• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil vantha Kalvane...! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
arumayana ud......
Kathir kavi voice kettu kathal vanthathu super.........
Mukilanku Nila pair ah............
kavi nila and mukilan kathir ,ivanga kathal pakkamalea arambichurukku very nice.....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
arumayana ud......
Kathir kavi voice kettu kathal vanthathu super.........
Mukilanku Nila pair ah............
kavi nila and mukilan kathir ,ivanga kathal pakkamalea arambichurukku very nice.....
நன்றி பிரியா அக்கா
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
“இன்பத்தேன் வந்து பாயிது காதினியே..” என்று கூறியவன், “என்ன பண்ணிட்டு இருக்கிறாய்..?” என்றான் கவிமலரைப் பார்த்துக் கூறினான்..

“செடி நட்டுக் கொண்டிருக்கிறேன்..!” என்றாள் கவிமலர் ஒரு புன்னகையுடன்..

“நான் மேலே வருகிறேன்..” என்றான் முகிலன்.. அவள் பதில் சொல்லும் முன்னே கேட்டை திறந்து, இரண்டு இரண்டு படிகாளாக ஏறி கவிமலரின் முன்னே நின்றான்..

“என்ன அண்ணா எதற்கு இவ்வளவு அவசரம் மெதுவாக வரவேண்டியது தானே..” என்று கடிந்துக் கொண்டு தனது வேலையைத் தொடர்ந்தாள்.

“என்ன எல்லாம் பூச்செடிகள் போல தெரிகிறது..?” என்றான் முகிலன் ஒரு புன்னகையுடன்..

“ம்ம்! இது ரோஜா, இது மல்லிகை, இது முல்லை, இது ஜாதிமல்லி, இது கோழிக்கொண்டை, இது சாமந்தி..” என்று ஒவ்வொரு செடியையும் கைக்காட்டிக் கொண்டே கூறினாள் கவிமலர்..

“அப்படியா.. நான் பார்த்ததே இல்லை..” என்றான் வருத்தமாக கூறினான் முகிலன்..

“அண்ணா!” என்று சிணுங்கினாள் கவிமலர்..

“இன்னும் சின்ன பிள்ளையாகவே இருக்கிறாய்.. உன்னைப் பார்க்கும் பொழுது, பத்து வயதில் அம்மாவுடன் சேர்ந்து செடி வைக்கும் பொழுது நீ சொல்வதைப்போல இருக்கிறது.. ஆள் மட்டும் தான் வளர்ந்து விட்டாய்.. ஆனால் உன்னுடைய குழந்தைதனம் இன்னும் மாறவே இல்லை..” என்றான் மாடியின் கைபிடி சுவரில் சாய்ந்து நின்று கூறினான்..

“என்ன பிரச்சினை கவி..? என்ன நடந்தது..?” என்றான் முகிலன் சீரியஸாகக் கேட்டான்.. கவியின் அமைதியாக முகத்தைப் பார்த்தான்..

“என்ன அண்ணா.. அண்ணன் என்று எனக்கு உணர்த்துவது போலத் தெரிகிறது..?” என்று கேலியாகக் கூறினாள் கவிமலர்

“சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் உனக்கு அண்ணன் தான்..” என்றான் முகிலன்

“சரிங்க அண்ணா..!” என்று பதில் மட்டும் சொன்னாள்.. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை. முகிலன் சிந்தனையில் இருந்தான்.. ‘கதிர்நிலவன் மனதில் இருப்பது காதல் என்றால், கவிமலரின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்’ என்று ஒரு அண்ணன் என்ற முறையில் முடிவெடுத்தான்..

அதற்குள் ரோஜா செடிகளை நட்டு முடித்தாள் கவிமலர்..

“மற்ற செடிகள் எங்கே நடுவதாக உத்தேசம்..?” என்றான் முகிலன்

“வீட்டின் பின் கதவை அருகே இடம் இருக்கிறது.. அங்கே செடிகளை நட்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், பூக்களைப் பார்க்கவும் ஈஸியாக இருக்கும்..” என்றாள் கவிமலர் புன்னகையுடன்

“நீ என்னடா பண்ணிட்டு இருக்கிறாய்..?” என்றாள் கவிமலர் ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டாள்

“ஐ.டி.கம்பெனியின் மோகம் கொஞ்சம் அதிகம் என்ற காரணத்தால், சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலைப் பார்க்கிறேன்..” என்றான் முகிலன்

“மிஷின் லைப்.. சோ போரிங்..” என்று முகத்தை சுளித்தாள் கவிமலர்

“ஐ.டி.பீல்டு ரொம்ப போரிங் முகில்.. சுத்த மிஷின் லைப்..!” என்று கதிர்நிலவன் சலித்துக்கொண்டே கூறியது முகிலனின் நினைவில் வந்தது..

‘இருவருக்கும் ஒரே தாட்.. இருவரின் செயல்களும் பல விசயங்களில் ஒத்துப் போகிறது..’ என்று நினைத்தான் முகிலன்..

“என்ன அண்ணா..? அடிக்கடி பிரீஸ் ஆகிறாய்.. ட்ரிம் போல..” என்றாள் கவிமலர் சிரித்துக்கொண்டே கூறினாள்.

“கனவு கண்டுட்டாலும்..” என்று நிலாவின் நினைவில் முகிலன் முணுமுணுக்க, கவிமலரின் அலைபேசி அடித்தது.. அதில் நிலா என்று ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து புன்னகைத்தான் முகிலன்..

எதற்கு சிரித்தான் என்று அவனுக்கே தெரியும்.. நிலாவின் நினைவில் அவனின் முகம் தானாகவே மலர்ந்தது..

ஒருவரையொருவர் பார்க்காமல் மனதில் காதல் என்ற விதை விதைக்கப்பட்டது.. அந்த செடி வளருமா..? இல்லை முளையிலேயே கறுகுமா..?
Names very nice ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top