுடன் அருகில் அமர்ந்தான் கதிர்நிலவன்..

அவள் தனது மனதில் தோன்றிய கவிதையே சொல்ல, “காதலர்களின் காலடி சுவடுகளைத் திருடுவதும், அதை கடலில் தொலைப்பதுமே அலைகளின் முக்கிய வேலைப் போல..” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கேட்க,

“நாமும் நமது காலடி சுவடுகளைத் திருட கொடுப்போமா..?!” என்று ஆவலுடன் கேட்டாள் கவிமலர்.

அவள் கேட்டது அவனுக்குப் புரியாமல், “வேண்டாம்..!” என்று சொன்னவன், ‘அவள் உன்னுடன் கடற்கரையில் நடக்க நினைக்கிறாள்..’ என்று மனம் எடுத்துரைக்க,

“காலடி சுவடுகளை களவாடிச் செல்ல, அலைகள் ஆர்வமாக இருக்கிறது கரையில் கால்பதிக்க என்னுடன் நீ வருகிறாயா..?!” என்று அவளின் முன்னே தந்து வலது கரத்தை நீட்டியவன் ஒரு புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அவனின் கரத்தோடு தந்து கரத்தை இணைத்து எழுந்து, கால்களை அலைகள் தங்களின் கால்களை நனைத்து செல்ல, சிறிய புன்னகையுடன் அவனின் கரத்தோடு கரம் கோர்த்து அவனுடன் நடந்தாள் கவிமலர்.

“என்னோடு கைக்கோர்த்து நடக்க உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டான் கதிர்நிலவன் அவளின் முகம் நோக்கிக் கேட்டான்

“உன்னோடு கைக்கோர்த்து செல்வது போல, இப்படியே காலம் முழுவதும் என்னுடன் வருவாயா கதிர்..? இப்பொழுது என்னுடைய காதலனாக.. வருங்காலத்தில் எனது கணவனாக..” என்று கேட்டாள்

அதற்குள் அவர்கள் ஆள்நடமாட்டம் இல்ல இடத்திற்கு வந்திருக்க, அவனைக் கண்ணோடு கண்நோக்கிய கவிமலர், கண்களில் காதல் வழிய அவனைப் பார்த்தவள்,

“ஐ லவ் யூ கதிர்...!” என்று தனது நேசத்தை வெளிப்படுத்த அவளை அருகில் இழுத்து இறுக்கமாக அணைத்தவன், “உன்னிடம் இந்த ஐ லவ் யூவைக் கேட்க தவம் செய்தேன் கண்ணம்மா.. என்னுடைய தவத்தின் பலனாக உன்னிடம் அந்த நேசத்தைப் பெற்றுவிட்டேன்..” என்று அவன் காதலுடன் சொன்னான்

“மலர் செல்லம் உன்னுடன் இந்த ஐ லவ் யூவை வாங்க எவ்வளவு நல்லவனாக நடக்க வேண்டி இருக்கிறது..” என்று அவளின் அருகில் வந்தவனை கீழே தள்ளிவிட்டு கலகலவென்று சிரித்தவள்,

“அப்பொழுது நீ ரொம்ப கெட்டவனா கதிர்..?” என்று அவனைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கவிமலர்..

“எல்லோருக்கும் நான் ரொம்ப நல்லவன் மலர்” என்றவன் எழுந்து நின்று அவளை உச்சியில் இருந்து பாதம் வரை பார்த்தவன், “உன்னிடம் மட்டும் நான் ரொம்ப கெட்டவன் செல்லம்!” என்று அவளைப் பிடிக்க அருகில் செல்ல அவள் ஓடினாள்..
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கடற்கரை மணலில் மாலை வேளையில் இரண்டு காதல் குயில்களும் ஓடிப்பிடித்து விளையாட, அதைப் பார்க்க அலைகள் பாறையின் மேல் மோதி எட்டிப் பார்க்க முடியாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்தவண்ணம் இருந்தது.

அதற்கு பிறகு அவளை துரத்திப் பிடித்தவன், அவனது செயலின் மூலம் மொத்தமாக சிவக்க வைத்தான் கதிர்நிலவன்.. அவனின் தோளில் சாய்ந்துகொண்டு கண்மூடினாள் கவிமலர்..

எங்கிருந்தோ குயில் ஒன்று கூவ கனவு கலந்துக் கண்விழித்தாள் கவிமலர்.. இரயில் சென்னை எக்மோரில் நின்றிருந்தது.. அதன் பிறகு தனது திங்க்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினாள் கவிமலர்..

“அப்பாடா! சென்னை வந்தாச்சு!” என்று சிறு குழந்தைப் போல பேசியவள், “என்னோட செல்லம் வந்துவிட்டாள்..” என்று அவளின் முன்னே நின்றிருந்தார் ராமன்..

“சார் எப்பொழுது வந்தீங்க..?” என்றவள் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டவள், அவளின் பின்னே நடக்க, “நாளைக்கு கண்காட்சி கவி அதற்கு தயாராகி விட்டாயா..?” என்று கேட்டார் ராமன்

“முதல் பரிசு எனக்கு தான்..” என்றவள் அவருடன் காரில் ஏறிக்கொள்ள டிரைவர் காரை எடுத்தார்.. அவளது அப்பார்ட்மெண்டில் காரை நிறுத்தியவர், “இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, நாளைக்கு காலையில் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு வந்துவிடு கவி!” என்று சொல்லிவிட்டு சென்றார்..

அவளது அப்பார்ட்மெண்டில் அவளது ப்ளாட்டின் உள்ளே சென்றவள், “என்னதான் எத்தனை ஊர்கள் சென்றாலும், நம்முடைய இடத்திற்கு வருவது என்றுமே மனம் விரும்பும் ஒன்றுதான்!” என்று சொன்னவள் அறையைப் பார்க்க, அறை சுத்தமாக இருந்தது..

சமையல் அறைக்குள் சென்றுப் பார்க்க, சாப்பிடுவதற்கு சாப்பாடு முதல் கொண்டு அங்கே இருக்க, “சார் எல்லாவற்றையும் சரியாக செய்து வைத்துவிட்டார் போல!” என்று சொன்னவள் குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்கி எழுந்தாள்

பால்கனியில் சிறிது நேரம் நின்றவள் ஒரு முடியுடன் அந்த அறையைத் திறந்தாள்.. அதில் வரைவதற்கு அனைத்து உபகரங்களும் இருந்தது..

படங்களை வரைய ஆரமித்தாள்.. படங்களை வரைந்து முடிக்கும் பொழுது அன்றைய தினம் சென்றது.. இரவு பன்னிரண்டு மணிவரையில் வரைந்தவள் படங்களில் இருந்தைப் பார்த்து புன்னகையுடன் தூங்க சென்றாள்

மறுநாள் காலை அழகாக விடிந்தது.. கவிமலரும் அந்த ஓவிய கண்காட்சியில் பங்குக்கொள்ள சென்றாள் அவளின் ஓவியத்துடன்! ஒவ்வொருத்தரின் கைவண்ணம் ஒவ்வொரு விதத்தில் இருந்தது..

இவளின் படங்களும் அந்த வரிசையில் வைக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் நபரின் ஓவியத்தை வாங்கிக்கொள்வார்கள் நிறுவனத்தார்கள்.. அதில் வரும் பணத்தில் அவளுக்கு ஒரு கனவு இருந்தது..

அந்த போட்டியில் அவளது ஓவியமே தேர்ந்தெடுக்கப்பட்டது.. ஒரு தாய் தனது மூன்று வயது மகளுக்கு செடியை நடுவதற்கு கற்றுக் கொடுப்பது போல வரைந்திருந்தாள்.. அந்த குழந்தையின் தாய் அந்த கன்றை கையில் வேரின் கைப்பிடி மண்ணுடன் நடுவதுப்போல, அந்த குழந்தையும் சின்ன செடியை நட்டுவிட்டு தாயைப் பார்த்து சிரிப்பது போலவும் வரைந்திருந்தாள்..

பத்துநாள் கண்காட்சி இறுதி நாள் போட்டியில் வெற்றி பெற்ற ஓவியத்தை பற்றி சொல்வதாக சொல்ல, பத்துநாளும் அவளின் ஓவியத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது..

அவளின் வரை படங்கள் விற்பனையாக பத்தாவது நாள் அவளின் ஓவியம் ஒன்றை முதல் பரிசுக்குத் தேர்வு செய்தனர்..

அந்த ஓவியம் பற்றிய விளக்கத்தை அவளிடம் கேட்க, “இந்த நாட்டில் விவசாயம் என்பது மறைந்து வருகிறது.. ஒரு மரத்தின் நன்மையை நாம் இன்னும் அறியவில்லை.. அதேபோல ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஒருநாள் போதும்.. அதை வளர்க்க குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும். இதை இன்றைய சிறுவர்கள் உணரவே, குழந்தையின் முதல் தோழியும், ஆசிரியரும் அவளின் அம்மாதான். அந்த செயலை அவளின் குழந்தைகள் தங்களின் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்ற கருத்தை மனதில் வைத்து நான் இந்த ஓவியத்தை வரைந்தேன்..” என்று அவள் சொல்லி முடிக்க, அந்த அரங்கு கைத்தட்டலில் அதிர்ந்தது..

அந்த ஓவியத்தின் விற்பனை மூலம் அவளுக்கு ஐந்து லட்சம் வந்தது.. அதை அப்படியே ராமனிடம் கொடுத்தவள், “இந்தாங்க சார் அனாதைக் குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு எதோ என்னால் முடிந்தது..” என்று கொடுத்தாள்

“உனக்கு வேண்டும் என்ற பணத்தை எடுக்கொண்டு கொடும்மா..” என்று ராமன் அவளிடம் கூற

“அவரின் கையில் இருந்து இருபது ரூபாய் நோட்டை எடுத்தவள், கோவிலில் சாமி கும்பிட்டு காணிக்கை போடுவதற்கு இது போதும் சார்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.. அவள் சென்ற திசையைப் பார்த்து கண்கலங்கி நின்றார் ராமன்..

கவிமலருக்கு அதில் ரொம்ப நிம்மதியாக இருந்தது.. அப்படியே சென்று கடற்கரையில் அமர்ந்தவள் அந்த மாலை வேளையை மிகவும் ரசித்தாள்..
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கவிமலர் காங்கிராட்ஸ் அன்ட் ஹேட்ஸ்அப்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சந்தியா டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
கடற்கரை மணலில் மாலை வேளையில் இரண்டு காதல் குயில்களும் ஓடிப்பிடித்து விளையாட, அதைப் பார்க்க அலைகள் பாறையின் மேல் மோதி எட்டிப் பார்க்க முடியாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்தவண்ணம் இருந்தது.

அதற்கு பிறகு அவளை துரத்திப் பிடித்தவன், அவனது செயலின் மூலம் மொத்தமாக சிவக்க வைத்தான் கதிர்நிலவன்.. அவனின் தோளில் சாய்ந்துகொண்டு கண்மூடினாள் கவிமலர்..

எங்கிருந்தோ குயில் ஒன்று கூவ கனவு கலந்துக் கண்விழித்தாள் கவிமலர்.. இரயில் சென்னை எக்மோரில் நின்றிருந்தது.. அதன் பிறகு தனது திங்க்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினாள் கவிமலர்..

“அப்பாடா! சென்னை வந்தாச்சு!” என்று சிறு குழந்தைப் போல பேசியவள், “என்னோட செல்லம் வந்துவிட்டாள்..” என்று அவளின் முன்னே நின்றிருந்தார் ராமன்..

“சார் எப்பொழுது வந்தீங்க..?” என்றவள் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டவள், அவளின் பின்னே நடக்க, “நாளைக்கு கண்காட்சி கவி அதற்கு தயாராகி விட்டாயா..?” என்று கேட்டார் ராமன்

“முதல் பரிசு எனக்கு தான்..” என்றவள் அவருடன் காரில் ஏறிக்கொள்ள டிரைவர் காரை எடுத்தார்.. அவளது அப்பார்ட்மெண்டில் காரை நிறுத்தியவர், “இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, நாளைக்கு காலையில் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு வந்துவிடு கவி!” என்று சொல்லிவிட்டு சென்றார்..

அவளது அப்பார்ட்மெண்டில் அவளது ப்ளாட்டின் உள்ளே சென்றவள், “என்னதான் எத்தனை ஊர்கள் சென்றாலும், நம்முடைய இடத்திற்கு வருவது என்றுமே மனம் விரும்பும் ஒன்றுதான்!” என்று சொன்னவள் அறையைப் பார்க்க, அறை சுத்தமாக இருந்தது..

சமையல் அறைக்குள் சென்றுப் பார்க்க, சாப்பிடுவதற்கு சாப்பாடு முதல் கொண்டு அங்கே இருக்க, “சார் எல்லாவற்றையும் சரியாக செய்து வைத்துவிட்டார் போல!” என்று சொன்னவள் குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்கி எழுந்தாள்

பால்கனியில் சிறிது நேரம் நின்றவள் ஒரு முடியுடன் அந்த அறையைத் திறந்தாள்.. அதில் வரைவதற்கு அனைத்து உபகரங்களும் இருந்தது..

படங்களை வரைய ஆரமித்தாள்.. படங்களை வரைந்து முடிக்கும் பொழுது அன்றைய தினம் சென்றது.. இரவு பன்னிரண்டு மணிவரையில் வரைந்தவள் படங்களில் இருந்தைப் பார்த்து புன்னகையுடன் தூங்க சென்றாள்

மறுநாள் காலை அழகாக விடிந்தது.. கவிமலரும் அந்த ஓவிய கண்காட்சியில் பங்குக்கொள்ள சென்றாள் அவளின் ஓவியத்துடன்! ஒவ்வொருத்தரின் கைவண்ணம் ஒவ்வொரு விதத்தில் இருந்தது..

இவளின் படங்களும் அந்த வரிசையில் வைக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் நபரின் ஓவியத்தை வாங்கிக்கொள்வார்கள் நிறுவனத்தார்கள்.. அதில் வரும் பணத்தில் அவளுக்கு ஒரு கனவு இருந்தது..

அந்த போட்டியில் அவளது ஓவியமே தேர்ந்தெடுக்கப்பட்டது.. ஒரு தாய் தனது மூன்று வயது மகளுக்கு செடியை நடுவதற்கு கற்றுக் கொடுப்பது போல வரைந்திருந்தாள்.. அந்த குழந்தையின் தாய் அந்த கன்றை கையில் வேரின் கைப்பிடி மண்ணுடன் நடுவதுப்போல, அந்த குழந்தையும் சின்ன செடியை நட்டுவிட்டு தாயைப் பார்த்து சிரிப்பது போலவும் வரைந்திருந்தாள்..

பத்துநாள் கண்காட்சி இறுதி நாள் போட்டியில் வெற்றி பெற்ற ஓவியத்தை பற்றி சொல்வதாக சொல்ல, பத்துநாளும் அவளின் ஓவியத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது..

அவளின் வரை படங்கள் விற்பனையாக பத்தாவது நாள் அவளின் ஓவியம் ஒன்றை முதல் பரிசுக்குத் தேர்வு செய்தனர்..

அந்த ஓவியம் பற்றிய விளக்கத்தை அவளிடம் கேட்க, “இந்த நாட்டில் விவசாயம் என்பது மறைந்து வருகிறது.. ஒரு மரத்தின் நன்மையை நாம் இன்னும் அறியவில்லை.. அதேபோல ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஒருநாள் போதும்.. அதை வளர்க்க குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும். இதை இன்றைய சிறுவர்கள் உணரவே, குழந்தையின் முதல் தோழியும், ஆசிரியரும் அவளின் அம்மாதான். அந்த செயலை அவளின் குழந்தைகள் தங்களின் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்ற கருத்தை மனதில் வைத்து நான் இந்த ஓவியத்தை வரைந்தேன்..” என்று அவள் சொல்லி முடிக்க, அந்த அரங்கு கைத்தட்டலில் அதிர்ந்தது..

அந்த ஓவியத்தின் விற்பனை மூலம் அவளுக்கு ஐந்து லட்சம் வந்தது.. அதை அப்படியே ராமனிடம் கொடுத்தவள், “இந்தாங்க சார் அனாதைக் குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு எதோ என்னால் முடிந்தது..” என்று கொடுத்தாள்

“உனக்கு வேண்டும் என்ற பணத்தை எடுக்கொண்டு கொடும்மா..” என்று ராமன் அவளிடம் கூற

“அவரின் கையில் இருந்து இருபது ரூபாய் நோட்டை எடுத்தவள், கோவிலில் சாமி கும்பிட்டு காணிக்கை போடுவதற்கு இது போதும் சார்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.. அவள் சென்ற திசையைப் பார்த்து கண்கலங்கி நின்றார் ராமன்..

கவிமலருக்கு அதில் ரொம்ப நிம்மதியாக இருந்தது.. அப்படியே சென்று கடற்கரையில் அமர்ந்தவள் அந்த மாலை வேளையை மிகவும் ரசித்தாள்..
Rmbaaa alagana kadha superr sis ???????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top